பகையன்று நகை!
வாழ்க்கை என்பது வாய்கெடச் சிரிப்பதும்,
சீழ்க்கை யடித்துச் சிரிப்பை மூட்டலும்,
சிறப்பாம் வாழ்வைச் சிரிப்பாய் ஆக்கிப்
பொறுப்பாய் வாழாப் பொய்மை மக்களின்
கானல் வாழ்வைக் கடைப்பிடித் தொழுகல்
ஈனம் அன்றோ! இதுதான் வாழ்வா?
மாறாய் –
உளத்திலும் சொல்லிலும் உண்மையைத் தேக்கி,
அளப்பரும் அருளால் ஆண்டவன் தந்த
நல்ல வாய்ப்பாம் நகைச்சுவை தன்னை
மெல்ல எடுத்து மிகையிலா விதத்தில்
சொல்லிடா திருப்பதும்، சோகம் ததும்ப
மல்லிட் டிருப்பதும் வாழ்க்கையா? சொல்வீர்?
உண்மையில் –
நகைச்சுவை யென்று நமக்கெலா முண்டு!
பகைச்சுவை யன்றது; பண்பு நபியார்
பயனுறு வாழ்வில் பளிச்சிடச் செய்த
நயனுடை நாயன் நல்கிய வரமது!
மிகைப்படப் பேசி மெய்மறக் காமல்
நகைச்சுவை நுகர்வோம்! நாயனைப் புகழ்வோம்!
அதிரை அஹ்மத்
0 Responses So Far:
Post a Comment