தொடர் – 6
இதுதான் சுதந்திரப் போராட்டமா?
தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் அண்மையில் வந்து கொண்டிருக்கும் ஒரு விளம்பரப் படத்தைக் காண நேரிட்டு இருக்கலாம். அந்த விளம்பரத்தில் பள்ளி ஆசிரியை மாணவர்களைப் பார்த்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த ஐந்து பேர்களின் பெயர்களைச் சொல்லும்படி கேள்வி கேட்பார். அதற்கு பதில் அளிக்கும் மாணவர் ஐந்து பேர்களைச் சொல்லுவார். அந்த ஐந்து பேரில் ஒருவர் கூட முஸ்லிம் அல்ல. அது மட்டுமல்லாமல் அந்த ஐந்து பேருமே பிராமணர்கள். அப்படியானால் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் எந்தப் பங்குமே வகிக்கவில்லையா? தியாகங்கள் செய்யவில்லையா? இன்றைக்கு , பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் பதவிக்குரிய வேட்பாளர் நரேந்திர மோடியை பிரதமராக்கிப் பார்க்கும் நிறைவேற முடியாத நீர்க்குமிழி ஆசையில் பிரச்சாரத்தில் கட்டவிழ்த்துப் படும் வரலாற்றுப் பொய்களுள், இந்திய சுதந்திரத்துக்கு முஸ்லிம்கள் எதிராக இருந்தார்கள் என்பதும் ஒன்று. ஆதாரங்களை அடுக்கினால் இவர்களின் மதச்சாயம் பூசி மறைக்கப் படும் வரலாறுகள் வெளிவரும். இத்தகைய திட்டமிட்ட உடல் வணிகம் செய்யும் ஊடகங்களின் மற்றும் அவதூறு செய்யும் அரசியல் அநாதைகளின் முகமூடிகள் கிழிந்து விடும்.
இன்று எதிர்கால இந்தியப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருப்பவரைத் தேர்ந்தெடுக்கும் அமைப்பு மற்றும் அந்த அமைப்பை சார்ந்த பல அமைப்புகள் இந்திய சுதந்திரப் போராட்ட நேரத்தில் - இரத்தமும் வியர்வையும் சிந்தப் பட்ட நேரத்தில் – மாடுகளுக்கு பதில் மனிதர்கள் செக்கிழுத்த நேரத்தில் – என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? என்ன செய்தார்கள் என்பது வரலாற்றில் மறைக்கப்பட முடியாத உண்மைகள். உதாரணத்துக்கு ஒருவரின் வரலாற்றை சொன்னாலே இவர்கள் ஓட்டமெடுக்க வேண்டும்.
வீர சவார்க்கர் என்று அழைக்கப் படும் ஒருவர் இருந்தார். அவரது எழுத்துக்களைப் படித்தாலே அவரது சுயரூபம் வெளிப்படும். வன்மமும் துவேஷமும் கொண்டவர். ஆர் எஸ் எஸ் அமைப்பின் அங்கமாகத் திகழ்ந்தவர். இந்து மகா சபையை நிறுவியவர். இந்த வீர சவர்க்காருடைய உண்மைப் பெயர் விநாயக் தாமோதர் சவார்க்கர் என்பதாகும் . இவருடைய பெயருக்கு முன் “வீர “ என்கிற அடைமொழி அல்லது பட்டம் ஏன் வந்தது என்று வரலாற்றை உற்று நோக்கும் பலருக்கு புரியாத விந்தை. மாவீரன் நெப்போலியன் என்றும் மாவீரன் அலெக்சாண்டர் என்றும் வரலாறு பல உண்மை வீரகளுக்கு பட்டம் வழங்கி கவுரவித்து இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கூட ஒரு முக்கிய அரசியல் தலைவரின் அடிதடி மகனுக்கு அஞ்சா நெஞ்சன் என்றும் , மாவீரன் என்றும் பட்டம் வழங்கி அழைத்து வருகிறார்கள். பொன்னியின் செல்வியும் இந்தப் பட்டியலில் அடங்கும். இவைபோல காரணம் இல்லாமல் பட்டங்கள் வழங்குவது ஒரு நகைச்சுவையாக மாறிவிட்டது. இப்படி ஒரு வகை நகைச் சுவைதான் சவர்க்காருடைய பெயருக்கு முன் “வீர” என்கிற பட்டத்தை வைத்து அழைப்பதும். அவருடைய வரலாற்றைப் படித்தால் நமக்கு சிரிப்புத்தான் வருகிறது.
இந்திய சுதந்திர வேள்வியில் தியாகத்தில் புடம் போடப்பட்ட பல முஸ்லிம்களின் பெயர்கள் மறைக்கப் பட்டு அகா சுகா பேர்வழிகளின் பெயர்கள் முன்னிறுத்தப் பட்டது ஏன்? ஒரு பிளாஷ் பேக்குக்குப் போகலாம். சுதந்திரப் போராட்ட வீரர் என்று அந்தமான் சிறையில் அடைக்கப் பட்ட ஒருவர் நவம்பர் 1913ல் பிரிட்டிஷ் அரசுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுகிறார் ; அல்லது கருணை மனு போடுகிறார்; அல்லது காலில் விழுகிறார். அந்தக் கருணை மனுவின் சாராம்சங்கள் இவையாகும்.
- பிரிட்டிஷ் அரசு என்னை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யுமானால், நான் பிரிட்டிஷ் அரசுக்கு உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்.
- பிரிட்டிஷ் அரசமைப்பை ஏற்றுக் கொண்ட எனது மாற்றம், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் என்னை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிற ஏராளமான இளைஞர்களை சரியான திசைவழிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும்.
- மேன்மைக்குரிய பிரிட்டிஷ் அரசு விரும்புகிற எந்த வழியிலும் நான் பணிபுரிவேன்."
இப்படி இந்தியாவைக் காட்டிக் கொடுக்கும் வாசகங்கள் கொண்ட கடிதத்தை அந்நியருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு அந்தமான் சிறையில் இருந்து வெளிவந்தவர்தான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான வரும் இந்து மகா சபையின் தலைவரும் ஆன வி .டி. சவர்க்கார். (ஆங்கிலேய அதிகாரிகளுக்கு சவார்க்கர் எழுதிய கடிதத்திலிருந்து பிரண்ட்லைன் ஏப்ரல் 07,1995 இதழ்). இந்து மகா சபைதான் இன்றைய பாரதீய ஜனதாக் கட்சியின் தாத்தா. இதன் தத்துவங்கள்தான் இன்றைய பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றவே முடியாதவை என்று குறிப்பிடப்படும் ஐந்து அம்சங்கள்.
இதை இங்கு வேதனையுடன் குறிப்பிடக் காரணம் , இப்படித் தன்னுடைய விடுதலைக்காக தேசத்தின் விடுதலையை துச்சமாக மதித்து நாட்டை மாற்றாருக்குக் காட்டிக் கொடுத்த வரலாற்றுக் களங்கத்தை சுமந்து கொண்டிருக்கும் இவரின் உருவப் படத்தைத்தான் 2003ம் வருடம் பிப்ரவரி 23ம் தேதி பாராளுமன்றத்தில் மைய மண்டபத்தில் மகாத்மா காந்தியின் படத்துக்கு நேர் எதிராக அன்றைய வாஜ்பாய் அரசு திறந்து வைத்து சந்தோஷப்பட்டது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய மூளைகளில் ஒரு மூளை என்று அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு அதிலும் மன்னிப்புக் கேட்ட வி. டி. சவர்க்காரின் உருவப்படம் , அவர்களால் சுட்டுக் கொல்லப் பட்ட மகாத்மா காந்தியின் படத்துக்கு எதிரே பாராளுமன்றத்தில் வைக்கப் பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல . அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேரின் விமான நிலையத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. இது மட்டுமின்றி, போர்ட் பிளேரில் உள்ள தியாகிகளின் சதுக்கத்தில் உள்ள தியாகிகளின் சிலைகளுடன் இந்தக் காட்டிக்கொடுத்த மன்னிப்பு வாங்கிக்கும் 2003ம் ஆண்டு சிலையும் நிறுவப்பட்டது என்றால் இவைகள் இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழைகள் என்பதை சிந்திக்க வேண்டும்.
இப்படித்தான் இந்தி ய விடுதலைப் போராட் டத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பதிந்தும் பொதிந்தும் கிடக்கும் எண்ணற்ற முஸ்லிம்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டு, கொச்சைப் படுத்தப்பட்டு, ஆங்கிலேயருக்கு அடிவருடிய சங்பரிவார் துரோகிகள் வீரத்தியாகிகளாக காட்டப்பட்டு வருகிறார்கள். சவார்க்கர் ஒரு கோழை அவரை விடுதலைப் போராட்ட வீரர் என்று சித்தரிப்பது ஆபத்தான அபத்தம்.
இந்த சவர்க்காரின் ஆரம்ப வரலாற்றையும் இங்கு தருவது இன்றைய அரசியல் சூழ்நிலையில் இன்னும் பொருத்தமாகுமென்று கருதுகிறேன். இதனைப் படிப்பதன் மூலம் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை உயரிய மரியாதைகளுக்கு சவர்க்கார் போன்றவர்கள் தகுதி படைத்தவர்கள் தானா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிரான அரசியலை முன்னெடுத்தவர்களில் மூஞ்சே, ஹெட்கேவர், கோல்வால்கர் தொடங்கி, 'ஆர்.எஸ்.எஸ். & கோ'வினரால் அதிகம் அடையாளம் காட்டப்படுவோர் வீர சிவாஜி, வீரசவார்க்கர், பாலகங்காதர திலக் ஆகியோராவர். அதற்குக் காரணமும் இருக்கவே செய்கிறது. முடிசூடுவதற்காக பார்ப்பனர்களிடம் அடி பணிந்த சிவாஜியாக இருந்தாலும், மதசார்பின்மையை முன்னிலைப்படுத்திய காங்கிரஸ் மாநாட்டில் செருப்பை விட்டெறிந்து ரகளையில் ஈடுபட்ட 'திலக்'காக இருந்தாலும், காந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவார்க்கராக இருந்தாலும் அவற்றை வரலாற்றில் மறைத்து, தேசியம் என்ற பொதுத் தலைப்பின்கீழ் இவர்களை அறிமுகப்படுத்தலாம் என்பதுதான் அது. இந்துத்வா என்னும் நஞ்சை புகட்டுவதற்காக சேர்க்கப்படும் தேன்தான் சங்க்பரிவாரால் மற்றும் அதன் பிரதமர் வேட்பாளரான மோடியால் கலக்கப்படும் "தேசபக்தி” என்கிற வார்த்தைப் பிரயோகமாமாகும். உண்மையில் நாட்டுப் பற்று என்கிற வார்த்தையை சொல்வதற்கே இவர்கள் அருகதை அற்றவர்கள் என்பதே வரலாறு. சவர்க்காரின் வரலாற்றை சுருக்கமாகப் பார்த்தாலே நாம் இந்த முடிவுக்கு வரலாம்.
விநாயக் தாமோதர் சவார்க்கர், பார்ப்பனர்களிலேயே தூய பிரிவாகக் கருதப்படும் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். பார்-அட்-லா படிப்பதற்காக இங்கிலாந்துக்குப் போன சவார்க்கர், அங்கே "சுதந்திர இந்தியச் சங்கத்தில்" இணைந்த இந்திய மாணவர்கள் ஆயுதமேந்தக் காரணமாக இருந்ததாக இங்கிலாந்து அரசு கருதியது.
வங்காளத்தின் 'குதிராம் போஸ்'க்கு எதிரான வழக்கில் வாதாடிய சர். கர்ஸன் என்பவரை 1909-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றதாக 'மதன்லால் திங்கரா' என்ற சுதந்திர இந்தியச் சங்கத்தின் தீவிர உறுப்பினர் கைது செய்யப்பட்டார். அந்தக் கொலையில் வி.டி. சவார்க்கருக்கும் தொடர்பு இருந்ததாக 13.3.1910-ஆம் நாள் அவரும் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் மேலும் விசாரணைக்காக சவார்க்கரை கப்பலில் இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். வரும் வழியில் பிரான்சில் 'மார்செய்லீஸ்' என்ற துறைமுகத்தில் 8.7.1910-அன்று சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறி தப்பித்துச் செல்ல முயன்று, உடனே பிடிபட்டார் சவார்க்கர். தண்டனையில் இருந்து தப்பும் எண்ணம் தொடக்கம் முதலே அவருக்கு இருந்து வந்தது.
அதே ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தமான் தீவுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டு 1911-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் சிறையிலடைக்கப்பட்டார். சிறைக்குக் கொண்டு வரப்பட்டவுடன், 6 மாதம் கழித்து ஒரு கருணை மனு எழுதி பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார் மன்னிப்பு மனு வீரரான சவார்க்கர். அது கண்டுகொள்ளப்படாமல் போகவே மீண்டும் அதை நினைவூட்டி 1913-ஆம் ஆண்டு நவம்பர் 13-இல் மேலே நான் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களுடன் கூடிய “புகழ்பெற்ற' கருணை மனுவினை அனுப்பி வைத்தார்.
கருணை மனுப் போர் தொடுப்பதில் மட்டும், என்றும் சளைக்காத மன்னிப்புக் கடித மாவீரராகவே திகழ்ந்தார் அவர். அந்தமானில் அடைக்கப்பட்டபோதும் சரி, காந்தியார் படுகொலையில் சிறையில் இருந்தபோதும் சரி - அவர் எழுதிய கருணை மனுக்கள் மாதிரியாகக் கொள்ளப்பட வேண்டியவை. அதிலும், தடாலடியாகக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போன்று எழுதுவது சவர்க்கரின் தனிச்சிறப்பு.
அந்தமானில் சவர்க்காரின் சிறை வாழ்க்கை நிறைய சுவாரசியமானது. அவருடன் சிறையிலிருந்த 92 வயதான தினேஷ் குப்தா என்பவர் ஆக. 9, 2003 அன்று டில்லியில் அளித்த ஒரு பேட்டியில்,
"வி.டி. சவர்க்காரும் நானும் ஒன்றாக சிறையில் இருந்தவர்கள். அவர் ஒன்றும் சிறையிலேயே உயிரைவிட்டு விடவில்லை. சிறையிலேயே உயிரைப் பறிகொடுத்த 8 விடுதலை தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்ற போர்ட்ப்ளேயரில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் சவர்க்காரின் சிலையையும் வைத்திருப்பது அந்த மற்ற விடுதலை வீரர்களையும் அவமானப்படுத்துவதாகும். மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உதவுவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் எழுதியனுப்பிய சவர்க்காரை விடுதலைப் போராட்டத் தியாகியாக சித்திரிப்பது மாபெரும் தவறாகும்; தாங்கமுடியாத துன்பமாகும்" என்று குறிப்பிட்டார்.
அவருடன் சிறையிலிருந்த விஸ்வநாத் மாத்தூர் என்பவர், "ஒரு கோழையைப் புரட்சியாளனாக தூக்கி நிறுத்துவது கேலிக் கூத்தாகும்" என்று கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் சவர்க்கார் படத்தை நாடாளுமன்றத்தில் வைத்தபோது தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தினேஷ் குப்தாவும், மாத்தூரும் மட்டுமல்ல, சவார்க்கருடன் சிறையில் இருந்த வங்காளத்தின் திரிலோகநாத் சக்ரவர்த்தி அவர்கள் தனது சுயசரிதை நூலில் தங்களை சிறை அதிகாரிகளுக்கு எதிராகப் போராடத்தூண்டி விட்டு, தான் மட்டும் (சவார்க்கர்) நல்ல பிள்ளையாக இருந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். இதை சவார்க்கரும் 'அந்தமானில் எனது ஆண்டுகள்' என்ற நூலில் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரபல வரலாற்றாளர் பிபின் சந்திரா கூறுகிறார்.
1911-ஆம் ஆண்டு சவார்க்கர் எழுதிய கருணை மனுவில் "1906-07 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நிலவிய நம்பகத் தன்மையற்ற சூழலினால் நாங்கள் பாதை தவறிவிட நேரிட்டது. நாட்டின் நன்மையிலும், மனித நேயத்திலும் அக்கறை கொண்ட யாரும் தவறான பாதையில் செல்ல விரும்ப மாட்டார்கள். எனவே பெருந்தன்மை வாய்ந்த அரசு என்னை மன்னித்து விடுதலை செய்தால் நான் விசுவாசமாக இருப்பதோடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தவறான பாதை செல்வோரையும் என் வழிக்கு மாற்றுவேன்... எனவே பாதை தவறிய இந்தப் பிள்ளை பெற்றோரிடம் மன்னிப்புக் கோருவதில் தவறில்லை" என்று குறிப்பிடுகிறார். அதாவது பிரிட்டிஷார் இவருக்குப் பெற்றோராம்.
இப்படியாக, அந்தமானில் சவார்க்கரின் வீர, தீர, தியாகப் பெருவாழ்க்கை நிறைவுற்று 1921-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் அங்கிருந்து மாற்றப்பட்டு, 1921-24 ஆம் ஆண்டுகளில் வங்காளத்தின் அலிப்பூர் சிறையிலும், மகாராஷ்டிராவின் ரத்னகிரியிலும் சிறை வைக்கப்பட்டு, 1924-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு ஆள் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்பது உட்பட்ட நிபந்தனைகளுடன் விடுதலையானார் சவார்க்கர்.
சொன்னபடி செய்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக ஆள் திரட்டும் பணியில் விடுதலையான பிறகு அவர் ஈடுபட்டார். அவரது தலைமையில், காந்தியார் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான நாராயண ஆப்தே மகாராஷ்டிரத்தில் இந்து மகாசபைக்கும், பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் ஆள் எடுக்கும் பணியில் ஈடுபட்டு அதற்காக அரசாங்கத்திடமிருந்து உரிய ஊக்கத் தொகையையும் பெற்று வந்தார். இப்படிப்பட்டவர்கள்தான் நாட்டுப் பற்று பற்றி நாக்குக் கிழியப் பேசுகிறார்கள்.
இந்து மகா சபையையும், ஆர்.எஸ்.எஸ் - சையும் கொண்டு, இந்துத்வாவைக் கட்டமைக்கப் பணியாற்றினார். இந்தியாவை ஒரே கலாச்சார தேசியமாக இந்துத்துவத்தின் அடித்தளத்தில் இந்து அரசை நிறுவுவதே பணியாகக் கொண்டிருந்தார்.
காந்தியார் கொலை வழக்கு செங்கோட்டையின் தனி விசாரணை அரங்கிற்குள் நடத்தப்பட்டபோது, அதில் சவார்க்கர் மட்டுமே தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்றும், தன்னால் எந்தத் தீங்கும் நேரவில்லையென்றும் புலம்பியபடியே பேசினார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது காவல் துறையினருக்கு அவர் எழுதிய கடிதத்திலும் அவ்வாறே குறிப்பிட்டிருந்தார் அது நிராகரிக்கப்பட்டது.
பரபரப்பான அந்த கொலை வழக்கில் நீதிபதி ஆத்மசரண் அவர்களால் "குற்றம் நிரூபணமாக போதிய ஆதாரம் இல்லை" என்று விடுவிக்கப் பட்டார் சவார்க்கர். காரணம் மேற்கூறிய திட்டத்தில் ஆர் எஸ் எஸ் - ஸின் ஆலோசனையின்படி, நேரடி முக்கியக் குற்றவாளிகளான நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அளித்த வாக்குமூலங்கள் சவார்க்கரின் பெயர் இடம் பெறாதபடி பார்த்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்திலோ சவார்க்கர் வெளியிட்ட கருத்து அவரது தீரத்தை (!) வெளிப்படுத்தியது. 'கோட்சேயும், ஆப்தேயும் தங்களை பூனாவில் உள்ள இந்து மகாசபை வீரர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகக் கூறினார். ஆனால், 1937-ஆம் ஆண்டு முதல் கோட்சேவுக்கும் சவார்க்கருக்கும் இருந்த தொடர்பு வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. சவார்க்கரின் மேற்பார்வையில் கோட்சே நடத்திய இந்துராஷ்டிரா இதழும், கோபால் கோட்சேயின் வாக்கு மூலங்களும் தனஞ்செய்கீரின் (சவார்க்கரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்) நூலுமே சாட்சி.
இந்த வழக்கு விசாரணையிலும் ஒரு கூத்து. வழக்கில் இருந்த மற்ற அனைவரிடமிருந்தும் தனித்துக் காணப்பட்டவராகவும், சோகமே வடிவான முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தவராகவும் சவார்க்கர் காணப்பட்டார். தூக்கு மேடை ஏறும் முன் கோட்சேயின் கடைசித் துயரமே, சவர்க்கார் தன்னைத் தூண்டி விட்டுப் பின் சரிவரக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான். இப்படி திட்டமிட்டு தேசப் பிதாவையே கொன்றவர்கள் பெற்றுள்ள பரிசு நினைவுச்சின்னம், விமான நிலையைப் பெயர், பாராளுமன்றத்தில் படம்.
எங்கும், எதிலும், எப்போதும் பட்டப் பெயரைத் தவிர வீரத்திற்கும் தியாகத்துக்கும் உண்மையான நாட்டுப் பற்றுக்கும் சவார்க்கருக்கும் நெருக்கம் இருந்ததே இல்லை என்பதே உண்மை . இப்படிப்பட்ட வரைதான் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். இவருடைய நாட்டுப் பற்றை, இவர் விடுத்தப் பிரகடனம் ஒன்று அடையாளம் காட்டுகிறது; பறைசாற்றுகிறது. நாட்டுப் பிரிவினையைத் தூண்டிய பிரகடனங்களில் இதுவும் ஒன்று.
1917ல் ஆர்எஸ்எஸின் சவர்க்கார் விடுத்த பிரகடனம் இதுவாகும்.
“இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. ஒன்று இந்து தேசம். இன்னொன்று முஸ்லிம் தேசம். இன்னும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மையினர் என்ற அளவில் அல்லாமல் எந்தவொரு எதிர்காலமும் இல்லை” .(R.N.AGARWAL THE DIALOGUE BETWEEN HINDUS & MUSLIMS).
இந்த சவர்க்கர் பூனாவில் மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த ஒரு காங்கிரஸ்காரர் கூட வரவில்லை. அன்றைய உள்துறை அமைச்சர் சவான் அரசு மரியாதை தரவேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்தார். அந்தமான் சிறையில் சவர்க்கருக்கு சிலை வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை பண்டித நேரு காலில் போட்டு மிதித்தார். அதற்கு பதில் அந்த சிறையை இடித்து மருத்துவமனை ஆக்கலாம் என்றார். மொரார்ஜி தேசாய் பிரதமரான போது கூட சாவர்க்கரின் நினைவிடத்தைப் பார்வை இட மறுத்தார். இடையில் ஏற்பட்ட பிஜேபி ஆட்சிதான் சந்தடி சாக்கில் பல வரலாற்றுப் பிழைகளை வாஜ்பாய் தலைமையில் செய்தது.
இறுதியாக ஒரு கேள்வி,
சுதந்திர போராட்டத்தின் போது நாட்டுக்கு சவார்க்கர் மாதிரி துரோகம் செய்த ஒரு முஸ்லிமை ஆதாரப்பூர்வமாக காட்டி இவர்களால் நிரூபிக்க முடியுமா? தேசவிடுதலைக்காக தன் சமுதாயத்தின் வருங்காலத்தை மொத்தமாக பணயம் வைத்த முஸ்லிம்கள் மீது குத்தப்பட்டுள்ள முத்திரை, “தேச விரோதிகள்” .” பயங்கரவாதிகள்”, “ தீவிரவாதிகள்” என்பவைதான். நம்முடைய பாட நூல்கள் காந்தியின் பெயரையும் நேருவின் பெயரையும் இவர்களுடன் சேர்த்து, பிரிட்டிஷ் அரசின் அடிவருடிகளையுமே குறிப்பிடுகின்றன. இன்னொரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பகத் சிங், சுகதேவ் சிங், உத்தம் சிங் ஆகிய சீக்கிய தியாக சீலர்களை குறிப்பிடுகின்றனவா? அப்படியே குறிப்பிட்டாலும் ஒற்றை வரியில் தானே குறிப்பிடப்படுகின்றன?
அவர்கள் குறிப்பிடாததை எல்லாம் நாம் குறிப்பிடுவோம். இன்ஷா அல்லாஹ்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்வீரரான கேரள மண்ணின் குஞ்சாலி மரைக்காயரில் இருந்து தொடங்குவோம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இப்ராஹீம் அன்சாரி
17 Responses So Far:
அன்பு காக்கா
உண்மை இந்திய வரலாற்றின் ஆழத்திற்கு சென்று இந்திய சுதந்திர துரோகிகளின் முகத்திரையை கிழித்து வருகின்றீர்கள்.
சுதந்திரத்திற்கு தடையாய், மகாத்மா காந்தியை சுட்டுக்கொல்ல காரண கர்த்தாக்களில் ஒருவராய் , இந்தியாவை காட்டிக்கொடுக்க சிறையில் விடுதலை பிச்சை கேட்டசவர்க்கர் என்பவன் எங்கே? உண்மை நெஞ்சுறுதியோடு வெள்ளையனை எதிர்த்த முஸ்லிம்கள் எங்கே ?
உங்களின் இந்த உண்மைகள் வரலாற்று விபரங்கள்
இன்றைய நாள் வரை பள்ளிகளை போதிக்கப்படாமல் ஒரு போலியான வரலாற்றை , பல உண்மை சம்பவங்கள் மறைக்கப்பட்ட வரலாற்றைத்தான், பார்ப்பனர்களின் புகழ்பாடும் வரலாற்றைத்தான் , வரலாறு என்ற பெயரில் போதித்து வருகின்றனர்.
இவர்கள் மிகப்பெரிய துரோகத்தை பள்ளி மாணவர்களுக்கு செய்து வருகின்றனர்.
உண்மை வரலாறு பள்ளியில் போதிக்கப்படும் நாள் வருமா ?
இன்ஷா அல்லாஹ் எதிர் பார்ப்போம்.
அபு ஆசிப்.
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே என்ற கொடியவனை தூண்டிவிட்ட இந்த சவர்க்கர், இந்திய வரலாற்றுப்பக்கத்திலிருந்தே தூக்கி எரியப்படவேண்டியவர்.
இந்திய சுதந்திரத்தின் துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்படவேண்டியவர்.
இந்திய ஜனநாயக குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் பார்த்தால் கோட்சேயின் வாக்கு மூலப்படி, தூண்டிய குற்றத்திற்காக, கோட்சேக்கு கொடுத்த தண்டனையை விட பல மடங்கு தண்டனை பெற வேண்டியவன்.
இவனுக்கெல்லாம் பாராளுமன்றத்தில் மைய மண்டபத்தில் உருவப்படம்
காரித்துப்பப்படவேண்டியன் கண்ணியப்பட்ருத்தப்படுகின்றானா ? என்னே கொடுமை.
இந்த நாய்கள் கிடக்கட்டும்,
நம் கேரள வீரர் குஞ்சாலி மரைக்காயரின் தியாகத்தை ஆவலுடன் எதிர் பார்த்து
அபு ஆசிப்.
To Brother Ebrahim Ansari,
இந்திய சுதந்திர போராட்டத்தில் எப்படிப்பட்ட கிரிமினலாக கூட இருந்தாலும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. முஸ்லீமாக இருந்தால் மட்டும் அங்கீகாரம் கிடைக்க வில்லை.
உங்களின் மொத்த ஆக்கமும் இந்த வலைத்தளத்துக்குள் அடங்கி விடக்கூடாது என்பது என் விருப்பம்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றை தந்திரமாக மாற்றி எழுதி ஏமாற்றி அதை மனப்பாடம் செய்தால்தான் மார்க் என்று நமக்கெல்லாம் செம ஆப்பு அடிச்சிட்டானுக.
மாற்றி எழுதனும் மக்களே; ஆப்பை உருவி அவிங்களுக்கு அடிக்கனும்.
பொய்யாலே நாட்டை ஆளத்துடிக்க நினைப்பவர்களுக்கு விடப்பட்டுள்ள நல்ல சவால்.
உண்மையை தொடர்ந்து தாருங்கள். மனித நேயம் இவர்களை அறியட்டும்.
இந்த சாவர்க்கரின் கோழைத்தனமான கருணை மனுவைப் பற்றி சமீபத்தில் இணையத்தில் மேலோட்டமாகச் சுட்டிக் காட்டப்பட்டதை வாசிக்க நேர்ந்தாலும் இத்தனை விளக்கமாகக் காக்கா சொல்லித்தான் அறிகிறேன்.
சுதந்திரத்திற்காக ஆரம்பம் முதற்கொண்டே போராடியவர்களை மறைத்தல் ஒருபுறம்; துரோகிகளைத் தியாகிகளாகச் சித்தரிப்பது மறுபுறம் என்று சதித்திட்டம் தீட்டி செயல்பட்டது அம்பலமாகிறது. இவற்றையெல்லாம் வரலாற்றில் குறித்தபோது நேர்ந்த பிழை என்று இனி சப்பைக் கட்டு கட்டுவார்கள்; நாமும் தேமே என்று கேட்டுக்கொள்ள சேண்டியதுதான்.
ஆட்சியில்லையென்றாலும் கொஞ்சமாவது நிர்வாக அதிகாரம் மட்டுமாவது நமக்கு கைவசப்பட்டாலே இவற்றை மாற்றி நேர்மையான வரலாற்றை எதிர்கால மக்களுக்குத் தர முடியும்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
தம்பி சபீர் அவர்களுக்கு,
அண்மையில் சன் டி வியில் நிகழ்வுற்ற விவாத அரங்கில் பேராசிரியர் ஜவா ஹிருல்லாஹ் இவரைப் பற்றி குறிப்பிட்டார். ஏற்கனவே இது என் பட்டியலில் இருந்தாலும் . விபரமாக அதன்பின் படித்து உணர்வுகளைத் தந்து இருக்கிறேன்.
இன்னும் பல முகமூடிகளைக் கிழிக்க வேண்டும்.
//ஆட்சியில்லையென்றாலும் கொஞ்சமாவது நிர்வாக அதிகாரம் மட்டுமாவது நமக்கு கைவசப்பட்டாலே இவற்றை மாற்றி நேர்மையான வரலாற்றை எதிர்கால மக்களுக்குத் தர முடியும்.//
மீண்டும் தம்பி சபீர் அவர்களுக்கு,
ஆட்சியில் இல்லாவிட்டாலும் நிர்வாகத்தில் கூட நம்மவர்கள் இல்லியே என்று குறைப பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
நியாயமே.
அண்மையில் துளசியாபட்டினத்தில் நடந்த ஒரு கல்வி விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு பேசியதில் ஒரு பகுதி விஷயமே இது பற்றித்தான், சுருக்கமாக ,
நமது பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்று நம்மால் கூற முடியும். ஆனால் என்னவாக இருக்கிறார்கள் என்று நம்மால் கூற முடியுமா?
நமது பிள்ளைகள் ஆஸ்திரேலியாவில், பிரிட்டனில், அமெரிக்காவில், துபாயில், கத்தாரில், குவைத்தில் இருக்கிறார்கள் என்று நம்மால் கூற முடியும்.
என் மகன் ஒரு சப இன்ஸ்பெக்டராக இருக்கிறான் என்று நம்மால் கூற முடியுமா? என் சொந்தக்காரன்ர ஹைகோர்ட்டில் வக்கீலாக இருக்கிறார் என்று நம்மால் கூற முடியுமா? எனக்கு அடுத்த வீட்டுக் காரரின் பிள்ளை தாசில்தாராக இருக்கிறார் என்று நாம் கூற முடியுமா? நம்மில் ஒரு பேங்க் மேனேஜர் உண்டா? அரசுத்துறை செயலர் உண்டா? நீதிபதி உண்டா?
கடந்த மாதம் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் குரூப் நான்கு தேர்வுக்கு இருபதாயிரத்துக்கு மேல் வேலை வாய்ப்பு விளம்பரம் வந்ததே இந்த ஊரில் அதற்காக விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?
இப்போது குரூப் இரண்டு தேர்வுக்கு விளம்பரம் வந்துள்ளதே எத்தனை பேர் விண்ணப பிக்கப் போகிறீர்கள்? குறைந்த பட்சம் இதைப் பற்றி நமக்குத் தெரியுமா?
அறுபது ஆண்டுகாலமாக கல்லூரி இருக்கும் எங்கள் ஊரான அதிராம் பட்டினத்தில் இப்போதுதான் ஒரு ஐ. எ. எஸ் உருவாகி இருக்கிறார். முத்துப் பேட்டையில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மட்டுமே உருவாகி இருக்கிறார். பாரம்பரியமான நமது ஊர்களில் நிர்வாகப் பதவிகளில் எங்கே நம்மவர்கள்?
நமக்கு வேண்டியதெல்லாம் ஒரு ஊதா நிற அட்டை. அதற்கு ஒரு விசா. எப்படி நாம் நிர்வாகத்தில் நுழைய முடியும்? இந்த லட்சணத்தில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்துகிறோமே இட ஒதுக்கீடு தந்தாலும் வேலைக்குப் போக இருப்பது யார்?
- இவை எனது பேச்சின் சாராம்சங்கள்.
நிறையப் பேர் கைதட்டிவிட்டு தங்கள் பாஸ்போர்டை புதுப்பிக்கப் போய்விட்டார்கள்.
அந்தமானில் நிறுவப்பட்ட [வீர?] சவர்க்கார் சிலையை லண்டன் நெல்சன் சதுக்கத்தில்[ Nelson Square] வைக்கலாம்!
இந்திய நாடாளுமன்றதில் தொங்கும் மன்னிப்பு மன்னன் [வீர?] சவர்க்கரின் படத்தை பிரிட்டிஷ் பார்லிமெண்டில் தொங்க விடலாம்.
கட்ட பொம்மனை காட்டிக் கொடுத்த 8டப்பனுக்கு 8ஐயா புறத்தில் 8அடி உயரத்தில் எப்போ சிலை வைக்கப் போறாங்கலாம்?
சரித்திரமே! சரித்திரமே! காந்தியைத்தான் கொலை செய்தார்கள்!
.உன்னையுமா கொலை செய்யவேண்டும்?
S.முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்.
//அவர்கள் குறிப்பிடாததை எல்லாம் நாம் குறிப்பிடுவோம். இன்ஷா அல்லாஹ்.//
உண்மையாக ! அவசியம் பதிக்கப்பட வேண்டும் !
உண்மையை உரக்கச் சொல்வதிலும், உண்மையோடு ஒன்றிருப்பதிலும்... என்றும் நாமும் நேர்கொண்ட பார்வையோடு தொடர்வோம் !
அதிரைநிருபரும் உடணிருக்கும் இன்ஷா அல்லாஹ் !
\\நிறையப் பேர் கைதட்டிவிட்டு தங்கள் பாஸ்போர்டை புதுப்பிக்கப் போய்விட்டார்கள்.\\
காக்கா, சிரியோ சிரியென்று சிரித்து விட்டேன்; வாய்விட்டுச் சிரித்தேன்; நோய்விட்டுப் போகுமென்று! எப்படி இடையில் இந்த “குசும்பு” எல்லாம் நுழைக்கின்றீர்கள். கட்டுரையாளர்களில் நீங்கள் தனி ரகம்; தங்களின் கட்டுரையைப் படிப்பதே தனி சுகம்!
யான் வாக்களித்தபடி, “ஔரங்கசீப் பற்றிய உங்களின் கட்டுரைக்குக் கவிதை வடிவம் கொடுக்க” கவிதைக்கான கருவைத் தேடித் தங்களின் ஆய்வென்ன்னும் ஆழியில் சென்று வரும் போதில் அவ்வாய்வை மீண்டும் மீண்டும் படிக்கும் ஓர் அரிய வாய்ப்பும் கிட்டியது.
//நிறையப் பேர் கைதட்டிவிட்டு தங்கள் பாஸ்போர்டை புதுப்பிக்கப் போய்விட்டார்கள். //
காக்கா,
ஆதங்கத்தில் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களின் பேச்சுக்குக் கிடைத்த கைதட்டுதலை நான் ஒரு பரிணாம மாற்றத்திற்கான அடையாளமாகப் பார்க்கிறேன். இப்போது நீங்கள் சுட்டிக்காட்டிய இயலாமைகளை எனக்கு எந்த இபுறாகீம் அன்சாரி காக்காவோ சி என் எம் சலீமோ சுட்டிக்காட்டவில்லையே?
சரியாக வீட்டுப்பாடம் ஓதாவிட்டால் குட்டை போட்டுவிடும் ஒஸ்தாது யாரும் நிர்வாகப் படிப்பைப் பற்றி எனக்குச் சொல்லித்தரவில்லையே?
ஹத்தத்து ராத்திரிக்கு உண்டியலில் காசுபோடக் கற்றுத் தந்தவர்கள் போலீஸுக்குப் படி என்று சொல்லவில்லையே.
தங்களைபோன்றோரின் நல்லுபதேசங்களால் இனி எம்மக்களும் எல்லாத் துறையிலும் எழுச்சி பெறத்தான் போகிறார்கள்.அல்லாஹ் உங்கள் ஹயாத்தைப்போட்டு வைத்து அதையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.
அதுவரைத் தொய்வின்றியும் சலிப்படையாமலும் தொடருட்டும் தங்களின் இந்த தஃவா பணி.
உங்களைப் பற்றித் தொடர ஒரு வலுவான கூட்டம் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உங்கள் சிந்தனை; எங்கள் செயல் என்பதாக இருக்கும் எங்கள் கோஷ்ம்.
// எனவே பாதை தவறிய இந்தப் பிள்ளை பெற்றோரிடம் மன்னிப்புக் கோருவதில் தவறில்லை" என்று குறிப்பிடுகிறார். அதாவது பிரிட்டிஷார் இவருக்குப் பெற்றோராம். //
காக்கா,
இதை மேலும் கிளறாதீர்கள். துர்நாற்றம் குடலைப் புடுங்குகிறது.
ஆஹா இப்பவே கண்ணைக்கட்டுதே ...இந்த வீ(ண)ர் சவர்க்காருக்காகதான் இந்த அல்டாப்பா....பொய் வரலாற்றை மாணவர்களுக்கு போதித்துக்கொண்டிருக்கும் இந்த புத்தகங்கள் மாற்றபடவேண்டும்....ஜாஹிர் காக்கா சொல்வதுபோல் இவ்வாக்கம் அ.நி யோடு நின்றுவிடக்கூடாது...
//நமது பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்று நம்மால் கூற முடியும். ஆனால் என்னவாக இருக்கிறார்கள் என்று நம்மால் கூற முடியுமா?//
எப்படி கூற முடியும் ?
அதான் பிள்ளை பிறந்தவுடன் ஆண் குழந்தையா ? பெண் குழந்தையா ? என்று கேட்பதற்கு பதிலாக பாஸ்போர்ட்டா ? மனக்கட்டா ? என்றுதானே கேட்கின்றனர்.
அந்த அளவுக்கு வெளிநாட்டு மோகம் தலைவிரித்து ஆடும் நம் சமுதாய மக்களிடம் ஆட்சி, அதிகாரம் என்ற பேச்செல்லாம் கிலோ என்ன விலை ? என்றுள்ள சமாச்சாரம்.
நம் நாட்டின் வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள நமக்கு முழுக்க முழுக்க சுதந்திரம் உள்ளதையும், அதை பயன் படுத்திக்கொள்ளும் பொருட்டு
நம் கல்வியின் தரத்தை நாம் மேம்படுத்திக்கொள்வது அவசியம் என்ற தூங்கிக்கிடக்கும் உணர்வுகளை தட்டி எழுப்ப ஒரு சக்தி கண்டிப்பாக உருவெடுத்தே ஆக வேணும் ஏதாவது ஒரு வழியில்.
அதற்காக , மீண்டும் என் மனதில் பட்டதை சொல்கின்றேன் தங்களைப்போன்ற
சமூக அக்கறை உள்ள ஒரு பண்பட்ட மனிதர் பதவிக்கோ அல்லது சபீர் சொல்வதுபோல் நிர்வாகத்தின் அதிகாரத்திர்க்கோ வந்தால் நம் கனவு ஓரளவு நிறைவேறும் என்று நம்பலாம்.
நிறைவேறுமா ?
அபு ஆசிப்.
Bror Zakir Hussain said;
//உங்களின் மொத்த ஆக்கமும் இந்த வலைத்தளத்துக்குள் அடங்கி விடக்கூடாது என்பது என் விருப்பம்.//
இதே கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
வரலாற்றுப்புரட்டு வித்தகர்கள் முதலில் வரலாற்று ஏடுகளில் கைவைத்து பின் கல்வித்துறை, அரசுத்துறை, அரசியல் போன்ற பல்வேறு துறைகளின் தங்களின் நிலைத்தன்மையை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டு செல்கிறார்கள் என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவர்களின் இந்த நீண்ட நெடிய சதித்திட்டத்தின் சூழ்ச்சியை அறிந்து விழிப்படைந்து செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இதற்கு தகுதியான ஒரு தலைமையும் அதற்கு உடன்பட்ட ஒரு சமுதாயமும் தேவையென்பது தற்போது நம் முன் உள்ள அவசரமும் அவசியமுமாகும்.
//உங்களின் மொத்த ஆக்கமும் இந்த வலைத்தளத்துக்குள் அடங்கி விடக்கூடாது என்பது என் விருப்பம்.//
அன்பின் தம்பி ஜாகிர் பின் அதைத் தொடர்ந்து சகோதரர் அஹமது தாஹா ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
நம்மால் முடிந்த வரை இவற்றை பலர் அறியச் செய்வோம். அதே நேரம் தொடர்ந்த முயற்சிகள் இளைய சமுதாயத்தால்தான் முன்னெடுத்து செல்ல இயலும். இன்றைய இளைய சமுதாயத்தில் பெரும் பகுதியினரின் உழைப்பு நமக்குள் பகைமைகளில் வீணாகிக் கொண்டு இருக்கிறது.
ஆக்கபூர்வமான காரியங்களை சிந்திக்காமல் தனிநபர் பகைகளுக்கு முன்ன்ரிமை கொடுக்கின்றனர். சலவைக் கடைகள் ஊரில் குறைந்து விட்டன. மூளைச் சலவைத் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.
எங்களைப் போல முதிய நிலையில் உள்ளவர்கள் எடுத்து சொல்லவே இயலும்.. செயலாக்கம் தருவது இளையவர்கள் கைகளில்.
இளையவர்கள் சரியான பாதையிலும் சமத்துவ எண்ணங்களிலும் பயணிக்க இனியாவது தொடங்காவிட்டால் வரும் கேடுகளை தடுத்து நிறுத்த இயலாது.
அடிப்படையில் பல கோளாறுகள் உள்ள பலர் இன்று ஒன்று இணைந்து வருகின்றனர்.
ஆனால் ஒரே இறை ஒரே மறை என்று இயங்கும் நமது சமுதாயம் தமிழ்நாட்டில் மட்டுமே முப்பது பிரிவுகளாக பிளவு பட்டுக் கிடக்கிறது. இதுவே இன்று வேதனை தரும் விஷயம்.
Post a Comment