மறக்காமல் சொல்ல நினைத்த ஒரு கண்டிஷன் :
கூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது !
மற்றொரு கண்டிஷன் :
பதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.
your time start... :)
1) 'இழுக்கு' என்ற சொல்லோடு முடியும் திருக்குறள் எது !?
2) குடிமக்கள் காப்பியம் என்று குறிக்கப்படும் தமிழ் இலக்கியது எது !?
3) 'I went to Agra' என்ற ஆங்கில வாக்கியத்தின் Present perfect வாக்கியத்தை கூறுக !?
4) 'Noun' ஆக உள்ள ஒரு அங்கிலச் சொல்லை இரண்டாக பிரித்து எழுதினால், ஒரு 'Noun'ம் ஒரு 'Verb'ம் கொண்ட ஆங்கில வாக்கியம் அமையும் அந்த ஆங்கிலச் சொல் என்ன ?
5) A, B என்பன இரண்டு கனங்கள் A U B = A எனில், B யைப் பற்றி நீ அறிவது என்ன ?
6) உன் அன்னை 14 பழங்கள் வாங்கி உனக்கு சில பழங்களை தந்தார், உனக்கு தந்ததைப் போல் இரண்டு மடங்கு உன் அண்ணனுக்கும் உனக்கு தந்ததில் பாதி உன் தங்கைக்கும் கிடைத்தன. உனக்கு கிடைத்த பழங்கள் எத்தனை?
7) ஒரு குதிரைத் திறன் ( H.P.) என்பது எத்தனை வாட்டுக்குச் சமம்
8) பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது ?
9) எலுமிச்சைப் பழத்தில் உள்ள அமிலம் எது ?
10) சாதாரண உப்பின் வேதிப் பெயர் யாது ?
11) வைட்டமின் B குறைவால் ஏற்படும் நோய் எது ?
12) மனித உறுப்புகளில் இரத்தம் அறியாத உறுப்பு எது ?
13) ஒரு செல் தாவரம் எது ?
14) வெங்காயத்தின் அறிவியல் பெயர் என்ன ?
15) உலகின் முதல் விண்வெளி வீரர் யார்?
16) இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார் ?
17) வரலாற்றில் இந்திய நெப்போலியன் எனக் குறிப்பிடப்படுபவர் யார் ?
சொல்ல மறந்த கண்டிஷன்:
பதில் வரும் வேகத்தை பொறுத்துதான் பரிசு வரும் வேகம் நிர்ணயிக்கப்படும் ! (ஸ்பான்சர்கள் தேவைன்னு போர்டு இன்னும் ரெடியாகவில்லை என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்)
இப்படியே தொடரலாம்னு ஒரு ஐடியா இருக்கு...!.
அபூஇப்ராஹீம்






