Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 10 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 04, 2013 | , , , ,


மூக்குக் கண்ணாடி திரையரங்கம்

முந்தைய காலங்களில் ஒரு திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் அங்கே தியேட்டரில் விழாக்கோலமாக கூட்டம் கூடும். அதிலும் பிரபலமான நடிகரின் படம் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. முதல் நாள், முதல் ஷோ பார்த்து விட வேண்டும் என்று ‘தீவிர’ரசிகர்கள் திரையரங்கின் முன்பு நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். 

மற்றொரு விதமாக விழாக்களில் புரெஜெக்டர் வைத்து இலவசமாக திரைப்படங்களைத் திரையிடுவார்கள். அதுபோலதான் காதிர் முகைதீன் கல்லூரியிலும் திறையிட பல தடவை  நான் பார்த்து இருக்கின்றேன். பொழுதுபோக்குச் சாதனங்கள் என்று அதிகம் சொல்லிக் கொள்ள இயலாத கால கட்டம் அது. கிராமங்களில் ஒன்று அல்லது இரண்டு வீடுகளில் டி.வி. இருந்தாலே பெரிய ஆச்சர்யமான ஒன்றுதான். வார விடுமுறை நாட்களில் டி.வி.யில் ஒளிபரப்பு செய்யப்படும் திரைப்படத்தினைப் பார்க்க குடும்பத்துடன் டி.வி. இருக்கும் வீட்டை சூழ்ந்து கொள்வதை காணமுடியும். அந்த வீட்டை பார்த்தால் மினி சினிமா தியேட்டர் போல காட்சி அளிக்கும். தொழில்நுட்பம் விறுவிறுவென்று மாறத் தொடங்கியது. இந்த மாற்றங்களின் விளைவாக எத்தனையோ புதுமைகள் கண்களுக்கு தெரிந்தது.

டி.வி. நிறுவனங்கள் தங்களுக்கு உள்ள சந்தையை தக்க வைத்துக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கின. புதிய மாடல்களில் டி.வி.கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதிலும் நவீன வசதிகள் பொருத்தப்பட்டன. மக்களும் தங்கள் வீட்டிலும் புதிய டி.வி. வாங்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினார்கள்.

டி.வி.யின் விற்பனை அதிகரிக்க அதன் விலையும் குறைந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டி.வி. விலைக்கும் தற்போதுள்ள டி.வி. விலைக்கும் வித்தியாசம் அதிகம் உள்ளது. மலிவு விலையால் சாதாரன வருமான மக்களும் டி.வி.யை நாடினார்கள். இப்போது நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் டி.வி. தனக்கென கேட்காமலே இடம் பிடித்து விட்டது. உலகம் முழுதும் டி.வி.பெட்டிகள் விடைபெற ஆரம்பித்தது. ஆனால் நமது தமிழ் நாட்டிலோ கலைஞர் தமது கட்டுப்பாட்டிலே மக்களை வைத்துக் கொள்ள திட்டமிட்ட ஆட்சியாளார்கள் டி.வி.பெட்டிகளை இலவசாக கொடுத்து குறிப்பாக தாங்கள் சார்ந்திருக்கும் சேனல்களை மட்டுமே மக்கள் பார்க்க வேண்டும் என்ற செட்டப்போடு கொடுத்தார்கள் அதில் மக்கள் தாங்கள் விரும்பும் சேனல்கள் பார்க்க விரும்பினால் சரியாக வேலை செய்யாது. 

டி.வி.கலைகட்டிய அதே காலகட்டங்களில் மக்கள் விரும்பிய படங்களை டி.வி.யில் எளிதாக பார்த்து மகிழ வீடியோ தொழில்நுட்பமும் கைகோர்த்துக் கொண்டது. வீடியோ காலாவதியாகி அடுத்து வி.சிடி. மற்றும் டி.வி.டி வந்தன. இப்படி கண்டுபிடிப்புகளின் ஆதிக்கம் தொடரும் போது மக்களின் ரசனையும் காலச் சூழலுக்கு ஏற்றார்போல் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று புதுமையை ஏற்றுக் கொண்டது. சமீபத்திய வரவாக மூக்கு கண்ணாடியிலேயே ஒரு திரையரங்கத்தை உருவாக்கி விட்டார்கள் என்றால் நம்புவீர்களா?. நம்பித்தான் ஆக வேண்டும். இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. வாருங்கள் மூக்கு கண்ணாடி திரையரங்கத்தைப் பற்றி சற்று விரிவாக அலசுவோம். 

சாதாரண மூக்கு கண்ணாடியைப் போல இதையும் எளிதாக அணிந்து கொள்ள முடியும். இதன் உட்பகுதியில் சிறிய இரண்டு திரைகள் (எல்.சி.டி.) பொருத்தப்பட்டிருக்கும். திரையின் அளவு சின்னதுதான். ஆனால் உங்களது கண்களுக்கு கிட்டத்தட்ட 35 அங்குல டி.வி.யில் படம் பார்த்தால் காட்சிகள் எப்படி தெரியுமோ? அதே அளவிற்கு இந்த மூக்கு கண்ணாடி திரையரங்கிலும் காட்சிகள் தெரியும். காட்சிகள் மிகவும் துல்லியமாக தெரிய வேண்டும் என்பதற்காக நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி துல்லியமான லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டி.வி.க்கான மின்சாரம் வீடியோ போன்று செயல்படும் கருவியில் இருந்து கிடைக்கிறது. இதற்காக தனியாக பேட்டரியை இணைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

2டி மற்றும் 3டி படங்களையும் அழகாக கண்டுகளிக்க முடியும். மேலும் செல்ஃபோன் மற்றும் லேப்டாப் துணை கொண்டு சினிமா அல்லது அதே நுட்பத்தில் வெளிவரும் காணொளிகளை பார்க்க முடியும். இதற்காக பிரத்யேக இணைப்பு மூக்கு கண்ணாடிக்கு கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, படத்தை மூக்கு கண்ணாடியில் பொருத்தப்பட்டிருக்கும் திரையினில் பார்க்கலாம்! நிகழ்ச்சிகளின் ஒலியை எவ்வாறு கேட்பது? என்று நீங்கள் கேட்கலாம்.

இதற்காக கண்ணாடியோடு இணைந்த காது ஒலிக் கருவி ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை காதில் மாட்டிக் கொண்டு காணொளியை பார்த்தீர்கள் என்றால் திரையரங்கில் படம் பார்ப்பது போன்றதொரு பிரம்மை ஏற்படும். இந்த கண்ணடியின் விலையும் அதிகம் இருக்குமே? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. விலை கொஞ்சம் அதிகம் தான். சந்தையில் இதன் விலை கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 500 ரூபாய்.

மூக்கு கண்ணாடி திரையரங்கிற்குப் போட்டியாக மற்றொரு திரைக் கண்ணாடியை அறிமுகப் படுத்தியிருக்கின்றனர். இந்தக் கண்ணாடியும் சிறப்புகளைக் கொண்டது. இதற்கு பெயர் Lumus PD-20. இந்த வகை கண்ணாடியைக் கொண்டும் படம் பார்க்கலாம். காதில் பொருத்தப்பட்டிருக்கும் நுண் திரையின் மூலம் நீங்கள் படத்தைக் காண முடியும். இதற்கு கண்ணாடியின் வலது ஓரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லென்ஸ் உதவி செய்கிறது. சிவப்பு, பச்சை, ஊதா நிற லேசர் கதிர்கள் ஒன்றிணைந்து நிறப்புள்ளி ஒளிக் கற்றையை கண்ணாடியில் உள்ள லென்சில் பிரதிபலிக்கிறது. இந்த லென்ஸ் ஒளிக்கற்றையை காட்சியாக மாற்றி உங்கள் விழித்திரைக்கு அனுப்புகிறது. படம் பார்க்காத நேரத்தில் இந்த கண்ணாடியை சாதாரண மூக்கு கண்ணாடியைப் போன்றும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தொழில்நுட்ப திரையரங்கு கண்ணாடிகளைப் பற்றி விஞ்ஞானிகள் கூறுவது "மக்களின் ரசனை காலத்துக்கு தகுந்த படி மாறி வருகிறது. தற்போது மூக்கு கண்ணாடி தொழில்நுட்பம் ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்து வெளி உலகுக்கு வந்துள்ளது. மக்களிடம் பிரபலமாக இன்னும் சில காலம் பிடிக்கும். தற்போது செல்ஃபோன் விற்பனை எவ்வாறு சுடு பிடித்துள்ளதோ அதே போன்று வருங்காலத்தில் மூக்கு கண்ணாடி தொழில் நுட்பமும் பிரபலமாக வாய்ப்பு உள்ளது,'' என்கின்றனர்.

பாதுகாப்பு பணியில் ரோபோ

நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு-ஹரோபோ'. எந்திர மனிதன் என்று அழைக்கப்படும் இந்த ரோபோக்கள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதலில் கேளிக்கைக்காகவும், குழந்தைகளை மகிழ்விக்கவும் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பின்னர் பல்வேறு துறைகளிலும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் உருவானது தான் படத்தில் நீங்கள் பார்க்கும் ஹரோபோ கார்டு'. அதாவது காவலாளி ரோபோ.

வீடுகள், மற்றும் வியாபார நிலையங்கள் போன்ற இடங்களில் வாசல் பகுதியில் நின்றபடி காவல் காக்கும் பணியில் காவலர்கள் (கார்டுகள்) நிற்பதுண்டு. இப்போது இந்தப்பணியை செய்யும் வகையில் ரோபோ ஒன்றை ஜப்பான் நாடு உருவாக்கி இருக்கிறது. இங்குள்ள பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான சோகா செக்யூரிட்டீஸ் நிறுவனத்துக்கு இந்த காவலாளி ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. தொடு திரை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காவலாளி ரோபோ பெரிய ஷாப்பிங் நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவை ஷாப்பிங் நிறுவனத்துக்கு வருபவர்களுக்கு வழிகாட்டும் பணியை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றிக்கொண்டு இருந்தால் அது பற்றி காவல் துறைக்கு தகவலும் தெரிவித்து விடும்.

ஜப்பானில் உபயோகத்தில் இருக்கும் இந்த காவலாளி ரோபோ இந்தியாவுக்கு வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் தொடரில் கண்களின் பாதிப்புகளும் நோய்களும் பார்க்கலாம்.

அதிரை மன்சூர்

15 Responses So Far:

Ebrahim Ansari said...

புதிய புதிய செய்திகள். வியப்பாக இருக்கிறது.

சின்ன வயதில் ஒரு படம் பார்க்க வேண்டுமானால் வீட்டில் எவ்வளவு பொய்கள் சொல்லவேண்டும்? எவ்வளவு நாடகங்கள் நடத்த வேண்டும்? நினைத்துப் பார்க்கிறேன்.

இன்று ஒரு மூக்குக் கண்ணாடியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றால் ---- ஆச்சரியம் ஆனால் உண்மை.

அரிய தகவல்களைத் தேடித் திரட்டித் தரும் தம்பி அதிரை மன்சூருக்கு பாராட்டுக்கள்.

Anonymous said...

அரசியல் வாதிகளின் ஊழலை கண்டு பிடிக்கும் ரோபோ எப்போ வரும்?

S.முஹம்மதுபாரூக் அதிராம்பட்டினம்

adiraimansoor said...

பாரூக் காக்கா

அரசியல் வாதிகளின் ஊழல்களை கண்டுபிடிக்க ரோபோ தேவையில்லை மறாக ஒவ்வொருத்தரும் பதவி ஏற்பதற்கு முன்பு ஒரு ச்சிப்பையும் ஒரு புராஸசரையும் அவர்கள் உடம்பின் உள்ளே வைத்து தைத்துவிட்டால் சந்தேகப்படும்போது எடுத்து பார்த்துக்கொள்ளலாம் யாரும் தவரிழைக்க் முடியாது

adiraimansoor said...

இபுறாஹீம் அன்சாரி காக்கா

மிக்க நன்றிகள்

ஒவொரு படம் பார்ப்பதற்கும் அந்த காலத்தில் நடத்திய நாடகங்களை தனி பதிவாகவே வெளியிட முடியும் அவ்வளவும் மிகவும் சுவராசியமான நாடகங்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

நண்பா,

உன் இருகண்களில் எப்படி இத்துணை வியத்தகுக் கண்டுபிடிப்புகள் தென்பட்டன?
உன் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துகிறேன்.

sabeer.abushahruk said...

மன்சூர்,

கண்களைப் பற்றி தொடர் எழுதப்போவதாகச் சொன்னீர்கள். ஆனால் இந்தத் தொடர் கண்களைப் பற்றி மட்டுமன்றி பார்வையைப் பற்றியும் விரிவாக அலசி தற்போது கண்காட்சிகளைப் பற்றியும் விவரிக்கின்றது.

ஆக மொத்தம், கண்களைப் பற்றி ஒரு ஆர்ட்டிக்கில் எழுதுவதே அதிகம் என்று தோன்ற, நீங்களோ மிக விரிவாகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் தொடரை நகர்த்திச் செல்கிறீர்கள்.

கலக்குங்குங்கள்.

sabeer.abushahruk said...

அப்டியே இந்த லிங்க்கையும் வாசிச்சு வைங்க:

http://www.satyamargam.com/articles/arts/lyrics/2235-2235.html

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கண்ணான கட்டுரை !

கண்ணுக்கு வேலை தந்த கட்டுரை !

அந்த லிங்கையும் கண்களால் கடந்தோம்,

கடைசி வரிகளில் கரை ஒதுங்க கையேந்தவே செய்தோம் !

Shameed said...

மன்சூர் காகாவின் கண்கள் தொடர் நாலாபக்கமும் சுழல்கின்றன

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தரின் கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை:


எண்ணம் பெரிதாம் எடைமிக்க எண்ணிக்கை
வண்ணம் புரியும் வணக்கம் பெரிதன்று
எண்ணம் உயர்த்தும் எடையென நன்மையை
எண்ணி வணங்கும் இடத்து

எண்ணமே மறுமையில் எடையாய் மாறும்
எண்களாய் எதுவுமே எடையெனக் கணிக்கத்
திண்ணமாய் இயலாத் தீர்ப்பு நாளை
எண்ணியே அழுதிட எழுதிய கவிதை

adiraimansoor said...

கவியன்பனுக்கும் கவியரசருக்கும் நன்றிகள் உங்கள் எழுத்துக்களின் மயக்கமுற்ற வெளிப்பாடே இவைகள் உங்கள் எழுத்துத் திறனுக்கெல்லாம் மிக மிக பின் தங்கியவன் நான் உங்கள் எழுத்தாற்றல் பார்த்து ரசித்து உருவாகி வருபவனே நான் உங்கள் பாராட்டுக்கள் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் ஜஸாக்கல்லாஹ் கைரன்

adiraimansoor said...

சபீர்
நீங்கள் எழுதிய பின்னூட்டத்திலுள்ள லின்கை சொடிக்கினால் நோ ரெஸ்பான்ஸ்.

adiraimansoor said...

சபீர்
விடை கிடத்தது
எண்ணமும் எடையும்
இன்ஷா அல்லாஹ் படித்து பின்னூட்டமிடுகின்றேன்

adiraimansoor said...

அபூ இபுராகிம்

ஜஸக்கல்லாஹ் கைரன்

adiraimansoor said...

ஹமீத்
என் கண்கள். சுழல ஆரம்பித்ததினால் பிறந்த தொடரே கண்கள் இரண்டும் இதெல்லாம் உங்களை போன்ரோரின் கண்களை மிஞ்ச முடியாது என்பது உண்மை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு