Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குளிருதுங்கோ...! 39

அதிரைநிருபர் பதிப்பகம் | December 22, 2013 | , , ,

ஊரில் பனிக்காலம்
உடலுதறும் குளிர்காலம்...
உல்லங் கையுரச
உதிரத்தில் உஷ்ணமேறும்!

குழல் விளக்கின் வெளிச்சம்கூட
குளிர் அணுக்கள் சுமக்க...
ஒன்பது மணிக்கெல்லாம்
ஊர் அடங்கிப்போகும்!

கம்பளிப் போர்வைக்குள்
கால் மடக்கி உறங்க...
சுவர்க்கோழி சப்தம்கூட
சுரத்தின்றி கேட்கும்!

ஜட்டி யணியா பசங்களுக்கு
வேட்டி தானே போர்வை...
தலைக்குமேலே இழுத்துப் போர்த்த
தகிடுதத்தோம் குளிர்!

கரன்ட் போன காலத்திலே
கதவிடுக்கில் குளிர்...
திரியை சற்று தூண்டி வைக்க
திக்கித் திணறும் குளிர்!

குத்துவிளக்கு வெளிச்சத்திலே
பத்து விளக்காய் அவள்...
மண்ணெண்ணெய் புகையினிலும்
மல்லிகைப்பூ மணம்!

வீட்டார் அனைவரும்
விடிந்தும்கூட உறங்க...
ஹீட்டர் போட்டு குளிப்பர்
புத்தம்புது மாப்பிள்ளைகள்!

அரைவேக்காட்டு முட்டையும்
அப்பதான் போட்ட டீயும்...
அறைக்குள் கொணர்வதற்குள்
'ஆறி அலர்ந்து' போகும்!

விரட்டவந்த கதிரவனை
மிரட்டிப் பார்க்கும் குளிர்...
விடியற்காலையிலே
வீதியெலாம் ஜிலீர்!
குளத்துமேட்டு டீக்கடையில்
கூரைமேலே புகை...
'ஆத்தாத' டீயிலேயும்
தாத்தாவின் வாயிலேயும்
ஆவி வரவழைக்கும்
அதிகாலை குளிர்!

தேங்காய் எண்ணெய்க்குள்
உறைந்திருக்கும் குளிர்!
தீண்டும் விரல்களிலும்
மறைந்திருக்கும் குளிர்!

முருக்கு வத்தல் பொறியல்
மொறுமொறென்ற பப்படம்...
துணைக்கறியாய் இல்லையெனில்
சவசவக்கும் சாப்பாடு!

பஸ் ஸ்டான்ட் கதகதப்பில்
அசைபோடும் பசு...
பால் வண்டி மணி...
தலையை சுற்றிய ம்ஃப்ளருக்குள்
சவரம் துறந்த முகம்...
கைகட்டி வாய் நடுங்கும்
குளிருக்கு மரியாதை!

அமெரிக்கப் பனியும்
அரபு நாட்டுக் குளிரும்
உடல் வதைக்கும் உபாதை!
அதிரைப்பட்டினத்து
அளவான குளிரோ...
அனுபவிக்க உடல் ஏங்கும்
அசைபோட மனம் இனிக்கும்!

சபீர் (நன்றி: ஜாகிர்)
இது ஒரு குளிர்கால ஸ்பெஷல் ! மீள்பதிவு..

39 Responses So Far:

Unknown said...

அரபு நாட்டுக்குளிரில் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் என் போன்றவர்க்கு ஒரு இதமான உஷ்ணம் தந்த உடல் வாட்டா குளிர் "இந்த குளிருதுங்கோ"

என்ன ஒரு குறை வாழ்க்கைத்துனையால் பக்கத்தில் இல்லை.

அபு ஆசிப்.

adiraimansoor said...

///வீட்டார் அனைவரும்
விடிந்தும்கூட உறங்க...
ஹீட்டர் போட்டு குளிப்பர்
புத்தம்புது மாப்பிள்ளைகள்!///

இதெல்லாம் நம்ம ஸ்டேஜிக்கு முன்னாடி சபீர்
இப்பொதெல்லாம் வீட்டர் முழித்து ஹீட்டர் போட்டுக் கொடுக்கும் நிலமைதான் அதிகம்

அணைத்து வரிகளும்
என் இதயத்திற்கு சூடேற்றுகின்றது

adiraimansoor said...

///விரட்டவந்த கதிரவனை
மிரட்டிப் பார்க்கும் குளிர்...
விடியற்காலையிலே
வீதியெலாம் ஜிலீர்!///

புல் வெளி தரையினிலே
படுத்துரங்கும் பனித்துளிகளுக்கு
இடையினிலே பூத்துக்குலுங்கும்
பூக்களையும் வட்டமிடும்
வண்ணத்து பூச்சிகளையும்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின்
விளையாட்டுப் பார்வைகளும்
கண்கொள்ளா காட்சிதான்

///குளத்துமேட்டு டீக்கடையில்
கூரைமேலே புகை...
'ஆத்தாத' டீயிலேயும்
தாத்தாவின் வாயிலேயும்
ஆவி வரவழைக்கும்
அதிகாலை குளிர்!///

புன்பட்ட மனதை புகைவிட்டு
ஆத்து என்பார்கள் ஆனால்
குளிர் காலத்தில் புன்படாத மனதும்
புகைவிட்டு ஆத்துவது
தவிற்க முடியாத செயலன்று

adiraimansoor said...

//ஊரில் பனிக்காலம்
உடலுதறும் குளிர்காலம்...
உல்லங் கையுரச
உதிரத்தில் உஷ்ணமேறும்!//

உன் கவிதையின் அணைத்து வரிகளும் ரசனைக்குறியவைகளே

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அது ஒரு அழஹாதிய கூத காலம்....

சூரியனும் மேக முந்தானையிலிருந்து விடுபட்டு மெல்லமெல்ல வெளியாகிக்கொண்டிருந்தது.

வெள்ளி,சனி பள்ளி விடுமுறையால் பள்ளிப்பாலகர்களாகிய எங்கள் உள்ளமும் வியாழன் இரவே மலர்ந்திருந்தது.

அப்பாவின் செல்ல அதட்டலில் வெள்ளி காலை சுபுஹும் தொழுதாகி விட்டது.

பிறகென்ன, விடியலோடு எங்கள் ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டமும் விழித்துக்கொண்டது.

தெரு நண்பர்களின் கூட்டம் தெரு குளத்தில் குளிக்க சாப்பாடின்றி வீட்டிற்கு கூப்பாடு வந்தது.

பிறகு பனிபடர்ந்த அந்த காலைப்பொழுதில் உம்மாவின் செல்ல ஏசுதலலால் உடம்பில் கொஞ்சம் உஸ்ணம் ஒட்டிக்கொண்டது.

உம்மாவின் அரைகுறை சம்மதத்துடன் வேட்டியும்,சோப்பும் லேஞ்சிக்குள் அசைலம் இல்லாமல் அடைக்கலம் புகும்.

நண்பர்கள் புடை சூழ செக்கடி குளக்கரைக்கு பட்டாளம் போய் சேரும்.

அவசர,அவசரமாய் குளக்கரை பொந்திற்குள் அவரவர் வேட்டி குருவி போல் போய் அடையும்.

சில்லென்ற கூதக்காற்று ஒவ்வொருவரையும் குளத்தில் இறங்க சிணுங்க வைக்கும்.

முதலில் ஒருவருக்கொருவர் கையால் தண்ணீர் அடிக்கும் படலம் தொடங்கும்.

சுடு தோசைக்கல்லில் தெளித்த தண்ணீர் போல் உடலில் இனம்புரியா உற்சாகத்தை வரவழைக்கும்.

பிறகு மெல்லமெல்ல உடம்பு குளத்தில் இறங்கி நண்பர்கள் சகிதம் உற்சாகம் உச்சக்கட்டம் அடையும்.

காலில் வீதல்ரோடு குத்திய காயத்தை சிறு மீன்கள் செல்லமாய் முத்தமிட்டு செல்லும்.

இக்கரையிலிருந்து அக்கரை போக தைரியமான ஒரு அணி ஒன்று சேரும்.

நடு தாப்பத்தில் குளத்தின் வேலம்பாசி செடி நீந்திச்செல்லும் உடம்பை உறசி அந்நேரம் தேவையில்லாமல் முதலையை ஞாபகமூட்டி திக்திக்கென்று அடிக்க வைக்கும்.

ஒரு வழியாய் திக்கிதிக்கி ஓவிய தெரிந்த சூராக்கள் நல்லபடி அக்கரை போய் சேர்க்கும்.

வழியில் களைப்பாற கட்டிய முட்டை உருண்டு புரண்டு சொல் பேச்சு கேட்க மறுக்கும்.

சில்லென்ற காற்றால் கரையேறி சோப்பு போட உள்ளம் தயங்கும்.

ஒரு புறம் விரல் விட்டு பல் விலக்கும் ஒய்சாக்காவின் குரலோசை குளம் முழுவதும் எக்கோ ஒலிக்கும்.

வீட்டின் கோபத்தை சிலர் படிக்கையில் வந்து நன்கு தப்பி தீர்த்துக்கொள்வர்.

சபீர் காக்காவால் இங்கு தட்டி எழுப்பிய மணக்கும் மலரும் நினைவுகள் தொடரட்டும்......

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆகாசத்தில் நிலையாய் நிறுத்தப்பட்ட மீன்கொத்திப்பறவை திடீரென குளத்திற்குள் உண்டியலில் போடும் காசுகள் (தர்ஹா உண்டியல் அல்ல) போல் தொபுக்கென்று விழுந்து அதனுடைய ரிஜ்க்கை பிடித்துச்செல்லும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

குளத்தில் போட்ட கூச்சல் பொந்திற்குள் புகுந்திருந்த வேட்டிகள் சில பேரால் குளத்திற்குள் அள்ளி வீசப்படும்.

நிலாவைத்தொட்ட ஆம்ஸ்ட்ராங் போல் ஆழத்திற்கு சென்று அள்ளி வந்த மண் சந்தோசம் தரும்.

Shameed said...

//குத்துவிளக்கு வெளிச்சத்திலே
பத்து விளக்காய் அவள்...
மண்ணெண்ணெய் புகையினிலும்
மல்லிகைப்பூ மணம்!//

கவிதையை போட்டு நல்லா சூடு ஏத்துறாங்க!!

ZAKIR HUSSAIN said...

பாஸ்...இது கணவன் உழைத்து ஓய்ந்து போன பிறகும், இதே காதல் தம்பதிகளுக்கு இடையே இருந்தால் சரி.

பணம் வாங்கிக்கொள்ள சொல்லி வரும் புறா போட்ட ஸ்டாம்ப் ஒட்டிய மலேசிய கடுதாசியும், தடிமனான லட்டரில் குறுக்காலும் / நெடுக்காலும் கோடு கிழித்து ரிஜிஸ்டர் செய்யப்பட்ட ட்ராஃப்ட் [ துபாய் ]....இவைகள் எல்லாம் வழக்கொழிந்தது போல் இப்போது உண்மையான நேசமும் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போகிறதோ என்று நினைக்கும் அளவுக்கு ஒரு டைமன்சனில் உலகம் போய்க்கொண்டிருக்கிறது.




Ebrahim Ansari said...

மீள் பதிவுக்கு நன்றி. இதை நான் முன்பு படிக்கவில்லை.

கவிதை கவிதையின் வடிவத்திலும் தம்பி நெய்நாவின் பின்னூட்டம் கவிதையின் வடிவத்தை இழந்தாலும் கவிதையாகவே தோன்றுகிறது.

அனைத்துமே அருமை. அனுபவங்களின் அசை போடல தொகுப்பு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வழமையாக வந்து கதகதப்பூட்டும் புள்ளிகள் எல்லாம் எங்கே ?

என்று கேட்கவைக்கும் முன்னறே.. பிரஸன்ட் ஆனதுக்கு நன்றிகள் !

இப்போ நன்றி அறிவிப்பு சீஸன் (ஊரிலும் தான்)...

காக்கா... மீள் பதிவு (ஏற்கனவே கண்ணில் பட்டவங்களுக்கு)... புதுசா குளிரூட்ட வர்ரவங்களுக்கு இது ரெஃப்ரிஜிரேட்டர் :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நாங்களும் வேலை செய்வோம்லன்னு சொல்ல வச்சுட்டாங்க கம்பெனியில... ! பெண்டு எடுக்கிறதுன்னா இப்புடியா ? வருடக் கடைசி... அதுக்காக ஒவ்வொரு நாளோட கடைசி நிமிஷம் வரைக்கும் வேலை வேலை ன்னா எப்புடி !?

Yasir said...

ரொம்ப குளிர் இந்த நேரத்தில் இப்படி ஒரு கவிதையைப் படிப்பது போர்வையைப் போர்த்திகொண்டு இஞ்சி டீ க்குடிப்பது போன்று உள்ளது....சகோ நெய்னாவின் கருத்துக்கள் இஞ்சி டீக்கு மேரி பிஸ்கட் தொட்டு சாப்பிட்ட சுகம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரைப்பட்டினத்து
அளவான குளிரோ...
அனுபவிக்க உடல் ஏங்கும்
அசைபோட மனம் இனிக்கும்!

என்ற கூட்டாளிகளின் இனிய கூட்டு தயாரிப்புடன், செக்கடிக்கு தண்ணி வரும் இந்நன்னாளில் நெய்னாவின் அழகாதிய கூத கால கவிக்கோர்வை சூப்பரு!

sabeer.abushahruk said...

//
சூரியனும்
மேக முந்தானையிலிருந்து விடுபட்டு மெல்லமெல்ல
வெளியாகிக் கொண்டிருந்தது.

சில்லென்ற கூதக்காற்று
ஒவ்வொருவரையும்
குளத்தில் இறங்க
சிணுங்க வைக்கும்.

காலில்
வீதல்ரோடு குத்திய காயத்தை
சிறு மீன்கள்
செல்லமாய் முத்தமிட்டு செல்லும்.
//

நெய்னாவின் கவித்துவம் ஜெயிக்கும் இடங்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆஹா மத்த எடத்துல எல்லாம் போச்சா.....

Unknown said...

மெயின் ரோடு.. ஸ்வீட் ஷாப்ல வாங்கித் திண்ணும் சுடச்சுட காராச்சேவும்.. பகோட்டாவும்..

சுடச்சுட பஜ்ஜி/ வடையில் சட்னி இட்டு ருசித்துத் திண்ணும் ரசிப்பும் இந்த குளிர் காலத்திலேதான்...


அப்படியே தூரத்தில் கேட்கும் ______________ பாட்டும் இந்தக் குளிர் காலத்தில்தான்..

அதிரை.மெய்சா said...

மீள் பதிவாயினும்

குளிகாலக் கவிதை
குளிர்காய வைக்கும் வரிகளில்
இதமாய்த் தீண்டி
பதமாய் உறங்க வைக்கும்

வாழ்த்துக்கள் சபீர் & ஜாஹிர்

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஆஹா! குளிர்காலக் கூட்டத்தொடருக்கு இத்தனை வரவேற்பா?

என்னத்தச் சொன்னேன் என்பதல்ல விஷயம்; தூண்டி விட்டேனா இல்லையா?

குளிர் காய்ஞ்சாச்சா? சரிசரி வாங்க போய் வேலையைப் பார்ப்போம்.

குளிர்கால வெயிலும்
கோடையில் மழையும்
அடைமழை காலத்தில்
குடைக்குள் நடையும்

ஊரில்தான் உச்சகட்ட உவகை!

வஸ்ஸலாம்.

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

////உம்மாவின் அரைகுறை சம்மதத்துடன் வேட்டியும்,சோப்பும் லேஞ்சிக்குள் அசைலம் இல்லாமல் அடைக்கலம் புகும்.

நண்பர்கள் புடை சூழ செக்கடி குளக்கரைக்கு பட்டாளம் போய் சேரும்.

அவசர,அவசரமாய் குளக்கரை பொந்திற்குள் அவரவர் வேட்டி குருவி போல் போய் அடையும்.

சில்லென்ற கூதக்காற்று ஒவ்வொருவரையும் குளத்தில் இறங்க சிணுங்க வைக்கும்.

முதலில் ஒருவருக்கொருவர் கையால் தண்ணீர் அடிக்கும் படலம் தொடங்கும்.

சுடு தோசைக்கல்லில் தெளித்த தண்ணீர் போல் உடலில் இனம்புரியா உற்சாகத்தை வரவழைக்கும்.

பிறகு மெல்லமெல்ல உடம்பு குளத்தில் இறங்கி நண்பர்கள் சகிதம் உற்சாகம் உச்சக்கட்டம் அடையும்.

காலில் வீதல்ரோடு குத்திய காயத்தை சிறு மீன்கள் செல்லமாய் முத்தமிட்டு செல்லும்.

இக்கரையிலிருந்து அக்கரை போக தைரியமான ஒரு அணி ஒன்று சேரும்.

நடு தாப்பத்தில் குளத்தின் வேலம்பாசி செடி நீந்திச்செல்லும் உடம்பை உறசி அந்நேரம் தேவையில்லாமல் முதலையை ஞாபகமூட்டி திக்திக்கென்று அடிக்க வைக்கும்.

ஒரு வழியாய் திக்கிதிக்கி ஓவிய தெரிந்த சூராக்கள் நல்லபடி அக்கரை போய் சேர்க்கும்.

வழியில் களைப்பாற கட்டிய முட்டை உருண்டு புரண்டு சொல் பேச்சு கேட்க மறுக்கும்.

சில்லென்ற காற்றால் கரையேறி சோப்பு போட உள்ளம் தயங்கும்.

ஒரு புறம் விரல் விட்டு பல் விலக்கும் ஒய்சாக்காவின் குரலோசை குளம் முழுவதும் எக்கோ ஒலிக்கும்.

வீட்டின் கோபத்தை சிலர் படிக்கையில் வந்து நன்கு தப்பி தீர்த்துக்கொள்வர்.

சபீர் காக்காவால் இங்கு தட்டி எழுப்பிய மணக்கும் மலரும் நினைவுகள் தொடரட்டும்......////

நெய்னா மேற்கானும் வரிகளை திரும்ப திரும்ப படிக்கவைத்தது இவைகள் யாவும் நாம்பெற்ற இன்பம்ல்லவ ஒவ்வொரு வரிகளையும் படிக்க படிக்க எத்தனை சிரிப்புகள் நாம் செய்த செயளாக இருந்தாலும் நீ அதை அப்படியே ஒரு வரிகூட பிரளாமல் தந்திருப்பது மகிமையிலும் மகிமை.

இன்னும் வரிக்கு வரி சிரிப்பொழி
அத்தனையும் நம் நீங்க மலரும் நினைவுகள்
வாழ்துக்கள் நெய்னா இப்படியே நீங்க இரண்டுபேரும் சேர்ந்து எங்களை உசுப்பேத்திக்கொண்டே இருங்கள்

Ahamed irshad said...

உள்ளங்கை
தேய்ப்பிலிருக்கும்
கதகதப்பு
சேவலிறகை
காதில் விட்ட
கிளுகிளுப்பு

..

பஜ்ஜி
வெர்சஸ்
சட்னியோட
கூட்டணியில்
எந்தணியும்
தோற்குங்காலம்
குளிர்காலம்
-

# என் பங்குக்கு.. :)

Ahamed irshad said...

>> பஸ் ஸ்டான்ட் கதகதப்பில்
அசைபோடும் பசு...
பால் வண்டி மணி...
தலையை சுற்றிய ம்ஃப்ளருக்குள்
சவரம் துறந்த முகம்...
கைகட்டி வாய் நடுங்கும்
குளிருக்கு மரியாதை! <<

அபாரம்..ஐ லைக் இட் திஸ் லைன் வெரி மச்..

இதில் பால் வண்டி மணி..... பெல் என்றிருந்தால் நோ கன்ஃப்யூஸன்... ஏனென்றால் மணி என்ற பெயரையுடைய தாடிக்குள் முகமிருக்கும் கருப்பு நிறமுடைய ஒருவர் ’வெள்ளை பாலை எங்கள் வீட்டில் தினமும் ஊற்றிய வரலாறு கைவசம் இருக்கிறது.. :)

sabeer.abushahruk said...

//>> பஸ் ஸ்டான்ட் கதகதப்பில்
அசைபோடும் பசு...
பால் வண்டி மணி...
தலையை சுற்றிய ம்ஃப்ளருக்குள்
சவரம் துறந்த முகம்...
கைகட்டி வாய் நடுங்கும்
குளிருக்கு மரியாதை! <<

அபாரம்..ஐ லைக் இட் திஸ் லைன் வெரி மச்..//

இர்ஷாத், மேலே நீங்கள் விரும்பியது என் வரிகளல்ல. மண்டபத்தில ஜாகிர் எழுதித் தந்தது; பரிசுத் தொகை ஆயிரம் பவுனையும் என்னைய வாங்கிக்கச் சொல்லிட்டான்

-தருமி

sabeer.abushahruk said...

//பஜ்ஜி
வெர்சஸ்
சட்னியோட
கூட்டணியில்
எந்தணியும்
தோற்குங்காலம்
குளிர்காலம்//

அப்ஜக்ஷன் யுவர் ஆனர்.

மூன்றாம் அணியில் வெங்காய பக்கோடாவும் ஏலக்காய் ட்டீயும்

நான்காம் அணியில் இஞ்சி ட்டீயும் அரிசி முருக்கும் இருக்க, வெற்றி தோல்வி பேசித் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.

அப்ப இரண்டாம் அணி?

Ahamed irshad said...

>> மூன்றாம் அணியில் வெங்காய பக்கோடாவும் ஏலக்காய் ட்டீயும்

நான்காம் அணியில் இஞ்சி ட்டீயும் அரிசி முருக்கும் இருக்க, வெற்றி தோல்வி பேசித் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.

அப்ப இரண்டாம் அணி? <<

ஆஹா...காக்கா :) என்ன விட்ருங்க... கடேசி பெஞ்சில் ஒட்டில் உட்கார்ந்திருக்கிறேன் கவிதை என்ற சப்ஜெக்ட்டில்.....உங்க கவிதைகளை பார்த்து எழுதப் பழகனும்... ஏதோ தோனிச்சு எழுதியாச்சு :))

sabeer.abushahruk said...

அமீரகத்திலும் குளிருதுங்கோ

அமீரகத்தில் அடைமழை
இடியில்லா மின்னலற்ற
வன்முறையின்றி
வானம் பொழிகிறது.

வருடத்திற்கு
ஓரிரு முறையே
தலை குளிக்கும் மரங்களில்
இலை சிலிர்க்கிறது.
புது வர்ணம் தீட்டப்பட்டதுபோல்
பளீரென்கிறது பச்சை

வழக்கத்துக்கு மாறாக
சாலைகளில்
பறக்கும் வாகனங்கள்
மிதக்கின்றன.

சுடச்சுட
அல்லு பரோட்டாவுக்கும்
கடக் சாயாவுக்கும்
மவுசு கூட
அமீரகத்திலும் குளிருதுங்கோ

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.மீள்பதிவென்றாலும் ,ஜில்''பதிவு!

crown said...

கரன்ட் போன காலத்திலே
கதவிடுக்கில் குளிர்...
திரியை சற்று தூண்டி வைக்க
திக்கித் திணறும் குளிர்!
------------------------------------------------------------
குளிரையும் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பது கவிஞரின் ஞானம். அது திரியை தூண்டி தமிழ் குளிர் காய்கிறதே!அற்புதம் மனக்கண்ணில் காட்சியாய் விரிந்து மறையும் பிம்பமாய் கவிதை சொல்லாடல்.

crown said...

குத்துவிளக்கு வெளிச்சத்திலே
பத்து விளக்காய் அவள்...
மண்ணெண்ணெய் புகையினிலும்
மல்லிகைப்பூ மணம்!
----------------------------------------------------------------------
முரனாய் தோன்றும் முரன் இல்லாதவாறு எழுதப்பட்ட முரன்பாடில்லா கவிதை வரிகளும் . அதன் வசிகரமும். நம்மை வசிகரிக்கும் கரத்திற்குரிய ஆத்துகாரியின் முக வசிகரமும் இப்படியே சொக்கிபோகவைக்கும் கவித,கவித
--------------------------------------------------------------

crown said...

முருக்கு வத்தல் பொறியல்
மொறுமொறென்ற பப்படம்...
துணைக்கறியாய் இல்லையெனில்
"சவ"(சவக்கும்) சாப்பாடு!
---------------------------------------------------
நாக்கு செத்துபோச்சுன்னு சொல்றது இதுனால தானா? கவிஞரே!

crown said...

அமெரிக்கப் பனியும்
அரபு நாட்டுக் குளிரும்
உடல் வதைக்கும் உபாதை!
அதிரைப்பட்டினத்து
அளவான குளிரோ...
அனுபவிக்க உடல் ஏங்கும்
அசைபோட மனம் இனிக்கும்!
---------------------------------------------------

எண்ணத்தை படம்பிடிக்கும் வரிகள்.சில்லுன்னு ஒரு கவிதை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆத்துகாரியின்//

கிரவ்ன்(னு):

அதிரையிலும் ஆத்துக்காரின்னு சொல்லிக்கலாம் இப்போ - வாய்க்கலில் அல்லவா தண்ணீர் ஓடுதாம்...

sabeer.abushahruk said...

கிரவுன்,

அங்கு எத்தனை கடும் குளிரோ, போர்வை விலகாதென்று நினைத்தேன். இதிலும் தங்கள் பார்வை பட்டுவிட்டதே!

crown said...

முருக்கு வத்தல் பொறியல்
மொறுமொறென்ற பப்படம்...
துணைக்கறியாய் இல்லையெனில்
"சவ"(சவக்கும்) சாப்பாடு!
---------------------------------------------------
நாக்கு செத்துபோச்சுன்னு சொல்றது இதுனால தானா? கவிஞரே
----------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.இதுக்கு என்ன பதில் கவியரசே!

crown said...

கிரவுன்,

அங்கு எத்தனை கடும் குளிரோ, போர்வை விலகாதென்று நினைத்தேன். இதிலும் தங்கள் பார்வை பட்டுவிட்டதே!
---------------------------------------------------------------------------
எதுக்கெடுத்தாலும் "போர்"வை-ன்னு சொல்ற நாட்டில் இருந்தாலும் தீர்வை சொல்லும் மார்கம் கடைபிடிக்கும் நாம் என்றும் சமாதான போர்வை போர்த்தியிருப்போம் மேலும் அன்பு குளிர் காய்ந்திருப்போம்.அதனாலேயே இந்த பார்வை!

sabeer.abushahruk said...

//நாக்கு செத்துபோச்சுன்னு சொல்றது இதுனால தானா? கவிஞரே
----------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.இதுக்கு என்ன பதில் கவியரசே!//

அலைக்குமுஸ்ஸலாம் கிரவுன்,

சவ சவப்பதால் நாக்கு இரண்டு முறை சவமாகிச் செத்துப் போவது உண்மைதான். தமிழின் எழுத்துக்களோடு தங்களின் திருவிளையாடல் தொடரட்டும்.

sabeer.abushahruk said...

//அதிரையிலும் ஆத்துக்காரின்னு சொல்லிக்கலாம் இப்போ - வாய்க்கலில் அல்லவா தண்ணீர் ஓடுதாம்...//

காவிரித்தண்ணியிலும் அரசியல், டாஸ்மாக் தண்ணியிலும் அரசியல்...இப்ப வாய்க்காலில் வரும் தண்ணியிலும் அரசியல்; மீடியாக்களின் பக்குவமின்மையால் பகை. என்னெத்தச் சொல்ல

crown said...

கிரவுன்,

அங்கு எத்தனை கடும் குளிரோ, போர்வை விலகாதென்று நினைத்தேன். இதிலும் தங்கள் பார்வை பட்டுவிட்டதே!
---------------------------------------------------------------------------
எதுக்கெடுத்தாலும்(war) "போர்"வை-ன்னு சொல்ற நாட்டில் இருந்தாலும் தீர்வை சொல்லும் மார்கம் கடைபிடிக்கும் நாம் என்றும் சமாதான போர்வை போர்த்தியிருப்போம் மேலும் அன்பு குளிர் காய்ந்திருப்போம்.அதனாலேயே இந்த பார்வை!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு