வீணாய்ப்போன
சுதந்திரம்
தடுக்கி விழுந்தால்
ரெஸ்டாரன்ட் மயமாக இருக்கும் இப்போதைய ஊர்களில் டாய்லெட் என்பது நிச்சயம் இருக்க
வேண்டும் என்ற கட்டாயம் or Rules of Local government இல்லாததால் தான் கண்ட நாதாரிகளும் கண்ட இடத்தில்
சூடு சுரணை இல்லாமல் வேட்டியை
தூக்குவதும் / சேலையை தூக்குவதும் நடக்கிறது. சுகாதாரத்துறை எப்போதும் உள்ளாட்சி
மன்றத்துக்குள் வருகிறது...பிறகு ஏன் கட்டப்படும் அனைத்து உணவகங்களுக்கும்
டாய்லெட் கட்டப்படவேண்டும் / அது சுத்தமாக இருக்க வேண்டும் என்ற விதிப்பாடு
இல்லாமல் இருக்கிறது. அப்படி சட்டம் இல்லை என்றால் அந்த சட்டத்தை உருவாக்க
வேண்டியதுதானே உள்ளாட்சி மன்றங்களின் கடமை.
பிற்காலத்தில்
மாடல் பழசாக போய்விட்டதால் ' இந்த மெஷின் சொல்வதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா என பல சின்ன மெஷின் களும் அந்த
மெயின் மெஷினின் துணை மெஷினும் "கருத்து"
சொல்ல ஆரம்பித்ததாம்.
சமீபத்தில்
கடந்துபோன இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு ஒவ்வொரு வாட்ஸப், இமெயில் எல்லாமே மிகவும் க்ரியேட்டிவ் ஆக
இருந்தது. இந்திய சுதந்திரம் என்று தெரிந்தும் சிலர் நான் தமிழன்டா என மார்தட்டி
மெஸ்ஸேஜ் அனுப்பினார்கள். [ சுதந்திர தினம் தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை என்பது
அவர்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன். ].
எனக்கு வந்த
மெஸ்ஸேஜ் எல்லாமே ஒரு விசயத்தை அதிகம் சொன்னது. ஹாட்மெயிலை கண்டுபிடித்தது
இந்தியன் , நாசாவில் வேலை பார்ப்பவர்களில் அதிக சதவீதம்
இந்தியர்கள், இந்தியர்கள் அதிகம் ப்ரோஃபசனிலிசம் சார்ந்த [மருத்துவம் , ஏவியானிக் , ஏரோநாட்டிக்கல் என் ஜினீயரிங் ,
பார்மாசூட்டிக்கல்] துறைகளில் சாதிக்கிறார்கள் என்று சிலிப்பினாலும்...ஒரு புறம் வளர்ச்சி
மறுபுறம் கட்டி / காயம் என்பது உயிரைப்பலி வாங்கி விடாதா என்பது தான் முக்கியம்.
உலகத்தின் பல
இடங்களில் இலைகளை ஆடைகளாக உடுத்திய காலத்தில் நாம் "நாலந்தா' பல்கலைக்கழகம் நடத்தியவர்கள் என்று பெருமை பேசுகிறோம்.
இதுவரை நாம்
பெற்ற கல்வி நாம் எப்படி "ஒன்னுக்கு" போற விசயத்தை நடைமுறை படுத்த வேண்டும்
என்று கூட சொல்லித்தரவில்லை. இந்தியாவில்
மட்டும் 682 பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. இருபது மில்லியன்
மாணவர்கள் ஒரு வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். [அப்படி யென்றால்
ஒவ்வொரு வருடமும் குறைந்து 19 மில்லியன்பேர் பட்டம் பெருகிறார்கள். ] இன்னும்
நவீன நகரம் எனும் நம் சென்னை / மும்பை போன்ற நகரங்களில் மலக்கழிவை மனிதனே சுத்தம்
செய்யும் அவலம் இன்னும் எந்த கேனயனான அரசியல் வாதியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ராக்கெட் சைன்ஸில்
நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்று பீத்தி புண்ணியமில்லை. அன்றாடம் எல்லோரும்
செய்யும் ஒரு டாய்லெட் பிரச்சினையை சரி
படுத்த முடியாமல் நாமும் பெருமையாக இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்று
மார்தட்டுகிறோம்.
படித்தவன் , படிக்காதவன் யாராக இருந்தாலும் நம் கண் முன்னே நடக்கும் அனியாயங்களுக்காகவும்
சுகாதாரக்கேட்டுக்காகவும் தன்னால் முடிந்த எந்த முயற்சியும் எடுக்காமல் டெய்லி
"மல்லிப்பூ மாதிரி இட்லிக்கும் ,புதினா /
தேங்காய் சட்னி எந்த கடையில் நன்றாக கிடைக்கும்.....காபி எந்த கடையில் 'திக்' ஆக போட்ட்டுத் தர்ராணுக என்பதிலேயே கவனம்
செலுத்துகிறார்கள்... அதெல்லாம் செறித்த பிறகு ஒரு இடம் தேவைப்படுமே...அதற்காக அரசாங்கமோ , அல்லது நாமோ என்ன செய்து இருக்கிறோம் என்று தெரியாமலே 67 வருடத்தை ஓட்டி விட்டோம்.
தடுக்கி விழுந்தால்
ரெஸ்டாரன்ட் மயமாக இருக்கும் இப்போதைய ஊர்களில் டாய்லெட் என்பது நிச்சயம் இருக்க
வேண்டும் என்ற கட்டாயம் or Rules of Local government இல்லாததால் தான் கண்ட நாதாரிகளும் கண்ட இடத்தில்
சூடு சுரணை இல்லாமல் வேட்டியை
தூக்குவதும் / சேலையை தூக்குவதும் நடக்கிறது. சுகாதாரத்துறை எப்போதும் உள்ளாட்சி
மன்றத்துக்குள் வருகிறது...பிறகு ஏன் கட்டப்படும் அனைத்து உணவகங்களுக்கும்
டாய்லெட் கட்டப்படவேண்டும் / அது சுத்தமாக இருக்க வேண்டும் என்ற விதிப்பாடு
இல்லாமல் இருக்கிறது. அப்படி சட்டம் இல்லை என்றால் அந்த சட்டத்தை உருவாக்க
வேண்டியதுதானே உள்ளாட்சி மன்றங்களின் கடமை.
அரசியல் வாதிகள்
"மினிஸ்டர் ஒயிட்" ட்டில் சட்டை போட்டால் மட்டும் போதாது. நம்மை சுற்றி
இருக்கும் ஊரும் நாடும் உறுப்பட வேண்டும் என்ற எண்ணமும் இருக்க வேண்டும்.
எனக்கு பக்தி
வந்து விட்டது உடனே கடவுளை வணங்க வேண்டும் என்று யாரும் அவசரப்படுப்படுவதில்லை...
ஆனால் நான் டாய்லெட்டைப யன்படுத்த வேண்டும் எனும் பிரச்சினை ஒவ்வொருவருக்கும்
உண்டு.
அப்படியே
ஒழுங்காக அரசாங்கம் கட்டிக் கொடுத்தாலும் அதை பாதுகாப்புடனும் சுத்தமாகவும்
பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களிடம் அதிகமாக
இல்லை. எல்லா வற்றிலும் வெத்திலை எச்சிலும் , ஃப்ளஸ் அவுட்
செய்யாமல் வரும் புத்தியும் சுற்றிலும் அடைக்கப்பட்ட டாய்லெட்டில் , சுருட்டு / பீடி / சிகரெட் பிடித்து அடுத்தவன் உள்ளே நுழையும்போது
அவஸ்தைப்படுவானே என்ற எண்ணம் இந்த அறிவு கெட்டவர்களிடம் சுத்தமாக கிடையாது.
இன்னும்
இருக்கிறது. நன்றாக தொழில் நடக்கும் இடங்களில் பெரிய அளவில் குப்பையை காலா காலமாக
கொட்டுவது. அதற்காக டெய்லி பணம் எண்ணும் அந்த தொழிலதிபர்கள் [ ? ] எதையும் கேட்காமல் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருப்பது.
இதெல்லாம்
பார்க்கும் போது நாம் சுதந்திரம் அடைந்ததில் இதுவரை என்ன சாதித்திருக்கிறோம் என்றுதான்
கேட்கதோணுகிறது. படிக்கும் மாணவன் கூட ஒரு வருடம் விட்டு அடுத்த வருடம் வரும்போது
ஒரு முன்னேற்றத்தை காண்பிக்காவிட்டால் நாம் கோபப்படுகிறோம். 67 வருடம்...அனியாயமாக அடிப்படை வசதிகளை கூட சரி செய்யாத மக்களையும் , அரசாங்கத்தையும் வைத்துக்கொண்டு வாட்ஸப்பிலும் , இமெயிலிலும் 'நானும் இந்தியன்...அதற்காக பெருமைப்படுகிறேன் ' என்பதில்
அர்த்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
இதில் மறுப்பு
சொல்பவர்கள் 'இந்தியா பெரும் மக்கள் தொகை கொண்ட
நாடு..கன்ட்ரோல் செய்வது கஷ்டம் என்றால்..ஒரு கேள்வி இருக்கிறது. இந்தக்கேள்வி
முன்னால் ஜனாதிபதி அபுல்கலாம் கேட்ட கேள்வி.
போகிற இடமெல்லாம்
குப்பைய வீசி விட்டு செல்லும் இந்தியர்கள் எப்படி வெளிநாடு வந்தால் அவ்வளவு
டிசிப்லினாக நடக்கிறார்கள்.. தண்டனை பயம்!!'
மெஷின் கதை
ஒரு மெஷின் அப்போதுதான்
பிறந்ததாம்.... உடனே பேட்ரியாடிக் [paediatric] மெஷின் வந்து கை கால் எல்லாவற்றையும் செக் செய்து தாய் மெஷினிடம் சொன்னதாம். ' இந்த மெஷினில் பழுதில்லை"...தந்தை மெஷின் சந்தோசம் அடைந்து ஸ்வீட்
எல்லாம் வாங்கி வந்திருந்த அத்தனை மெஷினிக்கும் கொடுத்ததாம்.
கால ஓட்டத்தில்
மற்ற மெஷினுடன் போட்டி போடநிறைய மெஷின் உள்ள பள்ளிக்கூடத்தில் அந்த புது மெஷினை
சேர்த்தார்களாம். அந்த புது மெஷினும் நன்றாக படித்துக்கொண்டிருக்கும்போது
"மற்ற மெஷினெல்லாம் வெளிநாட்டில் நல்லா வேலைசெஞ்சி காசு அனுப்புது ' என்ற ப்ரோக்ராமிங்கில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம். வெளிநாட்டிலிருந்து
அந்த மெஷின் சம்பாதித்து காசு அனுப்பும்போதெல்லாம் அந்த மெஷினிடம் கேட்டுத்தான்
மற்ற மெஷின் எல்லாம் நடந்ததாம்.
கால ஓட்டத்தில்
மெஷினின் ப்ரொடக்டிவிட்டியை மிஞ்சும் சின்ன மெஷின் எல்லாம் வந்து விட்டதால்..அந்த
மெஷின் பணம் தரும்போது மட்டும் அந்த மெஷினுக்கு தற்காலிக முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டதாம்.
பிற்காலத்தில்
மாடல் பழசாக போய்விட்டதால் ' இந்த மெஷின் சொல்வதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா என பல சின்ன மெஷின் களும் அந்த
மெயின் மெஷினின் துணை மெஷினும் "கருத்து"
சொல்ல ஆரம்பித்ததாம்.
நன்றாக ரன்னிங்
கண்டிசனில் இருக்கும்போது இருந்த முக்கியத்துவம் தனக்கு இல்லை என்று அந்த மெஷின்
கவலைப்பட்டதாம். மெஷின் தானே தேவை இல்லாமல் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அந்த மெஷினுக்கு
தெரிய வில்லையாம். நம்முடன் சேர்ந்த மனுஃபேக்சரிங் தேதியில் வெளியான பல மெஷின் கள்
டிஃபெக்ட் இருந்ததால் பல மெஷின் களை மற்ற மெஷின் கள் ஏன் மதிக்க வில்லை என்று
எண்ணிப்பார்க்க அந்த மெஷினுக்கு தெரிய வில்லையாம். காரணம் டிஃபெக்ட் அல்ல
சம்பாத்யம் தான் என்று புரிய வில்லையாம்.
இந்த எண்ணம்
எதுவும் இல்லாமல் இப்போதைக்கும் பல புதிய மெஷின் கள் வழக்கம்போல் ஏதோ ஒரு புள்ளியை
நோக்கி வழக்கம் போல் ஓடிக்கொண்டுதான் இருக்கிறாம். நாமும் ஒரு நாள் பழைய மாடல் ஆகி
விடுவோம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லாமல்.
இந்த மெஷின்
எழுதுவது யாருக்கும் புரிகிறதோ இல்லையோ நிச்சயம் இதை இப்போதைக்கு
படித்துக்கொண்டிருக்கும் மெஷினுக்கு புரியும் என நினைக்கிறேன்.
ZAKIR HUSSAIN





