இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் ஹஜ் கான்சலாக சகோதரர் முபாரக் அவர்களும் துணை ஹஜ் கான்சலாக சகோதரர் S.D.மூர்த்தி அவர்களும் நியமிக்கப்பட்டு அற்புதமான பணிகளைச் செய்தனர்.
சகோதரர் மூர்த்தி ஐயா அவர்களால் ஹஜ் டூட்டியை எப்படி ஹாஜிகளுக்கான ஏற்பாடுகள் செய்ய இயலும்" என விக்கித்துப்போன அனைவரும் வெட்கித்துப் போகும் அளவிற்கு ஹாஜிகளுக்கு ஜித்தா ஏர்போட்டில் அத்தனை ஹித்மத்துகளை (பணிகள்), குடிதண்ணீர் விநியோகம், லக்கேஜ்கள் நகர்த்தி, பஸ்களில் ஏற்றி / இறக்கி இந்திய ஹாஜிகளை மாநில வாரியாக பிரித்து முஅல்லிம் - குரூப் லீடர்ஸ்களிடம் அனுகி சேவைகளை சிறப்புடன் செய்த சிறந்த அதிகாரி.
பிறகு Community Welfare Consul-ஆக பொறுப்பேற்று பொதுமக்களுக்கு சிறப்பான சேவையும், தொண்டர்கள் மற்றும் நற்பணி அமைப்புகளுடன் நல்ல நெருக்கமான தொடர்புகள் கொண்டு பெயர் பெற்றுச் சென்ற தமிழர்.
பணிமூப்பு பெற்று இங்கிருந்து இலங்கைக்கு மாற்றலாகியுள்ள சகோதரர் மூர்த்தி ஐயா அவர்கள் தற்போதைய சவூதியின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு NITAKAT / AMNESTY க்காக SPECIAL RESCUE TASK FORCE OFFICER-ராக குறுகிய காலத்திற்காக மீண்டும் ஜித்தா-இந்திய தூதரகத்திற்கு வருகை தந்துள்ளதை பெருமையுடன் வரவேற்றோம்.
ராஃபியா
வாழ்க வளமுடன், நலமுடன்

