தொழில்நுட்பத்தினால் திரளும் புதுப் புது வரவுகளை அனுபவிப்பது தூறல் போடும் மழைக்காலத்தில் நனைவதில் கிடைக்கும் சுகத்தை அனுபவதிப்பது போன்ற சிலிர்ப்பு பரபரப்பு இருக்கும். புதியன அறியும் ஆவல் தொடரும். அவ்வகையில் இணைய தேடலில் ஈடுபடாத இணையப் பயனாளிகள் என்று ஒருவரும் இருக்கப்போவதில்லை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா ?
சுய ஆர்வத்தால் தான் அறிந்த இணைய வசதி கொண்ட நுப்டத்தை அனைத்து சகோதரர்களும் அறிந்திட சகோதரர் ஷஃபி அஹ்மது அவர்கள் ஏற்கனவே அதிரை வலைத்தளங்களில் இது எப்படியிருக்கு காணொளி விளக்கத்தையும் அதன் பயன்பாடுகளையும் அறியத் தந்திருக்கிறார். அந்த வரிசையில் தொடராக அடுத்ததொரு காணொளி பதிவினை அதிரைநிருபரில் பகிர்ந்தளித்திட முன் வந்திருக்கிறார்.

இந்த பதிவின் டிராப் பாக்ஸ் (Drop Box) என்று எங்கும், எதிலும், எப்போதும் தேவையான முக்கிய கோப்புகளை சேமிக்க, மீட்டெடுக்க, பகிர்ந்தளிக்க என்ற பயன்பாட்டிற்கு உதவும் நுட்பத்தின் வசதியைப் பற்றி தெளிவாகவும் புரியும் படியும் விளக்கியிருக்கிறார்.
அதிரைநிருபர் குழு