குற்றாலம்...
இந்த முறை ஊர் போன போது இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. [போன முறை சபீர் ஊரில் இருந்ததால் என் மொத்த ஸ்க்யெடுலையும் அவன் கவனித்துகொள்வதால் ஒரு நல்ல செக்ரட்டரியாய் நடந்து கொள்வான். நான் தான் சம்பளம் ஏதும் தருவதில்லை] தமிழ்நாட்டுக்கு இயற்கை தந்த மிகப்பெரிய சொத்தாக இந்த ஊரை நான் கருதுகிறேன். ஆனாலும் தமிழனின் வழக்கமான கேர்லஸ் புத்தியால் இந்த இயற்கையான அருவிக்கும் அதன் சம்பந்தபட்ட பகுதிக்கும் ஒரு சுற்றுப்புற சூழலின் தாக்கம் ஏற்படும் காரணிகள் அதிகம். இயற்கையான நீர்வீழ்ச்சியில் ஏதோ பச்சை எண்ணெய் தேய்த்து குளிக்கிறார்கள்.
இதுபோன்ற எண்ணைகள் சுற்றுவட்டாரங்களில் கோழி பொரிக்க பயன்படுத்தி மிஞ்சிய எண்ணைகள் என குமுதம் ரிப்போர்ட்டரிலோ, அல்லது ஜூனியர் விகடனிலோ படித்த ஞாபகம். இங்கு அருவியில் குளிக்க வரும் சிலர் வாயில் அடிக்கும் சாராய வாடை சத்தியமாக புத்தகம் படிக்க விட்டிருக்க வாய்ப்பில்லை.
கலப்படமற்ற பாலில் நல்ல டீ ,காப்பி
குற்றாலம் உருப்பட சில யோசனைகள்.
சீசனில் மட்டும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அடிசனல் கலெக்டர் ஒருவரை நியமித்து [ அவருடைய டெபுடி கலெக்டர் சரியான தேர்வாக இருக்கலாம்] அந்த அடிசனல் கலெக்டருக்கு சிறப்பு அதிகாரம் [ குற்றாலம் , தென்காசி , செங்கோட்டை பகுதிகளுக்கு மட்டும் ] தந்து குற்றாலத்தில் சுத்தம் , போக்குவரத்து , சாலை / வடிகால் பராமரிப்பு , மற்றும் விடுதி [ தங்குவதும் / உண்ணுவதும் ] நெறிப்படுத்துவது , ] அருவிகளுக்கான வசதிகள் மேம்படுத்துதல் , மற்றும் 100 போலீசார்கள் , சுழல்முறையில் கடமையில் ஈடுபடுத்தி மக்களை குப்பை போடாமலும், முறையில்லாமல்பொது இடங்களில் நடந்து கொள்வதை கண்கானித்து, சிறிய அளவிலான தண்டனை / அபராதம் [ குற்றம் செய்தால் ] , முதலில் அறிவிப்பு பலகைகள் இருக்க வேண்டும்.

பொது இடத்தில் இப்படி "உச்சா' போகும் உயர்ந்த மனிதர்!!!
பொதுவாக இந்தியர்கள்களை கட்டுப்படுத்துவது எளிது. தண்டனைப்பயம் அவர்களை நிச்சயம் வழிப்படுத்தும். இல்லாவிட்டால் ஊர் முழுக்க "புளிச் , புளிச்" என வெத்திலை பாக்கு போட்டு துப்பும் அவர்கள் சிங்கப்பூர் வந்ததும் எப்படி நல்ல பிள்ளை ஆகிறார்கள் , சிம்பிள்..."தண்டனை"
பெண்களுக்கும் , ஊனமுற்றோர்களும் பாவப்பட்ட ஜன்மங்களா என்பது போல் கழிப்பிடம் நடந்து போகும் இடங்களில் அவர்களுக்கான எந்த வசதியும் இல்லை.
மாம்பழம் , பலாப்பழம் சீசன் ஆதலால் அநியாயத்துக்கு கொசு, நான் பார்த்த ஒரு காட்சி காரின் பின்னால் ஒரு ஆளின் பெயர் எழுதி அவர் வாங்கிய [ படித்த!!] பட்டம் அவர் ஒரு வக்கீல் என்றது, அதிலிருந்து இறங்கிய அவர் பழங்களை குறங்கு தின்பதுபோல் தின்று விட்டு அப்படியே தனக்கு பக்கத்திலேயே கொட்டினார் . வெள்ளைக்காரன் கொடுத்த சுதந்திரம் தவறாக புரியப்பட்டிருக்கிறது, இந்தியா முழுதும்….
திருநெல்வேலி இருட்டுகடை அல்வா [ ஊர் திரும்பும்போது ..]
- ZAKIR HUSSAIN
- ZAKIR HUSSAIN

