3.12.2013
உதவி மின் பொறியாளர், அவர்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம்
அதிராம்பட்டினம் - 614701
பொருள்: கந்தூரி ஊர்வலத்தின்போது விதிகளுக்குப் புறம்பாக மின்னிணைப்புத் துண்டிக்கப்படுவது
பார்வை : 9.5.2013 தேதியிட்ட தங்களுக்கான எங்கள் மடல்
ஐயா,
அதிராம்பட்டினத்தில் கந்தூரி ஊர்வலங்களின்போது விதிகளுக்குப் புறம்பாக மாலை 4 மணிமுதல் இரவு பத்து மணி வரையிலும் மின்னிணைப்புத் துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் கந்தூரியின்போது வாரிய விதிகளுக்கு எதிராக ஆங்காங்கே மின்னிணைப்பைத் துண்டிப்பதால் பொதுமக்கள் பலவிதக் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.
கந்தூரித் தேர் செல்வதற்காக மின்னிணைப்பைத் துண்டித்துவிட்டு, தாழ்வான மின்கம்பிகளை உயர்த்திக் கொடுப்பதும் வழக்கமாக உள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறு மின் கம்பியை உயர்த்திய ஒருவர், வீடுகளிலிருக்கும் இன்வெர்ட்டரின் எதிர்மின்னலை தாக்கி, பல நாள்கள் கோமா நிலையிலிருந்து மருத்துவ மனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார் எனும் தகவல் தங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
எனவே, எதிர்வரும் 4.12.2013 அன்று கந்தூரி தினத்தில் விதிகளுக்குப் புறம்பாக மின்வாரிய ஊழியர்கள் மின் தடை ஏற்படுத்தக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
ஜமீல் M. ஸாலிஹ்
செயலாளர் (9043727525)
நகல்கள்:
1. மாண்புமிகு மின்வாரிய அமைச்சரின் உதவியாளர் Thiru Rajesh Lakhoni IAS Email: enersec@tn.gov.in
2. செயற்பொறியாளர், அவர்கள், மின்சார வாரிய அலுவலகம், பட்டுக்கோட்டை.
ADT
10 Responses So Far:
மின்வெட்டு உங்களுக்கு சாதகமாக இருக்கலாம், கதியற்று நிற்கும் இறுதித் தீர்ப்பு நாளில் எவனும் சாதகமாக வரமாட்டான் !
அடச்சே ! கேடுகெட்ட கந்தூரி போதையர்களே ! திருந்துங்கள்...!
என்னதான் நம் சமுதாயம் தறிகெட்டு வழி பிறழ்ந்து போனாலும், கந்தூரி என்னும் அவர்களின் மடமை அவர்களை விட்டு ஒழிய வில்லை என்றாலும் (ஒரு நாள் இன்ஷா அல்லாஹ் ஒழிந்து போகும்) நம் சமுதாயம் என்று வரும்போது அவர்களின் மடமையை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு, குரல் கொடுக்க முன் வந்த A.D.T - யின் செயல் பாராட்டத்தக்கது.
அபு ஆசிப்.
கோமாளிகளே கோமாளிகளே
கூடெடுக்கும் கோமாளிகளே
கொடியேற்றி குடிகெடுக்கும்
கூறுகெட்டக் கோமாளிகளே
கூட்டுடைய உயரத்தைக்
குறையுங்கள் கூமுட்டைகளே
ஊர்வலத்தின் உயரம்கூட்டி -உம்
உள்ளமெல்லாம் பள்ளமாச்சே
கரண்ட்டில்லா காலத்திலே
கண்டுவந்தீர் கந்தூரியை
கரண்ட்டு வந்தும் கட்டாக்கி
இருட்டுக்குள்ளே இருப்பதென்னே
எத்தனை வாட்ஸ் மின்சாரம்
ஏத்திவச்சி எரிச்சாலும்
இருள்மலிந்த இதயத்தை
இலங்கவைக்க முடியலையே
உங்களோடு நானும்தான்
ஊரைச்சுற்றிய ஊதாரிதான்
உண்மைமார்க்கம் உணர்ந்தவுடன்
உதறித்தள்ளிய மூமீன்நான்
கந்தூரி ஊர்வலம் ஒழிக!
கமிட்டியின் புத்தித் தெளிக!
மனம்தளராமல் தொடருங்கள் கேடுகெட்ட கந்தூரியை ஊரை விட்டு விரட்ட.
இஸ்லாமிய விதிமுறைகளுக்கு புறம்பாக ( inRu ) நடத்தப்படும் கந்தூரிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தி அதை முழுமையாக புறக்கணிக்க நாமால் இயன்ற முயற்சி செய்வோமாக!
கந்தூரி அன்று அந்த ஊர்வலம் செல்லும் வழியெங்கும் கருப்புக் கொடி ஏற்றுங்கள்.
//கோமாளிகளே கோமாளிகளே
கூடெடுக்கும் கோமாளிகளே
கொடியேற்றி குடிகெடுக்கும்
கூறுகெட்டக் கோமாளிகளே///
///எத்தனை வாட்ஸ் மின்சாரம்
ஏத்திவச்சி எரிச்சாலும்
இருள்மலிந்த இதயத்தை
இலங்கவைக்க முடியலையே///
ஆஹா கவிஅயரசு கூட்டு கும்மாளம் அடிக்கும் கயவர்கள் மீது தன் கோபத்தை அள்ளி வீசும் வார்த்தைகளில் எத்தனை உண்மைகள் மலிந்து கிடக்கின்றன
இதற்குமேலுமா யாரும் புத்தி புகட்டமுடியும்
கந்தூரி என்னும் கூட்டு (த்தேர்)க் கலாச்சாரத்தைத் தடுக்க நம்மில் ஒர் கூட்டு முயற்சி தேவை.
படைப்பினங்களிடம் பெயர், புகழ் வாங்காமல் படைத்த அல்லாஹ்விற்காக என்று ஏகத்துவம் பேசுபவர்கள் ஈகோ பாராமல் இயக்க மயக்கம் கலைந்து இறைத்தூதர் வழியில் ஒன்றினைந்தால் நல்ல பலன் என்பது வெகு தொலைவில் இருக்காது.
இன்ஸா அல்லாஹ்...
இவர்கள் மீறுவது அல்லாஹ்வின் கட்டளைகளையும், இஸ்லாமிய வரமுறைகளையும் தான்...அல்லாஹ் இவர்களுக்கு புத்தியை கொடுப்பானாக
Post a Comment