Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நயவஞ்சகத்திற்கு – பகிரங்க எச்சரிக்கை ! 86

அதிரைநிருபர் பதிப்பகம் | April 24, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அதிரைக்கென்று இருந்த பாரம்பரியம், கம்பீரம், மார்க்கப் பற்றில் இருந்த பிடிப்பு, அதற்கென்று கட்டுண்டு இறையச்சத்தைப் பேணுபவர்கள் என்ற தகுதிகளைத் தகர்த்தெரியப் புறப்பட்டிருக்கும் நயவஞ்சகச் செயல்களுக்கு பகிரங்க எச்சரிக்கையாக இந்த பதிவு. இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமாக நம்முடைய சகோதரர்கள் சிலர் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்காகவும், கவுரவத்திற்காகவும் சத்தியத்தை எடுத்துரைக்கும் மார்க்க பிரச்சாரகர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்கள். அவர்களின் இந்த சூழ்ச்சிக்கு நமதூருக்கு குடிபெயர்ந்து வந்த ஒரு மார்க்க பிரச்சாரகர் தற்போது இரையாகிவிட்டார்.

ஷிர்க் பித்அத்துக்களைப் பகிரங்கமாகவும், வன்மையாகவும் கண்டித்து எதிர்த்த கண்ணியத்திற்குரிய மர்ஹூம் அலீய் ஆலிம் அவர்கள் வாழும் காலத்தில் ஏளனமாக பேசிய அதே கூட்டம் தான் இன்று இந்த மார்க்க பிரச்சாரகரையும் ஏளனமாக பேசி, அவரை அதிரையை விட்டு விரட்ட முயற்சி செய்கிறார்கள். காரணம், அவர் தர்கா வழிபாடு, இணை வைப்பு, வட்டி, மவுலத்து, தாயத்து, தட்டை போன்ற பிற மத கலாச்சாரங்களை, பித்அத்து அனாச்சாரங்களைப் பகிரங்கமாகக் கண்டித்துது மட்டுமின்றி, எதிர்த்தும் வந்துள்ளார், தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறார்.

யார்? எங்கு? எப்போது? என்னவெல்லாம் உரையாடினார்கள், எவ்வளவு பாதகமான காரியங்கள், என்னவெல்லாம் சூழ்ச்சிகள் செய்தார்கள், என்பதை வெளியில் கொண்டு வருவது மிக மிக எளிது என்பதை இவர்கள் அறியவில்லையா ?. மேலும் சூழ்சிக்காரர்களின் அநீதி மிகுந்த வாதங்கள், ரகசிய ஆலோசனைகள் இவற்றை வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் உதவியுடன் சத்தியத்துக்கு எதிராக திரளும் இந்தக் கூட்டத்தின் சதிகளை இறையச்சமிக்க மக்கள் முன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்குகிறார்கள்.

உண்மையை உரக்கச் சொல்லும் ஆலிமை ஊரைவிட்டு துரத்தும் முயற்சிக்குப் எதிராக பல வகையில் சூழ்ச்சிகள் செய்யப்படுகிறது, சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். சத்திய இஸ்லாத்திற்காக எதிராக சூழ்ச்சி செய்யும் அக்கிரமக்காரர்களை அல்லாஹ் எப்படி இவ்வுலகில் கேவலப்படுத்தி இருக்கிறான் என்ற வரலாற்றை எந்த ஒரு மனிதனாலும் மறுக்க முடியாது.

கடந்த சில வருடங்களாக நமதூர் வாசிகள் அனைவரும் அவதானித்து வருகிறார்கள், குறிப்பிட்ட ஓர் ஆலிம் அவர் வெளியூரிலிருந்து வந்தவர் என்ற காரணத்தாலும், சத்தியத்தை உள்ளது உள்ளபடி உள்ளூரில் இருக்கும் மார்க்க பிரச்சாரகர்கள் பகிரங்கமாக எதிர்க்க, சொல்லத் தயங்கும் விஷயங்களை எடுத்துச் சொல்லி வந்த காரணத்தாலும் அவரை படாதபாடுபடுத்தி வருகிறார்கள் நம் அதிரை மண்ணின் மைந்தர்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விளக்கம் கேட்கும் அமர்வில் சம்பத்தப்பட்ட மார்க்க பிரச்சாரகரின் மார்க்க சொற்பொழிவில் தவறேதும் இல்லை என்று ஒத்துக் கொண்டவர்கள், தற்போது அதே மார்க்கப் பிரச்சாரகருக்கு எதிராக நிற்பவர்களுக்கு உதவியும், ஊக்கமும் கொடுத்துவரும் நமது சகோதரர்களின் நிலைபாட்டை எந்த வகையில் சேர்ப்பது !?. 

அன்று அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட விளக்கங்களில் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஆலிமைப் பற்றி சொன்னது, “ அவரின் பயானில் தவறில்லை”, “அவர் எங்களை அவமதித்தார்”, “பயான் தடை நடவடிக்கை தற்காலிகம் அல்ல”, “அந்த தீர்ப்பை மாற்றவே முடியாது” என்றும். “அவருக்கு மன்னிப்பு கிடையாது”. குறிப்பிட்ட நபரின் மீதான தனிப்பட்ட விரோதமே அந்த மார்க்க பிரச்சாரகரின் மீது நடவடிக்கை எடுக்க காரணம் என்று முரண்பட்ட வார்த்தை சிதறல்கள் ஏராளம் ஏராளம்.

இவர்கள் இன்னும் ஒருபடி மேலேச் சென்று சம்பத்தப்பட்ட மார்க்க பிரச்சாரகரின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும், அங்கே அடிதடி ஏற்பட வேண்டும் என்ற சமூக விரோதச் செயலை செய்ய அப்பாவி லெப்பைமார்களை உசுப்பேற்றியது. அதோடு அல்லாமல் அங்கே குளிர் காய நினைக்க முயன்றவர்களின் நயவஞ்சகச் சதித்திட்டங்களையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்த இவர்களின் அன்றைய சூழ்சிக்கு, கீழ்கண்ட செயல்களே சாட்சி.
  • லெப்பைக் குடும்ப சகோதரர்களைத் தூண்டி, ஆலிமுக்கு எதிராக முக்கியமான தெருக்களின் ஜமாத்திற்கு சென்று மனு கொடுக்க வற்புறுத்தல் செய்யப்பட்டிருக்கிறது. 
  • அவர் மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டாம் என்றும், எங்கள் பிழைப்பில் அடித்துவிட்டார் என்று மற்ற தெரு ஜமாத்துக்களிடம் மனு கொடுங்கள் என்று லெப்பைக் குடும்ப சகோதரர்களுக்கு ஆலோசனை வழங்கியது. 
  • சத்திய பிரச்சாரத்துக்கு எதிராக அரசாங்க உதவியை நாடலாமே என்று யோசனையை லெப்பை மார்கள் வழங்கியது.
  • ஊரில் ஏகப்பட்ட இயக்கங்கள் இருக்கும் போது லெப்பைகளின் நலனுக்காக ஏன் சங்கம் இல்லை? என்று கேள்வி எழுப்பி பிரச்சினையை மேலும் பெரிதாக்க முயன்றது.
  • தக்வா பள்ளியில் நடைபெறும் பயானில் லெப்பைமார்கள் பிரச்சினையை ஏற்படுத்தினால் ஆலிமை ஊரைவிட்டு துரத்திவிடலாம் என்ற யோசனையை முன் வைத்தது. 
  • பிரச்சினை முற்றிப்போய் வெட்டு-குத்து வந்தால் யார் பொறுப்பு என்று அச்சத்துடன் கேட்ட ஒரு லெப்பை சகோதரரிடம், “அதெல்லாம் பயப்படத் தேவையில்லை” என்று தைரியம் சொன்னது.
  • தக்வா முஹல்லாவாசி என்ற பெயரில் தக்வா பள்ளியின் அன்றைய கமிட்டித் தலைவரிடம் “நான் பிரச்சினை செய்வேன்” என்று மிரட்டியது.
மேலே சொல்லப்பட்டவைகள் பதிவுக்கு என்று எழுதப்பட்ட வரிகள் அல்ல அத்தனையும் உண்மை, அவர்கள் அவ்வாறு செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்ளை ஆய்வு செய்த பின்னரே இதனை பொதுவில் வைக்கிறோம்.

அறிந்தோ, அறியாமலோ நம்முடைய சகோதரர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவும், ஒரு சிலரை பழிவாங்குவதற்காகவும் தூய இஸ்லாமிய நெறிமுறைகளைப் புறந்தள்ளி. சத்தியப் பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை குறிவைத்து தங்களின் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார்கள்.

இனியும் ஏகத்துவ சத்திய பிரச்சாரத்துக்கு எதிராக மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்களில் தொடர்புடையவர்கள், அவர்கள் செய்ததது தவறு என்று திருந்த வேண்டும். மேலும் மேலும் பிரச்சினை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இவர்கள் யார் இதனைச் சொல்ல நாங்கள் இப்படித் தான் இருப்போம். இன்னும் பல சூழ்ச்சிகள் செய்வோம், பழிவாங்குவோம் என்று இன்னும் வீராப்பு காட்டினால், இதுவரை பொறுமையைக் கையாண்டு வரும் சகோதரர்களின் மேலும் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் அதிலும் மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களுக்கான ஆதாரங்களைப் பொதுவில் வைக்கப்படும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து, இனியும் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க முயற்சிக்கட்டும் என்றும் பகிரங்க எச்சரிக்கையாகவே இங்கே பதிகிறோம். 

அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

சூழ்ச்சிகள் செய்யும் அன்பர்களே உங்களின் மறைவானவற்றையும், வெளிப்புறங்களையும் அல்லாஹ் கண்காணிக்கிறான், மலக்குமார்கள் கண்காணிக்கிறார்கள், அத்தோடு மனிதனால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நயவஞ்சக கூட்டத்திற்கு நாளை கபுரிலும் வேதனையுண்டு, மஹ்சரிலும் வேதனையுண்டு, நரகத்தின் அடிதட்டில் நிச்சயம் இடம் உண்டு என்பதையும் நினைவூட்டுகிறோம். 

அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.

யா அல்லாஹ் நாங்கள் எல்லோரும் இவ்வுலகின் அற்பமான சுயநலனுக்காக எவ்வளவோ தவறுகள் செய்கிறோம், அதனை மன்னித்து எங்களை நேர்வழி படுத்துவாயாக! 

யா அல்லாஹ் உன்னை மட்டுமே வணங்கும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக!

வேறு எந்த தனிமனிதனின் திருப்திக்காக வாழும் நயவஞ்சகர்களாக எங்களை ஆளாக்கிவிடாதே!

எங்கள் அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக!

அதிரைநிருபர் பதிப்பகம்

86 Responses So Far:

Yasir said...

அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும். இன்ஷா அல்லாஹ். அல்லாஹூ அக்பர்

Mohamed Abdul Khadir Thaseen Kamal said...

69:18. (மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.

Adirai pasanga😎 said...

நல்லதை ஏவி தீமையை தடுத்து குரான் ஹதீஸ் வழியில் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப சொற்பொழிவு நிகழ்த்திவரும் மேற்படி மவ்லவி அவர்களை தங்களின் சுய ஆதாயம் மற்றும் மார்க்கம் பேணாத சில முனாபிக் வாதிகள் அவர்களை வெளியேற்ற நினைக்கிறார்கள் . இவர்கள் வாயளவில் தான் அல்லாஹ் மார்க்கம் என்று பேசுகிறார்கள் . இவர்கள் மறைப்பதையும் வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிவான்.
சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட இவர்களே காரணம். இவர்களே நயவஞ்சகர்கள் - முனாபிக்குகள் . இவர்கள் தான் இறை நிராகரிப்பளர்களோடு மறைமுக உடன்படிக்கை செய்து கொண்டு உண்மை சமுதாயத்திற்கு எதிராக செயல் படுகிறார்கள் - இவர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அல்லாஹ் சூழ்ச்சியாளர் களுக்கு எல்லாம் மேலான சூழ்ச்சியாளன்.

Unknown said...

وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

Unknown said...

Assalamu Alaikkum
Dear brothers and sisters,

Allah Subhaanawathaala knows the real facts about the controversies over there.

I would like to know if there are any other Alims from our town who are having similar commanding in speech and genuine preaching.

I wish there should be more and more Alims with effective and commanding in speech and genuine preaching to impact the minds that would make positive changes in our community. InshaAllah.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

عبد الرحيم بن جميل said...

/அல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.
யா அல்லாஹ் நாங்கள் எல்லோரும் இவ்வுலகின் அற்பமான சுயநலனுக்காக எவ்வளவோ தவறுகள் செய்கிறோம், அதனை மன்னித்து எங்களை நேர்வழி படுத்துவாயாக!
யா அல்லாஹ் உன்னை மட்டுமே வணங்கும் நன்மக்களாக எங்களை ஆக்குவாயாக!/
Insha allah they will realise their mistakes soon!Allah will guide them to follow right way

sabeer.abushahruk said...

அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும். இன்ஷா அல்லாஹ். அல்லாஹூ அக்பர்

Adirai pasanga😎 said...


ஏகத்துவ சகோதரர்கள் அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியில் தயவுசெய்து கருத்து வேறுபாடுகளை ஓரங்கட்டிவிட்டு அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிராக செயல்படுபவர்களை ஒன்றுபட்டு எதிர்கொள்ளுங்கள். அமைப்புக்கள், இயக்கங்கள் என்று பிரிந்து செயல்படுவதினால் அவைகளுக்குள் கட்டுண்டு கிடப்பதனால் பித் அத்வாதிகள், பிற்போக்குவாதிகள் மூலமாக சமுதாயம் சீர்கேடுகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் பல மோசமான விளைவுகள் ஏற்பட காரணமாகிவிடும். எனவே அன்புகூர்ந்து உடனடியாக ஒன்றுகூடி ஒரு நல்ல முடிவினை எடுத்து சமுதாயம் சீர்பெற முயற்சி செய்யுங்கள். இன்ஸா அல்லாஹ்.

//அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.//

இது சொல்லில் மாத்திரமல்ல செயலிலும் காட்டவேண்டிய தருணத்தில் தற்போது நாமனைவரும் இருக்கின்றோம்.

Unknown said...

ஏகத்துவத்திற்கு எதிராக செயல்படும் சில அறிவிலிகள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளட்டும்.பதவியும் பணமும் பட்டமும் பெருமையும் நிரந்தரமல்ல.கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞருக்கு தக்க கண்ணியம் கொடுக்கப்பட வேண்டும்.பள்ளி மற்றும் மார்க்கம் சார்ந்த விசயங்களை நம் சமுதாயத்தவர்கள் பேசி முடித்து கொள்ள வேண்டும் போலீஸ் ஸ்டேஷன் செல்வது ஆரோக்கியமானதுஅல்ல
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”. 59:10
--------------------
இம்ரான்.M.யூஸுப்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரை காவல் துறை சுமுகமாக பேசி தீர்க்கும் அளவுக்கு நம்மவர்கள் மிக கீழ்தரமாக ஆகிவிட்டார்களே! தலைகுணியும் அவல தருனம் இது.

ஜமாத்துல் உலமா சபை என ஒன்று நேர்மையான முறையில் இருந்தால் நிர்வாக திருப்திக்காக உடனடியாக அந்த ஆலிமிடம் ஒரு அனுமதிக்கான விண்ணப்பம் பெற்று எந்த மறுப்பும் இல்லாமல் வழக்கம் போல பயான் செய்ய அனுமதி வழங்கி புதுநிர்வாகிகளின் பெருந்தன்மையை காட்டி களங்கம் போக்கிட வேண்டும்.

காவல் துறையின் தலையீடு மஸ்ஜிதுக்கு வேண்டாம்.
கம்பீர குரல் ஆலிமின் சாபம் நிர்வாகத்திற்கு வேண்டாம்.


Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.//

நாளை மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை இணைவைப்பவர்களுக்கும்,நயவஞ்சர்களுக்கும் கிடையாது என்பதை வஞ்சகர்கள் தெரிந்துக்கொள்ளட்டும்.

முதலில் உலமா சபையை கலைத்து விட்டு ஊரில் உள்ள தரமான மார்க்கத்தை கற்றுவந்த இளம் உலமாக்களை கொண்டு உலமா சபை ஏற்ப்படுத்த வேண்டும்.

யா அல்லாஹ் அளவுக்கு அதிகமான செல்வத்தை விட்டும்,அதிகாரத்தின் மமதையை விட்டும் எங்களையும் எங்கள் சந்ததியையும் பாதுகாப்பாயாகா!

யா அல்லாஹ் உன்னுடைய சத்திய மார்க்கத்தை. அக்கிரம காரர்களுக்கு அஞ்சாமல் எடுத்துச் சொல்லும் மார்க்க அறிஞ்சர்களின் அந்தஸ்த்தை உயர்த்துவாயாக.

அப்படிப்பட்ட அறிஞ்சர்களின் மீது உண்மையான அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!

சிறு துரும்பு கூட எங்கள் மனதில் நயவஞ்சகம் குடி கொள்ளுவதை விட்டும். உன்னிடம் மன்றாடிக் கேட்கிறோம் யா அல்லாஹ்.

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Unknown said...

அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும். இன்ஷா அல்லாஹ். அல்லாஹூ அக்பர்

அபு முஹம்மத் said...

ibn abdulwahid சொன்னது…

//ஏகத்துவ சகோதரர்கள் அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியில் தயவுசெய்து கருத்து வேறுபாடுகளை ஓரங்கட்டிவிட்டு அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிராக செயல்படுபவர்களை ஒன்றுபட்டு எதிர்கொள்ளுங்கள். அமைப்புக்கள், இயக்கங்கள் என்று பிரிந்து செயல்படுவதினால் அவைகளுக்குள் கட்டுண்டு கிடப்பதனால் பித் அத்வாதிகள், பிற்போக்குவாதிகள் மூலமாக சமுதாயம் சீர்கேடுகளுக்கு உள்ளாக நேரிடுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் பல மோசமான விளைவுகள் ஏற்பட காரணமாகிவிடும். எனவே அன்புகூர்ந்து உடனடியாக ஒன்றுகூடி ஒரு நல்ல முடிவினை எடுத்து சமுதாயம் சீர்பெற முயற்சி செய்யுங்கள். இன்ஸா அல்லாஹ்.//

உண்மை...........

அப்துல் கபூர்.
துபை

Unknown said...

அல்லாஹ்வின் பள்ளியை நிர்வகிக்கூடியவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அல்லாஹுதலா இறை மறையில் குறிப்பிடுகின்றான்.

إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
. அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.9:18

abufahadhnaan said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பொறுப்பில்லாத தலைமையும் அத்து மீறும் ஆலிமும் அதிரைக்கு அவமானம் இன்னொரு pj உருவாகிறாரா
இவரின் பயானை நிறுத்துவது அவமானம் என்று கருதுகிறாரா இளைஞ்சர் கூட்டத்தை கூட்டி குழப்பம் விளைவிக்கின்றாரா
ஒரு ஆலிம் இவ்வளவு பிடிவாதம் கூடாது.இதற்கு முன் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் தற்காலிகமாக பயான் செய்ய தடை செய்த பொழுது அப்போது இருந்த நிறுவகம் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு பயான் செய்ய அனுமதி அளித்தனர்.இப்போது உள்ள நிறுவகம் பயானை நிறுத்த சொன்னால் நிறுவாகத்திற்கு கட்டுபடாமல் மீறி பயான் செய்கிறார்.ஆலிம் அவர்கள் ஏன் இரண்டுவிதமாக செயல்படுகிறார் .ஹைதர் அலி ஆலிம் அவர்கள் முதன் முதலில் பயான் செய்ய அழைத்தபொழுது நிருவாகத்தினர் எழுத்து மூலம் ஆலிம் அவர்களை அழைக்கபட்டரா ?

Unknown said...

abufahadhnaan சொன்னது…

பொறுப்பில்லாத தலைமையும் அத்து மீறும் ஆலிமும் அதிரைக்கு அவமானம் இன்னொரு pj உருவாகிறாரா சகோதரர் அவர்க்ளே அதிரைக்கு என்ன அவமானம் சத்தியத்தை யார் சொன்னால என்ன இது அதிரைக்கு அவமானமா.
பொறுப்பு மீறுகிறார் என்று சொல்கின்றீர்களே இந்த் நிர்வாகம் குர்ஆன் சுன்னா வழியிலா செல்கின்றது.
abufahadhnaan சொன்னது…இவரின் பயானை நிறுத்துவது அவமானம் என்று கருதுகிறாரா இளைஞ்சர் கூட்டத்தை கூட்டி குழப்பம் விளைவிக்கின்றாரா.
குழ்ப்பம் என்றால் என்ன?
மார்க்கத்துக்கு மாற்றமாக நடப்பது தான் குழப்பம்.
ஆம் அவமானம் தான் ஏனென்றால் நல்லதை ஏவுவது தீயதை தடுக்காமல் இருப்பது இம்மைக்கும் மறுமைக்கும் அவமானம்

நிர்வாகம் எந்த காரணத்துக்காக் நிறுத்தியாது அதற்கு தக்க ஆதரங்களுடன் பதில் தரவு.
கடைசியாக ஒரு விடயத்தை சொல்லி விடுகின்றேன் அதே பள்ளியில் தான் ஒதக்கூடிய கிராத்தில் பல தவறுகளை நான் கண்டுள்ளேன்.அவர்களுடை சொந்த விடயத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

அப்துல்மாலிக் said...

//அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.// இந்த கட்ஸ்க்காகவே நான் இன்னும் அ.நி. இணைந்திருக்கிரேன். நாமெல்லாம் ஒரே ஊர், ஏதாவது எதிர்த்து பேசப்போனால் உடனே தகவல் தன் பெற்ரோர்களிடம் போய் அவர்கள்மூலம் அடக்கிவிடுவார்கள்

இந்த ஊடகம் மிக சக்திவாய்ந்தது, அல்லாஹ் துணையிருப்பான், உங்களின் எதிர்ப்புக்குரலை கடுமையாக பதியவும்,

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும்.

இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹூ அக்பர்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அல்லாஹ் நம்மை கண்காணிக்கிறான் என்பதை மறந்து, ஒரு நபரை பழிவாங்க எல்லா வழிகளையும் கையாகலாம் என்பதற்கு அன்மைகாலமாக அதிரை நிகழ்வுகள் சாட்சியாக உள்ளது.

பூனை கண்ணை மூடினால் உலகமே இருட்டு என்ற எண்ணத்தில் செயல்பட்டு, நான் யார் என்பதை தன்னை எதிர்த்தவர்களுக்கு தன்னுடைய பலத்தை காட்ட துடிக்கும் நயவஞ்சக சூழ்ச்சிக்காரர்களுக்கு இவ்வுலகிலும் கேவலம் உண்டு, மறுமையிலும் தண்டனை உண்டு. இது மட்டும் நிச்சயம்.

தக்வாபள்ளி பயான் விவகாரத்தில் சம்பத்தப்பட்டவர்கள், மார்க்க பிரச்சாரத்தில் தயவு செய்து உங்கள் பழிவாங்கும் அரசியலை கலக்காதீர்கள். சம்பத்தபட்ட ஆலிம் செய்யும் பயானில் என்ன தவறு உள்ளது என்பதை abufahadhnaan போன்ற சகோதரர்கள் இங்கு விளக்கினால் நலமாக இருக்கும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//I would like to know if there are any other Alims from our town who are having similar commanding in speech and genuine preaching.

I wish there should be more and more Alims with effective and commanding in speech and genuine preaching to impact the minds that would make positive changes in our community. InshaAllah.//

அஸ்ஸலாமு அலைக்கும் அஹமது அமீன்,

தாராளமாக இருக்கிறார்கள், ஆனால் அவர்களை சரியான முறையில் பயன்படுத்த நம்மூர் முக்கிய புள்ளிகள் தடையாக உள்ளார்கள் என்பது எதார்த்தமான உண்மை.

சிர்க் மவ்லுதுகள், தர்கா வழிபாடுகள், பித் அத்துக்கள் கூடாது என்ற ஆலிம் பெருமக்கள் நிறையவே உள்ளார்கள்.

அவைகளை பேசினால் ஊரில், தெருவில், ஜமாத்தில், குடும்பத்தில் பிரச்சினை வரும் என்ற அச்சத்தால் தங்கலால் முடிந்த நிலையில் மவுனமாக மக்களுக்கு எடுத்துச்சொல்லி வருகிறார்கள்.

இணைவைப்பு பித் அத்துக்களுக்கு எதிராக உள்ளூர் ஆலிம்கள் தைரியத்துடன் எல்லா எதிர்ப்புகளையும் சந்திக்கும் எண்ணத்தில் செயல்பட்டால் ஏன் நாம் பிற ஊர் மார்க்க பிரச்சாரகர்களை நாட வேண்டும்?

சத்தியத்தை சொன்னதால் நபி(ஸல்) காலத்தில் பிரச்சினை வந்தது, அதன் பின் தொடர்ந்த காலகட்டத்தில் பிரச்சினை வந்துள்ளது நினைவில் வைத்துக்கொள்வோம்.

Unknown said...

அதே பள்ளியில் தான் தொழுகை நடத்தக்கூடிய இமாம் அவர்கள் ஒதக்கூடிய கிராஆத்தில் பல தவறுகள் இருக்கின்றன.அதை பல முறை திருத்திக் கொடுத்தும் அதை அவர் கேட்கவில்லை.குறிப்பாக: அவ்ர்களூடை சொந்த விடயத்தில் நான் தலையிடவில்லை

Unknown said...

தாஜுதீன் சொன்னது…
//பூனை கண்ணை மூடினால் உலகமே இருட்டு என்ற எண்ணத்தில் செயல்பட்டு, நான் யார் என்பதை தன்னை எதிர்த்தவர்களுக்கு தன்னுடைய பலத்தை காட்ட துடிக்கும் நயவஞ்சக சூழ்ச்சிக்காரர்களுக்கு இவ்வுலகிலும் கேவலம் உண்டு, மறுமையிலும் தண்டனை உண்டு. இது மட்டும் நிச்சயம்.//
இவ்வுலகில் கேவலப்பட தொடங்கியதை நெற்றிக்கண் திறந்தாலும் அஞ்சாத வார இதழ் செய்தி மூலம் அறியலாம்.

Unknown said...

//abufahadhnaan சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,

பொறுப்பில்லாத தலைமையும் அத்து மீறும் ஆலிமும் அதிரைக்கு அவமானம் இன்னொரு pj உருவாகிறாரா
இவரின் பயானை நிறுத்துவது அவமானம் என்று கருதுகிறாரா இளைஞ்சர் கூட்டத்தை கூட்டி குழப்பம் விளைவிக்கின்றாரா
ஒரு ஆலிம் இவ்வளவு பிடிவாதம் கூடாது.இதற்கு முன் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் தற்காலிகமாக பயான் செய்ய தடை செய்த பொழுது அப்போது இருந்த நிறுவகம் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு பயான் செய்ய அனுமதி அளித்தனர்.இப்போது உள்ள நிறுவகம் பயானை நிறுத்த சொன்னால் நிறுவாகத்திற்கு கட்டுபடாமல் மீறி பயான் செய்கிறார்.ஆலிம் அவர்கள் ஏன் இரண்டுவிதமாக செயல்படுகிறார் .ஹைதர் அலி ஆலிம் அவர்கள் முதன் முதலில் பயான் செய்ய அழைத்தபொழுது நிருவாகத்தினர் எழுத்து மூலம் ஆலிம் அவர்களை அழைக்கபட்டரா //

நாம் இதற்கு முந்திய பதிவில் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

அத்துமீறுவது ஆலிமல்ல, மாறாக நயவஞ்சகர்களும், அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுமே.

முதலாவதாக நிற்பதற்கு மறுப்பது ஆலிமல்ல மாறாக, அவர்களின் பயானின் காரணமாக பயன் பெற்றவர்கள், திருந்தியவர்கள், குடும்பசீர்திருத்தம் அடைந்தவர்கள், அதிராம்பட்டிணம் உருப்படவேண்டும் என்ற ஊர் பற்று மிக்கவர்கள்....

காரணங்கள்.

1) இன்று நிர்வாக பொறுப்புகள் எல்லாம் இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாதவர்களிடமும் , அல்லாஹ்வுடன் போர் தொடுப்பதற்கு நிகரான வட்டியைக் கொண்டு தங்களின் வியாபார நிறுவனங்களை நடத்தும் ஈனப்பிரவிகளிடமும் சென்று கொண்டிருப்பதால், இதே நிலை தொடர்ந்தால் நாளை பூசாரிகளைக் கொண்டுவந்து பள்ளிவாயில்களில் நிறுத்தி அல்லாஹ்வின் தீனுக்கு முடிவுகட்டிவிடுவார்கள். இது எங்களுக்கு அவமானம் என்பதால் நாங்கள் இதற்கு எதிராக நிற்கிறோம். அந்த ஆலிம் அவமானமாக கருதவில்லை.

2) ஊரில் தரம்மிக்க ஆலிம்கள் இல்லையா என்று கேட்பவர்களில் எத்தனை பேர் தரம்மிக்க குழந்தைகளை மதராவிற்கு அனுப்பியிருக்கிறீர்கள்.? எந்த சிறுவன் ஒழுங்காக படிப்பதில்லையோ, எந்த சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு கட்டடிக்கிரானோ அவனைத்தானே நாம் மதரசாவிற்கு அனுப்புகிறோம்.

3) வட்டியை நியாயப்படுத்தும் ஆலிம்கள் எத்தனை பேர் ஊரில் இருக்கிரார்கள் அதற்கு எதிராக பேசுபவர்கள், பேணுதலாக இருக்கக்கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். லண்டனிலும் மற்ற நாடுகளிலும் கொள்ளை அடித்துக்கொண்டு வந்தவர்களின் படாடோபமான புது வீடு குடிபோகும் விருந்தில், அவர்கள் கொள்ளை அடித்துக்கொண்டு வந்தது ஊர் முழுக்க அறிந்திருந்தும் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வருகிறார்களே, இவர்களிடமா உண்மையை உரக்க சொல்வதை எதிர்பார்க்கிரீர்கள்.

3) தற்பொழுது அப்துல்லாஹ் பின் உபை அல்ஸலூலின் கொடியை பிடித்திருக்கும் "சங்" க முக்கிய பொறுப்பில் இருப்பவரின் கீழ் இருக்கும் பள்ளியில் இமாமாக இருப்பவரின் தம்பி " நாங்கள் வஞ்சனை (செய்வினை) வைத்து ஆளை தூக்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்" என்று அந்த ஆலிமிற்கு எதிராக எந்த பயமும் இல்லாமல் எல்லார் முன்பாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறாரே, இவரும் இவருடைய கூட்டத்தினரும் அல்லாஹ்வுக்கு எதிராக போர் பிரகடனம் செய்கிறார்கள் என்பதை abufahadhnaan போன்றவர்கள் அறிவதில்லையா?

Unknown said...

//abufahadhnaan சொன்னது…இளைஞ்சர் கூட்டத்தை கூட்டி குழப்பம் விளைவிக்கின்றாரா...//

குழப்பத்தை விளைவிப்பது ஆலிமல்ல, மாறாக உங்களைச் சார்ந்தவர்கள்தான். இத்தனை நாட்கள் மிகப்பெரும் பொறுமை காத்துவரும் இளைஞகர்கள் மற்றும் பெரியவர்கள் "மைக்கில் தான் பயான் செய்ய வேண்டும் " என்று சொன்னபோது, மைக் மற்றும் மேசை பூட்டப்பட்ட நிலையில் அந்த கண்ணியத்திற்குரிய ஆலிம் அவர்கள் இளைஞர்களிடம் " தயவு செய்து எந்த வித அசம்பாவிதத்திலும் ஈடுபட்டுவிடாதீர்கள், மைக் இல்லை என்றால் பரவாயில்லை அது இல்லாமல் பயான் செய்யலாம்" என்று கெஞ்சி கேட்டது குழப்பம் விளைவிப்பதா?

"மைக் என்றதும் ஆணவமா என்று அடுத்த பதிவை பதியும் முன் உங்களுக்கு சொல்வது: பல விடுகளில் உள்ள பெண்கள் கேட்பதற்கு வசதியாகத்தான் மைக் வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது"

அல்லது: 10 நாட்கள் தற்காலிக நிறுத்தம் என்று நயவஞ்சகர்கள் சொல்லிவிட்டு, அந்த கெடு முடிந்ததும் வழக்கம் போல் ஆலிம் அவர்கள் பயான் செய்ய சென்றதும் சென்னையிலிருந்து அவசரமாக புகார் வாசகங்களை அனுப்பி அறிவில்லாத பொறுப்பில் இருப்பவரை தூண்டிவிட்டு காவல் நிலையத்தில் புகார் செய்பவர் குழப்பம் விளைவிப்பவரா?

அல்லாஹ்வுக்கு பயந்து நெஞ்சிலே கை வைத்து நீங்கள் நீதியின் படி தான் எழுதுகிறீர்களா என்று உங்களிடமே கேட்டுப்பாருங்கள்.

உங்களை ஈமானிய சுயப் பரிசோதனை செய்து கொள்ள எமது முந்திய பதிவை கீழ்கானும் சொடுக்கில் சொடுக்கி பயனைடையுங்கள் :-

http://adirainirubar.blogspot.jp/2013/04/blog-post_22.html

வஸ்ஸலாம்

Unknown said...

This comment will create unnecessary argument..Why Adirai Nirubar is publishing comment section? Better to remove like Adiraixpress....

Unknown said...

Mohamed Abideen சொன்னது…
This comment will create unnecessary argument..Why Adirai Nirubar is publishing comment section? Better to remove like Adiraixpress....//

Express will never stop anywhere to have a research.(no stops to have a research) ... Nirubar which means " going to the field and getting information from all sources and publishing the Truth " stopping information flow means " stopping the Truth getting to the Public"

Adirai pasanga😎 said...

//xpress will never stop anywhere to have a research.(no stops to have a research) ... Nirubar which means " going to the field and getting information from all sources and publishing the Truth " stopping information flow means " stopping the Truth getting to the Public" //
well said.

On the other hand lack of unity in our society among the thouheed people is leads to this unwanted situation. We are now in a position to unite the brothers who are following al quraan and hadees.

Unknown said...

This is one of the tricks of shaitan indeed. When people could not stand against truth, cant swallow the truth, they will start saying "ah let us not argue about truth, let us stop talking the truth and let us be brothers without truth"

Unknown said...

Mr.Abu Mus'ab & Ibn Wahid,

Please don't try to argue with others...Don't be adamant..Hav u seen the comments at Adiraixpress for this head???It was there, then they removed..now no more comments for this topic....

Unknown said...

//Mohamed Abideen சொன்னது…
Mr.Abu Mus'ab & Ibn Wahid,

Please don't try to argue with others...Don't be adamant..Hav u seen the comments at Adiraixpress for this head???It was there, then they removed..now no more comments for this topic....//சகோ முகமது ஆபிதீன் அவர்களுக்கு. தாங்கள் கூரும் இனைய வலைப்பூவில் உண்மைக்கு புறம்பான செய்தி பதியப்பட்டுள்ளதாலேயே நாம் உண்மையை விளக்குவதற்காக இதனை எழுத வேண்டியிருக்கிறது.
அங்கே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஹைதர் அலீ ஆலிம் அவர்கள் வழக்கம் போல் நேற்று மஃரிப் தொழுகைக்கு பின் தக்வாப் பள்ளியில் பயான் செய்தார்.பயான் முடிந்து வீடு சென்ற அவரை அதிராம்பட்டினம் காவல் துறை கைது செய்ய முனைந்தாக கூறப்படுகிறது. "...

உண்மை யாதெனில், ஆலிம் அவர்கள் பயான் முடிந்து இஷா தொழுகைக்காக, இமாம் இல்லாத காரணத்தால் தாங்களே தொழுகை வைக்க வேண்டியிருந்ததால் அதற்காக ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் போலிஸ் வந்தது. தொழுகை வைத்து முடிந்ததும் வருகிறேன் என்று கூரி அவர்களை அங்கேயே காத்திருக்கும்படி சொல்லிவிட்டு தொழுகை வைக்க இமாமாக நின்றார்கள்.

அவர்கள் சொல்வது போல் வீடு சென்றதும் கைது செய்யவில்லை.

அவர்கள் தொழுகைக்காக இமாமாக நின்று தொழும்போது எத்தனை எண்ணங்கள், சிரமங்கள் அவர்கள் மனதில் ஏற்பட்டு அதனால் அக்கிரமக்காரர்களுக்கு எதிராக எப்படி எல்லாம் துஆ செய்திருப்பார்கள்? அதற்கு அவர்கள் பின்னால் தொழுத அத்தனை பேரும் மலக்குகளும் ஆமீன் சொல்லித்தானே இருப்பார்கள்.?

உண்மைக்கு புறம்பாக செய்திகள் வெளியிடுவதும், உண்மையை தடுத்து நிறுத்த முயற்சிப்பதும் உண்மையின் குரல் வளையை நெரிப்பதற்கு சமம்.

நாம் விவாதம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே இதனை எழுதவில்லை. எத்தனையோ வேலை பளுவுக்கு மத்தியில், நமது ஊர் சம்பந்தமாக நாம் என்ன செய்தோம் என்று அல்லாஹ் நம்மை மறுமை நாளில் விசாரிப்பானே என்ற அச்சத்தின் காரணமாகவே இதை இங்கே எழுத வேண்டியிருக்கிறது.

Unknown said...

Dear Mr.Abu Mus'ab,

உன்மைக்கு புறம்பான செய்தி என்று சொல்லும் நீங்கள் ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை? நீங்கள் யாரென்றே தெரியாத எனக்கு என்னுடைய Comment-க்கு பதில் தருகிறீர்கள் உங்களுடய பதிலுக்கு நானும் பதில் கொடுக்க வேண்டியுள்ளது. இது தேவை இல்லாதது தானே..அடுத்தவர்களை குறை சொல்வதோ, அதுத்தவர்களுக்கு Support பண்ணி பேசுவதயோ தவிர்க்கவும்.

Unknown said...

//Mohamed Abideen சொன்னது…
Dear Mr.Abu Mus'ab,

உன்மைக்கு புறம்பான செய்தி என்று சொல்லும் நீங்கள் ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை? நீங்கள் யாரென்றே தெரியாத எனக்கு என்னுடைய Comment-க்கு பதில் தருகிறீர்கள் உங்களுடய பதிலுக்கு நானும் பதில் கொடுக்க வேண்டியுள்ளது. இது தேவை இல்லாதது தானே..அடுத்தவர்களை குறை சொல்வதோ, அதுத்தவர்களுக்கு Support பண்ணி பேசுவதயோ தவிர்க்கவும்.//


அங்கே மறுப்பு அளிப்பதற்கு எங்கே இடம் இருக்கிறது? அவர்களுக்கு இமெயில் அனுப்பினாலும் அவர்கள் வெளியிடுவார்களா? எத்தனை நியாயமான செய்திகளை நாம் அனுப்பியதற்கு வெளியிட்டார்களா?

அதுசரி நீங்களும் அங்கு உள்ளவர்தானா? நீங்கள் உண்மையை மூடி மறைக்க முயன்றதால்தான் நாம் மறுப்பு எழுத வேண்டியுள்ளது.

அடுத்தவருக்கு சப்போர்ட் பண்ணுவதற்காக நாங்கள் இங்கே எழுதவில்லை.

எங்களின் உயிரினும் மேலான தீனுக்காக, அல்லாஹ்வுக்காக சப்போர்ட் பண்ணுகிறோம். உங்களைப் போன்று மற்றவர்களுக்காக அல்ல.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers,

//•லெப்பைக் குடும்ப சகோதரர்களைத் தூண்டி, ஆலிமுக்கு எதிராக முக்கியமான தெருக்களின் ஜமாத்திற்கு சென்று மனு கொடுக்க வற்புறுத்தல் செய்யப்பட்டிருக்கிறது.
•அவர் மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டாம் என்றும், எங்கள் பிழைப்பில் அடித்துவிட்டார் என்று மற்ற தெரு ஜமாத்துக்களிடம் மனு கொடுங்கள் என்று லெப்பைக் குடும்ப சகோதரர்களுக்கு ஆலோசனை வழங்கியது.
•சத்திய பிரச்சாரத்துக்கு எதிராக அரசாங்க உதவியை நாடலாமே என்று யோசனையை லெப்பை மார்கள் வழங்கியது.
•ஊரில் ஏகப்பட்ட இயக்கங்கள் இருக்கும் போது லெப்பைகளின் நலனுக்காக ஏன் சங்கம் இல்லை? என்று கேள்வி எழுப்பி பிரச்சினையை மேலும் பெரிதாக்க முயன்றது.
•தக்வா பள்ளியில் நடைபெறும் பயானில் லெப்பைமார்கள் பிரச்சினையை ஏற்படுத்தினால் ஆலிமை ஊரைவிட்டு துரத்திவிடலாம் என்ற யோசனையை முன் வைத்தது.
•பிரச்சினை முற்றிப்போய் வெட்டு-குத்து வந்தால் யார் பொறுப்பு என்று அச்சத்துடன் கேட்ட ஒரு லெப்பை சகோதரரிடம், “அதெல்லாம் பயப்படத் தேவையில்லை” என்று தைரியம் சொன்னது.
•தக்வா முஹல்லாவாசி என்ற பெயரில் தக்வா பள்ளியின் அன்றைய கமிட்டித் தலைவரிடம் “நான் பிரச்சினை செய்வேன்” என்று மிரட்டியது.//

If the list of afore mentioned malicious activities are put under inquiries of police or judge in the court, since all are seems similar to be kids talking and not solid ones, those cannot be proven easily unless until all are recorded videos speech. Those statements can be considered as emotional mono-conversation of a single person, which cannot be considered solid evidence for right judgement for any crime.

What we need in our town is peace and harmony, please stop the ego fights and don't trap in satanic plot of divide and conquer. And protect all brothers' dignity by resolving issues amicably without amplifying small issues. There are solutions to big and small problems, if our mind intend to achieve them.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

abufahadhnaan said...

ஆலிம் அவர்கள் தக்வா பள்ளியில் மட்டும்தான் பயான் செய்ய தடை செய்கிறார்கள் ஏன் ஆலிம் அவர்கள் நிர்வகிக்க கூடிய சித்திக் பள்ளியில் பயான் செய்ய வேண்டியது தானே? தக்வா பள்ளியில் மட்டும்தான் பயான் செய்ய என்ன காரணம்?

adiraimansoor said...
This comment has been removed by the author.
Unknown said...

//ஆலிம் அவர்கள் தக்வா பள்ளியில் மட்டும்தான் பயான் செய்ய தடை செய்கிறார்கள் ஏன் ஆலிம் அவர்கள் நிர்வகிக்க கூடிய சித்திக் பள்ளியில் பயான் செய்ய வேண்டியது தானே? தக்வா பள்ளியில் மட்டும்தான் பயான் செய்ய என்ன காரணம்? //

Great question !!!

If there is conflict in making bayan in Taqwa Masjid only, then it seems to be problem between Moulana Haidar Ali and Taqwa Masjid Administration, not in other muhallas. So, resolve this issue amicably.

Moulana Haidar Ali has been preaching in other muhallas(bayan for women) too.

Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

Assalamu Alaikkum,

Dear Thajudeen,

//சிர்க் மவ்லுதுகள், தர்கா வழிபாடுகள், பித் அத்துக்கள் கூடாது என்ற ஆலிம் பெருமக்கள் நிறையவே உள்ளார்கள்.

அவைகளை பேசினால் ஊரில், தெருவில், ஜமாத்தில், குடும்பத்தில் பிரச்சினை வரும் என்ற அச்சத்தால் தங்கலால் முடிந்த நிலையில் மவுனமாக மக்களுக்கு எடுத்துச்சொல்லி வருகிறார்கள்.

இணைவைப்பு பித் அத்துக்களுக்கு எதிராக உள்ளூர் ஆலிம்கள் தைரியத்துடன் எல்லா எதிர்ப்புகளையும் சந்திக்கும் எண்ணத்தில் செயல்பட்டால் ஏன் நாம் பிற ஊர் மார்க்க பிரச்சாரகர்களை நாட வேண்டும்?//

Whoever(local or other town) the Ulamas preaching againgt shirk and making reforms in community should be straight forward and should have good approach. If the approach is not correct, then there will be no effect in speech and reforming only conflicts will be the result.

Our local brothers are having enough awareness against the shirk and bid'ath and our ulamas are also having enough knowledge and commanding in speech. But they are careful in not to make any conflicts. This is the right approach to keep the dignity and ensuring harmony. Gradual change is long lasting ones, and effective.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

JAFAR said...

//abufahadhnaan சொன்னது…
ஆலிம் அவர்கள் தக்வா பள்ளியில் மட்டும்தான் பயான் செய்ய தடை செய்கிறார்கள் ஏன் ஆலிம் அவர்கள் நிர்வகிக்க கூடிய சித்திக் பள்ளியில் பயான் செய்ய வேண்டியது தானே? தக்வா பள்ளியில் மட்டும்தான் பயான் செய்ய என்ன காரணம்?// அது என்ன பல ஆண்டாய் பெரும்சீர்திருத்த கருத்துக்களை எத்தி வைக்கும் போல்டான குரலுடையவரை நேற்று வந்த ஆணவம் பிடித்த நிர்வாகம் தடுப்பது எந்த வகையில் நியாயம்.
உங்க வீட்டில் பிரச்சனை என்றால் அடுத்த வீட்டில் படையெடுக்க முடியுமா?

Adirai pasanga😎 said...

abufahadnaan said -

//ஆலிம் அவர்கள் தக்வா பள்ளியில் மட்டும்தான் பயான் செய்ய தடை செய்கிறார்கள் ஏன் ஆலிம் அவர்கள் நிர்வகிக்க கூடிய சித்திக் பள்ளியில் பயான் செய்ய வேண்டியது தானே? தக்வா பள்ளியில் மட்டும்தான் பயான் செய்ய என்ன காரணம்? //

மேற்படி கேள்விக்கு சகோதரர் abumus'ab முன்பே பதிலளித்து விட்டார். நீங்கள் பேச்சை திசைதிருப்பி மழுப்பலாய் சித்திக் பள்ளியை இழுக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் வாதம் செய்யவில்லை. பித் அத்திற்கு ஆதரவாக பிடிவாதம் செய்வதாகவே தோன்றுகிறது.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாகவும்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

السلام عليكم ورحمة الله وبركاته
for English brothers and Tamil brothers.
How many brothers and sisters reading this blog can understand English?

If you are not able to make a simple effort to type in Tamil such important matters, how are you going to benefit this UmmaH? Please don't keep talking for the sake of talking. I'm traveling by train on a long trip, otherwise would have opened my PC and typed answers for all questions in Tamil.
Hope In Shaa Allah you will have answer that may satisfy all your concerns and questions as soon as I reach home.

Unknown said...

அதிரை தக்வா பள்ளி பிரச்சனையில் பல உண்மைகள் தெரியாமல் ஒரு சில சகோதரர்கள் அநீதியை ஆதரித்து கருத்து எழுதுகிறார்கள்.

அநீதிக்கு எதிராக ஆலிம் அவர்களுக்கு ஆதரவாக களம் இற்ங்கும் நம் இளைஞர்கள் முட்டாள்கள் அல்ல.

தக்வா பள்ளி வக்ப் சட்டத்திற்கு உட்பட்டது. வக்ப் போர்டினால் நியமிக்கப்பட்ட ஏழு உறுப்பினர்களும் ஒன்று கூடி ஆலோசித்து ஐந்து உறுப்பினர்கள்ஆதரித்தால் தான் எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியும்.இந்த விதியை பின்பற்றாமல் தலைவர், செயலாளர் ஆகியோர்களை துண்டிவிட்டு,ஆதிக்க வெறி கொண்ட சில செல்வந்தர்கள் மதிப்புக்குரிய ஹைதர் ஆலிம் அவர்களின் பயானை நிறுத்த முயற்சிக்கிறார்கள். இதற்கு காரணம், நமதூரில் உள்ள சில ஆலிம்கள் போல தங்களுக்கு அடிமை சேவகம் செய்யாததே.

அவர்கள் குடும்ப பள்ளிகூடத்திலிருந்து ஆலிம் அவர்களை நீக்கியதற்கு எவரும் வரிந்து கட்டவில்லை.தங்களின் மூட பழக்க வழக்கத்திற்கு ஒத்துழைக்காத இளம் ஆலிம்கள் சிலர் அதே போல் பாதிக்கப்பட்டு இதனை எதிர்ப்பதற்கு மன தைரியம் இல்லாததால் அல்லாஹ் பார்த்து கொள்வான் என்று வாயை முடி கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் தக்வா பள்ளி யார் வீட்டு குடும்ப சொத்தல்ல.

அநீதிக்கு எதிராக போராடுவதும் மார்க்கத்தில் முக்கிய கடமை என்பதை அறிந்த ஹைதர் அலி ஆலிம் அவர்கள் சத்திய பிரச்சாரத்தை தொடருகிறார்கள்.அதே நேரத்தில் வக்ப் சட்டப்படி தக்வா பள்ளி கமிட்டி ஐந்து பேர் ஆதரவுடன் பயானை நிறுத்த முடிவு செய்து கடிதம் கொடுத்த பிறகும் ஆலிம் அவர்கள் பயான் செய்து இருந்தால் அவர் அத்துமீறி செயல்படுவதாக சொல்லலாம்.அப்படி ஏதும் இங்கு நடக்க வில்லை. சத்திய பிரச்சாரம் செய்யும் எந்த ஒரு ஆலிமை பழிவாங்கினாலும் இளைஞர்கள் மூலம் ஏகத்துவ பிரச்சாரம் மேலும் வலுப்படும் இன்ஷா அல்லாஹ்.

வட்டி,வரதட்சனை,மெளலிது,கந்துரி போன்ற அனாச்சாரங்களுக்கு எதிரான பிரசாரத்தை ஆதிக்க வர்க்கத்திற்கு அஞ்சாமல் உரக்க சொல்ல உள்ளூர் ஆலீம்கள் யாராவது தயாராக இருந்தால் அவர்களுக்கும் பக்க பலமாக இருக்க நம் இளைய சமுதாயம் தயாராகவே இருக்கிறது.

ஹைதர் அலி ஆலீம் என்கின்ற தனி நபருக்காக யாரும் வரிந்து கட்டவில்லை.அவரால் சொல்லப்படும் சத்திய கருத்துகளை ஆதரித்தும் அநியாயாமாக பழிவாங்கப்படுவதை எதிர்த்தும்தான் மக்கள் அணிதிரள்கிறார்கள்.

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.(அல்குர் ஆன் 17:81)

Unknown said...

அன்புக்குரிய சகோதரர்கள் அனைவருக்கும்:-

நயவஞ்சகம் என்பது புற்று நோயைக் காட்டிலும் பயங்கரமான மறைந்திருக்கும் மாபாதக நோயாகும்.

புற்றுநோய் எப்படி மறைந்திருந்து உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் திடீரென்று செயலிழக்க செய்கிறதோ, அதே போன்று நயவஞ்சசகம் உள்ளே மறைந்திருந்து சமுதாயத்தின் எல்லா ரகசியங்களையும் அறிந்து, ஈமானிய பலத்தை திடீரென்று செயலிழக்க செய்து விடும்.

இது ஒருநாளிலோ, ஒரு இரவிலோ நடப்பதில்லை. மாறாக பல மாதங்களுக்கு பிறகு, சில சமயங்களில் பல வருடங்களுக்கு பிறகு ஈமானே இல்லாமல் ஆக்கிவிடும்.

உதாரணங்கள்:-

1) துனீஸியாவில் 1957 அதிபதியாக வந்த பொர்கீபாவை எடுத்துக் கொள்வோம். பல நாட்கள் இஸ்லாமிய போர்வையில் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த நயவஞ்சகர்கள் சோசலிசம் எனும் பெயரில் பொர்கீபாவுக்கு களம் அமைத்து கொடுத்து அதிபதியாக ஆக்கினார்கள். அதன் விளைவு,

முதலாவதாக அந்த கொடியவன் செய்த பணி வெளிப்படையாக கடை வீதிக்கு தன் பட்டாளத்துடன் சென்று முஸ்லிம் பென்களின் பர்தாவை வலுக்கட்டாயமாக தானாகவே அகற்றியது, மற்றும் தன் பட்டாளத்துக்கு அவ்வாறு செய்யுமாறு கட்டளை பிறப்பித்தது.

அரசு அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் பர்தாவை தடை செய்தது.

ஜைத்தூனா எனும் மிக்க பழமை வாய்ந்த ஸஹாபாக்களாலும் தாபியீன்களாலும் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய பல்களைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த கண்ணியம்மிக்க முஸ்லிம் பெண்களை வலுக்கட்டாயமாக "பிகினி" நிர்வாண ஆடைகளை அணிய செய்தது, அவர்களை வெளிப்படையான கடல் கரையில் குளிக்க கட்டளையிட்டது. இதன் மூலம் தன்னுடைய நாடு மேல்நாட்டுக்கு ஒப்பானது என்று தம்பட்டம் அடித்தது.

விபச்சார விடுதிகளையும், சாராய கடைகளையும் தாராளமாக திறந்து விட்டது.

நோன்பு மாதத்தில் பகல் நேரத்தில் அரசு தொலைக்காட்சியில் எல்லார் முன்பாகவும் பழரசத்தை குடித்து, நோன்பின் அவசியம் இல்லை என்பதை மக்களுக்கு வெளிப்படையாக ஷைத்தானிய விளம்பரம் செய்தது.

சூரா கஹ்ஃபில் 300 வருடங்கள் அஸ்ஹாபுல் கஹ்ஃபினர் உறங்கியதைப் பற்றி அல்லாஹ் கூருவதை ஏளனமாக "முஹம்மது இவ்வாறெல்லாம் கூருவதை எப்படி நம்ப முடியும்" என்று கூறியது. "நவூது பில்லாஹ்"

இன்னும் எத்தனை விஷயங்களை எழுத வேண்டும்? இவ்வாறெல்லாம் நடந்த நாட்டின் எத்தனை சதவீதம் முஸ்லீம்கள் என்று நீங்கள் அறிவீர்களா? ஆம் 99% சதவீதம்.

இது எல்லாம் ஒரே நாளிலோ ஒரு பகலிலோ நடந்தேற வில்லை. மாறாக பல தலை முறைகளாக நயவஞ்சகர்கள் சூழ்ச்சி செய்து நிறை வேற்றியது.

2) இன்று பர்மாவிலும், சிரியாவிலும் நடப்பது என்ன? பஷார் அஸதின் தாத்தா சிரியாவை பிரான்சுக்கு தாரை வார்த்து கொடுத்தார். அன்று அவர் போட்ட விஷ விதை இன்று விஷக்காடாக விருட்சம் அடைந்து அதனால் விளையும் கேடுகளும் மனிதப்பழிகளும் எத்தனை எத்தனை?

இன்று அஸத் அல்கல்பின் படைகள் முஸ்லிம் இளம் சிறார்களை பிடித்து சித்திரவதை செய்து அவர்களை " லாயிலாஹ இல்லா பஷார் " "பஷாரைதவிர வேறு யாரும் வணக்கத்திற்குரியவர் இல்லை" (நவூது பில்லாஹ்) என்று சொல்லும்படியும் இன்ன பிர விஷயங்களையும் செய்து வருவதையும், கண்ணியம்மிக்க முஸ்லிம் சகோதரிகளை கற்பழிப்பதையும் நீங்கள் கேட்கவில்லையா? கீழே உள்ள சொடுக்கியை சொடுக்கி அத்தகைய ஒரு உதாரணத்தை உங்கள் கண்களாலேயே காணுங்கள்.

http://www.facebook.com/photo.php?v=4062181252671

இவ்வாறெல்லாம் செய்துகொண்டிருக்கும் ஷைத்தானிய அசதையும் அவன் தந்தையையும் மிகப் பலமாக ஆதரித்து வந்தவர்களில், உலகின் பிரபல உலமாக்கள் என்று பலநாடுகளாலும் குறிப்பாக யு எ இ போன்ற நாடுகளாலும் பெரும் விருதுகள் கொடுக்கப்பட்டவர்களும், கவுரவிக்கப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்தனர். இவர்களில் குறிப்பாக சமீபத்தில் கொலை செய்யப்பட்ட சயீத் அல்பூதி எனும் சூஃ பி உலமா மிகப்பலமாக ஆதரித்தது அல்லாமல் ஷைத்தானிய படைகளை ஸஹாபாக்களுக்கு ஒப்பானவர்கள் என்று கூரி அந்த படையில் இலைஞர்கள் சேர பிரச்சாரமும் செய்து வந்தார்.

இந்த உலமா எனப்படுபவர் சொன்னதால் இந்த ஷைத்தானிய படைகள் செய்வது நியாயமானதா? இவருக்கு உலக நாடுகள் எல்லாம் கண்ணியமான விருதுகள் வழங்கினவே!

amicable solution என்றும் living in harmony என்றும் அடிக்கடி எழுதும் சகோதரர்களுக்கு நாம் சொல்வது:-

நீங்கள் கூருவது போல் நயவஞ்சகர்கள் சொல்வது அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வது மிக இலகுவானது. அதற்கு பகரமாக வருங்காலத்தில் நாம் மேலே குறிப்பிட்டது போன்று நடக்காது, எங்கள் சந்ததிகள் அவ்வாறு பாதிக்க அனுமதிக்க மாட்டோம், எங்களுக்கும் எங்கள் சந்ததிகளுக்கும் அல்லாஹ்விடமிருந்து சுவர்க்கம் பெற்று தரும் உத்தரவாதத்தை தருகிறோம் என்று உங்களால் சொல்ல முடியுமா?

Unknown said...

இன்று கப்ரு வணக்கத்திற்கு எதிராக பேசவேண்டாம், விபச்சாரத்திற்கும் , வட்டிக்கும் எதிராக பேசவேண்டாம் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்பவர்கள், நாளை விபச்சாரத்தையும் இன்ன பிற குற்றங்களையும் வலுக்கட்டாயமாக செய்ய தூண்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

இன்று கப்ரு வணக்கத்திற்கு எதிராக பேசவேண்டாம் என்று சொல்பவர்கள், நாளை இந்த பள்ளியில் சிலைகளை வைக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்குறது.? நாம் இவர்களை நேரடியாக சொல்லவில்லை, ஆனால் இவர்களால் இன்று விதிக்கப்படும் நச்சு செடிகளின் விளைவாக நாளை அவ்வாறு மாறும் என்பதை மேலே பல உதாரங்களில் நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

உத்மானிய கிலாபத்தின் கீழ் அல்மஜர் என்று அழைக்கப்பட்ட ஹங்கேரி, பல்கேரியா போன்ற நாடுகளில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் நயவஞ்சகர்களால் விளைந்த கொடுமைகளை உலக முஸ்லிம் இலைஞகர்களின் கூட்டமைப்புடன் (WAMY) காணும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. பல மஸ்ஜிதுகள் பார்களாக மாற்றப்பட்டு பாட்டில்கள் சிதறி கிடப்பதையே காண முடிந்தது.

பல முஸ்லிம் குழந்தைகள் அரசாங்கத்தால் கிரிஸ்தவ பெயர் வைத்தால் தான் பள்ளிக்கூடத்தில் சேர முடியும் என்று அவர்களி வலியுத்தியதன் காரணத்தால் அவர்கள் பெயர் மாற்றி இஸ்லாமிய அடையாளமே இல்லாமல் போனதையும், பள்ளிவாசலின் இமாம் என்று சொள்ளப்பட்டவரை சூரா ஃபாத்திஹாவின் இரு வரிகளைக் கூட ஓத முடியாமல் இருந்ததையும் கண்டு வேதனை அடைந்தோம்.

ஏன் தக்வா பள்ளியில் பயான் செய்ய வேண்டும், ஏன் சித்தீக் பள்ளியில் செய்ய வேண்டியது தானே என்று கேட்பவர்களுக்கு:--

தக்வா பள்ளி யார் அப்பன் வீட்டு சொத்தும் அல்ல. அது அல்லாஹ்வுக்கு சொந்தமானது. உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமானது. அங்கு அல்லாஹ்வை வணங்குவதை, அவனுடைய மகத்துவத்தை எடுத்துரைக்க தடை விதிப்பதற்கு யாருக்கும் தகுதியில்லை. இந்த பள்ளியில் விதிக்கும் தடையை நாங்கள் ஏற்று அமைதி காக்கும் பட்சத்தில் இத்தகைய தடைகளை ஒவ்வொரு பள்ளியாக நிறைவேற்றி நயவஞ்சகர்கள் வெற்றி காண்பார்கள்.

கடைசியாக இஸ்லாமிய பற்றுமிக்க அனைத்து ஊர் சகோதரர்களுக்கும் நாம் கூருவது:-

இத்தகைய ஷைத்தானிய படைகள் தங்கள் வேலைகளை செய்துகொண்டுதான் இருக்கும். இதுவும் நம்முடைய ஈமானின் வலுவை வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ் செய்யும் சோதனை.

நாம் உணர்வற்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல், போராடாமல் இருந்து, எனக்கென்ன வம்பு என்று இருந்து விடுவோமானால், நாம் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் நம் சந்ததிகளுக்கு நடக்க நேரிடும் என்று எச்சரிக்கிறெம். அல்லாஹ் நம்மையும் நம் சந்ததிகளையும் காப்பாற்றுவானாக, ஆமீன்.

وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ

ஸூரத்துல் அன்ஃபால் 8:60. அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களன்றி (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.

" இவர்களன்றி (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான்." என்று அல்லாஹ் கூருவதை நன்கு மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Ahamed Ameen சொன்னது… Whoever(local or other town) the Ulamas preaching againgt shirk and making reforms in community should be straight forward and should have good approach. If the approach is not correct, then there will be no effect in speech and reforming only conflicts will be the result.

Our local brothers are having enough awareness against the shirk and bid'ath and our ulamas are also having enough knowledge and commanding in speech. But they are careful in not to make any conflicts. This is the right approach to keep the dignity and ensuring harmony. Gradual change is long lasting ones, and effective.//

வ அலைக்குமுஸ்ஸலாம் அஹமது அமீன்(நண்பன்),

நம்மூரில் உள்ள ஆலிம்களின் அறிவு, திறமை உள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை.

இஸ்லாம் தோன்றி காலம் முதல் ஷிர்க் பித்அத்துக்களுக்கு எதிராக குரல் கொடுத்த உலமாக்கள் பலருக்கு எதிர்ப்புகள் வந்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் வரலாறுகள் உள்ளன.

அமீன்... நீங்கள் குறிப்பிடும் good approach என்னவென்பதை குறிப்பிட்டு சொன்னால் பிரச்சினை இல்லாமல் எப்படி மக்கள் திருத்த முடியும் என்பதை நாம் எல்லோரும் தெரிந்துக்கொள்ளலாம்.

ஒரு அநீதி நடந்தால், அவற்றை தடுக்க நமக்கு சக்தி இருந்தால் கையால் தடுப்பதும், நாவால் தடுப்பதும், நம்மிடம் சக்தியில்லை என்ற மனதளவில் வெறுத்து விளகி இருப்பதும் நாம் அறிந்ததே. முன்றாவது அம்சம் என்பது பல்கீனமான ஈமான் என்பதும் நாம் அறிந்ததே. அறியாமையில் இருக்கும் மக்களுக்கு குர் ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய தற்காலத்தில் நம்மால் முடிந்தது மார்க்க சொற்பொழிவுகள் மட்டுமே.

அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சி சத்தியத்தை எடுத்துச்சொல்லும் உள்ளூர் ஆலிம்கள் முன் வந்தால், எந்த பிரச்சினையும் வராது.

மவ்லிதுகளையும்,தர்கா வழிபாடுகளை ஆதரிக்கும் so called மவ்லவிகள், தங்களின் அநியாங்களை சுட்டிக்காட்டும் மார்க்க அறிஞர்களை பலிவாங்க துடிக்கும் கேடுகெட்ட மனிதர்கள் திருந்தாதவரை பிரச்சினை வந்துக்கொண்டே தான் இருக்கும்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மார்க்க அறிஞர்கள் அடிபணிந்து போனதன் விளைவால் தான் இன்று நம்முடைய மார்க்கத்தில் பித்அத்துகள் என்ற பெயரில் அனாச்சாரங்கள் தலைவிரிதாடுகிறது.

அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்துக்கொள்வோம்.

இறுதியாக, ஏகத்துவத்தின் முன்னோடி நபி இபுராஹீம் (அலை), நம் உயிருனும் மேலான முஹம்மது நபி(ஸல்), சத்திய சஹாப்பாக்கள் இவர்கள் பட்ட கஷ்டங்களையா நம்முடைய ஆலிம்கள் எதிர்க்கொள்ளப் போகிறார்கள்?

பிலால் (ரழி) அவர்களின் வாழ்க்கை வரலாறை கேட்டுப்பாருங்கள், நம்முடைய ஈமான் கொஞ்சமாவது வலுபெறும். இன்ஷா அல்லாஹ்.

http://www.youtube.com/watch?v=cRvtmqq0sbw

Unknown said...

Ahamed Ameen சொன்னது…
//Our local brothers are having enough awareness against the shirk and bid'ath and our ulamas are also having enough knowledge and commanding in speech. But they are careful in not to make any conflicts. This is the right approach to keep the dignity and ensuring harmony. Gradual change is long lasting ones, and effective.//

நாம் மேலே குறிப்பிட்டது போன்று சிரியாவின் உலக பிரபலம் மிக்க உலமாவான ஸயீத் அல்பூத்தி போன்றவர்கள், அமைதி ?? விரும்பிகள் நம் ஊரிலும் இருக்கத்தான் செய்கிறார்கள், இஸ்லாத்திற்கு சமாதி கட்டுவதற்கா இவர்கள் ?

adiraimansoor said...

தக்வாபள்ளியின் நிர்வாகம் தொடர்ந்து ஈமான் இஸ்லாம் தெரியாத அறை வேக்காடுகளின் கையில்தான் சிக்குகின்றது. இவர்கள் என்ன நினைக்கின்றார்கள்
தக்கவா பள்ளியில் ஹைதர் அலி ஆலிமின் பயாணை நிறுத்திவிட்டால் ஊரிலேயே நிறுத்திவிட்டோம் ஆலிம் அவர்கள் ஊரைவிட்டே ஓடிவிடுவார் என்று நினைக்கின்றார்களா? அப்படி நினைக்கும் அறை வேக்காடுகள் தானே தனக்கு மண்ணள்ளிக் கொட்டுகின்றார்கள்,தனக்குத்தானே துப்பிக்கொள்கின்றார்கள்.ஏற்கனவே ஆலிம் அவர்களின் பயானை நிறுத்தியவர்களுக்கு,நிறுத்த முற்பட்டோர்களுக்கும் அல்லாஹ் மறைமுகமாக தண்டனயை வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றான். என்பது இவர்களுக்கு புரியவில்லையா? அல்லது அல்லாஹ்விடமே இருமாப்புக்கொண்டு தண்டனை பெரிதாக எதிர்பார்க்கின்றார்களா? அல்லாஹ் காப்பற்றறும். தக்வா பள்ளி இல்லை என்றால் எத்துனையோ பள்ளிவாசல்கள், வீடுகள்.ஊருக்கு கேவளத்தை உண்டாக்கும் நிர்வாகிகளின் கையில் தக்வா பள்ளி இருக்கும் வரை தக்வா பள்ளியை காப்பாற்றுவது ரொம்ப கஷ்டம். இவர்கள் வீம்புக்காக பூசாரிகளை தக்வா பள்ளிக்கு கொண்டுவரக்கூட தயங்க மாட்டார்கள்.கண்ணிய மிக்க ஹைதர் அலி ஆலிமின் கம்பீர குரல் அதிரையில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.எந்த கொம்பனாலும், எந்த அறைவேக்காடுகளாலும் ஆலிம் அவர்களின் கம்பீர குரலை கேட்கவிடாமல் நிறுத்திவிட முடியாது என்பதை சொல்லிவைக்கின்றோம்.

அதிரைமன்சூர்

Adirai pasanga😎 said...

//ஏன் தக்வா பள்ளியில் பயான் செய்ய வேண்டும், ஏன் சித்தீக் பள்ளியில் செய்ய வேண்டியது தானே என்று கேட்பவர்களுக்கு:--

தக்வா பள்ளி யார் அப்பன் வீட்டு சொத்தும் அல்ல. அது அல்லாஹ்வுக்கு சொந்தமானது. உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சொந்தமானது. அங்கு அல்லாஹ்வை வணங்குவதை, அவனுடைய மகத்துவத்தை எடுத்துரைக்க தடை விதிப்பதற்கு யாருக்கும் தகுதியில்லை. இந்த பள்ளியில் விதிக்கும் தடையை நாங்கள் ஏற்று அமைதி காக்கும் பட்சத்தில் இத்தகைய தடைகளை ஒவ்வொரு பள்ளியாக நிறைவேற்றி நயவஞ்சகர்கள் வெற்றி காண்பார்கள்.

கடைசியாக இஸ்லாமிய பற்றுமிக்க அனைத்து ஊர் சகோதரர்களுக்கும் நாம் கூருவது:-

இத்தகைய ஷைத்தானிய படைகள் தங்கள் வேலைகளை செய்துகொண்டுதான் இருக்கும். இதுவும் நம்முடைய ஈமானின் வலுவை வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ் செய்யும் சோதனை.

நாம் உணர்வற்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்காமல், போராடாமல் இருந்து, எனக்கென்ன வம்பு என்று இருந்து விடுவோமானால், நாம் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் நம் சந்ததிகளுக்கு நடக்க நேரிடும் என்று எச்சரிக்கிறெம். அல்லாஹ் நம்மையும் நம் சந்ததிகளையும் காப்பாற்றுவானாக, ஆமீன்.


//ஒரு அநீதி நடந்தால், அவற்றை தடுக்க நமக்கு சக்தி இருந்தால் கையால் தடுப்பதும், நாவால் தடுப்பதும், நம்மிடம் சக்தியில்லை என்ற மனதளவில் வெறுத்து விளகி இருப்பதும் நாம் அறிந்ததே. முன்றாவது அம்சம் என்பது பல்கீனமான ஈமான் என்பதும் நாம் அறிந்ததே. அறியாமையில் இருக்கும் மக்களுக்கு குர் ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய தற்காலத்தில் நம்மால் முடிந்தது மார்க்க சொற்பொழிவுகள் மட்டுமே.

அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சி சத்தியத்தை எடுத்துச்சொல்லும் உள்ளூர் ஆலிம்கள் முன் வந்தால், எந்த பிரச்சினையும் வராது.

மவ்லிதுகளையும்,தர்கா வழிபாடுகளை ஆதரிக்கும் so called மவ்லவிகள், தங்களின் அநியாங்களை சுட்டிக்காட்டும் மார்க்க அறிஞர்களை பலிவாங்க துடிக்கும் கேடுகெட்ட மனிதர்கள் திருந்தாதவரை பிரச்சினை வந்துக்கொண்டே தான் இருக்கும்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மார்க்க அறிஞர்கள் அடிபணிந்து போனதன் விளைவால் தான் இன்று நம்முடைய மார்க்கத்தில் பித்அத்துகள் என்ற பெயரில் அனாச்சாரங்கள் தலைவிரிதாடுகிறது.
" இவர்களன்றி (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான்." என்று அல்லாஹ் கூருவதை நன்கு மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்துக்கொள்வோம்.//

//இறுதியாக, ஏகத்துவத்தின் முன்னோடி நபி இபுராஹீம் (அலை), நம் உயிருனும் மேலான முஹம்மது நபி(ஸல்), சத்திய சஹாப்பாக்கள் இவர்கள் பட்ட கஷ்டங்களையா நம்முடைய ஆலிம்கள் எதிர்க்கொள்ளப் போகிறார்கள்?

பிலால் (ரழி) அவர்களின் வாழ்க்கை வரலாறை கேட்டுப்பாருங்கள், நம்முடைய ஈமான் கொஞ்சமாவது வலுபெறும். இன்ஷா அல்லாஹ்.//

Unknown said...

இன்று நமக்கு கிடைத்த தகவல் நயவன்சகர்களின் சதிகளை ஊர்ஜிதம் செய்வதாக இருக்கிறது.

ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கு, தக்வா பள்ளியின் தற்போது தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டவர் இன்று போன் செய்து " நாங்கள் தக்வா பள்ளியில் ஹைதர் அலீ ஆலிமை நிறுத்தி விட்டோம், எனவே நீங்களும் நிறுத்திவிடுங்கள் " என்று கூரியிருக்கிறார்.

يَحْذَرُ الْمُنَافِقُونَ أَن تُنَزَّلَ عَلَيْهِمْ سُورَةٌ تُنَبِّئُهُم بِمَا فِي قُلُوبِهِمْ ۚ قُلِ اسْتَهْزِئُوا إِنَّ اللَّهَ مُخْرِجٌ مَّا تَحْذَرُونَ

9:64. நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அது தங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்திவிடுமோ என்று பயப்படுகி(ன்றவர்களைப் போல் நயவஞ்சகர்கள் நடித்து பரிகசிக்கின்)றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் பரிகசித்துக்கொண்டே இருங்கள். ஆயினும், நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்கியே தீருவான்."

الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ بَعْضُهُم مِّن بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِالْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ ۚ نَسُوا اللَّهَ فَنَسِيَهُمْ ۗ إِنَّ الْمُنَافِقِينَ هُمُ الْفَاسِقُونَ

9:67. ஆணாயினும் பெண்ணாயினும் நயவஞ்சகர்கள் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (அனைவருமே) பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவார்கள்; நன்மையான காரியங்களைத் தடை செய்வார்கள். (செலவு செய்ய அவசியமான சமயங்களில்) தங்கள் கைகளை மூடிக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆதலால், அல்லாஹ்வும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள்தான் (சதி செய்யும்) கொடிய பாவிகள்.

وَعَدَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا ۚ هِيَ حَسْبُهُمْ ۚ وَلَعَنَهُمُ اللَّهُ ۖ وَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ

9:68. நயவஞ்சகரான ஆண்களுக்கும் பெண்களுக்கும் (அவ்வாறே மற்ற) நிராகரிப்பவர்களுக்கும் நரக நெருப்பையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமா(ன கூலியா)கும். அன்றி, அல்லாஹ் அவர்களை சபித்தும் இருக்கின்றான். மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.

كَالَّذِينَ مِن قَبْلِكُمْ كَانُوا أَشَدَّ مِنكُمْ قُوَّةً وَأَكْثَرَ أَمْوَالًا وَأَوْلَادًا فَاسْتَمْتَعُوا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُم بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِينَ مِن قَبْلِكُم بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِي خَاضُوا ۚ أُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ

9:69. (நயவஞ்சகர்களே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்ளிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கின்றது. அவர்கள் உங்களைவிட பலசாலிகளாகவும், (உங்களை விட) அதிக பொருளுடையவர்களாகவும், அதிக சந்ததியுடையவர்களாகவும் இருந்து (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த இப்பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன்னிருந்த இவர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு (இவ்வுலகில்) சுகமடைந்தவாறே, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு சுகமடைந்து விட்டீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள். இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. (அதனால்) அவர்கள் பெரும் நஷ்டமடைந்து விட்டார்கள். (அவ்வாறே நீங்களும் நஷ்டமடைவீர்கள்.)

adiraimansoor said...

கண்ணிய மிக்க ஹைதர் அலி ஆலிம் அவர்கள் ஒரு நடமாடும் இஸ்லாமிய நூலகம்
அந்த நூலகத்தின் வாயிலாக பயனடைந்த மக்கள் ஏராளம். குறிப்பாக சொல்லப்போனால் பயனடைந்த பெண்கள் அதிகம். அந்த நூலகத்தை மூட நினைக்கும் அறிவிலிகளுக்கு ஓர் பகிரங்க எச்சரிக்கை இஸ்லாமிய நூலகத்தின்மீது போர்தொடுக்க நினைத்து உங்களையே அழித்துக்கொள்ளாதீர்கள். அரசு அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் என்பதெல்லாம் மலை ஏறிவிட்டது.இப்பொழுதெல்லாம் தெய்வம் அன்றே கொள்ளும்.எத்துனையோ காட்சிகள் அரங்கேறுவதை கண்ணால் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். அல்லாஹ்வின் பள்ளியை நிர்வகிக்க பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகளே பள்ளியை நிர்வகிக்குமுன் உங்கள் அகங்காரம்,ஆனவங்களை அடக்கி ஆளக்கற்றுக்கொள்ளுங்கள்.ஆட்சி தம்மிடமுள்ளது என்று ஆடாதீர்கள்.உங்கள் இந்த ஈனச்செயள்களினால் அல்லாஹ்வின் கோவப்பார்வையை எங்களுக்கும் பெற்றுத்தராதீர்கள்
இறைவனின் அதாபு வந்தால் நீங்கள் செய்யும் அக்கிரமங்களை தட்டி கேட்க தவறும் பாமர மக்களயும்தான் வந்து சேறும்.

அதிரைமன்சூர்

Unknown said...

மேலும் ஒருவர், பல பள்ளிகளின் கவுரவ தலைவராக இருக்கும் ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்தவர், சென்னை நிறுவனத்தின் தலைவர். அவரும் மேலெத்தெரு ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கு இன்று போன் செய்து நமதூர் பிரபல ஆலிம் கூரியதாகசொல்லி உங்களுடைய பள்ளியிலும் நிறுத்துங்கள் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறார்.

adiraimansoor said...

சகோதரர் எம்.கே.அபூபக்கர் சுட்டிக்காட்டியது போன்று
வட்டி,வரதட்சனை,மெளலிது,கந்துரி போன்ற அனாச்சாரங்களுக்கு எதிரான பிரசாரத்தை ஆதிக்க வர்க்கத்திற்கு அஞ்சாமல் உரக்க சொல்ல உள்ளூர் ஆலீம்கள் யாராவது தயாராக இருந்தால் தைரியமாக வாருங்கள் எந்த கயவர்களுக்கும் அஞ்சவேண்டாம்.உங்களுக்கு பக்க பலமாக இருக்க நம் இளைய சமுதாயம் தயாராகவே இருக்கிறது.மரணிப்பது ஒரு தடவைதான் அது அல்லாஹ்வின் பாதையில் மரணிக்க தயாராகுங்கள்.

அபு முஹம்மத் said...

அதிரை நிருபர் ஆசிரியர்குழுவிற்க்கு,

இந்த எழுச்சிமிக்க கட்டுரையும் அதன் பின்னூட்டங்களும், புதியதாக பதியப்படும் கட்டுரைகளால் வரிசயில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடுகிறது. எப்பொழுதாவது வருகைதரும் வாசகர்களுக்கு இச்செய்தி சென்றடையும் பொருட்டு இக்கட்டுரையை Dashboard Pinning செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.

அப்துல் கபூர்
துபை.

adiraimansoor said...

கேரளா முஸ்லியார்களையும் அதன் அடிவருடிகளையும் இனம் கண்டு செயள்படுங்கள்

Unknown said...
This comment has been removed by the author.
Adirai pasanga😎 said...

//இதில் எது குற்றம் ?
இவை அனைத்துமே குற்றமென்றால்
இக்குற்றம் அனைத்தையும் ஆதரிக்க அல்லாஹ் அதிரையின் அனைத்து முஹள்ளவாசிகளுக்கும் துணை நிர்ப்பானாக !//
//அனைத்து பழி சொல்லிளிரிந்தும் அல்லாஹ் அவர்களை மீட்டெடுத்து
தொடர்ந்து அவர்களின் கம்பீர பயானை நாம் அனைவரும் கேட்டு அதன்படி
வீரிய ஈமானுடன் இவ்வுலகை விட்டும் பிரிய அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக !//

சகோதரர் அப்துல் காதர் அவர்களே -

கன்னியமிக்க ஹைதர் அலி ஆலிம் அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி அல்லாஹ்விற்காகவே நமதூரில் சத்திய மார்க்கப்பணி செய்கிறார் என்பது நமது ஊர் அனைத்துமக்களுக்கும் தெரிந்ததே. இருந்தும் அதனை எதிர்ப்பவர்களின் சுய லாபம், அ நியாயங்களுக்கு அவரின் பயான் எச்சரிக்கை செய்வது போன்று தெரிவதால் அவர்கள் இதனை எதிர்க்கிறார்கள். அல்லாஹ்விற்கு எதிரான அக்கிரமக்காரர்களின் அட்டூளியங்களையும் அதற்காக அவர்கள் பெற்ற தண்டனைகளையும் உண்மை வரலாற்றின் மூலம் தெளிவாகவே கூறுகிறார்.
இருந்தும் அவர்கள் அதனைக்கொண்டு படிப்பினை பெறாமல் நயவஞ்சகத் தனமாகவே நடக்கிறார்கள் என்றால் அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டி அவனது தண்டனையிலிருந்து அல்லாஹ்தான் அனைவரையும் காப்பற்றவேன்டும்

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அப்துல் கபூர் இந்த லிங்கை ஃபேஸ்புக்கில்உள்ள அதிரை சகோதரர்களின் டைம்லைனில் பரப்பி விடுங்கள்

http://adirainirubar.blogspot.com/2013/04/blog-post_2605.html?showComment=1366994994410#c1006249986118442424

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கண்ணியமிக்க ஹைதர் அலி ஆலிம்

ஒரு நடமாடும் இஸ்லாமிய பல்கலைக்கழகம்

சத்தியத்திற்காக போராடும் ஒரு ஆலிமை அவர் ஒரு வெளியூரை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்க்காக பலவகையான அபாண்டமான சம்பந்த மில்லாத குற்றச்சட்டுகளைக்கூறி , காவல் நிலையம் வரை செல்லக்கூடிய அளவுக்கு
தன் சமுதாய கௌரவத்தின் மீது தானே மண்ணை அள்ளி வாரி இறைப்பதுபோல் இவர்களின் செய்கைகள் இருக்கின்றன.

இவர்கள் செய்த குற்றம்தான் என்ன ?

இன்றுவரை கண்ணியத்திற்குரிய அப்துல் லத்தீப் ஆலிம் அவர்களின் ஆக்ரோஷமான, நெஞ்சுருதிமிக்க , அல்லாஹ்வின் பயத்தினை ஒவ்வரு பயானிலும் ஏற்ப்படுத்தக்கூடிய அளவுக்கு, அவர்களுக்குப்பிறகு
பயான் செய்கிறார்களே அது குற்றமா ?

ஊரில் மண்டிக்கிடக்கும் மார்க்கம் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரங்களையும் , பித் அத்துகளையும் பகிரங்கம் செய்கிறார்களே அது குற்றமா ?

இவர்கள் பயாணினால் அதிரை பெண்களிடம், மாபெரும் மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்டுரிக்கின்றதே அது குற்றமா ?

அதிரையில் புனித ரமலான் மாதம் இளைஞ்கர்கள் மத்தியில் இரவில்
நேரம் வீணடிக்கப்படாமல் நேரத்தின் அமல்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அவர்களை ரமளானின் கண்ணியத்தை பேணும் நல்ல இளைஞர்களாக மாற்றி இருக்கின்றார்களே அது குற்றமா ?

இறைவனின் இல்லத்தின் சொத்துக்களை மீட்டு அதை பள்ளியின் நிர்வாகத்திடமே ஒப்படைக்க போராடுகிறார்களே அது குற்றமா ?

தன்மீது அபாண்டமான வீண் பழிகளை போட்டும் பொறுமையோடு சகித்துக்கொண்டு தன் நிலையில் மாறாமல் அல்லாஹ்வுக்காக தன் விளக்கங்களை கொடுத்தார்களே அது குற்றமா ?

ஹைதர் அலி ஆலிம் பயான் செய்தாலே நாளை மஹ்ஷரை நினைத்து ஒரு நடுக்கமும் அல்லாஹ்வின் அச்சமும் கடுமையாக ஏற்படுகின்றது என்று பயானைக்கேட்டுவிட்டு வெளியில் வருபவர்கள் ஒரு அச்சத்துடன் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கின்றார்களே அது குற்றமா ?

தமிழை ஒழுங்காக உச்சரிக்கத்தெரியாதவர்கலெல்லாம் பயான் சொல்லக்கேட்டு ஒரு அச்சமோ நடுக்கமோ ஏற்படாமல் இருந்த அதிராம்பட்டினம் சூழ்நிலையை மாற்றி , அழகிய தமிழிலில் பயானில் ஒரு உயிரோட்டத்தை தந்து கொண்டு இரிக்கின்றார்கலே அது குற்றமா?

இதில் எது குற்றம் ?
இவை அனைத்துமே குற்றமென்றால்
இக்குற்றம் அனைத்தையும் ஆதரிக்க அல்லாஹ் அதிரையின் அனைத்து முஹள்ளவாசிகளுக்கும் துணை நிர்ப்பானாக !

அனைத்து பழி சொல்லிளிரிந்தும் அல்லாஹ் அவர்களை மீட்டெடுத்து
தொடர்ந்து அவர்களின் கம்பீர பயானை நாம் அனைவரும் கேட்டு அதன்படி
வீரிய ஈமானுடன் இவ்வுலகை விட்டும் பிரிய அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக !

ஆமீன்
யாரப்பல் ஆலமீன்.

அபு ஆசிப்.

Unknown said...

Assalamu Alaikkum

///ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கு, தக்வா பள்ளியின் தற்போது தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டவர் இன்று போன் செய்து " நாங்கள் தக்வா பள்ளியில் ஹைதர் அலீ ஆலிமை நிறுத்தி விட்டோம், எனவே நீங்களும் நிறுத்திவிடுங்கள் " என்று கூரியிருக்கிறார். ///

Dear brothers and sisters,

The above statement also seems to be baseless. I request any news you read or listen to be double checked with the concerned people, till then don't delieve and act based on the news.

May Allah protect us from satan whoever confusing us and causes chaos.

Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com.

Unknown said...

//Ahamed Ameen Said....
The above statement also seems to be baseless. I request any news you read or listen to be double checked with the concerned people, till then don't delieve and act based on the news.//

Above said news not only confirmed but made sure again and again from some of members. Thaqwa Masjid new foolish chief does not only tell west street Juma Masid committee to stop Haidar Ali Aalim. He threatened to start Juma at Thaqwa masjid, if they don't stop Haidar Ali Aalim. Their response was " You can start Khutba in all Masjid, we don't care"

That's why we said their intention was not to stop from one Masjid only, rather from all Masaajids

We don't put unconfirmed report for public view.

Unknown said...


To all concerned brothers, please put aside your personal relationships when it comes to the truth, Allaah and His deen.

4:135 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰ أَنفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ أَوْلَىٰ بِهِمَا ۖ فَلَا تَتَّبِعُوا الْهَوَىٰ أَن تَعْدِلُوا ۚ وَإِن تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا
4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.

On the day of Judgement nobody will come to rescue yourself.
4:107 وَلَا تُجَادِلْ عَنِ الَّذِينَ يَخْتَانُونَ أَنفُسَهُمْ ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ خَوَّانًا أَثِيمًا
4:107. (நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
4:108 يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَىٰ مِنَ الْقَوْلِ ۚ وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا
4:108. இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.
4:109 هَا أَنتُمْ هَٰؤُلَاءِ جَادَلْتُمْ عَنْهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا فَمَن يُجَادِلُ اللَّهَ عَنْهُمْ يَوْمَ الْقِيَامَةِ أَم مَّن يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًا
4:109. (முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?

I'm compelled to type in English as I'm far from my PC and traveling.

Unknown said...

நீங்கள் உண்மையிலேயே உங்கள் உறவினர்களின் மீது அலவற்ற பாசமும் அன்பும் கொண்டிருந்தாள், அவர்களை இம்மை மறுமையின் இழிவுகளிலிருந்து காக்க விரும்பினால் இதனை கவனமாக படியுங்கள்:-

எங்களின் உயிரினும் மேலான அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒருமுறை இப்படி சொன்னார்கள்:

وأنصر أخاك ظالما أو مظلوما أو كما قال صلى الله عليه وسلم

உன்னுடைய சகோதரன் அநியாயம் செய்யும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்ட நிலையிலும் அவனுக்கும் உதவி செய் என்று கூரியவுடன்,

அநியாயம் செய்பவர் தன் உறவினாராக இருந்தால் அவருக்கு உதவிசெய்வது இருண்ட அறியாமைக் காலத்தின் பழக்கமாயிற்றே என்று ஆச்சரியம் அடைந்த கண்ணியம்மிக்க ஸஹாபாக்கள், அநியாயம் செய்பவருக்கு நாங்கள் எப்படி உதவி செய்வது என்று கேட்டார்கள்.

அதற்கு எங்கள் ஈருலகத் தலைவர் (ஸல்) கூறினார்கள்:

அநியாயம் செய்பவருக்கு உதவி செய்வதானது அவர் அநியாயம் செய்வதை விட்டும் அவர் கையைப் பிடித்தாவது நிறுத்துவது எனும் கருத்தில் கூரினார்கள் (குறிப்பு இங்கே தமிழ் மற்றும் அரபி ஹதீஸ் வாக்கியங்கள் மிகச்சரியாக ஹதீஸ் புத்தகத்திலிருந்து எழுதவில்லை, காரணம் வீட்டிலிருந்து தூரத்தில் இருப்பதால், அல்லது நபி (ஸல்) அவர்கள் கூரியது போன்று என்று அரபி வாக்கியத்தில் நாம் குறிப்பிட்டுள்ளோம்)
எனவே உங்கள் உறவினர்கள் செய்யும் அநியாயத்தை நியாயப்படுத்தவோ, அதை மூடி மறைக்கவோ முயல வேண்டாம். இவ்வாறு செய்வது அவர்களை நரக படுகுழியில் தள்ளுவது அல்லாமல், உங்களையும் அவர்கள் இழுத்துக்கொண்டு அவர்கள் செல்லும் இடத்திற்கு கொண்டு சென்றுவிடுவார்கள்.

அவர்களையும் உங்களையும் இழிவு தரும் வேதனையிலிருந்து காக்க முயலுங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் இம்மை மறுமையின் இழிவுகளிலிருந்து காப்பானாக. ஆமீன்...

sabeer.abushahruk said...

இந்தக் கருத்தை என்னால் பதியாமல் இருக்க முடியவில்லை.

கருத்தினில் கடுங்கோபம் இருப்பினும் வார்த்தைகளில் கண்ணியம் காக்கும் என் சகோதரர்களே உங்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

இத்தனை ஆரோக்கியமான விவாதத்தையும் அதற்கு வலுசேர்க்கும் மார்க்க ஆதாரங்களையும் கண்டு மெய்சிலிர்த்துப் போகிறேன்.

இந்தப் போராட்டத்தில் நியாயம் வெற்றிபெற என் துஆ.

(பேசுபொருளில் எனக்கு அபிப்ராயம் சொல்ல விபரம் போதாது)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இத்தனை ஆரோக்கியமான விவாதத்தையும் அதற்கு வலுசேர்க்கும் மார்க்க ஆதாரங்களையும் கண்டு மெய்சிலிர்த்துப் போகிறேன்.
நியாயம் வெற்றிபெற என் துஆ.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...மேலே சகோ. அஹமது அமீனுக்கு நாம் பதில் எழுதியதில் ஆங்கிலத்தில் குறிப்பிட்டதை, ஆங்கிலம் புரியாத சகோதரர்களுக்கு இங்கு மீண்டும் தமிழில் பதிகிறோம்.

சகோதரர் இதுவும் அடிப்படை இல்லாத கூற்று( பொய் கூற்று,The above statement also seems to be baseless ஏதோ எல்லா கூற்றுகளையும் பொய் என்று இவர் நிரூபித்தது போன்றும், அத்தகைய கூற்றுகளில் இதுவும் உள்ளது என்பதாகவும் ) என்று குறிப்பிட்டிருந்தார்.
நாம் பலமுறை ஊர்ஜிதம் செய்யாமல் எந்த செய்தியையும் இங்கே பதிவதில்லை.

தற்போது தலைவராக தெரிந்தெடுக்கப்பட்ட தக்வா பள்ளியின் உரிமையாளரைப் போன்று செயல்பட்டு வரும் சுயமாக சிந்திக்க முடியாதவர், சிலரின் தூண்டுதலின் பேரில் மேலெத்தெரு ஜும்ஆ பள்ளியின் நிர்வாக பொறுப்பில் உள்ள முக்கியஸ்தருக்கு போன் செய்து, நாங்கள் தக்வா பள்ளியில் நிறுத்தி விட்டோம் எனவே நீங்களும் நிறுத்தி விடுங்கள் என்று கேட்டதற்கு, அந்த நிர்வாகி நாங்கள் எங்கள் கமிட்டி கூடிதான் முடிவு செய்ய வேண்டும் நீங்கள் சொல்வதற்காக நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது என்று கூரியிருக்கிறார்.

அதற்கு இந்த சுயமாக சிந்திக்க முடியாதவர் , நீங்கள் நிறுத்தவில்லை என்றால் நாங்கள் தக்வா பள்ளியில் ஜும்ஆ குத்பா தொடங்குவோம் என்று மிரட்டியிருக்கிறார். அதற்கு அவர்கள், நீங்கள் தக்வா பள்ளியில் மட்டுமல்ல எல்லா பள்ளிகளிலும் தொடங்குங்கள் அது பற்றி எங்களுக்கு கவலையில்லை என்று கூரியிருக்கிறார்.

இதன் மூலம் நாம் கூரிய கூற்றான ஒருபள்ளியில் மட்டும் நிறுத்துவது என்பது இவர்களின் கொள்கையல்ல, மாறாக எல்லா பள்ளியிலும் நிறுத்த வேண்டும் என்ற போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் என்ற கூற்று ஊர்ஜிதமாகிறது.

இதில் அதிரையின் ஒரு சில குடும்பங்கள் தங்களின் அதிகார திமிரை வைத்து சாதிக்க கங்கணம் கட்டி களத்தில் இறங்கியிருக்கிறது.

40:29 يَا قَوْمِ لَكُمُ الْمُلْكُ الْيَوْمَ ظَاهِرِينَ فِي الْأَرْضِ فَمَن يَنصُرُنَا مِن بَأْسِ اللَّهِ إِن جَاءَنَا ۚ قَالَ فِرْعَوْنُ مَا أُرِيكُمْ إِلَّا مَا أَرَىٰ وَمَا أَهْدِيكُمْ إِلَّا سَبِيلَ الرَّشَادِ

40:29. “என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது; நீங்கள் தாம் பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர் யார்?” என்றும் கூறினார்;) அதற்கு: “நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை” என ஃபிர்அவ்ன் கூறினான்.

40:44 فَسَتَذْكُرُونَ مَا أَقُولُ لَكُمْ ۚ وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ
40:44. “எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்” (என்றும் அவர் கூறினார்).

40:45 فَوَقَاهُ اللَّهُ سَيِّئَاتِ مَا مَكَرُوا ۖ وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ
40:45. ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.

40:46 النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا ۖ وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ
40:46. காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்).

இத்தகைய திமிர் பிடித்தோரை கன்மூடித்தனமாக பின்பற்றுவோருக்கு அல்லாஹ் கூறுகிறான்:-

40:47 وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا نَصِيبًا مِّنَ النَّارِ
40:47. அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலஹீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம் - எனவே, எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது விலக்கி வைப்பீர்களாக?” என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவுட்டுவீராக!).

40:48 قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُلٌّ فِيهَا إِنَّ اللَّهَ قَدْ حَكَمَ بَيْنَ الْعِبَادِ
40:48. (அப்போது:) “நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கிறோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்து விட்டான்” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள்.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் என்று வந்துவிட்டால், சொந்தங்கள், வீடு, தெரு, ஊர்மக்கள் என்பதெல்லாம் அடுத்தக் கட்டமே. அசத்தியத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் நம் பங்கு என்றும் முன்னனியில் இருக்கும்.

இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹூ அக்பர்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்களே,

எப்படி ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு உதவலாம் என்று யோசியுங்கள்,பின் அதை நடைமுறைபடுத்த என்ன வழி என்பதை சொல்லுங்கள்,இப்படியே கமெண்ட்ஸ் இட்டுக்கொண்டு இருந்தால் ஒரு நல்ல ஆலிமை நாம் இழக்க நேரிடும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு எதிரிகள் எல்லா வகையுளும் (விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்) இருக்கிறார்கள்.நாம்தான் அவர்களுக்கு உதவ வேண்டும்,என்ன செய்யலாம்?

jahir hussain hussain
h**********@gmail.com

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய ஊரில் உள்ள மற்றும் ஊரைவிட்டும் வெளியில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் இந்த விசயம் முழுமையாக முதலில் எத்தி வைக்கப்படவேண்டும். பின் ஊரில் உள்ள அனைத்து அமைப்பு மற்றும் இயக்கங்களில் இருக்கும் அவர்களுக்கு ஆதரவான சகோதரர்கள் ஒருங்கினைந்து உடனடியாக இது சம்பந்தமாக ஒரு அவசர அமர்விற்கு ஏற்பாடு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உடனேயே முயற்சி செய்வது நல்லது என்பதை நான் தற்போது எனது யோசனையாகத் தெரிவிக்கிறேன். தயவு செய்து இயக்கம், அமைப்பு, கட்சி என்று முன்னுரிமை கொடுத்து விடாமல் அல்லாஹ்விற்காக சத்தியத்திற்காக அனைவரும் ஒருமித்து ஒரு முடிவிற்கு வந்தால் அல்லாஹ் நமது ஊரை நய வஞ்சகத்திலிருந்தும், மிகக் கொடிய ஆபத்தான நோயிலிருந்தும் காப்பாற்றுவான் - இன்ஸா அல்லாஹ்...

Unknown said...

Abu Mus'ab சொன்னது…
\\அதுசரி நீங்களும் அங்கு உள்ளவர்தானா? நீங்கள் உண்மையை மூடி மறைக்க முயன்றதால்தான் நாம் மறுப்பு எழுத வேண்டியுள்ளது\\

இது தேவை இல்லாத விசயம்..அது என்ன கேள்வி.. நீங்களும் அதில் உள்ளவர்தானா? அதிரையில் உல்ல அனைத்து வளைதலங்கலும் அதிரைவாசிகள் அனைவருக்கும் உரியது... நீங்கள் குத்தகைக்கு எதுதிருக்க்றீர்களா?

Abu Mus'ab சொன்னது…
\\எங்களின் உயிரினும் மேலான தீனுக்காக, அல்லாஹ்வுக்காக சப்போர்ட் பண்ணுகிறோம். உங்களைப் போன்று மற்றவர்களுக்காக அல்ல\\

உங்களுக்கு மட்டும் தானா தீன் முக்கியம்.
ரொம்ப பேசியவர்கள் Address இல்லாமல் போனதை நீங்கள் அரியவில்லையா..Abu Mus'ab என்பது உங்களின் புனை பெயரா?Shameed said...

ஒரு காலத்தில் நம்மூர் காரர்கள் என்றால் நாணயமாக இருப்பார்கள் இப்போது (ஒருசிலரால்) அதிரைகாரர்கள் என்றால் நாணயத்திற்காகவே இருக்கின்றார்கள்

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Shameed,

Its rare to find "நா நயம்" too nowadays.

I would like to know any resolution arrived for the subject talked? Brothers, please update.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
http://www.dubaibuyer.blogspot.comUnknown said...


9:105 وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ ۖ وَسَتُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
9:105. (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்ற நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலை பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். அன்றி மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் நிச்சயமாக நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்த(து எத்தகையது என்ப)தை அது சமயம் அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.


26:208 وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
26:208. (உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரையில் எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை.

சகோ முகமது ஆபிதீன் அவர்களுக்கு...
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் உங்கள் விவாதங்கள் ஒரு கம்பீரம்மிக்க ஆண்மகனுக்கு உரியதாக நமக்கு தெரியவில்லை. வெளி உலகம் அறியாத வெகுளிப்பென்கள் பேசுவது போன்று உள்ளது.

எங்கள் இரட்சகனாகிய அல்லாஹ் அவனுக்காக போரிடுபவர்களை ஓரு போதும் அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிட மாட்டான். உங்கள் உள்ளத்தில் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருந்து அது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பலனளிக்குமென்றால் உங்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டி உங்களை சுவனத்தில் புகச்செய்வானாக ஆமீன் அதுவே எமது துஆ. அதற்கு மாற்றமாக சில தீய விஷயங்கள் உங்கள் உள்ளத்தில் குடியிருந்து அது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று அல்லாஹ் அறிந்திருந்தால் உங்களை அட்ரஸ் இல்லாமல் அல்லாஹ் ஆக்கிவிடுவான். நாம் நமக்கு மட்டும்தான் இஸ்லாமிய உணர்வு இருக்கிறது என்று ஒரு போதும் தம்பட்டமடித்ததில்லை. மாறாக நாம் பலகீனர்கள் என்பதை அறிந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடியவர்கலாகவே இருக்கிறோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// Ahamed Ameen சொன்னது… I would like to know any resolution arrived for the subject talked? Brothers, please update. //

ஊரில் உள்ள ஆலிம்கள் ஊரில் குர் ஆன் சுன்னா அடிப்படையில், அல்லாஹ்வை தவிர வேறு எந்த அதிகாரத்தில் உள்ள யாருக்கும் அஞ்சாமல் ஷிர்க் பித் அத்துக்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

தலைவர்கள் என்று இரட்டை வேடமிடுபவர்களை மக்கள் புறக்கனிக்க வேண்டும்.

தங்களின் சுய லாபங்களுக்காக பழிவாங்கு எண்ணத்துடன் செயல்பட்டு அல்லாஹ்வின் சத்தியத்து எதிராக தொடர்ந்து அத்துமீறுபவர்கள் தங்களின் தவறுகளை எண்ணி திருந்த வேண்டும் என்பது கருத்திட்ட அநேகர்களின் எண்ணமாக உள்ளது.

வழக்கம் போல் நடைபெற்று வரும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தக்வா பள்ளியில் நடைபெற்று மக்கள் பயன்பெற வேண்டும். அப்படி இல்லை என்றால், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை நிறுத்தியற்கான காரணத்தை எழுத்து பூர்வமாக பொதுவில் வைக்க வேண்டும்.

அமீன், மேலே சொல்லப்பட்டவைகள் சரியா?

Ahamed Ameen said...

Assalamu Alaikkum
Dear brother Thajudeen,

//ஊரில் உள்ள ஆலிம்கள் ஊரில் குர் ஆன் சுன்னா அடிப்படையில், அல்லாஹ்வை தவிர வேறு எந்த அதிகாரத்தில் உள்ள யாருக்கும் அஞ்சாமல் ஷிர்க் பித் அத்துக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும்//

When we compare 15 years back to the current time, considerable changes have been happened in our community. I wish preaching the truth should not make conflicts. I believe in gradual changes which are effective ones. We have model to follow from Prophet Muhammad Sallallahu Alaihiwasallam when we particularly observe how alcohol got become haram.

//தலைவர்கள் என்று இரட்டை வேடமிடுபவர்களை மக்கள் புறக்கனிக்க வேண்டும்.//

Leaders are given the responsibilities. Its an Amana. If the leaders are not committed to responsibilities, then they are unfit. The unfit cannot survive for long time.


//தங்களின் சுய லாபங்களுக்காக பழிவாங்கு எண்ணத்துடன் செயல்பட்டு அல்லாஹ்வின் சத்தியத்து எதிராக தொடர்ந்து அத்துமீறுபவர்கள் தங்களின் தவறுகளை எண்ணி திருந்தா வேண்டும் என்பது கருத்திட்ட அநேகர்களின் எண்ணமாக உள்ளது. //

Its very rare to find personalities who have true public consciousness and service mindedness. They would have key "personal agenda" when they come into public service. May Allah protect our community from such malicious people.

//வழக்கம் போல் நடைபெற்று வரும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தக்வா பள்ளியில் நடைபெற்று மக்கள் பயன்பெற வேண்டும். அப்படி இல்லை என்றால், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை நிறுத்தியற்கான காரணத்தை எழுத்து பூர்வமாக பொதுவில் வைக்க வேண்டும்.//

Let the concerned parties in the issue to sit and talk, and let them keep in their mind that Allah Subhanawathaala is seeing their thoughts and actions and their sole purpose is to service to public people for the sake of Allah.

May Allah protect us and lead us to the straight path.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Unknown said...

Abu Mus'ab சொன்னது…

\\சகோ முகமது ஆபிதீன் அவர்களுக்கு...
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் உங்கள் விவாதங்கள் ஒரு கம்பீரம்மிக்க ஆண்மகனுக்கு உரியதாக நமக்கு தெரியவில்லை. வெளி உலகம் அறியாத வெகுளிப்பென்கள் பேசுவது போன்று உள்ளது\\

இது தேவை இல்லாத விஷயமான டிச்சுச்சிஒன் என்று சொன்னேனே தவிர, நான் விவாததிற்க்கு வரவில்லை..

வாததிற்க்கு மருந்து உண்டு, விவாததுக்கு மருந்து இல்லை என்பது போல் உங்கலுடைய சுயநலம் எல்லோருக்கும் புரிகிறது.
உஙளுடைய நோக்கம் விவாதம் தான். அல்லாஹ் எல்லோரயும் பாதுகாப்பானாக ஆமீன்.


Unknown said...

//Shameed சொன்னது…
ஒரு காலத்தில் நம்மூர் காரர்கள் என்றால் நாணயமாக இருப்பார்கள் இப்போது (ஒருசிலரால்) அதிரைகாரர்கள் என்றால் நாணயத்திற்காகவே இருக்கின்றார்கள்//

//Ahamed Ameen சொன்னது…
Assalamu Alaikkum
Dear brother Shameed,

Its rare to find "நா நயம்" too nowadays.

I would like to know any resolution arrived for the subject talked? Brothers, please update. //

நேற்று தக்வா பள்ளி கமிட்டி கூடி ஹைதர் அலீ ஆலிம் அவர்களின் பயான் சம்பந்தமாக முடிவு செய்வதற்காக ஆலோசனை செய்தது. அது போது கமிட்டியின் பெரும்பான்மை உருப்பினர்கள் பயான் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று கூரினார்கள்.

அப்பொழுது சுயமாக சிந்திக்க முடியாத கமிட்டியின் புதிய தலைவர் "சங்" கத்தின் துணைத்தலைவர் ஹைதர் அலீ ஆலிம் அவர்களை நிறுத்தினால் தக்வா பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக வாக்களித்திருக்கிறார், எனவேதான் நான் நிறுத்த வேண்டும் என்று கூறுகிரேன் என்றார். ( அவர் சும்மா சொன்னாரா, அல்லது புருடா விட்டாரா, அல்லது இவர்தான் புரியாமல் புருடா விடுகிறாரா என்பதெல்லாம் நமக்கு தெறியாது. அல்லாஹ்தான் நன்கு அறிந்தவன். ஏனெனில் அவருடைய நிறுவனம் வட்டி கடனில் இருப்பதை பலரும் அறிந்திருக்கும் நிலையில் எப்படி இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியும் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.)

இறுதியாக வழக்கம் போல் பயான் நடக்க வேண்டும் என்ற முடிவுடன் கூட்டம் கலைந்ததது.

Unknown said...

//Mohamed Abideen சொன்னது…
Abu Mus'ab சொன்னது…

\\சகோ முகமது ஆபிதீன் அவர்களுக்கு...
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் உங்கள் விவாதங்கள் ஒரு கம்பீரம்மிக்க ஆண்மகனுக்கு உரியதாக நமக்கு தெரியவில்லை. வெளி உலகம் அறியாத வெகுளிப்பென்கள் பேசுவது போன்று உள்ளது\\

இது தேவை இல்லாத விஷயமான டிச்சுச்சிஒன் என்று சொன்னேனே தவிர, நான் விவாததிற்க்கு வரவில்லை..

வாததிற்க்கு மருந்து உண்டு, விவாததுக்கு மருந்து இல்லை என்பது போல் உங்கலுடைய சுயநலம் எல்லோருக்கும் புரிகிறது.
உஙளுடைய நோக்கம் விவாதம் தான். அல்லாஹ் எல்லோரயும் பாதுகாப்பானாக ஆமீன்.//

ஆம் நாம் முழுக்க முழுக்க சுயநலத்தின் காரணமாகவே இவற்றை எல்லாம் எத்தனையோ வேலைகளுக்கு மத்தியில் எழுதி வருகிறோம்.

அந்த சுய நலமானது, நாமும் நமது ஊரும் உருப்பட்டு எல்லோரும் சுவர்க்கம் போக வேண்டும் என்ற பேரவாதான். இதில் கருத்திட்ட 98% சதவீதம் (பெரும்பாலானோர்) சரியாக புரிந்து கொண்டு கருத்திட்டிருக்கிறார்கள். இதற்கு மாறாக உங்களைப் போன்ற ஒரு சிலரைத் தவிர....

Unknown said...

மேலெத் தெரு ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கு தக்வா பள்ளி மற்றும் அனைத்து முஹல்லா முஸ்லிம்களின் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எத்தனையோ மிரட்டல்களையும், வற்புறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் ஜும்ஆ பள்ளியில் தொடர்ந்து பயான் நடை பெற முடிவு செய்ததற்கு அல்லாஹ் உங்கள் அனைவரையும் பொருந்திக் கொண்டு அவனுடைய நேர்வழியிலும் சுவர்க்கத்திலும் புகச் செய்வானாக ஆமீன்.

Adirai pasanga😎 said...

//மேலெத் தெரு ஜும்ஆ பள்ளி நிர்வாகத்திற்கு தக்வா பள்ளி மற்றும் அனைத்து முஹல்லா முஸ்லிம்களின் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எத்தனையோ மிரட்டல்களையும், வற்புறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் ஜும்ஆ பள்ளியில் தொடர்ந்து பயான் நடை பெற முடிவு செய்ததற்கு அல்லாஹ் உங்கள் அனைவரையும் பொருந்திக் கொண்டு அவனுடைய நேர்வழியிலும் சுவர்க்கத்திலும் புகச் செய்வானாக ஆமீன்.//

இதன் மூலமாவது அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாகவும், நயவஞ்சகத்தையும், இன்ன பல படுபயங்கர கொடிய நோய்களைவிட்டும் அல்லாஹ் நமது ஊரையும் அகில உலகையும் காப்பானாகவும் ஆமீன்.,

Unknown said...

//அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்களே,

எப்படி ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு உதவலாம் என்று யோசியுங்கள்,பின் அதை நடைமுறைபடுத்த என்ன வழி என்பதை சொல்லுங்கள்,இப்படியே கமெண்ட்ஸ் இட்டுக்கொண்டு இருந்தால் ஒரு நல்ல ஆலிமை நாம் இழக்க நேரிடும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு எதிரிகள் எல்லா வகையுளும் (விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்) இருக்கிறார்கள்.நாம்தான் அவர்களுக்கு உதவ வேண்டும்,என்ன செய்யலாம்?

jahir hussain hussain
h**********@gmail.com//

அன்புக்குரிய சகோதரர்களுக்கு:-

ஊரின் நன்மைக்காக இனிமேலும் இது போன்று பிரச்சனைகள் தலை தூக்காமல் இருப்பதற்காக, நீங்கள் செய்ய வேண்டிய முதல் உதவி:-

ஊர்மக்கள் ஒவ்வொருவரும் பிரச்சனையில் சம்பத்தப்பட்ட "சங்" க தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், தக்வா பள்ளி தலைவர், பல பள்ளிகளின் கவுரவ தலைவராக இருக்கும் ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்தவர் ஆகியவர்களுக்கு இவ்வாறு மீண்டும் குழப்பம் விளைவிக்க வேண்டாமென்றும், இது சங்கத்தின் மீதும் இவர்களின் மீதும் மிகப்பெரும் அதிருப்தியை வெளிநாடுகளில் வாழும் அதிரை மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் கடும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும்.

இது தொலை பேசி, அலைபேசி மூலமாக முடிந்தவரை தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் ஈமெயில்கள், கடிதங்கள் மூலமாகவும் தெரிவிக்கப்படவேண்டும்.

குறிப்பாக பேறுராட்சி தலைவரிடம், இவ்வாறு செய்தால் வரும் தேர்தலில் எங்கள் குடும்பம் மற்றும் உறவினர்களின் ஒரு ஓட்டைக்கூட உங்களுக்கு சேரவிடாமலும், டெபாஸிட் இழக்கும் வகையிலும் நாங்கள் முழூ முயற்சியில் இறங்குவோம் என்பதையும் நேரடியாக தெரிவிக்க வேண்டும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//Abu Mus'ab சொன்னது…
அப்பொழுது சுயமாக சிந்திக்க முடியாத கமிட்டியின் புதிய தலைவர் "சங்" கத்தின் துணைத்தலைவர் ஹைதர் அலீ ஆலிம் அவர்களை நிறுத்தினால் தக்வா பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக வாக்களித்திருக்கிறார்,//

சத்தியத்தை போதிக்கும் மார்க்க அறிஞ்சரின் பயானை தக்வா பள்ளியிலிருந்து நிறுத்த முடியாது என்று தெரிந்து தைரியமாக கோடியை தருவதாக சொல்லி இருக்கலாமென்று தோன்றுகிறது.

சத்தியத்தை தடுப்பதற்கு அருப்ப தொகையா?

அல்லாஹ்விடத்திலோ சத்தியத்தை காப்பதற்கு சொல்லமுடியாத வெகுமதிகள் காத்திருக்கின்றன.

அபு முஸ் அப். உங்களுடைய கருத்துக்களால் சிலருடைய முகங்கள் கருக்கத்தான் செய்கின்றன.ஆனால் அதிகமான முகங்கள்....................

Unknown said...

yain paa ithukku ooru thalaiwara iukkuringa ....awara sidamal irukka mudiyadha muthalil sangathai poi kaylugga nee viewer saa adhigga pathadu thuwatharkkagaway indha vivatha kalam ((comments yangrindra )

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு