இறைவனின் அருட்கொடையாக மனிதகுலம் அனைத்திற்கும் வழங்கப்பட அருள்மறைத் திருக்குர்ஆனிலிருந்து இறை வசனங்களை ஓதக் கேட்டாலும் அதன் பொருள் அறியாவிட்டாலும் அப்படியே நம் மனதை ஈர்க்கும். அன்றாடம் தொழுகையில் ஓதப்படும் இறைவசனங்களை முழுவதுமாக அர்த்தங்கள் பொதிந்த அவ்வசனங்களை கேட்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொருவராலும் அப்பட்டமாக உணரப்படும்.
இந்த வாரம் நாம் அன்றாடம் தொழுகையில் ஓதும் ஸூரத்துள் ளுஹா (முற்பகல்) என்ற அத்தியாயத்தின் வசனங்களை அழகிய உச்சரிப்புடன் ஓதுவதை காது கொடுத்து கேட்போம் இன்ஷா அல்லாஹ் !
ஸூரத்துள் ளுஹா(முற்பகல்)
மக்கீ, வசனங்கள்: 11
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
93:1. முற்பகல் மீது சத்தியமாக-
93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
93:3. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
93:4. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
93:5. இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
93:6. (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
93:7. இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
93:8. மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
93:9. எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
93:10. யாசிப்போரை விரட்டாதீர்.
93:11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
அதிரைநிருபர் பதிப்பகம்
2 Responses So Far:
உண்மையில் உள்ளச்சமுடையோர்க்கு இந்த அழுகை கண்டிப்பாக ஒரு சிறு
கண்ணீரையாவது கொண்டு வரவேணும்.
இறைவனின் அச்சமூட்டுதலை எண்ணி நாளை மறுமைக்கு நம்மை தயார் படுத்துவோம்.
அபு ஆசிப்.
அன்றாடம் தொழுகையில் அடிக்கடி ஓதக் கேட்கும் திருக்குர்ஆன் வசனங்களை அதன் அர்த்தங்கள் விளங்கி உணரும்போது சிலிக்கிறது...
Post a Comment