Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுயம் அறிக ! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | April 15, 2012 | , , ,

அடைப்புக் குறிகளுக்குள்
அடங்கிப்போக
உபரித் தகவலா நீ?

கடைசிப் பக்கம் வரை
புதிரோடு தொடர
மர்ம நாவலா நீ?

மொத்தக் கருத்தையும்
சுருக்கி அடக்கிய
தலைப்பு அல்லவா நீ!

ஒவ்வொரு பக்கமும்
அர்த்தங்களாம் கவி
தொகுப்பு அல்லவா நீ!

            -00-

பிரயோகித்தப் பின்னர்
உரித்து வீச
பாம்புச் சட்டையா நீ?

பாதங்களின் அடியில்
உழைத்துத் தேய
மிதியடிக் கட்டையா நீ?

பாருக்குத் துணியாக்க
பஞ்சை நூலாக்கும்
ராட்டை யல்லவா நீ!

சண்டாளர் சதிமுறித்து
சரியாக்கச் சொடுக்கும்
சாட்டை யல்லவா நீ!

           -00-

பின்னொரு சமயம்
பார்க்கலாம் என்று
பேழைக்குள் பதுங்கும்
கோழையா நீ?

இன்னொரு உபயம்
ஈவோரிடம் எதிர்நோக்கும்
இழிந்த பிறவியா நீ?

சூடாறும் முன்பே
சுழட்டி அடிக்கும்
சுத்தியல் அல்லவா
உன் புத்தி!

ஈடேறும் வரை
எண்ணங்களைச் சுமக்கும்
உக்தி யன்றோ
மெய் சக்தி!

            -00-

நொடிக்கொரு தரம்
அழிக்கவும் எழுதவும்
சுண்ண எழுத்தா
உன் தலையெழுத்து?

கண்மூடிய பின்னரும்
கம்பீரமாக நிலைக்கும்
கல்வெட்டு அல்லவா
உன்னெழுத்து!

வெம்மையாய் திலங்கும்
சூரியனுக்குள்
வானவில்லொன்று
ஒளிந்திருக்கிறது

உண்மையாய்த் துவங்கும்
காரியங்களுக்குள்
வாழ்க்கையின் வெற்றி
பொதிந்திருக்கிறது.

-சபிர்

23 Responses So Far:

Yasir said...

நீண்ட்ட்ட்ட்ட்ட் நாள்களுக்கு பிறகு.....கவிப்பாலை மொட மொடவென்று ஒரு சக்தியுடன் குடித்த திருப்தி......உணர்ச்சி அலைகள் உடம்பெல்லாம்

//சூடாறும் முன்பே
சுழட்டி அடிக்கும்
சுத்தியல் அல்லவா
உன் புத்தி /// வாவ்

Yasir said...

//உண்மையாய்த் துவங்கும்
காரியங்களுக்குள்
வாழ்க்கையின் வெற்றி
பொதிந்திருக்கிறது./// உண்மையாய் நல்லெண்ணதுடன் துவங்கும் வாழ்கையில் நிச்சயம் வெற்றிமேல் வெற்றி இருக்கின்றது

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

புறா தண்ணீரில் நிற்க்கிறதா அல்லது கண்ணாடியில் நிற்க்கிறதா? என தெரியவில்லை என்றாலும்.

நமக்குள் புதைந்து கிடக்கும் பொற்கற்கள்.கவி காக்காவின் வார்த்தைகளில் சிதறிக்கிடக்கின்றன.என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

Noor Mohamed said...

படம் பார்த்து கதை சொல் என்றால் நான் இப்படித்தான் கூறுவேன்;

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி.

'அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்பது புலவர் மொழி.

//சுயம் அறிக !// என்பது தம்பி கவிக்குரல் சபீர் அவர்களின் புது(கவிதை) மொழி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கணினி மூடிய பின்னரும்
கம்பீரமாக நிலைக்கும்
கல்வெட்டு அல்லவா
உங்கள் கவியெழுத்து!

கவிக்குரல் சூப்பரு!

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ.,சபீர் கவிதையில் என்றும் ஒரு சிறப்பு உண்டு.கடைசி வரியிலிருந்து
தொடங்கிப் படிக்கவும் முடியும்.கவிதைக்கு ஏற்ற படம்.
[ ஆமா.....இந்த பறவை உள்ளான் வகையா...........?]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காத்துக் கடந்து
கனிந்த கவிதை- இது !

பொறுமை அதிகம்
என்னைப் போன்று - இப்படி !

யார் மனத்தில்
தோன்றும் இதுபோல் - சுயம் அறிக !

Ebrahim Ansari said...

தனிப்பட்டவர்கள் ஒவ்வொருவரிடமும் மறைந்து கிடக்கும் சுய ஆற்றலை தோண்டிப்பார்க்கத்தூண்டும் கவிதை. உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் (மனிதருக்கு)தலை வணங்காமல் நீ வாழலாம் என்று எங்கோ இளம் வயதில் கேட்டதை மீண்டும் நினைவூட்டும் கவிதை.

பல நாள் காத்து கிடந்ததற்கு பலனாக நன்கு பழுத்து, கனிந்து நமது கைகளில் கிடைத்து இருக்கிறது.

வெறும் வார்த்தைகளால் உங்களுக்கு வாழ்த்து சொல்ல முடியாதுதான் ஆனால் வேறு வழி? வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

ZAKIR HUSSAIN said...

//ஆமா.....இந்த பறவை உள்ளான் வகையா...........?//

நம் ஊர் பக்கம் "காவா' என்று சொல்வார்கள்.

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

பாறைக்குள் இருந்தும் பூக்கள் பூக்கும் ஆக்கம் மாதிரி எங்கிருந்து இப்படி வருகிறது??

சிலர் தன்னை நினைத்து நொந்துகொண்டு இருக்கும் போது படிக்க வேண்டிய பல வரிகளை உன் கவிதை தனக்குள் வைத்து இருக்கிறது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சபீர் காக்காவின் கவிதையை அந்த கடல்காகமே எழுத்துக்கூட்டிப படிக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!!!

ஜாஹிர் காக்காவுக்கு, உள்ளான்குருவியின் உடல் அடிக்கடி ஜிம்முக்கு போய் வருவது போல் ஸ்லிம்மாக இருக்கும். இது நமதூர் களரி சாப்பாடு திண்ட(வெள்ளை)காக்கை போல் அல்லவா இருக்கிறது? காக்கா, நீங்கள் உள்ளாங்குருவியை பார்த்து வெகுநாளாச்சா? இப்பொழுது எங்கெயெல்லாம் அதை திண்ங்க மாட்டாங்களோ அங்கே அது அடைக்கலம் புகுந்து விட்டது.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாஹிர் காக்கா சொன்னது;

// நம் ஊர் பக்கம் "காவா' என்று சொல்வார்கள். //

சவூதி காரவங்களும் " காவா " என்ற சொல்லை பயன்படுத்துவார்கள்.ஆனால் பறவைக்கு அல்ல ஏலக்காய் பொடி பயன் படுத்துகிற பானத்திற்கு.

அலாவுதீன்.S. said...

/// உண்மையாய்த் துவங்கும்
காரியங்களுக்குள்
வாழ்க்கையின் வெற்றி
பொதிந்திருக்கிறது.////

உண்மைதான்!

சுயத்தை அறிவதற்கு
நல்லதொரு அழகிய கவிதை!
வாழ்த்துக்கள்!

Shameed said...

//உண்மையாய்த் துவங்கும்
காரியங்களுக்குள்
வாழ்க்கையின் வெற்றி
பொதிந்திருக்கிறது//

உண்மையிலும் உண்மை

KALAM SHAICK ABDUL KADER said...

கண்மூடிய பின்னரும்
கம்பீரமாக நிலைக்கும்
கல்வெட்டு அல்லவா
உன்னெழுத்து!

அதிரை சித்திக் said...

ஆஹா ,,ஒவ்வொரு வரியும் அற்ப்புதம் ....

பரீட்சைசைக்கு போகுமுன் இந்த கவிதையை மாணவனிடம் படித்து காட்ட வேண்டும். தடகளத்தில் போட்டியிடும் விளையாட்டு வீரனிடம் போட்டிக்கு போகுமுன் படித்து காட்ட வேண்டும்.. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் படிதுக்காட்டவேண்டும் ....சங்க காலமாக இருந்தால் போர்வீரனிடம் படித்து காட்ட வேண்டும்... ஏன் வாழதெரியாத கோழையிடம் படித்து காட்டாட்டினால் வீரம் பிறக்கும் வாகை உண்டாகும் இந்த கவிதையை இருபத்தி ஐந்து வருசத்திற்கு முன் நான் படித்திருந்தால் இன்னும் சில படிகள் மேலே சென்றிரிப்பேன் ..அபாரம் ..அபாரம் ...இந்த கவிதை மின் பிம்பத்தில் மட்டுமில்லாது அச்சு பேழையில் அவசியம் வர வேண்டும் ....பொய்துறந்த ..இக்கவியை கண்டு மெய்மறந்தேன் .தமிழூற்று..அதிரைசிதீக் ....

அப்துல்மாலிக் said...

//புறா தண்ணீரில் நிற்க்கிறதா அல்லது கண்ணாடியில் நிற்க்கிறதா? என தெரியவில்லை //

பக்கர் கல்லைவிட்டு எறிஞ்சிப்பார் தெரியும் :))


சபீர் காக்கா, வார்த்தை கோர்வை அருமை, எங்கேர்ந்துதான் புடிக்கிறீங்க, ரகசியம் சொல்லமுடியுமா

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அப்துல் மாலிக் சொன்னது;

// பக்கர் கல்லைவிட்டு எறிஞ்சிப்பார் தெரியும் :))//

கல்லைவிட்டு எறிந்தால் எங்கே தெரிவது மானிட்டர் உடைந்து மொவுதா போன வீடுமதிரியிலே இருக்கும்.

ZAEISA said...

அன்புள்ள நெறியாளர் அவர்களே,
இந்தக் கொடுமையை கேட்டிங்களா........
நான் புறாவாம்,அதுவும் தண்ணியில நிக்கிறேணாம்.இப்ப சொல்லுங்கோ
தண்ணியில நிக்கிறது நானா............................

இப்படிக்கு,
கடல் காவா

Anonymous said...

//இப்படிக்கு,
கடல் காவா //

ஆஹா !
சுயம் அறிந்து கொண்டீரே...... !

னா.காவன்னா ஹாக்கா !

sabeer.abushahruk said...

விரும்பி வாசித்த சகோதரர்களுக்கு நன்றி.

Unknown said...

சூடாறும் முன்பே
சுழட்டி அடிக்கும்
சுத்தியல் அல்லவா
உன் புத்தி!
---------------------
Very power Full

அன்புடன் புகாரி said...

அத்தனை வரிகளிலும் நம்பிக்கைத் தேன் பொத்தி வைக்கப்பட்டிருக்கிறது சபீர், வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு