அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷா அல்லாஹ்!
மனிதனையோ, கால் நடைகளையோ சபிப்பது கூடாது !
''இஸ்லாம்
அல்லாத மார்க்கத்தின் பெயரால் வேண்டுமென்றே பொய்யாக ஒருவன் சத்தியம் செய்தால்,
அவன் அது போலேவே ஆவான். ஒருவன் எதன் மூலம் தற்கொலை செய்து கொள்கிறானோ, அதன் மூலமே
மறுமையில் வேதனை செய்யப்படுவான். தனக்கு இயலாத ஒன்றில் நேர்ச்சை செய்வது
ஒருவனுக்கு கூடாது. ஒரு மூஃமினை சபிப்பது என்பது, அவனைக் கொல்வது போலாகும் என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸைத் என்ற ஸாபித் இப்னு
ழஹ்ஹாக் அன்சாரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1551 )
''உண்மையாளனுக்கு
மற்றவரை சாபமிட தேவையிருக்காது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
1552)
''(பிறரை)
சாபமிடுபவர்கள் மறுமை நாளில் பரிந்துரை செய்பவர்களாகவோ, சாட்சி கூறுபவர்களாகவோ
இருக்க மாட்டார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தாஉ
(ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
1553)
''அல்லாஹ்வின்
சாபம் மூலமோ, அவனது கோபம் மூலமோ, நரகத்தின் மூலமோ நீங்கள் ஒருவருக்கொருவர்
சாபமிட்டுக் கொள்ளாதீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரா இப்னு
ஜுன்துப் (ரலி) அவர்கள் (அபூதாவூது,
திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1554 )
''ஒரு
மூஃமின் குத்திக்காட்டி பேசுபவனாக, சாபமிடுபவனாக, கெட்ட வார்த்தை பேசுபவனாக,
(அருவருப்பான) பேச்சு பேசுபவனாக இருக்க மாட்டான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு
மஸ்ஊத் (ரலி) அவர்கள் (திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1555 )
''ஓர்
அடியான் ஒருவன் ஒன்றை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அங்கு வானத்தின் வாசல்கள்
அடைக்கப்பட்டிருக்கும். பின்பு பூமியை – நோக்கித் தாழ்ந்து வரும். அங்கும் அதன்
வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கும். பின்பு வலது பக்கமும், இடது பக்கமும் செல்லும் .
அங்கும் தான் அடையும் இடத்தைப் பெற்றுக் கொள்ளா விட்டால், சபிக்கப்பட்டவரின்
பக்கமே திரும்பி விடும். அவன் அதற்கு தகுதியானவனாக இருப்பின், அவனைச் சேரும்.
(தகுதி வாய்ந்தவனாக அவன்) இல்லையென்றால், அது சொன்னவனிடையே வந்து சேரும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தாஉ
(ரலி)அவர்கள்
(அபூதாவூது) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1556 )
காரணமின்றி முஸ்லிமை திட்டுவது கூடாது!:
அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்ட ஆண்களையும்,
பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும்,தெளிவான
பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன் : 33:58)
''முஸ்லிமை
திட்டுவது குற்றமாகும் அவனைக் கொல்வது (குப்ர்) இறை மறுப்பாகும் என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்
(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1559
)
''ஒருவர்,
மற்றொருவரை பாவத்தின் பெயரால், இறை மறுப்பின் பெயரால் அதற்குரியவராக அவர்
இருந்தாலே தவிர குற்றம் சாட்ட வேண்டாம். அதற்குரியவராக அவர் இல்லையென்றால், அது
சொன்னவரின் மீதே திரும்பிவிடும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்
(ரலி) அவர்கள்
(புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
1560)
''இரண்டு
பேர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டால், (அவ்விருவரில்) அநீதம் இழைக்கப்பட்டவர்
வரம்பு மீறும் வரை இருவர் கூறியவைகளும் முதலில் திட்ட ஆரம்பித்தவரையே சேரும்''
என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
1561)
''தன்
அடிமையைப் பற்றி விபச்சாரம் செய்ததாகக் கூறி ஒருவன் இட்டுக்கட்டினால், அவர்
சொன்னது போல் அவர் இல்லாமல் இருந்தால், மறுமை நாளில் சொன்னவருக்கு
(விபச்சாரத்திற்குரிய) தண்டனை வழங்கப்படும்'' என்று நபி(ஸல்) கூறக் கேட்டேன்.
(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1563) (அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1563)
''இறந்தோரை
திட்டாதீர்கள். அவர்கள் செய்து, முன்பு அனுப்பி விட்டதின் பக்கம் (செய்த
செயல்களின் பக்கம்) அவர்கள் போய் சேர்ந்து விட்டார்கள்'' என நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1564) (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா
(ரலி) அவர்கள் (புகாரி)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1564 )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.
1 Responses So Far:
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...
Post a Comment