மலைமகனின் பருவுடலைத் தழுவ வேண்டி
மழைமுகிலில் பிறந்திடுவாள் அருவி மங்கை
நிலையுயர்ந்து அழகொளிரப் பருவம் எய்தி
நிலம்குளிரச் செய்கின்ற நோக்கத் தோடு
தலைமறைப்பாள் தனமிரண்டை இறுகச் செய்வாள்
தனதிடையின் திருப்பகுதி திறக்கா வண்ணம்
அலையலையாய்க் கிளைகளையே பெருகச் செய்வாள்
அவளழகின் முழுமையினை மக்கள் துய்ப்பார்!
அதிரை அஹ்மத்


