'ஹலோ நாங்க டாக் எஃப் எம்மிலிருந்து பேசுறோம்'
'அப்ப வாயிலிருந்து பேசலையா..?'
'வாரம் நாங்க ஒரு நம்பருக்கு போன் போடுவோம்'
'என் நம்பர் மொத்தம் பத்து நம்பர் வருமே நீங்க ஒரு நம்பர்'ன்னு சொல்றது தப்பு '
'ஹலோ நீங்க எவ்ளோ பேசினாலும் பேசுங்க உங்க பேரு சொல்லுங்க?'
'என் பேரு மூணு '
'மூணுன்னு ஒரு பேரா?'
'ஆமா, அதுசரி உங்க எஃப் எம் எங்கிருக்கு?'
'துறைமுகம் தெரியுமா? '
'முதல்ல துறையே தெரியாது அப்புறம் அவரு முகத்த மட்டும் எப்படிங்க தெரியும்..'
'ஹலோ ஹலோ துறைமுகங்கிறது போர்ட் '
'ஃபோர்ட்டுன்னா?'
'கப்பல்லாம் வந்து நிற்குமே அங்க'
'கடல்லேர்ந்தா பேசுறீங்க? '
'இது மட்டும் தெரியுது'
'எனக்கு எல்லாம் நல்லா தெரியும் இதோ எதிர்'ல போற ஆட்டோ, அதோ அங்...'
'ஹலோ அந்த தெரியுறத கேட்கல'
'சரி விடுங்க உங்களுக்கு என்ன வேனும்? '
'நாங்க ஒரு கேள்வி கேட்போம் அதுக்கு நீங்க பதில் சொல்லனும்'
'சரி கொஸ்டீன ஈஸியா கேளுங்க இல்லாட்டி கடவாய்ப்பல் தெரியுற அளவுக்கு கொட்டாவி வரும் '
'காத்மண்டு இது எந்த நாட்டோட தலைநகர்?'
'பேருலேயே மண்டு இருக்கிறத பார்த்தா கடுமையான மண்டுகள் இருக்கிற நாடாயிருக்கும்'
'பேர சொல்லுங்க'
'அதான் மூணு 'ன்னு சொன்னேனே'
டூன் டூன் டூன் டூன் டூன் டூன்.....
____________________________
சிலநாட்களுக்கு முன்னர் அதிரைநிருபரில் ஏதோ சீரியஸா பேசிகிட்டு இருந்தாங்களா அங்கே ஒரு பண்பலை வர்த்தக சேவை வானொலி டியூனிங்கில் கிராஸ் செய்தால் எப்படியிருக்கும் யோசனையிலிருந்தேனா அதான்... :)
அஹ்மது இர்ஷாத்
................................................................
Keep Smiling


