அதிரைநிருபர் பேசும் படம் சொன்னவைகள் ஏராளம், இதில் இன்னும் இருக்கும் தாராளமாக ! அவ்வகையில் சின்ன சின்ன இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறது மூன்றாம் கண்ணுடைய இளமைப் பார்வையும், துள்ளலும் ஆங்காங்கே எழுத்துக்களின் கிள்ளலும் !
புகைப்படக் கலை என்ற ஒன்றை அறிந்தவர்கள் சிலர் என்றாலும், பலருக்கும் பிடித்த ஒன்றுதான் அந்தக் கலையைக் கொண்டு 'பிடித்த'வைகள்.
"வேகமா போறியளே ஊரில கல்யாண சீஸனாச்சே பார்த்து போங்க !... உடம்புல இருக்கிற பார்ட்ஸ் பத்திரமா பார்துக்குங்க!!"
மீனுக்கு மசாலா போட்டது சரியில்லைன்னு கொற வந்துடுச்சு, அதுனாலே அந்த கொறைய போக்க இந்த பொறிச்ச கோழி போட்டோ (இதுக்கும் ஏதாவது இக்கு வச்சிராதிய)!
ஆத்துலே தண்ணி தொறந்து விட்டுட்டாங்க கச்சல் கட்டிகிட்டு யாரையும் காணோமே!? தஞ்சாவூர் போறவங்க ஆத்தைப் பார்த்து ஆனந்தபடுங்க ஆனா எறன்கிறாதிய !!
பாவம் இந்த பூ'வை பூவையர் யாரும் தலையில் சூடுவதும் கிடையாது எந்த கவிஞரும் இந்த 'பூ'வை நினைத்து கவி பாடுவதும் கிடையாது !
வெட்டி வச்ச பழமெல்லாம் நல்லாத்தான் இருக்குது வெலய கேட்டா காலு வெடவெடன்னு ஆடுது !
இத உட்கார வச்சிகிதா நிக்கவுட்டு வச்சிகிதா !
ஓல்ட் ஈஸ் கோல்ட்ன்னு சொல்வாங்க ஆனா இது போல்டா இருக்கா இல்லையான்னு பாத்து சொல்லுங்க.
சுண்டால் விக்கிற பையனை காணமேன்னு கம்ளைண்டு பண்ணிறாதிய !
நல்ல வேலை யானைக்கு மணிகட்டி யானை மேல ஆள் உட்க்கார்ந்து இருக்கு இல்லைன்னா ஊருக்குளே யானை யானையாக புகுந்துடுச்சின்னு நியூஸ் போட்டுருவாங்க !!
அல்லாஹுவின் இந்த பள்ளி வாசல் கட்ட நன்கொடைகள் கொடுத்தவர்கள் ஏராளம், இந்த புளியமரமும் தன் பங்கிற்கு உடலின் ஒரு பாகத்தை பள்ளிவாசலுக்கு நன்கொடை கொடுத்து விட்டு மீண்டும் துளிர் விட்டு வருகின்றது !!
Sஹமீது
22 Responses So Far:
சிஞ்சிற்றேனும்
சிந்தித்தறியாச்
செம்மறி ஆடுகள்
பிரியாணி ஆகும்வரை
பிரயானிதான்!
ஆடு........இந்த ஆடுகளுக்குள் ஒரு கழுதை இருக்கு, நான் மட்டும் சொல்லலை பக்கத்தில் இருந்த 3 பேரும் ஆமாம் என ஒத்துக்கொள்கிறார்கள். நல்லா பாருங்கள் தெரியா விட்டால் நீங்களும் ஆம் சொல்லி விடுங்கள்.
ச்சிக்கன்.......கொஞ்ச தீஞ்சு இருக்கு ஆயிலெ மாத்துங்க!
தண்ணி..... அல்லாஹ் தந்த தண்ணிலெ அம்மா படம், தண்ணிலெ அரசியல் 'ங்கிறது இது தானா?
வாழப்பூவை மன்டையிலெ வைத்தால் வண்டுகள் மொய்க்குமே! அவ்வளவு தேன்கட்டி அதில் இருக்கு!
வெட்டி வைத்த பழங்களில் கண் மட்டும் உயிர்பெறுவது எப்படி?
ஒன்னுமே இல்லாத சாமான் 'னு சொன்னால் அது இது தானோ!
எங்க நாட்டு கலை "ஈஸ் கோல்ட் அன்ட் போல்ட்"
அதிரை சிங்கப்பூராச்சா?
இது நெச யானையா? இல்லெ யாரு கனவிலாவது வந்து செலை வச்சுட்டாங்களா? கழிப்பிடக் கபுரு மாதிரி இருக்குமோ என ஐயப்பட வேண்டி இருக்கு!
//புளியமரமும் தன் பங்கிற்கு உடலின் ஒரு பாகத்தை பள்ளிவாசலுக்கு நன்கொடை கொடுத்து விட்டு மீண்டும் துளிர் விட்டு வருகின்றது //
அந்த அளவுக்கு இதன் வேர்கள் மகான் வரை படர்ந்து உயிர் பெற்று வளர்கிறது என்று புனிதம் பேசி விடுவார்களே!
அந்தப் பாலத்தடுப்பில்
தடுக்கி விழுந்தாலும்
தண்ணீர்
தடம் மாறுவதில்லை
மனத்தை
இடுக்கியும் குறுக்கியும்
மனிதன்
திசை திருப்பாத வரை!
சேவை என்று தலைப்பிட்டால்
தனக்கென்றொரு பிரத்யேகத்
தேவை இருக்கலாகாது
தண்ணீருக்கு
பள்ளம் மேடு மட்டுமே தெரியும்
இடம் வலமோ
இவர்கள் ஏற்படுத்துவது
பாரம்பர்யத்திற்கு
பாய்ச்சுவதற்கு முன்னர்
பஞ்சம் பட்டினிக்குப்
பாய்ச்சுவதே மனிதம்!
வாழைப்பூ
வதன அழகுக்கோ
வாசணைக்கோ அல்ல...
வயிற்றுக்கு!
எனவே இது
தொடுத்துச் சூடப்படாமல்
அடுப்பில் சூடாக்கப்படுகிறது
அடுக்கடுக்காய் உடையுடுத்தி
அவயங்களை மறைப்பதில்
கில்லாடி இந்தப் பூ!
//அடுக்கடுக்காய் உடையுடுத்தி
அவயங்களை மறைப்பதில்
கில்லாடி இந்தப் பூ!//
வாழை பூவிற்கும் கவிதை போட்ட கவி கில்லாடி நீங்கள்
//பாரம்பர்யத்திற்கு
பாய்ச்சுவதற்கு முன்னர்
பஞ்சம் பட்டினிக்குப்
பாய்ச்சுவதே மனிதம்!//
தண்ணிக்கு போட்ட கவிதை சும்மா 'சுள்'லுன்னு இருக்கு
அந்தப் பாலத்தடுப்பில்
தடுக்கி விழுந்தாலும்
தண்ணீர்
தடம் மாறுவதில்லை
மனத்தை
இடுக்கியும் குறுக்கியும்
மனிதன்
திசை திருப்பாத வரை!
சேவை என்று தலைப்பிட்டால்
தனக்கென்றொரு பிரத்யேகத்
தேவை இருக்கலாகாது
தண்ணீருக்கு
பள்ளம் மேடு மட்டுமே தெரியும்
இடம் வலமோ
இவர்கள் ஏற்படுத்துவது
பாரம்பர்யத்திற்கு
பாய்ச்சுவதற்கு முன்னர்
பஞ்சம் பட்டினிக்குப்
பாய்ச்சுவதே மனிதம்!
----------------------------------------------
ஒவ்வொரு வரியும் நீரூற்று பிரவாகம்!எங்கள் சோக தாகம் தீர்க்க வந்த தீர்த்தம்!பொது உடமை பேசும் வாய்க்கால்,கால்வாய் வழி ஓடும் ஆற்றாமை மிகுந்த ஆறு! கலக்கலான கவிதையில் கலங்கிய மனதுடன் கூடிய வலியின் சலனம் தெரிகிறது!என் கவிச்சக்கரவர்திக்குத்தான் இதெல்லாம் எழுத இயலும்
படங்கள் ஒரு ஒரு பக்கம் ..எங்கள் கவிக்காக்காவின் கலக்கல் கவிதைகள் இன்னொரு பக்கம்...அந்த தண்ணீர் வரும் வாய்க்காலில் குளிர்த்த குளிர்ச்சி
//பாரம்பர்யத்திற்கு
பாய்ச்சுவதற்கு முன்னர்
பஞ்சம் பட்டினிக்குப்
பாய்ச்சுவதே மனிதம்!// வாவ்....எல்லாமே அடக்கம் இந்த வரிகளுக்குள்
இன்று அதிரையில் நடைபெற்ற ஒன்பது திருமணங்களில் இந்த ஆடுகள் எல்லாம் இதுவரை அறுபட்டு போயிருக்கும்.
அறுக்கப் படப போகிறோம் என்று அறியாமல் கூட்டமாகப் போவதுதான் ஆடு.
ஆட்டுக்கும் அரசியல் கட்சிகளின் தொண்டர்களுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கவே செய்கிறது.
பழங்காலப் பாடல் ஒன்று
இந்த
ஆட்டுக்கும் நம்ம
நாட்டுக்கும் பெரும்
கூட்டு இருக்குது கோனாரே - இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவும் காணாரே!
//அந்தப் பாலத்தடுப்பில்
தடுக்கி விழுந்தாலும்
தண்ணீர்
தடம் மாறுவதில்லை
மனத்தை
இடுக்கியும் குறுக்கியும்
மனிதன்
திசை திருப்பாத வரை!
சேவை என்று தலைப்பிட்டால்
தனக்கென்றொரு பிரத்யேகத்
தேவை இருக்கலாகாது
தண்ணீருக்கு
பள்ளம் மேடு மட்டுமே தெரியும்
இடம் வலமோ
இவர்கள் ஏற்படுத்துவது
பாரம்பர்யத்திற்கு
பாய்ச்சுவதற்கு முன்னர்
பஞ்சம் பட்டினிக்குப்
பாய்ச்சுவதே மனிதம்!//
#அதிரையின் அதிசயம்
ஆற்றில் வரும் நீர் கூட சுடும்
ஆற்றில் வரும் நீரையும் சுடப்படும்
//புளியமரமும் தன் பங்கிற்கு உடலின் ஒரு பாகத்தை பள்ளிவாசலுக்கு நன்கொடை கொடுத்து விட்டு மீண்டும் துளிர் விட்டு வருகின்றது //
அந்த அளவுக்கு இதன் வேர்கள் மகான் வரை படர்ந்து உயிர் பெற்று வளர்கிறது என்று புனிதம் பேசி விடுவார்களே!//
புனிதம் பேசப் பட்டவைதான்.
ஹாஜா ஒலி பல் விலக்கிவிட்டு நட்டு வைத்த குச்சிதான் பெரிய புளியமரம் என்றும் அவருடைய தோழர் நட்டுவைத்த குச்சிதான் சின்னப் புளிய மரம என்றும் சிறு வயதில் கதைகள் - புனிதம் பேசப் பட்ட கதைகள் கேட்ட காதுகள் ஏராளம்.
முதல் படம் :
பார்க்கும்போதே வலிமா விருந்துதான் ஞாபகத்திற்கு வருகின்றது.
இரண்டாவது படம்:
சென்ற முறை மீனுக்கு மசாலா குறைவு என்று சொன்ன அதே அபு ஆசிப் தான்
இந்த முறையும் சொல்கின்றேன் இதற்கும் மசாலா அதிகமே. குறை இருந்தால் சொல்லித்தான் ஆகவேணும். அதற்காக இக்கு வைக்காதிய என்றெல்லாம் சொல்லி எங்கள் வாயை அடைக்க முடியாது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
மூன்றாவது படம் :
ஆற்றில் ஓடும் நீரின் அழகைவிட அதை நீரின்றிய குளங்கள் வாடிய ஏக்கத்தை போக்க வந்த நீர் மகளை வரவேற்க வைத்த விளம்பரப்பலகையின் வாசகம் அழகு.
நான்காவது படம் :
இந்த வாழைப்பூவை ஒரு காலத்தில் ஆக்கித்தின்ற ஞாபகம். ஆனால் இன்றைய சூழலில் எனக்கு தெரிந்து காய்கறி கடைகளில் அவ்வளவு விற்ப்பனைக்கு வராத ஒரு அரிதான பூவாகவே இன்று வரை இருப்பதாக
அறிகின்றேன்.
ஐந்தாவது படம் :
அழகிய பழங்களின் கூட்டு குடும்பங்களின் அழகோ அழகு. விளையைபற்றின கவலை இல்லாதிருந்தாலும், கோடைகாலத்தில் இப்படி வெட்டி வைத்திருந்தால் காசைப்பார்க்காது ஒரு பிடி பிடிக்கலாம். குளிர்காலத்தில் அவ்வளவு ஈர்ப்பு இப்பழங்களின்மேல் பதியாது.
ஆறாவது படம் :
இது உக்காந்து இருக்குதா அல்லது நின்னுகிட்டு இருக்குதா என்பது முக்கியமில்லை. ஒவ்வொரு குமிழிக்குள்ளும் உள்ள வர்ண ஜாலங்கள் கண்ணுக்கு இதம் அழிப்பது என்னவோ உண்மை. அனைத்து குமிழிலும் வானவில்லை உட்புகுத்தியது யார் ?
ஏழாவது படம் :
எனக்கென்னவோ இது மும்பையில் எடுத்து அள்ளி வந்தது போல்தான் தெரிகின்றது. இருந்தாலும் பழசுக்கு ஈடு இணையாக இன்றெல்லாம் கட்டிடங்கள் எழும்புவதே இல்லைஎன்றே சொல்வேன்.
எட்டாவது படம்:
சுண்டல் விக்கிறவன் அலைகின்ற கடல்கரை போல் தெரியவில்லையே . இது ஏதோ வாழ்க்கையின் உச்சத்தை தொட்டவர்கள் மட்டும் புழங்கும் கடற்க்கரை போல் அல்லவா தெரிகின்றது.
ஒன்பதாவது படம் :
யானைப்பாகன் காதில் செல்போனா அல்லது யானை பிளிரும் சத்தத்தைக்கேட்டு காதலி பொத்திக்கொண்டு போகின்றாரா ?
பத்தாவது படம் :
எனக்கு எப்பொழுதுமே மதினா முனவ்வரா பள்ளிவாசலை ஞாபகப்படுத்தும்
அதிரையின் ஒரே பள்ளிவாசல். இந்த கடற்க்கரை தெரு பள்ளிவாசல்.
அபு ஆசிப்.
சாகுல்...முதல் படம் பார்த்ததும் எறச்சானமும், பக்கர் வாய்ஸின் சவுண்டு தூக்கலான E.M ஹனிபா பாடலும் ஞாபகத்துக்கு வருகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அழகியப் புகைப்படங்கள்!
ஹமீது நலமா!
அலாவுதீன்.S. சொன்னது…
//அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அழகியப் புகைப்படங்கள்!
ஹமீது நலமா!//
வலைக்கும் முஸ்ஸலாம்
நலமே தங்களின் நலம் சிறக்க என் துவா
//இரண்டாவது படம்:
சென்ற முறை மீனுக்கு மசாலா குறைவு என்று சொன்ன அதே அபு ஆசிப் தான்
இந்த முறையும் சொல்கின்றேன் இதற்கும் மசாலா அதிகமே. குறை இருந்தால் சொல்லித்தான் ஆகவேணும். அதற்காக இக்கு வைக்காதிய என்றெல்லாம் சொல்லி எங்கள் வாயை அடைக்க முடியாது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.//
மசாலா கூட போட்டு பொறித்த கோழியை சாப்பிட்டுவிட்டு செக்கடி குளத்தில் ஒரு குளியலை போடுங்கள் மசாலாவெல்லாம் பஞ்சா பறந்திடும் !!
படம் 1
இந்த ஆட்டு மந்தைகளெல்லாம் சவூதி ஜித்தாவில் வாழும் மக்களுக்கும் சீ போர்ட்டில் வேலைசெய்யும் மக்களுக்கும் ஜுஜிப்பி ஹஜ்ஜுடைய நேரத்தில் குர்பானிக்காக பல லட்சக்கணக்கான ஆடுகள் வந்து இறங்கும் பாருங்க தூரத்திலிருந்து அந்த ஆடுகளை அடைத்துவைத்திருக்கும் காட்சி 25,30 கிலோமீட்டர் தூரத்திற்கு கார்ப்பட் விரித்தமாதிரி ஒரு காட்சியை காண முடியும்
இந்த கிடாய் கூட்டாத்தைப் பார்த்தாலே
எனக்கு ஒரு ஞாபகம் வரும்
யாராவது வீரனாக இருந்தால் ஒருகிடாயை பிடித்துக்கொண்டு வந்து விட்டு விட்டு அடை தனி மனிதானாக யாருடைய உதவியும் இல்லாமல் பிடித்து விட முடியுமா?
னான் குர்பானிக்காக ஒருதடவை ஒரு கிடாயயை வாங்கி வரும்போது கொஞ்சம் கை நழுவியதுதான் அப்புறமி அதை பிடிக்காஊரு முழுதும் அது பின்னாடி ஓடி ஓடி கீழே விழுந்து மூஞ்சி உடைந்ததுதான் மிச்சம் இருதிவரையும் அதை பிடிக்க முடியமல் திரும்பியதுதான் மிச்சம் அதை மறக்க முடியாது
படம் 2
எந்த மருமகனுக்கு எந்த மாமியா பொரித்த கோழியோ அதிரை நிருபரில் வந்து அவதிப்படுது
படம் 3
பார்ப்பவர்களை பரவசமூட்டவைக்கும் கண்கொள்ளா காட்சி எத்தனைப்பேர் இதில் கற்பனை குளியல் போட்டிருப்பார்கள்
//அல்லாஹுவின் இந்த பள்ளி வாசல் கட்ட நன்கொடைகள் கொடுத்தவர்கள் ஏராளம்,//
நன்கொடை கொடுத்தவர்களின் நன்மையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளட்டும் !
ஆமீன் !
அபு ஆசிப்.
picture க்கு ஏன் புகைப்படம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது? அப்போது சரி ..இப்போது 'அலைப் படம்' என்று அழைக்கலாம்தானே?
Post a Comment