Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டு - தொடர் - 11 8

அதிரைநிருபர் பதிப்பகம் | November 11, 2013 | , , ,


கண்களின் பார்வை பாதிப்பு

இன்றைய விஞ்ஞான உலகில் கம்ப்யூட்டர் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. கம்ப்யூட்டரில் கணிசமான நேரத்தை செலவிடுபவர்களுக்கு சில பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது இதை E-PAIN என்கிறோம். அவற்றால் கீழ்கண்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

கண்களில் வலி, கண் சிவத்தல், கண்களில் நீர் வடிதல், தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, கண்களில் எரிச்சல், பார்வையில் குழப்பம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படக் காரணங்கள். கண்களுக்கும் கம்ப்யூட்டர் திரைக்கும் உள்ள குறுகிய இடைவெளி மற்றும் நெடுநேரம் திரையை பார்த்து கொண்டிருத்தல். நெடுநேரம் கண்களை இமைக்காமல் பார்வையை செலுத்துதலே ஆகும்

ஒரு நிமிடத்திற்கு குறைந்த பட்சம் 18 முறை (இமைக்காமல்) மூடி திறக்க வேண்டும், அப்பொழுதுதான் கருவிழி ஈரமாக இருக்கும். மேலே கண்ட குறைபாடுகளில் இருந்து கண்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள். கம்ப்யூட்டரின் திரைக்கும் நமது கண்களுக்கும் இடையிலான தூரம் 2 (அல்லது) 3 அடி தூரம் இருக்க வேண்டும். குறைந்தது 10 நிமிடத்திற்கு ஒரு முறை கண்பார்வை மாற்றி பிறகு தொடரலாம்.  அரை மணிக்கு ஒரு முறை மற்றும் மணிக்கு ஓரு முறை கண்ணிற்கு ஓரிரு நிமிடம் ஓய்வு கொடுப்பது நல்லது. கண்களை அடிகடி மூடித்திறப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 

ஆக கம்ப்யூட்டர் உபயோகிப்பவர்கள் எந்த துறையில் பணி புரிந்தாலும் சரி, வேலை நேரம், நம் கவணமெல்லாம் அந்த வேளையில் இருப்பதால் கண்ணை நன்கு திறந்தபடியே பார்த்துக் கொண்டே கண் இமைக்க மறந்து விடுகின்றோம் அப்படியில்லாமல் முந்தைய பத்தியில் மேற்கோள் காட்டப்பட்ட விஷயங்களை சரிவர கடைபிடித்தாலே கம்ப்யூட்டர் பார்ப்பதினால் ஏற்படும் கண் பாதிப்புகளை தவிர்திடலாம். 

கண்களுக்கு உண்டான கடமையை நாம் சரிவர செய்ய வேண்டும். சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். அதிகமான தூக்கமும் சோம்பேரித் தனத்தை உண்டாக்கும்.  சரியாக தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கும் மூலைக்கும் சோர்வு ஏற்பட்டு அதன் இயக்கத்தில் மாறுதல்கள் ஏற்படுவதினால் உடல் ரீதியாக பல பிரச்சினைகள் உண்டாகும். சராசரி மனிதர்கள் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இதைவிட கூடுதலாகவும் குறைவாகவும் தூங்கக் கூடாது. இதனால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகின்றன. 

கண் நோய்கள்

10 வயது தாண்டுவதற்கு முன்பே கண் பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத் துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டு விடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்து விட்டு நோய் முற்றிய பின்னரே கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண் சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக் கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண் பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் 
கொண்டே போகலாம். 

கண்ணில் நோய் வரக் காரணமென்ன?

ஆரோக்கிய குறைவுகளுடன் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோர் அதற்கான காரணம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வருகின்றன. கல்லீரல் பாதிக்கப்பட்டாலும் கண் நோய்கள் வரும். உதாரணத்திற்கு ஜாண்டீஸ் அதாவது மஞ்சள் காமாலை நோய் வரும் போது அது முதலில் கல்லீரலைத்தான் தாக்குகின்றது கல்லீரல் தாக்கப்படும் பொழுது அதனுடைய  தாக்கம் கண்களில் தெரியும் முதலில் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும், அதற்கு பிறகுதான் மற்ற உறுப்புக்களை பாதிக்கும், ஆதலால் டக்டர்கள் முதலில் கண்ணைத்தான் பரிசோதிப்பார்கள்.

நரம்பில் ஏற்படும் இரத்தக் குறைவு, இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்த அழுத்தம் குறைவு காரணமாகவும் கண்கோளாறுகள் வருகின்றன. பரம்பரைத் தொடர் காரணமாகவும் கண் கோளாறுகள் வருகின்றன. தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் லெட் லைட், லேசர் லைட் போன்ற ஒளிக் கற்றைகள் போன்றவகளினால் கண் நோய்கள் வருகின்றன.

நாம் வாழும் சூழ்நிலை மாசு பட்டதாகவும், தூசு நிறைந்ததாகவும், நச்சுப் புகையுள்ளதாகவும், பசுமையற்றதாகவும் இருக்கும் போது விழித்திருக்கும் கண்கள் அவற்றால் தாக்க மடைந்து பார்வை பாதிப்படைகின்றது.  

நாம் செய்யும் தொழிலும் சில சமயங்களில் கண் பார்வையை கெடுத்து விடுகின்றது. அதிக நேரம் கணினி பாவித்தல், தொழிற்சாலைகளில் தெறித்து வரும் உலோகத் துண்டுகளின்  தாக்கங்களும், இரசாயன வாயுக்கள் கலந்த காற்றும் கண் பார்வையை கெடுத்து விடுகின்றன. அந்த சந்தர்ப்பங்களில் தவறாது பாதுகாப்பு கவசம் அணிதல் வேண்டும். இவை மட்டுமல்லாது நாம் அன்றாடம் கண்களை அழகுபடுத்த பாவிக்கும் இரசாயன திரவியங்களும் தரக்குறைவாலும், அவைகளை தவறான பாவனையாலும், கண்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தரமானவைகளை முறைப்படி பாவித்தால் கெடுதி குறைவாக இருக்கலாம்.

சிலருக்கு தூரத்தில் இருக்கும் எழுத்துக்கள் தெளிவாக தெரியும். ஆனால், புத்தகத்தை எடுத்தால் அவற்றில் உள்ள எழுத்துக்கள் மங்கலாக தெரியும். வேறு சிலரோ புத்தகங்களை, மூக்குக் கண்ணாடியின் உதவியின்றி சாதாரணமாகப் படிப்பார்கள். ஆனால், தூரத்தில் பேருந்து வரும்போது "அது என்ன பஸ்? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க" என்று பக்கத்தில் நிற்பவரிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டிய கட்டாயத்திலிருப்பார்கள். 

சிலர் மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பார்கள். இவர்களால் புத்தகத்தையும் எளிதில் படிக்க முடியும். தூரத்தில் உள்ள எழுத்துக்களையும் நன்கு வாசிக்க முடியும். ஆனால் கணினித் திரையில் மின்னும் எழுத்துக்கள் மட்டும் இவர்களுக்குத் தெளிவாகத் தெரியாது. இதற்கென்றே (இந்த அளவு தூரத்தைத் துல்லியமாக பார்ப்பதற்கென்றே) தனி பவர் கொண்ட கண்ணாடிகளை கண் மருத்துவர் பரிந்துரைப்பார். அதை வாங்கி அணிந்து கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.  

கணினி தொடர்பான கண்கள் குறைபாடுகள் கொஞ்சம் வேறுபட்டவை. பொதுவாக கணினித் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்படுவதில்லை. ஆனால் கண்களுக்குக் களைப்பு ஏற்படுகிறது.

சிலருக்கு கணினியைத் தொடர்ந்து பார்ப்பதால் கண்கள் ஈரத்தன்மையை இழந்து உலர்ந்து விடுகின்றன. இதற்கும் நேரடியான காரணம் கணினி அல்ல. தொடர்ந்து கணினித் திரையை பார்க்கும்போது, நாம் வழக்கமான வேகத்தில் கண்களை சிமிட்ட மறந்து விடுகிறோம். இதன் காரணமாகத்தான் ஏற்கெனவே கொஞ்சம் உலர்ந்த கண்கள் கொண்டவர்களுக்கு அந்த சிக்கல் பெரிதாகிறது. இதற்காக சில சொட்டு மருந்துகள் விற்கின்றன. மருத்துவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொண்டு இவற்றை பயன்படுத்தலாம்.

பொதுவாக கணினியைப் பயன்படுத்துபவர்கள் கீழே உள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால் கண்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கலாம்.

* கணினியின் முன் உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள். 

* கணினித் திரை உங்களிடமிருந்து சுமார் ஒன்றிலிருந்து ஒன்றரை அடிவரை தள்ளியே இருக்கட்டும்.

* திரையை (மானிட்டரை) உங்கள் பக்கமாக 15 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ளுங்கள். திரையின் மேல் பகுதி உங்கள் பார்வைமட்டத்துக்கு நேராக இருக்கட்டும். 

* தொடர்ந்து இருபது நிமிடங்களுக்குக் கணினியைப் பயன்படுத்தினால் நடுவே இரண்டு நிமிடங்களுக்காவது பார்வையை வேறு எங்காவது செலுத்துங்கள். 

கணினியின் பயன்களும், அவற்றை பயன்படுத்தும் நேரமும் அதிகமாகிக் கொண்டே போகும் காலம் இது. எனவே, மேற்கூறிய ஆலோசனைகளை மனதில் கொண்டு உங்கள் கண்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். 

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் தொடரில் கண்களில் ஏற்படும் வரட்சித் தன்மை பற்றியும் கண்களினால் ஏற்படும் தலைவலிகள் பற்றியும் வர இருக்கின்றது
(தொடரும்)
அதிரை மன்சூர்

8 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கண்ணடிக்க வேண்டியதன் அவசியத்திலிருந்து அத்தனையும் நல் அறிவுரைகள்.

Hay fever பற்றியும் சொல்லுங்களேன்!

adiraimansoor said...

ஜாபர் சாதிக்
மிக்க நன்றி

Hay fever என்பது மகரந்தத்தால் ஏற்ப்படும் ஒவ்வாமை. இந்த ஒவ்வாமையால் கண் சம்பந்த்தப்பட்ட நோய்கள் வருவதற்கு சான்ஸ் இல்லை என்றே அறிகின்றேன்.

sabeer.abushahruk said...

கண்களில் வரும் நோய்களின் பாதிப்பைப் குணப் படுத்திவிடலாம். கண்களால் வரும் நோய்களின் பாதிப்பைத்தான் குணப் படுத்த முடிவதில்லை.

பார்வைக் குறைபாடுகளை குழி/குவி லென்ஸுகள் கொண்டு நேராக்கி விடலாம். கோணல்ப் பார்வைகள்தான் எப்போதும் குழியில் தள்ளி விடுகின்றன.

ஆப்தால்மால்ஜி படிச்சிருக்கலாம்ல மன்சூர்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த பதிவுக்கு என்ன கருத்து போடனும் !?

கண்கள் எல்லாம் 'Gun'னாக மாறிவிட்டால் !
வீழ்வது மனங்கள் மட்டுமட்டுல்ல (நிம்)'மதி'யும் தான் !

யாரும் பின்னாடி வர்ராங்களானு பார்க்கவில்லை !

Shameed said...

மன்சூர் பாய் கண்ணுக்குள்ளே புகுந்து புறப்படுகின்றீர்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

கண்ணைப் பாதுகாக்கக் கணினியைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றிய அறிவுரைகள் அபாரம்! நீ சொன்னப்டி செய்கிறேன், நண்பா! மிக்க நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

Anonymous said...

கண் பார்வை குறைபாடுகளுக்கு கணினியும் டிவியும் ஒரு காரணம்.. என்றாலும் அவை காலப்போக்கில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.. இருப்பினும் அதன் முழு தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வழிகளை காட்டிய/ கண்கள் இரண்டும்/ தொடர் பயனுடைய ஒரு தொடர்!.

அதிரைநிருபரில் .எழுத்தில்[ font size]கஞ்சத்தனம் பண்ணாமல் கொஞ்சம் தாரளமாக பெரிய எழுத்து போட்டால் என் போன்றவர்களுக்கும் இனி முதுமையடைவோர்களுக்கும் பயனுடையதாக இருக்கும்!

படிக்கும் போதை விட எழுதும் போது தான் 'கழுகுக்கண்' தேவை படுகிறது... ''எனக்கு வயதாகி விட்டம்தால் வழக்கமாக படிக்கும் சின்ன எழுத்து.'The Hindu பத்திரிகையே நான் இப்பொழுதெல்லாம் படிப்பதில்லை! பெரியஎழுத்தில் வரும்/''முரசொலி''/ தான் படிக்கிறேன்'' என்று 1957-ம்ஆ ண்டு சென்னை விருகம்பாக்கதில் நடந்த தி.மு.க கூட்டணி. மாநாட்டில் ராஜாஜி கிண்டலாக சொன்னார்.

சிரிப்பொலி விண்ணைப் பிளந்தது. / பெரியஎழுத்து''விக்கரமாதித்தன் கதை / என்றும் / சின்ன எழுத்து விக்கிரமாதித்தன் கதை / என்றும் அந்தக் காலத்திலேயே புக்குகள் வந்தது.. குறிப்பிடத்தக்கது!.

[குறிப்பு';.விக்கிற மாதித்தன்- விக்கிற மாதித்தன்'' என்கிறீர்களே? அப்படி அவர் எதைத்தான் விற்றார்?'' என்றோ அல்லது ''சோறுஉங்கும் போது அவருக்கு அடிக்கடி விக்கல் வருமோ?'' என்றெல்லாம் கேக்கப்படாது]

ஆகவே பெரியோர்களுக்கும் சிறியோர்களுக்கும் பெரிய எழுத்தே நல்லது!

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

கண் இரண்டும் மூடி தூங்கும் போதும் கனவுகள் காண்கிறோமே! அது எந்தக் கண்களால்? பிறவியிலேயே கண் பார்வையற்றோர் கனவு காண்கிறார்களா?

S.முஹம்மது பாரூக்.அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு