பூங்கா
இனம்பலவாய் நிறம்பலவாய் மணமும் கமழ
இருக்கின்ற பூச்செடிகள் இதயம் ஈர்க்கும்
மனம்மகிழ வேண்டுமெனும் நாட்டங் கொண்டோர்
மறக்காமல் சென்றுவரும் உலகச் சுவனம்!
கனம்மிக்க இதயத்தால் விதியை நொந்து
கவலையுடன் வாழ்க்கையினை ஓட்டும் மாந்தர்,
சினங்கொண்டோர், மனத்துள்ளே இறுக்கங் கொண்டோர்,
சிறியோரும் மகிழ்வென்னும் கனியைக் கொய்வார்!
அதிரை அஹ்மத்


