இனத்தாலோ மொழியாலோ பிரித்தாலுபவன் என்னைச் சார்ந்தவனல்ல! - நபிமொழி.
பல சந்தர்ப்பங்களில் இதனை ஞாபகப்படுத்துவது, இனம் பிரித்து, மொழி சேர்த்து, விழி தெறிக்க பேசும் கொள்கையுடைய கட்சிகளையும் அமைப்புகளையும் கண்டு வருகிறோம் ஏன் ஒரு காலத்தில் அதில் அங்கம் வகித்தும் இருந்திருக்கிறோம்.
தாய் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ஒரு மொழி ஆதிக்கம் செலுத்திவிடுமோ என்ற அச்சத்தில் ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களையும் அந்த மொழியைப் படிக்க பேச விடாமல் செய்துவிட்டு தன் மக்களை மட்டும் பேசவைத்த பெருமையும் திராவிட கட்சிகளுக்கு உண்டு.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய முஸ்லீம்கள் (எதனை எதிர்த்தாலும் அவர்களிடம் தீவிரம் இயற்கையாகவே இருக்கும்) ஆங்கில அந்நிய மொழி படிப்பது விலக்கப்பட்டது என்று தங்களின் மார்க்க வரம்பை வகுத்து ஒதுக்க நேர்ந்தது இதனை நாம மட்டும்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
இந்த கால கட்டங்களையெல்லாம் கடந்து மொழி ஒரு பாதை விரும்பினால் அந்தப் பாதையை தேர்ந்தெடுக்கலாம், அந்தப் பாதையில் பயணம் இலகுவாக்கிக் கொள்வதும் இடர்களாக்கிக் கொள்வதும் பயணிப்பவர்களைப் பொறுத்தே அமையும்.
கூரையில்லாத வீட்டில் அமர்ந்து கொண்டு இரகசியமும் பேச முடியாது. தெரிந்த மொழியில் அல்லது தெரிவிக்க வேண்டிய மொழியில் உரையாடவும் கருத்தாடல் செய்வதும் அதில் கலந்து கொள்பவர்களின் விருப்பமாகத்தான் இருக்க முடியும்.
இணையத்தில் தமிழ் மொழி நடத்தியிருக்கும் எழுச்சி எண்ணிடலங்காதவை,நல்லதைச் சொல்லவும் இல்லாததைச் சொல்லவும், என்று விரிந்து இருக்கிறது. சமீபத்தில் வலைப்பூக்களில் இணையதளங்களில் தமிழில் வெளியாகும் கட்டுரைகள், கவிதைகள், அவசியமான விவாதங்கள் இவைகளுக்கு தமிழிலே கருத்தாடல்கள் இருக்க வேண்டும் என்ற வாதமும் வலுவாக எழுப்பப்படுகிறது.
அங்கே ஆங்கிலத்தில் கருத்துகள் பதிந்தால் அதன் கருத்தாடலின் பொருளை புரிந்து கொள்ள எத்தனை பேருக்கும் இயலும் என்பது அதன் வாதமாக இருக்கிறது. ஆனால், ஆங்கிலத்தில் பதிவதால் என்னதான் எழுதியிருக்கிறது என்று தேடல் கொண்டு அதற்கான பொருளை அறிந்து கொள்ளத் தூண்டுவதும், அதேபோல் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தும் இணையதளங்களுக்கு நமது கருத்துக்களை எடுத்து வைக்க இது உதவும் என்பதும் மற்றொரு வாதம்.
அதிரைநிருபரில் பல்வேறு பதிவுகளில் இந்த விவாதம் எழும்போதெல்லாம், வாசகர்கள் இரண்டு பக்க நியாயங்களை எடுத்து வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
இங்கே விவாதியுங்கள், ஆங்கிலம் மட்டும் தான் எதிர்க்கப்படுகிறதா ? ஆங்கிலம் அதிசயமா / அவசியமா ?
உங்களனைவரின் கருத்தாடல்கள் தனிமனித சாடல்கள் இன்றி கருத்துகளோடு மோதலிருப்பின் நீங்கள் காதலிக்கும் மொழியின் தாக்கமே என்று புரிந்து கொள்ளப்படும்.
அவசியமேற்படும்போது கருத்தாடல்கள் அனைத்தும் நெறிப்படுத்தலுக்குட் படுத்தப்படும்.
அதிரைநிருபர் பதிப்பகம்

