Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மேகமே... மேகமே.... ! மீண்டும் வந்தாயோ ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | July 18, 2011 | ,

அதிரைநிருபரின் எழில் வருகையோ மேகக் கூட்டத்தை கவிஞர்களுக்கு பகிர்ந்திட பரிந்துரை வைத்ததை ஏற்று இதோ மற்றுமொரு மேகமே.. மேகமே..

முகில் மூலம் முயல் வரைந்து
வான்வெளியில் மேய விட்டு
தரை மயிலை ஆட விட்டு
மலை நுனியை முத்தமிட்டு

வண்ண வான வில்லை
வரவேற்பு வளைவாய் த‌ந்து
வேண்டியதை வரைபடமாய்
வரைந்து காட்டும் வான்மேகம்!

ஊருக்குப்போர்வை விரித்து
உள்ளத்தை குளிர வைத்து
மழைத்துளியாய் கரைந்து வந்து
மண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மேகமே!

அன்பின் தாய்,தந்தையரையும்
ஆசை மனைவி மக்களையும்
பிரிந்து அயல்நாடு செல்வோரை
ஆகாய விமானத்தில் முத்தமிட்டு
எம்மை வழியனுப்பும் வான்மேகம்

வெண் கொக்கை மிதக்க விட்டு
குளிர் காற்றில் விசிறி செய்து
குதுகலமாய் வீசிச்செல்லும் மேகம்
ஊருக்குள் பெய்திடும் வான்மழை

ஆளில்லா வானில் தார்ரோடு போட்டு
சூரிய‌னையும் சாலை ஓர‌மாய் இற‌க்கி
வெட்கப்படும் வெண்நிலவுக்கு
முந்தானையிடும் வான்மேகம்

புல்பூண்டும் போற்றிப்புக‌ழும்
அந்த‌ வ‌ல்லோனின் கிருபைத‌னை
வ‌ண‌ங்கினாலும் வணங்கமறந்தாலும்
வ‌ழ‌ங்கி நிற்கும் அந்த வ‌ல்லோனே!

காற்ற‌டித்து திசைதிரும்பும் க‌ருமேக‌ம்
சாட்டைத‌னை த‌ன்கையில் கொண்ட‌வனே
க‌ருணையுள்ள‌ ர‌ஹ்மானே! காப்ப‌வனே!
இயற்கையை ஆட்சி செய்யும் ஏகனே!

- மு.செ.மு. நெய்னா முஹம்மது

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்(னு) மற்றுமொரு மேகக் கூட்டம் உன்னைச் சுற்றித்தான் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சூப்பர் மச்சான், ஒரே மேகமாக இருக்கே மழை எப்பொ!
மரத்தையும் வளர்க்க மறந்துடாதியோ.அவசியம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் நெய்னா முகம்மது,

கிரவுன் தனி பதிவு போட வேண்டும் என்று சொன்னவுடன் தான் தங்களின் பின்னூட்டத்தை வாசித்தேன்... super creativity..

//அன்பின் தாய்,தந்தையரையும்
ஆசை மனைவி மக்களையும்
பிரிந்து அயல்நாடு செல்வோரை
ஆகாய விமானத்தில் முத்தமிட்டு
எம்மை வழியனுப்பும் வான்மேகம்//

விமான பயணம் செல்லும் அனைவருக்கும் ஏற்பட்ட அனுபவம் என்றாலும், ஊட்டி, கொடைக்கால் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு சென்றவர்கள் மேகத்துடன் பேசாமல் பேசிவிட்டு வந்த அனுபவம் பலருக்கு இருக்குமே...

sabeer.abushahruk said...

எம் எஸ் எம்,
நல்ல கொ ப செ இருக்கும்போது உங்கக் கட்சிதான் ஜெயிக்கும்.

கிரவுன், இப்ப ஆரம்பியுங்களேன் கிரவுனுரையை.

(நேரம் இப்பொழுது ரெண்டு முப்பது நள்ளிரவு...கொர்....)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மேகத்திற்கு ஓட்டு கேட்டு
கொக்குகள் பேரணி வந்து
வாணவில்லை பேனராக்கி
மின்னலில் மின்சாரம் தந்து

கருமேகத்தை பந்தலாக்கி
மயில்களை ஆட விட்டு
இடி முழக்கம் முரசுகொட்டி
ம‌லையான் வ‌ந்து பூ போட்டு

ம‌ண்வாச‌னை ந‌றும‌ண‌ம் த‌ந்து
தூர‌ல் வ‌ந்து தூவிச்செல்ல
சார‌ல் வ‌ந்து சாம‌ர‌ம் வீச‌
க‌லைக்க‌ட்டும் அதிரை நிருப‌ரே

விருந்து ப‌டைக்க‌ கிர‌வுன் வ‌ந்து
க‌விக்காக்காவின் கூப்பாட்டில்
ந‌ண்ப‌ன் அப்துர்ர‌ஹ்மானின் அழைப்பில்
ச‌கோத‌ர‌ர் ப‌ல‌ர் வாழ்த்த‌

ந‌ல்லாத்தான் இருக்குது உங்க‌ள் கொண்டாட்டாம்
இறைவ‌ன் அருளால் நாமெல்லாம் ந‌ல்லா இருப்போம்...

சும்மா.....லைட்டா.......

க‌ண்ணாமுண்ணாண்டு எழுதும் எம்மை ஒரு க‌விஞனாய் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அங்கீக‌ரிக்கும் அதிரை நிருப‌ருக்கும், அத‌ன் வைடூரிய‌க்க‌ற்க‌ள் போல் ஜொலிக்கும் எழுத்தாள‌ர்க‌ள், சகோதர ந‌ண்ப‌ர்க‌ள், பின்னூட்ட‌ம் மூல‌ம் பின்னி எடுக்கும் அனைத்து ந‌ல்லுள்ள‌ங்க‌ளுக்கும் என் அன்பு க‌ல‌ந்த க‌ல‌ப்ப‌ட‌ ந‌ன்றிக‌ளும், க‌ல‌ப்ப‌ட‌மில்லா ப‌ரிசுத்த‌ து'ஆவும் சென்ற‌டைய‌ட்டுமாக‌....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து...

அப்துல்மாலிக் said...

நிறைய கவிஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களின் திறமையைவெளிக்கொண்ர திறந்தவெளி புத்தகமான இந்த நிருபரை வாழ்த்துகிறேன்

Yasir said...

சர்வ வல்லமையும் மிக்க ரஹ்மானின் இயற்க்கை அருட்கொடைகளை புகழ எத்தனை கவிகள் வந்தாலும் பத்தாது....அந்த வகையில் மேகமே கவிதை பார்ட் 2 எழுதி கலக்கிய, கவர்ந்த சகோ.நெய்னா முகமது அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.

வல்ல ரஹ்மானின் வல்லமையால்
வளைகுடா வாலிபனாய் மிளிர்ந்து
அதிரைநிருபருக்குள் மின்னலாய் வந்து
கவிதை காற்றை விசிறிவிட்டு
எங்கள் மனங்களை குளிரச் செய்கிறாயே!

உனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக!

லெ.மு.செ.அபுபக்கர்

sabeer.abushahruk said...

ஓட்டுக்கேட்டு ஜெயிச்சதும் காணாமல் போயிட்டாரே கிரவுன் எம் எல் ஏ???!!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

///ஓட்டுக்கேட்டு ஜெயிச்சதும் காணாமல் போயிட்டாரே கிரவுன் எம் எல் ஏ///

எல்லா MLA போல் இருந்தால் தான் பொழைக்க முடியுமாம்.அதனாலே தான்.

crown said...

முகில் மூலம் முயல் வரைந்து
வான்வெளியில் மேய விட்டு
தரை மயிலை ஆட விட்டு
மலை நுனியை முத்தமிட்டு

வண்ண வான வில்லை
வரவேற்பு வளைவாய் த‌ந்து
வேண்டியதை வரைபடமாய்
வரைந்து காட்டும் வான்மேகம்!

ஊருக்குப்போர்வை விரித்து
உள்ளத்தை குளிர வைத்து
மழைத்துளியாய் கரைந்து வந்து
மண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மேகமே!
----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.கற்பனை குதிரையில் ஏறி வான் அடைந்து நல் கவிதை தர முயல , வந்ததோ வான் மழைபோல் கவிதை மழை.குடைபிடிக்கத்தோன்றாமல் சந்தோசமாக நனைந்திடுதே மேனியும் , உள்ளமும்.

crown said...

அன்பின் தாய்,தந்தையரையும்
ஆசை மனைவி மக்களையும்
பிரிந்து அயல்நாடு செல்வோரை
ஆகாய விமானத்தில் முத்தமிட்டு
எம்மை வழியனுப்பும் வான்மேகம்
-----------------------------------------------
அந்தரத்தில் நாம் விடப்படும் போது ஆதர"வாய்" யார்வருவர்?ஆகாயத்தில் , மனக்காயங்களை சுமந்து செல்லும் நமக்கு தன் வாய் மூலம் வான் தருதாம் முத்தம் என்னும் வழியனுப்பும் ஒத்தடம்! .அதனால்தான் உயர்ந்து நிற்கிறாதோ வானாகி? யார் இதுபோல் உதவி நின்றாலும் உயர்ந்திடுவர் வானைப்போல் உயர்தத்துவம்தான் சொன்னதுவோ நைனா உம் கவிதை வரி?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு