நீ அதிசயம் மட்டுமல்ல ...
ஆச்சரியமான ஆசான் ....
உன் பாகுபாடில்லாத அனுகுமுறை யால்
நீ போகும், நிற்கும் ,நடக்கும்,ஓடும் இடமெல்லாம் சுகமே ....
நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....
சுத்தத் தங்கமாக வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..
நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம்...அளவிடற்கரியது ...
உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம் ,
உன்னில் நீந்தினோம் ,
உன்னில் பயணித்தோம் ,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ...விவரிக்கமுடியதது ...
உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம்.... எப்படிச் சொல்வேன் ?...
நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்தவை எல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க ....புசிக்க .....
மட்டுமல்ல ..ரசிக்க வும் !!!!
ஆனால்..........?
நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....
உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....
உன் வரவை அவர்களே (உயிரினங்கள் ) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு ....யாருக்கு ?...
நீரின்றி அமையாது உலகம் .......
சிந்திப்போமா?.....நாளை விடியலுக்கு .....
அப்துல் ரஹ்மான்
--harmys--
இது ஒரு மீள்பதிவு
10 Responses So Far:
//உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....//
மட்டுமல்ல,
ஊருணியை மாசுபடுத்திவிட்டு காசு கொடுத்து போத்தல் தண்ணீர் குடிக்கிறான் மனிதன். ஓடைகள் வழியாக கழிவுநீரைக்கடத்துகிறான். குளம் குட்டையெல்லாம் கொட்டகை போட்டும் குத்துக்கல் நட்டும் கைப்பற்றிக்கொள்கிறான்.
இதனால், சேமிப்பு இல்லாததால் ஒரு மழை பொய்த்தாலே உலர்ந்த பூமியில் அவதியுறுகிறான்.
ஆழ்ந்து வாசித்தால் இது தண்ணீர் கவித்சியல்ல; லண்ணீர் கவிதை.
நீ அதிசயம் மட்டுமல்ல ...
ஆச்சரியமான ஆசான் ....
உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ....
உன் பாகுபாடில்லாத அனுகுமுறை யால்
நீ போகும், நிற்கும் ,நடக்கும்,ஓடும் இடமெல்லாம் சுகமே
-------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். நீர்த்துப்போகாத உண்மை!
நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....
------------------------------------------------------------------------------------------------------
இது நீர் எழுதிய எழுத்து ஆனால் நீர்மேல் எழுத்தல்ல!அழியாத கோலம்!
சுத்தத் தங்கமாக வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..
--------------------------------------------------------------------------------------------
நெருப்பில் புடம் போடாத தங்கமாய் தண்ணீர் அந்த நெருப்பை அனைக்கும் பொருப்பும்!ஈரமும் மிக்கது!அதனால்தான் கண்ணீரை அல்லாஹ்! தண்ணீராக படைத்தனோ?கண்ணீர் கரித்தாலும் பிறருக்காய் அழும் கண்ணீர் ஆனந்தம்,அது இன்பமிக்கது!
நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம்...அளவிடற்கரியது ...
--------------------------------------------------------------------------------------------------------
நீர்! அது நம்பிக்கையின் சின்னம்!
உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....
உன் வரவை அவர்களே (உயிரினங்கள் ) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு ....யாருக்கு ?...
நீரின்றி அமையாது உலகம் .......
சிந்திப்போமா?.....நாளை விடியலுக்கு .....
----------------------------------------------------------------------------
பள்ளம் தோண்டினால் நீர் வரும் நம்வர்கள் தமக்குத்தாமே பள்ளம் தோண்டிகொன்டவர்கள்!இனி கானல் நீர்தான்!காடு அழிந்தால் இடுகாடு அருகில் பெருகிவரும்!
மீள் பதிவானாலும் தாகம் தீர்க்கும் பதிவு!
தண்ணீரை எருமை மாடுகள் மதிக்கும் அளவுக்கு கூட மனிதன் மதிக்காததால் மனிதனே அவதியடைகிறான்.
வைரமுத்துவின் 'மூன்றாம் உலகப்போர்' புத்தகத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கோலாலம்பூரில் நடக்க இருக்கிறது. தண்ணீரின் முக்கியத்துவத்தை பற்றி எழுதப்பட்ட புத்தகம்.
அப்துல் ரஹ்மானின் [ ஹார்மி ] கவிதை இனிமேல் இன்னொரு சிறந்த / உயர்ந்த இடங்களில் பேசப்படக்கூடும்.
அப்போது மறவாமல் எங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளவும்
///சுத்தத் தங்கமாக வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..////
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான வரிகள்
இந்த வரிகளே எல்லாமே அடங்கிவிட்டது
இந்த வரிகளுக்கு தண்ணீரை தவிற வேறு எதற்கும் பயன் படுத்த முடியாத உண்மை வரிகள் உவமைக்கு கூட பயன் படுத்து முடியாத நல்ல கர்ப்பனைத்திறனுடன் கூடிய வரிகளுக்கு என் ஹிருதயத்திலிருந்து வரும் வாழ்த்துக்கள்
Post a Comment