Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நீரடிச்சு நீ(ர்)தம் விலகாதீர் ! 93

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2013 | , , , , , ,

அதிரை குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு தன்னார்வலர்கள் மேற்கொண்ட முயற்சி, அதனால் சிலரிடம் எழுந்த காழ்ப்புணர்வுள், இணைய கருத்துப் பரிமாற்றங்களால் எழுந்த நீயா-நானா மனப்பான்மை, இவற்றையெல்லாம் மீறிய அரசியல் குறுக்கீடுகளால் தற்போது தடைபட்டுள்ள நீர் வரத்து குறித்து இணைய தளங்களில் வெளியான பதிவுகள், புகைப்படங்கள், காணொளிகள் இவற்றையெல்லாம் கண்டபிறகு நானறிந்த சில விளக்கங்கள் மூலம் 

சிலரின் தவறான புரிதலை நீக்கும் என்று நம்புகிறேன்.

1) காவிரி கடைமடை பகுதியான அதிரைக்குத் தேவையான நீர்வரத்து கிழக்கில் நசுவினி ஆற்றிலிருந்தும், மேற்கில் ராஜாமடம் அருகே கடலில் கலக்கும் ஆற்றிலிருந்தும், பள்ளிகொண்டான் அருகேயுள்ள செல்லிகுறிச்சி ஏரியிலிருந்தும் கிடைக்கிறது என்பதை அதிரையர்கள் அறிவோம். அவ்வகையில் ராஜாமடம் வழியாகக் கடலில் கலக்கும் ஆற்றுநீரை ஊருக்குள் திருப்பிவிடும் முயற்சியை தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் பேரூராட்சி சேர்மனும் முன்னின்று செய்தார். 

2) ராஜாமடம் ஆற்றிலிருந்து வரும் நீரை ஊருக்குள் கொண்டு வரும் வழித்தடமாக சி.எம்.பி வாய்க்கால் இருந்து வந்தாலும், குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் இந்த வாய்க்கால் அடைபட்டிருந்ததையும் அறிவோம். இந்த வாய்க்காலை சீர்செய்வதன்மூலம் அதன்வழியாக ஆலடிக்குளம், செக்கடிகுளம், காட்டுக் குளம், மரைக்காயர் குளம், நடுத்தெரு கீழ்புறமுள்ள செட்டியாகுளம், ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளி குளம் ஆகியவற்றை நிரப்ப முடியும்.

3) சி.எம்.பி வாய்க்காலில் வரும் தண்ணீர் வரத்து பட்டுக்கோட்டை சாலை வழியாக வெள்ளக் குளம்,கரிசல் மணி வழியாக சி.எம்.பி வாய்க்கால் மூலம் செக்கடி, ஆலடி, மரைக்காயர் ஆகிய குளங்களுக்குச் செல்கிறது.

4) நமதூரின் இயற்கை நீர்வரத்து வழிகளை வைத்துப் பார்க்கும்போது செக்கடி குளம் நிரம்பினால் ஆலடிக்குளம், செட்டியாகுளம்,புதுப்பள்ளி குளம் ஆகியவற்றிற்குள்ள வாய்க்கால் மூலம் அடுத்தடுத்து நான்கு குளங்கள் நிரம்பும். 

5) ஆலடி குளம் நிரம்பினால் அதிலிருந்து வெளியேறும் நீர் மண்ணப்பன் குளத்திற்கும் யானையன் குளத்திற்கும் செல்லும்.யானையன் குளம் நிரம்பி மெயின்ரோடு வழியாக செல்லியன் குளம், நாரக்குட்டை ஆகியவை நிரம்பும். ஆஸ்பத்திரி தெருவிலிருந்த இன்னொரு வழித்தடம் மூலம் புதுப்பள்ளி குளத்திற்கு இருவழிகளில் நிரம்பும் வசதி இருந்தது.

6) மேற்கிலிருந்து ஆறு வழியாகவும், செல்லிக் குறிச்சி ஏரி வழியாகவும் நீரவரத்து இருக்கும் போது இவ்வாறு செயல்பட்டால் தான் மேற்கண்ட குளங்கள் நிரம்பும் என்பதை அறியாமல், செக்கடிக் குளத்திற்கு மட்டும் ஏன் நீரை அனுப்ப வேண்டும்? மற்ற குளங்கள் புறக்கணிக்கப்பட்டன என்று புலம்புவதில் நியாயம் இல்லை.

7) ஒரு குளத்தில் போதுமான நீர் இருப்பு இருந்தால் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பது இயற்கை. அவ்வகையில் ஊரின் நடுவில் நீர் நிரம்ப தயார் நிலையில் இருக்கும் செக்கடி குளம் நிரம்புவதன்மூலம் புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன்,செக்கடித்தெரு,நடுத்தெரு,ஆலடித்தெரு,செட்டித்தோப்பு ஆகிய பகுதிகள் பலன்பெறும்.

8) மூலிகைக் குளியலுக்குப் பேர்பெற்ற நமதூரின் செடியன் குளத்திற்கு நீர்வரத்து, ராஜாமடம் ஏரியிலிருந்து ரயில்வே பாதையையொட்டிய ஓடைகள் மூலமே சாத்தியம் என்பது தெரிந்தும், வந்துகொண்டிருந்த ஆற்றுநீர் திட்டமிட்ட குளங்களுக்குள் வந்தடைவதற்குள்ளாக செடியன் குளத்திற்கும் நீர்வேண்டி தனியாக கலெக்டரிடம் மணு கொடுத்தது எவ்வகையில் சரியானது என்று தெரியவில்லை. 

9) சில வருடங்களுக்கு முன் ஊர் குளங்களெல்லாம் வறண்டு கிடந்தபோது செடியன் குளம் தூர் வாரப்பட்டு அதிக நீர் நிரம்பியதனால் ஏற்பட்ட உடைப்பில் பிலால் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் அறிவோம். செடியன் குளம் தூர்வாரப்பட்டபோது செக்கடி குளம் கண்டு கொள்ளப்படவில்லை என்று யாரும் கேட்கவில்லை அல்லது இப்பகுதியில் இருந்தவர்கள் அதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை.

10) மேற்ச் சொன்ன இயற்கையான காரணங்களால் செக்கடி குளமும் ஆலடிக்குளமும் நிரப்புவதற்கு முயற்சிகள் நடக்கும்போது, குறிப்பிட்ட குளங்களுக்கு மட்டும் சாதகமாக நீர்வரத்து திருப்பி விடப்படுகிறது என்று குற்றம் சொல்வது நியாயமா?

11) சமீபத்தில் குடிநீர் பஞ்சத்தால் அதிரையின் பாரம்பரிய தெருக்களில் ஒன்றான கடற்கரைத் தெருவுக்கு ரூ.15 லட்சம் செலவில் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்தபோது, புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன் சுற்று வட்டாரமும் குடிநீர் பஞ்சத்தில் வாடிய போதும்,சேர்மன் கடற்கரைத் தெருவுக்குச் சாதகாமகச் செயல்படுகிறார் என்று இப்பகுதி மஹல்லாவாசிகள் சொல்லவில்லை. அதுபோல் செய்னாங்குளம் தூர் வாரப்பட்டபோதும் சொல்லவில்லை.

12) நீண்டகால பயன்பாடுகளின் அடிப்படையிலான ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைப்புக்காக அதிரை பேரூராட்சி சேர்மனின் தனியார்வமும், அதனால் சந்தித்த இடையூறுகளும் அறிவோம். ஊர் நலனில் அக்கரை இருந்திருந்தால்,இவ்விசயத்திலும் சேர்மனுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ ஒத்துழைத்திருக்கலாமே! 

13) யாருமே கண்டு கொள்ளாத நிலையில் தன்னார்வலர்களின் முயற்சியால் அதிரை சேர்மன் இவ்விசயத்தில் களம் இறங்கிய பிறகு, இன்னொரு வழியில் ஆற்றுநீரைக் கொண்டு வரப்போகிறோம் என்பதிலிருக்கும் அரசியல் வெளிப்படையாகத் தெரிந்தது. எனினும், எப்படியாவது நமதூர் குளங்கள் நிரம்பட்டும், நீர்நிலைகளும்  நீர்மட்டமும் உயரட்டும் என்பதாகத்தானே பலரது எதிர்பார்ப்பும் இருந்தது. 

14) சுயவெறுப்புகளின் அடிப்படையிலும் போட்டிமனப்பான்மையிலும் அரசியல் ஆளுமைகளைத் தூண்டிவிட்டு தண்ணீர் வரத்தைத் தடுத்தவர்களின் முந்தைய செயல்பாடுகளும், இவர்களின் ஒத்துழைப்பின்மை, இடையூறு குறித்து சேர்மன் வைத்த குற்றச்சாட்டு நிரூபனமாகியுள்ளதை நடுநிலையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15) 2014 ஜனவரி 28 ஆம் தேதி வரை காவிரியில் நீர்வரத்து விவசாயத்திற்காகத் திறந்து விடப்பட்டும் என்று அரசு குறிப்பு தெரிவிக்கிறது.எஞ்சியுள்ள நாட்களுக்குள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி காழ்ப்புனர்வுகளைக் கைவிட்டு ஒற்றுமையாகச் செயல்பட்டால் எதிர்வரும்கோடையில் தண்ணீர் பஞ்சத்தை ஓரளவு சமாளிக்கலாம். இன்ஷா அல்லாஹ். 

இந்த அக்கரையிலும் ஆற்றாமையிலும்தான் இந்த விளக்கங்கள். யாரையும் உயர்த்த அல்லது தாழ்த்துவதல்ல என் நோக்கம்.

வஸ்ஸலாம்,

அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்

93 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

99% ~ 100 சரியான வாதம் அதிரைக்காரன்!

sabeer.abushahruk said...

A B C D க்குப்பிறகுதான் E F G H வரும் என்று எதார்த்தமான வரிசையைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். மேலும், தரப்பட்டுள்ள infrastructure படி தண்ணீர் நிரப்பபட வேண்டியக் குளங்களின் வரிசை நியாயமாகத்தான் படுகிறது.

இருப்பினும் இதில் ஏதும் விடுபட்ட செய்திகள மறைந்திருக்கிறதா என்பதை விவரமானவர்கள்தான் சொல்ல வேண்டும்.

அதிரைக்காரன்,

நாங்கள் கபுர் கட்டுறது கந்தூரி எடுக்கிறது சந்தணக்கூடு செய்றது என்று ரொம்ப பிஸியாக இருந்துட்டோம். ஆகவே, அப்டியே எங்க வெட்டிக்குளத்துக்கும் கிண்ணிக்குளத்துக்கும் தண்ணிர் வர திட்டம் இருந்தால் சொல்லுங்களேன். உங்களுக்கு கந்தூரா சின்னத்தில ஓட்டு போட்டு துபாய்லேயே பதவி வாங்கித்தர்ரோம் :-)

sabeer.abushahruk said...

//சமீபத்தில் குடிநீர் பஞ்சத்தால் அதிரையின் பாரம்பரிய தெருக்களில் ஒன்றான கடற்கரைத் தெருவுக்கு ரூ.15 லட்சம் செலவில் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்தபோது, புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன் சுற்று வட்டாரமும் குடிநீர் பஞ்சத்தில் வாடியபோதும்,சேர்மன் கடற்கரைத் தெருவுக்குச் சாதகாமகச் செயல்படுகிறார் என்று இப்பகுதி மஹல்லாவாசிகள் சொல்லவில்லை. //

கேள்வி நியாயமாத்தான் இருக்கு.... ஆனாலும் எனக்கு எரிச்சலாகவும் இப்படி ஒப்பீடு செய்வதால் உஙகள் மேல் கோபமாகவும் வருகிறதே ஏன்?

Shameed said...

9) //சிலவருடங்களுக்குமுன் ஊர்குளங்களெல்லாம் வறண்டு கிடந்தபோது செடியன் குளம் தூர்வாரப்பட்டு அதிக நீர் நிரம்பியதனால் ஏற்பட்ட உடைப்பில் பிலால் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதும் அறிவோம். செடியன் குளம் தூர்வாரப்பட்டபோது செக்கடி குளம் கண்டுகொள்ளப்படவில்லை என்று யாரும் கேட்கவில்லை அல்லது இப்பகுதியில் இருந்தவர்கள் அதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை.//

இந்த குளம் தூர் வாரியது ஊர் தன்னார்வலர்கள் அல்ல அந்த தெரு முகல்லா வாசிகளின் முயற்சியோ தவிர இவர்கள் ஊருக்கே பொதுவான பைத்துல்மாலில் ஊர் முக்கியஸ்தர்களை வைத்து கூட்டம் போட்டு தூர் வாரவில்லை அப்படி இருக்கும்போதும் எங்கள் குளம் தூர்வாரவில்லையோ என்று யாரும் சொன்னால் அது அர்த்தமற்ற சொல்லாகும்

Unknown said...

Assalamu Alaikkum

Wish you all a happy new year 2014!!!!

Dear brother Jamaludeen,

Thanks a lot for your observations and clarifications regarding choas happened in filling up our town ponds.

Actually genuine social service is rewarded by God Almighty. Great minds see big picture and realize the truth which leads to patience and peace. Small minds see partial picture, hence limited in thinking capacity.

My obsevation is there that divisions and groups are competing each other working as per their own motives and agenda to show only. Not for the love of brothers and sisters of our town, and not for obtaining the satisfaction of Allah.

May Allah save us from evils and give us peace and prosperity.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai.

adiraimansoor said...

அதிரைக்காரனுக்கு பாராட்டுக்கள்

அருமையான விளக்கம் இந்த விளக்கம் கிடைத்தபின்பும் அவர்கள் சிந்திக்கவில்லையென்றால்
அவர்கள் எந்த தண்ணீரை நிருத்த முயற்சித்தார்களோ அந்த தண்ணீரைக் கொண்டு அவர்களின் அழிவை எதிர்பார்க்கின்றார்களா?
இது சாபமல்ல இப்படிபட்ட அடாவடிகளின் உயிர் கடந்த காலங்களில் எப்படி வாங்கப்பட்டது என்ற வரலாறுகளை மறந்திட முடியுமா?
இறைவன் மிகப்பெரியவன் என்பதை மறந்து இந்த அற்பமான அரசியைல் சாக்கடைக்குள் விழுந்து
தானும்கெட்டு மற்றவர்களையும் கெடவைப்பவர்கள்
நிம்மதியாக வாழ்ந்துவிடுவோம் என்று கனவு காண்கின்றார்களா?
வாய்மையே வெல்லும் என்ற வாசகமாவது இவர்களுக்கு நினைவில்லையே

அபு முஹம்மத் said...

Bro. Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Wish you all a happy new year 2014!!!!

வ அலைகுமுஸ்ஸலாம்,

விவாதத்திற்கல்ல, புரிந்துகொள்ளுவதற்க்காக...
கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்..

http://adiraixpress.blogspot.ae/2013/12/blog-post_9887.html#.UsMS4bSOen5



Aboobakkar, Can. said...

சமீபத்தில் குடிநீர் பஞ்சத்தால் அதிரையின் பாரம்பரிய தெருக்களில் ஒன்றான கடற்கரைத் தெருவுக்கு ரூ.15 லட்சம் செலவில் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்தபோது, புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன் சுற்று வட்டாரமும் குடிநீர் பஞ்சத்தில் வாடிய போதும்,சேர்மன் கடற்கரைத் தெருவுக்குச் சாதகாமகச் செயல்படுகிறார் என்று இப்பகுதி மஹல்லாவாசிகள் சொல்லவில்லை. அதுபோல் செய்னாங்குளம் தூர் வாரப்பட்டபோதும் சொல்லவில்லை.

sheikdawoodmohamedfarook said...

அல்லாஹ் படைத்த அணைத்து ஜீவன்களுக்கும் அவனின் அருட்கொடைகளில் தண்ணீரும் ஒன்று! அதில் மனிதன் பூகோள அரசியல் சாக்கடைகளை கலந்து கொஞ்சம் தன்' கை ' வரிசையை கா ட்டிப்பார் க்கிறான் .அல்லாஹ் தன் கைவரிசை காட்டினால்??????

அதிரைக்காரன் said...

செடியன் குளம் சமீபத்தில் தூர்வாரப்பட்டது பெரிய ஜும்ஆ பள்ளி கமிட்டி நிர்வாகம் சார்பில் என்பது தெரியும்.

நான் குறிப்பிடுவது அதற்கு முன்பு (3-4 வருடங்களுக்கு முன்பு) தூர் வாரப்பட்டது பேரூராட்சி அல்லது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியுதவியுடன் தூர்வாரப்பட்டதாக அதிரை தளம் ஒன்றில் செய்தி வந்திருந்தது (சுட்டி கிடைத்தால் அறியத்தருகிறேன் அல்லது அற்ந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்).

sheikdawoodmohamedfarook said...

மீன்களைப்போல் கடல் நீரையே குடித்து ஜீவிக்க அல்லாஹ் நம்மைபடைத்திருந்தால் ஆலடிகுளமும் செக்கடிகுளமும் உப்பளத்தில் இருந்து இ ருக்கும். கடல்கரை தெருவாசிகள் கரிச்சம ரியில் இருந்து மண்குடத்தை தலையில் சுமந்து நடையா நடை நடந்து ஒரு குடம் நல்ல தண்ணி கொண்டுவருவார்கள் .கடல் ஏன் உப்பானதோ ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கேள்விகள் !

தண்ணீருக்கு தெருப் பெயர் உண்டா ?

ஏற்கனவே அதிரைநிருபரில் பதிந்த எடிட்டோரியல் பதிப்பில் கேட்கப்படவைகளின் நியாயத்தையும், இந்தப் பதிவில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் அதிரைக் குளங்களுக்குரிய நீர் வரத்துக்கான கட்டமைப்புகளையும் கேடுகெட்ட போட்டி அரசியல் (நலனைக் கொடுக்க) செய்யும் அவர்களால் மறுக்க முடியுமா ?

கருத்தாடல்களுக்காக நாம் இன்னும் எவ்வளவோ விவாதிக்கலாம், மாறாக ! கடந்த கால பேரூராட்சி மன்ற பொறுப்பில் இருந்தவர்கள் இவ்வகையான முயற்சிகளில் இறங்கினார்கள், என்ற சுவடுகள் ஞாபகத்தில் இல்லை ! அப்படியிருப்பின் பட்டியலிடலாம் !

இன்றைய பேரூராட்சி மன்றத் தலைவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாரா ? என்று கேட்டால்..! "ஒத்துழைப்பு கேட்டு வேண்டினாரா?" என்ற தொடுப்பு கேள்வியும் எழுப்பப்படுகிறதே...!

குடமே தூக்காவதன், அட ! அவன் மட்டும் தூக்கிகிட்டு போறான், நாமும் தூக்குவோம்னு குடம் தூக்கும் கூட்டம் நம்மி்ல் மலிந்து கிடக்கிறது ! அதில் ஊர் நலணெல்லாம் ஊறுகாய்தான்.

ஊறுகாய் தொட்டுக்காதீங்கன்னு இப்போ எந்த டாக்டர்கிட்டே போனாலும் அதைத்தான் சொல்கிறார்கள் !

அதிரைக்காரன் said...

//கேள்வி நியாயமாத்தான் இருக்கு.... ஆனாலும் எனக்கு எரிச்சலாகவும் இப்படி ஒப்பீடு செய்வதால் உஙகள் மேல் கோபமாகவும் வருகிறதே ஏன்?//

ஒரே விசயத்தை மீண்டும் மீண்டும் சொன்னதால் வந்திருக்கும். உங்கள் ஃபேஸ்புக் பதிவொன்றின் கமெண்டில் 'சேர்மன் நடுத்தெருவுக்கு மட்டும்தானா?' என்ற கேள்விக்கு பதிலைச் சுட்டிய பிறகும் "நீர் நிறைந்த குழப்பகுதியை சார்ந்தவர்கள் முன்னெடுத்த பணி என்பதால் முதலில் அவர்கள் பகுதிக்கு நீர் கொண்டு சென்றது சஹன் பரத்த கூடியவர்கள் முதலில் சாப்பிட்டு முடித்துவிட்டு பிறகு விருந்தாளிகளை கவனித்ததுபோல் போல் ஆகிவிட்டது" என்று கருத்திட்டதால் எரிச்சலாகவும், இவன் (நான்) ஏன் இதையெல்லாம் நுனுக்கமாகக் கவனிக்கிறான் என்று என்மீது கோபமாகவும் வந்திருக்கும்.

கோபத்தை தனிக்க துபாயிலோ அல்லது சார்ஜாவிலோ குளுகுளு குளிரில் சுடச்சுட சுட்டகோழி பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தால் சரியாகி விடும் ;)

அதிரைக்காரன் said...

Ameen,

A pessimist sees empty glass while an optimist sees half filled glass. It is good to be competive to serve first and the best, but our immature so called local politicians neither serve best nor leaving other to serve.

எப்பாடு பட்டாவது, யாரை அணுகவேண்டுமோ அவர்க்ளை அணுகி நமதூருக்கு தண்ணீர் கொண்டுவருவதற்கு என்னால் சாத்தியமுள்ள வழிகளில் முயல்வேன் என்று சொல்பவரும், நாங்கள் நினைத்தால் ஒரு பக்கெட் மண்ணைக்கூட இங்கு அள்ளமுடியாது என்று சொல்பவரும் நமதூரில்தான் உள்ளனர்.

அதிரைக்காரன் said...

அதிரையின் பூர்வகுடி கடற்கரைத்தெரு. எஞ்சியவை அங்கிருந்து புலம்பெயர்ந்த தாயபுள்ளைகள்தான் என்று என் மூதாதையர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். செக்கடியும், ஆலடியும் இன்னார்தான் பயன்படுத்த வேண்டும் என்று யாரும் வேலி போட்டு தடுக்கப்படவில்லை. இதனைச் சுற்றியுள்ள ஜீவன்களில் பலர் கடற்கரைத் தெருவிலிருந்து குடிகாடு என்று அழைக்கப்பட்ட புதுமனைத்தெருவுக்கு வந்த பிச்சளங்கள்தான். நமக்குத்தான் அல்லாஹ் உப்புத்தன்மையுள்ள நீரை நாடிவிட்டான்.நமது சந்ததிகளாவது நல்ல தண்ணீரைப் புசிக்கட்டும் என்ற மனப்பான்மை வளரட்டும். அதுபோல் நாம் வாழ பூர்வகுடிகள் தவிக்கலாமா? என்ற மனப்பான்மையும் மலரட்டும். நீரடித்து நீர் விலகாது என்ற மூத்தோர்சொல் நம்மை பிணைக்கட்டும்.

அதிரைக்காரன் said...

/ஊறுகாய் தொட்டுக்காதீங்கன்னு இப்போ எந்த டாக்டர்கிட்டே போனாலும் அதைத்தான் சொல்கிறார்கள்/

'சாப்பாடு எடுக்காவிட்டால் டாக்டர்கிட்ட போகாதீங்க; ஊறுகாயைத் தொட்டுக்குங்க' என்று சொல்லும் ஊறுகாய் வியாபாரிகளும் இருக்கிறார்கள். ஆமா! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஊர் காயப் போடுவதைச் சொல்ல வந்தா...

ஒரக்கிற ஊறு காயப் போட வியாபாரிகளுக்குமா கொண்டாட்டம் !?

sheikdawoodmohamedfarook said...

//ஊறு காய் தொட்டுகாதின்கனு// இப்பத்தான் மசக்கைகாரி கூட ஊறுகாய் தொட்டுக்கிடுறதில்லையே! '''Fried chicken தா'' என்று வம்பு பண்றாளே ! இது தெரியாமேடாக்டர் யான் சும்மா கெடந்து கத்திகிட்டு கெடக்குறார்?

Aboobakkar, Can. said...

முன்பெல்லாம் விருந்தில் ஐந்து கரி சகன் சோறுக்கு கடல்கரை தெருவாசிகள் சிலர் 'லா லா' ஊறுகாய் வாங்கி வருவார்களாமே? விபரம் தெரிந்தால் சகோதரர்கள் விளக்கவும் ???????

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

Aboobakkar, Can. சொன்னது…
//முன்பெல்லாம் விருந்தில் ஐந்து கரி சகன் சோறுக்கு கடல்கரை தெருவாசிகள் சிலர் 'லா லா' ஊறுகாய் வாங்கி வருவார்களாமே? விபரம் தெரிந்தால் சகோதரர்கள் விளக்கவும் ???????//



ஒரு சாதாரண ஊறுகாய் விசயமே உங்களுக்கு வெளங்கவில்லை என்றால் மத்ததைஎல்லாம் உங்களை போன்றவர்களுக்கு வேலங்கா வைக்கவே முடியாது

Shameed said...

//சமீபத்தில் குடிநீர் பஞ்சத்தால் அதிரையின் பாரம்பரிய தெருக்களில் ஒன்றான கடற்கரைத் தெருவுக்கு ரூ.15 லட்சம் செலவில் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்தபோது, புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன் சுற்று வட்டாரமும் குடிநீர் பஞ்சத்தில் வாடியபோதும்,சேர்மன் கடற்கரைத் தெருவுக்குச் சாதகாமகச் செயல்படுகிறார் என்று இப்பகுதி மஹல்லாவாசிகள் சொல்லவில்லை. //

புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன் சுற்று வட்டாரபகுதி முழுவதும் வீட்டுக்கு வீடு ஆழ்துளை கிணறுகள் உண்டு. ஆனால் கடல் கரைத்தெருவில் எங்குமே ஆழ்துளை கிணறு கிடையாது அதற்க்கு காரணம் அங்கு எங்கு போர் போட்டாலும் உப்பு தண்ணீர்தான் வரும் அப்படிப்பட்ட பகுதிக்கு பைப் போட்டதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அது நியாமே !!

sabeer.abushahruk said...

Jamaludeen,

//A pessimist sees empty glass while an optimist sees half filled glass.//

It doesn't mean what you meant to say through the above statement if it won't written be as below:

"A pessimist sees half glass is empty while an optimist sees half filled glass.//

It is described in such a way as to explain and insist to find positive things in everything.

sabeer.abushahruk said...

//ஒரு சாதாரண ஊறுகாய் விசயமே உங்களுக்கு வெளங்கவில்லை என்றால் மத்ததைஎல்லாம் உங்களை போன்றவர்களுக்கு வெளங்க வைக்கவே முடியாது //

அதானே! ஹமீது, எனக்குத் தெரிந்த விளக்கத்தச் சொல்றேன் சரியான்னு கேட்டுச் சொல்லுங்க?

" ஹிஹி...வாயால சாப்டத்தான். வேற எங்கேயும் வச்சா...ஸ்ஸ்ஸ் எரியாது?"

sabeer.abushahruk said...

//கோபத்தை தனிக்க துபாயிலோ அல்லது சார்ஜாவிலோ குளுகுளு குளிரில் சுடச்சுட சுட்டகோழி பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தால் சரியாகி விடும் ;)//

அதவிட, எதார்த்தமா உங்க (கபீர்ட?) ஃப்ளாட்குள்ள நுழஞ்சப்ப, கிச்சன்ல நின்ற நீங்கள் சுட்டெடுத்துக் கட்டாயப்படுத்தி உண்ணச் சொன்ன மைதாமாவு தோசையில் கலந்து தந்த அன்பு என்னைக் குளிர்விக்கும்.

sabeer.abushahruk said...

//புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன் சுற்று வட்டாரபகுதி முழுவதும் வீட்டுக்கு வீடு ஆழ்துளை கிணறுகள் உண்டு. ஆனால் கடல் கரைத்தெருவில் எங்குமே ஆழ்துளை கிணறு கிடையாது அதற்க்கு காரணம் அங்கு எங்கு போர் போட்டாலும் உப்பு தண்ணீர்தான் வரும் அப்படிப்பட்ட பகுதிக்கு பைப் போட்டதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அது நியாமே !!//

அருமையான கவுண்ட்டர். நானும் இதை முழுக்க முழுக்க வழிமொழிகிறேன்.

ஜமாலுதீன், வழக்கை ஆண்டவனின் கோர்ட்டுக்கு மாற்றினாலும் உங்க இந்தக் குறிப்பிட்ட சால்ச்சாய்ப்பு எடுபடாது.

Aboobakkar, Can. said...

/புதுமனைத்தெரு,சி.எம்.பி லேன் சுற்று வட்டாரபகுதி முழுவதும் வீட்டுக்கு வீடு ஆழ்துளை கிணறுகள் உண்டு. ஆனால் கடல் கரைத்தெருவில் எங்குமே ஆழ்துளை கிணறு கிடையாது அதற்க்கு காரணம் அங்கு எங்கு போர் போட்டாலும் உப்பு தண்ணீர்தான் வரும் அப்படிப்பட்ட பகுதிக்கு பைப் போட்டதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அது நியாமே !!//

அருமையான கவுண்ட்டர். நானும் இதை முழுக்க முழுக்க வழிமொழிகிறேன்.

சகோ ....சபீர் மற்றும் ஸாமித் ஆகியோருக்கு சதாம் நகரிலும் பாத்திமா நகரிலும் மனைகள் நிறைய உள்ளன 100 அடியில் நல்லதண்ணி கிடைக்கும் . you are most welcome .......

Shameed said...

காட்டுக்குளம் வழியாக C .M .P .லைனில் வந்த தண்ணீரை C .M .P வாய்க்காலில் இருந்து 100 மீட்டார் தூரத்தில் இருக்கும் காட்டுக்குளத்தை நிறைத்து இருந்தால் ஊரின் பெரும் பகுதிக்கு நீர் வழங்க கூடிய ஆழ்துளை கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்து வரும் கோடை காலத்தில் ஒட்டு மொத்த ஊருக்கும் பயன் அடைந்து இருக்கும்

அதை விடுத்து செக்கடி குளத்துக்கு நீரை கொண்டு சென்று நிறைத்ததால் ஊரின் ஒரு சிறு கூட்டத்தாருக்கே இதில் பயன் ,இதில் சுயநலமே தவிர பொதுநலன் இல்லை

Shameed said...

//சகோ ....சபீர் மற்றும் ஸாமித் ஆகியோருக்கு சதாம் நகரிலும் பாத்திமா நகரிலும் மனைகள் நிறைய உள்ளன 100 அடியில் நல்லதண்ணி கிடைக்கும் . you are most welcome .......//

ஊரின் நீர் பிரச்சனையோ நிலத்தடி நீர்மட்டம் 100 அடிக்கு கிழே போனதால்தான்.நீங்கள் புதுசா ஒன்னை அவுத்து உடுரியலே! 100 அடியில் தண்ணீர் இருப்பதாக!

sabeer.abushahruk said...

//சகோ ....சபீர் மற்றும் ஸாமித் ஆகியோருக்கு சதாம் நகரிலும் பாத்திமா நகரிலும் மனைகள் நிறைய உள்ளன 100 அடியில் நல்லதண்ணி கிடைக்கும் . you are most welcome ....... //

ஹை...நல்லா நகைச்சுவையாப் பேசுறீங்களே!!!

welcome ன்றீங்களே... நீங்க அந்தத் தெருவில் எந்தத் தெரு?

அங்கேயில்லேன்னா...
'ண்ணா,
welGo அப்டீன்ல சொல்லனும்?

Aboobakkar, Can. said...
This comment has been removed by the author.
Shameed said...

//ஹை...நல்லா நகைச்சுவையாப் பேசுறீங்களே!!!

welcome ன்றீங்களே... நீங்க அந்தத் தெருவில் எந்தத் தெரு?

அங்கேயில்லேன்னா...
'ண்ணா,
welGo அப்டீன்ல சொல்லனும்?//

ஊரில் எங்கே போனாலும் well லில் 100 அடியில் தண்ணீர் இருக்காது

Shameed said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

//Developing Area வுலே இன்னும் துளை போடலே அதற்கு முன்னாடி நாம போய் போட்டுடுவோம். இருக்கிற இடத்துலே எல்லாம் வராது வாங்க நாமும் அதை தேடி போவோம்//

ஹமீது,

கூப்ட்றார்ல போங்க, போய் துளை போடுங்க. அத விட்டுட்டு அறிவுபூர்வமா பேசிக்கிட்டு நேரத்தை ஏன் விரயம் செய்கிறீர்கள்? நீங்க நிலத்தடி நீரைப் பற்றி பேசுறீங்க, அபுபக்கர் பாய் பொக்கு பொக்கு போடுன்னு ஏதோ சொல்றார். ஒரு அட்சரம் விளங்க வில்லை. எப்பவோ நல்லா பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் புரியுது, பாவம்.

அ.நி.: ஒண்ணு விளங்காத பாஷையை தூக்குங்க அல்லது விளக்கம் சொல்லுங்க.

i dont appreciate comedians in serious issues.

sabeer.abushahruk said...

அமீரகத்தில் புத்தாண்டு!

ஒரு நாள் கூத்துக்கு
கோடிகள் செலவழித்து
மீசை வைத்து
மழித்தது அமீரகம்
ஆசை வைத்து
மகிழ்ந்தனர் அரபிகள்

வானவில்லை
ஈன்றெடுக்க இயலாத
அமீரக ஆகாயம்
மாற்றாக
ஏராளமான
மத்தாப்புத் தோரணங்களைத்
தத்தெடுத்துக் கொண்டது

செயற்கை வின்மீன்களை
சிதறடித்து ஓய்ந்தது
வலைகுடா வானம்

பாலைவனக் குளிருக்கு
வானவேடிக்கை
பார்க்கும்போதே கதகதக்க
ஏழைமனம் ஏனோ
விரயக் கணக்குக்குத்
தன்
வட்டிக்கடனை
ஒப்பிட்டுப் பார்த்து ஏங்கியது

உலக சாதனைக்காக
உபரியாய்
மேலும் பல கோடிகள்
ஒதுக்கப்பட்டிருந்தது

அதிகமதிக
உணவளித்ததாய்
உடையளித்ததாய்
நோய் தீர்த்ததாய்
ஏழ்மை போக்கியதாய்
கின்னஸில் இடம்பெற
உலக நாடுகளே
போட்டி போடாதது
ஏன்?


-Sabeer Ahmed abuShahruk

Shameed said...

//அடுத்து வெட்டி குளத்துலே குளிக்கும் போது பொக்கு பொக்கு போடு சாமி கதைக்கு வரலாம்னு' நினைக்கிறேன். ???//

ஆகா அவிங்க உங்களை விட்டுவைக்கலையா !!

அதிரைக்காரன் said...

சேர்மன் நடுத்தெருவுக்கு மட்டும்தானா? என்றதற்கே கடற்கரைத்தெருவுக்கும் குடிநீர் ஏற்பாடு செய்திருக்கிறார் என்று சுட்டினேன். இதில் கவுண்டருக்கோ செட்டியாருக்கோ அவசியமில்லை.

கடற்கரைத்தெரு சுற்றுவட்டார நிலத்தடி நீர் உப்புத்தன்மையாக இருப்பதில் வியப்பில்லை. உலகெங்கும் கடற்கரை பகுதியில் இப்படித்தான் இருக்கும். ஆனால் 100 - 120 அடிகளில் கிடைத்துக் கொண்டிருந்த சுவைநீர் 225 அடிக்குத் தாழ்ந்ததோடு, அமிலத்தன்மையாகவும் மாறியதற்கு சுற்றியுள்ள குளங்களின் நீர் வறண்டதே காரணம்.

காட்டுக்குளம் சி.எம்.பி வாய்க்காலில் இருந்து 100 அடிக்குள் இருந்தாலும் அதைச் சுற்றி மக்கள் குடியிருப்புகள் குறைவே. மேலும், இன்னொரு பக்கம் வெறும் தென்னந்தோப்புகள்தான் உள்ளன. செக்கடி குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் வாட்டர் ஃபில்டர் இல்லாத வீடுகள் ஒன்றிரண்டு தேறுமா எனுமளவுக்கு குடிநீர் சுவை மாசடைந்துள்ளது.

நமதூரின் அனைத்து குளங்களும் நிரம்ப வேண்டும் என்பதே என் விருப்பம்.இதில் தெருபேதம் குறித்த கருத்துக்கள் அவசியமற்றது என்பது என் தாழ்மையான கருத்து.

pessimist / optimist உதாரணம் - நமது அரசியல்வாதிகளுக்குச் சொன்னேன். இதில் குழப்பமில்லை. மேலும், ஆங்கிலத்தில் அடியேன் கத்துக்குட்டிதான் காக்கா. :(

Shameed said...

//கூப்ட்றார்ல போங்க, போய் துளை போடுங்க. அத விட்டுட்டு அறிவுபூர்வமா பேசிக்கிட்டு நேரத்தை ஏன் விரயம் செய்கிறீர்கள்? நீங்க நிலத்தடி நீரைப் பற்றி பேசுறீங்க, அபுபக்கர் பாய் பொக்கு பொக்கு போடுன்னு ஏதோ சொல்றார். ஒரு அட்சரம் விளங்க வில்லை. எப்பவோ நல்லா பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் புரியுது, பாவம்.//

ரொம்பத்தான் பாதிக்கபட்டு இருக்கார் அதுலே எந்த மாற்றமும் இல்லை !!! பாவம் இதுக்கு ஏதாவது நிவாரணம் இருந்த சொல்லுங்கோ

sabeer.abushahruk said...

//pessimist / optimist உதாரணம் - நமது அரசியல்வாதிகளுக்குச் சொன்னேன். இதில் குழப்பமில்லை. மேலும், ஆங்கிலத்தில் அடியேன் கத்துக்குட்டிதான் காக்கா. :(//

ஜமாலுதீன், எழுத்தில் பிழையிருந்தால் அமைதியக இருப்பவனும் அடியேன்தான்; கருத்தில் பிழையிருப்பின் சுட்டிக்காட்டுபவனும் அடியேன்தான். ஜெனோவ்கோவில் வேலை செய்தாலும் குற்றம் குற்றமே!

பாதி குவளை தண்ணீரை முற்போக்காளன் "பாதி இருக்கிறது" என்று இருப்பை எடுத்துக்கொள்ள; பிற்போக்காளன் "பாதி இல்லையே" என்று இன்மையை எடுத்துக் கொள்கிறான் என்பதைச் சரியான இடத்தில்தான் சொல்ல விழைந்தீர்கள். ஆனால், அது அப்படி அர்த்தப்பட வில்லை என்பதைத்தான் சுட்டினேன்.

கவுன்ட்டர்/செட்டியார் உங்களுக்கே உரித்தான நக்கல; ரசித்தேன்.

Shameed said...

//காட்டுக்குளம் சி.எம்.பி வாய்க்காலில் இருந்து 100 அடிக்குள் இருந்தாலும் அதைச் சுற்றி மக்கள் குடியிருப்புகள் குறைவே. மேலும், இன்னொரு பக்கம் வெறும் தென்னந்தோப்புகள்தான் உள்ளன. செக்கடி குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் வாட்டர் ஃபில்டர் இல்லாத வீடுகள் ஒன்றிரண்டு தேறுமா எனுமளவுக்கு குடிநீர் சுவை மாசடைந்துள்ளது//

காட்டுக்குளத்தை சுற்றித்தான் ஊருக்கு நீர் அளித்துவரும் ஆழ்துளை கிணறுகள் அமைந்துள்ளன இதை கருத்தில் கொள்ளவும்


வாட்டர் இருப்பதால் பில்ட்டர் செய்து கொள்கின்றீர்கள் எங்கள் கவலை வாட்டர் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்பதே!!

Ebrahim Ansari said...

அமைதி! அமைதி! அமைதி!

நான் இதில் தலையிட வேண்டாம் வேறுயாராவது , இந்தப் பதிவின் ஒரு அடிப்படை விஷயத்தின் தவறான தகவலை எடுத்துரைப்பார்கள் என எதிர்பார்த்தேன். இதுவரை இல்லை என்பதால் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

செடியன் குளத்துக்கு ராஜாமடம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்படாது.

அதே சி எம் பி வாய்க்கால் அந்த வாய்க்காலின் எண் இருபது மூலம் பெத்தான் குளம் என்கிற குளத்துக்கு விடப்பட்டு அங்கிருந்து முனி கோயில் வழியாக மூலிகை க் குளமான செடியன் குள த்துக்கு முன்னுரிமை கொடுத்து முன்பெல்லாம் பாய்ச்சப் படும்.

கடல்கரைத்தெரு ருவில் உள்ள வெட்டிக் குளத்துக்குத்தான் ராஜாமடம் ஏரித் தண்ணீர், ரயில்வே கேட் அருகில் உள்ள பாலத்தின் வழியாக வந்து காலேஜ் எல்லாம் தாண்டி ஏரிப்புரகரை செல்லும் இப்போதைய எம் எஸ் எம் நகரை ஒட்டிய கால்வாயில் சென்று அந்த சாலை திரும்பும் இடத்தில் இருக்கும் ஒரு பாலம் மூலம் வாழக் குளம் என்கிற குளத்துக்குள் விடப்பட்டு பின் வெட்டிக் குளத்துக்குப் போகும். இந்தப் பதிவில் இதை சுட்டிக் காட்டி இருந்தால் பாராட்டலாம். ஆனால் செடியன் குளத்துக்கு நீர் விடாததுக்கு தந்திருக்கிற கட்டமைப்புத் தகவல் தவறு என்பது என் கருத்து.

மேலும் நான் குறிப்பிட்டு இருக்கிற ராஜாமடம் ஏரி நீரால் அது போகும் வழியில் வயல்வெளிகளின் உள்ளே காதர்சா மரைக்காயர் குளமும் நிரப்பபடும்.

வருவாய்த்துறை அதிகாரியிடம் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி கொடுக்கப் பட்ட மனுவில் பேரூராட்சித்தலைவர் அவர்களின் பெயரால் கொடுக்கப் பட்டதால்தான் ஊர் மக்கள் அனைவரும் சொந்தம் கொண்டாடினார்கள்.
அப்படி வருவாய்த்துறை அதிகாரியிடம் கொடுக்கப் பட்ட வறண்ட குளங்களின் புகைப் படங்கள் ஊர் முழுதும் வற்றிப் போய்க் கிடக்கும் மொத்தம் பதினேழு குளங்களின் புகைப் படங்களாகும். ஒன்று இரண்டு குளங்களின் புகைப் படங்கள் மட்டுமல்ல.

செக்கடிக் குளத்துக்கும் ஆளடிக் குலத்துக்கும் நீர் வந்தது பற்றி யாரும் பொறாமையாக தயவு செய்து கருத்துத் தெரிவிக்க வேண்டாம். ஏதோ அவைகளுக்காவது வந்ததே என்ற நல்லெண்ணம் கொள்ளுங்கள்.

ஆனால் இந்த நல்லெண்ணத்தை கடல்கரைத் தெருவுக்கு குடிநீர் தருவதற்காக குழாய் போட்ட விஷயத்தில் மற்றவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.

அப்படி அவர்கள் கேட்பதும் முகநூலில் போட்டதும் அது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் முயற்சி என்பது அவர்களுக்கும் தெரியும்.

கடல்கரைத்தெருவவின் குடி நீர்ப் பிரச்னை என்பது நெடுங்காலமாக உள்ள பிரச்னை. இன்னும் சொல்லப்போனால் பல குடும்பங்கள் இந்தப் பாரம்பரியமான தெருவை விட்டு குடிகாடு போக இதுவும் ஒரு காரணம். இதைத் தீர்ப்பதற்கு பஞ்சாயத்து போர்டு மூலமாக தீர்மானம் போட்டு , அரசிடம் நிதி உதவிபெற்று நடந்து வருகிறது. யாரும் நிதி திரட்டிக் கொடுத்து நடைபெறவில்லை. யாரும் பிச்சையும் போடவில்லை.

ஆனால் குளத்து நீர்ப் பிரச்னை என்பது வேறு குடி நீர்ப் பிரச்னை என்பது வேறு. பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டு தீர்ப்பதற்காக நடத்தப்பட்டது குளத்து நீர்ப் பிரச்னை. இப்படியெல்லாம் குத்தல் காட்டுவது இன்னும் வேறுபாடுகளை வளர்க்கும். இது நம் அனைவருக்குமே நல்லதல்ல.

மேலும் தண்ணீர் பிரச்னையைக் காட்டி ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யவும் ஒரு வழி கிடைத்திருப்பதை பாத்திமா நகரிலும் எஸ் ஏ எம் நகரிலும் இடம் கிடைக்கிறது அங்கு நீர் கிடைக்கிறது என்கிற இலவச விளம்பரத்திலும் புரிந்து கொள்ள வைத்தமைக்கு பாராட்டுக்கள். சில நேரம் பூனைக் குட்டி இப்படித்தான் வெளிவரும்.

மழவேனிகாடு வழியாக வெண்டாக்கொட்டை. நீர் பாத்திமா நகர் வழியாக வந்தால் அங்கு சில வாய்க்கால்கள் வெட்ட்ப்படவேண்டி வரும் அதனால் வாங்கிப் போட்ட நிலங்களின் எல்லைகளை இழக்க வேண்டி வரும் என்பதால்தான் அந்த முயற்சி முழுமூச்சாக தடுக்கப் பட்டது அதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டது என்று ஒரு கருத்து நிலவுகிறதே அதற்குக் காரணமும் இந்த ரியல் எஸ்டேட் மார்கெடிங்க் உக்திதான் என்று மற்றவர்கள் சொல்வதை நம்ப வேண்டி வரும்போல இருக்கிறதே.

அ. நி. யின் தலையங்கத்துக்குப் பிறகு பேரூராட்சித்தலைவரின் காணொளி க்குப் பிறகு ஒரு வழியாக விபரங்கள் அறிவிக்கப் பட்டு சமாதானமாக இருந்தவர்களின் எண்ணங்களில் கடல்கரைத்தேருவுக்கு குடிநீர்க் குழாய், பாத்திமா நகரில் மனைக்கட்டு என்றெல்லாம் எறியும் நெருப்பில் நண்பர்கள் என்னே ஊற்றாமல் அடுத்து அனைவரும் இணைந்து எல்லோருக்காகவும் என்ன செய்யலாம் எப்படி சேர்மனுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கலாம் என்று சிந்தியுங்கள்.

சிந்தனைகள் ஊறுகாய் பொட்டலத்தை நோக்கி ரவுண்டு அடித்தால் இத்தகைய வீண் விவாதங்களும் நீளும். அதனால் யாருக்கும் பயன் இல்லை.


Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

//i dont appreciate comedians in serious issues.//

காமெடியன்கள் பல நேரம் உண்மையை சொல்லிவிடுவார்கள். மனை இட விஷயம் அப்படிப் பட்டதே.

sabeer.abushahruk said...

காக்கா,

பட்டிமன்றத்தின் அட்டு தலைவரைப்போல ஜமாலுதீனின் எழுத்தில் மயங்கி சப்போர்ட் பண்ணிட்டேன். இப்ப, நீங்க சொல்றத பார்த்தா உண்மை என்னையும் உசுப்பேத்துதே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அமைதி! அமைதி! அமைதி! //

என்ன காக்கா:

புருவம் உயர்த்தி விழி திறக்க வச்சிருக்கீங்க !

அப்போ சாமானியன் நானெல்லாம் எப்போதான் இந்த தண்ணீர் அரசியலை அறிவது !?

ஆற்று வழிப் பாதை 'சேர் மண்' அள்ளிப் போட்டு குளம் நிரப்ப (மக்கள்) பாடு படும்போது.... இப்படி 'சேர் மானம்' சரியில்லைன்னு பொலம்பலாவே இருக்கே !

sabeer.abushahruk said...

அதிரைக்காரன்(ர்),

மேப்பை மாத்து(ங்க)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஓரிரு குளம் நிறைக்க பாடுபட்ட பலரை குறைகாண்பவர்கள் இன்னும் வாய்ப்புகளை தடுத்த தடுக்க முடியும் என கொக்கரித்தவர்களை கடிக்காதது ஏனோ!

அதிரைக்காரன் said...

தலையங்கத்தின் பின்னூட்டத்தில் இருந்த தவறான புரிதல்களுக்கு நானறிந்த தகவல்களைபகிர்ந்து கொள்வதன்மூலம் தவறான புரிதல்கள் நீக்கப்படும் என்ற நல்லெண்ணத்திலும் மண் அள்ளிப்போடும் விதமாக சிலரின் கருத்துகள் இருப்பதாகக் கருதுகிறேன். நமக்குள் தலைதூக்கும் பிரிவினைகளைக் களைந்து, எஞ்சியுள்ள நாட்களிலாவது தண்ணீர் வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில்தான் இதை எழுதினேன்.

கடற்கரை தெருவுக்கு குடிநீர் குழாய் கொண்டுவந்ததும் இதேசேர்மந்தான் என்று தெரிந்தும் அறிந்தவர்கள் வாய்மூடி இருந்ததாலுமே அதையும், செய்னாங்குளம் தூர் வாரியதையும் குறிப்பிட்டேன். இப்பதிவுக்கு தேவையற்ற தகவல் என்றாலும் இதை பின்னூட்டமாகவே பதிய இருந்ததால் இடம்பெற்றது.

செடியன் குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையாக நான் குறிப்பிட்டதும் முந்தைய வழித்தடம்தான். செடியன் குளத்தின் மேல்புறம் வால்வீச்சு என்று இப்பகுதியைக் குறிப்பிடுவார்கள் என்று கேள்வி. அப்பகுதியில் அதிகம் புழங்கியதில்லை என்பதால் கூடுதல் விபரமில்லை. அறிந்தவர்கள் தெளிவுபடுத்தவும். சி.எம்.பிற வாய்க்காலில் மதகு எண் 20 இன்னொரு வழித்தடமாகும் இருந்திருக்கலாம்.

தற்போதைய நீர்வரத்து தொடர்ந்திருந்தால் ஆலடி, செக்கடி, மரைக்காயர்,செடியன் காட்டுக்குளங்களுக்கு உபரிநீர் கொண்டுவரப்பட்டிருக்கும். இதைத்தான் சேர்மன் தனது ஃபேஸ்புக் காணொளியில் அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டு சொன்னார்.

இப்பதிவின் நோக்கத்திற்கு மாறாக, குறிப்பாக நான் நன்மதிப்பு கொண்டிருந்த மூத்தவர்களிடமிருந்தும் உள்நோக்கம் கற்பிக்கும் தொனியில் கருத்துகள் இடம் பெற்றிருப்பதால் இப்பதிவை நீக்குவதே சரியாகப் படுகிறது.

எல்லோரையும் போன்று நானும் ஆதங்கப்படும் பார்வையாளானாகவே இருந்து தொலைத்திருக்கலாமோ என்ற எண்ணம்தான் மிஞ்சுகிறது. யாரையும் புண்படுத்தி இருந்தால் மண்ணித்துக்கொள்ளவும். ஜஷாக்கல்லாஹ்.

Aboobakkar, Can. said...

கடைசியா ஒரு விசயத்தோடு கருத்தை முடிக்கலாம்னு நினைக்கிறேன் .அப்பயிருந்த பச்சைபெல்ட் போடும் அந்த சிங்கபூரு சபுராளி ரயிலடியை தாண்டி ரேவடிபக்கமா போன அந்த கதைதான் 'பொக்கு பொக்குனு போடு சாமி கதை'

Aboobakkar, Can. said...

இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களே நான் ரியல் எஸ்டேட் வியாபாரம் பார்க்கும் பூனைக்குட்டி இல்லை மற்றும் அதற்கான முகவரும் இல்லை .அதற்கு ஊரில் நிறைய முதலைகள் உள்ளன,அப்படி ஒரு உவமைதான் சொன்னேன் நான் வெளிநாட்டில் சம்பாதிப்பவன் அறியப்பெறவும்.தவறான புரிதலுடன் மொட்டை தலையை முழங்காலுக்கு முடுச்சு போட வேண்டாம் .

Shameed said...

Aboobakkar, Can. சொன்னது…
//'ஊரின் நீர் பிரச்சனையோ நிலத்தடி நீர்மட்டம் 100 அடிக்கு கிழே போனதால்தான்.நீங்கள் புதுசா ஒன்னை அவுத்து உடுரியலே! 100 அடியில் தண்ணீர் இருப்பதாக!'
Developing Area வுலே இன்னும் துளை போடலே அதற்கு முன்னாடி நாம போய் போட்டுடுவோம். இருக்கிற இடத்துலே எல்லாம் வராது வாங்க நாமும் அதை தேடி போவோம் . அடுத்து வெட்டி குளத்துலே குளிக்கும் போது பொக்கு பொக்கு போடு சாமி கதைக்கு வரலாம்னு' நினைக்கிறேன். ???//



Aboobakkar, Can. சொன்னது…
//கடைசியா ஒரு விசயத்தோடு கருத்தை முடிக்கலாம்னு நினைக்கிறேன் .அப்பயிருந்த பச்சைபெல்ட் போடும் அந்த சிங்கபூரு சபுராளி ரயிலடியை தாண்டி ரேவடிபக்கமா போன அந்த கதைதான் 'பொக்கு பொக்குனு போடு சாமி கதை'//



வெட்டிக்குளத்தில் குளிக்கும் போது பொக்கு பொக்கு போடு சாமி கதை கடைசியா சிங்கபூர் சபுராளி ரயிலடி ரேவடி என்று மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் உங்களை போன்றோரை பூனை என்று சொல்லி பூனையை கேவலப்படுத்தி இருக்க கூடாது

வேறு ஒரு பெயரைத்தான் சொல்லி இருக்கணும்

Shameed said...

கட்டுரையோ தவறான தவகல்களை சொன்னால் பின்னுட்டத்தில் மண்ணை அள்ளிப்போட்டு மூடுவதில் தவறேதும் இல்லை !

Aboobakkar, Can. said...

ஊரின் கிண்டல்கலுக்காக உரிமையுடன் நான் இட்ட சில கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு அதற்கு மூக்கு முழி எல்லாம் வைக்கும் நீங்கள் நிச்சயமாக ஊரின் சமூக குழப்பவாதிகளே .ஒரு கருத்து இடும் என்னையே இப்படி தவறாக புரியும் நீங்களெல்லாம் ஊரின் நல்லது செய்பவர்களையும் பொதுநல வாதிகளையும் எப்படியெல்லாம் தவறாக புரிந்து இருக்கின்றீர்கள் என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.

Shameed said...

Aboobakkar, Can. சொன்னது…
//ஊரின் கிண்டல்கலுக்காக உரிமையுடன் நான் இட்ட சில கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு அதற்கு மூக்கு முழி எல்லாம் வைக்கும் நீங்கள் நிச்சயமாக ஊரின் சமூக குழப்பவாதிகளே .ஒரு கருத்து இடும் என்னையே இப்படி தவறாக புரியும் நீங்களெல்லாம் ஊரின் நல்லது செய்பவர்களையும் பொதுநல வாதிகளையும் எப்படியெல்லாம் தவறாக புரிந்து இருக்கின்றீர்கள் என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.//



ஊரின் முக்கிய வாழ்வாதாரம் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது ஊரின் கிண்டலை முன்னுக்குப்பின் முரணாக கருத்து இடும் சமூக குழப்பவாதி நீங்களே மற்றவர்களை குழப்பவாதி என்று சொல்வது உங்களின் அறியாமையை வெளிக்காட்டுகின்றது

sabeer.abushahruk said...

ஜமாலுதீன்,

உங்கள் கருத்திற்கு எதிர் கருத்து இருப்பின்; நீங்கள் சொல்லும் நியதிகளில் திருத்தங்களை ஆதாரங்களோடு விளக்கம் தரும்பட்சத்தில் ஒன்று அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது அவற்றை மறுத்து நீங்களும் ஆதாரங்களோடு கருத்திடுங்கள்.

அதை விடுத்து உண்மையில் உங்கள்மேல் அன்புள்ள மூத்தவர்கள்மீது விரக்தி வசனம் பேசுவது புத்திசாலித்தனமன்று. பலவற்றையும் விவரமாக அறிய முடிந்த இந்தப் பதிவையும் நீக்கச் சொல்வது ஏற்புடையதல்ல.

பதிவும் பின்னூட்டக் கருத்துகளும் திறமானவையே, ஒரே ஒருத்தரின் கேலிக்குறிய கருத்துகளைத் தவிர.

Aboobakkar, Can. said...

கருத்திடும் வாசகர்கள் நம்மை விட தாழ்ந்தவர்களே என்ற ஆவணம் உங்களின் கருத்தில் தெரிகிறது . என்னுடைய கருத்தில் ஆர்வம் காட்டியே அதில் நீங்களும் கருத்திட்டுவிட்டு அதுவே தொடர் கதை ஆனது என்னை அதில் விமர்சிப்பது நிச்சயமாக அது உங்களில் ஆணவமே.சும்மா காரணம் என்று எதையும் பதிலாக சொல்ல வேண்டாம் .தற்போதைய ஊர் நலனில் பசுத்தோல் போர்த்திய புலிகள் சமூக குழப்பத்தை உண்டாக்குவோர் யார் என்பது இது போன்ற பதில் கருத்துக்களில் வெளி வருவதை நடுநிலை யாளர்கள் நிச்சயம் அறிந்த வண்ணமே உள்ளனர் .உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது .தண்ணியிலே இருந்து குசு விட்டால் தலைக்கு மேலே தான் வரும் உதாரணம் உங்கவர்களின் கருத்தில் பதில்.

sabeer.abushahruk said...

சகோ,

கருத்துகள் தாழ்வாகவும் நாகரிகமற்றும் இருந்தால் கருத்திடுபவரைப் பற்றியும் அப்படியே கருத நேரிடும்.

உ.: //தண்ணியிலே இருந்து குசு விட்டால் தலைக்கு மேலே தான் வரும்.// இது நாகரிகமான உதாரணமா? இதை பொதுவில் உங்களால் சொல்ல முடிகிறதே, கூச்சமாக இல்லையா?

"ஊரின் கிண்டல்" என்று சொல்கிறீர்களே, அதற்கான பதிவா இது?

உங்கள் நக்கலுக்கும் துவேஷத்துக்கும் பதில் சொன்னால் ஆணவம் என்கிறீர்களே (அதையும்கூட ஆவணம் என்று ஏதோ சொல்கிறீர்கள்) பதில் சொல்லாமல் விட்டால் நீங்கள் சொல்வது எல்லாம் சரி என்றாகிவிடாதா?

Unknown said...

Jamaludeen said.
//but our immature so called local politicians neither serve best nor leaving other to serve.//

I am considering whoever come into public service have responsibilities to serve fairly for fellow members of community regardless of differences(religions, economic levels and ethnicity of streets over there).

If the parties, associations or any kind of group focus only on doing politics - means a kind of power play, then its impossible to render the genuine service and care for public. Because the energy is spent on doing politics rather then serving the community. This is the immaturity and selfishness and evil in the society.

May Allah save us from such evils.

B. Ahamed Ameen from Dubai.

Shameed said...

Aboobakkar, Can. சொன்னது…
//கருத்திடும் வாசகர்கள் நம்மை விட தாழ்ந்தவர்களே என்ற ஆவணம் உங்களின் கருத்தில் தெரிகிறது . என்னுடைய கருத்தில் ஆர்வம் காட்டியே அதில் நீங்களும் கருத்திட்டுவிட்டு அதுவே தொடர் கதை ஆனது என்னை அதில் விமர்சிப்பது நிச்சயமாக அது உங்களில் ஆணவமே.சும்மா காரணம் என்று எதையும் பதிலாக சொல்ல வேண்டாம் .தற்போதைய ஊர் நலனில் பசுத்தோல் போர்த்திய புலிகள் சமூக குழப்பத்தை உண்டாக்குவோர் யார் என்பது இது போன்ற பதில் கருத்துக்களில் வெளி வருவதை நடுநிலை யாளர்கள் நிச்சயம் அறிந்த வண்ணமே உள்ளனர் .உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது .தண்ணியிலே இருந்து குசு விட்டால் தலைக்கு மேலே தான் வரும் உதாரணம் உங்கவர்களின் கருத்தில் பதில்.//



தங்களின் கருத்துக்களே தங்களை தரம் தாழ்த்திவிடுகின்றன இதுக்கு வேலை மெனக்கெட்டு நாங்கள் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது

Yasir said...

//வருவாய்த்துறை அதிகாரியிடம் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி கொடுக்கப் பட்ட மனுவில் பேரூராட்சித்தலைவர் அவர்களின் பெயரால் கொடுக்கப் பட்டதால்தான் ஊர் மக்கள் அனைவரும் சொந்தம் கொண்டாடினார்கள்.
அப்படி வருவாய்த்துறை அதிகாரியிடம் கொடுக்கப் பட்ட வறண்ட குளங்களின் புகைப் படங்கள் ஊர் முழுதும் வற்றிப் போய்க் கிடக்கும் மொத்தம் பதினேழு குளங்களின் புகைப் படங்களாகும். ஒன்று இரண்டு குளங்களின் புகைப் படங்கள் மட்டுமல்ல. // விசயம் இப்படி இருக்கையில்...ஏன இரண்டு குளங்கள் மட்டும் நிரம்பின என்பதுதான் எங்கள் அனைவரையும் வியக்க வைத்த செயல்...அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டிய சேர்மன்...ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் சொந்தமாகிப் போன மர்மம் தான் என்ன....இது என்னைப்போன்ற சாமனியனின் கேள்வி....அரசியல் ரீதியாக சில அநியாங்கள் செய்யப்பட்டு இருந்தால் அதனை முறியடிப்பது பெருந்தலைவரின் கடமை

sheikdawoodmohamedfarook said...

//சிந்தனைகள்ஊறுகாய்பொட்டலத்தை//சிந்தனைகள் ஊறுகாய்பொட்டலத்தைசுற்றிமட்டும்போகவில்லை. அது பொக்கு போக்குன்னுபோடுசாமியேயும் சுத்திக்கிட்டு அலையுது.

Yasir said...

சாவன்னா காக்கா சிலரின் கருத்திலிருந்து தெரிவது என்ன வென்றால்...கடற்க்கரை தெருவிற்க்கு ஒற்றனாக யாரோ செயல்பட்டு இருக்கின்றார் என்பது...நான் வேற திறந்த வெளியில்லம் 1988-ல் பாத்ரூம் போயிருந்தேனே அதையும் கருத்தாக சொல்லிடப்போறாக

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
Yasir said...

இரண்டு குளங்கள் நிரம்பி இருப்பதை மனதார வரவேற்க்கின்றோம்.....சந்தோஷப்படுகின்றோம்....அந்த பகுதி சகோதர்கள் வளமாக வாழ்வதை நினைத்து பூரிப்படைகின்றோம்.......அதே சமயம் குழாய் போட்ட இடத்திற்க்கு தண்ணி வருதா இல்லை காத்துதான் வருதா என்பதை சம்பந்தபட்டவர்கள் கவனிக்க வேண்டும்....கடற்க்கரைத்தெருவிற்க்கு ச்சும்மாவா வந்தது...குழாய்....துப்பட்டி போட்ட பெண்கள் நடுத்தெருவில் நின்று செய்த நீண்ட போரட்டத்திற்க்கு பிறகு அல்லவா வந்தது,,அதிரை வரலாற்றில் பெண்கள் பஸ் மறிப்பு என்ற தவிர்க்கப்பட வேண்டிய செயலை செய்யும் முன் இதனை செய்து இருந்தால் பாரட்ட்டி இருக்கலாம்...அல்லாஹ் கரீம்

Shameed said...

இந்த வருசத்தின் மிக மிக தரம் தாழ்ந்த வார்த்தைகளையும் பொதுவில் பயன்படுத்த கூடாத வார்த்தைகளையும் பயன்படுத்தி பின்னுட்டங்களை இட்டவர் என்ற பட்டத்தினை சகோ Aboobakkar, Can.அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

Aboobakkar, Can. said...

கருத்தில் கிண்டல் உள்ளது என்று நான் பலமுறை விளக்கியும் அதையே மிகை படுத்தி தனது தப்புக்களை மறைக்க மற்றும் என்னுடைய ஆழமான கேள்விகளுக்கு பதில் தராமல் மழுப்பும் சமூக குழப்பவாதிகளே.மனிதர்களை தவறாக புரியும் உங்கவர்களின் செயல் மிகவும் கீழ்த்தரமானது.

Aboobakkar, Can. said...

கருத்தில் கிண்டல் உள்ளது என்று நான் பலமுறை விளக்கியும் அதையே மிகை படுத்தி தனது தப்புக்களை மறைக்க மற்றும் என்னுடைய ஆழமான கேள்விகளுக்கு பதில் தராமல் மழுப்பும் சமூக குழப்பவாதிகளே.மனிதர்களை தவறாக புரியும் உங்கவர்களின் செயல் மிகவும் கீழ்த்தரமானது. 1,2,3 என்று உங்கவர்களின் கூட்டத்தில் கருத்திடும் வீணர்களே உங்கவர்களில் இன்னும் 2,3,பேர் கள் மீதம் என்று நினைக்கின்றேன் வாருங்கள் பதில் தருகின்றேன் .

Yasir said...

லா...லா ஊறூகாய்...பொக்கு சாமி...பற்றி கருத்து சொன்ன நீங்க ரொம்ப மேன்மையானவரே....தெளிவானவரே.....ஒரு தெருவைப்பற்றிய காழ்ப்புணர்வை பொதுவில் வைக்கும் உங்களின் செயல் மேழ் தரமானதே......போதுமா...இப்படிக்கு கு(ள)ழப்பவாதிகள்

Ebrahim Ansari said...

//இப்பதிவின் நோக்கத்திற்கு மாறாக, குறிப்பாக நான் நன்மதிப்பு கொண்டிருந்த மூத்தவர்களிடமிருந்தும் உள்நோக்கம் கற்பிக்கும் தொனியில் கருத்துகள் இடம் பெற்றிருப்பதால் இப்பதிவை நீக்குவதே சரியாகப் படுகிறது.//

பல மேலதிக விபரங்களை தந்திருக்கும் இந்தப் பதிவை நீக்குவதில் உடன்பாடில்லை. பதிவைப் படித்துவிட்டு தொடர்புடைய பல பெரியவர்களிடம் கலந்து பேசிய பிறகே செடியன் குளம் பற்றிய பதிவைப் பற்றிய அடிப்படைத் தகவலை எடுத்து வைத்தேன்.

மேலும் குடிநீர் பிரச்னையில் காலம் காலமாக மூழ்கி இருக்கும் கடற்கரைத் தெருவுக்கு இவ்வளவு காலம் கழித்து அரசு நிதியில் செய்யப்படும் உதவியைக் கூட சுட்டிக் காட்டி அது தேவையில்லாதது என்று தானே உணர்ந்து இருந்தும் ஒப்பீடு செய்தது சரியல்ல என்பதே கருத்தின் அடிப்படை.

அதே போல்தான் செய்னாங்குளம் பற்றியதும். ஊரில் யாரும் எந்தத்தேருவும் தீண்டத்தகாதவர்கள் அல்ல. அரசின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள தகுதியற்றவர்களும் அல்ல.

சேர்மன் அவர்கள் செய்துள்ள உதவியை அந்த உதவியைப் பெற்றோர்கள் மறக்க மாட்டார்கள். தேவையானதை தேவையான இடத்துக்கு செய்வதும் அவரது கடமைகளில் ஒன்றுதான். அத்துடன் அவருக்கு பல ஆதரவாளர்கள் இன்றும் அவர் பின்னால் நிற்கிறார்கள். நிற்கத் தயாராகவும் இருக்கிறார்கள். அவருக்காக வாக்களித்தவர்களும் அப்பகுதியில் அதிகம்.

பதிவுக்கு எந்த உள் நோக்கமும் கற்பிக்கவேண்டுமேன்று நோக்கம் இல்லை. அப்படி தென்பட்டு இருந்தால் அதற்காக நானும் வருந்துகிறேன்.ஒரு விஷயமறிந்த சிறந்த அனுபவமுள்ள பதிவாளர்களில் ஒருவரான ஜமாலுதீன் அவர்களின் மனம் நோகும்படி எதுவுமிருந்தால் மீண்டும் வருந்துகிறேன்.

அதே நேரம் ஊரைக் காலி செய்துவிட்டு இந்தப் பக்கம் பாத்திமா நகரின் மனை வாங்கிக் கொண்டு அகதிகள் போல் வாருங்கள் என்று சொல்வது ஊரின் கிண்டலுக்காக என்று தப்பித்துக் கொள்வதுடன் சமூகக் குழப்பவாதிகள் என்று பட்டமும் சூட்டப் படுவது யார் கை கால் மூக்கு வைக்கிறார்கள் என்பதை புரியவைக்கும்.

மீண்டும் கோருவோம். அரசியல் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்று பட்டு மீதமுள்ள அனைத்துக் குளங்களுக்கும் நீர் கொண்டுவர முயற்சிகளைத் தொடர வேண்டும். முதலில் தண்ணீர் வரட்டும் . அந்தத் தண்ணீர் வற்றிய பிறகு நமக்குள் சேற்றை இறைத்து விளையாடிக் கொள்ளலாம்.

//If the parties, associations or any kind of group focus only on doing politics - means a kind of power play, then its impossible to render the genuine service and care for public. Because the energy is spent on doing politics rather then serving the community. This is the immaturity and selfishness and evil in the society.//

I second the views of this young man - B. Ahmed Ameen.

Aboobakkar, Can. said...

இதில் கருத்திட்டதன் மூலம் சமூக குழப்பங்களுக்கு காரணமான Shameed போன்றோர் அதிரையின் கருப்பு ஆடுகள் எனபது அம்பலம் ஆகிவிட்டது .இனிமேல் குழப்பவாதியார் என்று தேட வேண்டிய அவசியம் இல்லை .

sabeer.abushahruk said...

//இதில் கருத்திட்டதன் மூலம் சமூக குழப்பங்களுக்கு காரணமான Shameed போன்றோர் அதிரையின் கருப்பு ஆடுகள் எனபது அம்பலம் ஆகிவிட்டது //

ஹி.ஹி.
அப்ப நானு?

sabeer.abushahruk said...

//என்னுடைய ஆழமான கேள்விகளுக்கு பதில் தராமல் மழுப்பும் //

//தண்ணியிலே இருந்து குசு விட்டால் தலைக்கு மேலே தான் வரும் //

எவ்வளவு ஆழமான கேள்வி என்று சொல்லவில்லையே?

Shameed said...

Aboobakkar, Can.உங்களின் பின்னுட்டத்தில் ஒன்னே ஒண்ணுதான் ஆழமான பதிலா இருந்தது அது 100 அடியில் தண்ணீர் இருப்பதாக சொன்னது!!!!! அதை தவிர வேறு எதுவுமே ஆழமா இல்லை

Yasir said...

புது ஐன்ஸ்டீன் ஒருவர் வருவார் என்று நான் முன்னரே சொல்லி இருந்தேன் இந்த வந்துட்டார்ப்பா....இது “ஏம்ப நான் சரியா பேசுறனா “ டீம் போலவுல தெரியுது...வெள்ளை வெள்ளையென்று இருக்கும் சாவன்னா காக்கா அவர்களை கருப்பு ஆடுகள் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கின்றேன்

Aboobakkar, Can. said...

சபீர் அவர்களே ...மாமியா உடைத்த மண்குடம் நான் உடைத்தா பொன்குடம் ??????? நீங்க கிண்டல் பண்ணலாம் ?????ஆனா நான் பண்ணகூடாது இது என்னப்பா நியாயம்????? உங்கவர்களை எங்க தெருவுக்கு குடி இருக்க கூப்பிட்ட நீங்க எல்லாம் அகதியா ? அல்லது நான் என்ன ரியல் எஸ்ட்டேட் பன்னுறேனா கடல் கரை தெருவில் எனக்கு இன்றும் சொந்தங்களும் சம்பந்தகளும் மாமி மாமாக்களும் மச்சான் மார்களும் உள்ளனர்.

Shameed said...

Aboobakkar, Can. சொன்னது…
//இதில் கருத்திட்டதன் மூலம் சமூக குழப்பங்களுக்கு காரணமான Shameed போன்றோர் அதிரையின் கருப்பு ஆடுகள் எனபது அம்பலம் ஆகிவிட்டது .இனிமேல் குழப்பவாதியார் என்று தேட வேண்டிய அவசியம் இல்லை //



நீங்க ரொம்ப குழம்பி போயிட்டீங்க நல்ல தூங்கி முலிங்க அப்போத்தான் உங்களுக்கு ஆட்டுக்கும் மனுசனுக்கும் வித்தியாசம் தெரியும்!!

sabeer.abushahruk said...

// என்னுடைய ஆழமான கேள்விகளுக்கு பதில் தராமல் //

சகோ,

பூதக்கண்ணாடி வைத்துத் தேடியும் தங்களின் ஒரு கேள்விகூட எனக்கு இங்கு காணக்கிடைக்கவில்லை. இதில் ஆழமான கேள்வியை வேறு தேடச் சொல்கிறீர்கள்.

ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேல் வாசகர்கள் வந்து வாசிக்கும் தளம் இது. இதில் ஏன் இப்படி தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறீர்கள்?

உங்கள் வாதத்தைப் படிக்கும்போது எனக்கென்னவோ, " என்னய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே?"தான் நினைவுக்கு வருகிறது. எதற்கும் சுய மதிப்பீடு ஒன்று செய்துகொள்வது நலம். இல்லையேல், நீங்கள் ஆதங்கப்படும் அந்த ஆழமான கேள்விதான் என்ன என்று அறியத் தாருங்கள்.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//இதில் கருத்திட்டதன் மூலம் சமூக குழப்பங்களுக்கு காரணமான Shameed போன்றோர் அதிரையின் கருப்பு ஆடுகள் எனபது அம்பலம் ஆகிவிட்டது //

//ஹி.ஹி.
அப்ப நானு?//

நான் கருப்பு கலர் ஆடு நீங்க பிரவுன் கலர் ஆடு யாசிர் வெள்ளை கலர் ஆடு !!!

sabeer.abushahruk said...

// உங்கவர்களை எங்க தெருவுக்கு குடி இருக்க கூப்பிட்ட நீங்க எல்லாம் அகதியா //

ஓ... அப்ப நீஙக சதாம் நகரா? சொல்லவே இல்ல?

இதெப்பெடி இருக்குன்னு பாருங்க,:

"ஓ தமிழ் நாட்டு மக்களே. காவிரியை ஏன் கேட்கிறீர்கள்? எல்லோரும் காவிரி ஓடும் கர்நாடகாவுக்கு புலம் பெயர்ந்து வந்து விடுங்கள்"

இப்ப சொல்லுங்க. நிறைய பேர் வாசிச்சிட்டு இருக்காங்க. நீங்க சொல்வது சரியா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆடுகளுக்கு கலர் கொடுத்தாச்சு!

அப்ப

கழுதைகளுக்கு கலரு?

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
// உங்கவர்களை எங்க தெருவுக்கு குடி இருக்க கூப்பிட்ட நீங்க எல்லாம் அகதியா //

//ஓ... அப்ப நீஙக சதாம் நகரா? சொல்லவே இல்ல?

இதெப்பெடி இருக்குன்னு பாருங்க,:

"ஓ தமிழ் நாட்டு மக்களே. காவிரியை ஏன் கேட்கிறீர்கள்? எல்லோரும் காவிரி ஓடும் கர்நாடகாவுக்கு புலம் பெயர்ந்து வந்து விடுங்கள்"

இப்ப சொல்லுங்க. நிறைய பேர் வாசிச்சிட்டு இருக்காங்க. நீங்க சொல்வது சரியா?//



அவரு என்ன சொல்ல வர்றாருன்னு அவருக்கே இன்னும் புடிபடலே இதுலே நாம சொல்றது அவருக்கு புரிஞ்சி அவர் பதில் சொல்வதற்குள் பல பதிவுகள் வந்துவிடும்

Yasir said...

அப்ப சமூகம் கிளம்புது....எதுவும் இருந்தா....கூப்பிடுங்க....எல்லா குளங்களுக்கும் தண்ணீர் வரும் நாள்தான் நாம் எல்லாம் சேர்ந்து கொண்டாடப்பட வேண்டிய நாள்...ஒருவர் மகிழ்ந்து மற்றவர் இரந்து வாழ்வதில் சந்தோஷம் இல்லை அல்லாஹ் அடுத்த வருஷம் மழை மூலம் இதனை தருவான்...அப்பொழுது இந்த அரசியல் பம்மாத்து வேளைகளும் தடுக்கபடும்

sabeer.abushahruk said...

//அப்ப சமூகம் கிளம்புது//

என்னையும் கூட்டிட்டு போயிடுங்க. இல்லேன்னா எனக்கு தலைக்கு பிராந்து பிடிச்சிடும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோ யாசிர் ஐயம்!
//ஒருவர் மகிழ்ந்து மற்றவர் இரந்து வாழ்வதில் சந்தோஷம் இல்லை //

சில வகை கிடைப்பதை பகிர முடியும்.
சில வகை இன்று சிலருக்கு நாளை சிலருக்கு பகிர முடியும்.
இப்படியிருக்க 5 குளங்களுக்கு மட்டும் இந்த சீசனில் வாய்ப்பு கிடைக்கிறது.
அப்ப என்ன செய்யலாம். முழுவதும் திருப்பி விடுவதா? அல்லது கிடைப்பதை ஒருபகுதி பலன் பெற்று அடுத்த சான்ஸ் மறுபகுதி பலன் பெற சான்ஸ் கொடுப்பதா? எது புத்திசாலித் தனம்?

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே,

உங்கள் கேள்விக்கு ஏற்கனவே யாசிர் பதில் சொல்லி யிருப்பதை மேலே கவனிக்கவில்லையா?

//இரண்டு குளங்கள் நிரம்பி இருப்பதை மனதார வரவேற்க்கின்றோம்.....சந்தோஷப்படுகின்றோம்....அந்த பகுதி சகோதர்கள் வளமாக வாழ்வதை நினைத்து பூரிப்படைகின்றோம்.....//

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே,

யாசிர் ஏற்கனவே சொன்ன பதில் கீழே: கிடைத்ததை ஏற்று மேலும் கிடைக்கப் பிரயாசைப் படுவதுதான புத்திசாலித்தனமானது என்பதையே அவரின் மகிழ்வான பின்னூட்டம் உணர்த்துகிறது:

//இரண்டு குளங்கள் நிரம்பி இருப்பதை மனதார வரவேற்க்கின்றோம்.....சந்தோஷப்படுகின்றோம்....அந்த பகுதி சகோதர்கள் வளமாக வாழ்வதை நினைத்து பூரிப்படைகின்றோம்.......//

(சடப்படம் தாங்க முடியாம சமூகம் புறப்பட்டு விட்டதால் நான் பதில் தந்துள்ளேன். ஒப்புதல்தானே?)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

என்ன காக்கா சண்டக்கி வராமல் சரண் அடைந்து விட்டீங்களே! சந்தோசம். நாளைக்கி குளிக்கும்போது சந்திப்போம்.

வாங்களே போகலாம்
சுத்தமா தடுத்தாங்களே அவங்களோடு சண்டை போடுவோமே!

sabeer.abushahruk said...

உங்களிடம் சரண் அடைவதே உள்ளார்ந்த சந்தோஷம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவ்வண்ணமே இருக்கட்டும் இன்சா அல்லாஹ்.

Aboobakkar, Can. said...

// தண்ணீர் பிரச்னையைக் காட்டி ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யவும் ஒரு வழி கிடைத்திருப்பதை பாத்திமா நகரிலும் எஸ் ஏ எம் நகரிலும் இடம் கிடைக்கிறது அங்கு நீர் கிடைக்கிறது என்கிற இலவச விளம்பரத்திலும் புரிந்து கொள்ள வைத்தமைக்கு பாராட்டுக்கள். சில நேரம் பூனைக் குட்டி இப்படித்தான் வெளிவரும்.//

//அதே நேரம் ஊரைக் காலி செய்துவிட்டு இந்தப் பக்கம் பாத்திமா நகரின் மனை வாங்கிக் கொண்டு அகதிகள் போல் வாருங்கள் என்று சொல்வது//

//ஓ தமிழ் நாட்டு மக்களே. காவிரியை ஏன் கேட்கிறீர்கள்? எல்லோரும் காவிரி ஓடும் கர்நாடகாவுக்கு புலம் பெயர்ந்து வந்து விடுங்கள்//

//சாவன்னா காக்கா அவர்களை கருப்பு ஆடுகள் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கின்றேன்//

//உங்களை போன்றோரை பூனை என்று சொல்லி பூனையை கேவலப்படுத்தி இருக்க கூடாது
வேறு ஒரு பெயரைத்தான் சொல்லி இருக்கணும்//

//சாவன்னா காக்கா சிலரின் கருத்திலிருந்து தெரிவது என்ன வென்றால்...கடற்க்கரை தெருவிற்க்கு ஒற்றனாக யாரோ செயல்பட்டு இருக்கின்றார் என்பது...நான் வேற திறந்த வெளியில்லம் 1988-ல் பாத்ரூம் போயிருந்தேனே அதையும் கருத்தாக சொல்லிடப்போறாக//

//நீங்க ரொம்ப குழம்பி போயிட்டீங்க நல்ல தூங்கி முலிங்க அப்போத்தான் உங்களுக்கு ஆட்டுக்கும் மனுசனுக்கும் வித்தியாசம் தெரியும்!!//

//ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேல் வாசகர்கள் வந்து வாசிக்கும் தளம் இது. இதில் ஏன் இப்படி தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறீர்கள்? //

இன்று கடல் கரை தெருவில் இருந்து எத்துணையோ குடும்பங்கள் CMP line னுக்கும் சதாம் நகருக்கு குடிபெயர்கின்றனர் அவர்களை நாங்கள் ஒருபோதும் அகதிகளாக பார்த்ததில்லை மாறாக அவர்களோடு சம்பந்தம் பண்ணுகிறோம் நிச்சயமாக அந்த தெளிவுபெற்ற மக்களும் ஊரில் எத்துணையோ மனைகள் எங்கெங்கோ இருக்கும்போது அவர்கள் பியப்படுவதும் இந்த தெருக்களையே.
அன்புடன்
அபூபக்கர்

Aboobakkar, Can. said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு