Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 21 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 14, 2012 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

குடும்பத்தாருக்காக செலவு செய்தல்:

வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் : 65:7)

...நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். (அல்குர்ஆன் : 34:39)

'அல்லாஹ்வின் வழியில் நீ செலவு செய்த ஒரு தீனார், அடிமையை விடுதலை செய்ய நீ செலவு செய்த ஒரு தீனார், ஏழைகளுக்கு நீ தர்மம் செய்த ஒரு தீனார், உன் குடும்பத்தாருக்கு நீ செலவு செய்த ஒரு தீனார், ஆகிய (நான்கில்) கூலி பெறுவதில் மிக மேன்மையானது, உன் குடும்பத்தாருக்கு நீ செலவு செய்ததுதான்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 289)

'' நீ அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக நீ செய்யும் எந்த செலவும் அது உன் மனைவியின் வாயில் நீ ஊட்டி விடுதல் உட்பட - அனைத்திற்கும் நீ கூலி கொடுக்கப்படாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஅது இப்னு அபீவக்காஸ்(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 292)

''நற்கூலியை நாடியவராக ஒரு மனிதன் தன் குடும்பத்தாருக்கு செலவு செய்தால், அது அவனுக்கு தர்மம் (செய்த கூலி) ஆகும்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                   (அறிவிப்பவர்: அபூமஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 293)

''தான் உணவளிக்க வேண்டியவருக்கு உணவளிக்காமல் இருப்பது ஒன்றே, மனிதனுக்கு பாவம் (செய்தவன்) என்பதற்கு போதுமாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி)  அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 294)

''அடியார்களுக்கு விடியும் ஒவ்வொரு நாள் காலையிலும் இரண்டு வானவர்கள் இறங்கி வராமல் இருப்பதில்லை. அவ்விருவரில் ஒருவர், ''இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்கு பிரதிபலனை வழங்குவாயாக!'' என்று கூறுவார். மற்றவர், ''இறைவா! செலவழிக்காமல் இருப்பவனுக்கு அழிவைத் தருவாயாக!''  என்று கூறுவார் என நபி(ஸல்)   கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 295)

''(தர்மத்தை வழங்கும்) மேலே உள்ள கை, (தர்மம் பெறும்) கீழே உள்ள கையை விடச் சிறந்ததாகும். (தர்மத்தை) உன் குடும்பத்தாரிடமிருந்து ஆரம்பிப்பீராக! தர்மத்தில் சிறந்தது, தேவைக்கு போக மீதி உள்ளவைதான். பேணுதலாக இருக்க ஒருவன் விரும்பினால், அல்லாஹ் அவனை பேணுதல் உடையவனாக்குவான். ஒருவன் (பிறர்) தேவையில்லாது வாழ விரும்பினால் (பிறர்) தேவையற்றவனாக அவனை அல்லாஹ் ஆக்குவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 296)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷா அல்லாஹ் வளரும்
அலாவுதீன்.S

7 Responses So Far:

sabeer.abushahruk said...

நல்லதையேச் சொல்லித்தந்தாய். நன்மையே விளையட்டும்.
நன்றி.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். அல்லாஹ் கொடுக்கும் வாக்குறுதி! கொடுத்து வாழ்ந்தால், அல்லாஹ் கொடுப்பான். இப்படி தர்மம் மூலமே நன்மையை வாங்க முடியும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கலலஹ் ஹைர் காக்கா...

உங்கள் பதிவுகள் பதிவுக்குள் வந்த பின்னர் வாசிக்கும் ஆனந்தமே தனிதான் !

Unknown said...

அருமையான பதிப்பு, இன்றைய இயந்திர வாழ்க்கை சூழலில் இறைவன் அருளிய திருகுர்ஆன்,உத்தம திருநபிகளால் உலகுக்கு உணர்த்தப்பட்ட நபியின் வாழ்க்கை நெறிமுறை மட்டுமே அருமருந்தாக அமைய முடியும் என்று இக்கட்டுரையின் மூலம் உணர்த்திவிட்டீர்கள்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்
-----------------
இம்ரான்.M.யூஸுப்

KALAM SHAICK ABDUL KADER said...

“ஸலாம்” கூறுவதால் (ஸலாம் என்றால் அமைதித் தானே) அமைதி உண்டாகும்
“இஸ்லாம்” என்னும் பெயருடன் தன் நோக்கத்தை (அமைதி உண்டாக்குவதை)பெற்றிருக்கும் இறைவனின் மார்க்கத்தை வாழ்க்கை முறையாக்கினால் அமைதி உண்டாகும்
அல்லாஹ்வின் நினைவுகளில் (திக்ரு) உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.
அல்லாஹ்வின் இரசூல் முஹம்மத்(ஸல்)அவர்களின் வாழ்வியல் முறைகளில் சுகாதாரமும் அமைதியும் கிடைக்கின்றன.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றான் மனிதன்; அமைதிக்கு அழகான மார்க்கம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டும் இன்று நம்மவர்களே எங்கெங்கோ சென்று அலைகின்றனர்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நன்மை தரும் பதிவு, ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

Yasir said...

நன்மை தரும் பதிவு, ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு