நமதூரில் குறிப்பாக வயதான ஆண்/பெண்களால் இன்றும் தெரிந்தும் தெரியாமலும், மறைந்தும் மறையாமலும் பயன்படுத்தப்பட்டு வரும் சில சொற்கள் இயன்றளவு ஆங்கில மொழிபெயர்ப்புடன் கீழே தரப்பட்டுள்ளன (ஏதோ நம்மனாலெ ஏன்டது). இது போல் இன்னும் நிறைய சொற்கள் மக்களின் புழக்கத்தில் இருந்தும் இங்கு வரிசையில் விடுபட்டிருக்கலாம். அப்படி தங்களுக்கு தெரிந்த சொற்களை தாராளமாக பின்னூட்டங்கள் மூலம் தொடரலாம்.
ஊரில் கடைத்தெருவின் உள்நுழைவு வாயிலில் அமர்ந்திருக்கும் இரண்டு ஆச்சிகளிடம் நல்ல தேர்ன நார்த்தங்காயும், சோளக்கருவும், அவுச்சக்கடலையும், ப்லாச்சொழையும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு ஒரு ப்ளாஸ்டிக் பையில் (ப்ளாஸ்டிக் மேட்டரை வெளியெ சொல்லிறாதிய) வாங்கிக்கொண்டு செக்கடிபள்ளியின் கீழே உள்ள வழியாக சென்று கொண்டிருந்தேன். அங்கு அமர்ந்திருந்த சில நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். என்னா மு.செ.மு. இதைப்போயி வாங்கிக்கிட்டு போரியளே? என்றார்கள். நானும் சொன்னேன் சவுதி சென்றதும் அடிக்கடி நினைவில் கொடுவாப்பிஸுக்கும், வவ்வாமீனும் வருவதில்லை. இது போன்ற கோடை கால சீசன் விலை/விளைபொருட்கள் தான் அடிக்கடி நாக்கு ஊற வைத்து விடுகிறது. எனவே இதை வாங்கி உண்ண நாம் என்றும் தயங்கியதோ, வெட்கப்பட்டதோ இல்லை என்றேன்.
ஊர்ல அடிக்கிற வெயிலுக்கு நல்ல தேர்ன நார்தங்காயை வாங்கி அதை முறையே புழிஞ்சி தேவையான அளவு சீனி போட்டு கலக்கி ஐஸ்பொட்டியில் கொஞ்ச நேரம் வைத்து குளிரூட்டி நல்லா உச்சிஉரும நேரத்துல குடிச்சி பாருங்க.....அப்பொறம் சொல்லுவிய....ம்மடி கலப்பு அடங்குன மாதிரி ஈக்கிதும்மாண்டு......சுபஹானல்லாஹ்...இறைவன் பருவ கால காய்,கனிகள் மூலம் மானுடத்திற்கு எவ்வளவு சுகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்தருளியுள்ளான் என நினைத்துப்பார்ப்பீர்கள். இந்த தடவை மாம்பழம், நொங்கு கொஞ்சம் மிஸ்ஸாயிடிச்சி.....
அதையான் கேக்குறிய....திருச்சி ஏர்ப்போர்ட்டுக்கு பயணம் புறப்பட கிழம்பும் பொழுது கூட வீட்டில் தீடீர்ண்டு ஒரு பையில் தண்ணி பாட்டிலும் இன்னொரு பார்சலில் அலுமினியம் ஃபாயிலில் சுற்றப்பட்டு ஒரு பொட்டலமும் தந்தார்கள். அது என்னாண்டு கேட்டா, கொஞ்சம் கொத்து மாங்கா பொடி போட்டு மடிச்சிருக்கு வழியில சாப்ட்டுக்கிடுங்க என்ற அது ஒரு பாசப்பரிமாற்றம் கொத்துமாங்காயாய் பொட்டலத்துக்குள் பதுங்கி இருந்தது. அது சரி கீழே உள்ளதை படிச்சிட்டு கமெண்ட்ஸ் போட மறந்துடாதிய.....
| அவுருவொம் | - Very Rare |
| எசவு பண்ணுதல் | - Repairing |
| ஆத்தாக்கொலெ | - Time Being |
| சீந்தாப்பு/மப்பு மந்தரம் | - Cloudy Weather |
| ஏசுவாஹ | - Scolding, Blaming |
| ஏந்துக்கிட்டு | - Supporting favourly |
| பொசுக்குண்டு | - Suddenly Reduced |
| குட்டான் | - Basket Thatched in Palm tree's leaves |
| ரோதை | - Wheel |
| ஒசக்கெ | - In the height |
| ஈசாக்காட்டுதல் | - Talking negatively to irritate |
| வசை சொல்லுதல் | - Talking openly the timely help |
| கண்மாசியா | - Entirely Disappeared |
| பொட்டக்கரை | - Entirely Empty |
| பொவ்மானம் | - Brashness |
| பொத்தல் | - Hole |
| ஆகாசம் | - Sky |
| மோந்து | - To smell |
| சல்லிசு | - Very Cheap |
| திடுக்கிண்டு | - Sudden Shock |
| என்னண்டோ | - Nothing to explain |
| வல்லாணாலையிலெ | - Unnecessarily |
| எசலுதல்/சலுவுதல் | - Calling quarrel deliberately |
| கசங்கொண்டு | - In Ugly |
| எதித்தாப்ல | - Opposite |
| அலிமாலு | - Almirah/Cup-board |
| ஏன்சு | - Room |
| லேஞ்சி | - Towel |
| லேடுபடியான | - Weakness |
| யாபோம் | - Remember |
| ஜெமிலாட்டு மூடி | - The cap of the bottled soda |
| ஊதாங்கொலெ | - Blowing Pipe in the kitchen |
| பலவாக்கட்டெ | - Wooden Plate for sitting |
| மனுசரு | - A man |
| இந்தாவுளெ | - Hi Lady |
| இந்தாங்கங்க | - Hi Gentleman |
| ம்மடி | - Way of Exclamation |
| இருட்டு கசம் / மைக்கசம் | - Too Dark |
| கச்சிக்கசம் | - Too Bitter |
| அழுக்கு கசம் | - Too Ugly |
| ப்லாகொண்ட | - Very Ugly and offensive smelling |
| தெகரடி/செரவடி | - Way of mental distress |
| சடப்பு | - Getting laziness |
| ஓங்காரம் | - Vomiting |
| மசக்கம் | - Giddiness |
| அங்குரு | - See there |
| இங்குரு | - See Here |
| அவ்வொ | - That man |
| இவ்வொ | - This man |
| பத்தாக்கொறெ | - Scarcity/lack of shortage |
| எக்கச்சக்கம்/வழுப்பம் | - Plenty/Huge |
| வெரசன/சுருக்கன/வெள்ளனமே | - To be quick/fast/early |
| மாக்கு கொடுத்தல் | - Trying without tired |
| ஒழப்பி போடுதல் | - indecent behavior in eating |
| எசகெட்ட | - Not in proper way |
| திடீர்ண்டு/திடுதூரா | - Suddenly |
| தவக்கலெ | - Frog |
| வேக்கூரு | - Prickly Heat |
| வட்டி | - Bowl |
| தட்டுப்புளா | - Basket Plate |
| சப்பாத்து | - Foot wear |
| விறுக்குவிறுக்குண்டு | - Lonely with fear |
| ஒத்தியா | - Lonely/Single |
| உச்சிஉரும நேரம் | - Noon Time |
| மாலமதி நேரம் | - Time of sunset |
| மெத்தை | - Upstairs |
| தொலை | - Too far |
| செரட்டை | - Shell of the coconut |
| பூக்கமளெ | - Spathe of coconut tree |
| ஆப்பை | - Wooden spoon |
| ஒஹப்பு | - Desired Heartily |
| கோவந்தாவம் | - Getting Angry very often |
| சும்சுகை | - Trunk of the elephant |
| அக்கச்சியா | - Sister |
| வாப்ச்சா | - Mother of the father |
| சர்சராக்குழி | - Hole of the house to eject cleaning water |
| ஏலலெ | - Inability/Sick |
| சதுர வாழ்வு | - Healthy Life |
| லெக்கு தெரியாமல் | - Hard to identify |
| பெரிய மனுச | - Aged man/woman |
| ஒதவாது | - Can't be suited |
| ஊர் முச்சூடும் | - Entire Town |
| மொட்டையன் | - Young man |
| அரிக்களாம்பு | - Lamp with covered glass chimney |
| எரணபரக்கத்து | - Prosperities from the Almighty |
| அனத்துது | - Too humidity |
| மாடாக்குழி | - Shelf in the wall |
| உப்புசப்பு/சூடப்பு | - Nothing to highlight |
| சஞ்ஞீவு/தர்த்திரிப்பு | - In Proper arrangement |
| ஆகாது | - Prohibited in Islam |
| நாக்களாம்பூச்சி | - Earthworm |
| பாச்சே | - Cockroach |
| கொரங்குமட்டை | - Back bone of the coconut tree leaves |
| பெரிம்சாகி | - Recently Matured Girl |
| பொல்லாப்பு | - Bad Name with remarks |
| குடுப்பினை/கொடப்பொசுப்பு | - Fortune/Good Luck |
| ஒமட்டல்/கொமட்டல் | - Symptom of vomiting |
| ஒரமோரு | - Milk fermented by added bacteria |
| வலந்து/ஏனம் | - Bowl/vessel (home appliance) |
| தேத்தனி | - Tea |
| தடுக்கு | - Mat |
| புள்ளைக்கு ஒரம் வுழுந்துடுச்சி | - Sudden shock to a child by unexpected incident |
| கண்ணூறு | - Look with jealous |
| செய்த்தான்கொணம் | - Attitude of evils/saitan |
| செமியாக்கொணம் | - Symptom of undigested |
| பக்கிரிச்சி | - Poor woman (miser attitude) |
| திட்டி அருவாக்கிபுட்டா | - Adamant lady with blaming others |
| மொடையா ஈக்கிது | - Empty situation |
| ஊட்டுக்காரவொ | - Husband/House owner |
| ஏப்பு காட்டுதல்/வலிப்பு காட்டுதல் | - Cheating to irritate |
| மொடை | - Lack/Tightness of money |
| நேந்துக்கிட்டு | - Offering |
| வதுவாப்பேரு | - Curse |
| அரீர்ப்பு | - Impropriety/Ugliness |
| ஏப்பசாப்பெ | - Without any interest & care |
| கம்சுகை சட்டை | - Full hand shirt |
| குந்தமரி | - Doing something with happy mood |
| சர்வ சட்டி | - Big vessel for heating water |
| பூச்சிவட்டெ | - Insects |
| சுக்குருசான் | - Chinaware |
| பதூசா | - Calmly/Silently |
| அன்னாத்து | - Fallen down by unbalanced |
| ஊர்ப்பட்ட | - Huge amount / Plenty |
| கொதப்பை | - Cheek |
| பூசை | - Beat / Hit |
| வீதல்ரோடு | - A Piece of broken glass |
மு.செ.மு. நெய்னா முஹம்மது



