Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர்-16 9

அதிரைநிருபர் பதிப்பகம் | December 16, 2013 | , ,


பார்வை கோளாறை சரிசெய்யும் கண் செல்கள்

கண் செல்களை வெளியே எடுத்து வளர்த்து, மீண்டும் கண்ணில் பொருத்தினால் பார்வை கோளாறுகள் நீங்கும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கண்ணில் உள்ள செல்களை கொண்டே பார்வை கோளாறை சரிசெய்வது குறித்து இங்கிலாந்தின் சவுத் ஆம்டன் பல்கலைகழகம் ஆராய்ச்சி நடத்தியது.

இந்த ஆய்வு இங்கிலாந்தின் பிரபல கண் மருத்துவரும் பேராசிரியருமான ஆண்ட்ரூ லோடரி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அவர் கூறுகையில், விழித்திரை பாதிப்பு காரணமாக பலர் பார்வை இழக்கின்றனர். இங்கிலாந்தில் சராசரியாக 70 வயது பெரியவர்களில் மூன்றில் ஒருவர் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற பாதிப்பு காரணமாக பார்வை இழக்கின்றனர்.  

கண்ணின் முன் பகுதியில் இருக்கும் கார்னியல் லிம்பல் செல், ஸ்டெம் செல்லுக்கான குணாதிசயங்களை கொண்டிருக்கிறது. இதை வெளியே எடுத்தால் வளருமா என்பது தொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள்.. பார்வை பாதிக்கப்பட்டவரின் கார்னியல் லிம்பல் செல்லை வெளியே எடுத்து முதலில் வளர்க்க வேண்டும்.  ஆரோக்கியமான செல்களாக அது வளர்ந்த பிறகு, கண்ணில் பாதிக்கப்பட்ட செல்களை அகற்றிவிட்டு, இவற்றை பொருத்தினால் பார்வை கோளாறு நீங்கும். தெளிவான பார்வை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: ஆய்வில் கண்டுபிடிப்பு.தற்போதைய அறிவியல் யுகத்தில் உடலில் இழந்த உறுப்புகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் கண்டுவருகிறது.

நமது உடலில் மிக மென்மையான பகுதி கண்ணாகும். வயதான காலத்தில் பாரம்பரியம் காரணமாக பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. இந்த பார்வை இழப்பை சரி செய்து பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் பார்வை பெற புதிய ஆதார செல்களை(ஸ்டெம் செல்) கண்களுக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பார்வை இழந்த இரண்டு பெண்களுக்கு லட்சக்கணக்கான கரு ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு பார்வை அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. கண்களுக்குள் ஆதார செல்களை செலுத்தும் துவக்க கட்ட சோதனை அமெரிக்காவில் நடைபெறுகிறது.


இருப்பினும் இந்த ஆதார செல் சோதனை பிரிட்டன் நோயாளிகளுக்கு வரவிருக்கும் இளவேனிற்காலத்தின் போது மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பார்வை இழப்பு ஏற்பட்ட விலங்குகளுக்கு ஆதார செல் செலுத்தும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது மிக அற்புதமான முடிவு கிடைத்தது. ஆதார செல்கள் செலுத்தப்பட்ட விலங்குகள் புதிய கண் பார்வை பெற்றுள்ளன. இந்த அதிநவீனமான சிகிச்சை மனிதர்களுக்கு மேற்கொள்ளப்படும் போது நல்ல பலனளிக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆதார செல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. முதல் பரிசோதனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது. புதிய சிகிச்சை முறை குறித்து மாசாசூட்ஸ் அதிநவீன செல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மருத்துவர் லாங்சா கூறுகையில்,"முற்றும் சிகிச்சை அளிக்க முடியாத நோய்களுக்கு மட்டுமல்லாமல் பலவீனம் அடைந்த கண் நோய்களுக்கும் சிகிச்சையை இந்த ஆதார செல்கள் மூலம் அளிக்க முடியும்" என்றார்.
“கார்னியா”

மனித உறுப்புகளில் மிக முக்கியமானது கண். இதிலுள்ள “கார்னியா” எனப்படும் விழி வெண்படலத்தின் மூலமே உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மனிதன் பார்த்து ரசிக்கிறான். சிலருக்கு பிறவியிலேயோ அல்லது விபத்தின்போதோ கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. 


உலகம் முழுவதும் சுமார் 4.9 மில்லியன் பேர் கார்னியா குறைபாடு உடையவர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு உதவும் விதமாக பிளாஸ்டிக்கால் ஆன செயற்கை கார்னியாவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். 


ஜெர்மனியில் உள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோச்சிம் ஸ்டோர்ஸ்பெர்க் என்பவர், இந்த செயற்கை கார்னியாவை வடிவமைத்துள்ளார். ஹைட்ரோபோபிக் பாலிமர் என்ற பொருள்மூலம் இந்த கார்னியா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளானது கண் மருத்துவத்தில் நீண்ட காலத்திற்கு செயலாற்றக்கூடியது.

முதலில் பல்வேறு வகையான சிறப்பு பாலிமார்கள் செயற்கை கார்னியாவில் பூசப்படுகின்றன. பின்னர் அதன்மேல் சிறப்பு புரோட்டீன்கள் பூசப்படுகின்றன. இந்த புரோட்டீன்கள் கார்னியாவைச் சுற்றி உள்ள செல்களைத்தூண்டி, பார்வையை ஏற்படுத்துகின்றன. இந்தக் கார்னியாவை பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்க இன்னும் 3-ஆண்டுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உறுப்புகளுள் மிக முக்கியமானது கண். இதிலுள்ள ‘கார்னியா’ எனப்படும் விழி வெண்படலத்தின் மூலமே உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மனிதன் பார்த்து ரசிக்கிறான். சிலருக்கு பிறவியிலேயோ அல்லது விபத்தின் போதோ கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு.

செயற்கை கண்ணை பற்றிய மீதம் அடுத்த தொடரிலும் தொடரும்...

பார்வை விரியும்...
அதிரை மன்சூர்

9 Responses So Far:

sabeer.abushahruk said...

மிகவும் பயனுள்ள தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மிகவும் பயனுள்ள கட்டுரை தந்தமைக்கு மிக்க நன்றி

Shameed said...

கண்ணுக்கு கண்ணான பதிவு

Yasir said...

மிகவும் பயனுள்ள தங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி

Ebrahim Ansari said...

அரிய தகவல்கள் அடங்கிய அவசியமான தொடர். தம்பி மன்சூரின் கைவண்ணத்தில் நல்ல ஒளி காட்டுகிறது.

பாராட்டுகிறேன்.

adiraimansoor said...

அணைத்து நல் உள்ளங்களுகும் நன்றி
ஜஸாக்கல்லாஹ் கைர்

adiraimansoor said...

நன்பர் சபீரின் கவிதைகளுக்கும்
அன்சாரி காக்கா எழுதும் இரு தொடர்களுக்கும் பின்ன்னூட்டமிட முடியாமல் வேலை பலு அதிகம்

சென்ற மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் டேக் ஆப்கி அன்றே ரியாதில் லேன்டிங் ஆகி அடுத்த நாளே ஜித்தாவுக்கு பேக்கப் ஆகி ஒருவார வேளை என்று வந்தவன் தான் அமுக்கி புட்டாங்கையா ஜித்தாவிலேயே அமுக்கி புட்டாங்க

மீண்டும் வேங்கை எப்பொழுது முருங்க மரம் ஏறும்டு தெரியாது

adiraimansoor said...

ஹமீது பாய்

நான் எழுதும் தொடர் கண்ணல்லவா
அதை நன்கு எழுதினால்தானே
என்னை உங்கள் அகக்கண்ணாலும்
புறக்கண்ணாலும் பார்ப்பீர்கள்

adiraimansoor said...

என்கே போனார் கவியன்பன் கலாம்
லன்டன் வானொலியில் அவர்கவிதை
பாடப்பட்டதும் அவார்டு வாங்க லன்டனுக்கே போய்விட்டாரா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு