Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை அசத்தல் மொழி - கொஞ்சூண்டு..! 60

அதிரைநிருபர் பதிப்பகம் | December 15, 2013 | , , ,


நம்ம ஊருலே நிலத்தடி நீர் வத்தி போச்சுன்னு சொல்றாங்க உண்மைதான். அதுக்காக இப்போ ஒரு ஆலோசனைக் கூட்டமும் போட்டிருக்காங்க. ஆனாலும் நம்ம ஊரு பேச்சு மொழி மட்டும் எந்தக் காலத்திலும் வத்தி போகாது தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும். சர்வ சாதரணமாக நாம பேசிக் கொண்டு இருக்கும் போதே நம்மையும் அறியாமல் ஒருசில வார்த்தைகள் கரைபுரண்டு அலையடிக்கும். அப்படியாக வந்து விழும் மண்வாசனை மணக்க இங்கே வாக்கியமாய் உங்களின் பார்வைக்கும் பகிர்வுக்கும்.

ஊருலே பேஞ்ச மழைலே  பள்ளிகொடம்  போன புள்ளையலுவோ "தொப்பு தொப்பா" நோனஞ்சி போச்சி !

மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே  உளுந்ததுலே காலு "பெசண்டு போச்சு" 

ஊருக்குள்ளே நடக்குற விபத்தை நெனச்சா "ஈரக் கொல நடுங்குது"

ஊருக்குள்ளே  இப்பெவெல்லாம் "மட்டப்பா ஊடு"ஒன்னுமே  இல்லே  

"நேத்தையாணம்"அப்பமும் எப்போதும் நாக்கை விட்டு அகலாத ருசி !

"நீச்ச கஞ்சி" இதை புதுசா ஐஸ் பிரியாணின்னு சொல்றாங்க !

"வடிச்சங் கஞ்சி"இதன் ருசி இப்ப உள்ள புள்ளையளுக்கு தெரியாம போச்சு !

இவனோட நடப்பு எப்போவும் 'புதுனமா "தான் இருக்கும்..!

எப்போதும் இந்த ஆளு "மேமினுக்கா "தான் இருப்பாக  !

ஊரு தண்ணீலே சாக்கடையும் கலந்து வர்றதாலே அதுலே குளிச்சா தல ஒரே "பிசுக்கா"  இருக்கு !

"ஈறு வலி" இதல்லாம் இப்போ "காண கெடைக்கல”

அழுக்கு "கசமா" இருக்கு 

மீனை கழுவி  ஊத்துனதுலே "வெடுக்கு நாத்தம்" தாங்க முடியலே 

வாப்பாவுக்கு "ஒகப்பான புள்ள" 

தூக்கத்துலே  "சொலக்கு சொலக்குன்னு"முழிப்பு வருது 

இவன் சரியான "வக கெட்டவன்"

ராத்திரி புடி பட்ட கள்ளனே "சாங்கமாங்களா" போட்டு "சாத்திபுட்டனுவோ" [காணொளி இணைப்பு இல்லை]

பேய் தொடரைப் படிச்சதுலே  பயந்து "தட்டு கெட்டு" போய்ட்டான் !

அங்கிட்டு "நவந்து" உட்காரு !

இங்கிட்டும் அங்குட்டுமா "லாத்தாம" ஒரு எடத்துலு உட்காரு ! 

இவருதான் ஊட்டுக்கு "மூத்த முனியன்"

இவனுக்கு என்னத்தை கொடுத்தாலும் ஒரே "கொறதான்"

மழை பெய்ச்சிட்டா கொசு 'சல்லே"தாங்க ஏலால…!

“அவந்தரைக்கு” உதவாம போறீயம்மா ?

“பொஸுப்பு” இல்லமா புள்ளைக்கு !

“ஆக்கினை” புடிச்சவனாவுல இருக்கான்…

“படக்கலம்” புடிச்சு அலையுதுங்கமா…

டெல்லிக்கு ராசாவாகப் போன பேராண்டி… அம்மாவை தேடிகிட்டு திரும்பி வந்த்துடான்… ! 

வெற்றி என்று ஒன்று இல்லாவிட்டால் தோல்வி என்ற ஒன்று நம் வாழ்வில் இல்லாமலே போய்விடும் என்பது அடியேனின் வாக்கு ! 

Sஹமீது

60 Responses So Far:

Unknown said...

அதிரை அசத்தல் மொழியில் எனக்கு தெரிந்து விடு பட்ட சில :

இவன்ற ஆக்கின தாங்க ஏலல
வெரசா கடைக்கு போயிட்டு வாடா பள்ளிக்கூடம் போகணும்.
குத்துக்கல்லாட்டம் நிக்காம போய் வேலையை கவனி.
குசு குசுன்னு அங்கே என்ன பேச்சு.
நான் என்னமோ பெருசா நடக்கும்னு நெனச்சேன் . இப்படி சூ டப்பா போச்சே .

இன்னும் எத்தனையோ.யாராச்சும் தொடருங்கோ ............................

அபு ஆசிப்.

Yasir said...

ம்ம்ம் இப்பவே கண்ணைக்கட்டுதே......என்ன ”கொதரத்துமா” இது

sheikdawoodmohamedfarook said...

பினாங்குக்கு சபுறு செய்றேண்டு போயிபத்து வருஷமா இப்புடி அடுகெடயும் படுகெடயுமா கெடந்துட்டானே! இப்புடியுமா கண்டோம்?

sheikdawoodmohamedfarook said...

அடுத்த ஊடு அண்டுன ஊடுண்டு ஒரு ஒதவி ஒத்தாசை உண்டுமா?என்னா ஜனங்கமா இது!

نتائج الاعداية بسوريا said...

நாக்கபுடுங்கி நாண்டுக்கிட்டு சாகலாமுன்னு வருது.

கள்ச்சள்ள போவான் ஒருநாளாவது ஊட்டு வேலயே ஒழுங்கா செய்யிறானா .

நாளைக்கு பரிச்சய வச்சுகிட்டு இப்போ பளிங்கி வெலயாண்டுகிட்டு இருக்குறா பாரேன்.

எங்க போனாலும் வீண் வம்ப வெலக்கி வாங்கிக்கிட்டு வர்றானே

نتائج الاعداية بسوريا said...

ரொம்ப செரவடியில வர்ராமா இவன்.
கொஞ்ச வெரசா வாடா
கடையிலே பொய் கொஞ்ச மொலவாக்கா வாங்கிக்கிட்டு வாரியா
ஏன்டா அவன்ட்ட போய் சும்மா சும்மா எசவுரே
பிராக்கு பாக்காமெ சீக்கிரமா வந்த தொள

(அப்பப்பக்கி கொஞ்சம் கொஞ்சமா எடுத்து விட முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கின்றேன். )

அபு ஆசிப்.

sheikdawoodmohamedfarook said...

ஏம்மா மம்மாத்துமிச்சியா! பீனாங்குக்கு போனானே ஒன் பேறேன்! எதாச்சும் போட்டு அனுப்புறானா?
ஏம்மா அந்த வவ்த்தெரிச்சலே கெளப்புறே? தூக்கி வளத்தவ தானேண்டு ஒரு நல்லநாளுபெரிய நாளுளேகூடஒன்னரே காசே கண்ணாலே பாக்கலேயேம்மா!தூக்கி வளத்த இடுப்பு காச்சு போச்சேம்மா !

نتائج الاعداية بسوريا said...

இவ ஏம்மா சடப்புத்துல வர்றான்
அவன அடிச்சு சக்க வாங்கிப்புட்டானுவோமா
ஒரு எடத்துலே சும்மா உக்காரேன்
ரொம்ப திட்டாப்பு தெகரடியா வருதுமா

அபு ஆசிப்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அடியேனின் வாக்கிலிருந்து அதிரையின் வாக்கியம் வரை அசல் அசத்தல்!

நெய்னா மச்சான்!
நீனும் வந்து உனது களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் இறக்கி உடு, உன் இடத்தை ஹமீதாக்கா கைப்பத்தீட்டாக! அதை முறியடிக்கனும்!

sheikdawoodmohamedfarook said...

இவன்எதையும் தரிதிரிப்பா செய்யமாட்டான்.ஒரே படைக்கலந் தான் செய்வான்.

sheikdawoodmohamedfarook said...

மாப்புலேக்கி எந்த ஊரு சபுறு?// அடேகளிச்சல்லே போவா!.மாக்குன்டு சாய்வா!// வாப்பாவை தூக்கி திம்பா! உம்மாவை தூக்கி திம்பா!//எந்த ஹராவா போனவ எங்கூட்டு வாசலுலே படிக்கான் தண்ணியே ஊத்துணவ?இந்தஅநியாயம் செய்ரியலே அல்லாவுக்கும் அவுலியாக்களுக்கும் அடுக்குமா ? ஹாஜாஒலிசாய்வோளே நீங்க கேளுங்க!

نتائج الاعداية بسوريا said...

//ஏம்மா மம்மாத்துமிச்சியா!//

இதை ரொம்ப நாட்களா தமிழில் இதன் உண்மையான ( அதாவது இந்த பெண்ணை பெற்ற பெற்றோர் இவர்களுக்கு பிறந்தவுடன் விட்ட ) பெயரை
நிருபரில் உலவவிட் ஆசை.

சரியான பெயர் : முஹம்மது பாத்திமா நாச்சியார்

அப்பாடா இப்போதான் எனக்கு நிம்மதி

அபு ஆசிப்.

Yasir said...

எல்லாரும் எங்க போய்ட்டாக,,ஒரு “நாதி” இல்லையா என்று சொல்றதுக்குல்ல வாங்களேன்.....

نتائج الاعداية بسوريا said...

நாக்கபுடுங்கி நாண்டுக்கிட்டு சாகலாமுன்னு வருது.

கள்ச்சள்ள போவான் ஒருநாளாவது ஊட்டு வேலயே ஒழுங்கா செய்யிறானா .

நாளைக்கு பரிச்சய வச்சுகிட்டு இப்போ பளிங்கி வெலயாண்டுகிட்டு இருக்குறா பாரேன்.

எங்க போனாலும் வீண் வம்ப வெலக்கி வாங்கிக்கிட்டு வர்றானே

அபு ஆசிப்.

Shameed said...

மசக்க காரி

புள்ளத்தாச்சி

கொமாரு காரியம்

ஒல மூடி

Aboobakkar, Can. said...

கழ்ச்சள்ள போன கெரண்டு காரவன் வெளக்க அமத்திட்டான் அவன் ஒரு ஓட்டு பீயில போயிடுவான் ,கொலமாட்டி கொள்ளுவான் .அட தம்பி மொளவு திரிய ஏத்தி வைடா..........

ZAKIR HUSSAIN said...

உங்கள் எல்லோருடைய நம் ஊர் தமிழையும் சாகுல் உடன் உட்கார்ந்து கொக்கு / காடை கறியுடன் லேசா நெய் வாசனை வரும் பரோட்டோ ரொட்டியுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே கேட்க வேண்டும். லொகேசன் ...உங்கள் சாய்ஸ்.

نتائج الاعداية بسوريا said...

இதில் ஒரு விஷயம் என்னவென்றால் இவை அனைத்தும் பெரும்பாலும் (99.9%)
பெண்களிடமிருந்து உதிரும் முத்துக்களே .

நான் சொல்வது சரியா ?

அபு ஆசிப்.

Shameed said...

نتائج الاعداية بسوريا சொன்னது…
//இதில் ஒரு விஷயம் என்னவென்றால் இவை அனைத்தும் பெரும்பாலும் (99.9%)
பெண்களிடமிருந்து உதிரும் முத்துக்களே .

நான் சொல்வது சரியா ?

அபு ஆசிப்.//



100% சரி

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
//உங்கள் எல்லோருடைய நம் ஊர் தமிழையும் சாகுல் உடன் உட்கார்ந்து கொக்கு / காடை கறியுடன் லேசா நெய் வாசனை வரும் பரோட்டோ ரொட்டியுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே கேட்க வேண்டும். லொகேசன் ...உங்கள் சாய்ஸ்.//



சரியான கூப்பாடு இது எல்லாத்தையும் சாப்பிட்ட கொடப்பெரட்டு வராம இருக்க நான் இஞ்சி தேத்தணியோடு வாரேன்

Ebrahim Ansari said...

நான் வகுப்புக்கு வரும் முன்பே ஏகப்பட்டவை வந்துவிட்டன. என் பங்குக்கு சில. ஆனால் பேராசிரியர் நெய்னா எங்கே?

எடுத்ததுக்கெல்லாம் நாங்கதான் உங்களுக்குத் "தொக்கா?"

இப்படி கொலுவை தூக்காதேம்மா.

தொட்டத்துக்கும் அது என்னா ஒரு நொண்டிச் சொல்லு?

நாங்கன்னு சொன்னாலே ஒரு மொடக்குத்த் தண்ணீ கூடத்தான் குடிப்பிய.

sheikdawoodmohamedfarook said...

'அவ்வகருமா ஊட்டுலேபோயி கொஞ்சம் புளியாணம் வாங்கிட்டு'வாடான்டா இந்த கருமத்துலே போவான் உக்காந்துகிட்டு அலக்குடுக்குரானே!// வரவர இந்த புள்ளயோட அலுச்சாட்டியம் தாங்க முடியலேம்மா! // பேச்சு அனக்கடந்து போவுது.// மவுருங்கனி ஊட்டுலே போயி வெத்லக்கி சுண்ணாம்பும் கொஞ்சங்காணும் காசுகட்டியும் அதோட ஒரு கொட்ட பாக்கும் ஈந்துச்சுண்டா வாங்கிட்டுவா.நாலேபறேத்தெக்கி கொடுத்துடலாம்.பாக்கு வெட்டியேயும் வாங்கிட்ட்வா! வந்த கையோடதிருப்பி கொடுத்துடலாம்.ஊரா ஊட்டு ஸாமான் நமக்குஎதுக்கு?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ப்ளேன் பன்னி யாரையோ வையுறாங்கன்னு நல்லா தெரியுது !....

எம்.எஸ்.எம்.(n)ன் கையும் கொஞ்சம் தட்டியிருந்தால் ஓசை இன்னும் அதிர்ந்திருக்கும் !

sheikdawoodmohamedfarook said...

அடிமெய்ன்பாத்து சேதிகேட்டியா! சவு ருவான் மொவன் வந்து எரங்கிட்டானாமுளோ! போவுதுமா! கல்யானமுடிச்சாபுலேபினாங்கு போனவன் பதிமூணு வருசமா அடு கெடயும் படுகெடேயும் கெடந்துட்டு இப்பவாச்சும் ம்மா பொண்டாட்டியே நெனச்சு பாத்து வந்து சேந்தானே! பொன்னே கொடுத்த காசாருபாத்து மொவோலே பத்து பத்து உருவி ஓடா போயிட்டாமா ! பாக்கிற ஜனமெல்லாம் முந்தானி போடவையே விருச்சு அல்லாட்டையும் அவுளியாக்கள்ட்டையும் துவா கேட்டுச்சுவோம்மா! அல்லா அதுக மொகம் பாத்து எல்லாத்தையும் நெரப்பமாக்கி வச்சான்.

sabeer.abushahruk said...

எல்லாத்தையும் நான் முடுக்குல நிண்டு கேட்டுக்கிட்டுத்தான் ஈக்கிறேன்.

Unknown said...

ஜாகிரு,

சபீர் எங்கே ?

sheikdawoodmohamedfarook said...

அவசர ஆத்துரத்துக்கு ஒரு அஞ்சே பத்தே கேட்டா முடிச்சே அவுத்து இந்தாண்டு கொடுப்பாளா ! மாட்டாலேம்மா. கடேசியிலே என்னத்தேதான் அல்ளிக்கிட்டு போ போறாளோ?

N.A.Shahul Hameed said...

எப்ப பாரு இவன் ஊக்குறி ஊதிக்கிட்டே திரியிரான். இவனோட ஒரே செரவடியாப் போச்சு
N.A.Shahul Hameed

sheikdawoodmohamedfarook said...

786 எம்பிரியமுள்ள மவன் மம்ராவ்த்தருக் கு உம்மா எளுதும் அஸ்ஸலாமுஅலெக்கும்போனமாசம்.நான் போட்ட கடுதாசிக்கி ஒன்னேட்டே இருந்து ஒரு தாக்கலும் இல்லே.எடஎட்டுமாஷம் நீஅனுப்புன ரூவாநூறும் செலவளுஞ்சு,மேக்கொண்டு ரூவாநூத்தம்பது பாத்துமாயிட்டேபத்துநாள் பேச்சுக்கு கடனா வாங்கி செலவுபண்ணிக்கிட்டு இருக்கிறேன்.ஆசறா பொரெ பொறந்தா தங்கச்சிக்கி மாசம். தலப்புள்ளே ஒப்புச்சு பாக்கணும். அப்போரேம் புல்லெபேறு செலவு இருக்கு.மச்சானும் வந்து ஒருவருஷம் சொச்சமா ஊருளேயே தங்கிட்டா ஹ. வாப்பக்கும் அடிக்கடி இருமலும்எளப்புமா வந்துகிட்டு ஈக்கிது பெத்தயனிடம் காட்டிகிட்டு இ றிக்கிறோம். எனக்கும் காச்ச வந்துஇந்தா அந்தாதண்டுபோச்சு.இருபத்திதினாளு நாள் பித்த வாதஜுரம் ன்டு சொன்னாஹ.கலந்தார் மரைக்கார்சண்டமாருத செந்தூரம்சாப்புட்டு கேக்களே! உதண்டியிடம் காட்டிகிட்டு இருக்கிறோம். எல்லாரும்சொல்லுறாக இக்ராமு டாக் டர்டே காட்டுங்கோங்கிராக.எதுக்கும் மம்ஆலிம்சாட்டே போயீ ஓதிபாத்து கணக்கு போட்டு பருங்கோண்டு சொன்னாக.கணக்கு போட்டு பாத்ததுலே ''செய்வினை கோளாற தெரியுது! பதினோரு தட்டைஎழுதிதர்ரேன்.குடிங்க.கேக்கலேண்டா பார்வைதான் பாக்கனும்னுன்டுசொன்னாரு.இத்துணைக்கும்ஓம் பொண்டாட்டிவந்து என்னா ஏதுண்டுஎட்டி பாக்கலே! கேட்ட ஜனமெல்லாம் மூக்குலே வெறலே வச்சுச்சுவோ. எல்லாம் அவளுக்கு நீ கொடுத்த எளக்காரம் தான் அவ இப்புடி நடக்குறா.எல்லாத்துக்கும் அல்லா போதுமானவன்.இந்த கடிதத்தை தந்திபோல் பாவிச்சு பதல் போடு ஆகையால்வேணும் துவா ஸலாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம்மூட்டு கம்யூட்டர்ல தமிலு டைப்பு அடிக்க ஏலாமெ பெரிய பதயத்தா ஈக்கிதுமா...

ச்சீ எங்கெடா வாங்குனா இந்த சட்டெ அரீர்ப்பா ஈக்கிது.

ஆதாரு அட்டை எடுக்க இப்புடி போட்டு பெரிய மனுசர்வொலெ அலங்கமலங்க படுத்துரானுவொமா....

பெசலு அடிக்கப்போவுதாம் பள்ளிக்கொடம் வெரசன வுட்டுட்டாக.

ம்மடீ அழகாதிய புள்ளக்கி இப்புடி பாண்டெ மாப்ளெ...

வாங்கருவாயெ எடுத்திக்கிட்டு வந்து ஒசக்கெ தொங்கிற முருங்காயெ பறிவுளெ..

அவந்தரெக்கி ஒதவாத ஆத்தாக்கொலெ புள்ளெயல்வொலா ஈக்கிதுஓ...

அந்த கிண்ணிலெ கொஞ்சோண்டு ஒரமோரு அவ்வூட்லெ வாங்ட்டுவா....

கசுகசுண்டு வருது குளிக்கப்போரேன்.

எந்த காலத்து மொலவாக்கா தடவி ஓதிப்பாக்கிரியெ...

பாக்க தம்மலனாட்டம் ஈக்கிறான்.

எவ்ளோவ் தொலெ...

முடியெ என்னண்டோ வெட்டி உட்டுட்டான்.

செத்த நேரத்ல கண்மாசியாக்காணோம்.

தாலஞ்சிறா கடத்தெருவ்லெ சல்லி விக்கிது ...

கெழக்கமீனு ரொம்ப அவ்ருவொம்....

செய்க்கிளெ எசவு பன்னாட்டு வந்திர்ரு....






மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம்மூட்டு கம்யூட்டர்ல தமிலு டைப்பு அடிக்க ஏலாமெ பெரிய பதயத்தா ஈக்கிதுமா...

ச்சீ எங்கெடா வாங்குனா இந்த சட்டெ அரீர்ப்பா ஈக்கிது.

ஆதாரு அட்டை எடுக்க இப்புடி போட்டு பெரிய மனுசர்வொலெ அலங்கமலங்க படுத்துரானுவொமா....

பெசலு அடிக்கப்போவுதாம் பள்ளிக்கொடம் வெரசன வுட்டுட்டாக.

ம்மடீ அழகாதிய புள்ளக்கி இப்புடி பாண்டெ மாப்ளெ...

வாங்கருவாயெ எடுத்திக்கிட்டு வந்து ஒசக்கெ தொங்கிற முருங்காயெ பறிவுளெ..

அவந்தரெக்கி ஒதவாத ஆத்தாக்கொலெ புள்ளெயல்வொலா ஈக்கிதுஓ...

அந்த கிண்ணிலெ கொஞ்சோண்டு ஒரமோரு அவ்வூட்லெ வாங்ட்டுவா....

கசுகசுண்டு வருது குளிக்கப்போரேன்.

எந்த காலத்து மொலவாக்கா தடவி ஓதிப்பாக்கிரியெ...

பாக்க தம்மலனாட்டம் ஈக்கிறான்.

எவ்ளோவ் தொலெ...

முடியெ என்னண்டோ வெட்டி உட்டுட்டான்.

செத்த நேரத்ல கண்மாசியாக்காணோம்.

தாலஞ்சிறா கடத்தெருவ்லெ சல்லி விக்கிது ...

கெழக்கமீனு ரொம்ப அவ்ருவொம்....

செய்க்கிளெ எசவு பன்னாட்டு வந்திர்ரு....






sabeer.abushahruk said...

786

அன்புள்ள உம்மாவுக்கு.

இவிடஞ்சுகம் அவிடஞ்சுகத்துக்கு தாக்கல்.

உங்க கடுதாசி கிடைச்சி சேதி அறிஞ்சேன். தவால பிரிக்கும்போது பவுடர் மாதிரி என்னமோ பிசுபிசுங்குதே என்னமும் மொகமாத்து செஞ்சி தடவி இருந்தியலா? நான் ஒன்னுன் பொண்டாட்டிமேல மட்டும் ஒகப்பாவெல்லாம் ஈக்கல; பொ.சூக்கு பொரிமனையா ஈக்கிறாண்டு சொன்னியலாம், சாலமீது சொன்னான். என்ன இல்லாததும் பொல்லாததுஞ்சொல்லி கேவலப்படுத்தாதிய.

ஏன் போய் பாக்கலண்டு அவளுக்கு கேட்டு எழுவுறேன். செட்டிட்ட பணம் வாங்கி அனுப்பியீக்கிறேன். இந்த கடுதாசிய காமிச்சி உம்மக்குபுறா ராத்தா வூட்ல காசி வாங்கிக்கிங்க. ஆஸ்பத்திரியில காட்டுங்க.

காரிமீன் ஊருக்கு வர்ரான் அவண்ட்ட மைலோ டின்னும் கடப்பாசியும் உம்மாசலிமா கொட்டையும் பிஸினும் அனுப்பிய்யீக்கிறேன். உங்களுக்கு கைலி மேத்துண்டும் வாப்பாக்கு கஞ்சிப்பிராக்கும் தருவான்.

தங்கச்சிக்கு பொறக்கப்போற புள்ளைக்கி பால் போத்தலும் கொசுவலையும் வருது ஒப்புக்கொள்ளவும்.

ஆகையால் வேனும் துஆசலாம்.
-மம்ராவுத்தர்.

Shameed said...

ஆகா கடுதாசி செந்தூல் பறக்குது

sabeer.abushahruk said...

ஹமீது,

இருங்க உம்மா என்னா எழுவுறோண்டு பாப்போம். ஏண்டா, இவ சொல்றா, பாக்க ஊட்டுக்குப் போனாளாம். உம்மாதான் பழங்கத பண்டு சீர் செனத்தில நடந்த கொறையெல்லாஞ்சொல்லி இவள அலங்கமலங்க அடிச்சி தடக்கலைலகூட உக்கார உடாம வெரட்டி அடிச்சிட்டோளாம்.

இவங்க ரெண்டு பேர் இம்மிசியும் தாங்க முடியல.

Yasir said...

பாரூக் மாமாவின் அந்த கால அசத்தல் கடிதமும் / அதற்க்கு எங்கள் அரசக்கவி மம்ராவுத்தர் :) பதில் கடிதமும்...சகோ.நெய்னா விற்க்கே உரிய கலக்க ஊர் நடைப்பேச்சும்.....இந்த “ipad" iphone" உலகத்தை மறக்க வைத்து அந்த காலத்திற்க்கே கொண்டு சென்று நான் துபாயில் இருப்பதையே மறக்க வைத்தது....மாஷா அல்லாஹ்

Yasir said...

//மச்சானும் வந்து ஒருவருஷம் சொச்சமா ஊருளேயே தங்கிட்டா ஹ// இந்த சில மச்சான்கள் ஆரம்பத்தில இருந்த இப்படித்தான்...சரியான் சோம்பேறிகள் ஆனா மாமியா காரி அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட சொல்லாம ..மருமகளை மட்டும் துரு துரு சொல்வது ஏன்

//இத்துணைக்கும்ஓம் பொண்டாட்டிவந்து என்னா ஏதுண்டுஎட்டி பாக்கலே!// எல்லா மாறிடுச்சு இது மட்டும் இன்னும் மாறல

Yasir said...

//உம்மாசலிமா கொட்டையும்// இதன் பெயர்க் காரணத்தை சாகுல் காக்கா அறியத்தரவும்...10 மார்க் கொஸ்டின் இது

Shameed said...

Yasir சொன்னது…
//உம்மாசலிமா கொட்டையும்// இதன் பெயர்க் காரணத்தை சாகுல் காக்கா அறியத்தரவும்...10 மார்க் கொஸ்டின் இது//



உம்மாக்கு சலிப்பு தட்டும் நேரமெல்லாம் இந்த கொட்டையை ஊரவைகனுமாம்


10 மார்க் எனக்குத்தானே !



பாக்கி 90 மார்க் யாருக்கு ?

sabeer.abushahruk said...

வாப்பா யாசிரு,

எம்மொவன் அவூட்டு சாலமீதுட்ட சொன்னானாம்ல, அவன் பொண்டாட்டி வந்தவள நாந்தான் தடக்கலைகூட உக்கார விடாம தொரத்தி வுட்டேண்டு? நல்லாருப்பாளா அவ?

வாசல்லேயே நிண்டுகிட்டு ஈந்தவ தடக்கலைல உக்காரப்போனா, தடைக்கலைல யான் உக்கார்ரா மூனாவது மனுஷி மாதிரி? உள்ளே வாவேன்" டேன். இது குத்தமா? இத அப்டியே மாத்தி "தடக்கலைல கூட உக்கார உடலே" ண்டு என்னா மாரி அலவடிசொலவடி அடிக்கிறா. பாக்குறேன் இந்த கொந்தமதிலாம் எம்புட்டு நாளைக்கின்டு.

Yasir said...

காக்கா டிபிக்கல் மாமியாகவாக மாறிப்போய்ட்டியல

Ebrahim Ansari said...

அடுத்தவூட்டுக்க்காரி பாத்துட்டு சொல்றேன்

இந்த மாமியா பண்ணுற அடந்தருசு அடுக்காது. அதேமாதிரி இந்த மருமவலும் ஒரு ஒடுக்கமில்லாதவ.

adiraimansoor said...

நீங்கள் எல்லோரும் என்ன பாசே பேசிகிட்டு இருக்கிறீன்கோ அட நம்ம பாசையா
அதிரைத்தமிழா
முடிந்தா அடுத்த ஊர்கார்களுக்கும் நம்ம ஊர் பாசையை பரப்பனுமே எங்கே அதிரைதமிழ் குடிமகன் சட்ட சபையிலே பேசி நம்ம ஊர் அதிரைதமிழை தமிழக ஆட்சி மொழியாக அறிவிக்க அம்மாவிடம் மனு கொடுக்க சொல்லலாம்

adiraimansoor said...

இருந்தாலும் ஹமீது பாய்க்கு குரும்பு கொஞ்சம் ஜாஸ்த்திதான்

Shameed said...

adiraimansoor சொன்னது…
//இருந்தாலும் ஹமீது பாய்க்கு குரும்பு கொஞ்சம் ஜாஸ்த்திதான்//



ஊருக்கு முந்தி வந்து பின்னுட்டம் போடமா மாலமகதி நேரம் வந்து பின்னுடம் போட்ட உங்க குசும்பு அடுக்கள

ZAKIR HUSSAIN said...

சத்தியமாக சொல்கிறேன். ஃபாரூக் மாமாவின் கடிதமும் அதற்கு சபீரின் பதிலும் இந்த வருடத்தின் சிறந்த கமென்ட் வரிசையில் முதலிடம்.

70' களில் நான் வாழ்ந்த அதிராம்பட்டினத்தின் வசந்தமான வாழ்க்கைக்கே அழைத்துச்சென்றது. பணம் சம்பாதிக்கவேண்டும், பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த கண்டிசனும் இல்லாத பள்ளிக்கூட மாணவன் வாழ்க்கை.

எவ்வளவு பணம் செலவழித்தாலும் அந்த வாழ்க்கையை திருப்பி வாழமுடியாது.

மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு அழைத்துசென்ற ஃபாரூக் மாமா , சபீர் அதற்கு காரணமாக இருந்த சாகுல் அனைவருக்கும் என் ஆழ்மனதில் இருந்து மிகப்பெரிய நன்றி. எனக்குத்தெரியும் நீங்கள் மூவரும் என்னிடம் நன்றி எதிர்பார்க்காத உறவு என்று. ஆனால் நான் எழுதிய உணர்வு அப்படி நன்றி சொல்ல வைக்கிறது.

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு அழைத்துசென்ற ஃபாரூக் மாமா , சபீர் அதற்கு காரணமாக இருந்த சாகுல் அனைவருக்கும் என் ஆழ்மனதில் இருந்து மிகப்பெரிய நன்றி.//

உங்களிடம் இருந்து வரும் வார்த்தைகள் எதுவுமே "ஓசார" வார்த்தைகள் அல்ல.உணர்வுபூர்வமான வார்த்தைகள் என்பது எங்களுக்கு தெரியும்

Ebrahim Ansari said...

அன்பானவர்களே!

இந்தப் பதிவில் பல வழக்கில் உள்ள வார்த்தைகள் வந்து விழுந்து இருக்கின்றன. அனைத்தும் மண்ணின் மணம் வீசுபவை.

இந்த வார்த்தைகளை அனைத்துக்குமே ஒரு வேர்ச்செல்லோ, முதற் சொல்லோ, வரலாறுத் தொடர்போ இருந்தே ஆகும். உதாரணமாக ' ஒசார' வார்த்தை என்பது உபசார வார்த்தை என்பதன் மருவாக இருக்கலாம். அதேபோல் குசும்பு என்பது குறும்பு என்கிற வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம்.

எதிலிருந்து எது வந்திருக்குமென்று யாராவது ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…
அன்பானவர்களே!

//இந்தப் பதிவில் பல வழக்கில் உள்ள வார்த்தைகள் வந்து விழுந்து இருக்கின்றன. அனைத்தும் மண்ணின் மணம் வீசுபவை.

இந்த வார்த்தைகளை அனைத்துக்குமே ஒரு வேர்ச்செல்லோ, முதற் சொல்லோ, வரலாறுத் தொடர்போ இருந்தே ஆகும். உதாரணமாக ' ஒசார' வார்த்தை என்பது உபசார வார்த்தை என்பதன் மருவாக இருக்கலாம். அதேபோல் குசும்பு என்பது குறும்பு என்கிற வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம்.

எதிலிருந்து எது வந்திருக்குமென்று யாராவது ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும். //


இதை நான் வரவேற்கின்றேன்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

சும்மா அசத்தி புட்டியெலே காக்கா, ரொம்பனல்லாக்கீது

Ebrahim Ansari said...

பெரியவர் எஸ் எம் எப் அவர்கள் அலைபேசியில் அழைத்து சொன்னது:

ஒசார வார்த்தை என்பது எந்தப் பக்கமும் சேராத - எதிலும் சேராத வார்த்தை என்று பொருள் என்று அவர்கள் சார்பாக கருத்து இடும்படிச் சொன்னார்கள்.

crown said...

Ebrahim Ansari சொன்னது…

பெரியவர் எஸ் எம் எப் அவர்கள் அலைபேசியில் அழைத்து சொன்னது:

ஒசார வார்த்தை என்பது எந்தப் பக்கமும் சேராத - எதிலும் சேராத வார்த்தை என்று பொருள் என்று அவர்கள் சார்பாக கருத்து இடும்படிச் சொன்னார்கள்.
-----------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஓர் பக்கம் சாராது நடுனிலை போற்றி இருப்பது,சரியாகத்தானிருக்கிறது.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

அன்னக்கி வாங்கின கடனே மைக்க நாளே திருப்பி கொடுத்தாச்சே!

Ahamed irshad said...

ரொம்ப நல்லாக்கீது.... எதை சொல்றதுன்னு தெரியாதளவுக்கு எல்லா வார்த்தையை இங்க சொல்லிட்டாங்களே... நான் எந்த வார்த்தைய சொல்றது?

sheikdawoodmohamedfarook said...

அன்னக்கி அன்னாடு கைலேகாஸு குடுத்து வாங்கிகிடுறது.

sheikdawoodmohamedfarook said...

அந்தக்கடையிலே சாமான் வெளே ரெம்ப கருமாதியா போடுராம்மா.// மீரான் கடைலே வெலே ரெம்ப சல்ளிஸா இருக்கு . இப்போ உங்க பாக்கி நூறு ரூவா சொச்சம் இருக்கு. எப்போ பாத்தாலும் ஏறுக்கு மாராத்தான் பேசுவான். இருந்தாலும் இவ்வளவு கடுசா பேசப்புடாது .

sheikdawoodmohamedfarook said...

இந்த புல்லேயளுவோ என்னா லூட்டி அடிக்கிதுவோ////

sheikdawoodmohamedfarook said...

''அந்த அவுசாரிபோனவ கிட்டே யெல்லாம் உ னக்கென்ன பேச்சு?''// அவுசாரி= விபச்சாரி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு