Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 2 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 13, 2011 | , , , ,





இதற்கிடையில், உமருக்கு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது! இயற்கையிலேயே உமருக்கு இயற்பியல் பாடத்தில் ஆர்வம் அதிகம். நம் கல்லூரியில் இளங்கலையில் இயற்பியல் பாடம் இல்லை. வேறு வழியின்றி உயிரியல் (Zoology) பாடத்தை எடுத்துப் படித்தார்!

பறவைகள், மிருகங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் அலாதியான ஆர்வம்! உலகிலேயே பறவை ஆராய்ச்சியில் மிகப் பிரபலம் அடைந்திருந்த சலீம் அலி பற்றி என்னிடம் நிறையச் சொல்வார்! இவ்வளவு ஆர்வம் இருந்தும், நன்கு படித்து முதல் வகுப்பில் தேர்வு பெறவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது! நன்கு படித்து, நல்ல வேலையில் சேரவேண்டும் என்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது.ஆராய்ச்சிக்குத் தடை போட்டுவிட்டு,வருவாயைத் தேட முற்படுவதா?’ என்பார். தன்னிடமிருந்து அப்படியெல்லாம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பார்.
கடை நடந்த காலங்களில் பட்டுக்கோட்டைக் கண்ணப்பாவுக்கு உதிரி பாகங்கள்(spare parts) வாங்குவதற்காக அடிக்கடிச் செல்வார். இவருடைய திறமையை அறிந்த கண்ணப்பா முதலாளி, தன் கடையில் வந்து பணி செய்யும்படிக் கேட்டிருந்தார் காலச் சூழ்நிலை, பணி செய்யும்படி அவரை விரட்டியது. முன்பு ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கண்ணப்பாவில் பழுது நீக்கும் பணியில் அமர்ந்தார். 'பிலிப்ஸ்' ரேடியோவின் பழுது நீக்கும் பணி புரிந்தார். அப்போது தொலைக் காட்சி அறிமுகமான காலம்! பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை உமர் இயக்கிக் காட்டினார்!

மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும் என்ற அவா இருந்தது. பொருளாதாரச் சூழ்நிலையையும் மீறிய ஆசை இது! அதைத் தவறு என்று சொல்ல முடியாது. எங்கள் வீட்டில் உள்ளவர்களின் மாத்திரைகளைப் படித்துப் பார்த்து, அதில் உள்ள மருத்துவக் குணங்களைச் சொல்வார்! இணைய தளம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, அதில் போய் மருந்துமாத்திரைகளைப் பற்றியும், நோய்களைப் பற்றியும் அறியும் ஆர்வம் அதிகமாக இருந்தது உமருக்கு!


தனக்கு வந்திருந்த சர்க்கரை நோயைப் பற்றி நிறையப் படித்தார்.ஆராய்ச்சி செய்தார்.

தொடரும்.....                                                                                           
-- உமர்தம்பி அண்ணன் (வாவன்னா)


 பகுதி - 1                                                                                                                          பகுதி -3

10 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அல்ஹம்துலில்லாஹ்.மிதமான பொருளாதார சூழ்நிலையே இந்த அளவுக்கு அறிஞராக்கி இருக்கிறதே,நிச்சயம் டாக்டர் பட்டம் பெறத்தகுதியானவர்கள்.

பொருளாதாரம் மட்டும் நன்கு இருந்திருந்தால் நிச்சயம் கலாமையும் மிஞ்சி இருப்பார்கள் போலிருக்கிறது.எப்படியோ நாயன் விதிப்படி இந்த அளவுக்கு சாதித்து இருக்கிறார்கள்.

அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு பொறுத்தாளக்கூடிய நல் மனப்பக்குவத்தை நாயன் கொடுத்தருள்வானாக!ஆமீன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அன்பிற்கினியவர்களே !

சரித்திர சித்திரம் இரண்டாம் பாகம் வெகுசீக்கிரத்தில் பதிவுக்கு வந்தமை கண்டு ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள், பெரும்பாலானவர்கள் தனி மின்னஞ்சலில் முதல் பதிவினை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று சொல்லியிருந்ததாலும் அதோடு சரித்திரம் புத்தகமாக வெளிவர ஏற்பாடுகள் செய்ய இருப்பதனால், வாசகர்களின் கருத்துக்களும் வலுசேர்க்கும் என்ற நோக்கில்தான் இரண்டாம் பாகமும் சீக்கிரத்தில் பதிவுக்குள் வந்தது.

முதல் பாகம் வாசித்திட இன்னும் அவகாசம் கொடுக்கலாம், அதோடு அடுத்தடுத்த தொடருக்கு குறைந்தது இடைவெளியிடலாமே என்ற பரிந்துரையும் ஏராளமாக வந்திருக்கிறது.

இனிவரும் நாட்களில் வார ஆரம்ப நாட்களில் சரித்திர சித்திரம் பதிவுக்குள் வந்திட வழிவகை செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

உங்கள் யாவரின் மெருகேற்றும் மேலான ஆலோசனைகளுக்கும், ஆதரவுக்கும் எங்கள் நன்றிகள் என்றும் நிலைத்திருக்கும் !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மர்ஹூம் உமர்தம்பி காக்காவின் பக்கத்து வீட்டுக்காரனாக இருந்தும் அவர்கள் பற்றிய அரிய பல தகவல்களையும், ஆராய்ச்சி பலவற்றிற்கு அவர்களின் அர்ப்பணிப்புகளையும் அன்று அறியாமல் இருந்து விட்டு அதை இன்று உலகின் மூலையில் எங்கோ இருந்து கொண்டு மெல்ல, மெல்ல கணினி மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ் அவர்களின் கப்ரை பிரகாசமாக்கி உலகில் கிட்டாமல் போன உயர்பதவியையும், அந்தஸ்த்தையும் சுவனத்தில் தந்தருள்வானாக என து'ஆச்செய்கிறேன்.

அவர்கள் மறைவுக்குப்பின் அவர்களை தொடர்ந்து அவர்களின் மூத்த மகன் மொய்னுத்தீனும் வருங்காலத்தில் பல ஆராய்ச்சிகள் செய்து மாமேதையாகவோ அல்லது பெரும் விஞ்ஞானியாகவோ வர வேண்டும் அவர்களின் தகப்பனார் விட்டுச்சென்ற ஆராய்ச்சி பணிகளை சிறப்புடன் தொடர்ந்து குடும்பத்திற்கும், ஊருக்கும் நல்ல பெயர் ஈட்டித்தர வேண்டும் என்பதே என் நீண்ட நாளைய அவா...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அப்துல்மாலிக் said...

ஆர்வம் அதிகமாகிறது இந்த தொடரை படிப்பதில், நிச்சயம் பொருளாதார சூழ்நிலையால் நம்மூரில் நிறைய உமர்தம்பிகள் உருவாகாமல் போனது வருத்தமே

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தமிழ் இணைய அறிஞர் உமர் தம்பி அவர்களின் சரித்திரம் நமது சமுதாய இளைஞர்களுக்கு ஊக்கமாக அமையட்டும்.

வளர்க அவர்களின் சரித்திரம்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் வீட்டில் டாக்டரிடம் சென்று வந்தவர்கள், உமர்தம்பி மாமா அவர்களிடம் சென்று அந்த மருந்துகளின் விபரம் பற்றி கேட்ட பிறகே அவற்றை உட்கொள்வர். டாக்டர் கொடுத்த மருந்து சரியானதா என்று அறிந்துக்கொள்வது வழக்கம் எங்கள் வீட்டில். டாக்டர் பட்டம் படிக்காவிட்டாலும். குடும்ப மருத்தவராகவே வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களின் சகோதரி (எங்கள் தாயார்) உடல் நிலை சரியில்லாமல் இறுதி நாட்களை நொருங்கிய காலத்தில், வீட்டு மருத்துவராக இருந்து தைரியத்தையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து நோயின் வேதனையை அறியாத நிலையை உருவாக்கினார்கள் என்பதை எங்களால் நிச்சயம் மறக்க முடியாது.அருகில் இருந்த எனக்கு தெரியும் எவ்வகையான ஆறுதல்களும் ஆலோசனைகளும் தந்தார்கள் என்று.

அல்லாஹ் அவர்களின் கப்ரை பிரகாசமாக்கி உலகில் கிட்டாமல் போன உயர்பதவியையும், அந்தஸ்த்தையும் சுவனத்தில் தந்தருள்வானாக என து'ஆச்செய்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

அவர்கள் பிறந்த ஊரில் நாமும் பிறந்தோம் என்பது எமக்கும் பெருமை. எளிமை, நேர்மை, ஆராய்ச்சி, சிந்தனை ஆகிய குணங்கள் அவர்களை உலகத் தமிழர்களின் விரல்களில் ஒருங்குறியாய் அமர வைத்தன. நம்மை எதிர்க்கும் ஊடகம்/ செய்தித் தாள்கள் கூட இவ்விஞ்ஞானியின் வித்தையாம் ஒருங்குறி கொண்டே பயன்படுத்தி எம்மைப் பற்றி எழுத முடிகின்றது என்றால் எல்லார்க்கும் உமர் அவர்கள் உபயோகமானவர்களாக இப்பூவுலகில் வாழ்ந்து சாதித்து மறைந்தார்கள். அவர்களின் பெயரில் கோவைச் செம்மொழி மாநாட்டில் அரங்கம் உருவாக பெரிதும் முயற்சிகள் எடுத்த அத்துணை பேர்கட்கும் குறிப்பாக அன்புத் தங்கை “அன்புடன் மலிக்கா” (கவிதாயினி- நீரோடை) அவர்கட்கும் அவர்களின் தூண்டுகோலால் என்னைப் போன்ற இணய தள கவிஞர்கள், எழுத்தாளர்கள் யாவர்க்கும் நன்றி

”கவியன்பன்” கலாம்

sabeer.abushahruk said...

இந்தச் சரிதை ஒரு சரித்திரமாகட்டும். அவர்களின் சாதனைகளை மட்டும் சொல்லாமல் சிறு பிராயத்துச் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் ஆங்காங்கே சொல்லவும்.

கோர்வையில் விடுபட்டால்கூட நினைவு கூர்வதாக இணைக்கலாம். வாவன்னா சாருக்குச் சொல்லியாத் தரனும்!

Anonymous said...

மற்றவர்களுடைய துன்பங்களை உணர முடியாதவன் மனிதத் தோற்றமுள்ள மிருகம்.

மற்றவர்களை கேலி செய்தால் கூடிய சீக்கிரம் நாமும் கேலி செய்யப்படுவோம்.

முட்டாள் மேலும் தேடிக் கொண்டிருக்கட்டும். நீ இருக்கும் கொஞ்சத்தை அனுபவி.

முட்டாளின் தோழமையை விட ஒருவன் தனியாக வாழ்வதே மேலானது.

தயங்கித் தயங்கி நிற்பவனை வாழ்க்கை ஒரு போதும் திரும்பிப் பார்ப்பதில்லை.

மு.செ.மு.அபூபக்கர்

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் அபூபக்கர். தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நீங்கள் பதிந்தவை நல்ல செய்திகள் என்றாலும் பதிவுக்கு தொடர்புடைய பின்னூட்டங்களை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் நீங்கள் பதிவாக கூட அனுப்பலாம் அதிரைநிருபர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாமே editor@adirainirubar.in.

தொடர்ந்து இணைந்திருங்கள்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு