ஊர் போய்வந்தால்
ஏதாவது எழுத மேட்டர் நிச்சயம் கிடைக்கும் என்பது தெரிந்தாலும் எல்லாவற்றையும்
எழுதத்தான் முடியவில்லை. பொதுவாக நீண்ட ஆர்டிக்கிள் எழுதி வஞ்சிப்பதில்லை என சபதம்
எடுத்திருப்பதால் முடிந்த அளவு சுருக்கமாக எழுதியிருக்கேன். [இதை சொல்றதுலெ ஒரு
பத்தி வேஸ்ட் ஆயிடுச்சே என கமென்ட் எழுதுவதை தவிர்க்க] கையில் காமெரா,
2 மொபைல் ஃபோன், ஆறாய் ஓடும் வியர்வையை துடைக்க கர்ச்சீப்
இவைவகளை கையில் வைத்துக்கொண்டு கைலியை உடுத்திக்கொண்டு நடப்பது ஒரு டெஸ்ட்தான்
எனக்கு. [வெள்ளை கைலி கட்டினால்தான் மதிப்பு-advice by Sabeer & Mohamed Ali !!].
ஊரின் அகலம் குறைந்து
ஒரு இன்ச் கிடைத்தாலும் அதற்கும் ஒரு விலை / மனை என்று ஊர் முன்னேறியிருக்கிறது.
மார்க்கெட்டில் ஏலம் விடுபவர் " 3600...3600, 3650...' என்று சொல்லும்போது ஏதோ மோட்டோர் சைக்கிளுக்குத்தான் ஏலம் என்று நினைத்தால் அது இறால். அப்படியே மார்க்கெட் மாஸ்கிங்-இல் 'ப்ளாக் & ஒயிட்'டுக்கு கற்பனை செய்தால் மொத்த மீன் மார்க்கெட்டு பொருள்களும் 3000 த்தை தாண்டாது . கிணற்று அடி, உமல், தேங்காய் கீற்று.... எல்லாம் வெளிநாட்டு சபுராளிகள் அதிகமான பிறகு மாயமாகி விட்டது.
மார்க்கெட்டில் ஏலம் விடுபவர் " 3600...3600, 3650...' என்று சொல்லும்போது ஏதோ மோட்டோர் சைக்கிளுக்குத்தான் ஏலம் என்று நினைத்தால் அது இறால். அப்படியே மார்க்கெட் மாஸ்கிங்-இல் 'ப்ளாக் & ஒயிட்'டுக்கு கற்பனை செய்தால் மொத்த மீன் மார்க்கெட்டு பொருள்களும் 3000 த்தை தாண்டாது . கிணற்று அடி, உமல், தேங்காய் கீற்று.... எல்லாம் வெளிநாட்டு சபுராளிகள் அதிகமான பிறகு மாயமாகி விட்டது.
தற்போதைய
சூழ்நிலை ஊர் ராஜஸ்தான் பாலைவனம் மாதிரி சரியான உஸ்னம். விமானம் கீழே இறங்குமுன்
ஹ்யூமிடிட்டி பயமுறுத்துகிறது. கீழே தெளிவாக தெரியாமல் வெண்புகை சூழல் மாதிரி
இருந்ததை பக்கத்தில் இருந்த அறிவாளி ' என்னன்னே... திருச்சி
முழுக்க பனி இப்படி சூழ்ந்திருக்கு" நு கேட்கும்போது "லொட்"னு
மண்டையில் குட்டனும்போல இருந்தது.
வழக்கம்போல்
பட்ஜெட் விமானமாதலால் 'சீட்'டில் உட்காருவதற்கு ஏறக்குரைய பிணத்தை போட்டோ எடுக்க
வைத்திருப்பதுபோல் அசைய முடியாத சின்ன சீட்டில்தான் உட்கார வைத்து அழைத்து
வருகிறார்கள்.
பக்கத்தில்
"புள்ள பூச்சி" மாதிரி ஒரு குடைச்சல் பார்ட்டி உட்கார்ந்து கொண்டு சார்
நீங்க சாப்பிடற சாப்பாட்டிலெ ஃபுட் பாயிசனாயிட்டா என்ன சார் செய்வீங்க" என
கேட்டு எதற்கும் ரிஸ்க் எடுத்தால் ஏடாகூடமா ஆயிடும்" நு பயம்
காட்டிக்கொண்டே வந்தார். " யோவ்.... இப்ப பறக்குற உயரமே 36,000 அடி... இதிலெ இல்லாத ரிஸ்க்கா இந்த சாப்பாட்டெ சாப்பிட்டு வரப்போவுது" என்று
கேட்டவுடன் என்னிடம் ஏன் சார் இப்படியெல்லாம் பயமுறுத்துரீங்கனு கேட்டுட்டு... இஸ்ட
தெய்வத்தை வேண்டிக்கொண்டார்.

பிறகு ஏதோ ஒரு சாமியார்/குரு பெயரைச்சொல்லி கன்னத்தில் போட்டுக்கொண்டு "ஒன்னும் ஆகாது நான் என் குரு கிட்டே வேண்டிக்கிட்டேன்" என்றாரே அதுதான் எனக்கு காண்டு.' யோவ் ..உன் குரு என்ன திருச்சி ஏர்போர்ட் கன்ட்ரோல் ரூம்லயா நிக்கிறாரு... அதுசரி, உங்க குருவும் இந்த ஃபிளைட்லெ வந்தா யார்கிட்டே வேண்டிப்பாரு?' என்று நான் கேட்டவுடன் 'சார் நீங்க தந்தை பெரியார் கட்சியா?" என்றார். ' ஏன் உங்களுக்கு பிடித்த தலைவரை விளிக்க வேறு உறவு முறையே கிடைக்கலையா?' நான் இப்படி கேள்விக்கு மேல் கேள்வி கேட்டவுடன் அப்புறம் என்னுடன் அவர் "காய்" விட்டு விட்டார்.
அதிராம்பட்டினத்து
வெயில் சும்மா சொல்லக்கூடாது. மூனு தலைமுறைக்கு வர வேண்டிய வியர்வையை இந்த
தலைமுறையிலேயே வெளியாக்கிவிடுகிறது. இதில் கரன்ட் கட் [ அதிராம்பட்டினத்தில்
இன்வர்ட்டர் இல்லாத வீடுகள் இனிமேல் எந்த மனிதர்களும் புழங்காத
"கஸ்டம்ஸ்" பில்டிங் மாதிரி ஆகிவிடும். - இப்போது கஸ்டம்ஸ் இருந்த
இடத்தில் மனை போடப்பட்டிருக்கிறது. ]. நான் இருந்த 5 நாளிலும் இரவில் மட்டும் குறைந்தது 1200 கொசு
அடித்திருப்பேன். இரவு முழுதும் எலக்ட்ரிக் பேட் துணை [கமெர்சியல் டேக் லைன்
மாதிரி இல்லே] கொசுக்களின் டெக்னிக் அதிசயமானது. நாம் எலக்ட்ரிக் பேட்டை கையில்
எடுத்தவுடன் நம் முகத்துக்கு பக்கத்திலும் நம் முதுகுப் பக்கதிலும் ஒழிந்து
கொள்கிறது.
கால ஒட்டத்தில்
மாற்றமடையாத சில இடங்கள் மனதுக்கும் இளமையை புதுப்பிக்கிறது. காலை நேரத்தில் ரயில்வேஸ்டேசனில் ஸ்டேசன் மாஸ்டரிடம்
பேசிக்கொண்டிருந்ததில் என்னை விட அவருக்கு சந்தோசம் என நினைக்கிறேன். அவரிடம்
பேசிக்கொண்டிருக்கும்போது பரீட்சைக்கு படித்த இடங்கள், உப்பு மாங்காய், தூரத்து கானல்நீர், படிக்காமல் ரவுசுபன்னும் பசங்களின் அரட்டை எல்லாம் எனக்கு மறு
ஒளி/ஒலிபரப்பானது.
தெருக்கள்
அனைத்தும் ஒரு முறை உள்ளே போனால் வெளியாவது எங்கே என்று தெரியாத அளவுக்கு சின்னதா
சுறுக்கப்பட்டு விட்டது. சிலர் வீடு கட்டியிருப்பதை பார்க்கும்போது வென்டிலேசனுக்கு
கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் காற்றுவராத வீட்டில்
இருந்து மருத்துவத்துக்கு செலவழிக்கும் வயதானவர்களை பார்க்கும்போது மனசுக்கு
ரொம்பவும் கனத்தது. நம் ஊரில் முன்பு
இல்லாத "கூல்ட்ரிங்க்ஸ் / டேங் பவுடர் ட்ரிங்க்ஸ்" இன்னும் 50
வருடத்துக்கு தஞ்சாவூர் டாக்டர்களுக்கு வருமானத்தை உறுதி செய்யும். தோசை / இட்லி /
மோர் போன்ற நல்ல உணவுகளை புறக்கனிப்பதும் / கேவலம் பேசுவதும் நம் மக்களிடம்
இருக்கும் வரை உடல் சுகாதார ரீதீயாக எந்த மாற்றமும் கொண்டுவர முடியாது. இதில்
கொடுமை என்னவென்றால் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் சில உணவுகளை கொடுத்து விட்டு 'ஒன்னும் செய்யாது" என கேஸ்ட்ரொஎன்ட்ராலஜிஸ்ட் மாதிரி நம் சனங்கள்
பேசுவதுதான்.
நம் ஊரில்
பெண்களுக்கு எதிராக ஒரு மவுனயுத்தம் நடப்பதாக நான் கருதுகிறேன். பெண்கள் தொடர்ந்து
பொருளாதாரம் / கல்வி போன்ற விசயங்களில் ஆண்களை சார்ந்திருக்கும் சூழ்நிலை மாறாத
வரை பெண்கள் முன்னேற்றம்
என்பது இன்டர்நெட்டில் எழுதி அதற்கு கமென்ட் எழுதும் விசயத்தோடு ' சுபம்' போட்டுவிட்டதாக நான் நினைக்கிறேன். எதிர்கருத்துள்ளவர்கள் உங்களின் எண்ணத்தை
எழுதலாம்.[ என் கணிப்பும்
தவறாக இருக்கலாம் இல்லையா?] ஊரில்
இருக்கும்போது நடந்த சில விசயங்கள் மனதுக்கு கவலையை அளித்தது. ஒரே இறைவனை
ஏற்றுக்கொண்ட சகோதரர்கள் இன்னொரு சகோதரரை அடித்து மருத்துவமனையில் சேர்க்கும்
அளவுக்கு நடந்து கொண்டது. கந்தூரி என்ற பெயரில் நடந்த ஸிர்க் கான விசயங்கள்
எங்கெல்லாம் முஸ்லீம்களை இழுத்து சென்றிருக்கிறது?. அன்றைக்கு நடந்த
கந்தூரியில் பல முறை கரண்ட் "கட்"டானது
டார்வின் கோட்பாட்டுக்கு உயிரூட்டம்
விரயமாகும் இளையசமுதாய சக்தி
பலர் போலீஸ்
ஸ்டேசனில் போய் நின்றது. / பலர் மருத்துவமனையில் நின்றது/ பலர் ட்ராபிக் ஜாமில்
போக வேண்டிய இடத்துக்கு போக முடியாமல் தவித்தது. இது போன்ற கந்தூரிகள்
தவிர்க்கப்படா விட்டால் நம் மக்கள் மார்ச்சுவரியிலும் , கோர்ட் வாய்தாவிலும், கண்ணீர் அஞ்சலி போஸ்டரிலும், சிறையில் பார்வையாயளர்களின் நேரத்தில் கையில் உணவுப் பொட்டலத்துடன்
காத்துக் கிடக்கும் நம் பெண்களையும் பார்க்கும்
அவலத்தை உருவாக்குவதுடன் , அதற்க்கான நேர / பண விரயத்தையும் உருவாக்கி
விடுவார்கள் என்பது நிச்சயம்.
பொதுவாக
வெளிநாட்டிலிருந்து வரும் பணம் / சென்ட் / மற்றைய பொருட்களை விரும்பும் நம்
மக்கள்... அதை சம்பாதிப்பவனின் வார்த்தைக்கு கொஞ்சம் கூட முக்கியத்துவம் தராமல்..' இவன் பேசுரது நடைமுறைக்கு ஒத்து வராது"ங்ற மாதிரி நினைக்கும்போது
இருக்கும் அவர்களின் எனர்ஜியை என்னால்
ஈசியாக உணர முடிகிறது.
எத்தனையோ மைனஸ்
பாயின்ட் இருந்தாலும் நம் ஊரை பிரிந்து வரும்போது. "மறுபடியும் எப்போது
வருவோம்?" என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் யாருக்கும் விடை "சரி"யாக தெரியவில்லை.
-ZAKIR HUSSAIN


