Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுட்டும் விரலே சுட்டிக் காட்டிடு - வாக்கு அளிக்க வழிமுறைகள் ! 23

அதிரைநிருபர் | April 12, 2011 | , ,

வாக்கு அளிப்பது இந்திய இறையான்மையில் ஜனநாயக உரிமை, இந்தத் தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். அதற்கான இலகுவான வழிமுறைகள்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். ஆனாலும், உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாக ஓட்டுப் போடச் செல்வதே சிறந்த வழி.

உங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் வாக்குச் சவடிக்குச் செல்லுங்கள், மற்றவர்கள் அழைத்தார்கள் என்று வேறு வாக்குச் சாவடிக்கு வேடிக்கைப் பார்க்கச் செல்லாதீர்கள்.

வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள், முதியோர்என்று தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்கு என்று உள்ள வரிசையில் நின்று பொருமை காத்திருங்கள். பெண்களுக்கும், முடியாதவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்.

எவ்விதப் பதற்றம் இல்லாமல் நிதமான வாக்குகளை பதியுங்கள், ஒவ்வொரு வாக்காளராகவே உள்ளே அனுமதிப்பார்கள்.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவுடன் முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா, அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள்தானா என்பதைப் பரிசோதிப்பார். வாக்காளர் அடையாள அட்டையையும் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாளச் சீட்டையும் அவரிடம் காண்பிக்க வேண்டும். அதன் பிறகு, அவர் உங்கள் பெயரையும் வரிசை எண்ணையும் சொல்வார். இதன் மூலம், தேர்தல் (கட்சி வேட்பளர்களின்) முகவர்கள் உங்களின் இருப்பை அறிந்துகொள்வார்கள். அடுத்து, நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.

இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, அவர் உங்களின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் அழிக்க முடியாத மையைத் தடவுவார். அதன் பிறகு, வாக்காளர் பதிவேட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண்ணைப் பதிவு செய்வார். அதன் பிறகு, அந்தப் பதிவேட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் அல்லது இடது கைப் பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். அவர் கையெழுத்திடப்பட்ட அடையாளச் சீட்டை உங்களுக்குத் தருவார். அடுத்து, நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.

மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத்தின் பொத்தானை இயக்குவார். இப்போது நீங்கள் வாக்களிப்பதற்கான அனுமதியைப் பெற்று விட்டீர்கள்.


ஓட்டுப் போடும் இயந்திரம் இருக்கும் மறைவான வைத்திருக்கும் இடத்துக்கு சென்றதும், ஏற்கனவே முடிவு எடுத்திருந்தாலும் அல்லது அதுவரை முடிவுக்குள் வரவில்லை என்றால் ஒரு கணம் ஆழ்ந்து யோசியுங்கள். தகுதி உடைய சரியான நபரை மனதில் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக, உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நீங்கள் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள். வேட்பாளருக்கு உரிய பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக இருக்கும் நீலப் பொத்தானை அழுத்துங்கள். 'பீப்’ ஒலி கேட்கும். அதேசமயம், நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக சிவப்பு ஒளி ஒளிரும். ஒரு முறை பொத்தானை அழுத்தினால் போதும். இப்போது உங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது.

நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமான ரகசியம். வாக்குச்சாவடிக்குள் நின்றுகொண்டு நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதைத் தெரிவித்தால், உங்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள். யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதைத் தெரிவித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல, வாக்களிப்பதைப் படம் எடுப்பதும் கூடாது அங்கே மொபைல் ஃபோன் எடுத்துச் செல்லாதீர்கள்!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், கவலை வேண்டாம். தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டு உங்களிடம் இருந்தால்போதும். தாராளமாக ஓட்டுப் போடலாம். அதுவும் இல்லையென்றால், நீங்கள் ஓட்டுப் போட முடியாது.

சிலருக்கு இப்படியான பிரச்னைகள் வரலாம். அதாவது, பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும். ஆனால், உங்கள் படம் இருக் காது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டும் இல்லை என்றால் என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இவற்றில் எதையாவது ஒன்றைச் சான்றாகக் காட்டி ஓட்டுப் போடலாம். குடும்ப அட்டைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. ஆனால், அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள் இல்லை என்று வாக்குச் சாவடியில் உள்ள யாராவது சந்தேகம் எழுப்பினால், என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்... இப்படிச் சில ஆவணங்கள் மூலம் உங்கள் அடையாளத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போலியானவர் என நிரூபிக்கப்பட்டால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா எனப் பரிசோதிப்பார். உங்கள் பெயரில் வேறு யாரேனும் ஓட்டுப் போட்டு இருந்தால், அதை உடனே வாக்குச்சாவடித் தலைமை அலுவலரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய ஓட்டுச் சீட்டு (டென்டர்ட் பேலட் பேப்பர்) அளிக்கப்படும். அதைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் கையெழுத்திட வேண்டும். நீங்கள் வாக்களித்ததும், அதை ஓர் உறையில் இட்டு தனியே வைத்துக்கொள்வார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... நீங்கள் மின்னணு ஓட்டு இயந்திரத்தின் மூலம் வாக்களிக்க முடியாது. ஏதாவது விசேஷக் காரணங்கள் இருந்தால் தவிர, உங்கள் ஓட்டு கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படாது!

வாக்கு அளித்து விட்டு அங்கேயே காத்திருக்காதீர்கள், உடணடியாக உங்களின் வீடுகளுக்கு திரும்பிடுங்கள், வாக்கு நடைபெறும் நாளில் வெளியில் கூட்டமாக இருந்திடாதீர்கள்.

பெண்கள் அணிகலங்களை அணிந்து கொண்டு வாக்கு அளிக்கச் செல்லாதீர்கள், உங்களின் விரலில் பெண் அதிகாரி மை வைக்குமிடத்தில் இல்லாவிடின் அவர்கள் சொல்லும் இடத்தில் உங்கள் விரலை மேஜைமேல் வையுங்கள், விரல் நீட்டிக் கொண்டிருகாதீர்கள்.

பெண்களே வீட்டில் இவர்கள் இல்லையே அவர்கள் இல்லையெ என்று அடுத்தவர்கள் வாக்குகளை செலுத்த கட்சிகளின் உறவுகளோ அழைத்தால் உங்கள் வாக்கைத் தவிர வேறு வாக்குகள் அளிக்க முன்வராதீர்கள் மறுத்தி விடுங்கள், இன்றையச் சூழலில் சட்டம் கடுமையாக இருக்கிறது அதோடு மீடியாக்களின் பிரச்சாரம் விபரீதத்தை உண்டாக்கிடும்.

இந்தத் தேர்தலின் கதாநாயகி 'எது’வாக வேண்டுமானாலும் இருக்கலாம். கதாநாயகன் / கதாநாயகி நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.

வாழ்த்துக்கள் மனசுல வைத்திருப்பவர்கள் வென்றிட !

தொகுப்பு : அபுஇபுறாஹிம்

23 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஊரிலிருக்கும் அன்பு நேசங்களின் சுட்டும் விரலே நாளைய தினம் சும்மா இருந்திடாதே !

அதிரை முஜீப் said...

ஜனநாயக கடமையை நிறைவேற்றி சிறந்த இந்திய குடிமகனாக விளங்குவோம்!. கட்டாயம் வாக்களிக்க வேண்டியது நமது கடமை!

sabeer.abushahruk said...

அருமையான குறிப்புகள், வழிகாட்டல்கள்.

அப்பிடியே ஒரு ரிட்டர்ன் டிக்கெட்டும்....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அப்பிடியே ஒரு ரிட்டர்ன் டிக்கெட்டும்.... //


தேர்தல் ஆணையம் விமான மறியலில் ஈடுபடுவதாக ஒரு செய்தி !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தேர்தல் கமிசனர் சொல்லவேண்டிய வழிகாட்டுமுறைகளை முறையாக விளக்கியுள்ளார் கட்டுரையாளர்.அடுத்த கமிசனராக தகுதியுள்ளவர்.
ஆனால் பொத்தானில் சிவப்பு ஒளிருவதை பார்த்தால் அதற்கு இடிக்குதே!

அப்துல்மாலிக் said...

கடல்தாண்டி திரவியம் தேட வந்த நமக்கு ஓட்டுப்போட முடியலியேனு வருத்தம், இப்போ தபால் ஒட்டு வந்திருக்கு, இருந்தாலும் நம்ம ஊருலே நடக்கும் பரபரப்பும், ஓட்டுபூத்தில் இருந்து பண்ணும் அதிகாரமும், ஒருத்தரை ஒருதர் முறைத்துக்கொள்வதும் இந்தகாட்சியெல்லம் காணக்கிடைக்கலே :(

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
இது என் அறிவிற்கு எட்டிய தேர்தல் கணிப்பு.
பலவித பத்திரிக்கை,மக்கள் எண்ணம் படித்து நான் எடுத்த சர்வே( எனக்குள்
எடுத்த)இது படித்தான் தேர்தல் அமையும் என்று நினைக்கிறேன். முடிவு இதோ
அ.தி.மு.க கூட்டணி- 120- 130,மீதி தி.மு.க கூட்டணி.100- மீதி ,234ல் கழித்து
இதில் தி.மு.க தனித்து 30- 40 .அ.தி.மு.க 80 - 90.பா.ம.க.- 5 - 10.தே.மு.தி.க
10- 20. ம.ம.க - 3. காங்கிரஸ் 5 - 10, இன்னும் முடிவு செய்யாதவங்க
20 - 30 இவங்களையும் சேர்த்தாலும் தி.மு.க தோல்வி இது நான் நடுனிலை
யுடன் அலசி எடுத்த கணிப்பு. இது பல தரப்பட்ட தொகுதிகளின் கணிப்பின்
முடிவு. இதில் நம் தொகுதியில் தே.மு.தி.க முந்தி இருப்பதாக அறிகிறேன்.
இதில் தவறு ஏற்படலாம் .இது நான் முயன்று திரட்டியது. அரசியல் ஞானிகள்
சகோ.முஜிப்,அபுஇபுறாகிம் காக்க, சபிர் காக்க போன்றவர்கள் தான் அலசி ஆராயனும். ஒரு மாதம்
பொருத்துதான் பார்போமே. முடிவெடுக்காத 20 - 30 சீட்டுதான் மிக முக்கியமான முடிவுக்கு வரும் என்பதும் தொங்கு சட்டசபை வருவதை இவர்கள் ஓட்டை வைத்துதான் முடிவு அமையும் என்பதும் என் கருத்து.

crown said...

120- 130 அ.தி.மு.க வே தனித்து வரவும் வாய்புள்ளது.

crown said...

இறுதியில் தி.மு.க வின் கைங்கார்யம் கைகூடினால் இது தலைகீழாக மாறலாம்.அதுக்கு நான் பொருப்பள்ள. இது என் தனிப்பட்ட திரட்டலின் மூலம் அமைந்த கருத்தே, நீங்களும் கருத்து வெளியிடலாமே?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததற்கு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளை முறைகேடுகள் செய்ய விடாமல் வெகுவாக தடுத்த வகையில், தேர்தல் ஆணையத்தை தமிழக வாக்காளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக, தேர்தலில் பணபலத்தை இயன்ற வரையில் இம்முறை தேர்தல் ஆணையம் தடுத்திருப்பது கவனத்துக்குரியது.

விறுவிறு வாக்குப்பதிவு...

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மின்னணு வாக்கு எந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கின. இதனால், அந்த இடங்களில் வாக்களிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். முற்பகலில் மட்டுமின்றி பிற்பகலிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

முந்தையத் தேர்தல்களைப் போலவே 49 ஓ போடவிருந்த வாக்காளர்கள் சிலர் சிரமத்துக்கு ஆளானது. தேர்தல் பணியாளர்களுக்கே இதுபற்றிய விழிப்பு உணர்வு இன்னும் முழுமையாக இல்லை. வாக்கு எந்திரத்திலேயே இதற்கான பொத்தான் வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது.

தீவிர பாதுகாப்பு...

வன்முறையை தடுக்கவும், முறைகேடுகள் நடைபெறாமல் நேர்மையாக தேர்தல் நடைபெறவும் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர்.

2011 தேர்தல்...

தொகுதிகள் - 234
வேட்பாளர்கள் - 2,748
வாக்காளர்கள் - 4,71,16,687
வாக்குச்சாவடிகள் - 54,314

பாதுகாப்புப் பணிகளில் துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படையினர் உள்பட ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பணியில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வெப் கேமரா கண்காணிப்பு...

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தேர்தலில் முதன்முறையாக போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பதற்றமானது என கண்டறியப்பட்ட 9,500 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தேர்தல் ஆணையரால் நேரடியாக கண்காணிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை...

வாக்குப் பதிவு மாலை முடிந்ததும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அவை அனைத்தும் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சென்னையில் 3 இடங்கள் உள்பட தமிழகத்தில் 91 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு, மே 13-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

Ahamed irshad said...

போன‌ முறையைவிட‌ இந்த‌ முறை வாக்குப‌திவு அதிக‌ம்.. 75%!!

Ahamed irshad said...

http://therthal.vikatan.com/articles/images/electpoll.jpg

இந்த‌ டீடெய்லை பாருங்க‌ள்..

Ahamed irshad said...

120- 130 அ.தி.மு.க வே தனித்து வரவும் வாய்புள்ளது.//

சான்சே இல்ல‌.. இந்த‌ முறை தொங்கு ச‌ட்ட‌ச‌பைதான்..யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.. விஜ‌ய‌காந்தும்,காங்கிர‌ஸ்க்கும் ஏக‌ டிமாண்ட் இருக்கும் பாருங்க‌ ரிச‌ல்ட் வ‌ந்த‌ சில‌ நாட்க‌ளில்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்படின்னா ? தேர்தல் "கமிஷன்" நல்லாவே விளையாடியிருக்கோ ?

http://therthal.vikatan.com/articles/images/electpoll.jpg

தம்பி இர்ஷாத் இதானே :

இதுவரை நடந்தேறிய தேர்தல்களில் பதிவான வாக்குகளின் சதவிகிதம்..

ஆண்டு சதவிகிதம்
1952 55.34%
1957 46.56%
1962 70.65%
1967 76.57%
1971 72.10%
1977 61.58%
1980 65.42%
1984 73.47%
1989 69.69%
1991 63.84%
1996 66.95%
2001 59.95%
2006 70.82%

இதெப்படி இருக்கு !

Ahamed irshad said...

http://www.maalaimalar.com/TnElection/ElectionHome.aspx

இது ச‌ரிதான்னு நினைக்கிறேன் காக்கா..

எத்த‌னை ச‌த‌வீத‌ம் ஓட்டு வ‌ந்த‌ ந‌ம‌க்கென்னா'ங்கிற‌ ஜாதி நான்..

அதிரையிலே ஆச்ச‌ரிய‌மாய் என் வீட்டிலிருப்ப‌வ‌ர்க‌ள்தான் 49'O போட்டிருப்பார்க‌ள்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிகமாக வாக்குகள் பதிவான தேர்தல்களில் தி.மு.க. தான் வெற்றியடைந்திருப்பதாக சன் செய்தி போட்டுத் தாக்குறாய்ங்களே !

Ahamed irshad said...

ஆமா இதுவரை அப்ப‌டித்தான் ந‌ட‌ந்து வ‌ந்திருக்கிற‌து... ஆனா இந்த‌ முறை கொஞ்ச‌ம் ச‌ருக்க‌ல்தான்.. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்க‌ வாய்ப்பில்லை..இது என் த‌னிப்ப‌ட்ட‌ க‌ணிப்பு

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எத்த‌னை ச‌த‌வீத‌ம் ஓட்டு வ‌ந்த‌ ந‌ம‌க்கென்னா'ங்கிற‌ ஜாதி நான். //

அட இப்படிச் சொல்லிபுட்டு புட்டு புட்டு வைங்கீறீங்களே அதிரையில் 49-O வட்டச் செயலாளருக்கு 13வாக்குகள் விழுந்திருக்கிறதே !

Ahamed irshad said...

13 பேரா..குட்..மாற்ற‌ம் வ‌ர‌னும்..

crown said...

அஹமது இர்ஷாத் சொன்னது…
120- 130 அ.தி.மு.க வே தனித்து வரவும் வாய்புள்ளது.//

சான்சே இல்ல‌.. இந்த‌ முறை தொங்கு ச‌ட்ட‌ச‌பைதான்..யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.. விஜ‌ய‌காந்தும்,காங்கிர‌ஸ்க்கும் ஏக‌ டிமாண்ட் இருக்கும் பாருங்க‌ ரிச‌ல்ட் வ‌ந்த‌ சில‌ நாட்க‌ளில்..
---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நானும் தம்பி இர்ஸாத் போலவே தொங்கு சட்டசபைதான் வரும்ன்னு நேற்றைக்கு முந்திவரை நினைத்தேன். எலக்சன் ஆரம்பித்ததிலிருந்து தொகுதி தகவல்களை திரட்டிப்பார்த்ததில் எனக்கு தோன்றியவைதான் இவைகள். காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை தி.மு.க விட்டு கொடுத்தது மிகப்பெரும் தவறு அதனால் தி.மு.க வெற்றிபெறவேண்டிய பல தொகுதிகளில் காங்கிரஸ் தோற்பதால் அ.தி.மு.கவுக்கு அந்த பலன் போகிறது. காங்கிரசின் உள் குத்து கோஸ்டி, தி.மு.கவின் ஒத்துழையாமை ஆகவே காங்கிரஸ் பெரும் இடத்தில் தோற்க காரணம்.இப்ப வியகாந்தன்( மா)(மக்கள கவர்ந்துட்டானுள்ள)அவந்தான் 3 வது பெரிய கட்சி ,பா.மா.கா மரவெட்ட போகவேண்டியதுதான் ,அவங்க குரு காடு வெட்டியே தோற்க போறான்.இனிதான் நாம் கவணமாக இருக்கனும் புது சனியனான தே.மு.தி.க விடமும் நாம் ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும்.எவன் நம் தேவைகளை பூர்த்தி செய்கிறானோ அவனுக்கே எதிர்காலத்தில் ஆதரவு அது எந்த கழுதையானாலும், குதிரையானாலும் சரியே.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இப்ப ஜூனியர் விகடன் பார்த்தேன் . கிட்டதட்ட நான் சொன்னது போலவே அவர்களின் கணிப்பும் வெளியாகிஉள்ளது. அப்ப நான் பாஸாகிட்டேனா??????

crown said...

அ.தி.மு.க கூட்டனி ஆட்சி மரும் போல இருக்கு.குடும்ப அரசியல் முடிந்தது, அதே வேளை பாப்பாத்தியும் நம் மேல் பாயும் கத்தி.யார் வந்தாலும் அல்லாஹ்தான் நம்மை காப்பாத்தனும்.தலைனகரில் முஸ்லில் உரிப்பினர்களே அதிகம் வருவதுபோல் தெரிகிறது.இன்சாஅல்லாஹ்.

crown said...

Assalamualikum:
http://www.youtube.com/watch?v=A16tVqyXeso

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு