Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கந்தூரிக்கு எதிர்ப்பு ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | December 05, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்றைய கால கட்டத்தில் அதிரையில் மூழ்கடிக்கப்பட வேண்டிய மூடப்பழக்க வழக்கங்களில் ஒன்றான கந்தூரிக் கோமாளிகளின் கூத்துக்களும் அவர்களால் அரங்கேற்றப்படும் அசிங்கங்களும் அழித்தொழிக்கப்பட வேண்டிய நிலையில் அவைகள் இன்றைய மீடியாக்களின் வாயிலாக கடந்த சில வருடங்களாக முதன்மை படுத்தப்படுகிறது !

இணைவைப்புக்கு கொடி நட்டு ஊர்வலம் நடத்தி நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களின் போதனையை கேவலப்படுத்தும் மூடர்களை முடக்கிப் போட முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, அதிரையில் பெரும்பாலான சகோதர சகோதரிகள் மனத்தளவில் வெறுத்து ஒதுக்கிய கந்தூரிகளை, வரட்டு கவுரவத்தை வானுயர தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரால் தொடரப்படுவது வேதனை மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதுமாகும்.

செவிடன் காதில் ஊதும் சங்காக மட்டும் இல்லாமல், அந்த செவிடர்களின் காதுகளை சரி செய்யும் வேலையை அதிரையில் வெகுண்டெழும் ஏகத்துவ எழுச்சிக்கு அல்லாஹ்வின் உதவியால் ஆரம்ப காலங்களில் வித்திட்ட 'அதிரை தாருத் தவ்ஹீத்' செய்து வருகிறது. வெறுமனே தூர நின்று எதிர்க்காமல், சந்திக்க மறுக்கும், சிந்திக்க மறுக்கும் அந்தக் கூட்டத்தை நாடிச் சென்று எதிர்ப்பை மட்டும் தெரிவிக்காமல் அவர்களுக்கு நல்லுபதேசமும் செய்து வருவதை வரவேற்கிறோம் !

அதிரை ஊடகங்களில் சகோதர வலைத்தளமான "அதிரை எக்பிரஸ்" மற்றும் இன்ன பிற தளங்களும் தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிட்டதோடு மட்டுமல்லாது, கந்தூரி களியாட்டச் செய்திகள் எதனையும் பதிவதில்லை என்ற முடிவை மனதாரப் பாராட்டுகிறோம் வரவேற்கிறோம் !

அதிரைநிருபர் தளம் மட்டுமல்ல அதன் பங்களிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் இந்த எதிர்ப்பில் பங்கெடுக்கிறோம். கந்தூரி போதையிலிருந்து தெளிவடையும் வரை எமது எதிர்ப்பை தொடர்ந்து கொண்டிருப்போம் இன்ஷா அல்லாஹ் !

இவ்வகை கந்தூரி களியாட்டங்களை எதிர்த்து செயல்படும் அனைவருக்கும் எங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பும் வழங்குவதோடு மட்டுமல்லாது தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருப்போம். 

செய்தி என்ற போர்வையில் இவ்வகை அனாச்சரங்களை பிரசுரித்து அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களையும் அல்லது ஆதரிக்கும் அனைவரையும் கண்டிக்கிறோம், அவர்களும் தங்களது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (4:116)

அல்லாஹ்வுக்கு நிகராக இணைவைப்பு செய்பவனுக்கு சொர்க்கம் விலக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிந்தது என்றாலும், அந்த இணைவைப்புக்கு ஆக்கமும், ஊக்கமும், உற்சாகமும், ஆதரவும், பொருளுதவியும், செய்பவர்களுக்கு சொர்க்கம் மேற்சொன்ன விடயம் ஹலாலாகுமா ? என்பதை உங்கள் அனைவரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

யா அல்லாஹ் ! கந்தூரி போன்ற கெடுகெட்ட அனாச்சாரங்களில் ஈடுபடும் அந்த மக்களை நேர்வழிப்படுத்துவாயாக.!

அதிரைநிருபர் பதிப்பகம்

5 Responses So Far:

Unknown said...

தொடர்ந்து நடக்கட்டும் மாக்களுக்கான எச்சரிக்கை.

நேர்வழி பெறுவது என்பது இவர்களுக்கு மட்டும் விதி விலக்கா என்ன ?

கண்டிப்பாக ஒருநாள் இவர்கள் விழித்துக்கொள்வார்கள் இன்று உறக்கத்தில்

இருக்கின்றார்கள்.

அல்லாஹ் ஹிதாயத் என்னும் நேர்வழியை காட்டட்டும்.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

இளையதலைமுறைமீது நம் கவனம் கூடுதலாக வேண்டும்.

பாப்ரி மஸ்ஜிதை உடைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நமக்கும் நம் தெருவில்/ஊரில் நடக்கும் அனாச்சாரத்தைத் தடுக்க முடிய வில்லை.

வெட்கம்.

காதர்,

அப்படியே, கீழே உள்ள லிங்க்கையும் வாசிக்கவும்.


http://www.satyamargam.com/articles/arts/lyrics/2248-2248.html

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கந்தூரி போதையிலிருந்து தெளிவடையும் வரை எல்லா வகையிலும் எதிர்ப்பை தொடர்ந்து கொண்டிருப்போம். இன்ஷா அல்லாஹ் !

சமாதி விழாக்காரவங்கள் மார்க்கம் தெரியாமல் மாயன் காலன்டரை வைத்து பிறை 26 ல் கம்பை நட்டி அதே மாயன் காலன்டர் கணக்குப்படியே அடுத்த 2 வது நாளில் தேர் ஊர்வலத்தையும் வழக்கமான கூத்துக்களுடன் செய்து விட்டனர். முஹர்ரம் பிறை ஒரு நாள் தள்ளிப்போன சமாச்சாரமெல்லாம் சமாதி வழிபாட்டாளர்களுக்கு தெரியுற அளவுக்கு இன்னும் அவர்கள் விளங்க வில்லை. மாற்றார்கள் செய்தார்கள் எங்க வாப்பா செய்தார்கள் நாங்களும் செய்கிறோம் என விளங்க வாய்ப்பு கிடைத்தும் விளங்காதவர்களாக தொடர்கிறார்கள்.

இன்னொரு மூடப்பழக்கம் சமாதி அமைந்த தெருவில் இருக்குதாம். கொடி ஏற்றும் நாளில் பிள்ளைகளுக்கு முடி இறக்குவார்களாம். கமிட்டி ஒருநாள் முன்னாடியே கொடிமரம் ஏற்றிவிட்டதால் கொடி ஏத்துறவங்களுக்கும், முடி இறக்குறவங்களுக்கும் பிறை கணக்கில் கூட முறன்பாடாம். மூடப்பழக்கத்திலும் முறன்பட்டுள்ளனர்.

Adirai pasanga😎 said...

மக்களை நன்மையைக் கொண்டு ஏவுதலும் தீமையை விட்டும் தடுப்பதற்காகவே அல்லாஹ் நம் இறுத்தித் தூதரை நமக்கு அருளினான். அத்தகைய பணியில் முதன்மையானதுதான் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற நன்மையை ஏவுதலும் அவனுக்கு இணைவைத்தல் கூடாது என்ற தீமையை விட்டும் தடுத்தலும் ஆகும்.

இதனைதவிர்த்த அனைத்து காரியங்களும் அடுத்தபடியானதுதான்.

இந்த வழியில் சமுதாய அக்கறையோடு இக்லாஸோடு பாடுபடும் அதிரை தாருத் தவ்ஹீதிற்கு நம்மால் இயன்ற அளவிற்கு ஒத்துழைப்புத் தருவது அனைத்து ஏகத்துவவாதிகளின் கடமையாகும்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
--------------------------------------------------
எப்போதும் போலத்தான்
அப்பொழுதும் புலர்ந்தது

விண்ணிறைந்த வெள்ளொளியில்
காவிக்கறை படியும் என
கணித்திருந்தால்
விடியாமலேயே
முடிந்திருக்கும் அந்நாள்


தொழுகைக்கான இடம் அழித்து
வேதனையால்
அழுகைக்கான வழி வகுத்தநாள்

அன்று
பதுங்கிப் பாய்ந்தன
நயவஞ்சக நரிகள்
பின்னாலிருந்து
பிடரியில் தாக்கின

கடப்பாரைகள் கொண்டு
கரசேவை செய்தனர்
தடுப்பாரைக் கொன்று
தரைமட்டம் ஆக்கினர்

இந்தியாவின்
மதச் சார்பின்மைக்கு
சாவுமணி அடித்து
இறையாண்மைக்கு
இழவு தினம் அனுசரிக்கப்பட்டது
அன்று முதல்தான்

இறையில்லம் தகர்க்கப்பட்டு
வரலாறு திரிக்கப்பட்டு
இந்தியா
இளித்துக் கொண்டே
இயலாமையை
ஒளித்துக் கொண்டே
குரங்கு பங்கு வைத்த ஆப்பத்தைப்போல்
நீதியைப் பிய்த்துப்பிய்த்து
மீதியைத் தந்தது

களவுபோனப் பொருள்
கைக்குக் கிடைத்தது...
கால் பங்கிற்கு அரைப் பங்கு
கமிஷன் போக!

நிலுவையில் நின்றது
நிலத்தகறாரல்ல...
நிர்பந்தத் திற்குட்பட்டு
நீதி சொல்ல!

யுத்தமும் ரத்தமும்
என - இன்று
மொத்தமும் பறிபோய்...
சத்தமில்லாமல்
சகித்துக் கிடக்கிறது
என் சமூகம்!

காலைக் காட்சியின்
சுவரொட்டியை விட
கேவலமாகிப் போனது
சட்டமும் நீதியும்!

பாரத மாதாவின்
பாதம் பூசிக்கும்
படித்தவர்களே...
மானம் போகுதைய்யா-

காவிகள்
பிய்த்துப்போட்ட
மாதாவின் மாராப்பைத்
தைத்துப் போடுவதெப்போ?

-சபீர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு