Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கொசு ஒரு தொடர்கதை... 26

ZAKIR HUSSAIN | August 27, 2011 | ,

கொசுவைப்பற்றி உங்களுக்கு தெரிந்தது, படித்தது, மற்றவர்கள் சொல்லக்கேட்டது அனைத்தயும் அவுட் ஆஃப் சிலபஸ் ஆக்கி, [ இன்னும் சொல்லப் போனால் சமச்சீர் கல்வி புத்தகத்தில் கலஞர் எழுதிய கவிதை மாதிரி கருப்பு மையிட்டு அழிக்ககூடிய அளவுக்கு] எல்லாமே புதிதாக பாடம் எடுக்க கூடியது அதிராம்பட்டினத்து கொசுக்கள். கொசுவுக்கு மூலை சிறியது, சிந்திக்க தெரியாது என இன்னும் நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் உங்கள் காலில் உட்கார்ந்து கடித்து கொண்டிருக்கும் ஒரு குரூப் கொசுக்கள் "என்னப்பா இவன் பொறெக்கிறுக்கு வந்தவன் மாதிரி பொழம்புரான்னு மதுரைத்தமிழில் கிண்டல் அடிப்பது உங்கள் காதுக்கு எட்ட வாய்ப்பில்லை.


பொதுவாக கொசு கடித்தால் கவனம் கொசுவின் உடம்பில் கருப்பும் வெள்ளையுமாக கோடு இருந்தால் அது டிங்கி கொசு, இந்த கொசுவிடம்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று எல்லா மெடிக்கல் ஜர்னல்களும் சொல்கிறது, ஆனால் நம் ஊரில் இருக்கும் எல்லா கொசுவுக்கும் கருப்பு வெள்ளைக்கோடு உடம்பில் இருக்கிறது என்பது எந்த மெடிக்கல் கொம்பனுக்கும் தெரியாது என நினைக்கிறேன்.

கொசுவை குடும்பம் குடும்பமாக பழிவாங்க நான் எலக்ட்ரிக்ட் பேட் எல்லாம் கொண்டு போனேன்... பேட்டை தூக்கிய உடன் என் முகத்துக்கு பக்கத்தில் வந்து நிற்க்கும் அளவுக்கு சி பி எஸ் சிலபஸில் படித்த பிள்ளைகள் மாதிரி புத்திசாலி கொசுக்களை என்னதான் செய்வது.

இரவில் படுக்கும் முன் கொசுவலை கட்டிய கட்டிலில் படுத்தால் பிரச்சினை சால்வ்ட் என யாரும் எழுதுமுன் நிற்க:

நானும் முயற்சித்தேன். இதற்காக நல்ல கொசுவலை வாங்கி கட்டினேன். ஆனால் இந்த கொசுக்கள் நேராக உயரத்துக்கு போய் பிறகு கொசுவளையில் நுழைய ஏவுகனை மாதிரி நுழையும் அந்த திறமையை இப்போது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் அறிய வாய்ப்பு இல்லை.

சின்ன வயதில் ஜக்கரியா தியேட்டரில் பார்த்த ஒரு பிளாக் & ஒயிட் படத்தில் “நாலு பக்கம் ஏரி நடுவுலெ தீவு தீவுக்கொரு ராஜா” னு ஒரு பாட்டு வரும்...எங்க வீடு இருக்கும் சூழ்நிலை இப்போது அப்படித்தான் ஆகி விட்டது . குடிபோன சமயத்தில் தனியாக அழகாக இருந்த வீடு இப்போது நாலு பக்கம் சாக்கடையுடன் தினமும் கொசுக்களுடன் போராடுவதுடனும் இருக்கிறது.

நம் ஊர் கொசுக்கள் ஏறக்குறைய போலீஸ் மாதிரி.. அதிலும் திட்டமிடல் , தாக்குதல் என்ற பிரிவு எல்லாம் உண்டு.

இரவில் கரண்ட் வேறு ஞாயமான நேரம் கட் ஆகிவிடுகிறதா...சரி விழித்துக் கொண்டிருக்கும் நேரம் கொசு அடிக்கலாம் என்று கொசு வலைக்குள் உள்ள கொசுவை அடிக்கும்போது பார்க்க வேண்டும்... கந்தூரியில் வான வேடிக்கை விடும்போது வெடித்து சிதறும் பட்டாசு மாதிரியே அந்த இருட்டில் தெரியும். [தெறிக்கும்]

கொசுக்கள் கடிப்பது மட்டுமில்லை அது எல்லாம் ஆளத்தோட்டம் ரவுடிகள் மாதிரி வாயில் பிளேடு வைத்துக் கொண்டு அழைக்கிறது என்றால் எதற்கும் நீங்கள் எழுமிச்சை தேய்த்து குளிப்பது நல்லது என யாராவது எனக்கு இ-மெயில் அனுப்பலாம்!! [ நம்புங்கப்பா]

படுக்கும் முன் ரூமை அடைத்து விட்டு கொசு வர்த்தி அல்லது கொசு மருந்து கொழுத்தி விட்டு [2 மணி நேரம்] பிறகு நீ தூங்கியிருக்களாம் என சபீர் துபாயிலிருந்து எனக்கு மெனக்கட்டு டெலிபோன் செய்யும்போது..' அது சரி அந்த 2 மணி நேரமும் நான் நிராயுதபானியாக நிற்கும்போது தாக்கும் கொசுவுக்கு என்ன செய்வது என்றவுடன். மறுமுனையில். "நோ கமென்ட்ஸ் ப்ளீஸ்"


Eagle Story
Eagle என்ற பறவைக்கு கருடனா, பருந்தா என பெயர் சரியாக தெரியாததால் என எழுதுகிறேன். விசயம் மொழியில் இல்லை. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் இதனிடத்தில் நிறைய இருக்கிறது.

Eagle 70 வருடம் வாழக்கூடியது. அது மிக உயரமான இடத்தில் தான் கூடு கட்டும் தனது குஞ்சுகளை தன் கூட்டில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வசதியாக வாழ விடாமல் ஏற்கனவே போட்டு வைத்திருந்த தனது சின்ன சின்ன இறகுகளை எடுத்து வெளியே போட்டு விடும். அப்போதுதான் கூட்டில் உள்ள முட்கள் அந்த குஞ்சுகளின் இறகு வராத சதைகளில் குத்தி வசதி இல்லாமல் வெளியேறப்பார்க்கும். பிறகு தனது குஞ்சுகளை மிக உயராமான அளவுக்கு வானத்தில் தூக்கிக்கொண்டு பறந்து திடீர் என்று கீழே போட்டு விடும் கீழே விழும் வேகத்தில் குஞ்சுகள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தனது சிறகை அடித்து பறக்க முயற்சிக்கும். கீழே பூமியில் விழும் தருணத்தில் அந்த தாய்பறவை அப்படியே வந்து தனது வாயால் தனது பிள்ளையை கவ்விக்கொண்டு மறுபடியும் அதே ப்ராக்டிஸ்.

35 வருடத்தில் தனது அலகும், கால் நகங்களும் வளர்ந்து [வலைந்து] உணவுகளை வேட்டையாட விடாமல் தடுக்கும். அந்த இக்கட்டான சூழ்நிலையில் மீதம் உள்ள தனது பாதி ஆயுள் காலத்தை எதிர் கொள்ள இந்த பறவை ஒரு சில நாட்களுக்கு உணவு உண்ணாமல் ஒரு உயரமான இடங்களில் இருக்கும் பாறைகளில் தன் அலகையும், கால் நகங்களையும் தேய்த்து, உடைத்து சரி செய்து கொள்ளும்.

மாற்றங்களை எதிர்கொள்வதையும், தனது சந்ததியினரை யாரிடமும் எதிர்பார்த்து இல்லாமல் தானாகவே வாழ்க்கையை எதிர்கொள்ள பயிற்சி அளிப்பதில் இந்த பறவை என் மனம் கவர்ந்த பறவை.

- ZAKIR HUSSAIN

26 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கொசு, கழுகு பற்றி அறியாத அரிய தகவல்கள்.
கொஞ்ச குசும்பு வரிகளுடன் அருமை.
அறியத்தந்த அறிஞர் மருத்துவர் ஜா.காக்கா அவர்களுக்கு நன்றி.
ஜஜாக்கல்லாஹ் ஹைர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜோக்குன்னு சொன்னா கடிக்கிறாய்ங்கன்னு சொல்லுவாங்க !

ஆனா இங்கே என்னடான்னா தலைகீழ் !

கடிப்பவரே (கொசுவைச் சொன்னேன்) காமெடிக் கதாநயானாக வந்து வாய்விட்டு சிரிக்க வைத்ததோடில்லாமல் அறிய தகவல்களும் தந்த கொசு கடிக்கவில்லை... சிரி வெடிக்க வைத்ததே மெய் !

அசத்தல் காக்கா : கொசு(க்கள்) வரும்போது நான் பின்னால் பாடினால் அந்த இரைச்சலில் ஓடிடும் தானே !? (ஏன்னா உங்க கிட்டதான் இதப்பத்தி விலாவாரியா கேட்கனும்) :)

பருந்து / கழுகு : புதிய தகவல்கள் எனக்கு ! அதோடு விடா முயற்சியும் தொடர் முயற்சியும் நல்ல சிந்தனை சிலிர்ப்பூட்டல் !

இன்று மதியம் கவிக் காக்காவுடன் ஒரு விடயம் பற்றி சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும்போது பேச்சு வாக்கிலிருந்து அவர்களிடம் கற்றது தொடர் முயற்சியும் அதன் பலனனயும் அவர்கள் சொன்ன விதம் என் மனதில் அழுத்தமாக பதிந்தது...

Shameed said...

கொசுக்களில் பெண் கொசுக்கள் கடித்தால்தான் நோய் பரவுமாமே உண்மையா ?

sabeer.abushahruk said...

கொசு கடிச்சாக்கூட வலியேத் தெரியாது இவ்வளவு சிரிப்பு வரவழைச்சப்பிறகு.

இப்பவெல்லாம் கொசுவோட சைஸ் பெருசாப்போய்விட்டதால் முகத்தை அடையாலம் வைத்தே, "இந்த கொசுதான் நேற்று என்னைக் கடிச்சது" என்று சொல்லிவிடலாம். சில கொசுக்கள் லேசா மீசை ஒதுக்கினாமாதிரி பார்த்த நினைவு.

இந்த கடி வலிக்குதா பாருங்க:

கொசு
மாடியில்
படிக்கும்போது
மடியில்
கடித்ததும்
அடித்தேன்
தடித்துப்போய்விட்டது

crown said...

Shameed சொன்னது…
கொசுக்களில் பெண் கொசுக்கள் கடித்தால்தான் நோய் பரவுமாமே உண்மையா ?
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஒரு "கொசுறு"தகவல் பெண் கொசுமட்டும்தான் கடிக்குமாம்.மேலும் இதுபோல் குசும்பு சந்தேகம் உங்களுக்கு மட்டும்தான் வருகிறது.ஆண் கொசு கடிக்காது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இரத்த பந்தங்களைப் போட்டு இப்புடியா தாழிக்கிறது !

யாரோ கனவுல சொன்னது "எல்லா கொசுவும் உங்க பேட்டை தேடியா வரும் இந்திய பவுளருங்க வீசுற பந்து மாதிரி !? அதான் மொஹத்து நேரா வருதுல ஹெல்மெட்டை போட்டு தூங்குனா என்னவாம்" ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"கரும்புள்ளி, செம்புள்ளி குத்துன கொசுவாவுளெ ஈக்கிது" எங்காது திருட்டு கேசுலெ மாட்டி இருக்குமோ?

கேள்விப்பட்ட ஒரு சேதி: கொசு கடிப்பதற்கு முன் அந்த இடத்தில் குளோரோஃபார்ம் கொடுத்து மறக்கடித்து தான் கடிக்குமாமே? அது கடித்து இரத்தத்தை உறிஞ்சி சென்ற பிறகு தான் நமக்கு வலிக்குமாம்.

ஜாஹிரு காக்கா, நல்லாத்தான் ஈக்கிது உங்க கட்டுரை..


மு.செ.மு. நெய்னா முஹம்மது.

அப்துல்மாலிக் said...

கொசு கடிச்சுச்சுனு ஒரு பக்கம் பயமுறுத்தினாலும் அ.நி. கொசுவின் படத்தை இம்பூட்டு பெருசா போட்டு பயமுறுத்துரியலே...

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மலேசிய மருத்துவர் ஜாகிர் காக்கா கொசுவை பற்றி போட்ட ஊசிலே.அதனுடைய கடி மறத்துவிட்டது.

// நானும் முயற்சித்தேன். இதற்காக நல்ல கொசுவலை வாங்கி கட்டினேன். ஆனால் இந்த கொசுக்கள் நேராக உயரத்துக்கு போய் பிறகு கொசுவளையில் நுழைய ஏவுகனை மாதிரி நுழையும் அந்த திறமையை இப்போது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் அறிய வாய்ப்பு இல்லை.//

இது என்ன நியாயம் கொசு வலை என்று பெயர் வைத்துவிட்டு உள்ளே நீங்கள் போய் படுத்து கொண்டால் அது பொறுத்துக்கொள்ளுமா ?உங்களின் பெரும் தொல்லையை அதான் அங்கேயும்.ஏவுகனை தாக்குதல்.

// படுக்கும் முன் ரூமை அடைத்து விட்டு கொசு வர்த்தி அல்லது கொசு மருந்து கொழுத்தி விட்டு [2 மணி நேரம்] பிறகு நீ தூங்கியிருக்களாம் என சபீர் துபாயிலிருந்து எனக்கு மெனக்கட்டு டெலிபோன் செய்யும்போது..' அது சரி அந்த 2 மணி நேரமும் நான் நிராயுதபானியாக நிற்கும்போது தாக்கும் கொசுவுக்கு என்ன செய்வது என்றவுடன். மறுமுனையில். "நோ கமென்ட்ஸ் ப்ளீஸ்"//

மருத்துவர் நர்சை கூப்பிட்டு மருந்து மாத்திரை கொடுக்க சொல்வதுபோல் இருக்கிறது.சபீர் காக்காவிடமிருந்து பவரான மருந்துகளை எதிர்பார்க்கின்றோம் .

காக்கா உங்களின் தொடர் கதைக்கு கருடன் கொசு என்று பெயர் சூட்டி தொரத்துங்கள் .அதை நாங்கள் ப(பி)டிக்கிறோம்.

கழுகை பற்றி கூர்மையான பார்வை வாழ்த்துக்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// சபீர் காக்கா சொன்னது

இந்த கடி வலிக்குதா பாருங்க:

கொசு
மாடியில்
படிக்கும்போது
மடியில்
கடித்ததும்
அடித்தேன்
தடித்துப்போய்விட்டது //

மாடி,படி,மடி கடி,அடி,தடி, இவ்வளவு அ (டி)க்களா ?எப்படி வலிக்காமல் இருக்கும். மடியில் அடிக்காமல் புடித்திருந்தால் தடித்திருக்காது வடிந்திருக்கும் படித்திருக்கலாம் சாரி காக்கா இன்னும் ரொம்ப வலிக்கிற மாதிரி தெரியுதா?

sabeer.abushahruk said...

கிரவுன்,

பெண்கொசு மட்டும்தான் கடிக்கும் என்று சொல்கிறீர்களே அதோடு பாவம் அந்த ஆண் கொசுவின் வேலைதான் என்னவென்றும் சொல்லக்கூடாதா?

கொசு வர்க்கத்தில்கூட ஆண்கள் வேஸ்ட் என்கிற மிகப்பெரிய பழியை நம்மீது சுமத்திவிடப் போகிறார்கள்.

எல் எம் எஸ்: உங்க பல்லு ரொம்பவுல கூறா இருக்கு. ஏன் இந்த கொல வெறி?:)

Muhammad abubacker ( LMS ) said...

// சபீர் கக்கா சொன்னது;
எல் எம் எஸ்: உங்க பல்லு ரொம்பவுல கூறா இருக்கு. ஏன் இந்த கொல வெறி?:) //

பாவம் காக்காவுக்கு தடித்து இருக்குதேன்டு கவலைப்பட்டு.ஆறுதலாக பாசம் நிறைந்த ஒரு குன வெறி கடித்தான்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

கிரவுன்,

பெண்கொசு மட்டும்தான் கடிக்கும் என்று சொல்கிறீர்களே அதோடு பாவம் அந்த ஆண் கொசுவின் வேலைதான் என்னவென்றும் சொல்லக்கூடாதா?

கொசு வர்க்கத்தில்கூட ஆண்கள் வேஸ்ட் என்கிற மிகப்பெரிய பழியை நம்மீது சுமத்திவிடப் போகிறார்கள்.

எல் எம் எஸ்: உங்க பல்லு ரொம்பவுல கூறா இருக்கு. ஏன் இந்த கொல வெறி?:)
--------------------------------------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும்.பெண்கொசுதான் கடிக்கும் அதை உணவாக மாற்றி கொள்ளும். ஆனால் ஆண் கொசு பழரசங்களைத்தான் உணவாக உரிஞ்சிக்கொள்ளுமாம்.

Anonymous said...

ஹூமர் கொட்டி கிடக்கிறது உங்களிடம் கடிவாங்கியும் அதனை அடிக்காமல் விட்டுவிட்டு அதற்காக ஒரு கட்டுரை எழுதி அந்தக் கொசுக்களை சிறகடிக்க வைத்திருக்கிறீர்கள் நண்பரே...

வாழ்த்துக்கள்... உங்கள் எழுத்தில் உருவான கட்டுரைகளை தேடிப் பிடிக்க வைத்து விட்டீர்கள் அவைகளனைத்தையும் வசிக்கனும்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

Mr.சபீர்; //அடித்தேன் தடித்துப்போய்விட்டது // தடித்தது கொசுவா இல்லெ மடியா?

பக்கர்;துளைக்காத பாதுகாப்பு அரணில் இருந்தும் ஏவுகனை தாக்கப்பட்ட ஆள், கொசுவால் பாவம் அதிக பாதிக்கப்பட்ட ஆளாக இருக்கிறது.

Mr.க்ரவ்ன்; கொசு பற்றிய கேள்விக்கு சூடாக பதில் கொடுக்கும் Mr க்ரவ்ன் அதன் ஆயுட்காலம் எவ்வளவு?

sabeer.abushahruk said...

//கடிவாங்கியும் அதனை அடிக்காமல் விட்டுவிட்டு//
அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்,
பின்னூட்டிய சகோ. கட்டுரையின் நகைச்சுவையில் மயங்கி, நடந்த உண்மையிலிருந்து கட்டுரை எழுதியவரைப் பாதுகாக்க முயல்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

காரணம், வலை, கரன்ட் பேட் போன்ற தற்காப்பு மற்றும் கொலைக் கருவிகளுடன் சென்ற மலேசியக்காரர், கொசுக்களை கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பமாகக் கொன்று ராஜபக்‌ஷேக்கே பெப்பே காட்டியிருப்பதை அவரே ஒப்புக்கொண்டு, கிழே தன் பெயரை எழுதியிருக்கிறார் என்பதை கவனிக்கவும்.

(அதெலாம் சரி, இவனை யார் நான் ஊரில்லாதபோது அங்கு போகச் சொன்னது? இங்கிருந்து அவனை நான் எப்படித்தான் பாதுகாப்பேனாம்?)

sabeer.abushahruk said...

// ஆனால் ஆண் கொசு பழரசங்களைத்தான் உணவாக உரிஞ்சிக்கொள்ளுமாம்//.

அப்படியா? இட் இஸ் எ ந்யூஸ் ஃபார் மி!

(ஷாரூக், டெல் மம்மி டு கீப் மை ஜூஸ் ரெடி)

sabeer.abushahruk said...

//Mர்.க்ரவ்ன்; கொசு பற்றிய கேள்விக்கு சூடாக பதில் கொடுக்கும் Mர் க்ரவ்ன் அதன் ஆயுட்காலம் எவ்வளவு?//

ஜாகிர் போன்ற அன்னிய சக்திகளின் கைகளால் அடிபட்டு சாகும்வரை!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

sabeer.abushahruk சொன்னது…
//Mர்.க்ரவ்ன்; கொசு பற்றிய கேள்விக்கு சூடாக பதில் கொடுக்கும் Mர் க்ரவ்ன் அதன் ஆயுட்காலம் எவ்வளவு?
ஜாகிர் போன்ற அன்னிய சக்திகளின் கைகளால் அடிபட்டு சாகும்வரை!//

இது பெண் கொசுவுக்கு தலைஎழுத்து என்றால் ஆண் கொசு எப்படி எப்பொ சாகும்?

sabeer.abushahruk said...

//தடித்துப்போய்விட்டது // தடித்தது கொசுவா இல்லெ மடியா?//

MHJ: என் இரத்தம் குடித்துக் கொழுத்ததால் கொசுவும், அடித்துச் சிவந்த்தால் மடியும்.

அ.நி.: இந்த பதிவுக்கான சிறந்த கேள்வியாக இதைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். மலேசியாக்காரரிடம் சொல்லி ஒரு கிலோ ரம்புதானும் மங்குஸ்தானும் (யம்மி) எம் ஹெச் ஜேக்கு அனுப்பவும்.

//இது பெண் கொசுவுக்கு தலைஎழுத்து என்றால் ஆண் கொசு எப்படி எப்பொ சாகும்//

ஹாங்... இறந்த பெண் கொசுவை நினைச்சு நினைச்சு குடிகாரனுகளுடைய ரெத்தமா குடிச்சு குடிச்சு வாழ்க்கை வெறுத்து, வாழ்வே மாயம் பாடி, தாடி வளர்த்துச் சாகும்.

(இந்த கிடிக்கிப்பிடியெல்லாம் நம்மகிட்ட நடக்காது எம் ஹெச் ஜே)

ZAKIR HUSSAIN said...

அப்டீனா மெய்யாலுமே சிரிப்பாதான் எழுதியிருக்கேனா?\

நன்றி..இப்படி ஒரு கொசுமேட்டர் [ இது சப்ப மேட்டரின் மொழிபெயர்ப்பு ] எழுதினாலும் பாட்டுகத்துக்கொண்டிருக்கும் அபுஇப்ராஹீம், தனது கீபோர்டில் தமிழுணர்வு அதிகம் வைத்திருக்கும் கிரவுன். சாகுல், [ உங்களுக்கும் கிரவுனுக்கும் கொசு அனுப்பும்போது கெவுன் போட்டுவிடவா இல்லை கைலி கட்டிவிடவா என முன்பே சொல்லிவிடவும் ..ஆணா / பெண்ணா என குழம்ப வேண்டியதில்லை]

to my beloved brothers Abu Bakar, Abdul malik, Jahubar Sadik,Naina Mohamed [MSM] ...I always look for your wonderful comments..it is like BOOST / COMPLAN / HORLICKS to ME

Thanx once again

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

To Sabeer,
//ஒரு கிலோ ரம்புதானும் மங்குஸ்தானும் (யம்மி) எம் ஹெச் ஜேக்கு அனுப்பவும்.//


இப்ப சீசன் குறைந்துபோய் சூம்பிப்போன ரம்புத்தானாக வருகிறது. ஆனாலும் குற்றாலத்தில் பார்த்த ரம்புத்தானுக்கு இது தேவலாம்.

ஆனால் இப்போது டுரியான் எங்கும் கிடைக்கும் சீசன். பழத்தின் டேஸ்ட் பிடித்து விட்டால் எம் ஹெச் ஜே ஒவர்ஸ்டேயில் இருந்து கூட சாப்பிடலாம்.

சபீர் நீ இங்கு வந்த போது பார்த்த சீன கந்தூரி சீசன்..எல்லா இடங்களிலும் மேடை போட்டு பேய்க்கு பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
சபீர் காக்கா சொன்னது.
//வலை, கரன்ட் பேட் போன்ற தற்காப்பு மற்றும் கொலைக் கருவிகளுடன் சென்ற மலேசியக்காரர், கொசுக்களை கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பமாகக் கொன்று ராஜபக்‌ஷேக்கே பெப்பே காட்டியிருப்பதை அவரே ஒப்புக்கொண்டு, கிழே தன் பெயரை எழுதியிருக்கிறார் என்பதை கவனிக்கவும்.//

அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்,

என் கட்சிக்காரர் MR .ஜாகிர் காக்கா அவர்கள் தன் சுய நலனுக்காக கொசுக்களை கொள்ளவில்லை.தன் நாட்டு மக்களின் தூக்கத்தை கொள்ளுகின்றன.என்ற ஒரே நோக்கத்தில்தான் கொசுக்களை குடும்ப குடும்பமாக கொன்று குவித்து தன் பெருமையை நிலைநாட்டி இருக்கிறார்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சபீர் காக்கா ஜாஹிர் காக்கா நீங்கள் சேர்ந்தனுப்பிய இருவகைப்பழங்களும் உடன் கிடைத்தது.மகிழ்ச்சி.ரொம்ப டேஸ்ட்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//.இப்படி ஒரு கொசுமேட்டர் [ இது சப்ப மேட்டரின் மொழிபெயர்ப்பு ] எழுதினாலும் //

அன்பின் அசத்தல் காக்கா: இது என்னவோ உங்களுக்கு சப்ப மேட்டராக இருக்கலாம், ஆனால் ஒரு படைப்பாளியின் திறமையை இங்கே காண்கிறோம், கரு எதுவானாலும் வாசிப்பவர்களை எப்படியும் வசியப்படுத்தும் கைங்காரியமும், செய்வினையும், உங்களின் எழுத்திலும் மற்றும் செயலிலும் இருக்கிறது. அதுவே எங்களின் ரசனையை சிலிர்க்க வைக்கிறது...

அதற்காக சப்பை மேட்டராக இருக்கும் எல்லாவற்றையும் வாசித்தாலும் அதற்கான ரியாக்சன் என்னவோ மாறுபடும் அது இங்கு நிகழ்வதில்லை காரணம் அதற்கான சூழலும் உருவெடுப்பதில்லை !

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு ஏன் சொன்னாங்க ?

வாசிக்கும் ஆர்வம் அதிகமிருக்கும், வழமையிருக்கும் நேசங்கள் தங்களின் தேடலுக்கு அல்லது எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் எது கிடைத்தாலும் ரசிக்கவே செய்வார்கள்.

crown said...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
Mr.க்ரவ்ன்; கொசு பற்றிய கேள்விக்கு சூடாக பதில் கொடுக்கும் Mr க்ரவ்ன் அதன் ஆயுட்காலம் எவ்வளவு?
-------------------------------------------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும்.
ஐந்து மாதங்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு