Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுனாமி அச்சம் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 11, 2012 | , , ,


தமிழகத்தில் பரவலாக இன்று (11-ஏப்ரல்-2012) மதியம் 02:19 மணியளவில் சென்னை மற்றும் இதர பெரும் நகரங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக சுனாமி பாதிப்பு உருவாகுமோ என்ற அச்சமும் ஆட்கொண்டுள்ளது.

இன்று காலை சுமார் 08:30 மனியளவில் இந்தோநேஷியாவின் சுமத்ரா தீவில் ரிக்டெர் அளவு 8 க்கு மேல் கடலுக்கு அடியில் 459 கி.மீ.தூரத்தில் அதிர்வு உணரப்பட்டதால் அங்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக கடற்கரை மாவட்டங்களில் கண்கானிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்படுள்ளது.

இன்று அதிரையில் மாலை சுமார் 4:00 மணியளவில் காவல் துறையினரால் மக்கள் பீதியடையாமல் பாதுகாப்பாக இருக்கும்படியும் பொது அறிவிப்பாக சுனாமி எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது பயமுறுத்த அல்ல, பாதுகாப்புடன் முன்னெச்சரிக்கையாக இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிரையிலிருந்து சகோதரர்கள் தொடர்பில் தொடர்ந்து இருப்பதால் மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம், இதுவும் இறைவனின் நாட்டம்தான். நாம் நம்முடைய நற்கருமங்களில் கவனமெடுத்து சுயபரிசோதனை செய்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

எந்நேரமும் அல்லாஹ்வை நினைத்தவர்களாக இருப்போம் பேரிடர்கள் வருவதும் அந்த நேரத்தில் மட்டும்(!!) அச்சம் கொண்டு கலங்குவதும் இயல்பே, ஆனால் எல்லா தருணங்களிலும் அல்லாஹ்வின் அச்சமும் அவனின் பாதுகாப்பும் நாடியே நமது தேட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக !

இன்ஷா அல்லாஹ் !

-அதிரைநிருபர்குழு

7 Responses So Far:

சேக்கனா M. நிஜாம் said...

இந்தியாவில் “சுனாமி” எச்சரிக்கை வாபஸ் !

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை இந்தியா வாபஸ் பெற்றுக் கொண்டது. எனினும் அதிகாரிகள் முழு உஷார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறைச் செயலர் ஆர்கே.சிங் கூறுகையில், நிகோபரைத் தவிர மற்ற இந்திய கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது

sabeer.abushahruk said...

சுனாமி என்றாலே குலைநடுக்கம்தான்.ஆலை வராமல் பய அலை ஓய்ந்ததே நலம். ஜப்பானில் சுனாமி நினைவிருக்கா

சப்பானில் சுனாமி:

விதி
தன்
மதியைக் கொண்டு
திட்டமிட்ட
சதியோ இது!

கடல்
கருணை அல்லவா-
சுருட்ட மட்டும்
சுனாமி எனும்
பினாமி பெயரா?

சற்றே எழுந்தாலும்
சமனப்படும்
சப்பானியர் உயரம்
இத்தனை அடிகள்
எழுதல் அவசியமா?

எங்கோ நிகழ்கிறது
எனினும்
இங்கே நெகிழ்கிறது
இதயம்!

கால்கள்
நனைத்த
செல்ல அலைகள்
கழுத்தை
நெறித்து
கொல்ல எழுந்தனவே!

எழுந்த அலைகள்
விழுந்தன தலையில்
அழுந்தத் துடைத்து
அழித்தது நிலத்தை!

உயிர்களும்
உறையுளும்
உடமையும்
ஊர்திகளும்
அழுக்கா என்ன-
அவசர அவசரமாக
அலைகள்
அடித்துத் துவைக்க?

ஊருக்குள்
ஊடுருவும் காட்சிகளில்
உயிருறுஞ்சும் வேட்கை...
சப்பானியர் மட்டுமல்ல
சுறுசுறுப்புக்கு
எடுத்துக்காட்டு-
சப்பானில் சுனாமியும்!


இறைவா,
இழந்தவர்களுக்கு
இதயத்தில் அமைதி கொடு...
இனியொரு
சுனாமி எனில்
கரைகளுக்குள் இருக்கட்டும்.

உன்னைக்
கெஞ்சிக் கேட்கிறோம்
இனியும் வேண்டாம்
எல்லை தாண்டிய ...!


- சபீர்

KALAM SHAICK ABDUL KADER said...

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமல் இறைவன் தண்டிக்க மாட்டான்; அடிக்கடி இதுபோன்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தும் கரையிலும் தரையிலும் பாவங்கள் மிகைத்த வண்ணமே உள!

KALAM SHAICK ABDUL KADER said...

ஆர்ப்பரித்த கடலே-நீ

ஆள்பறித்த கடலானாய்

கடவுளின்கட்டளையால்

“சுனாமி”யானாய்

கடவுளின் கட்டளை மறந்து

சாத்தானின் “பினாமி”யானோம்

கடவுளுக்கு பயந்த நீ அப்பாவி;

கடவுளை மறந்த நாங்கள் பாவிகள்

மோசஸின் தடிக்கு பிளந்ததும்;

மோசமான எங்களை அளந்ததும்

கடவுளின் கட்டளைதான் கடலே

உடலை ஆட்டுவது உயிர்தானே

“கரையிலும் கடலிலும் பாவமிகுதியால்

இறையின் தண்டனை உண்டு”

அபாயச் சங்கு வேதம் முழங்கியும்

அபாய அறிவிப்பின்றி வந்தாய் என்று

உபாயம் தேடி உளறுகின்றோம்;

நியாயம் தேட மறுக்கின்றோம்



“கடல்மீது அனுதாபங்களுடன்”

“கவியன்பன்”,கலாம்- அதிராம்பட்டினம்

அதிரை சித்திக் said...

iகுடும்ப சண்டையில் அடுத்தவன் தலையிட்டால் குடும்பசண்டை மறந்து நீ இதில் தலையிட தேவையில்லை என்பான் இருவேறு தெருவினர் சண்டையிட்டுக்கொண்டால் மாற்றுமதத்தினர் தலையீடு வரும்போது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்பர் நாட்டிற்கு ஒரு பிரச்னை அன்னிய நாடு கொடுக்க நினைத்தால் மதம் இனம் வேறுபாடின்றி எதிர்ப்போம் ஆனால் ..,ஒட்டுமொத்த மனித அழிவிற்கு காரணமாக திகழும் இயற்க்கை சீற்றங்களுக்கு மட்டும்தான் மத இன நாடு என எந்த பாகு பாடின்றி எப்படி சமாளிப்பது என்று கூடுவதும் நிவாரணம் அளிக்க முன் வருவதையும் காண்கிறோம் ...எனவே நம்மை ஒற்றுமையாக இருக்க சொல்லியே சுனாமி போன்ற சீற்றங்கள் மனித இனத்திற்கு எச்சரிக்கை செய்க்கிறதுஎனலாம் மனிதன் தனது சூழ்ச்சியால் மக்களை கொன்று குவிப்பது ஆயுத பலத்தால் கொன்று குவிப்பது எல்லாம் தனது வெற்றி என குதூகளிப்பதை என்ன வென்று சொல்வது இறைவனின் பிடி இறுகினால் நான் பெரியவன் நீ பெரியவன் என்பதெல்லாம் காணாமல் போய்விடும் ...அதிரைசித்தீக் .தமிழூற்று ஆசிரியர்

அலாவுதீன்.S. said...

சுனாமி வந்து பூமி குலுங்கியதாம் : என் ரூம் நண்பர்கள் பேசிக் கொண்டது. இந்த அரசியல் வியாதிகள் ஒட்டு மொத்தமாக பாராளுமன்றத்திலும்,நாடாளுமன்றத்திலும் குழுமி பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அப்படியே அந்த கட்டிடம் மட்டும் பூமியில் புதைந்து போய் மறுநாள் இந்தியாவின் அநியாயக்கார ஆட்சியாளர்கள் அனைவரும் பூமியில் புதைந்து விட்டார்கள். இறைவனால் அவர்களுக்கு சரியான தண்டனை தரப்பட்டது என்று பத்திரிக்கைகளில் செய்தி வரவேண்டும் என்று நேற்றுதான் பேசிக் கொண்டார்கள்.
**************************************************************************************


///// எந்நேரமும் அல்லாஹ்வை நினைத்தவர்களாக இருப்போம் பேரிடர்கள் வருவதும் அந்த நேரத்தில் மட்டும்(!!) அச்சம் கொண்டு கலங்குவதும் இயல்பே, ஆனால் எல்லா தருணங்களிலும் அல்லாஹ்வின் அச்சமும் அவனின் பாதுகாப்பும் நாடியே நமது தேட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ! ////

**********************************************************************************
அறிகுறி தென்பட ஆரம்பித்து விட்டது. நாம் நமது நிலைமைகளை கண்டிப்பாக குர்ஆன், நபிவழிப்படி சீர் செய்து கொள்ள வேண்டும். அதிகமதிகம் பாவமன்னிப்பு தேட வேண்டும். அனைத்துவிதமான அகால மரணங்கைள விட்டும் நம்மை பாதுகாக்க அல்லாஹ்விடம் துஆச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அதிரை சித்திக் said...

மனிதனிடம் நடந்த சம்பவங்களை மறக்கும் தன்மையும் ,தான் முன்னேற வேண்டும் என்ற வேட்கையும் எவ்வளவு பெரிய சோதனைகளையும் மறக்ககூடியதாக இறைவன் நமக்கு அளித்துள்ளான் எவ்வளவு பெரிய புன்னையும் ஆற்றக்கூடிய தன்மை காலத்திற்கு உண்டு .என்பதை நாம் கால சுழற்சியில் கண்டு வருகிறோம் .இயற்கை சீற்றங்களை நல்ல பாடமாக வாழ்வியலிலும்வாயிலாகவும் ஆன்மீகத்தின் வாயிலாகவும் எடுத்துக்கொண்டால் நாம் வருங்காலத்தை சீராக கொண்டுசெல்லலாம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு