Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஊரில் மழையாமே !? - போஸ்டர் செய்தி ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | December 03, 2013 | , , , ,

ஊரில் மழையாமே ! என்றாலே போதுமே, அதிரைநிருபரின் ஆஸ்தான கவி அவர்களின் கவிதைகள் தான் மனதில் கரைபுரண்டு ஓடும் ! வாநிலை அறிவிப்பு நிலையம் சொல்லும் ஆருடம் பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் ! அதனை சிலர் பழிக்கவும் செய்யலாம். எது எப்படியிருப்பினும் அதிரையில் நல்ல மழை ! :)

இங்கு பதிக்கப்பட்டிருக்கும் பச்சைப் பசேல் படங்களுக்கும் தலைப்பில் இருக்கும் போஸ்டர் செய்திக்கும்  என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள் !

படங்களில் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியிருப்பது போன்ற பிரம்மை ஏற்பட வில்லை என்றால், அதிரை மன்சூர் அவர்கள் எழுதிவரும் 'கண்கள் இரண்டும்' தொடரை இடரில்லாமல் படிக்கத் தவறி விட்டீர்கள் என்று பொருள் கொள்ளப்படும் !

போஸ்டர் அடிக்க வசதிகள் இல்லாவிடினும், போஸ்டர் கெத்து படங்களில் இருக்கிறதா இல்லையா ?













அபூஇப்ராஹீம்

22 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விண்ணிலும், மண்ணிலும், மரத்திலும், மலையடிவாரத்திலும்,மண்தடுக்கும் சாய்சுவற்றிலும், கருஞ்சாலையிலும் ஒட்டப்பட்ட போஸ்டரின் வண்ணங்கள் வானமே பொத்துக்கொண்டு கொட்டியும் நிறமிழக்காமல் கெத்தாக காட்சி தரும் பிண்ணனியும் அதற்கு இயற்கை கொடுத்த வரமும் அருமை.

அதோடு ;இபு' வுக்கும் ஒரு Claps

sabeer.abushahruk said...

ஊரில் மழையென்றாலே
உவகை
ஒட்டிக்கொள்ளும்

மனம் வெளுத்துச்
சுத்தம் செய்யும்
மார்க்கச் சொற்பொழிவாய்
சாலை யெல்லாம்
சலவை செய்யும்
சில்லென்ற மழைப்பொழிவு

நிலவொளிக்கு
இதழ் பிரிக்கும்
அல்லியைப் போல்
மழையடிக்க
குடை விரிக்கும்
அதிரை

ஊரின் அழுக்கெல்லாம்
ஓடையாய் ஓட
குளம் குட்டைகளில்
தேங்கி நிற்கும் மழை

மலைப்பா யுள்ளது
மலையில் பெய்யும்
மழையைப் படமெடுத்த
கலையின் நேர்த்தி

உரில் பெய்யும் மழை
உலகளாவிய
ஊர்க்காரர் நெஞ்சுக்குள்ளே
சாரலடிக்கும்

மழையைவிட இனிமையானது
ஊரில் பெய்யும்
மழைக்கால நினைவுகள்!

sabeer.abushahruk said...

இரவின் இருளில்
மழை பெய்வதில்லை
அதன்
பேச்சுச் சப்தம் மட்டுமே
கேட்டுக் கொண்டிருக்கும்"

மட்டுமல்ல

கைதட்டல்களோடான
தேர்ந்த மேடைப் பேச்சாக அட்டகாசமாகவோ
சிறுபிள்ளைகளின்
தேர்வு நேரப் மனnaச் சப்தமாக
சீராகவோப்
பேசிக்கொண்டிருக்கும்

விடிகாலையில் விழிப்பதற்குள்
சாளரங்களின் கதவிடுக்குகளில்
கதிரவன் கசிய
வெளியே
காற்று கருவுற்றிருக்கும்

சாரலோ தூறலோ
மண்ணில்
ஈரமிருக்கும்

மழை
நனைத்தாலும் அழகு
மழையை
நினைத்தாலும் அழகு

மழையைக்
காண்பதுபோல்தான்
கேட்பதுவும் மகிழ்ச்சி!

மழை
பெய்தாலும் பிடிக்கும்
பேசினாலும் பிடிக்கும்

விரல் பிடிக்கும்
தேநீர் கோப்பையும்
விடியவிடிய மழையும்
கூட்டுக் கொண்டாட்டம்

மழைநீரை மட்டுமல்ல
மழைக்கால நினைவுகளையும்
சேகரிக்க வேண்டும்!

Unknown said...

இயற்கையின் வர்ணஜாலத்தின்மேல் புகை பிடித்தது யார் ?

அபு ஆசிப்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

What a beautiful rainy sceneries to wake up our olden and golden evergreen memories which will create a cyclone in our mind with warm & calm without any harm.

I eager to write in tamil but unfortunately I am not able to do it right now. In sha Allah, I'll be back with our mother tongue as soon as possible.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

My kind request to all my beloved ones here that whenever you get opportunity to see raining please make more supplications with our haajaths to Almighty Allah when our supplications will reach & accepted by Allah immediately or in the near future in shaa allah. This message from an authenticated hadees.

crown said...

ஊரின் அழுக்கெல்லாம்
ஓடையாய் ஓட
குளம் குட்டைகளில்
தேங்கி நிற்கும் மழை
-----------------------------------------------------------

அஸ்ஸலாமுஅலைக்கும்.கவிஞரே நான் இப்படி எழுத நினைத்திருந்தேன் ஊரின் அழுக்கெல்லாம்
ஓடையாய் ஓடகுளம் குட்டைகளில்
தேங்கி நிற்கும் மழை
போல் அழுக்காய் நம்மவர்களில் சிலரின் மனது

Yasir said...

கண்ணைக் கொள்ளைக் கொள்ளும் மழைக்கால படங்கள்...உள்ளத்தை கொள்ளையடிக்கும் கவிக்காக்காவின் கவி வரிகள்....மழைக்காலத்தை பட்டாணிக்கடலை/பொரியரிசி தேங்கா/ஆவி பறக்க அவித்த மரவள்ளிக்கிழங்குடன் அனுபவிப்பது போன்ற சந்தோஷம்

sheikdawoodmohamedfarook said...

ஊரில் நல்ல மழை பெய்ததது. அது நல்ல மழையா கெட்ட மழையா என்பது தெரியாது .ஆனால் அது நல்லார் ஒருவருக்காக பெய்த மழையாகஇருக்கலாம்.ஆனால் படத்தைப்பார்க்கும்போது நம்ஊரில்ஊட்டிகொடைகானால்மலேசியா மலைகள்எல்லாம்பெய்தது கண்டு மலைத்தே போனேன்!நல்லாருக்கும் மலை பே ஞ்சது நல்லாருக்கு.

Yasir said...

இதையும் அப்படியே பாருங்களேன்

http://www.buzzfeed.com/ariellecalderon/surreal-places-to-visit-before-you-die

Ebrahim Ansari said...

ஊரிலும் ஊரைச் சுற்றிலும் நல்ல மழைதான்.

தொடபு இல்லாத தூரத்து பிரதேசங்களில் எடுக்கப் பட்டாலும் காட்சிகள் கண்ணுக்கும் கவிதைகள் கருத்துக்கும் தீனி போடுகின்றன.

ஆனாலும் உள்மனதை உறுத்தும் குறை. எந்தக் குளமும் நிறையவில்லை. நிரப்பப்படவில்லை. முயற்சி இல்லை. குளங்கள் நிரம்பினால் அதைப் படம் எடுத்துப் போடலாம். உண்மையில் மகிழலாம்.

மழையே பெய்தாலும் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் என்கிற செய்தியும் கூடவே வருகிறது .

விரைவில் அதிரை பாலைவனமாகும் அடையாளங்கள் தெரிகின்றன.

சிற்றோடைகள் ஓடிக கொண்டிருந்த ஊரில் சாக்கடை கால்வாய்கள் சாஸ்வதமாகிவிட்டன.

ZAKIR HUSSAIN said...

மழையை பற்றி எத்தனை முறை படம் எடுத்துப்போட்டாலும், கவிதை எழுதினாலும் மனம் புத்துணர்ச்சி பெருகிறது.

நம் ஊரைப்பொருத்தவரை மழையினால் குளங்கள் நிறம்புகிறதோ இல்லையோ, ஆஸ்பத்திரியும் , க்ளினிக்கும் நிரம்புகிறது

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

The people might be thinking that there is no connection/relation in between our street pond and our house bore wells. Of course, there is direct connection in between both of them. Street pond is the main source to supply water through ground. Nowadays, plastic things are making big constrains in the ground to supply water to our house bore wells from other sources. That's is our ground water level is going down day by day. In the future without water from open sources such as ponds, lakes & rivers how can a middle class family to put a submersible bore well in one lakh expenditure in their house?

As a muslim, we should start afraid from today onwards for tomorrow as well as our life after death. May Almighty Allah bestow all of us the life with contentment in all here and in the hereafter. Aameen.

Ahamed irshad said...

அருமை... குளிர்ச்சி... தேங்க்ஸ் அநி டீம்...

Meerashah Rafia said...

போடோஷாப்பின் skew and overlay effect பற்றி வெறித்தனமாக பயின்றுவருவதாக புகைப்படத்தில் நன்கு தெரிகின்றதே!! :)

adiraimansoor said...

///விடிகாலையில் விழிப்பதற்குள்
சாளரங்களின் கதவிடுக்குகளில்
கதிரவன் கசிய
வெளியே
காற்று கருவுற்றிருக்கும்

சாரலோ தூறலோ
மண்ணில்
ஈரமிருக்கும்///

எனக்கு ஊரில் பேயும் மழையைபற்றி கொஞ்சம் கவலை நீங்கினாலும்
கவியரசு தன் கீ போர்டினால் வார்த்தை மழையை பொழியவைத்து அதில் நான் நனைந்து ஊரில் பேயும் மழையில் நனைந்ததைப்போல் உள்ள அனுபவம் பெற்றேன்

adiraimansoor said...

நான் ஊரிலிருந்து வந்து 10 தினங்களே ஆனாலும் நான் ஊரில் இருக்கும்போதே குளிர்காலம் ஆரம்பமாகி இருந்ததை பார்த்த நான் மழைகாலம் இந்த வருடம் தவறிவிட்டதாகவே கருதி சவூதிக்கு புறப்படும் ஒரு நாள் முன்பாக நமதூர் முற்றிலும் நீரில்லாத குளங்களை சிறைபிடித்து வந்தேன் அதிரை நிருபர் வாசகர்களுக்கு தகவல் தருவதற்க்காக

அதில் கடற்கறை தெருவில் இருக்கும் குளத்தில் மட்டும் நிரம்ப தண்ணீர் இருந்ததை பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது எப்பொழுதும் இறுதிவரை தண்ணீர் இருக்கும் செடியன்குளமும், மன்னப்பங்குளமும் அம்மனமாகத்தான் காட்சியளித்தது மாஷா அல்லாஹ் வெட்டி குளத்திற்குமட்டும் எங்கிருந்து உடை அனுவித்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை புதி உடையாகவே இருந்தது ( புதிய தண்ணீர் ) நிறைய பேர் அதில் நீராடினார்கள்.

adiraimansoor said...

//போடோஷாப்பின் skew and overlay effect பற்றி வெறித்தனமாக பயின்றுவருவதாக புகைப்படத்தில் நன்கு தெரிகின்றதே!! :)//

மீராசா

இதில் உள்ள எந்த இமேஜிம் போட்டோ ஷாப்புக்குள் புகுந்து வந்த இமேஜாக எனக்கு தெரியவில்லை

இயற்கையை படம் பிடித்தவர்கள் ஒரு லேயருக்குள் (கண்ணாடிக்குள்) இருந்து கேமராவை இயக்கியதின் விளைவே

மற்ற சில போட்டோக்கள் மலையில் மழையை படம் பிடிக்கும்போது மேகக் கூட்டங்கள் இருப்பது அது உங்கள் கண்களுக்கு தனி லேயராக காட்சியளிப்பது ஒரு அதிசயமே!!!!!!!

adiraimansoor said...

எப்பொழுதும் தமிழிலில் பின்னூட்டமிடும் மு.செ.மு. நெய்னா முஹம்மதுக்கு ஒரு தகவல் உங்கள் ஸ்மார்ட் போன்மூலியமாக நீங்கள் பின்னுட்டம் இடுகின்றீகள் என்பதை நீங்கள் பாவிக்கும் ஆங்கில மொழியை வைத்து அறிகின்றேன்

ஸ்மார்ட் போனிலும் தமிழை பயன் படுத்தலாம்
அதற்கு செல்லினம் (Sellinam) என்ற தமில் கீ போர்டு சாப்ட்வேரை உங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து நிறுவவும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கருத்திட்ட, கவிதையால் உயிரூட்டிய, விமர்சனங்களால் வீரியம் கூட்டிய அனைவருக்கும் நன்றிகள் !

மழையில் சிக்கியபோது
மழலையோடு இருந்தபோது
மலைச் சறுக்கில்
மயக்கும் பொழுதுகளை

ரசித்த நேரங்களில் எடுத்தவைகள் !

அ.நி.இலட்சினை மட்டுமே ஓவர் லேயர்... மற்றவகைள் இயல்பே !

இவைகளை கிளிக்கும் போது கேமரா, அதன் பின்னால் இபு, அவன் பின்னால் அபு ! (இதுதாங்க மேட்டரு)..

இந்த பொழுதுகளின் மறுபக்கம் மற்றுமொரு பதிவில் இன்ஷா அல்லாஹ் !

அழகை ரசியுங்கள்
அழகாய் நேசியுங்கள்
ஆழமாக சுவாசியுங்கள்
அர்த்தமுடன் வாழுங்கள் !

-யாரோ சொல்லவில்லை (நானே தான் சொல்கிறேன்)

:)

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Abu Ibrahim,

Thanks for publishing nice pictures of rainy season in our mother land. So cool.

I expected from AN the rare rainy moments in the emirates recently cooled us here in Dubai. The news mentioned that so much rain after 13 years!!!. You could comparatively publish that rare rainy moments also.

Today the morning flourished with foggy and lovely weather here in Dubai. Alhamdulillah.

May Allah shower His blessings on us here with rainy shower as much needed as possible throughout the year.

Thanks and best regards
B. Ahamed Ameen from Dubai.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Alaikkumussalaam warah.. Br.A.A.:

//Ahamed Ameen சொன்னது…

I expected from AN the rare rainy moments in the emirates recently cooled us here in Dubai. //

YES ! there is... :)

Insha Allah... shortly !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு