Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை வர்த்தக - கலாச்சார பொருட்காட்சி மற்றும் திருவிழா முதல் நாள் - ஓர் அலசல் 59

அதிரைநிருபர் பதிப்பகம் | April 30, 2013 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரையில் வர்த்தக & கலாச்சார பொருட்காட்சி மற்றும் திருவிழா சீறும் சிறப்புமாக(!!!) நடைபெற்று வருகிறது அனைவரும் அறிந்ததே.

பொருட்காட்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள் வரவேற்கத்தக்கவை. மேலும் ஷிர்க்கை ஏற்படுத்தக்கூடிய கந்தூரியையும் அதனை தொடர்ந்த அனாச்சாரங்களையும் ஒழிப்பதற்காக இஸ்லாமிய வரம்பிற்குட்பட்ட ஓர் மாற்று ஏற்பாடு என்ற நோக்கமாக இருந்தால் வரவேற்கத்தக்கது, பாராட்டுதற்குரியது. 

அதே சமயம், கந்தூரி ஷிர்க் அதனை தொடர்ந்த அனாச்சாரங்கள் போன்றவற்றை ஒழிப்பதற்கு இன்னொரு சமூக சமுதாய சீர்கேடுகளான இன்னிசை கலை நிகழ்ச்சி, இசை, ஆட்டம் பாட்டம், இரட்டை அர்த்தமுள்ள உரையாடல்கள் & பாடல்கள், அதிலும் ஆண் பெண் ஒருசேர கலந்த பார்வையாளர்கள் கூட்டம் மேலும் இதன் மூலம் ஏற்படக்கூடிய தேவையற்ற அசாதாரண சூழ்நிலை இவை அனைத்தையும் எண்ணி பார்த்தால் கந்தூரியில் நடக்கும் அனாச்சாரங்களுக்கும் இங்கு நடக்கும் செயல்களுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. மேலும், வெடி வெடிக்கப்பட்டு பணத்தை வீண் விரையம் செய்யாமல், அதை மற்ற நல்வழிகளான இஸ்லாமிய அழைப்பு பணி, ஷிர்க் மற்றும் பித்'அத் ஒழிப்பு பிரசுரங்கள் வெளியிட்டால் இதை காண வரும் அனைவரும் பயனடைவார்கள்.

மிக முக்கியமாக, இந்நிசை நிகழ்ச்சியின் மேடையில் (நேற்று முன் தினம்) 28.04.2013 முதல் நாள் இரவு அரங்கேற்றிய நிகழ்ச்சியொன்றில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் கூட வெளிப்படுத்த முடியாத இரட்டை அர்த்தமுள்ள கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. ஆண் பெண் ஒருசேர கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை காணும்போது ஏற்படும் வீண் விபரீதங்களுக்கு நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

இத்திருவிழாவிற்காக, ஊரில் தினமும் ஆட்டோ விளம்பரம் செய்யப்படுகிறது, அதில் அன்றைய தினம் எந்த திரையுலக பாடகர் மற்றும் பாடகி கலந்துகொண்டு பாட இருக்கிறார் என்றும் மேலும் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களும் சேர்ந்து பாடலாம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு அழைக்கப்படுகிறார்கள்.

இந்த அதிரை வர்த்தக & கலாச்சார திருவிழா ஏற்பாட்டளர்களின் நோக்கம் சேவை மனப்பான்மையாக தெரியவில்லை, இலாப நோக்கத்திற்காக எற்பாடு செய்யப்படுகின்ற இதுபோன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமியர்களால் அதிலும் கந்தூரிகளுக்கு மாற்றமாக என்று மக்களிடம் பரப்பி கந்துரி நிகழ்ச்சிகளையே விஞ்சும் அளவிற்கு அனாச்சாரங்களை அரங்கேற்றுவது எவ்வகையில் நியாயம்.

மேலும், அவசிய தேவைகளை தவிர பெண்களை இதுபோன்ற காரியங்களுக்கு வெளியில் அழைப்பது திருமறையின் வரிகளுக்கு மாற்றமாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்;

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (அல் குர்ஆன்: 33:33)

பணத்திற்காக நம் பண்பாடு கலாச்சாரம் அனைத்தையும் அடகு வைத்துவிட்டு பொருட்காட்சி என்ற பெயரில் அதனோடு சேர்த்து மேலே குறிப்பிட்ட இஸ்லாத்திற்கு விரோதமான காரியங்களை அரங்கேற்றும் இந்நிகழ்சியின் ஏற்பாட்டாளர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளவேண்டும்.

குற்றம் பிடிப்பது நமது நோக்கமல்ல. அதே சமயம் தவறுகளை சுட்டிக்காட்டி அதை சரிகாண வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இடப்படுகின்ற இந்த ஆக்கம் நல்லதை ஏவி தீமையை தடுக்கவேண்டும் என்ற இறை மறையின் கூற்றிற்கு இணங்க எழுதப்பட்டது.

இதில் ஏற்பாட்டாளர்கள் கவனிக்கவேண்டியது என்னவெனில், இசை மற்றும் அனாச்சாரக் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் நடத்தினாலும் இந்த பொருட்காட்சி நிச்சயம் வெற்றிபெறும் என்பதுதான்.  ஆதாரமாக, குர் ஆன் மாநாடுகளுக்கு வரும் கூட்டத்தையும் வர்த்தக மையங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையையும் சொல்லலாம்.  அநாச்சாரங்களுக்குச் செலவு செய்யும் பணமும் மிஞ்சும், வருபவர்கள் கவனம் சிதறாமல் வாங்குவதில் மும்முரமாவதால் வியாபார நோக்கமும் விருத்தியாகும்.

குறிப்பு: அதிரையிலிருந்து சகோதரர்கள் பகிர்ந்து கொண்ட காணொளி காட்சிகள் உங்களின் பார்வைக்காக.


மேலும் விபரங்கள் (இன்ஷா அல்லாஹ்) விரைவில்...

அதிரைநிருபர் பதிப்பகம்

தக்வா பள்ளியில் இடர்கள் கலைந்து, பயான் தொடர்ந்தது…! 35

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2013 | , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் ஒருவனே..

திருக்குர்ஆன் 8:30.  (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

திருக்குர்ஆன் 3:120. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.

திருக்குர்ஆன் 4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

திருக்குர்ஆன் 6:123. மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.

திருக்குர்ஆன் 8:18. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)

அல்லாஹ்வின் மிகப்பெறும் கிருபையால் நமதூர் பாரம்பரியமிக்க தக்வா  பள்ளியில் மார்க்க பிரச்சாரகர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு, தக்வா பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் 28-ஏப்ரல்-2013, மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு வழமைபோல் இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

27-ஏப்ரல்-2013 அன்று தக்வா பள்ளி 7 பேர் கொண்ட செயற்குழுக் கூட்டம், நடைபெற்றது. இதில் வழக்கம் போல் தக்வா பள்ளியில் நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு இனியும் தொடர்ந்து நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது என்ற உண்மைச் செய்தியை உடனுக்குடன் அதிரை செய்திகளை சுடச்சுட அளித்துவரும் நமதூர் வலைத்தளங்கள் தர தவறியது மட்டுமன்று சில வலைத்தளத்தில் தவறான தகவல்களும் பதியப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கடந்த ஒருவாரமாக மிகவும் பரபரப்பாகவும் எதிர்பார்ப்புடனும் பேசப்பட்டு வந்த அதிரை பற்றிய செய்தியில் தக்வா பள்ளியில் வழக்கமாக நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிறுத்தப்பட்டதாக வெளிவந்த சர்ச்சையான தகவலுக்கு பின்னர் நம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் அந்தச் சூழலின் உண்மை நிலவரத்தை மிகுந்த சிரமத்திற்கிடையே ஆய்வு செய்து இரண்டு பதிவுகள் பதிந்தோம். 


நம்மிடம் இருந்த, மேலும் கிடைத்த வலுவான ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, இந்த சர்ச்சையில் மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சி வலை கிழித்தெறியப்பட்டது.

மார்க்க அறிஞர் ஒருவரை பழிவாங்கும் திட்டத்தில் பல சூழ்ச்சிகள் செய்தார்கள். மேலும் பல அதிரைவாசிகளுக்கு ஊரில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு சிலர் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தனிப்பட்ட அலைபேசி  மற்றும் தொலைபேசி அழுத்தங்கள், மிரட்டல்கள், செய்ததோடு அல்லாமல், நம் அதிரைநிருபர் வலைத்தளத்தின் குழுவில் உள்ளவர்களின் சொந்தங்களிடம் மறைமுக மிரட்டல்கள் செய்தும், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தக்வா பள்ளி பயான் தொடர்பான செய்திகளை முடக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். இவை அனைத்தையும் அல்லாஹ்வின் மாபெறும் உதவியால் வென்றெடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

தக்வா பள்ளியில் மார்க்க சொற்பொழிவு வழக்கம் போல் நடைபெற்றது என்பதை நினைத்து ஒரு வகையில் நாம் சந்தோசமடைந்தாலும், நம் சகோதரர்கள் சத்தியத்துக்கு எதிராக அல்லாஹ்வின் விபரீதங்கள் அறியாமல் மேலும் மேலும் சூழ்ச்சிகள் செய்து அவமானப்பட்டு போவார்களோ என்ற ஓருவித அச்சவுணர்வும் நம்மில் பலரிடம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

யா அல்லாஹ்,  இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் சூழ்ச்சிகள் செய்யும் அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கும் மார்க்க தெளிவை தந்தருள்வாயாக..

இதில் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள், யார் அவமானப்பட்டார்கள் என்று நாம் தனி நபர்களைக் குறிப்பிட்டு கருத்துக்களைப் பதிவதைவிட. இறைவனை மட்டும் புகழ்ந்து, தவறு செய்த சம்பத்தப்பட்ட சகோதரர்கள் திருந்த வேண்டும், அவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்ய வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) என்ற அத்தியாயத்தில்  45 வது வசனம் முதல் (27:45)  முதல்  53வது வசனம் வரை (27:53) கொஞ்சம் நிதானமாக வாசித்துப்பாருங்களேன், அண்மைக் கால அதிரை நிகழ்வுகளுக்கு பொருந்தும் விதமாக இருக்கும். அனைத்தையும் மிக்க அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே…

இங்கு நாம் அழுத்தமாக சொல்ல விரும்பும் தகவல் என்னவென்றால், தக்வா பள்ளியில் நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை நிறுத்தியது தொடர்பாக உண்மைக்கு புறம்பான அரைகுறை செய்திகளை வெளியிட்ட  அதிரை வலைத்தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பணம் படைத்தவர்களின் ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சி சத்தியத்தை எடுத்துச் சொல்ல தயக்கமிருப்பின் தயவு கூர்ந்து தவறான செய்திகளைப் பதிந்து உண்மை நிலவரத்தை மறைத்து நமதூர் சகோதரர்களை குழப்ப வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

பிறமதத்தவர் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி செய்திகள் போட்டுவிட்டால் முஸ்லீம் ஊடகங்கள் நியாயமானவை, தைரியமானவை என்று பெருமிதம் கொள்ளுவது போல் சத்தியத்துக்கு எதிராக எல்லைமீறி சூழ்ச்சிகள் செய்துவரும் நம்மவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களை அவ்வகை தவறுகளிலிருந்து திருத்தும் விதமாக செய்திகளை வெளியிடுவதும் நியாயமானவை, தைரியமானவை என்று பெருமிதம் கொள்ளலாமே இன்ஷா அல்லாஹ்.

முக்கியமாக நினைவுறுத்துகிறோம், மெளலவி ஹைதர் அலி ஆலிம் என்ற தனி மனிதரை மட்டும் உயர்த்தி மற்ற மெளலவிகளை தாழ்த்தும் எண்ணம் எங்களுக்கு துளியளவும் இல்லை. தர்கா வழிபாடு, இணைவைப்பு மவ்லிது, அனாச்சாராங்கள், மூட நம்பிக்கைகள், பித்அத்துகளுக்கு எதிராகவும், சத்தியத்தை தைரியமாக எடுத்துச் சொல்லும் அதிரை மார்க்க அறிஞர்கள் யாருக்கு இத்தகைய தடைகள், தொந்தரவுகள் வந்தாலும் நிச்சயம் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்போம். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ், நம் அனைவருக்கும் பொறுமையையும், நிதானத்தையும் தருவானாக. 

சத்தியத்துக்கு ஆதரவாகவும், அசத்தியத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் நன்மக்களாக நம் எல்லோரையும் அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக.

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. (அல்குர் ஆன் 17:81)

நய வஞ்சகத்துக்கு எதிரான போராட்டம் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

நெஞ்சில் உரமின்றி…! 62

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2013 | , , ,தீவினை செயும் மாந்தர் எவர்க்கும்
நோவினைத் தரும் வேதனை இருக்கும்
பூவினை யொத்த தோலெனும் போர்வை
தீயினைத் தொட்டு சாம்பலை உதிர்க்கும்

தன்னையே உயர்த்தித் தற்பெருமை பேசுவோர்
வெண்ணெயை வைத்துக் கொக்கினைப் பிடிப்பவர்
மண்ணையே திரித்து மாலையாய் பிதற்றுவர்
கண்ணையே குத்திக் காட்சியைக் காட்டுவர்

நாவிலே நாளெலாம் நந்தவனம் வளர்ப்பவர்
நெஞ்சிலே முட்செடி நித்தமும் சுமப்பர்
புன்னகை இதழிலே பூநாகம் இருக்கும்
புண்ணென உள்ளமே ரணமாகிக் கிடக்கும்

நெஞ்சிலே உரமின்றி தஞ்சமே தேடுவர்
நேர்மைத் திறனின்றி முதுகிலே குத்துவர்
நிமிர்ந்த நெஞ்சே நிலையான வீரம்
நேர்கொண்ட பார்வையே நல்லோர்க்குத் தீரம்

குறைகுட மென்று கூத்தாடிக் காட்டுவர்
கூழையாய்க் குணிந்து கும்பிடும் போடுவர்
பிறையென ஆனாலும் வளர்ந்தால் பெளர்னமி
தரையெனக் கிடந்தாலும் நடந்தால் நேர்வழி

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்
உண்மையைப் பேசி பொய்தனை  விடுபவர்
இம்மையை நல்ல தன்மையாய் வாழ்பவர்
தம்மையே  திருத்தித் தரணிக்குக் காட்டுவர்

வருவதை ஏற்று வாழ்க்கையை வாழ்பவர்
வறுமையைச் சகித்து வான்மறை ஓதுவர்
பொறுமையைக் கொண்டு புண்களை ஆற்றுவர்
மறுமையை நாடி ஒருவனைப் போற்றுவர்

கைகளைக் கொண்டு கடுமையாய் உழைப்பவர்
கற்றதைக் கொண்டு கண்ணியம் காப்பவர்
பொய்களை வென்று புதிர்களை உடைப்பவர்
பெற்றதைப் பகிர்ந்து பெரும்பேறு ஈட்டுவர்

நஞ்சையை யொத்த மனத்தினைக் கொண்டவர்
நன்செயல் வித்தை தழைத்திட உதவுவர்
தென்னையை யொத்தத் தேன்சுவை யெல்லாம்
அன்னையைப் போல அன்புடன் புகட்டுவர்

ரத்தமும் சதையும் யாவர்க்கும் உண்டுதான்
நித்தமும் நினைவும் நேர்மைக்கு நன்றுதான்
முத்தமோ யுத்தமோ மோகித்தது எதுவெனினும்
நேருக்கு நேராக நிற்பதே ஆணினம்!

Sabeer AbuShahruk

பழகு மொழி - 16 தொடர்கிறது... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2013 | ,

(2) 3.2 வினைப்பத வகைகள்

செயல்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களை வினைச் சொற்கள் என்போம். வினைச் சொற்களின் வகைகளை,


01 - ஏவல் வினை
02 - தெரிநிலை வினை
03 - குறிப்பு வினை
04 - தன் வினை
05 - பிற வினை
06 - செய் வினை
07 - செயப்பாட்டு வினை
08 - உடன்பாட்டு (இயல்மறை) வினை
09 - எதிர்மறை வினை
10 - (செயப்படு பொருள்) குன்றிய வினை
11 - (செயப்படு பொருள்) குன்றா வினை
12 - முற்று வினை (வினைமுற்று)
13 - எச்ச வினை (வினையெச்சம்)
14 - வியங்கோள் வினை
15 - துணை வினை
எனப் பிரிக்கலாம்.

(2) 3.2.1 வினைப் பகாப் பதம்

வினைச் சொல் வேற்றுமை ஏற்காது; தெளிவாகவோ குறிப்பாகவோ காலம் காட்டும்:

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்.
காலம்தாமே மூன்று என மொழிப.
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை உடைய தோன்றலாறே
 - தொல்காப்பியம், வினையியல் 1-3.

எல்லா வகை வினைச் சொற்களும் மூன்று காலங்களான இறந்தகாலம், நிகழ்காலம் வருங்காலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு காலத்தைத் தெளிவாகவோ குறிப்பாகவோ உணர்த்தும். அதனாற்றான், வினைச் சொற்களுக்குக் 'காலக்கிளவி' என்று இன்னொரு பெயரும் உண்டு.

காலத்தைத் தெளிவாகக் காட்டுபவை 'தெரிநிலை வினை' என்றும் குறிப்பாக உணர்த்துபவை 'குறிப்பு வினை' என்றும் இருவகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

ஒரு சொற்றொடரின் பிரிக்க முடியாத பகுதியாக வினைச் சொல் அமைந்திருந்தால் அது 'தெரிநிலை வினை' ஆகும்; பகுதியானது பெயர்ச் சொல்லாக இருப்பின் அது, 'குறிப்பு வினை' எனப்படும்.

காட்டுகள்:
'சென்றான்' எனும் சொல் கடந்த காலத்தைத் தெளிவாகக் காட்டும் தெரிநிலை வினை(முற்று). இதன் பகுதியான, 'செல்' என்பது ஏவற் சொல்லாகும் (செல்+ஆன்= சென்றான்).

'அவன் அழகன்' எனும் இரு சொற்களில் இறுதிச் சொல்லானது, 'அழகு' எனும் பண்புப் பெயரைப் பகுதியாகக் கொண்டுள்ளது. ஆனால் காலத்தை(த் தெளிவாக)க் காட்டவில்லை. எனினும்,

அவன் அழகன் ஆக இருந்தான்; அவன் அழகன் ஆக இருக்கிறான்; அவன் அழகன் ஆக இருப்பான் என்று காலங்களைக் குறிப்பாக உணர்த்துவதால் 'குறிப்பு வினை' என்றானது.

"வினைக் குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டுகரியன், இதுபொழுது கரியன், என இறந்த காலமும் நிகழ் காலமும் முறையானே பற்றி வருதலும் நாளைக்கரியனாம் என எதிர் காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக!" - தொல்காப்பிய வினையியல் உரையில் சேனாவரையர்.

ஆதலின், நாம் பாடம் (2) 3.1 (பெயர்ப் பகுபதங்கள்)இல் படித்த அறுவகைப் பெயர்ப் பகுபதங்களும் குறிப்பு வினையாக வரும்.

தலைப்பு (2) 3.1இல் குறிப்பிட்டுள்ள 15 வகை வினைகளுள் முதலாவதாக இடம்பெற்றுள்ள ஏவலில் முடியும் முற்றுவினைச் சொற்களைப் பற்றி, பாடம் (2) 2.1.2இல் படித்திருக்கிறோம். ஏவல் (முற்று)வினைச் சொற்கள், பகுக்க முடியாத பகாப் பதங்களாகவே அமைந்திருக்கும்:

நட,      வா,    மடி,     சீ,           விடு, கூ,            வே,     வை,
நொ,   போ,  வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,
தேய்,  பார்,  செல், வவ்,      வாழ், கேள்,       அஃகு என்று

எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்
செய் என் ஏவல் வினைப் பகாப்பதமே
 - நன்னூல் 147.


மேற்காணும் 23 சொற்களும் 'சொல்வதைச் செய்' என ஏவுவதாக இருப்பதால் இதனை, 'செய் வாய்பாடு' என அழைக்கின்றனர். 'செய்' வாய்பாட்டில் வரும் ஏவல்கள் அனைத்தும் வினைப் பகாப் பதங்களாகும்...
இன்ஷா அல்லாஹ் தொடரும்
ஜமீல் M.ஸாலிஹ்

நேர்மை ! தூய்மை! தாய்மை!- நிறைவுப் பகுதி 9

அதிரைநிருபர் பதிப்பகம் | April 27, 2013 | , , ,

மண்ணில் என்ன  தோன்றக்கூடும் 
மழை இல்லாதபோது 
மனிதனோ மிருகமோ 
தாயில்லாமல் ஏது?

“பாலினை நினைந்தூட்டும் தாயினை” என்று தொடங்கும்  ஒரு தமிழ்ப் பாடல் உண்டு. பெற்ற பிள்ளைக்கு எப்போது பசிக்கும் என்று வாயில்லாத குழந்தை சொல்ல முடியாத தருணத்தை தானே உணர்ந்து பாலூட்ட ஓடிவருபவள் தாய் என்று சுட்டிக்காட்டுவதற்காகவே அந்த  வார்த்தைகள். 

பசியால் துடித்த தனது  குழந்தைகளின் வறுமையைக் காணச் சகிக்காத தாய் ஒருத்தி தான் பெற்ற ஏழு குழந்தைகளையும் கிணற்றில் வீசி எரிந்து கொன்றுவிட்டு தானும் தன் வாழ்வை  முடித்துக் கொண்டதாக நல்ல தங்காள் கதை சொல்கிறது.  பெண் பிள்ளை பிறந்தால் கள்ளிப் பாலை ஊற்றி சாகடித்ததாக சில கரிசல்காட்டுக் கருத்தம்மா காவியங்கள் சில காலத்துக்கு முன்பு ஊடகங்களில் ஒளிபரப்பாயின.

 உடலின் பசிக்காய் உறவில் திளைத்துக் 
குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
பெற்றபின் பெற்றது பெண்மக வெனிலோ
அள்ளிப் பாலை அளிக்காது
கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

இப்படி சில இயல்பான தாய்மைக்கு எதிர்மறையான தாய்களை  இக்காலம் சொல்லிக் காட்டுகிறது. குப்பைத் தொட்டிகளில் குழந்தைகள் என்கிற தலைப்புச் செய்திகள் வறுமைக்கு,  தாய்மையையும் வெல்லும் சக்தி உண்டென பறைசாற்றுகின்றன.  

அதே போல் ஒரு எதிர்மறையான தாயின் வரலாறு இதோ ஒரு வகை கெட்ட தாயானாலும் அவள் வார்த்தையின் வலிமையை  சுட்டிக் காட்டுவதற்காகவும் நல்லவையே வாழும் அல்லவைகள் அழியும் என்று நிலைநிறுத்தவும்  புகாரியிலே ஒரு வரலாறு சொல்லப் படுகிறது. 

பனூ இஸ்ராயில் சமுதாயத்தைச் சேர்ந்த ஜூரைஜ் என்ற ஒரு மனிதர் எந்நேரமும் இறைவனையே தொழுது கொண்டிருந்தார். அதிலேயே ஆனந்தம்  கண்டார். அப்படித் தொழுவதர்காகவே ஒரு ஆசிரமும் அமைத்து இருந்தார். ஒருநாள் தன் மகன் தொழுது கொண்டிருந்ததைப் பாரதத்  அவரது தாயார் ஜூரைஜை பெயர் சொல்லி அழைத்தார். ஆனால் தொழுகையில் இருந்த ஜூரைஜ் தன் தாய்க்கு பதில் கூற மறுத்துவிட்டார். “ நான் ஏன் தாய்க்கு பதில் அளிப்பதா அல்லது தொழுவதா?” என்று மனதிற்குள் கேள்வி எழுப்பிக் கொண்டார். பெற்ற தாயாகிய தான் அழைத்தும் பதில் அளிக்காத மகன் மீது தாய்க்குக் கோபம வந்தது. அந்தக் கோபத்தில் “ இறைவா! விபச்சாரி ஒருவளின் முகத்தில் இவன் விழிக்கிற வரை என்  மகனுக்கு நீ  மரணத்தைத் தாராதே !” என்று வேண்டினாள்; சாபமிட்டாள். 

ஒருநாள் ஜூரைஜ் தனது ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், நான் இவரை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்என்று கூறி உள்ளே  நுழைந்து அவருடன் தகாத உறவு கொள்ள அழைத்துப் பேச முயன்றாள் ; முனைந்தாள் .அவர் இணங்க மறுத்துவிட்டார். ஆகவே, அவள் ஊர் ஆடுமேய்ப்பவனிடம் சென்று அவனிடம் தன்னை ஒப்படைத்தாள். அதன் காரணமாக் ஓர் ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள். 

இவ்விதம் பிறந்த குழந்தையை ஊரார் மத்தியில் கொண்டுவந்து பொய்யாக இந்தக் குழந்தை ஜூரைஜூக்குப் பிறந்தது என்று கூறினாள். இவளது இந்த பொய்யை உண்மை என்று நம்பிய மக்கள் வெகுண்டெழுந்து அவரது ஆசிரமத்தை தகர்த்து உடைத்து அவரை இழிவாகப் பேசினார்கள். 

இதன்பின் ஜூரைஜ் இதனை இறைவனிடம் முறையிடவேண்டுமென்று உளூச் செய்து தொழுதார். தொழுத கையோடு தனக்கு பிறந்ததாக பழி சொல்லப்பட்ட  பச்சிளங் குழந்தையிடம் வந்தார். குழந்தையை நோக்கி “ உண்மையில் நீ யாருடைய குழந்தை ? என்று கேட்டார். அந்தக் குழந்தை வாய் திறந்து பேசியது “ நான் ஒரு ஆடுமேய்ப்பவனுக்குப் பிறந்த குழந்தை. நீங்கள் என் தகப்பன் என்பது தவறு  ” என்று கூறியது. மக்கள் மனம் திருந்தினர். 

ஒரு இயல்புக்கு மாறான எதிர்மறையான தாய் இடும் சாபம் பலிக்காது என்பதற்கு இது உதாரணம். தாய்மை ஒரு மென்மையாக இருக்கும்வரைதான்  அதற்கு மேன்மை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. .( புகாரி பாகம் 3 / 2482 )          

சுலைமான் நபி அவர்களின் அரசவையிலே வந்த ஒரு வழக்கும் அதற்கான தீர்ப்பும் வரலாற்றின் ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.  

இரண்டு பெண்கள் ஒரு பெரிய பிரச்சினையைத் தீர்க்க  சுலைமான் நபி அவர்களிடம்  வருகிறார்கள். அவர்களில் ஒருத்தி சொல்கிறாள்: ‘இவளும் நானும் ஒரே வீட்டில் வசிக்கிறோம், எனக்கு ஒரு மகன் பிறந்தான், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவளுக்கும் ஒரு மகன் பிறந்தான். ஆனால் ஒரு ராத்திரி அவளுடைய குழந்தை இறந்துவிட்டது. அதனால், நான் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் செத்த குழந்தையை என் பக்கத்தில் வைத்து விட்டு என்னுடைய குழந்தையை அவள் எடுத்துக்கொண்டு போய்விட்டாள். நான் தூங்கியெழுந்தபோது என் பக்கத்தில் செத்த குழந்தையைப் பார்த்தேன், பார்த்ததுமே அது என் குழந்தை அல்ல என்பது எனக்குத் தெரிந்தது’ என்கிறாள்.

உடனே இன்னொருத்தி: ‘இல்லை! இல்லை! உயிரோடுள்ள குழந்தை என்னுடையது, செத்த குழந்தைதான் அவளுடையது!’ என்று சொல்கிறாள். ஆனால் அந்த முதல் பெண்: ‘இல்லவே இல்லை! செத்த குழந்தை உன்னுடையது, உயிரோடுள்ள குழந்தை என்னுடையது!’ என்று சொல்கிறாள். இப்படியே அந்த இரு பெண்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். நபி சுலைமான் என்ன செய்யப் போகிறார்? இரு தாய்களுக்குள் உரிமைப் போராட்டம். 

ஒரு கூர் வாளை கொண்டுவரச்  சொல்கிறார். அதைக் கொண்டு வந்ததும் ‘உயிரோடுள்ள குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாக இந்தப் பெண்களிடம் கொடுத்துவிடு’ என்று சொல்கிறார்.

உடனடியாக அந்த உண்மையான தாய்,  ‘ஐயோ, வேண்டாம்! தயவுசெய்து குழந்தையைக் கொல்ல வேண்டாம். அவளுக்கே கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லி அழுகிறாள். ஆனால் இன்னொருத்தியோ ,  ‘எங்கள் இரண்டு பேருக்குமே அந்தக் குழந்தையைக் கொடுக்க வேண்டாம்; அதை இரண்டு துண்டாக வெட்டிப் போடுங்கள்’ என்று தீர்ப்புக்கு சம்மதிக்கிறாள். 

அவர்கள் பேசி முடித்ததும்  சுலைமான் நபி   அவர்கள் பேசுகிறார்: ‘குழந்தையைக் கொல்லாதே! . அந்த முதல் பெண்ணிடம் கொடுத்துவிடு! . அவள்தான் அந்தக் குழந்தையின் உண்மையான தாய்’ என்று சொல்கிறார். உண்மையான தாய் குழந்தையின் மீது உயிரையே வைத்திருக்கிறாள், எங்கே யாரிடம்  இருந்தாலும் தன் குழந்தை உயிருடன் நலமுடன்  இருந்தால் போதுமென்று நினைக்கிறாள் உண்மையான தாய். அதனால் குழந்தையைக் கொன்றுவிடக் கூடாது என்பதற்காக மற்றவளிடமே கொடுத்துவிடும்படி சொல்கிறாள்; இதை வைத்துத்தான் சுலைமான் நபி அவர்கள்  உண்மையான தாய் யார் என்பதைத் தெரிந்துகொள்கிறார். 

ஒரு உருவகக் கதை இருக்கிறது..

ஒரு தாயின் திருவயிற்றில் குடியிருந்த ஒரு குழந்தையிடம் நீ நாளை பூமியை தரிசிக்கப் போகிறாய் என்று இறைவன் சொன்னான். .

குழந்தை அழுதுகொண்டே கேட்டது. நான் எப்படி அவர்களோடு பேசுவேன்?

உனக்கு பேச்சைக் கற்பிப்பதற்காக ஒரு தேவதையை நான் ஏற்கனவே அனுப்பி வைத்திருக்கிறேன் என்றான் இறைவன். 

நான் எப்படி உங்களை வணங்குவேன்?

அந்த தேவதை உனக்குச் சொல்லித் தருவாள்.

நான் நல்லனவற்றை எப்படிக் கற்றுக் கொள்வேன் ?

அதையும் அந்த தேவதையே உனக்குக் கற்றுத் தருவாள்.

நான் துன்பப்படும்போது என்ன செய்வேன்?

அந்த தேவதை உன் அருகிருப்பாள். துன்பம் தீர்ப்பாள்.

நான் எப்படி அந்த தேவதையைக் கண்டு கொள்வேன்?

பூமியில் அந்த தேவதையின் பெயர் உம்மா /அம்மா.

ஒரு நல்ல வெயில் காலம். ஒருவன் வேலை தேடி நேர்காணலுக்குப் போய் களைத்துப்போய் வீட்டுக்கு வருகிறான். 

அப்பா கேட்கிறார் “வேலை கிடைத்ததா?”

தம்பி கேட்கிறான் “எவ்வளவு சம்பளம்?”

தங்கை கேட்கிறாள் “ட்ரான்ஸ்போர்ட் உண்டா?”

அக்கா கேட்கிறாள் “போனஸ் உண்டா?” 

வியர்வை வழியும் அவன் முகத்தை தனது புடவைத்தலைப்பால் துடைத்துவிட்டு அவனுக்கு குடிக்க குளிர்ந்த தண்ணீர் தந்து தாய் கேட்கிறாள் “சாப்பிட்டியா?”

சுகமான சுமையை 
இடம் மாற்றினாள் 
தாய்...
பிரசவத்துக்குப் பின் 
வயிற்றில் இருந்து 
இதயத்துக்கு. 

கட்டுரை நிறைவடைகிறது. தாய்மை நிறைவடையாது. மீண்டும் சிந்திப்போம்.; சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.   

முத்துப் பேட்டை P. பகுருதீன்.B.Sc.,

கடன் அட்டை - கிரடிட் கார்டு - வரமா ? சாபமா ? - விவாதக்களம்...! 46

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2013 | , , , , ,


கடன் அன்பை முறிக்கும் ! இன்னும் ஒரு படி மேலே போய் எலும்பையும் முறிக்கும் என்று சொல்லிய காலம் மருவி இப்போது, கடன் அட்டைகள் இல்லாத சட்டைப் பைகள் இல்லை என்று சொல்லுமளவுக்கு அதன் தாக்கம் அதிகம் என்றால் மிகையில்லை !

கடன் அட்டையினை தானாக வந்து வாசல் தட்டி கொடுத்து விட்டுச் சென்று பின்னர் தடியர்களோடு வந்து வாசல் தட்டி இழுத்துச் செல்லும் சோகமும் உண்டு. தானாக வந்தாலும் தள்ளியே இருக்கச் சொல்லி அதிலிருந்து ஒரு துளிகூட எங்களை நெருங்க வேண்டாம் என்று சொல்லும் ரகமும் உண்டு.

அவர்/அவன் எடுத்தான் அதனால்தான் நானும் எடுத்தேன் ஒரு கடன் அட்டை மட்டும்தான், அதனை அடைக்க மற்றொன்று எடுத்தேன் இப்படியாக புலம்பல்களும் கண்டிருக்கிறோம் கேட்டிருக்கிறோம்.

கடன் அட்டைகள் அவரவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அதனை முறையாக பயனாளிகளால் கையாளத் தெரிந்தவர்கள் அதனைப் பயன்படுத்தியும் வருகின்றனர். எப்படி அது சாத்தியம் என்று கேட்டால் திட்டமிடல், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பயன்படுத்துதல் என்று அளவாக சொல்லி விடுகின்றனர்.

கடன் அட்டையா? (அதாங்க கிரடிட் கார்டு) அப்படின்னா என்ன என்று கேட்டவர்களும் நம்மிடையே இன்றளவும் இருக்கிறார்கள் !

சரி ! அனுபவத்தினூடே கருத்தாடல் செய்வோமா ! நீங்கள் எந்த ரகம் !? உங்களைச் சார்ந்தவர்களுக்கு இது சாபமா ? வரமா ? 

வேண்டுமா ? வேண்டாமா ? (கடன் வாங்கலாம் வாங்க...! என்ற தொடர் பதிவையும் ஒரக்கண்ணால் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்).

விவாதிக்கலாமே !

அதிரைநிருபர் பதிப்பகம்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 36 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2013 | ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

கஞ்சத்தனம் கூடாது:

அல்லாஹ் கூறுகிறான்:

யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம். அவன் விழும் போது அவனது செல்வம் அவனைக் காக்காது. (அல்குர்ஆன்:  92:8 -11)

தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: 64: 16)

'அநீதம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அநீதம் செய்வது, மறுமை நாளின் இருள்களாகும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக கஞ்சத்தனம், உங்களுக்கு முன் இருந்தோரை அழித்து விட்டது. அவர்கள் (கொலை மூலம்) தங்களின்  ரத்தத்தை ஓட்டிக் கொள்ளவும், தங்களுக்குத் தடை செய்யப்பட்டதை ஆகுமாக்கிக் கொள்ளவும் அவர்களை அது தூண்டி விட்டது'' என்று நபி (ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 563)

அர்ப்பணம் செய்தல், துயர் போக்குதல்:

அல்லாஹ் கூறுகிறான்:

தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: 59:9)

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். (அல்குர்ஆன்: 76:8)

'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'நான் பசியாக உள்ளேன் என்று' கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தன் மனைவியரில் ஒருவரிடம் ஆள் அனுப்பினார்கள். ''உங்களை சத்தியம் மூலம் அனுப்பியவன் மீது சத்தியமாக, என்னிடம் தண்ணீர் தவிர வேறு இல்லை' என்று அவர்களின் மனைவி கூறினார். பின்பு மற்றொரு மனைவியிடம் அனுப்பினார்கள். அதுபோலவே அவர்களும் கூறினார்கள். ''சத்தியத்தின் மூலம் உங்களை அனுப்பியவன் மீது சத்தியமாக, தண்ணீர் தவிர என்னிடம் எதுவும் இல்லை' என்றே (அவர்கள் மனைவியர்) அனைவரும் கூறினர். ''இன்றைய இரவு (இவரை) விருந்தாளியாக்கிக் கொள்பவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அன்சாரிகளில் ஒருவர், ''இறைத்தூதர் அவர்களே! நான் (ஏற்கிறேன்)'' என்று கூறிவிட்டு, தன் வீட்டிற்குச் சென்றார். தன் மனைவியிடம், 'நபி(ஸல்) அவர்களின் விருந்தாளியை நீ கண்ணியப்படுத்துவாயாக!' என்று கூறினார்.

மற்றொரு அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு உள்ளது:

அவர் தன் மனைவியிடம், ''உன்னிடம் எதுவும் உள்ளதா?'' என்று கேட்டார்.

''என் குழந்தைகளுக்குரிய உணவைத்தவிர வேறு இல்லை'' என்று அவர் மனைவி கூறினார். ஏதேனும் அவர்களுக்கு தந்திரம் செய்து அவர்கள் இரவு உணவைக் கேட்டால், அவர்களை தூங்கச் செய்வாயாக! நம் விருந்தாளி வந்ததும், விளக்கை நீ அணைத்து விடு! நாம் சாப்பிடுவது போல் அவரிடம் காட்டிக் கொள்வோம் என்று கூறினார். (அவர் வந்ததும்) அவர்கள் உட்கார்ந்தார்கள். விருந்தாளி சாப்பிட்டார். இருவரும் பசியாகவே இரவைக் கழித்தார்கள். காலை நேரம் வந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார். அவரிடம், ''இரவு உங்கள் விருந்து மூலம் உங்களிருவரின் விருந்தாளியிடம் நடந்து கொண்டது குறித்து அல்லாஹ் மகிழ்ச்சி அடைந்துவிட்டான்''  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 564)

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

 ' இருவரின் உணவு, மூன்று பேருக்குப் போதும், மூன்று பேர் உணவு, நான்கு பேருக்குப் போதும்.'' என்று நபி (ஸல்)கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்:

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''ஒருவரின் உணவு, இரண்டு பேருக்கு போதும், இரண்டு பேர் உணவு, நான்கு பேருக்குப் போதும். நான்கு பேர் உணவு எட்டுப்பேருக்கு போதும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஜாபிர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 565)

'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்த போது, தனக்குரிய வாகனத்தில் ஒருவர் வந்தார். அவர் தன் பார்வையை வலப்புறமும், இடப்புறமும் திருப்பிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''ஒருவரிடம் வாகனத்தின் முதுகில் மேல் மிச்சமாக இடம் இருந்தால், வாகனமில்லாத ஒருவனுக்கு  அதை அவர் கொடுக்கட்டும்! பயண உணவில் மேல் மிச்சமாக ஒருவரிடம் இருந்தால், பயண உணவு இல்லாதவருக்கு அதைக் கொடுக்கட்டும்! என்று கூறினார்கள்.  இவ்வாறு பல பொருட்களையும் வகையிட்டுக் கூறினார்கள். ''மேல் மிச்சம் எதுவும் எங்களில் எவரிடமும் இருக்க அனுமதி இல்லை'' என நாங்கள் எண்ணும் அளவுக்குக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 566)

சரியான வழியில் சம்பாதித்து, சரியான வழியில் செலவு செய்கின்ற நன்றியுள்ள பணக்காரரின் சிறப்பு:

யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்கு  வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். (அல்குர்ஆன்: 92:5-7)

இறையச்சமுடையவர் (நரகிலிருந்து) அதிலிருந்து விலக்கப்படுவார். அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது. அவர் திருப்தியடைவார். (அல்குர்ஆன்: 92:17-21) 

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது.  உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 2:271)

நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன்: 3:92)

இரண்டு பேர்கள் விஷயத்தில் தவிர பொறாமை என்பதில்லை. (1) அல்லாஹ் ஒரு மனிதருக்கு செல்வத்தை வழங்கி உள்ளான். அதை அவர் சத்திய வழியில் செலவு செய்கிறார். (2) அல்லாஹ் ஒருவருக்கு அறிவை வழங்கி உள்ளான். அவர் அதன் மூலம் தீர்ப்பும் வழங்கி, (பிறருக்கு) கற்றும் கொடுக்கிறார். (இந்த இருவர் மீதும் பொறாமை கொள்ளலாம்) என நபி (ஸல்)கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 571)

இருவரின் விஷயத்திலே தவிர பொறாமை என்பதில்லை. (1) ஒருவருக்கு அல்லாஹ் குர்ஆனை (ப்பற்றிய அறிவை) தந்துள்ளான். அவர் அதை இரவிலும் பகலிலும் ஓதுகிறார். (2) ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி உள்ளான். அவர் அதை இரவிலும், பகலிலும் செலவு செய்கிறார் (இந்த இருவர் மீதும் பொறாமை கொள்ளலாம்)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 572)

முஹாஜிர்களில் உள்ள ஏழைகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ''பணக்காரர்கள், உயர்ந்த தகுதிகளையும், நிலையான சொர்க்கத்தையும் பெற்றுக் கொண்டார்கள்'' என்று கூறினார்கள். ‘'ஏன் அப்படி?’’ என நபி(ஸல்) கேட்டார்கள். ‘’நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு வைப்பது போலவே அவர்களும் நோன்பு வைக்கிறார்கள். அவர்கள் தர்மம் செய்கிறார்கள். நாங்கள் தர்மம் வழங்குவதில்லை. அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கிறார்கள். நாங்கள் விடுதலை செய்வதில்லை’’ என்று வந்த ஏழைகள் கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் ‘’உங்களுக்கு முந்தி விட்டவர்களை நீங்கள் அடைந்து கொள்கின்ற, உங்களுக்குப் பின் வருவோரை நீங்கள் முந்துகின்ற ஒரு செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?  நீங்கள் செய்வது போல் ஒருவர் செய்தாலே தவிர எவரும் உங்களை விடச் சிறந்தவராக ஆக முடியாது’’ என்று கூறினார்கள். உடனே அவர்கள் ‘’இறைத்தூதர் அவர்களே! சரி’’ என்றார்கள். ‘’நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 33 தடவை சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்  கூறுங்கள்’’ என்று நபி(ஸல்) கூறினார்கள். முஹாஜிர்களில் உள்ள ஏழைகள், நபி(ஸல்) அவர்களிடம் மீண்டும் வந்து, ‘’எங்களின் (பணக்கார) சகோதரர்கள் எங்களின் செயல்களை கேள்விப்பட்டு அது போன்றே அவர்களும் செய்கிறார்கள்’’ என்று கூறினார்கள். ‘’அது அல்லாஹ் தான் விரும்பியோருக்குத் தருகின்ற அருட்கொடையாகும்’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 573)

"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் - தொடர் - 4 9

அதிரைநிருபர் பதிப்பகம் | April 25, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், சென்ற பதிவில் சகோதரர் தஸ்தகீர் (crown) சொனதுபோல் இந்தத் தொடர் நம் மனதில் உள்ள அழுக்கை நீக்கும் என்று நம்பலாம்.

அல்லாஹ்வுக்காவும், அவனின் தூதர்  முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்காகவும் கண்ணீர் சிந்திய மக்களின் வரலாறுகளை அதிகமதிகம் படித்து நாமெல்லாம் படிப்பினை பெற வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தம் சிறு வயதில் தன் தந்தையை இழந்து, பிறகு தன் தாயையும் இழந்து, அனாதையாகி யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக ஆடு மேய்த்து, குரைசிகளிடம் காய்ந்த பேரித்தம்பழங்களுக்காக(உணவுக்காக) வேலைபார்த்து அப்துல் முத்தலீப் அவர்களுடன் 8 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அப்துல் முத்தலீப் அவர்களையும் இழந்து.  அந்த 8 வயது காலகட்டத்திலிருந்து அபூதாலிப் அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள்.

தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிபுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அபூதாலிப் எல்லா உபகாரமும் நபி(ஸல்) அவர்களுக்கு செய்தார், நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் போது எல்லாவிதமான உதவிகளும் செய்தார். ஆனால் தன்னுடைய மரண நேரத்தில் இஸ்லாத்தை தழுவாமல் இறந்துவிட்டார்.

அபூதாலிப் வாழ்நாளில் நபி(ஸல்) அவர்களுக்கு செய்த உபகாரம் நபி அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. கலிமா சொல்லாமல் மரணிக்கப்போகிறாறே தன்னுடைய பெரிய தந்தை. லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையை மட்டும் சொன்னால் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காக மன்றாடுவேனே என் பெரிய தந்தையே என்று அழுது அழுது கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிபின் மரண நேரத்தில்.

அந்த நேரத்தில் அல்லாஹ் பின் வரும் இறைவசனம் அல்லாஹ்விடமிருந்து இறங்கும் அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் அழுதார்கள் என்று (புகாரி 1360) ஹதீஸ் தொகுப்புகளில் காண்கிறோம்.

 مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَن يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَىٰ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ

முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல. அல் குர் ஆன் (9:113)

கலிமா சொல்லாமல் ஒருவர் மரணித்தால், அவர் எங்கு செல்வார் என்பதை அல்லாஹ் தன் தூதர்களுக்கு விளக்கியிருந்தான், அந்த கொடிய நிலை தன்னை வளர்த்து, பாசம் காட்டி, வாழ்வில் பேருதவியாக இருந்த தன்னுடைய பெரிய தந்தைக்கு வரப்போகிறதே என்று நினைத்து நினைத்து நபி(ஸல்) அவர்கள் அழுதுள்ளார்கள் என்பதை நாம் வரலாறுகளில் காணமுடிகிறது.

இது போல் மற்றுமொரு உருக்கமான சம்பவம் நம் இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்தவை.

மக்கா வெற்றிக்கு பிறகு நபித்தோழர்கள் ஆனந்தக் கண்ணீருடன் உற்சாகமாக இருந்த காலகட்டத்தில், நபி(ஸல்) அவர்களின் சபைக்கு வயது முதிர்ந்த ஒரு பெரியவரை இருவர் அழைத்து வருகிறார்கள். “யார் அந்த பெரியவர்?" என்று நபி(ஸல்) அவர்க கேட்டார்கள், அவர் அபூபக்கர்(ரலி) அவர்களின் தகப்பனார் என்று கூறப்பட்டது.

நம்முடைய நபி(ஸல்) அவர்கள் பண்பை பாருங்கள், அபூபக்கர் தன்னுடைய பாசமான மாமனார் அல்லவா, தன்னுடைய மூத்த தோழர் அல்லவா. அந்த முதியவர் அபூபக்கர்(ரலி) அவர்களின் தந்தையாவார்.

“இந்த வயது முதிர்ந்த முதியவரை இவ்வளவு சிரமப்பட்டு இங்கு ஏன் கொண்டுவந்தீர்கள், சொல்லியனுப்பிருந்தால் நான் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்திருப்பேனே” என்று அபூபக்கர்(ரலி) அவர்களிடம் அன்பாக வினவினார்கள். 

“யா ரசூலுல்லாஹ் எனது தந்தைக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுங்கள்” என்று அபூபக்கர்(ரலி) சொன்னார்கள்.

உடனே நபி(ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களின் தந்தைக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுக்க, அவரும் இஸ்லாத்தை ஏற்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, நபி(ஸல்) அவர்களுடைய கையை நீட்ட சொல்லி தன்னுடைய கையை நபியவர்களின் கையின் மேல் வைத்தார்.

உடனே அபூபக்கர்(ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார்கள். “தந்தை இஸ்லாத்தை தழுவிய இந்த சந்தோசமான தருணத்தில் ஏன் அபூபக்கர்(ரலி) அவர்கள் அழுகிறார்கள்” என்று அருகில் இருந்த தோழர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை பார்த்து “ யா ரஸூலுல்லாஹ் நான் ஏன் அழுகிறேன் தெரியுமா? உங்களுடைய கைக்கு மேல் இப்போது என்னுடைய தந்தையுடைய கை இருக்கிறது இஸ்லாத்தை தழுவுவதற்காக, ஆனால் உங்களுடைய கைக்கு மேல் உங்களை வளர்த்து ஆளாக்கி, வாழ்நாட்களில் எல்லா வகையான உதவிகள் செய்த உங்கள் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களுடைய கை இருந்து, அதை பார்த்து உங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் வருமே அதை பார்க்கிற வாய்ப்பு எனக்கு இல்லாமல் போயிவிட்டதை நினைத்து அழுகிறேன் யா ரஸூலுல்லாஹ், என்னுடைய தந்தை இஸ்லாத்தை தழுவுவதை காட்டிலும் உங்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்க வேண்டும் யா ரஸூலுல்லாஹ்” என்று சொன்னார்கள் அபூபக்கர்(ரழி) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை தழுவியிருக்க வேண்டுமே என்று அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் அழுதிருக்கிறார்கள், ஆனால் எவ்வளவு தான் இஸ்லாத்திற்காக என்னற்ற உதவிகள் பல செய்தாலும் அல்லாஹ் இணைவைப்புடன் யார் மரணித்தாலும் அவர்களுக்கு நிரந்தர நரகம், அவர்களுக்காக நாம் பாவமன்னிப்பு கேட்பதை அல்லாஹ் தடுத்துள்ளான்.

மேல் சொன்ன வரலாற்று சம்பவங்களிலிருந்து நாம் படிப்பினைபெற வேண்டியது என்னவென்றால், அல்லாஹ் தான் மன்னிக்க மாட்டேன் என்று சொல்லும் பாவம், நபி(ஸல்) அவர்களாலேயே அவர்களை வளர்த்து ஆளாக்கி இஸ்லாத்திற்காகவும், நபி(ஸல்) அவர்களின் ஏகத்துவ பிரச்சாரத்திற்காகவும் எண்ணிலடங்கா உதவிகள் செய்த தன்னுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு மன்னிப்பு வாங்கி கொடுக்க முடியவில்லை என்ற நிலைக்கான காரணம் அல்லாஹ்வுக்கு அபூதாலிப் அவர்கள் இணைவைத்தது மட்டுமே.

நம்முடைய சொந்தங்கள் எத்தனையோ பேர் உயிரோடு இருக்கும்போது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றார்களே, அவர்களை அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் காரியங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காக என்றைக்காவது நாம் அல்லாஹ்விடம் அழுது துஆ செய்திருக்கிறோமா? 

இணைவைப்பில் ஈடுபடும், பெற்றோர்கள், பிள்ளைகள், சொந்தங்கள், நண்பர்களை அக்காரியங்களிலிருந்து விடுபட வைக்கும் வேலைகளை கவலையுடன் நாம் செய்திருக்கிறோமா? அதற்காக அல்லாஹ்விடம் இறைஞ்சி அழுதிருக்கிறோமா? 

நம்மோடு பாசமாக இருக்கும் சொந்தங்கள் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லும் இணைவைப்பு பாவத்துடன் மரணித்தால் அவர்களுக்காக நாம் என்ன துஆ செய்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதற்கு மேல் சொன்ன குர் ஆன் வசனம் (9:113) சாட்சியாக உள்ளதே அதை நினைத்து அழுதிருக்கிறோமா?

நம்முடைய தாய், தந்தை, மனைவி, கணவர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், சொந்தங்கள், நண்பர்கள் தொழாவிட்டால் அழுதிருக்கிறோமா?

நம்முடைய தாய், தந்தை, மனைவி, கணவர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், சொந்தங்கள், நண்பர்கள் இணை வைப்போடு மரணித்தால், நரகத்தின் அடித்தட்டிற்கு தள்ளப்படுவார்களே என்று நினைத்து அழுதிருக்கிறோமா?

இந்த வார உறுதி மொழி:

இணைவைப்பு மவ்லிது மஜ்லிஸ் மற்றும் தர்கா போன்ற இடங்களுக்கு செல்லும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு நளினமான முறையில் இணைவைப்பினால் ஏற்படும் தீமையை எடுத்துரைப்போம், அவர்களை இணைவைப்பு காரியங்களிலிருந்து மீட்டெடுப்போம். இது நம் எல்லோருக்கும் இறைவனால் விதிக்கப்பட்ட கட்டளை.

வல்ல அல்லாஹ் அதற்காக நம் எல்லோருக்கும் துனை புரிவானாக.

M. தாஜுதீன்

நயவஞ்சகத்திற்கு – பகிரங்க எச்சரிக்கை ! 86

அதிரைநிருபர் பதிப்பகம் | April 24, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அதிரைக்கென்று இருந்த பாரம்பரியம், கம்பீரம், மார்க்கப் பற்றில் இருந்த பிடிப்பு, அதற்கென்று கட்டுண்டு இறையச்சத்தைப் பேணுபவர்கள் என்ற தகுதிகளைத் தகர்த்தெரியப் புறப்பட்டிருக்கும் நயவஞ்சகச் செயல்களுக்கு பகிரங்க எச்சரிக்கையாக இந்த பதிவு. இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமாக நம்முடைய சகோதரர்கள் சிலர் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்காகவும், கவுரவத்திற்காகவும் சத்தியத்தை எடுத்துரைக்கும் மார்க்க பிரச்சாரகர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்கள். அவர்களின் இந்த சூழ்ச்சிக்கு நமதூருக்கு குடிபெயர்ந்து வந்த ஒரு மார்க்க பிரச்சாரகர் தற்போது இரையாகிவிட்டார்.

ஷிர்க் பித்அத்துக்களைப் பகிரங்கமாகவும், வன்மையாகவும் கண்டித்து எதிர்த்த கண்ணியத்திற்குரிய மர்ஹூம் அலீய் ஆலிம் அவர்கள் வாழும் காலத்தில் ஏளனமாக பேசிய அதே கூட்டம் தான் இன்று இந்த மார்க்க பிரச்சாரகரையும் ஏளனமாக பேசி, அவரை அதிரையை விட்டு விரட்ட முயற்சி செய்கிறார்கள். காரணம், அவர் தர்கா வழிபாடு, இணை வைப்பு, வட்டி, மவுலத்து, தாயத்து, தட்டை போன்ற பிற மத கலாச்சாரங்களை, பித்அத்து அனாச்சாரங்களைப் பகிரங்கமாகக் கண்டித்துது மட்டுமின்றி, எதிர்த்தும் வந்துள்ளார், தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார்.

யார்? எங்கு? எப்போது? என்னவெல்லாம் உரையாடினார்கள், எவ்வளவு பாதகமான காரியங்கள், என்னவெல்லாம் சூழ்ச்சிகள் செய்தார்கள், என்பதை வெளியில் கொண்டு வருவது மிக மிக எளிது என்பதை இவர்கள் அறியவில்லையா ?. மேலும் சூழ்சிக்காரர்களின் அநீதி மிகுந்த வாதங்கள், ரகசிய ஆலோசனைகள் இவற்றை வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் உதவியுடன் சத்தியத்துக்கு எதிராக திரளும் இந்தக் கூட்டத்தின் சதிகளை இறையச்சமிக்க மக்கள் முன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்குகிறார்கள்.

உண்மையை உரக்கச் சொல்லும் ஆலிமை ஊரைவிட்டு துரத்தும் முயற்சிக்குப் எதிராக பல வகையில் சூழ்ச்சிகள் செய்யப்படுகிறது, சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். சத்திய இஸ்லாத்திற்காக எதிராக சூழ்ச்சி செய்யும் அக்கிரமக்காரர்களை அல்லாஹ் எப்படி இவ்வுலகில் கேவலப்படுத்தி இருக்கிறான் என்ற வரலாற்றை எந்த ஒரு மனிதனாலும் மறுக்க முடியாது.

கடந்த சில வருடங்களாக நமதூர் வாசிகள் அனைவரும் அவதானித்து வருகிறார்கள், குறிப்பிட்ட ஓர் ஆலிம் அவர் வெளியூரிலிருந்து வந்தவர் என்ற காரணத்தாலும், சத்தியத்தை உள்ளது உள்ளபடி உள்ளூரில் இருக்கும் மார்க்க பிரச்சாரகர்கள் பகிரங்கமாக எதிர்க்க, சொல்லத் தயங்கும் விஷயங்களை எடுத்துச் சொல்லி வந்த காரணத்தாலும் அவரை படாதபாடுபடுத்தி வருகிறார்கள் நம் அதிரை மண்ணின் மைந்தர்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விளக்கம் கேட்கும் அமர்வில் சம்பத்தப்பட்ட மார்க்க பிரச்சாரகரின் மார்க்க சொற்பொழிவில் தவறேதும் இல்லை என்று ஒத்துக் கொண்டவர்கள், தற்போது அதே மார்க்கப் பிரச்சாரகருக்கு எதிராக நிற்பவர்களுக்கு உதவியும், ஊக்கமும் கொடுத்துவரும் நமது சகோதரர்களின் நிலைபாட்டை எந்த வகையில் சேர்ப்பது !?. 

அன்று அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட விளக்கங்களில் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஆலிமைப் பற்றி சொன்னது, “ அவரின் பயானில் தவறில்லை”, “அவர் எங்களை அவமதித்தார்”, “பயான் தடை நடவடிக்கை தற்காலிகம் அல்ல”, “அந்த தீர்ப்பை மாற்றவே முடியாது” என்றும். “அவருக்கு மன்னிப்பு கிடையாது”. குறிப்பிட்ட நபரின் மீதான தனிப்பட்ட விரோதமே அந்த மார்க்க பிரச்சாரகரின் மீது நடவடிக்கை எடுக்க காரணம் என்று முரண்பட்ட வார்த்தை சிதறல்கள் ஏராளம் ஏராளம்.

இவர்கள் இன்னும் ஒருபடி மேலேச் சென்று சம்பத்தப்பட்ட மார்க்க பிரச்சாரகரின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும், அங்கே அடிதடி ஏற்பட வேண்டும் என்ற சமூக விரோதச் செயலை செய்ய அப்பாவி லெப்பைமார்களை உசுப்பேற்றியது. அதோடு அல்லாமல் அங்கே குளிர் காய நினைக்க முயன்றவர்களின் நயவஞ்சகச் சதித்திட்டங்களையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்த இவர்களின் அன்றைய சூழ்சிக்கு, கீழ்கண்ட செயல்களே சாட்சி.
  • லெப்பைக் குடும்ப சகோதரர்களைத் தூண்டி, ஆலிமுக்கு எதிராக முக்கியமான தெருக்களின் ஜமாத்திற்கு சென்று மனு கொடுக்க வற்புறுத்தல் செய்யப்பட்டிருக்கிறது. 
  • அவர் மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டாம் என்றும், எங்கள் பிழைப்பில் அடித்துவிட்டார் என்று மற்ற தெரு ஜமாத்துக்களிடம் மனு கொடுங்கள் என்று லெப்பைக் குடும்ப சகோதரர்களுக்கு ஆலோசனை வழங்கியது. 
  • சத்திய பிரச்சாரத்துக்கு எதிராக அரசாங்க உதவியை நாடலாமே என்று யோசனையை லெப்பை மார்கள் வழங்கியது.
  • ஊரில் ஏகப்பட்ட இயக்கங்கள் இருக்கும் போது லெப்பைகளின் நலனுக்காக ஏன் சங்கம் இல்லை? என்று கேள்வி எழுப்பி பிரச்சினையை மேலும் பெரிதாக்க முயன்றது.
  • தக்வா பள்ளியில் நடைபெறும் பயானில் லெப்பைமார்கள் பிரச்சினையை ஏற்படுத்தினால் ஆலிமை ஊரைவிட்டு துரத்திவிடலாம் என்ற யோசனையை முன் வைத்தது. 
  • பிரச்சினை முற்றிப்போய் வெட்டு-குத்து வந்தால் யார் பொறுப்பு என்று அச்சத்துடன் கேட்ட ஒரு லெப்பை சகோதரரிடம், “அதெல்லாம் பயப்படத் தேவையில்லை” என்று தைரியம் சொன்னது.
  • தக்வா முஹல்லாவாசி என்ற பெயரில் தக்வா பள்ளியின் அன்றைய கமிட்டித் தலைவரிடம் “நான் பிரச்சினை செய்வேன்” என்று மிரட்டியது.
மேலே சொல்லப்பட்டவைகள் பதிவுக்கு என்று எழுதப்பட்ட வரிகள் அல்ல அத்தனையும் உண்மை, அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்ளை ஆய்வு செய்த பின்னரே இதனை பொதுவில் வைக்கிறோம்.

அறிந்தோ, அறியாமலோ நம்முடைய சகோதரர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவும், ஒரு சிலரை பழிவாங்குவதற்காகவும் தூய இஸ்லாமிய நெறிமுறைகளைப் புறந்தள்ளி. சத்தியப் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை குறிவைத்து தங்களின் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்கள்.

இனியும் ஏகத்துவ சத்திய பிரச்சாரத்துக்கு எதிராக மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்களில் தொடர்புடையவர்கள், அவர்கள் செய்ததது தவறு என்று திருந்த வேண்டும். மேலும் மேலும் பிரச்சினை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இவர்கள் யார் இதனைச் சொல்ல நாங்கள் இப்படித் தான் இருப்போம். இன்னும் பல சூழ்ச்சிகள் செய்வோம், பழிவாங்குவோம் என்று இன்னும் வீராப்பு காட்டினால், இதுவரை பொறுமையைக் கையாண்டு வரும் சகோதரர்களின் மேலும் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் அதிலும் மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களுக்கான ஆதாரங்களைப் பொதுவில் வைக்கப்படும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து, இனியும் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க முயற்சிக்கட்டும் என்றும் பகிரங்க எச்சரிக்கையாகவே இங்கே பதிகிறோம். 

அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

சூழ்ச்சிகள் செய்யும் அன்பர்களே உங்களின் மறைவானவற்றையும், வெளிப்புறங்களையும் அல்லாஹ் கண்காணிக்கிறான், மலக்குமார்கள் கண்காணிக்கிறார்கள், அத்தோடு மனிதனால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நயவஞ்சக கூட்டத்திற்கு நாளை கபுரிலும் வேதனையுண்டு, மஹ்சரிலும் வேதனையுண்டு, நரகத்தின் அடிதட்டில் நிச்சயம் இடம் உண்டு என்பதையும் நினைவூட்டுகிறோம். 

அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.

யா அல்லாஹ் நாங்கள் எல்லோரும் இவ்வுலகின் அற்பமான சுயநலனுக்காக எவ்வளவோ தவறுகள் செய்கிறோம், அதனை மன்னித்து எங்களை நேர்வழி படுத்துவாயாக! 

யா அல்லாஹ் உன்னை மட்டுமே வணங்கும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக!

வேறு எந்த தனிமனிதனின் திருப்திக்காக வாழும் நயவஞ்சகர்களாக எங்களை ஆளாக்கிவிடாதே!

எங்கள் அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக!

அதிரைநிருபர் பதிப்பகம்

இவ்வுலகம் அழிவை நோக்கிச் செல்கிறதா? 19

அதிரைநிருபர் பதிப்பகம் | April 24, 2013 | ,


ஆம்..! அதில் சந்தேகமே இல்லை! இக்காலத்தில் விஞ்ஞானம்  வளர்ந்து கொண்டே இருக்கிறது. விஞ்ஞானம் என்றால் மனிதனின் வாழ்வை மேம்படுத்துவதற்காக அமைதல் வேண்டும் என்பது நமது அசைக்க முடியாத நம்பிக்கை.

விஞ்ஞானம் வளர்வதால் மனிதன் என்னவாகிறான்?

இக்கால விஞ்ஞான உலகம் மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கின்றது, அதனை நாம் யாரும் மறுக்க இயலாது!. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அந்த நஞ்சைப் போல் தான் இவ்வுலகம் மாறிக் கொண்டு இருக்கிறது.

வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகைகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கழிவுகள், இதனால் நீர்நிலைகள் மாசுபடுவது, ப்ளாஸ்டிக்ஸ் போன்று அன்றாடம் பெருகிக் கொண்டே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக்ஸ். சாதரணமாக நாம் பரோட்டா வாங்கச் சென்றாலும் சூடான பரோட்டாவை ப்ளாஸ்டிக் பேப்பரில் (நம் ஊரில் பட்டர் கீஸ் என்கிறார்கள்) வைத்து தருகிறார்கள், சால்னாவை எதில் ஊற்றுகிறார்கள்? ப்ளாஸ்டிக் கீஸ்ஸில் தான், சில இடங்களில் பார்க்க முடிகிறது, தேனீர் பார்சல் வாங்குவதற்கு ப்ளாஸ்டிக் பையை பயண்படுத்துகிறார்கள். சும்மாவே ப்ளாஸ்டிக் பயன்படுத்துவது அபாயம் என்கிறார்கள், இதில் சூடானவற்றை அதில் ஊற்றினால்?? இப்படி எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக் நம்மைச் சூழ்ந்திருக்க புதிது புதிதாக கேன்சர் போன்ற நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றது.அழிவுக்கானவற்றை எல்லாம் மனிதனே உருவாக்க  படைத்தவனை பழிச் சொல்வோர் ஏராளம். சுற்றுச்சூழல் மாசுபாடுகளை அல்லாஹ் ஏற்படுத்துவதில்லை மாறாக மனிதன் ஏற்படுத்துகிறான்.


அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதாவது

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தைச் சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதைச் சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:72.)”

இக்காலத்தில் ஆடையணிதல்:

நியூ ஃபேஷன் என்ற பெயரில் ஆடையணிதலின் நோக்கமே மாறிவிட்டது.மேலை நாடுகளில் பிற மதத்தவர்கள் (ஆண்களும் பெண்களும்) நியூ பேஷன் என்ற பெயரில் உள்ளாடைகள் தெரியுமளவுக்கு உடையணிகிறார்கள். அடுத்தவர்கள் (மேலை நாட்டினர்) என்னச் செய்தாலும் அதனையே பின்பற்றும் உலகமாகவல்லவா மாறிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம். LowHip Pant, Short Shirt என்று  சீரழிந்துக் கொண்டிருக்கிறது இந்த ஃபேஷன்!!

நமது உயிரிலும் மேலான நம் தலைவர் நபி(ஸல்) அவர்கள் மறுமை நாளின் அடையாளமாக ஆடையணிவது பற்றியும் எச்சரித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளின் அடையாளத்தில் ஒன்றாக கூறியதாவது”பெண்கள் நிர்வாணமாக ஆடையணிந்திருப்பார்கள்”.இது பற்றி நாம் சொல்ல வேண்டியதே இல்லை, தற்போதைய நடைமுறையில் இருந்து வருகின்றது

மது:

மதுவைப் பற்றி இஸ்லாம் கடுமையாக எச்சரித்துள்ளது.ஆனால், இப்போது நடைமுறையில் இருப்பது என்ன தெரியுமா? இஸ்லாமியர்,இஸ்லாமல்லாதவர் என பாகுபாடின்றி மது அருந்தும் பழக்கம் அரங்கேறி வருகிறது.

என்னுடன் பழகியவர்களில் பல இஸ்லாமியர்கள் என்னிடம் கேட்டதுண்டு..

"பாய்!! தண்ணி அடிப்பீங்களா?" 

அதற்கு நான் “இல்லை”…

பிறகு "பீராச்சும்(BEER) அடிப்பீங்களா?" 

அதற்கும் "இல்லை.."

திருப்பி நாம் கேட்டோமானால் வரும் பதில் என்ன தெரியுமா? "தண்ணி அடிக்க மாட்டேன், பீர் மட்டும் எப்பயாச்சும்..."

இந்த கேடுகெட்ட பழக்கம் பெருமளவில் கல்லூரி மாணவர்களிடம் பெருகிக் கொண்டு வரும் மோசமான பழக்கமாக இருக்கிறது.

“மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்”. இன்றைய காலத்தில் இன்னுமொரு பழக்கம் இருந்துவருகிறது,மது அருந்தாதவர் மது அருந்தும் தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் வாங்கி வைக்கும் சைட் டிஷ் ஐ சாப்பிடுவதற்காக அவர்களுடன் அந்த சபையில் உட்கார்ந்திருப்பது.நாம் மது அருந்தாவிட்டாலும் அவர்களுடன் உட்க்கார்ந்திருந்தால் அவர்கள் மீது இறங்கும் சாபம் நம் மீது இறங்காதா?

நபி (ஸல்) அவர்கள்:

எனது சமூகத்தில் வேறு பெயர்களை வைத்து மது அருந்துவார்கள், அவர்களது முன்னிலையில் இசைக்கருவிகள் இசைக்கப்படும், பாடல்கள் பாடப்படும். இவர்களை அல்லாஹ் பூமிக்குள் செருகி விடுவான் என்றார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா)

மேலும் அல்லாஹ் திருமறையில்,

“நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபாணத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடம் பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்துவிடத்தான் எனவே அவற்றை விட்டும் நிங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர் ஆன் 5:90,91)

ஏன் இந்த புர்கா?

இஸ்லாம் பெண்களுக்கு “ஹிஜாப்” என்ற பர்தா முறையைக் கடமையாக்கியிருக்கிறது. அதன் மூலம் தங்களின் கற்பைக் காத்துக் கொள்ள ஏவுகிறது.இந்த புர்காவை சில இஸ்லாமியப் பெண்கள் எப்படி அணிகிறார்கள் என தெரியுமா? என் கண் முன்னே சில பெண்கள் புர்கா அணிந்த முறையைப் பார்த்திருக்கிறேன்.தங்களின் உடலை ஒட்டியபடி அமையப்பட்டிருக்கும் நிலையில் இருந்தது.

நபி(ஸல்) அவர்களுடன் ஆயிஷா(ரழி) இருக்கும் போது, அஸ்மா(ரழி) வருகிறார்கள். அப்போது அவர்களது ஆடை மிக மெல்லியதாக (உடல் தெரியும் நிலையில்) இருந்தது. அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் யா அஸ்மா ஒரு பெண் பருவமடைந்து விட்டால் அவளுடைய இந்த, இந்த பாகங்களைத் தவிர மற்றவை வெளியே தெரிவது நல்லதல்ல என்று கூறும் போது அவர்களின் முகத்தையும், மணிக்கட்டு வரையிலான கைகளையும் சுட்டிக் காட்டினார்கள். - ஆயிஸா(ரழி) வாயிலாக, காலித் இப்னு தரீக், அபூதாவூது, அபூஹாத்தம்

இன்னும் சிலர் இருக்கின்றனர் தங்களை இஸ்லாமியப் பெண்கள் என்று காட்டிக் கொள்வதற்காக… புர்கா அணிந்திருப்பார்கள் முக்காடில்லாமல். இன்னும் சிலர் இருக்கின்றனர், அவர்களைப் பார்த்தால் இஸ்லாமியப் பெண் என்றே தெரியாது அவர்களாக சொல்லும் வரை. இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறும் போது,

“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முன்றானைகளைத் தொங்க விட்டுக் கொள்ளட்டும். அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும் மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்." - (அல்குர் ஆன்: 33:59)

சாட்டிங்(Chatting):

Social Networking என்ற பெயரில் நேரத்தை வீணே கழிக்கும் சூழல் உருவாகிவிட்டது. முன்பின் தெரியாத யாரோ யாருக்கோ (Friend Request) அனுப்புகிறார்கள், Friend Requestம் Accept செய்யப்படுகிறது.. இதில் ஆண்/பெண் பாகுபாடே கிடையாது. தங்களது அலுவலகப் பணியை ஒழுங்காகச் செய்கிறார்களோ இல்லையோ பெரும்பாலானோர் தங்களது Online Friendsகளுடன் தவறாது Chat பன்னுகிறார்கள்.

என் வேலை, என் குடும்பம், என் சமூகம் என்ற ஒரு காலம் இருந்தது.. அப்போதெல்லாம் தங்களது நெருங்கிய நண்பர்களைக் கூட என்றாவது ஒரு நாள் பார்த்தோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளும் காலம்.இன்றையக் காலத்தில் முன்/பின் தெரியாதவர்களுடன் தேவையில்லாத பேச்சுகள், அரட்டைகள்,ஒருவரை ஒருவர் வர்ணித்துக் கொள்ளுதல் போன்றவையெல்லாம் நடந்து வரும் அவலம் ஏற்பட்டிருக்கின்றது. இதில் மூழ்கி, தங்களது கடமைகளைச் செய்ய தவறிவிடுகின்றனர். அது இம்மைக்கான கடமையாகட்டும் மறுமைக்கான கடமையாகட்டும். மறுமையின் அடையாளமாக நபி(ஸல்) கூறுவது மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும். காலம் சுருங்கி விட்டதையும் சுருங்கிக் கொண்டே போவதையும் நம்மால் நன்கு உணர முடிகிறது.

இசை நம்மைச் சூழ்ந்த நிலை:

தற்போதைய கால கட்டத்தில் இசை நம்மைச் சூழ்ந்திருப்பதனை நாம்  உணரலாம்.நம்மில் பெரும்பாலானோர் இசையைச் சுவைப்பவர்களாகவே இருக்கின்றனர்.இசையைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

என் சமூகத்தாரில் சில கூட்டத்தார்கள் தோன்றுவார்கள் அவர்கள் விபச்சாரம், மது, பட்டு, இசை போன்றவற்றை அனுமதிக்கப்பட்டவையாக கருதுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதை நாம் ஹதீஸில் காண முடிகிறது.

மேற்கூறப்பட்ட நான்கில் விபச்சாரம் மட்டும் தான் இப்போது மீதமுள்ளதென நினைக்கின்றேன்.

இன்னும் சிலர் நம்மில் இசையை விட்டு விளகியவர்களாக இருக்கின்றனர். ஆனால் நாம் பேருந்தில் பயணிக்கும்போது எப்படியாவது இசை நம் காதுகளை வந்தடைந்துவிடுகின்றது.

முடிவுக்கு வருவோமா?

சுகாதாரமின்மை, அனாச்சாரங்கள்,மற்றும் இஸ்லாம் தடுத்துள்ளவற்றில் பெரும்பாலானவை நடைமுறையில் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. இவற்றால் நமக்குக் கேடுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. எல்லாம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகையால், சிலவற்றை நம்மால் தடுக்க இயலாவிட்டாலும்,இஸ்லாம் நமக்கு தடுத்தவற்றை விட்டு விளகிக் கொண்டு மறுமைக்காக நம்மை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.

'காலத்தின் மீது சத்தியமான மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்' (103:1,2)

அப்துர் ரஹீம் ஜமீல்

பரீட்சையை கண்டுபிடித்த புண்ணியாவனே ! - படிக்காதவங்களுக்காக** இது ஒரு ரிவைண்ட் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | April 23, 2013 | , , , ,

1980 - 90களில்... நினைவலைகள் ! - இது ஒரு ரிவைண்ட் !

பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. - அவர் தலை மேல.! ஆவல் தீர குட்டனும்னு கோபம் கோபமா வருதே !

பின்ன என்ன தலைவா.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!

பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, ரேடியோ கேட்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.

பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும். எட்டாவது நிமிஷம் டீ வரும்.

உம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.

பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு ரேடியோவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.

எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.?

இதெல்லாத்தையும் விட இப்போது பரீட்சைப் பேப்பரு ரயில்வே டிராக்கில் போட்டுவிட்டு சென்ற புண்ணியவான் மாதிரியெல்லாம் அப்போ எவனும் இல்லே... அப்படியிருந்துச்சுன்னா எவ்வ்வ்ளோ குஷியா இருந்திருக்கும் !

ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், ஃபுட்பால், ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..

காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து காலை சாப்பாடு, மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி தெருவில் இருக்கும் முச்சந்தியில் நிற்பது இல்லாட்டி ஏதாவது குளக்கரையோரம் அரட்டை, ரேடியோ, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் ஜூன் மாதம்.. " உம்மாடியோவ்.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே.."

நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.

இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை..?"னு மாமா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். மாமா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை மாமாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?

மாமா நகர்ந்ததும் உம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? யாரும் என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா  ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!

மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த மாமா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!

மாமா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத மாமாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!

இறைவா.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு...!

எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. உம்மாடியோவ்.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு நண்பன் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. இறைவா.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க ஒரு நண்பனையும் பெயில் ஆக்கிடு.. டீலிங்..!

அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.

பஸ்ல போயிட்டிருக்கும்போது, என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.

ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. உம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. மாமா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. இறைவா.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. வம்படியாக பிரார்த்தனை முணுமுணுத்தது...

இப்ப மாதிரி ரிசல்ட்டை பிரவுசிங் சென்டர்ல எல்லாம் போய் பாக்க முடியாது.. பேப்பர் தான்.

ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.

பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..

என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..

நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..

திடீர்னு பக்கத்து வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. நண்பனை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!

மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க பக்கத்து வீட்டுகிட்ட போனேன். பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "

என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?

அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா நண்பர்களின் நம்பரை மட்டுமே பேப்பர்ல தேடியிருக்கேன்.

பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.

மாமா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத மாமாவின் முகம் இப்ப அழகா இருந்தது.

மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.

நல்லவேளை டாஸ்மாக் கடைகளின் களியாட்டம் அப்போது இல்லை, அப்படி ஒன்று நிகழ்ந்து அதனால பாஸ் பன்னவன்னு ஒரு பழிச்சொல் சுமக்காமல் போனோமே ! அப்பாடா !

இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!
குறிப்பு : சென்றவருடம் ஒரு பிரபல வரப்பத்திரிகையில் வெளியான கட்டுரையைத் தழுவி வட்டார பேச்சு மொழி இணைத்து சின்ன சின்ன நெறியாடல் செய்து வித்தியாசமான ரசனையாக அந்த மீடியம் கிளாஸ் மாணவனின் ஏக்கத்தில்தான் இந்தப் மீள்பதிவு...

இப்படிக்கு இவ்வாறன அவஸ்தைகளில் சில வற்றை அனுபவித்த...  [**தலைப்பில் இந்தப் பதிவை அன்று படிக்காதவர்களுக்காக என்று இப்போ வாசிச்சுடுங்க ப்ளீஸ்]


அன்றைய மாணவன்


அபூஇப்ராஹீம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு