Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 1 15

அதிரைநிருபர் பதிப்பகம் | July 11, 2011 | , , , ,





உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி கிளே, தனக்கு வயது எட்டு மாதம் ஆனபோதே நடக்கத் துவங்கி விட்டாராம்! நம் உமர் தம்பியும் தனக்கு வயது எட்டு மாதம் ஆகும்போதே நடந்துவிட்டார்!
ஏன் இந்த ஒப்பீடு? செயற்கரிய செயல்களைப் பிற்காலத்தில் செய்ய இருப்பவர்களின் தொடக்க வாழ்வு, பெரும்பாலும் இப்படித்தான் இருந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான்.

இரண்டு, மூன்று வயதில் தன் மழலை வாயால் திருக்குறள்களை ஒப்புவிப்பார்! அந்த வயதிலேயே டார்ச் விளக்கு மூடியைத் திறந்து, பேட்டரி செல்களை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு விளையாடுவார்! அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பே எடிசன், மார்க்கோனி, ஸ்டீவன்சன், ஜேம்ஸ் வாட் இவர்களைப் பற்றிக் கதையாகச் சொல்வேன். அவரை விஞ்ஞானி ஆக்கவேண்டும் என்பது என்னுடைய அன்றைய ஆர்வம்! பேராசைதான். தன் உடன்பிறப்பை உயர்ந்தவனாக ஆக்கிப் பார்க்க மூத்த சகோதரனுக்கு ஆசை எழுவதில் வியப்பில்லைதானே?
சிறுவயதிலேயே அறிவியலில் ஆர்வம் மிக உண்டு! நமதூர் காதர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி முன்பு கீற்றுக் கொட்டகையில் நடந்தது. உமர் தம்பி ஆறாம் வகுப்பு ஆங்கில வகுப்பில் அமர்ந்துகொண்டு, அடுத்திருந்த ஏழாம் வகுப்பில் திரு. ரெங்கராஜன் சார் நடத்தும் அறிவியல் பாடத்தை உன்னிப்பாகக் கவனிப்பார்! அதை என்னிடம் வந்து சொல்வார்! திரு ரங்கராஜன் சார் வகுப்பு என்றால் நிரம்பப் பிடிக்கும் உமர் தம்பிக்கு.





மார்க்கோனியைப் போல வானொலிப் பெட்டி செய்யவேண்டும் என்று சிறு வயதிலேயே ஆசை! எங்கள் வீட்டு வாசலில் எப்போதும் சாக்பீஸ் பெட்டியால் செய்யப்பட ரேடியோ,அவரால் தொகுக்கப்பட்டது, பாடிக்கொண்டே இருக்கும்! பின்னாளில் உமர் தம்பி கும்பகோணத்தில் நடந்த கண்காட்சியில் ரேடியோ நிலையம் ஒன்றை அமைத்து, பாட்டுகளையும் செய்திகளையும் கண்காட்சிக் கூடம் முழுவதும் ஒலி பரப்பினார். நம் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியைத் தஞ்சை மாவட்டமே பாராட்டியது!

எங்கள் மாமா, ABC பிரிண்டர்ஸ் ஜனாப் S.M. அபூபக்கர் அவர்கள் உமர் தம்பிக்குத்தன் பொறுப்பில் ‘ABC ரேடியோ சர்வீஸ்என்ற பழுது நீக்கும் கடையைத் துவங்கித் தந்தார்கள். முறைப்படி 'லைசென்ஸ்' பெற்றுக் கடை நடந்துவந்தது.
இதற்கிடையில், மருக்கு மீண்டும் கல்லூரியில் சேர்ந்த படிக்கவேண்டும் என்றஆர்வம் ஏற்பட்டது!
-- உமர்தம்பி அண்ணன்                                                                                         பகுதி -2       
                                           

15 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரு வரலாறே சரித்திரம் எழுதுகிறது !

இனிவரும் காலங்களில் பாடப் புத்தகங்களில் வெகு சீகிரமே இடம்பெறும் தகுதியினைப் பெற்றிடும் உ(த்த)மர் தம்பி அவர்களின் சரித்திரம் இன்ஷா அல்லாஹ் !

ஏன் அதனையும் நிகழ்த்திக் காட்டுவோம் !

தொடரட்டும் அற்புதமான சரித்திரம் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தொடரட்டும் அற்புதமனிதரின் சரித்திரம்
வரட்டும் பள்ளி பாடங்களிலும்
உத்தமரின் உயரிய படைப்பை
உலகமே உணரட்டும்.

Meerashah Rafia said...

இதை படிக்கும் போது ஏதோ உலகப்போருக்கு முன் உள்ள வரலாற்றில் வரும் ஐன்ஸ்டீன்,ரைட் பிரதர்ஸ் போன்றோரைப்பற்றி பள்ளிக்காலத்தில் படித்த உணர்வு..

இன்று கூட கும்பகோணத்தை சேர்ந்த என் சக தொழிலாளியிடம் காலரை தூக்கிக்கொண்டவாறு கூறினேன்.."கல்கோனாவும் சரி தமிழ் கணினி எழுத்துருவும் சரி எங்க ஊரு காரவங்கதான் கண்டுபிடித்தாங்க. காப்பூரிமை வாங்கிருந்தால் பில்கேட்சே கூப்பிட்டு வச்சு கோடிருவா குடுத்து எங்ககிட்ட வந்து பேரம் பேசிட்டு போயிருப்பாக' ன்னு..
வாயடைத்து போய்விட்டார்..

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------

நாம்தான் எதையும் குறித்து வைத்துக் கொள்ளாமல் சரித்திரத்தில் புறக்கணிக்கப் பட்டுவிட்டோம். நல்ல முயற்சி !

வெற்றிகரமாக எழுதி முடிக்க வாழ்த்துக்கள்.

-Sabeer Abu Sharhuk

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்ஹம்துலில்லாஹ்! தொடரட்டும்....

ஒரு
சாதனையாளரின்
சரித்திரம்!
பல
சாதனையாளர்களை
உருவாக்கும் என்பது
நிதர்சனம்!

அல்லாஹ் அரள்புரிவானாக!

ம அஸ்ஸலாம்

அப்துல்மாலிக் said...

டாக்டர் அப்துல் கலாமின் அக்னி குஞ்சு மாதிரி மர்ஹூம் ஜனாப் உமர்தம்பி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை யாராவது புத்தகமாக எழுதி வெளியிட்டால் நம்மூர் இளைஞர்களுக்கு அவர்களும் வாழ்வில் சாதிக்க ஒரு உந்துசக்தியாக இருக்க வாய்புகள் அதிகம், இன்ஷா அல்லாஹ்

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

1974 January 16, 17, 18 Wed Thu Fri இந்த நாட்களில் கும்பகோணம் Town High Schoolல் தஞ்சை மாவட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கான நடை பெற்ற அறிவியல் கண்காட்சியில் நம் காதிர் முகைதீன் உயர்நிலை பள்ளியும் பங்கு பெற்றது. பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பள்ளிகளை ஒப்பிடும்போது குறைவான காட்சி பொருள்களையே கண்காட்சியில் நாம் வைத்திருந்தோம். ஆனால் எல்லாவற்றையும் விஞ்சும் அலவில் குறைவை நிறைவு செய்தார்கள் மர்ஹூம் உமர் தம்பி காக்கா அவர்கள்.

மர்ஹூம் உமர் தம்பி காக்கா அவர்கள் அந்த கண்காட்சிக்கு மாதிரி வானொலி ஒலிபரப்பு நிலையம் ஒன்றை அமைத்து தந்தார்கள். அந்த நேரத்தில் இது அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் உயர்நிலை பள்ளி மாணவர்களால் அமைக்கப்பட்ட மாதிரி வானொலி ஒலிபரப்பு நிலையம் என ஒலிபரப்பை துவங்குமாறு மர்ஹூம் தாஜுதீன் சார் அவர்கள் என்னிடம் கூற, அவ்வாறே ஒலிபரப்பை ஆரம்பித்தோம். அதில் முழு நேர ஒலிபரப்பலனாக செயல் பட்டவன் நான் என்பதை இங்கு பெருமையோடு கூறிக் கொள்கின்றேன். அதிலே ஒரே ஒரு இசைத்தட்டு மட்டும் இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தது. அதுதான் யாரசூலுல்லாஹ் என்ற ஈ எம் ஹனீபா பாடல்.

கண்காட்சியில் குறைவான அறிவியல் பொருள்களை நாம் வைத்திருந்தும், மர்ஹூம் உமர் தம்பி காக்கா அவர்கள் அமைத்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் உயர்நிலை பள்ளி மாணவர்களால் அமைக்கப்பட்ட மாதிரி வானொலி ஒலிபரப்பு நிலையம் அன்றைய D E O, C E O, District Collector இவர்களுக்கெல்லாம் பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. நம் கண்காட்சியை பார்வையிட்ட இவர்கள், நம் வைத்திருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் அன்றே 1974 ல் எழுதிய பாராட்டுக்கள் ஏராளம்.

நூர் முஹம்மது / கதீப் / தமாம் / சவூதி அரேபியா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

துல்லியமாக காலம் நேரம், அதன் நிகழ்வுகள் இவைகளனைத்தையும் நினைவில் வைத்த்து எங்களுக்கு தந்த நூர் முஹமம்து காக்கா அவர்களை மனதார பாராட்டுகிறோம்.

நன்றி காக்கா !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் இணைய அறிஞர் உமர்தம்பி அவர்களின் வாழ்க்கை சரித்திரம் நிச்சயம் புத்தகமாக வெளியிட வேண்டும்.

முதல் பகுதியிலேயே பல சுவாரஸ்யமான தகவல்கள். மேலும் பின்னூட்டத்திலும் சகோதரர் நூர் முகம்மது அவர்களின் விளக்கம் இன்னும் ஆச்சரியத்தை தரக்கூடியதாக உள்ளது.

தொடருங்கள் உ(த்த)மர் தம்பியின் வாழ்க்கை சரித்திரத்தை மேலும் நாங்கள் அறியாத தகவல்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்.

முகம்மது said...

உமர் தம்பி காக்கா அவர்கள் விட்டின் அருகாமையில் நான் இருந்தும் அவர்கள் தொழுகைக்கு சென்று விட்டு விட்டுக்கு திரும்பி வரும்பொழுது அவ்வப்போது சிறிது உரையாடியதோடு சரி . அவர்கள் மறைவிற்கு பின்னால் எல்லோரைப் போல் இனனயத்தில் அவர்களை பற்றி நானும் அறிந்ததுதான் அதிகம். இது எதற்காக இங்கு குறிப்பிட விரும்புகிறேன் என்று சொன்னால் ஊரில் இருந்தும் அவர்களின் விட்டு அருகில் இருந்தும் அவர்களை பற்றி அறிந்தது குறைவுதான் . இனி அடுத்து வரக்கூடிய இளைய தலைமுறைக்கு அவர்கள் பற்றிய விசியங்களை கொண்டு செல்ல நாம் அனைவரும் கடமை பட்டுள்ளோம் . இதற்கான ஒரு சிறிய முயற்சியை நான் மேற்கொண்டுள்ளேன். உலகம் முழுவதும் மற்றும் உள்ளூர் அதிரை வாசிகளின் முகவரிகள் அடங்கிய ஒரு புத்தகத்தை தயார் செய்யும் பணியில் நானும் chasecom ரஜாக் காக்க அவர்களும் இடுபட்டுள்ளோம் அதில் உமர் தம்பி காக்கா அவர்களின் வரலாறையும் இடம் பெறச்செய்ய இன்ஷா அல்லாஹ் முயற்சி மேற்கொள்ளப்படும்.

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum,
I would like to share my golden memories with my dearest friend Umarthambi. When I joined Khadir Mohideen College in the year 1976, our beloved Secretary Haji.SMS gave me and additional responsibility, that is, in-charge of audio visual education. I was really shocked to receive this order and being a new comer I could not refuse the order. I approached my friend, philosopher and guide Prof.S.Venkataraman and told him that although I am a physicist, I don't know anything about audio visual education. Please help me. He smiled gently and said that this portfolio was assigned to my predecessor Mr.Rahmathullah, and that is why it has been forwarded to be. He said don't worry Umarthambi is here he will help you. I asked him who is Umar Thambi. He said in a pleasing voice he is our old student, our Wavanna Sir's brother he is indeed and able person who will help you in all respect. I asked Prof.S.Venkataraman, what did he study in our college, Prof.SV said he studied B.Sc., Zoology. I smiled to myself, and thought how can a Zoology person help me in the audio visual activities. The Next day Prof.SV invited Umar Thambi and introduced him to me. The very first meeting with My beloved friend Umar Thambi was indeed cordial, pleasing and exciting. Prof.SV called Umar Thambi and said, hai Umar Thambi, this NAS our new lecturer, please help him in audio visual education. He politely acknowledged and with his usual smile greeted me. I said hai to him and then we began to talk about the matter. When I started talking with him I found his profound knowledge in Electronics and his passion for it. We became very close friends and soon we started sharing a lot of things. At times I was wondering his Hymalayan knowledge in the field of electronics and asked him one day, "Umar who is the inspiration for your interest for electronics?". He replied me first my brother and then my childhood friend I dont remember his name (Ansari I think), but at that time he was in Dubai, and he mentioned that he is a handicapped person too. I have almost become a fan of Umar Thambi and he helped me a lot in the field and it was he who introduced me and advised me about personalities and characters of the various faculty members of our college. But for his kind introduction I could not have learnt about my colleagues.
Umar Thambi is a versatile person, having humility and remaining cool forever. I used to see his eyes also smiling when he smiles that is indeed a feast to watch. Being by him made me feel like an expert in electronics. I got the courage to take photos (Soon I became a professional in photography with his guidance), handle camera and projector too. We had funny incidents while displaying movies too. (I would like to explain about it on another occasion).
I have got a lot of messages to tell about my dearest friend, as I feel I assume much space I stop with this and Inshya Allah, share with you more about him in future posts.
Wassalam.
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உலகம் முழுவதும் மற்றும் உள்ளூர் அதிரை வாசிகளின் முகவரிகள் அடங்கிய ஒரு புத்தகத்தை தயார் செய்யும் பணியில் நானும் chasecom ரஜாக் காக்க அவர்களும் இடுபட்டுள்ளோம் அதில் உமர் தம்பி காக்கா அவர்களின் வரலாறையும் இடம் பெறச்செய்ய இன்ஷா அல்லாஹ் முயற்சி மேற்கொள்ளப்படும்.//

தம்பி முஹம்மது : மகிழ்ச்சியான தகவல் ! தொடரட்டும் நல்ல பணி ! வாழ்த்துக்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//I dont remember his name (Ansari I think), but at that time he was in Dubai, //

NAS Sir : ஆம் ! அவர்களின் பெயர் "அன்சாரி" தான் சரியே

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
ரொம்ப நன்றி அபு இப்றாஹீம். எனக்குக் கூட அந்த நண்பரைப் பார்க்கவேண்டும் என்று பேரவா.
ஆனால் நான் நினைக்கிறேன் அவர் உமர் தம்பி வீட்டுக்கும் அருகில் இருந்தவர் என்று. அவர் பேரா.கபூர் சார் அவர்களின் உறவினர் என்றும் சொன்ன ஞாபகம்.
அல்லாஹ் என் நண்பருக்கு மஹ்பிரத்து நல்க நாம் எல்லோரும் வேண்டுவோம்.
ஆமீன்.
வஸ்ஸலாம்.
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆனால் நான் நினைக்கிறேன் அவர் உமர் தம்பி வீட்டுக்கும் அருகில் இருந்தவர் என்று. அவர் பேரா.கபூர் சார் அவர்களின் உறவினர் என்றும் சொன்ன ஞாபகம்.//

NAS Sir: அப்படின்னா அது பேரா.கஃபூர் சார் அவர்களின் மகனா "ஜமால்" அவர்கள்தான் childhood friend அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கேன் இந்த பதிவை !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு