Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நாங்கள் அதிரை நிருபர்... 9

அதிரைநிருபர் பதிப்பகம் | June 13, 2015 | , ,



இது
எங்கள் கூடாரம்

இது
உழைத்துக் களைத்தோர்
சற்று
இளைப்பாரும் இடம்

இங்கு
நாங்கள்
இங்கிதத்தோடு
இலக்கியம் படைக்கின்றோம்

புதுப்பிக்கப்பட்ட சிந்தனைகளைப்
பதிப்பிக்கின்றோம்

புத்தக வடிவில்
புத்திக்கு நல்ல
வித்திடுகிறோம்

அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவற்றை
அச்சடித்துத் தருகிறோம்

மூட்டை மூட்டையானப்
பொருட் குற்றங்களோடு
பெருங்கூட்டம் கூட்டும்
எண்ணமில்லை எமக்கு

சிற்சில
சொற் குற்றங்களோடும்
ஓரிரு
ஒற்றுப் பிழைகளோடும்
இலக்கை நோக்கியே
இயங்கிக் கொண்டிருக்கிறோம்

ஆங்காங்கே சிலபல
இலக்கணக் கட்டுகளை
நெகிழ்த்திவிட்டு துள்ளிக்குதிக்கும்
இளங்கன்று நாங்கள்

செல்லரித்தச் சித்தாந்தங்களில்
சிந்தையைச் செலுத்தி
முந்தைய சகோதரர்களின்
முன்பின் முரண்களை
முழங்கி
அவர்தம்
பலவீனங்களைப்
பகிரங்கப் படுத்தும்
பாணி எமதல்ல

வீண் கிளர்ச்சியில்
வீழாமல்
சாண் வளர்ச்சியிலேனும்
சாதிக்கப் புறப்பட்ட
சிநேகிதர்கள் நாங்கள்

ஆர்ப்பாட்டங்கள்
ஆரவாரங்கள் போன்ற
அன்றாடச் செய்திகளுக்கு
நாங்களில்லை

அது
எமது நோக்கமல்ல

ஆங்கிலேயர்களை விரட்டிய
அகிம்சையைப்போல -எங்கள்
அமைதியின் ஆளுமை
ஆணவத்தை அடக்கி -வரலாற்று
ஆவணத்தில் நிலைக்கும்

அதிரை நிருபர்
செய்தித் தாள் அல்ல
சிந்தனை வாள்;
அடிமைத் தளமன்று
ஆளுமையின் வளம்

மார்க்கம் சொல்லவோ
மனிதம் வளர்க்கவோ
புன்னகை பரப்பவோ
பூமியைத் திருத்தவோ
சிறப்பாக ஏதும்
சிந்திப்பவரா நீங்கள்?

அவற்றை
அறிவித்துத் தர
அதிரை நிருபர்
ஆவலோடு காத்திருக்கிறது!


மனித குலத்திற்கு
தனிநீதி
கேட்ட மூத்த சகோதரர்
இபுறாகீம் அன்சாரி
அவர்களின் நூலைத் தொடர்ந்து

நபிமணியின்
நகைச்சுவை சொல்லும்
சகோதரர்
இக்பால் சாலிஹ்வின்
நூல் வெளியிடுகிறோம்

இனி
இப்றாஹீம் அன்சாரி அவர்களின்
இந்திய வரலாற்றில் இஸ்லாமியர் பங்கு
சகோதரர் அலாவுதீனின்
கடன் வாங்கலாம் வாங்க
ஜாஹிர் ஹுஸேனின் படிக்கட்டுகள்
அதிரை அஹ்மது அவர்களின் கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை
ஆகிய நூல்களும் பிரசுரிக்கப்பட உங்களனைவரின் துஆவும் கேட்டுக்கொண்டு விடை பெறுகிறோம்

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

9 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

கலைக் கட்டுகிறது இக்கூடாரம்.களங்கமில்லா மனதுடன் அமைதியை நாடி உழைத்து கலைப்பார வரும் நல் உல்லங்களின் மகிழ்ச்சியால்.

அதிரை.மெய்சா said...

அதிரை நிருபரைப்பற்றி அறிந்து கொள்ளும் விதமாக
அழகிய உவமையுடன் தன்னடக்கமான எளிய வரியில் ஏராளமான அர்த்தங்கள் புதைந்து கிடக்கிறது
உன் கவிதை மொழியில்,..!

அதை தாராளமாக தந்துள்ளாய். தலைமுறையும் அறிந்து கொள்ள...!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உண்மையைச் சொல்லப் போனால், அறிமுக உரையாகத்தான் நூல் வெளியீடு இருக்க வேண்டுமென்று நினைத்து வைத்திருந்த வேலையில், கவிக் காக்கா 'அதிரையின் முத்திரை - 2' என்ற கவிதையை எழுதியதும் அறிமுக உரையை என்ற எண்ணத்தை மாற்றி அறிமுகமே கவிக் காக்காவின் கவிதையாகத்தான் இருக்க வேண்டும் என்று மனத்தில் இருத்திக் கொண்டோம் !

மாஷா அல்லாஹ் !

எண்ணங்களின் அடிப்படியில் செயல்கள் என்ற நபிமொழிக்கேற்ப எண்ணமும், எழுத்தும், அனைவரின் செயலும் அவ்வாறே அமைந்தது அல்ஹம்துலில்லாஹ் !

இனிமையான இந்த எழுத்து நடை தொய்வின்றி கவியாகவும், காவியங்களாகவும், கட்டுரைகளாகவும் களமாடும் இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk said...

அதிரை நிருபருக்காக மிகவும் எதார்த்தமான கருத்துகளை மேடையில் பேசி வழங்க வாய்ப்பளித்த அதிரை நிருபர் பதிப்பகத்திற்கு மிக்க நன்றி!

இப்னு அப்துல் ரஜாக் said...

ஆகட்டும் இன்ஷா அல்லாஹ்

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

எனக்கும் ஒரு வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு