Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என்ன மச்சான் இந்தப் பக்கம் ! - இது மச்சான்ஸ் பக்கம் ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | June 06, 2013 | , , , ,

நீஙகள் அதிரைக்காரவுகளா? உங்களுக்கு மச்சான்ஸ் இருக்கிறாங்களா !? ஆம் என்றால் உங்களுக்காகத்தான் இந்தப் பிரத்யேகப் பதிவு.  நம்மூர்க்காரவர்கள் நார்மலாகவே நக்கல்ஸ் பார்ட்டிங்க. அதுவும் இரண்டு மச்சான்களோ,  மச்சான் மச்சினன்களோ சந்தித்து விட்டால் போதும் கிண்டலும் நக்கலும் கவுன்ட்டர் அட்டாக்களும் கலை கட்டிவிடும். 

அதுவும் மனைவி பக்கத்தில் இருக்கும்போது மச்சினனைக் கிண்டல் செய்யும் மச்சான்களுக்கு அசுர பலம் வந்துவிடுகிறது.  ச்சும்மா பூந்து விளையாடுவார்.  எம்மாம் பெரிய படிப்புப் படிச்சிருந்தாலும் மச்சினன் மச்சானுக்கும் எளக்காரம்தான். (அதானே ஏன் அப்படி ?) அவரும் அப்படித்தான் போங்க / டா மச்சான் என்றும் பெரிசாக அலட்டிக் கொள்ள மாட்டார் !*

அந்தக் காலத்தில் துக்கடா துணுக்குகள், இந்த காலத்திலே ட்விட்டர். ஆனால், எந்த காலத்திலும் அழியாத நகைச்சுவை மச்சான்ஸ் பரிமாறிக் கொள்வதுதான்.  அப்படிப் பரிமாறிக்கொண்ட சுவாரஸ்யமான உரையாடல்களை இங்கே பகிர்ந்தீர்களேயானால் வரும்கால மச்சான்ஸ் பரம்பரை உங்களை வாழ்த்தும்.

முக்கியமாக அந்த மாச்சான்ஸிடம் மாப்பிள்ளை மட்டும் இருந்தால், முறுக்கு கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும் அப்புடி இருந்த சூழலையும் பகிரலாம். எல்லா வற்றையும் விட அந்த மச்சான் மாப்பிள்ளையாக இருந்தபோது திரித்த கயிறு இருந்தாலும் பிரிச்சுப் போடலாம் !

தூள் கிளப்புங்கள் அதிரை மச்சான்ஸ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

20 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நல்லார்ப்பிய தலைப்புல மாச்சான்ஸ் இல்ல...அப்புறம் மாக்கான்ஸாக்கிப்புடுவாங்க நம்மூர்ல‌....திரித்திக்கிடுங்க வாப்பா....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அப்புறம் இந்த கட்டுரைய போட்டு அலங்கமலங்கப்படுத்திப்புடுவாங்க பாத்துக்கிடுங்க ஆம்மா...

ஊர்ல கள்ளன் பெரலியா ஈக்கிதாமுள்ள??? நெசமாவா??? (கள்ளன்‍ஒலுக்கு இப்புடி எடக்கெட பெரலி பண்றதே வேலையாப்போச்சு)

Unknown said...

நான் என் மாச்சானிடம் ( பெயர் சொல்ல விரும்ப வில்லை ) : என்ன மச்சான் அல்லாஹ் வசதி வாய்ப்புகளை அல்லி தந்திருக்கின்றான், கொஞ்சம் தான தர்மம் தான் செய்தால் என்ன ? தடுக்கி கீழே விழுந்தால் கூட 50 பைசா பாக்கட்டிலிருந்து கீழே விழாது போல் தெரிகின்றதே .

என் மச்சான் : மச்சான் நீ ( நான் அவர்களுக்கு வயதில் இளையவன்) உன் பாக்கெட்டில் வைத்திருக்கின்றாயே அந்த பத்து ரூபாய். உன்னுடைய பாக்கட்டில் இரண்டு நாட்களாக பார்த்துக்கொண்டிருக்கின்றேன். ஏன் ஒரு டீ கூட அதில் வாங்கிக்குடிக்க மாட்டியா ?

நான் : மச்சான் அந்த பத்து ரூபாய் வேறு, இந்த பத்து ரூபாய் வேறு.
என் மச்சான்: மச்சான் இந்தக்கதைஎல்லாம் விடாதே .
நான்: : சரி அது கிடக்கட்டும் . மச்சான் கொஞ்சம் கடைக்குப்போய் சாமான்கள் வாங்கணும் வர்றியளா மச்சான்.

மச்சான் : வா போகலாம்
நான் : மார்கட்டுக்கு என்றவுடன் பாக்கட் இல்லாத "T" ஷர்ட் மாற்றுகிறீர்களே ஏன் மச்சான் ? ,
மச்சான் : கூடுதல் குறைவுக்கு என்னிடம் கேட்டுகக்கூடாது பாரு அதனால்தான்.
நான் : அப்படின்னா , நான் முன்பு சொன்னது சரிதானே .








Unknown said...

படிக்கன் பிடிக்கிறது... செருப்பை ஒளித்து வைத்தல்.. ஆராத்தி சுத்துதால் இவற்றில் முன்னின்று செவ்வனே செவது மச்சினன்கள்தான்..

இந்தப் பழக்கம் இஸ்லாத்தில் இல்லை என்று எல்லோரும் ஒருசேர கத்தலாம் ஆனால் இது எங்கிருந்து வந்தப் பழக்கம்?

ஏதோ நம்ம மக்களுக்கு ரொம்பவே விழிப்புணர்வு!? வந்துவிட்டதாக சொல்றாங்களே! இப்போவெல்லாம் பெரும்பாலான திருமணங்கள் பள்ளிவாசலில் நடப்பதால் படிக்கன் பிடிப்பதை சரியாக கவனிக்க முடிவதில்லை இந்தப் பழக்கம் இன்னும் இருக்கிறதா?



sabeer.abushahruk said...

காதரு, உன் மச்சான்ஸ் உரையாடல் செம க்கிக்கு. சிரிச்சிசிரிச்சி வயித்த வலிக்குது.

என் மச்சான் எல்லோரிடமும் இங்கிலீஷ் பேசுவான் என்னிடம் மட்டும் பேசமாட்டான்.ஏனென்று இதுவரைத் தெரியவில்லை. கேட்டால் போ மச்சான் என்பான்.

இன்னொரு மச்சான் மலேசியாவிலேயே சிறு பிராயத்திலேர்ந்து இருக்கான். அவனுக்குத் தமிழ் சரியா வராது. சமீபத்தில் ஊருக்கு வந்திருந்த அவனுக்கும் எனக்குமான உரையாடல்:

"மச்சான், வயிறு ஏன் ஒரு மாதிரியாப் பெரிசா இருக்குது?"

"ஆபரேஷன் செஞ்சது உனக்குத் தெரியாதா?"

"கேள்விப்பட்டேன். என்ன ஆபரேஷன் மச்சான்?"

"அது...வந்து...(தடுமாற்றத்தோடு)...கர்ப்பப்பை ஆப்ரேஷன் மச்சான்" என்று சொன்னதும் எனக்கும் ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் சிரிப்புசிரிப்பா வர...

"என்ன மச்சான் சொல்றே? உனக்கு ஏது கர்ப்பப்பை? அது பொம்பளைங்களுக்கு இருக்கும்?"

"(திருதிருன்னு முளித்தவன்) intestine -la" என்றான்.

"மச்சான் அது கர்ப்பபை அல்ல. குடல். கர்ப்பப்பை என்பது womb" என்றேன்.

தான் சொன்னதன் அனர்த்தம் விளங்கியதும் அப்டியே ஷாக்காயிட்டான்.

அதிலிருந்து அப்பப்ப "மச்சான், கர்ப்பப்பை பத்திரமா இருக்கா?" என்று கலாய்க்க, உடனே மலேசியாவுக்கு ஓடிப்போயிட்டான்.

Unknown said...

சபீர்,
உன் மச்சான் உரையாடல், ஒரு மொழிப்பிரட்சினை என்றாலும்,

ஒரு மிகைப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய சந்தேகத்தை ஏற்ப்படுத்திய
வயிறு வலிக்க ( இதை பதியும்போது கடுமையாக சிரித்துக்கொண்டே ) சிரிப்பை ஏற்ப்படுத்திய ஒரு அழகிய நகைப்புக்குரிய உரையாடல்.

வாழ்க உன் மச்சான் தமிழ்.

அபு ஆசிப்.

Unknown said...

அதாவது 1980 களுக்கு முன்புள்ள கல்யாணங்களில் நடந்த சில சுவராஷ்யமான
மச்சான்களுக்கு மச்சினன்களுக்கு (மச்சிநிச்சிகளுக்கு இடையில் கூட ) நடக்கும் சில நிகழ்ச்சிகளில் எனக்கு தெரிந்த சில :

1. கல்யாணம் நடந்து முடிந்ததும் முதல் இரவு அறைக்குள் , புது மணப்பெண் உள்ளே போவதற்கு பதிலாக , மணமகனின் நண்பனையோ அல்லது மச்சினனையோ பெண் வேஷமிட்டு , அலங்கரித்து, உள்ளே போகவைத்து , அங்கே மணப்பெண்ணை மணமகன் நெருங்க அணுகும்போது, அவன் பெண் வேஷத்தை கலைத்து மணமகனை ஏமாற்றுவது.

2. மணமகன் செருப்பை ஒளித்து மச்சிநிச்சியோ , அல்லது மச்சினனோ , நூர்லாஜி ஹோட்டல் ஹல்வா வந்தால்தான் செருப்பு கிடைக்கும், அதுவரை வெறுங்காலோடு போய்வாருங்கள் என்று ஒரு தடாலடி முடிவெடுத்து அதிர வைக்கும் மச்சினிச்சிகள் அதில் உறுதியாகவும் இருப்பார்கள், அது ஒரு கால கட்டம் வரை இருந்து, ஹல்வாவுக்கு பதிலாக , 1980 க்கு பிறகு வுள்ள கல்யாணங்களில் அது முட்டை பரோட்டாவாக மாறியது.

3. கல்யாணம் முடிந்த அடுத்த நாள், மாப்பிள்ளை தோழனோடு சாப்பிட வரும்போது ( கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல் பெண் வீட்டாருக்கு தங்களால் எவ்வளவு செலவு வைக்க முடியுமோ அவ்வளவு செலவு வைப்பார்கள் . தான் ஒரு ஆண் என்பதை மறந்து விட்டு அது வேறு விஷயம்) மச்சினிச்சி மார்கள், மணமகனின் தோழன்மார்களிடம் , இன்று ஈரல் கறி ஆக்கி இருக்கின்றோம், மாப்பிள்ளை முதலில் சாப்பிட ஆரம்பிக்கட்டும், ஏனனில் ஈரலுக்கு பதிலாக அதே அளவில் சில கருங்கர்க்களையும், மசாலாவோடு தடவி வைத்திருக்கின்றோம் , மாப்பிள்ளை கடித்தவுடன் "ஆ " என் பல்லு போச்சு என்பார் அல்லவா . அது எங்களுக்கு சந்தோஷமாகும், . ஆதலால் நீங்கள் முதலில் சாப்பிட்டு விடாதீர்கள் என்று சொல்லி அந்த சந்தோஷத்தில் ஆனந்தம் அடைவது

4. மாப்பிள்ளையையும் , மணப்பெண்ணையும் கை கோர்த்துவிட , அதற்க்கு ஒரு ஆள் (அதாவது மணப்பெண்ணின் தந்தை ,அல்லது ,சிறிய தந்தை, அல்லது மன மகனின் சகோதரி, அல்லது, யாராகிலும் ஒரு, இரண்டு பேருக்குமே வேட்காத ஆள் என்று ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து கை கொருத்து விடுவது
(இதைவிட மூட்டால்தனம் வேறு என்ன இருக்கின்றது.) எந்த நிமிடம் நான் இப்பெண்ணை மன முடிக்க ஒப்புக்கொள்கின்றேன் என்று மணமகன் சொன்னாரோ அந்த நிமிடமே , அப்பெண்ணின் கையை பிடிக்க இவனுக்கு ஆகுமாகிவிடுகின்றால் எனும்போது , இன்னொருவர் கை கோர்த்துவிட எதற்கு ?
(ஏன் இவனுக்கு அவன் மனைவியின் கையை பிடிக்கத் தெரியாது பாருங்கள்?)
இப்படியெல்லாம் கல்யாணம் என்ற பெயரில், சுவராஸ்யமான விஷயங்களோடு சில தேவையில்லாத சடங்குகள் என்னும் பெயரில் நிறைய நடக்கத்தேவை இல்லாத விஷயங்களும் நடந்த காலம் அந்தக்காலம்.

இப்பொழுதெல்லாம், எல்லா விஷயங்களும் மலையேறிவிட்டது.
மக்கள் எவ்வளவோ திரிந்தியாச்சு. அந்தக்காலம் 90 % கல்யாணங்கள் வீட்டில் நடந்தது. இப்பொழு 95% கல்யாணங்கள் பள்ளிவாயில்களில் பெண்களின் நடமாட்டாம் இல்லாமல் நடப்பதால், எந்த ஒரு தேவையற்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் ரொம்பக்குறைவு.

அந்தக்கால கல்யாணங்களில் பெரும்பாலும் வீட்டில் நடந்ததால் ஆண் பெண் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் சில தேவையற்ற, தவிர்க்கப்பட வேண்டிய நிகழ்வுகள் (பதிவில் சொல்ல முடியாத விஷய்னகள் கூட) நடந்த துண்டு.

ஆதலால் மச்சான் மச்சினன் மச்சினிச்சி மற்றும் நண்பர்களுடன் சிலேடையாக வோ அல்லது நகைச்சுவையாகவோ பேசுவதில் தவறில்லை. ஆனால் அது எல்லை மீறி போய்விட அனுமதிக்கக்கூடாது. அதில் எல்லோருக்குமே கவனம்
தேவை.

அபு ஆசிப்


Meerashah Rafia said...
This comment has been removed by the author.
Meerashah Rafia said...

5 மாதத்திற்கு முன் சிறிய விடுப்பு எடுத்து ஊருக்கு போகிறுந்தேன்(பொண்டாட்டிகிட்ட சொல்லாமல் கொள்ளாமல்)..

விடியற்காலை சென்னை விமான நிலையத்தில் இரங்கி என் பெரிய மச்சினனோடு(எனக்கு சிறியவன்.திருமணம் ஆகவில்லை) சென்னையிலிருந்து தஞ்சைக்கு ரயிலில் போய்விட்டு தஞ்சையிலிருந்து அதிரைக்கு இரவு 10 மணியளவில் சென்றடைந்தோம்..

அப்போது வீட்டிற்குள் நுழையும் சமயம் என் மச்சினனோட்டு நான் உரையாடியது,

நான் : மச்சான்.. கொஞ்சம் பயம்மா இருக்குப்பா!
மச்சினன் : ஏன் மச்சான் பயம்?
நான் : இல்லே... கல்யாணம் முடிஞ்சி இரண்டுவருசத்துல இரண்டாவது விடுப்புக்கு இப்பத்தான் ஊருக்கு வர்ரேன்..அதான் உன் தங்கச்சியை (என் மனைவியை) பார்க்க கொஞ்சம் பயம்.....மா இருக்கு.அதான்....
மச்சினன் : ஹிஹிஹி.ஹஹஹ..ஹுஹு.. பயம்மா இருக்கா?கூச்சமா இருக்கா? மச்சான்..
நான் : ரெண்டுந்தான்னு வச்சிக்கவேன்.. நீயும் ஒரு கல்யாணம் முடி அப்போ தெரியும்..

என்று சொல்லிவிட்டு அறைக்குள்ள பெட்டியோட போய் பொட்டிப்பாம்பா அடஞ்சாச்சி..

(உஷ்ஷ்ஷ்..AN வாசிகர்களா ஏதோ நீங்கள் கேட்டதிற்காக முதல் முறையா வெளில சொல்லிருக்கேன்.. எதா இருந்தாலும் இந்த பின்னூட்டத்திற்குள்ளயே பேசிக்குவோம்..ஆம்மா..)

Meerashah Rafia said...

வீட்டோட மாப்பிளையிலும் ஒரு படி மேலே போய் நேரடியா பெட்டிப்படுக்கையோட பொண்டாட்டி வீடுதானாவென்ன்னு நினைத்துவிடாதீர்கள்.

அச்சமயம் எங்கள் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. உம்மா, வாப்பாவெல்லாம் வெளிநாட்டில்.. நான் போன சமயம் என் மகளை பெரும் தருவாயில் இருந்தது.. So, தஞ்சையிலிருந்து நேரடியாக மாமியார் வீட்டில் தஞ்சம்.

அதிரைக்காரன் said...

பாருங்களேன் இந்த மீராஷாவை! கல்யாணமாகி ஒரு வருசம்கூட முடியலே. நேரா பொண்டாட்டி ஊட்ல போய் இறங்கியிருக்கான். இந்த காலத்துப் புள்ளையலுவோ பொட்டிப்பாம்பா மசங்கிடுதுவோலே. ;-) இதயாராச்சும் கேட்க மாட்டியலா. நெய்னா. ஜாஃபர் கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கப்பா. :))

Unknown said...

//பாருங்களேன் இந்த மீராஷாவை! கல்யாணமாகி ஒரு வருசம்கூட முடியலே. நேரா பொண்டாட்டி ஊட்ல போய் இறங்கியிருக்கான். இந்த காலத்துப் புள்ளையலுவோ பொட்டிப்பாம்பா மசங்கிடுதுவோலே. ;-) இதயாராச்சும் கேட்க மாட்டியலா. நெய்னா. ஜாஃபர் கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கப்பா. :))//

மனைவி வீட்டில் இறங்குவது தப்பில்லை.

"மனைவி வீடே கதி என்று கிடப்பதுதான் தப்பு.

கொஞ்சம் புரிஞ்சுக்குங்க .

Anonymous said...

தூள் கிளாப்ப போகும் மச்சானே!
"வாடா மச்சான் வாடா!
ஒரு வடையும் டியும்தாடா!' ன்னுவாழ்த்து பாடி வரவேற்கிறேன்.

எனக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒறே ஒரு மச்சான்தான் .அதுவும்........ {வேணம்சொல்லப்பாடது] மாச்சினனோ விரல் விட்டு கவுன்ட் பன்னனுமினா அந்த ராவணங்ககிட்ட போயி பத்துகைய ஓசி வாங்கணும். அவ்வளவு பேரு.. மச்சிக்கும் என்ன பஞ்சமா? {என் மாமாக்கள் ரெம்ப ஆக்டிவான பேர்வழிகள். ] நீங்க மோதல்லே அனா. நினாவுல 'மச்சான்ஸ்' விடுங்க. அப்புறம் பாக்கலாம்!.

S.முஹமதுபாரூக், அதிராம்பட்டினம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மச்சான் பேஜ் கமென்ட்ஸ், ரொம்ப சுவராஸ்யம்!

அன்புள்ள மகன் மீராசாவுக்கு,
கைபிடித்தவள் மீது நீ கொண்டிருக்கும் நேசத்தை பாராட்டி மகிழ்கிறேன்.
உம்மாவூட்லெ தான் தான் இறங்கனும் என்ற Fபார்மாலிட்டி யை விட உம்மா மீது மனதில் வைத்து இருக்கும் நேசம் மட்டுமே Fபர்ளாகும்.
எனவே உம்மா மீதும் நேசம் நிறைந்து இருப்பாய் என்ற நம்பிக்கையில்,
சாச்சா- ஜஹபர் சாதிக்.
(நெய்னா மச்சானும் வந்து நம்மூரு பாசையிலெ நம்ம மீராசாவுக்கு நன்னெறி வழங்க கேட்டுக் கொள்கிறேன்.)

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

என்ன இது அநியாயம இருக்கு...? ஊர்ல ஒலகத்துல இல்லாததையா மீராசா செஞ்சுட்டாரு..

உம்மாவூட்டுலேர்ந்து பொண்டாட்டி ஊட்டுக்கு போறது சகஜம்தானே.. என்ன ஒன்னு.. பைக்லயோ..வேற வாகனத்துலயோ இல்ல..நடந்தோ போவாக..

ஆனா மீராசாவ கொஞ்சம் ரிச்சாக..பொண்டாட்டி வூட்டுக்கு ஜித்தாவுலேர்ந்து ஃப்ளைட்ல அனுப்பி வச்சோம்.. உம்மாவும் வாப்பாவும் இங்கே இருக்கும்போது அதுதானே முறை..?

மாப்பிள்ளை அழைப்புக்கு ஏர்போர்ட் வரைக்கும் வந்து எந்த மச்சினனாவது அழைச்சிருக்காங்களா? நம்ம மீராசவுக்கு அந்த கொடுப்பினை இருந்திருக்கு.

அதிரைக்காரன் said...

அபுஆசிப் காக்கா. மீராஷா புறப்பட்டுச் சென்ற சூழல் தெரியும். இருந்தாலும் சும்மா பெரளிக்கி சொன்னேன். வெளிநாட்டிலிருந்து ஊர்வர்பவர்களின் மனப்போராட்டம் அறிந்ததே. அதுபோல் தன்பிள்ளையின் சந்தோஷமே தன் சந்தோசம் என்று இருக்கும் பெற்றோருக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அவர்கள் ஹயாத்தாக இருக்கும் வரை அங்குசென்றுவிட்டு. ஆசீர்வதத்துடன் மனைவிவீடு சென்றால் பிரச்சினைகள் வராது. தவறா சரியா என்ற கருத்து தனிவிவாதத்துக்குரியது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மீராஷா தன்னுடைய முதல் பயணத்தில் பொண்டாட்டி வீட்டில் போய் இப்படி இறங்கி விட்டு அதை கச்சிதமாக இங்கு நியாயப்படுத்துவது ஆகாதும்மா.....மிச்சம் மீதியாய் ஊரில் இருந்து வரும் மூத்த பெரியம்மா வீட்டில் போய் இறங்கினால் என்ன போலீஸ் பிடிக்குமா? வல்லாணாலையில யாஞ்ஞும்மா......

Anonymous said...

வீட்டில் நிக்காஹ் நடந்த காலத்தில் மாப்பிளையின் செருப்பை மச்சினச்சி எடுத்துக் கொண்டு ''ஹல்வா கொடு செருப்பு தர்றேன்'' என்கிறாள்.. அது உரிமையோடு கூடிய நையாண்டி விளையாட்டு ஆனால் இப்போ பள்ளி வாசலில் நடக்கும் நிக்காவிற்கு வருவோரின் செருப்பு காணாமல் போகுதே! எந்த மச்சினிச்சி எடுத்தா?

S.முஹம்மதுபாரூக்', அதிராம்பட்டினம்

Anonymous said...

என்ன மச்சினம்புலே இப்ராகிம் அன்சாரி !

குஜராத்லே இருக் குற பாரதியாரிடம் தேங்கா யாவாரம் செய்றதா காத்து வாக்குலே சேதி காதுக்கு வந்துச்சு..

நெசந்தானா?

இனிமே

"சிந்து நதியின் மிசை நிலவினிலே
குஜராத் நாட்டிளம் பெண்களுடனே" "

பாட்டுப்பாடி பாரதியார் தோணி ஓட்டுவாரோ?

அவருக்கு. என்ன பாட்டுக்கு பாட்டு யாவரத்துக்கு தேங்கா ! கொடுக்க வாங்கலிலே முன்ன பின்ன ஆனாலும் விட்டுகொடுத்து யாவாரம் பண்ணுங்க. பாவம் மனுஷன் !

நாட்டு விடுதலைக்காக பாட்டு பாடி பாட்டுபாடி பசியோடகெடந்து ஆனை மிதிச்சு செத்தாரு !

தாயின் மணிக்கொடி பட்டு ஒளி வீசி பறக்குதான்னு பாக்க வந்து இருப்பாரு!.

அப்புடியே போற போக்குல தேங்காயாவாரத்துலே கொஞ்சம் காசு பாக்கலான்னு ஆசை போல.........

ஆமா அது என்ன ஆந்திராவுல பொய் எரிபொருள்?. [உங்க மருமவன் சாவான்னாக்கு இஸ்லாமிய பொருளாதர சிந்தனை......19 கமெண்டுக்கு கொடுத்த பதில்ல ஈக்கிது. பாத்தேன்!.

s.முஹம்மதுபாரூக் அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு