Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தேடுகிறேன்... 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 06, 2012 | , , , ,

இன்று
காணாமல் போன
ஆனக்குண்டே
கதியென்று கிடந்த...

இன்று
பாசிபிடித்து
ஆக்ரமிப்பிலிருக்கும்
அமராவதி குளத்தில்
காலை முதல்
மதியம் வரை நிச்சலடித்த...

இரவு மறந்து
புளியமரங்களிலும்
மொட்டை மாடிகளின்
பின்புறச்சுவர்களில்
தாவி ஏறி ஒளிந்து
கள்ளம் போலீஸ்
விளையாடிய.....

கல்யாண வீடுகளில்
கடைசி வரை
பறிமாறிவிட்டு
அலுப்பு மாற...
முட்டத்துக்கும்
கன்னியாகுமரிக்கும்
பட்டாளம் போல்
பறக்கும்....

இன்னும்...
இன்னும்...
என் வாழ்வின்
வசந்த காலங்களில்
என்னோடு கைகோர்த்த...

என் பால்ய கால..
சிநேகிதர்களே!
நண்பர்கள் தினத்தில்
எனக்கு நம்பிக்கை இல்லை
மறந்து போனால் தானே
என்றாவது ஒருநாள் நினைக்க!

உணர்வின் வெளிச்சத்தில்
உண்மை மனதோடு தேடுகிறேன்..
கலைந்து போக...
கனவுகளல்ல நாம்
கலர்கலராய் வாழ்ந்த
காலங்கள்…

வெட்ட வெட்ட வளரும்
பசுமை போல் வளர்ந்த சிநேகம்
பெரும் புயலிலும் அடித்துக் கொண்டு
போக முடியாத ஆழ்ந்த நட்பு…

சந்தோசங்களில் உன்னை
அழைக்க மறந்தாலும்
துன்பங்களை அறிந்த பொழிதில்
தோள் கொடுக்க
ஓடி வருவருவாய்...

அலைகள் போல் திரும்ப திரும்ப
அசை போடும் நினைவுகள்..
ஆக்ரமித்துக் கொண்டும்
அடைத்துக் கொண்டுமிருக்கும் மனங்கள்…

கண் காண தொலைவில் நாம்-ஆனாலும்
கண்டு கொண்டே இருக்கிறோம்…
மகிழ்ச்சிகளிலும் துக்கங்களிலும்
மனக் கண்களில்…

வசதிகள் நம்மை பிரிப்பதில்லை
வசந்தம் நம்மை மறப்பதில்லை
வாய்ப்புகள் நம்மை நேசிக்கமலில்லை
வருவாய்கள் நம்மை சோதிப்பதில்லை

என் மொபைலுக்கு
நீ இருக்குமிடம் தெரியும்
அது உன் முகவரி அறியும்
ஆனால் அழைக்க மனமில்லை
நீ ஆன்லைனின்
நானும் தான்…
ஆனாலும் ஒரு கிளிக்கில்
ஹலோ! சொல்ல மனமில்லை…

காரணம்…
இந்த இடைவேளையில்
மென்று தீர்க்க நம்மிடம்
இருப்பது வெறும் முறுக்குகளல்ல..
ஒரு நாள் விருந்தில்
ஒன்றாய அகம் மகிழ
ஆயிரம் நினைவுகள்….

வளர்ந்து வரும்
உன் மகன் என்னை
முகப்புத்தகத்தில்
நண்பனாக அழைக்கிறான்
கண்கள் குளமாக
“கன்ஃபாம்” செய்கிறேன்.

இன்னும் மிச்சமிருக்கும்
இறுதிப் பயணத்திற்க்கு முன்
இணைபிரியாமல் வாழ்ந்த
இனிமை நண்பர்களே!
இனி இணைவோமா?....

- முகமது செயினுத்தீன்
- திருவிதாங்கோடு. 


-நன்றி : இபுராஹீம் அன்சாரி (காக்கா)

15 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நட்பான நல் வரவு.
அழகுக் கவியால் நட்பின் அருமைகள்.

//இன்னும் மிச்சமிருக்கும்
இறுதிப் பயணத்திற்க்கு முன்
இணைபிரியாமல் வாழ்ந்த
இனிமை நண்பர்களே!
இனி இணைவோமா?....//

அதானே!
இப்படிதான் இருக்கு இன்றைய நம் நிலமை!

crown said...

இன்று
காணமல் போன
ஆனக்குண்டே
கதியென்று கிடந்த...
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இங்கே காண(ணா)மல் கால் இல்லாமல் , கால் காணாமல் உள்ளது கவனிக்கவும்.

crown said...

இந்த இடைவேளையில்
மென்று தீர்க்க நம்மிடம்
இருப்பது வெறும் முறுக்குகளல்ல..
ஒரு நாள் விருந்தில்
ஒன்றாய அகம் மகிழ
ஆயிரம் நினைவுகள்….
-----------------------------------------------
நட்பின் கம்பீர முறுக்கு இங்கே நொறுக்குத்தீனியல்ல!அது கவுரவ செறுக்கு கொண்ட ஆனாலும் அன்பில் முறுக்கிய பாசக்கயிறு!இதை சும்மா திரித்துகோர்பதும். திரித்து பார்பதும் இயாலாத நட்பில் இருகிய கயிறு! இது நூறுகளிறுகளின் பலம் தாண்டிய ஒரு புது பலம். இது இடைவேளையில் பேசி முடிக்கயிலாததொரு கணத்த வாழ்கை புத்தகம் . அதில் எல்லா பக்கங்களில் நிரம்பியிருக்கும் நட்பு.- நல்லதொரு ஒப்பிடல்!

crown said...

இன்னும் மிச்சமிருக்கும்
இறுதிப் பயணத்திற்க்கு முன்
இணைபிரியாமல் வாழ்ந்த
இனிமை நண்பர்களே!
இனி இணைவோமா?....
-----------------------------------------------------
இன்சா அல்லாஹ்! இதற்கு கால சூழல் நேர்கோட்டில் வாய்க்கனும். நல்ல கவிதை!இன்னும் சில சம்பவங்களை சொல்லியிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

sabeer.abushahruk said...

பிடிச்சிருக்கு சகோதரரே,

துவக்கம் முதல் ஏக்கமான நிறைவு வரை இழையோடும் அந்த "நெனப்பு" ரொம்ப பிடிச்சிருக்கு சகோதரரே.

கவிதை முழுதும் கைகோர்த்து நடக்கும் நட்பு பிடிச்சிருக்கு. தங்களின் நண்பர்கள் மீண்டும் கூடிக் களிக்க வாழ்த்துகள்.

sabeer.abushahruk said...

09) அசை!


நினைவிருக்கா நண்பா?

முருகய்யா தியேட்டர்...
முடிச்சு முடிச்சாய் முருக்கு...
மதிய நேரக் காட்சி-
மகளிர் பக்கக் கதவு
மறுபடி திறக்க…
வெள்ளித் திறையில் விழுந்த
வெளிச்ச வெட்டு…?

தெருவில் ஓதித் திறிந்த
அர்ரஹ்மானும்...ஆமீனல்லாவும்...
தராவீஹும்…ஹிசுபும்
கொடிமர மைதான
கிளித்தட்டும்...
கஞ்சியில் பிய்த்துப் போட்ட
இறால் வாடாவும்...?!
 
உம்மா வைத்து விட்ட-
சுர்மா,
பெருநாள் கைலியில்
லேபில் கிழிக்கும் சந்தோக்ஷ்ம்,
கைலியில் தங்கிய
லேபிலின் எச்சம்…?
 
தான்தோன்றிக் குளத்தில்
அம்மணக் குளியல்,
உடையைத் திரும்பப் பெற…
பெருசுகள் முன்னால் போட்ட
தோப்புக் கரணங்கள்…?

அடாத மழையும் 
விடாத விளையாட்டும்,
சாயந்தர விளையாட்டுக்குப் பிறகு
கடை ஆணத்தில்
ஊறிய பரோட்டா?!

குரங்கு பெடலில் சைக்கிள்,
செடியன் குளத்தில்
பச்சை-
பச்சைத் தண்ணீர் குளியல்,
லக்க்ஷ் சோப்பில்
பினாங்கு வாசம்?

சவுரி
மீரா மெடிக்கலில் தரும்
லட்ட்ர் சுகம்?
கடுதாசியின்
முனை கிழித்து-
பணம் தரும் நம்மூர் உண்டியல்?
 
ரயிலடிக் காற்றில்
பரீட்சை பயத்தில் படிப்பு? 
கூடு பார்த்த
அடுத்தநாள் தூக்கம்? 
ஈ மொய்த்த  பதனி?
கலரி வேலை-
கலைப்புக்குப் பிறகு…
எறச்சானம்/புளியானம்?
 
 
வீடு திரும்பும் நள்ளிரவில்  
எங்கிருந்தோ…
கிழங்கு சுடும் வாசம்?
பாம்பு முட்டையிடுதாம்!
பாதி நிலவொளியில்…
பின்னால் பேய்?
ஏழு கட்டையில்…
"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
ஓடு ராஜா..."?
 
கேள் நண்பா-
இப்பவும் நம்மூர்
நல்லாத்தான் இருக்கு...!

 
மணல் போர்த்திய
தார் சாலையும்...
களை சூழ்ந்த
நீரோடையும்
என...!
 
கைம் பெண்ணாய்
ரயில் நிலையமும்...
கற்பழிக்கப் பட்டவளாய்
பேருந்து நிலையமும்...
சவளைப் பிள்ளையாய்
தபால் நிலையமும்...
காசும் கட்டப் பஞ்சாயத்துமாய்
காவல் நிலையமும்
எனவும்...!
 
ஊரில் எல்லோரும்
திருந்திட்டாங்களாம்...
உன்னையும் என்னையும் தவிர-
அதை நம்பும்
கேனத்தனத்துக்காக!
              -சபீர்
(எங்களுக்கும் உண்டுல்ல நெனப்பு?!)
 

KALAM SHAICK ABDUL KADER said...

// வசதிகள் நம்மை பிரிப்பதில்லை
வசந்தம் நம்மை மறப்பதில்லை
வாய்ப்புகள் நம்மை நேசிக்கமலில்லை
வருவாய்கள் நம்மை சோதிப்பதில்லை//

ஆம். அனுபவபூர்வமான உண்மை செய்னுதீன்!
என் புகுமுக வகுப்பில் என்முகம் கண்டு பழகி என் அகம்கண்டு நட்பாகி இன்று வரை இணைபிரியா நண்பனாய் உள்ள அன்றையா வகுப்புத்தோழன் உங்கள் பெயரில் உள்ளான் “நாகூர் ஜெய்னுதீன்”. அல்லாஹ் அருளால் வளமுடன் வாழும் அவனும் நானும் இன்னும் நட்பின் பலமுடன் இருக்கின்றோம்; இன்று கூட நாகூர்க்காரைக் கண்டான் அவன் நினைவும் அவனைப்பற்றிய விசாரிப்பு வரும்;இன்றும் ஓர் இஃப்தார் விருந்தில் பெரும்பணக்காரரும் புரவலருமான நாகூர்க்காரைச் சந்தித்த பொழுது என் ஆருயிர் நண்பனைப் பற்றி நினைவுபடுத்தினேன்; அல்ஹமதுலில்லாஹ் அவரும் என் நண்பனின் உறவினர் என்ற செய்தியும் கிட்டியது. 1974ல் ஓராண்டு புகுமுக வகுப்புத்தோழன் தான்; ஆயினும் இன்று வரை குடும்ப நண்பராகி விட்டார்’ ஆம். வளங்களும் வசதிகளும் எங்களைப் பிரிக்கவில்லை; மாஷா அல்லாஹ்அனுபவ கவிதை யாத்த உங்கட்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்”

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இங்கே காண(ணா)மல் கால் இல்லாமல் , கால் காணாமல் உள்ளது கவனிக்கவும்.//

காணாமல் இருந்த கால் தேடி போடச் சொன்னதை கால் மேல் கால் போட்டாகிவிட்டதப்பா ! :) - ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

----------------------
இந்த கவிதையை இ.அ. காக்கா அனுபித் தந்தபோதுதான் நெனப்பே வந்தது... இன்றைக்கு ஃபிரண்ட்ஸ் டே(ய்ய்ய்ய்)யாமுல !?

மதியம் ஒரு குறுஞ்செய்தி என்னுடைய மொபைலுக்கு...

இப்படித்தாங்க //Happy Friendship Day! Make your friends feel special with a warm and heartfelt friendship quote! Just reply with SUB FM for only AED 5/week. If you do not wish to receive such messages send STOP to 9059.//

நம்ம ஃபிரெண்ட்ஸுக்கு வாழ்த்துச் சொல்லவும் அவர்களுக்கு நம் பிரெண்ட்ஸிப்பை உணரவைக்கவும் இவய்ங்களுக்கு வாரத்திற்கு திர்ஹம் 5 மொய்யெழுதனுமாம் !!?

ஏன் எங்களுக்கும் நெனப்புல இருக்குல...

//கேள் நண்பா-
இப்பவும் நம்மூர்
நல்லாத்தான் இருக்கு...!//

ஆம் ! எங்க ஊர் எப்பவுமே நல்லாத்தான் இருக்கு... நல்லவங்களை அங்கே பார்க்கும்போதும் பழகும்போதும் !

தேடுகிறேன்... அருமை !

KALAM SHAICK ABDUL KADER said...

//குரங்கு பெடலில் சைக்கிள்,
செடியன் குளத்தில்
பச்சை-
பச்சைத் தண்ணீர் குளியல்,
லக்க்ஷ் சோப்பில்
பினாங்கு வாசம்?//

கவிவேந்தர் அப்பொழுதே
புதுக்கவிதை குளத்தில்
நீச்சலடித்திருப்பதும்;
பினாங்கு வாசம்
ஜாஹிர் நேசம்
அவரின் சுவாசம்
என்பதும் உணர முடிகின்றது.

அதிரை என்.ஷஃபாத் said...

நண்பர்களைத் தேடும் ஒரு மனதின் ஏக்கக் கவிதை, அருமை.!!
கவிக் காக்காவின் நினைவுக் கோர்வையும் அழகு.

Ebrahim Ansari said...

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல் வாழத்துக்கள்.

கவிஞர்களை நண்பர்களாகப் பெற்ற பாக்கியத்தால் செய்நுதீன் கவிதை இறக்குமதி செய்யப்பட்டது. தம்பி சபீர் அவர்களின் கவிதை என்கிற உயிர்தட்டும் ஓசை இப்போது ஏற்றுமதி ஆகிக்கொண்டு இருக்கிறது. இது குமரி மாவட்டத்துக்கும் தஞ்சை மாவட்டத்துக்குமான கவிதை பகிர்வுகளின் அங்கம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஓட்டு வீட்டின் ஓட்டையினூடே
வெயிலின் வெளிச்சக்கீற்று
ஊடுறுவி வீட்டை வேவுபார்த்த‌
அந்தக்கால நினைவுகளுடன்
இந்தக்கால டாலராய், பவுண்டாய்,
ரியாலாய், திர்ஹமாய் கொட்டித்தீர்த்தாலும்
சிறுபிராய சந்தோச நினைவுகள்
சல்லடையாய் தேடினாலும்
இன்று எங்குமில்லையடா தோழா!


கவிஞரின் ஏக்கம் இன்று ஏனோ அக்கால சந்தோசம்
காசுகள் பல கொட்டித்தீர்த்தாலும் வ‌ர‌ ம‌றுக்கிற‌து ம‌ல்லுக்க‌ட்டி ம‌றைந்து போகிற‌து.

Ebrahim Ansari said...

//கைம் பெண்ணாய்
ரயில் நிலையமும்...
கற்பழிக்கப் பட்டவளாய்
பேருந்து நிலையமும்...
சவளைப் பிள்ளையாய்
தபால் நிலையமும்...
காசும் கட்டப் பஞ்சாயத்துமாய்
காவல் நிலையமும்
எனவும்...!//

சமீபத்தில் வேறெங்கோ படித்ததை பகிர்கிறேன்.

மூன்று விஷயங்களுக்கு இங்கு கியாரண்டி இல்லை. கோயிலுக்குப்போனவர்களின் செருப்புக்கு
ஆஸ்பத்திரி போனவர்களின் உறுப்புக்கு
காவல் நிலையத்தில் கற்புக்கு - இவை மூன்றுக்கும் கியாரண்டி இல்லை.

இப்னு அப்துல் ரஜாக் said...

//வளர்ந்து வரும்
உன் மகன் என்னை
முகப்புத்தகத்தில்
நண்பனாக அழைக்கிறான்
கண்கள் குளமாக
“கன்ஃபாம்” செய்கிறேன்.//

notable quote

Yasir said...

நட்பை பற்றி நளினமான கவிதை....வரவேற்க்கிறோம் முகமது செயினுத்தீன் அவர்களே...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு