அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ் !
ரமளான் முதல் பிறை !
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே:
இன்று வளைகுடா (அதிரை)வாசிகளான எங்களுக்கு முதல் நாள் ரமளான் (நோன்பு வைத்திருக்கிறோம்).... இதேபோல் ஏனைய நாடுகளிலும், பகுதிகளிலும் இன்றே முதல் நாள் ரமளானாக இருக்கலாம். வழமையான நினைவலைகளை அசைபோடுவதில் வல்லவர்கள் இங்கே இருந்தாலும் இன்றையச் சூழலில் நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை பகிர்ந்து கொள்ளத்தான் இப்படியொரு கருத்துப் பரிமாற்றமும் ஆய்வும்.
அதிரைப்பட்டினம் என்றால் அவரவருக்கு என்று மனம் வென்ற முஹல்லாக்களின் பள்ளிவாயில்களின் நினைவுகளும் அங்கே அவர்கள் நின்று தொழுத இடங்களும் வெள்ளிப் பாணையில் உருளும் பளிங்கு போல் சலசலத்துக் கொண்டிருக்கும் மறக்க முடியாத நினைவுகள்.
சரி, நேற்று முதல் நாள் இரவுத் தொழுகை ! உங்களுக்கு எப்படியிருந்தது எங்கே தொழுதீர்கள், அங்கே நீங்கள் சந்தித்த நிகழ்வுகள் பரிமாறிக் கொள்ளலாமா ? இதே போல் இன்னும் தொடரலாமே வரும் நாட்களிலும்.இங்கே அனுபவங்களை கருத்துக்களாக கோர்வையாக்கி, வாசிக்கும் நேசங்களுக்கும் அவர்களின் அன்றைய / இன்றைய நிகழ்வுகளை பகிர்ந்திட வழிவகுக்கட்டும் இன்ஷா அல்லாஹ் !.
- அபுஇபுறாஹிம்


