Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பசியாறிட்டு சாப்பிடலாம் ! 54

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2013 | , , , , , ,

நீண்ட நாட்கள் கேட்க நினைத்த ஒன்று நமதூர் காலையில் பசியாற என்பதற்கும் பகலில் சாப்பாடு என்பதற்கும் என்ன வித்தியாசம் அவைகள் இரண்டும் வெவ்வேறு தரமான உணவுவகைகள்தானே ஏன் இரண்டையும் சாப்பாடு என்று சொல்லாமல் காலையில் மட்டும் பசியாற என்று சொல்ல வேண்டும் !?

அது ஒருபக்கம் இருக்கட்டும் இனி மெயின் மேட்டருக்கு செல்வோம்...

நம்ம ஊரு  சாப்பாடுன்னா விருந்து காலங்களில் முதலில் நினைவுக்கு (மந்தி அல்ல) வருவது காலை பசியாறுதல் இதில் இடியப்பம் சிக்கி எடுக்காமல் விக்கல் இல்லாமல் உள்ளே தள்ள வசதியா இருக்கும், பரோட்டா யாசிர் கட்டுரை நினைவுக்கு வந்தாலும் திங்காமல் இருக்க மாட்டோம் யாசிருக்காக வேண்டி எண்ணிக்கையை கொஞ்சம் குறைத்துக் கொள்வோம் ஏதோ நம்மளாலே முடிந்தது. விருந்து அல்லாத மற்ற நாட்களில் பெயரிட்டு பட்டியலிடும் வகைகளில் காலைப் பசியாற இநுதாலும் அதில் சில்வற்றில் ஒன்றான தோலுரித்தல் இது  எத்தனை சாப்பிட்டோம் என்பதை கணக்கு பண்ண நல்ல ஆடிட்டர்  பக்கத்தில் இருக்கணும் இந்த தோலையே கொஞ்சம் ஓட்டை ஓட்டையா சுட்டு ஜால்ரா என்று சொல்லி வடைக்கு மட்டுமா ஓட்டை இதற்கும் ஓட்டை போடுவோம் என்று சொல்லி வடைக்கும் ஜால்ராவிற்கு ஒரு நிரந்தர பகையை உண்டாக்கி வைத்து விட்டார்கள் நம்ம பொம்புளையளுவோ இதுஎல்லாம் காலை பசியாறவின் நமதூர் மெயின் டிஷ்.

சைடு டிஸ்சாக எறச்சி ஆணம் இது தாளிச்சு போடுறப்பவே நாம வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த செண்டெல்லாம்  செயல் இழந்து போய்விடும் நுரை ஈரல் பெரட்டல் இதை கடிக்கிறபோதே பஞ்சை கடிப்பது போல் இருக்கும் ஒரு சில துண்டு கொஞ்சம் கடினமான மாறுபட்ட சுவைடன் வித்தியாசமாக இருக்கும் அது நுரை-ஈரல் கூட ஒண்ணா போட்டு ஆக்கிய செவரொட்டி, (ஆட்டுடைய பார்ட்ஸில் நாங்க எதையும்  விட்டு வைக்க மாட்டோம்)  ஆட்டுத் தலை இதில் செவுலு பீசுக்குத்தான்அதிக கிராக்கியா இருக்கும் (நோன்பில் தலை கிடைக்காது) ஆட்டு மூளையை யாரும் ஒரு மூலையில் போடுவது கிடையாது. இதில் ஏதாவது ஒன்றோ அல்லது  அதற்கு மேற்பட்டோ நமதூர் காலை பசியாறுதலையில் கண்டிப்பா இருக்கும்.


அடுத்து இனிப்பு வகை கடல் பாசி வண்ணத்தாலே ஒன்னு வகையாலே ஒன்னா இருக்கும் இந்த கடப்பாசியை எடுத்து வாயில் வைத்தால் சூடான சட்டியில் ஒரு துண்டு வெண்ணெயை எடுத்து போட்டால் வழுக்கி கொண்டு போவது போல் வழுக்கிக் கொண்டு போய் குடலில் குதிக்கும். வட்டில் அப்பம் (இதை மறந்தால் இந்தப் பதிவு மதிப்பிழந்து விடும் ஒரு சிலருக்கு இதப் பற்றி பேசினாலோ எழுதினாலோ பிடிக்காது) அடுத்து முந்திரி பருப்பு உலர்ந்த திராட்சை போட்டு வறுத்து ரவ்வா அல்லது ஜவ்வரிசி கஞ்சி இது எல்லாத்தையும்  காலை  பசியாற  என்று  சொல்லி  ஒண்ணா உட்காந்து கட்டு கட்டு  என்று கட்டிபுட்டு  தனித்தனியா ஆஸ்பத்திரிக்கு போய் கொழுப்பு குறைக்க மாத்திரை (கொலஸ்ட்ரால் டேப்லெட் ) வாங்கி தின்பது ஒரு தனிக்கதை.


இந்த  காலை  பசியாறுதலையை  செய்வது எல்லாம் பெரும்பாலும் வீட்டுப் பெண்கள்தான்

பகல்  சாப்பாடு !

விஷேச காலங்களில் 'அஞ்சு கறி சோற்றில் நெய்ச் சோறு' நல்லா வச்சாங்க பெயரு சோத்துலே எந்த அளவுக்கு நெய் வடியூதோ அந்த அளவுக்கு நாக்குலே உள்ள ருசி பார்க்கும் நரம்புகளுக்கு வேலை அதிகம். எறச்சி ஆணம் இது தாளிக்கும் போதே கோடையில் ம ழைபெய்தால் (மண்) புழுதி வாடை வருவது போல் அரை கிலோ மீட்டருக்கு தாளிப்பு வாடை மூக்கைத் துளைக்கும் ஒரு சில சென்சிட்டிவ் மூக்கு பார்ட்டிகள் வாசத்தை வைத்தே சமையல்காரன் பெயரைச் சொல்லி விடுவார்கள் அடுத்து உருளைக் கிழங்கு பச்சடி  இது சஹன் சாப்பாட்டில் ஓபனிங் பேட்ஸ் மேன். இந்த உருளைக் கிழங்கு பச்சடி கூட ஆட்டு ஈரல் மற்றும் கிட்னியும் சேர்ந்து வந்தால் அங்கு சமைத்த சமையல் காரருக்கும் அந்த சகனில் சாப்பிட உட்கார்ந்தவங்களுக்கும் ஒரு லிங்க் இருக்கணும்.

அடுத்து கத்தரிக்கா பச்சடி இதை சகனில் இறக்கி விட்டதும் கத்தரிக்காவில் நான்கு விரலை வைத்து ஒரு கோடு போட்டது போன்ற இழுப்பு கத்தரிக்காவின் தோல்  மட்டும் சகனில்  இருக்கும்  ரா-மெட்டீரியல்ஸ் அனைத்தும் அடுத்த வினாடி வாயில்  இருக்கும் இதை வாயில் போட்டு மெல்லும் போது எண்ணெயில் வருபட்ட கடுகும் உளுத்தம் பருப்பும் சுவையும் ஒன்னு சேர்ந்து மறு சோறு கொண்டு வா என்று கேட்கும். இதில்  எண்ணெயில் வறுபட்ட  சின்ன வெங்காயம் தான் ஹீரோ.

அடுத்து சோற்றில் எறச்சி ஆணத்தை ஊற்றி நாத்து நடும் வயலில் உழவு உழுதது போல் பெரட்டி பெரட்டி எடுத்து மல்லாவில் இருந்த இரண்டு துண்டு கறியில் ஒரு துண்டை காலி செய்து விட்டு மறுசோறு வைத்து இருக்கும். பாக்கி ஆணத்தை ஆளுக்கு கொஞ்சமா ஊத்திக் கொண்டு அது மேலே கொஞ்சம் புளியாணத்தை ஊற்றி பக்கத்துஆளு பக்கம் உள்ளது இந்தப் பக்கம் வராமலும் அதே வேலை நம்ம பக்கம் உள்ளது பக்கத்து ஆளு பக்கம் போகாமலும் சகன் டெக்ணிக்கை இம்மி பிசகாமல் கடைபிடித்து அதன் பிறகு வயற்றில் இருக்கும் கொஞ்சனிஞ்ச எடத்துலயும் கேரட் சுவிட்டை  அள்ளி போட்டு அடைத்து விட்டு குடிக்க வைத்திருக்கும் பாக்கெட் தண்ணீரில் கை கழுவி விட்டு சகனுக்கு கிழே விரித்த பேப்பரில் கை துடைத்து விட வேண்டியதுதான்.

இந்த  பகல்  சாப்பாட்டை  சமைத்தது  மேஸ்த்திரி யாருன்னு விசாரிக்க மனசு துடிக்கும் !

இப்போ சொல்லுங்கோ உங்களுக்கு பிடித்தது காலை பசியாறவா பகல் சாப்பாடா ? இரண்டும் பிடிக்கும் என்று சொல்லி காலை பசியாறுதலையும் பகல் சாப்பாட்டையும் ஒரே சகன்லே போட்டு ஒழப்பி வச்சிரக்   கூடாது.

மந்தியில் மருத்துவ குணங்கள் இருப்பது போன்றும் இவ்வகை சாப்பாட்டில் மயக்கும் குணங்கள் இருப்பது போன்றும் சமையல் குறிப்புகளை சொன்னாலும் இரண்டும் ருசிக்காக ரசித்து சாப்பிட வைக்கும் சாப்பாடுகளே !.

Sஹமீது

54 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

Tuan Haji Shahul..இப்படி போட்டோவில் மட்டும் காண்பிப்பது....பெரும்பாவம்

KALAM SHAICK ABDUL KADER said...

//பசியாற என்று சொல்ல வேண்டும் !?\\

break-fat= பசி ஆற்றுதல்

அதனாற்றான், அறபு மொழியில் ஃபதூர் என்கின்றனர் காலை உணவை; அதிலிருந்து வந்தது தான், நாம் நோன்பு துறப்பதை (பசியை ஆற்றுதலால்) “இஃப்தார் என்றும் ஆனது.

சந்தேகப்பட வேண்டா., சந்தோஷப்படுங்கள்! ஆம், நம் முன்னோர்கள்- தமிழ் முஸ்லிம்கள் தமிழுக்குச் சேவை செய்யவில்லை என்று அவதூறு பரப்புகின்றவர்கள்- தமிழ் தங்கட்கு மட்டும் தான் சொந்தம் என்று சொல்லுபவர்களிடம் எல்லாம் நான் சுட்டிக் காட்டும் காட்டுகளில் இந்த “பசியாறுதல்” என்னும் தூய தமிழைப் பயன்படுத்தி உரையாடலிலும் புகுத்தியவர்கள் என்று.

தொழுகை, நோன்பு, சுவனம், ஆனம், ஏனம் இப்படித் தூய தமிழைப் பயன்படுத்திய நம் முன்னோர்கள் தான் “பசியாறுதல்” என்பதையும் உரையாடலிலும் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்று தமிழ் உலகம் போற்றும் கவிஞர்களும் சந்தோஷப்பட்டிருக்கின்றார்கள்; நீங்கள் சந்தேகப்படலாமா?

KALAM SHAICK ABDUL KADER said...

//break fast\\ என்று திருத்தி வாசிக்கவும்; தட்டச்சுப் பிழை

இன்ஷா அல்லாஹ் அடுத்த விடுப்பில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை இந்தத் தட்டச்சுப்பிழைகள் தொடரும்; மன்னிப்பிர்களாக!

KALAM SHAICK ABDUL KADER said...

நகைச் “சுவை”யில் நல்விருந்து!

நல்விருந்துப் படைத்துச்
சொல்விருந்து அளித்தீர்!

இடியாப்பம்,புரோட்டா, மட்டன் கறி
வட்லாப்பாம்,ரவா கஞ்சி- அப்பப்பா
முடியாமல் திணறுதுங்கோ எனக்கு
முட்டிக் கொண்டு வயிறும் வலிக்குதுங்கோ!

அறுசுவையயும்
ஐந்து கறிக்குள்
அடக்கி வைத்த
அதிரையர்கள்
அதிசயங்கள்
அசந்து போகும்
அதிசயமே!

விருந்தினை உண்டேன் விடாப்பிடி யாக
மருந்தினை நாடி மகிழ்ந்து

KALAM SHAICK ABDUL KADER said...

வயிறு முட்டச் சாப்பிட்டதால் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தக் கீழ்க்காணும் நகைச்சுவையால் மூச்சுத் திணறல் உண்டாகி விட்டது!

இரைப்பைக்கும்
நுரைப்பைக்கும்
இப்படியான
இனிய நகைச்சுவையால்
ஏற்பட்ட திணறலுக்கு

உங்களின் எழுத்தின் நகைச்சுவைகள்:

\\காலை பசியாற என்று சொல்லி ஒண்ணா உட்காந்து கட்டு கட்டு என்று கட்டிபுட்டு தனித்தனியா ஆஸ்பத்திரிக்கு போய் கொழுப்பு குறைக்க மாத்திரை (கொலஸ்ட்ரால் டேப்லெட் ) வாங்கி தின்பது ஒரு தனிக்கதை.\\

\\இந்த பகல் சாப்பாட்டை சமைத்தது மேஸ்த்திரி யாருன்னு விசாரிக்க மனசு துடிக்கும் !\\

\\உருளைக் கிழங்கு பச்சடி இது சஹன் சாப்பாட்டில் ஓபனிங் பேட்ஸ் மேன். இந்த உருளைக் கிழங்கு பச்சடி கூட ஆட்டு ஈரல் மற்றும் கிட்னியும் சேர்ந்து வந்தால் அங்கு சமைத்த சமையல் காரருக்கும் அந்த சகனில் சாப்பிட உட்கார்ந்தவங்களுக்கும் ஒரு லிங்க் இருக்கணும்.//


\\பக்கத்துஆளு பக்கம் உள்ளது இந்தப் பக்கம் வராமலும் அதே வேலை நம்ம பக்கம் உள்ளது பக்கத்து ஆளு பக்கம் போகாமலும் சகன் டெக்ணிக்கை இம்மி பிசகாமல் கடைபிடித்து \\


\\எண்ணெயில் வறுபட்ட சின்ன வெங்காயம் தான் ஹீரோ.\

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

என்ன சாவன்னா எப்போதும் எழுதுவதில் கொஞ்சமாவது விஞ்ஞானமும் சேர்ந்திருக்கும். ஆனால் இதில் முழுக்கமுழுக்க பசியாற, சாப்பாடு என்றே ஆகிவிட்டதே என்ன விசயம்.

கலாம் காக்கா பசியாறுதல் என்பதற்கு கொடுத்த விளக்கம் சரியெனத்தான் படுகிறது.

எனக்கு தெரிந்த ஒன்றை சொல்லவா பசியாறவாக இருந்தாலும் சாப்பாடாக இருந்தாலும் காலை உணவை அளவாகவும் மதிய உணவை அதனைவிட குறைவாகவும் இரவு உணவை மதிய உணவைவிட குறைவாகவும் ஆக்கிக்கொள்ளுதல் உடல் நலத்திற்கு ஏற்றது.

இப்படி உன்பதால் அனாவசியமாக ஏற்படக்கூடிய திட்டுமுட்டு தெஹரடியிலிருந்து தப்பித்து (சாரி - மு செ மு நெய்னா) பட்டுக்கோட்டை , தஞ்சாவூருக்கு டாக்டரிடம் கொட்டும் செலவும் மிச்சமாகலாம்.





















































































sabeer.abushahruk said...

பெருநாள் மீண்டும் வந்துவிட்டதோ என்று நினைக்கும் வண்ணம் சாப்பாடு கலைகட்டுகிறது ஹமீது.

பதார்த்தங்களை நாக்கில் எச்சிலூறும் அளவுக்கு இவ்வளவு துல்லியமாக படம்பிடித்துக் காட்டியிருப்பது வதுவாப்பேர்தான்.

KALAM SHAICK ABDUL KADER said...

உங்களின் அறுசீரான உணவுக்கு நன்றியறிதலாய் , எண்சீர் விருத்தத்தில் (காய்+காய்+காய்+மா அரையடிக்கு என்று ) என் விருப்பத்தில் இயற்றி அனுப்புகின்றேன் வாழ்த்துப்பா”



கறியானம் புரோட்டாவும் இடியாப்பம் தோலும்
காலையிலே பசியாற வைத்தீர்கள்: உண்டோம்
நெறியாக உணவுகளைச் சுவைத்தவராய்க் கண்டோம்
....நெய்ச்சோறு கறிக்குழம்பு கத்தரிக்காய் எல்லாம்
பறிமாற வைத்தவரே தூரத்தில் நாங்கள்
......பசித்திருத்தல் உணர்ந்தவராய்ப் பகலின்சாப் பாட்டை
நெறியாளர் வழியாக அனுப்பியதை ஏற்றோம்
....நெஞ்சத்தின் நன்றிகளைச் சொல்லுகின்றோம் நன்றே!


M.B.A.அஹமது said...

நமது ஸ்கூலில் இயற்பியல் ஆசிரியராக இருந்த எம்.எல்.ஏ .லியாகத் அலி அவர்கள் கேட்பார்கள் எப்படி தான் இந்த அதிராம்பட்டினம் ஆட்கள் காலயிலயே 8 மணிக்கு எல்லாம் இந்த ரொட்டியும் கறியும் வைச்சு நூர் லாட்ஜ் கடையிலே அமுக்குரான்களோ என்ன என்ஜின் என்று தெரியலையப்பா என்பார் அதெல்லாம் நமது அதிரை காரகளுக்கு அல்லாஹ் கொடுத்த பரகத் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பற்றி கவலை படாமல் இறுக்கும் வரை நல்லபடியாக சாப்பிட்டுகிட வேண்டியது தான் அதுக்கு தானே சாவன்னாக்கா படம் எல்லாம் போட்டு நாக்குல எச்ஹில் ஊற வைச்சிருக்காங்க இது பற்றி தந்தையாரின் கருத்தை அறிய விரும்புகிறேன்

M.B.A.அஹமது said...

அமெரிக்க காரர்கள் காலையிலும் சாப்பிடாமல் மதியமும் சாப்பிடாமல் இரண்டக்கும் இடைப்பட்டு 12 மணிக்கு சாப்பிடுவார்கள் அதுக்கு அவர்கள் சொல்லும் பெயர் பிரஞ்ச் .பிரேக் பாஸ்ட்டையும் லஞ்சையும் சேர்த்து சுருக்கி பிரன்ச் என்கிறார்கள்

M.B.A.அஹமது said...

அது என்ன காக்கா வட்டிலப்பாம் படம் நாய்கர் கடை இட்லி மாதிரி இருக்குது அதுக்காக வேண்டி அபுல்கலாம் காக்கா கண் அறுவை சிகிச்சை செய்ய போர்றாங்க நீங்களும் போய் செஞ்சிக்கிட்டு வாங்கன்னு சொல்லிராதீங்க

adiraimansoor said...


கேமராவினாலும் சமைக்க தெரிந்த நன்பர் ஹமீதை தமாமில் சந்திக்கும்போது அழைப்பிருந்தும்
ருசிக்கத் தெரியாதவனாக மிஸ் பன்னி ரியாத் வந்துவிட்டேனே! கைசேதமே
அப்பாடா அதிரை நிருபர் மூலியமா
ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல விருந்து கிடைச்ச்சிருக்கு சரியான ருசி
பெருநாள் சாப்பாடும் கல்யாண விருந்தும் மிகப்பிரமாதம் இப்பதான் வயிறு நிறைந்தது.
இது போதும் ஒரு வருஷத்தை ஓட்டலம் சவூதியிலே

adiraimansoor said...

கலாம் முதலில் கண்ணை பாருப்பா
வரப்போகின்ற என் முதல் பதிவு
கண்ணை பற்றிதான்

//கறியானம் புரோட்டாவும் இடியாப்பம் தோலும்
காலையிலே பசியாற வைத்தீர்கள்: உண்டோம்
நெறியாக உணவுகளைச் சுவைத்தவராய்க் கண்டோம்
....நெய்ச்சோறு கறிக்குழம்பு கத்தரிக்காய் எல்லாம்
பறிமாற வைத்தவரே தூரத்தில் நாங்கள்
......பசித்திருத்தல் உணர்ந்தவராய்ப் பகலின்சாப் பாட்டை
நெறியாளர் வழியாக அனுப்பியதை ஏற்றோம்
....நெஞ்சத்தின் நன்றிகளைச் சொல்லுகின்றோம் நன்றே!//

இதெல்லாம் அப்புறம் சாப்பிட்டுக் கொள்ளலாம்

adiraimansoor said...

அஹ்மது காக்கா அமெரிக்காவில் பிரேக் போட்டா பிரெஞ்சுல நிக்கும்ன் சொல்லுவார்களே அதுவா?

adiraimansoor said...

காக்கா நீங்களும் எதுக்கும் தொனைக்கு கலாமோட மதுரைக்கு ஒருதடவை விசிட் அடிச்சிட்டு வந்தா தேவலை என நினக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

இப்னு அபூ ஹமீதுடைய
பின்னூட்டம் இன்னும் மீதி இருக்கும் போல இருக்கு
பேப்பெர பெருசா கிளிச்சி வச்சிருக்கிறீங்க!

Shameed said...

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

//இன்ஷா அல்லாஹ் அடுத்த விடுப்பில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை இந்தத் தட்டச்சுப்பிழைகள் தொடரும்; மன்னிப்பிர்களாக!//

கண் அறுவை சிகிச்சை நல்லபடி நடக்க எங்களின் துவா

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//பெருநாள் மீண்டும் வந்துவிட்டதோ என்று நினைக்கும் வண்ணம் சாப்பாடு கலைகட்டுகிறது ஹமீது.//



யாருப்பா அது சாப்பாடு என்றதும் சின்ன பையனாட்டனம் டி ஷர்ட் போட்டுக்கிட்டு வந்து பந்தி பரத்துறது

Shameed said...

ibn abdulwahid சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்

//என்ன சாவன்னா எப்போதும் எழுதுவதில் கொஞ்சமாவது விஞ்ஞானமும் சேர்ந்திருக்கும். ஆனால் இதில் முழுக்கமுழுக்க பசியாற, சாப்பாடு என்றே ஆகிவிட்டதே என்ன விசயம்.//



வலைக்கும் முஸ்ஸலாம்
இதிலும் விஞ்ஞானம் ஒளிந்து கிடக்கு




M.B.A.அஹமது சொன்னது…
(நமது ஸ்கூலில் இயற்பியல் ஆசிரியராக இருந்த எம்.எல்.ஏ .லியாகத் அலி அவர்கள் கேட்பார்கள் எப்படி தான் இந்த அதிராம்பட்டினம் ஆட்கள் காலயிலயே 8 மணிக்கு எல்லாம் இந்த ரொட்டியும் கறியும் வைச்சு நூர் லாட்ஜ் கடையிலே அமுக்குரான்களோ என்ன என்ஜின் என்று தெரியலையப்பா)



அதிராம் பட்டினம் குடல்களெல்லாம் டிசல் இன்ஜினா அல்லது பெட்ரோல் இன்ஜினா என்று விஞ்ஞானிகள் கூட்டத்தில் சர்ச்சையா இருக்காம்

KALAM SHAICK ABDUL KADER said...

கண்ணைப் பற்றிக் கண்ணான விசாரிப்புக்கு, என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா மற்றும் இனிய நண்பன் மன்சூர ஆகியோர்கட்கு உன் உளம்நிறைவான நன்றிகள்.
இன்ஷா அல்லாஹ் உங்களனைவரின் துஆவினால் சிறப்பான முறையில் அடுத்த விடுமுறையில் சிகிச்சையைச் செய்து கொள்வேன். இம்முறை மதுரையில் (வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் விடுப்பில் கண்பரிசோதனைக்குச் செல்வது வழக்கம்) சோதித்த மருத்துவர் தான் சொன்னார்; இலேசாக அந்தக் கண்புரை என்னும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; ஆனால், இப்பொழுது அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்றார்; இதனை மீண்டும் பட்டுக்கோட்டை கண் மருத்துவர் ஷாஹூல் ஹமீத் அவர்களும் சொன்னார்கள்.

இப்பொழுது அதிகமாகத் தட்டச்சுப் பிழைகள் ஏற்பட கண்ணில் உள்ள இந்தக் கோளாறுதான் காரணம் என்று குறிப்பிட்டேன்; உடன் என்பால் உள்ள அன்பால் நீங்கள் அறிவுறுத்தியமைக்கு மீண்டும் நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

வட்லப்பத்தின் வடிவம் சரியில்லை என்று எனக்கும் கண்ணில் பட்டது; ஆனால், விருந்தாளியின் உணவைக் குறை கூறுதல் ஆகாது என்றும் என் மனம் சொன்னது.

Shameed said...

adiraimansoor சொன்னது…
//கலாம் முதலில் கண்ணை பாருப்பா
வரப்போகின்ற என் முதல் பதிவு
கண்ணை பற்றிதான்//



அப்போ முதல் பதிவு கண்ணுக்கு கண்ணான பதிவுன்னு சொல்லுங்க


(ஹஜ் பெருநாளைக்கு கண்டிப்பா வந்துரனும் வட்டிலப்பம் சாப்பிட )

Shameed said...

ABULKALAM BIN SHAICK ABDUL KADER சொன்னது…

//வட்லப்பத்தின் வடிவம் சரியில்லை என்று எனக்கும் கண்ணில் பட்டது; ஆனால், விருந்தாளியின் உணவைக் குறை கூறுதல் ஆகாது என்றும் என் மனம் சொன்னது.//


இந்த வட்டிலப்பம் ஸ்டேஜ் 2 அதாவது அவித்த சட்டியில் இருந்து ஸ்பூன் கொண்டு எடுத்து வாய்கொள்ளும் அளவிற்கு தட்டில் காத்திருக்கின்றது

M.B.A.அஹமது said...

ஷிபா ஹாஸ்பிடல் திறப்புவிழாவின் போது திறப்புவிழாவுக்கு வந்த டாக்டர் பி ஏ பாஸ்கர் அங்கு பரிமாறப்பட்ட பிரியாணியை பார்த்துவிட்டு அதில் உள்ள கறியயியும் நெய்யையும் பார்த்து மலைத்து இதை சாப்பிட்டுதான் அதிராம்பட்டினம் ஆட்கள் எங்களை வந்து தொந்தரவு பண்டீரீங்கலப்பா என்று பரிமாரிகொண்டிரிந்த என்னிடமே வினவினார்

Adirai pasanga😎 said...

adiraimansoor சொன்னது…

//இப்னு அபூ ஹமீதுடைய
பின்னூட்டம் இன்னும் மீதி இருக்கும் போல இருக்கு
பேப்பெர பெருசா கிளிச்சி வச்சிருக்கிறீங்க!//
மன்சூர் காக்கா அந்த பின்னூட்டமிட்டவர் பெயர் இப்ன் அப்துல்வாஹித் - இப்னு அபூ ஹமீது அல்ல . நீங்களும் சேர்ந்து மதுரைக்கு போக வேண்டியதுதான்.

அடுத்தபடியாக பேப்பர் பெரிசா கிளிச்சு வச்சிருக்கிறது ஏன் தெரியுமா? பசியாறிய பின்பும் சாப்பிட்டபின்பும் கை துடைப்பதற்காகத்தான்.

adiraimansoor said...

ஹமீது பாய்
ஹஜ்ஜுப் பெருனாளைக்கு என்னுடைய மனிசி கையால வட்லாப்பம் சாப்பிடலாம்ன் நிய்யத்து
வச்சிருக்கின்றேன். இதில் மாற்றம் ஏதும் வந்தால் உங்கள் அன்பை என்னுடன் பரிமாரிக்கொள்ள வாய்ப்பழிக்கின்றேன் ஜசாக்கல்லாஹ் கைர்.

உங்களை நேரடியாகப் பார்த்துவிட்டு வந்து தெளிவாகத்தான் இருந்தேன்.அடிக்கடி அஹ்மது காக்காவின் பின்னூட்டத்தில் ஒரே காலேஜ் பற்றியும் வாத்திகளை பற்றியும் இருவரும் பரிமாரிக் கொள்வதைப் பார்த்து ஒருவேளை இருவரும் கிளாஸ்மெட்டா இருக்க்மோ இருக்குமோ என்று சந்தேகம்
அதனால்தான் அடிக்கடி பாசிபடத்தான் கபீர் காக்கா போன்று அடிக்கடி முறையை மாற்றி கூப்பிட்டுக் கொன்டிருக்கின்றேன்

ஆம்பளைங்களிடம் சம்பளத்தையும், பெண்களிடம் வயசையும் கேட்க கூடாது என்பார்கள்
நீங்க ஆம்பிள்ளைதான். உங்களிடம் வயசை கேட்களாம் ப்லீஸ்.
ஏனெனில், உங்களை அண்ணன் என்று கூபிடுவதா, நன்பர் என்று அழைப்பதா, பாய் என்றழைப்பதா அல்லது சகோதரர் என்றழைப்பதா அஹ்மது காக்காவினால் வந்த குழப்பம்
இந்த குழப்பத்தை தீர்த்துவைக்கவும்.

adiraimansoor said...

இந்த போட்டோக்களுக்கு வாப்பா என்ன கமான்டு கொடுக்கப் போகின்றார்களோ தெரியவில்லை. காத்திருப்போம்.

Shameed said...

adiraimansoor சொன்னது…

// உங்களிடம் வயசை கேட்களாம் ப்லீஸ்.//

03 /08 /1967

Shameed said...

A.Ahamed Thaha சொன்னது…
adiraimansoor சொன்னது…

//இப்னு அபூ ஹமீதுடைய
பின்னூட்டம் இன்னும் மீதி இருக்கும் போல இருக்கு
பேப்பெர பெருசா கிளிச்சி வச்சிருக்கிறீங்க!//
மன்சூர் காக்கா அந்த பின்னூட்டமிட்டவர் பெயர் இப்ன் அப்துல்வாஹித் - இப்னு அபூ ஹமீது அல்ல . நீங்களும் சேர்ந்து மதுரைக்கு போக வேண்டியதுதான்.

//அடுத்தபடியாக பேப்பர் பெரிசா கிளிச்சு வச்சிருக்கிறது ஏன் தெரியுமா? பசியாறிய பின்பும் சாப்பிட்டபின்பும் கை துடைப்பதற்காகத்தான்.//



ஹா ஹா சரியான கிழிப்பு சாரி சிரிப்பு

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

திருமண வீட்டை தேடி குப்பைத் தொட்டி வருதாமே, அது மாதிரி காலை பசியாறி, பகல் சாப்பாடெல்லாம் முடிந்து வந்து லேட்டா வந்து நிற்கிறேன்.

பார்க்க படிக்க அத்தனையும் தமிழ்ச்சுவையுடன் ரொம்ப டேஸ்ட்!

அடுத்து மந்தியோடு வருவீங்க தானே!

எல்லாத்தையும் ஒருமிச்சு சாப்பிட இன்னும் 53 நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்)

--------------------------------------------------------

ஷவ்வால் பிறை 16 ஹிஜ்ரி 1434

Ebrahim Ansari said...

என்னைப் பொருத்தவரை அஞ்சு கறி சோறு = அஞ்சுவதற்கே,
பிரியாணி = பிரிந்து வாழவே.

நமது உணவு முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வராதவரை தஞ்சையில் உள்ள மருத்துவர்களின் காட்டில் மழைதான். இது பற்றி யாராவது எழுதுங்களேன்.

கவியன்பன் அவர்களின் கண் சிகிச்சை இனிதே நிறைவேறி நலம் கிடைக்க வேண்டுகிறேன். நான் இரு கண்களிலும் துபாய் என் எம் சி ( அல் நாதா) ஆஸ்பத்திரியில் செய்து கொண்டேன். நலமே.

Anonymous said...

//இந்த போடோக்களுக்கு வாப்பா என்ன கமெண்ட் கொடுக்க போகிறார்//

தம்பி அதிரைமன்சூர்!

உண்டமயக்கம் தெளிஞ்சு இப்போதான் கண்டேன் உங்கள் கமென்ட்! போட்டோவுகுக்கு மட்டுமாக மென்ட்? 'போட்டத'ற்க்கும் கொமென்ட்//
.கண்- ரசித்தது-வாய்-புசித்தது-நா-ருசித்தது- கொண்ட வையிறோ ''இன்னும் கொஞ்சம் கொண்டா! கொண்டா!'' என்றது.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

//இதை சாப்பிட்டுதான் அதிராம்பட்டினம் ஆட்கள் எங்களை வந்து தொந்தரவு பண்டீரீங்கலப்பா// அதிரை மட்டுமல்ல. வேண்டுமானால் ஒரு சர்வே எடுத்துப் பாருங்கள்.

தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, திருச்சி, மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் பெரிய பெரிய டாக்டர்களிடம் சிகிச்சைக்காக முன் பதிவு செய்பவர்கள் உடைய எண்ணிக்கையின் சதவீதத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்.

உதாரணமாக தஞ்சாவூர் டாக்டர் மூர்த்தியிடம் ஒரு நாளைக்கு முப்பது டோக்கன் என்று வைத்துக் கொண்டால் அதில் இருபதுக்கு மேல முஸ்லிம்களின் பெயர்கள். இதே நிலைதான் எல்லா டாக்டர்களிடமும் அதாவது முஸ்லிம்களில் அறுபது சதவீதத்துக்கு மேல இனிப்பு, ஹைபர் டென்சன், கொலஸ்ட்ரால் , தைராயிடு, மூட்டு வலி போன்ற வியாதிகளால் அவதிப் படுகிறார்கள்.

நம்முடைய மக்கள் தொகையோ பனிரெண்டு சதவீதமே . ஆனால் வியாதியஸ்தர்கள் டாக்டர்களின் டோக்கன் லிஸ்டின்படி அறுபது சதவீதம். தஞ்சை மற்றும் பட்டுக் கோட்டையில் பத்தை கைலியும் பொட்டி பீஸ் தாவணியும் துவைத்துக் காயப் போட்டு இல்லாத கிளிநிக்குகளை பார்ப்பது அபூர்வம். புர்கா போட்ட பெண்களின் கூட்டமும் குதிரை மார்க் கைலி கட்டியவர்களின் கூட்டமும் மாலை வேளைகளில் சாத்துக்குடிப் பைகளைத் தூக்கிக் கொண்டு கிளிநிக்குகளில் நிரம்பி வழிகின்றன.

நம்மில் பலர் வியாதியச்தர்களாக இருக்கிறோம். இப்படி எல்லாம் போட்டோ போட்டு உசுப்பெத்தினால் இந்தக் கூட்டம் இன்னும் அதிகரிக்கும். அந்த வட்டிலப்பத்தைப் பார்க்கும் போது உச்சகட்ட ஆபத்தில் இருக்கும் எனக்கே விழுந்து சுழற்ற வேண்டும்போல இருக்கிறது.

நமது உணவுப் பழக்க வழக்கங்களே நம்மை வியாதியஸ்தர்களாக ஆக்குவதில் முதலிடம் வகிக்கின்றன. ஏற்கனவே இருக்கும் எக்கச்சக்க கொழுப்பு உணவுகளுடன் இப்போது கே எப் சி மற்றும் பிஜ்ஜா கலாச்சாரங்களும் இணைந்துகொண்டன.

மாறுவோமா? அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவோமா?

adiraimansoor said...

அட ஹமீது பாய் எனக்கு தம்பி

//ஹா ஹா சரியான கிழிப்பு சாரி சிரிப்பு//
ஹமீதின் குரும்பு தாங்க முடியலையே

தேவையில்லாமல் அஹ்மது காக்காவை வம்புக்கு இழுத்து தாஹாவிடம் நான் மாட்டிக்கொண்டேன்.
எதுக்கும் கண்ணாடியை செக் பன்னிக்கிறேன்

இதைத்தான் தெய்வம் இன்றே கேட்கும் என்பார்களோ

அப்துல்மாலிக் said...

ஒரு சிலரோட பின்னூட்டங்கள் படிக்க நல்லாயிருக்கும் அதே ஒரு சிலரோட பதிவுகளை நகைச்சுவையோடு கலந்து படிக்கும்போது பதிவு மனதிலிருக்கும். அந்தவகையில் இன்னிக்குகாலங்காத்தாலே இப்படி பதிவையும் படத்தையும் போட்டு ஊருக்கு டிக்கெட் போட வெச்சிடுவீங்களே காக்கா..

//எறச்சி ஆணம் இது தாளிச்சு போடுறப்பவே நாம வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த செண்டெல்லாம் செயல் இழந்து போய்விடும்//

இங்கே சிரிக்காமல் இருக்கமுடியலே..

இந்த ருசி எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் “கசகசா” தான் என்பதை யாருமே மறுக்காயியலாது. என்னதான் வளையல்போட்ட கையாலே எவ்வளவு ருசியா சமைச்சாலும் இங்கே அந்த மேல்படி ஐட்டம் தடைசெய்யப்பட்டதாலே என்னமோ தெரியலே ஊரில் உள்ள அந்த ருசி கிடைக்கவே மாட்டேங்குது...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு சமயம் என் குடும்பம் சென்னை மயிலாப்பூரில் இருந்த சமயம் சவுதியிலிந்து விடுமுறையில் சென்றிருந்தேன். வீட்டிற்கு அருகாமையில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் சுகர்,கொலஸ்ட்ரால் செக் பண்ணி பார்த்துக்கொள்வோண்டும் என்ற நோக்கில் காலை வெறும் வயிற்றில் ஒரு தடவை ரத்தம் அங்கு எடுத்தாகி விட்டது. பிறகு காலை சாப்பிட்டு 2 மணிக்குப்பிறகு இன்னொரு தடவை அங்கு சென்று ரத்தம் கொடுத்தாகி விட்டது. இரண்டாவது தடவை ரத்தம் எடுக்கும் பொழுது அந்த பரிசோதனை நிலையத்தின் தலைமைப்பெண் காலையில் என்ன சாப்பிட்டீர்கள்? என்று கேட்க நானும் அப்பமும் அதற்கு சைடு டிஸ்ஸாக ஈரல் பெரட்டலும் சாப்பிட்டேன் என்றேன். அந்த பெண் அந்நேரம் ஆச்சர்யத்தில் பிழந்த வாயில் எத்தனை லட்சம் பாக்டீரியாக்கள் உள்ளே சென்றது என தெரியவில்லை.

என்ன‌ இது? காலையிலேயே எப்டி? என்று கேட்ட‌ அந்த‌ அம்ம‌ணியிட‌ம் இதெல்லாம் எங்க‌ள் ஊரில் ச‌க‌ஜ‌ம‌ப்பா என்றேன். பிற‌கு ந‌ம் ஊர் விவ‌ர‌ங்க‌ளையும், பெருமைக‌ளையும் கொஞ்ச‌ம் எடுத்து உட்டேன். க‌டைசியாக‌ அறிந்து கொண்டேன் அதுவும் ஒரு பர்தா அணியாத இஸ்லாமியப்பெண் என்று. முஸ்லிம் பெண்களே நம் பசியாற, சாப்பாடு மேட்டர்களை கேள்விப்பட்டு இப்படி வாய் பிழந்து நின்றால் பிறகு மாற்றுமத அன்பர்கள் பற்றி என்னத்த சொல்ல? ஊர் ஒலகம் ரொம்ப மோசமாகிக்கிடக்கிறது என்று புண்முறுவலுடன் நினைத்துக்கொண்டேன்.

ஹ‌மீத் காக்கா, எங்க‌ ஊட்ல‌ அந்த‌ "செவ‌ரொட்டி"க்கு த‌னிப்பெய‌ர் உண்டு. பார்ப்ப‌த‌ற்கு வெட்டிக்குளத்து சேர் போல் க‌ருப்பாக‌ இருப்ப‌தால் "சேத்தீர‌ல்" என்று அழைக்க‌ப்ப‌டும்.

இன்னொரு விச‌ய‌ம், தால‌ஞ்சிறா மீனின் முட்டைக‌ளும் அத‌ன் ஈர‌லும் மனத்துக்கிட்டு ரொம்ப‌ சூப்ப‌ரா ஈக்கிம் தெரியும்ல‌......

ஆட்டு மூளையை வெங்காயம், பச்ச மொளவா வெட்டி போட்டு ஆம்ப்ல‌ட்டாக‌ சாப்பிட்டால் இன்னும் தூக்க‌லாக‌ இருக்கும்.

உருளைக்கிழ‌ங்குட‌ன் க‌ல‌ரிச்சாப்பாட்டில் க‌ல‌ந்து வ‌ரும் ஈர‌லும், கிட்னியும் ச‌க‌னில் அம‌ர்ந்திருப்போருக்கு லூலூ சூப்ப‌ர் மார்க்கெட்டில் ப‌ம்ப‌ர் ப‌ரிசு கார் கிடைத்த‌து போல் அனைவ‌ரையும் புண்முறுவ‌ல் பூக்க‌ வைக்கும். (ஆஸ்ப‌த்திரிக்கு டோக்க‌ன் ரெடியாகும் என்ப‌து வேறு‌ விச‌ய‌ம்)

பிரியாணிக்குப்பிற‌கு சாப்பிடும் ப‌ன் சுவீட் நினைக்கும் பொழுதெல்லாம் ஊர் பேர் சொல்லும்.

இன்று வெங்காய‌ச்சட்டினி தாராள‌மாக‌ போடும் விருந்துக‌ளில் இன்க‌ம்டேக்ஸ் ஆபீஸ‌ர்மாருவொ வ‌ந்து விசார‌ணை ந‌ட‌த்தினாலும் ஆச்ச‌ர்ய‌ம் இல்லை.

ம‌ண்ச‌ட்டியில் க‌ருக்கிய‌ ரால் வாச‌ம் நாம் விண்ணுக்கு சென்றாலும் ஈர்க்கும்.

வெள்ள‌டையும், ஆட்டுத்த‌லைக‌றியும் இணைபிரியா ந‌ண்ப‌ர்க‌ள்.

இப்ப‌டியே லிஸ்ட் நீளும்.....

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும் சாவன்னா!!!
பசிக்குது எனக்கு. மறுபடியும் அதிரை புறப்பட்டு வரனும் போலே இருக்குது.
வஸ்ஸலாம்.
N.A.Shahul Hameed

M.B.A.அஹமது said...

N.A.Shahul ஹமீது சார் சொன்னது


//அஸ்ஸலாமு அலைக்கும் சாவன்னா!!!
பசிக்குது எனக்கு. மறுபடியும் அதிரை புறப்பட்டு வரனும் போலே இருக்குது.
வஸ்ஸலாம்.///

எப்ப வர்றீங்கன்னு சொல்லூங்க நானும் அப்படியே ஊருக்கு வந்துறேன் பார்த்து 7 வருஷம் ஆச்சு சகோதரர் அண்ணாவியார் வாஹித் அவர்களின் மகள் திருமணத்தின் போது பார்த்தது

M.B.A.அஹமது said...

மன்சூர் காக்கா நான் உங்களுக்கு காக்காவல்ல தம்பி உங்களை விட ரெண்டு வயசு கம்மி நீங்க மதுரைக்கு போக சொன்னதை நான் ஒன்னும் வருத்தபடலை கோழி மிதித்து குஞ்சி சாகுமா .இல்லை நெருப்பு என்று சொன்னால் சுட்டுவிடுமா இங்கு எல்லாமே டேக் இட் ஈசி தான் அனைவரும் ரொட்டி கறி இடியாப்பம் வட்டிலாப்பம் கடைபாசி அனைத்தும் சாப்பிட்டுவிட்டு நலமுடன் வாழ துவா செய்வோம்

M.B.A.அஹமது said...

///adiraimansoor காக்கா சொன்னது…//
//ஏனெனில், உங்களை அண்ணன் என்று கூபிடுவதா, நன்பர் என்று அழைப்பதா, பாய் என்றழைப்பதா அல்லது சகோதரர் என்றழைப்பதா அஹ்மது காக்காவினால் வந்த குழப்பம்//

இப்ப N A S சார் என்னை யார்ருண்டு தெரிஞ்சிகுடுவாங்க யான்ன குழுப்பம் பண்ற துன்னா இந்த பையன்ன தான் இருக்கும் என்று

adiraimansoor said...
This comment has been removed by a blog administrator.
தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நலமா?

போட்டோவுல சாப்பாடு போட்டதெல்லாம் சரி காக்கா... அமீரகம் சீக்கிரம் வந்து சமைத்துதாங்க காக்கா... ஜாஹிர் காக்காவையும் அமீரகத்து வரவைச்சிடலாம்...

adiraimansoor said...

அன்சாரி காக்கா அருமையான பின்னுட்டம்
அதிரை நியூஸ்ல திருப்பூர் சபீர் மந்தி விருந்து போடுராரு அவருக்கு உங்கள் பின்னூட்டதை அப்படியே காப்பிபன்னி கொடுத்துவிட்டுட்டேன், அதாவது போட்டுவிட்டுட்டேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தன்னைப் பற்றி அறிமுக செய்யதவர்களிடம் உரையாடவதை தவிர்த்தால் காக்கா தம்பி என்ற குழப்பம் வராது.

நல்ல கருத்துக்கள் பரிமாறப்படும் ஒரு சபையில் நான் யார் என்று அறிமுகப்படுத்த மறுப்பவர்களிடம் சுவற்றோடு அல்லது நிழலோடு உரையாடுவது போல் தான் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா காக்கா? :)

சர்ச்சையான விசயங்களில் தங்களின் நியாயமான கேள்விகள் கேட்கும்போது அல்லது கண்ணியமான கருத்துக்களை சொல்லும்போது தனக்கு தனிப்பட்ட பிரச்சினை வரும் என்ற அச்சப்பட்டு தன்னை பொதுவில் அறுமுகபடுத்த தயங்கினாலாவது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சர்ச்சையில்லாத நல்ல கருத்துரையாடலிலும் தங்களை அடையாளப்படுத்த விரும்பாதவர்(கள்) உங்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பி அல்லது அலைப்பேசிக்கு அழைத்து நான் தான் இன்னார் வேறு யாரிடம் சொல்லிடாதிங்க என்று சொன்னாலும் சொல்லலாம் காத்திருங்கள்.

:)
:)

Anonymous said...

அறிமுகமில்லாதவர்களோடு உரையாடும்போது குழப்பமே நீடிக்கும் ! அதற்கு இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தொடரும் கருத்தாடல்களே சாட்சி !

சகோதரர் அதிரை மன்சூர் அவர்களின்
Click here } இந்த கருத்து நீக்கம்

செய்யப்பட்டிருக்கிறது அதனை இந்த கருத்தாடலில் இல்லாதவர் வாசித்தால் அது குழப்பதை ஏற்படுத்தும்.

விளக்கம் வேண்டியிருப்பின் நெறியாளரை தொடர்பு கொள்ளவும்.

Shameed said...

N.A.Shahul Hameed சொன்னது…
//அஸ்ஸலாமு அலைக்கும் சாவன்னா!!!
பசிக்குது எனக்கு. மறுபடியும் அதிரை புறப்பட்டு வரனும் போலே இருக்குது.
வஸ்ஸலாம்.
N.A.Shahul Hameed//



வலைக்கும் முஸ்ஸலாம்
எப்போ வேணும்னாலும் வாங்க மெனு லிஸ்டில் நம்ம MSM ஐட்டத்தையும் அத்தோடு உங்களுக்கு பிடிச்ச கருவாடு மொச்சக்கொட்ட ஆணைமும் சேர்த்துக்கொள்வோம்

Shameed said...

தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்,

நலமா?

//போட்டோவுல சாப்பாடு போட்டதெல்லாம் சரி காக்கா... அமீரகம் சீக்கிரம் வந்து சமைத்துதாங்க காக்கா... ஜாஹிர் காக்காவையும் அமீரகத்து வரவைச்சிடலாம்...//



வலைக்கும் முஸ்ஸலாம்
நலமே



ஏதோ பெரிய ஏற்பாடு நடக்குதோ !!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சாப்பாட்டை வைத்து ராஜபாட்டை போட்டிருக்கீங்க !

இனி ! அடுத்து !?

ZAKIR HUSSAIN said...

இப்படி வலுவா சாப்பிடும் விசயங்களை நான் கண்டிப்பேன் என்று தெரிந்து சபீர் எஸ்கேப்.....

sabeer.abushahruk said...

அம்பி ஜாகிர்,

நான் மொதல்லேயே வந்து ஃபோட்டோவையே வெறிக்கவெறிக்க பார்த்துட்டுப் போனது ஒனக்கு தெரியாதா?

Shameed said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
//சாப்பாட்டை வைத்து ராஜபாட்டை போட்டிருக்கீங்க !

இனி ! அடுத்து !?//



போட்டோவை வைத்து பேச விடுவோம்!!

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும் M.B.A. Ahamed,
I do remember you and the day we met on the occasion when and where we met. For your information I am already here in our mother land and Inshya Allah I will be leaving for Singapore by the first week of September. If Allah willing we will meet again and share our memories.
தம்பி சாவன்னா, எனக்குப் பிடிச்ச கருவாடு மொச்சக்கொட்ட ஆணம், உன்னோட அம்மா சமையல் செய்தால்தான் ரொம்ப இஷ்டம்.
வஸ்ஸலாம்.
N.A.Shahul Hameed

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு