Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வினாடி வினா போட்டி வெளிக்காட்டிய இரண்டு நட்சத்திரங்கள் ! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | December 03, 2012 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரைநிருபர் வலைத்தளம் வெற்றிகரமாக கடந்த மாதம் நடத்திய வினாடி வினா நிகழ்வினை அனைவரும் அறிந்திருக்கலாம் !

மாணவர்கள் பிரிவில் கலந்து கொண்ட காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாவது மூன்றாவது இடங்களை வென்று தங்களது பள்ளிக்கு பெருமை சேர்த்தார்கள் !

வினாடி வினா நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களில் இரண்டு நட்சத்திர மாணவர்களை பற்றிய தகவல் போட்டி நடந்து முடிந்ததும் நம்மால் அறிய முடிந்தது....

கா.மு.மே. பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் இருவரும் தங்களது பிரிவில் முதல் மதிப்பெண்கள் மட்டுமல்ல, ஒழுக்க நெறிகளிலும், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணிகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். அவர்களை நாம் மின்னும் நட்சத்திரங்களாகவே இங்கு காண்கிறோம்.

நமதூர் பாரம்பரியமிக்க எத்தீம்கானா இல்லம் உருவாக்கிய இந்த மாணவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது, மாஷா அல்லாஹ் ! தெளிவான பேச்சு, நேர்மையான செயல்கள், கேட்பவர்களைக் கவரும் கருத்தாடல்கள், நல்ல அறிவுரைகள் என்று மிளிர்கிறார்கள்.

காணொளியில் உரையாடும் அதிரை எத்தீம்கானாவைச் சார்ந்த மாணவர்களான இவர்கள் வாழ்வில் அனைத்து சிறப்புகளையும் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்வோம் இன்ஷா அல்லாஹ்...


அதிரைநிருபர் குழு

23 Responses So Far:

abraarhussain said...

இவர்களின் பேட்டி நமது மானவரிகளின் மத்தியில் ஒரு ஒரு எழுச்சியை ஏற்படுத்தடும். காணொளி வெளியிட்ட அதிரை நிருபர் வலைதளத்திகு வாழ்த்துக்கள்

Ebrahim Ansari said...

போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தக் குறிப்பிட்ட இரு மாணவர்களும் காட்டிய ஆர்வம் என் கவனத்தைக் கவர்ந்தது. இவர்களின் எதிர்காலம் இனிமையாக அமைய து ஆச்செய்வோமாக.

Ebrahim Ansari said...

இந்த குறிப்பிட்ட இரு மாணவர்கள் நம்மைப் பலவழிகளில் சிந்திக்க வைத்து இருககிறார்கள்.
இன்றைய நிலையில் பணம் படைத்த பெற்றோர்களுக்குப் பிறந்த மாணவர்கள் அனைத்து வாழ்வின் வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். படிப்பு விஷயத்தில் அவர்களை வெற்றி பெற்றவர்களாக காண்பது மட்டுமலாமல் தனிப்பட்ட ஒழுக்க விஷயங்களிலும் சான்றிதழ் வழங்க முடியவில்லை.

இந்த இரு மாணவர்கள் போன்ற இப்படிப்பட்ட ஏழை மாணவர்கள் தங்களுக்கு ஊன்றுகோலாகக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சுய முயற்சியில் முன்னேறத் துடிக்கிறார்கள் என்றால் அவர்களைப் போன்றவர்களுக்கு நாம் மேலும் ஊக்கம் தந்து ஏணியாக இருந்து உதவிட வேண்டும்.

இப்படிப்பட்ட சுய முயற்சியாளர்களைத் துருவிக் கண்டுபிடித்து இங்கு வெளியிட்ட தம்பி தாஜுதீன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிடைத்தற்கறிய வாய்ப்புகளை தங்களின் சுய முயற்சியால் சாதித்து வரும் எத்திம்கான மதர்ஸா மாணவச் செல்வங்கள் மேலும் சிறந்து விளங்க துஆச் செய்கிறோம் இன்ஷா அலலஹ்...

எத்திம்கான மதர்ஸா மற்றும் கா.மு.மே.பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியதே ! எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் செயல்களையும் அங்கீகரிப்பானாக !

Unknown said...

"எங்களுடைய நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் துஆ செய்ங்க."

ஆமீன், ஆமீன், ஆமீன், யா ரப்பல் ஆலமீன்!

Shameed said...

இன்னும் இது போன்ற மாணவ நட்சத்திரங்களை வெளிக்கொண்டு வரவேண்டும்

ajmal hussain said...

ALL THANKS TO ADRIAN NIRUBAR SITE.THE VIDEO COVERAGE COULD HAVE BEEN DONE BETTER. AS FAR AS THE CONTEST IS CONCERNED THE SHOW WAS GOOD! GOOD QUESTIONNAIRE, IT WAS IN A GOOD PRESENTABLE MANNER. THE PRESENTER DID IT WELL. THE CONTESTANTS COULD NOT BEE SEEN. ONLINE NON LINEAR EDITING IF IT WAS ATTEMPTED IT WOULD HAVE BEEN GOOD. IF DONE NEXT TIME IT IS BETTER IN A WIDE ARENA FOCUSSING FACE OF THE CONTESTANTS. THOSE TWO BOYS FROM KADIR MOHIDEEN HIGHER SECONDARY SCHOOL, THEIR IDEAS, THINKING ABOUT THE PROSPECTS OF THE FUTURE WAS AMAZING AND AWESOME. SUCH KIND OF STUDENTS NEEDS CONSTANT ENCOURAGEMENT FROM DIFFERENT SOURCES, THEY NEED TO BE ENCOURAGED AND PREPARED FOR DISTRICT LEVEL, STATE LEVEL COMPETITIONS. THE SCHOOL AUTHORITIES SHOULD TAKE INITIATIVES TO SET UP THIS KIND INTERACTIVE SESSIONS. IT WAS A GOOD START, WE NEED TO HAVE FREQUENT SUCH COMPETITIONS?

sabeer.abushahruk said...

"எங்களுடைய நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் துஆ செய்ங்க."

ஆமீன், ஆமீன், ஆமீன், யா ரப்பல் ஆலமீன்!

Unknown said...

மாஷா அல்லாஹ் ,,வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு கல்வி ஞானத்தை அதிகபடுத்தி மார்க்க ஞானத்தை பலப்படுத்தி வாழ்க்கையில் வெற்றியை தர தூஆ செய்வோம்.மேலும் கல்வி தான் நிலையான தர்மம் என்று கல்விக்காக சிறப்பாக பங்காற்றி வரும் அதிரை நிருபர் மற்றும் அதன் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் இறைவனின் அருளுடன் எல்லா பணிகளும் வெற்றியடைய வல்ல ரஹ்மானிடம் தூஆ செய்கிறேன்.இப்ராகிம் அன்சாரி காக்காவின் கருத்து முற்றிலும் உண்மை.இவர்களைப்போல் மூத்த அறிஞர்களின் வழிகாட்டுதலில் கல்விகாக பாடுப்பட்டால் மார்க்கம் காட்டிய வழிமுறையில் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
,,,,,,,,,,,,,,,,
இம்ரான்.M.யூஸுப்

Anonymous said...

ajmal hussain சொன்னது…

// WE NEED TO HAVE FREQUENT SUCH COMPETITIONS? //

YES !

Insha Allah !

இப்னு அப்துல் ரஜாக் said...

"எங்களுடைய நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் துஆ செய்ங்க."

ஆமீன், ஆமீன், ஆமீன், யா ரப்பல் ஆலமீன்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இவர்கள் வாழ்வும் அனைத்து சிறப்புகளையும் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்வோம்.
இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Masha-allah, wonderful work done by AN for the sake of all the young generations particularly the students within our community. Really it is good and the voice of the two students are not much clear. So, the precious speech is not reaching us properly. Please try to rectify it in the future things In shaa allah.....

I was worried during my schooling time with unnecessary things. It teaches us first of all, we need to build Allah's faith in our mind with proper way then everything will come easily as achievements in our life.

It should be continued by AN with various occasions at our hometown now and then in order to reap more scholars/literates even from any families or any streets In shaa allah.

Try to do a contest of like 'Arattai Arangam' with moral things or with a title of current world affairs.அப்துல்மாலிக் said...

இவர்களை சரியான முறையில் வழிநடத்தி கற்று தேர்ந்தவுடன் சிறந்த மார்க்க சேவகர்களாக மிளிர்வார்கள் என்பதில் ஐயமில்லை...

Yasir said...

"எங்களுடைய நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் துஆ செய்ங்க."

ஆமீன், ஆமீன், ஆமீன், யா ரப்பல் ஆலமீன்!

Unknown said...

எத்தீம்கானாவில் தங்கிப் படிக்கும் நமது மாணவச்செல்வங்களின் திறமைகளை வெளி உலகுக்கு கொண்டு வந்த அதிரை நிருபர் வளைத் தளம்,சிறப்பாக தொடர்ந்து இஹ்லாசோடு பணியாற்றி வரும் எத்திம்கானாவின் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள்,நமது கா.மு.உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அதற்குரிய நற்கூலியைக் கொடுக்க துஆ செய்வதோடு,நமது மாணவச்செல்வங்களுக்காகவும் நாம் அவசியம் துவாச் செய்வோமாக.அந்த மாணவர்கள் தங்கள் தாயிடம் அன்பான முறையில் தங்கள் எதிர்காலம் பற்றி வேண்டிக்கொண்டது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Unknown said...

எத்தீம்கானாவில் தங்கிப் படிக்கும் நமது மாணவச்செல்வங்களின் திறமைகளை வெளி உலகுக்கு கொண்டு வந்த அதிரை நிருபர் வளைத் தளம்,சிறப்பாக தொடர்ந்து இஹ்லாசோடு பணியாற்றி வரும் எத்திம்கானாவின் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள்,நமது கா.மு.உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அதற்குரிய நற்கூலியைக் கொடுக்க துஆ செய்வதோடு,நமது மாணவச்செல்வங்களுக்காகவும் நாம் அவசியம் துவாச் செய்வோமாக.அந்த மாணவர்கள் தங்கள் தாயிடம் அன்பான முறையில் தங்கள் எதிர்காலம் பற்றி வேண்டிக்கொண்டது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கு மிக்க நன்றி.

தம்பிகள் ராஜா முஹம்மது, ஸெர்ஷா ஆகிய இருவரின் வாழ்வும் அனைத்து சிறப்புகளையும் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

இந்த காணொளியை எடுத்தவன் என்ற முறையில் பின்னூட்டமிட்டவர்களின் கருத்திற்கு மதிப்பளித்து இனிவரும் காணொளிகளில் கூறப்பட்ட ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்படும். இன்ஷா அல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இந்த குறிப்பிட்ட இரு மாணவர்கள் நம்மைப் பலவழிகளில் சிந்திக்க வைத்து இருககிறார்கள்.
இன்றைய நிலையில் பணம் படைத்த பெற்றோர்களுக்குப் பிறந்த மாணவர்கள் அனைத்து வாழ்வின் வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். படிப்பு விஷயத்தில் அவர்களை வெற்றி பெற்றவர்களாக காண்பது மட்டுமலாமல் தனிப்பட்ட ஒழுக்க விஷயங்களிலும் சான்றிதழ் வழங்க முடியவில்லை.

இந்த இரு மாணவர்கள் போன்ற இப்படிப்பட்ட ஏழை மாணவர்கள் தங்களுக்கு ஊன்றுகோலாகக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சுய முயற்சியில் முன்னேறத் துடிக்கிறார்கள் என்றால் அவர்களைப் போன்றவர்களுக்கு நாம் மேலும் ஊக்கம் தந்து ஏணியாக இருந்து உதவிட வேண்டும். //


மூத்த சகோதரர் இப்றாஹீம் அன்சாரி காக்கா அவர்கள் சொன்ன இந்த கருத்துக்களை இந்த பதிவை பார்ப்பவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Ebrahim Ansari said...

//இப்ராகிம் அன்சாரி காக்காவின் கருத்து முற்றிலும் உண்மை.இவர்களைப்போல் மூத்த அறிஞர்களின் வழிகாட்டுதலில் கல்விகாக பாடுப்பட்டால் மார்க்கம் காட்டிய வழிமுறையில் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.//

தம்பி இம்ரான் யூசுப். இன்ஷா அல்லாஹ். இதுபோன்ற கல்வி
விழிப்புணர்வுப்பணிகளைத் தொடர்ந்து செய்ய இருக்கிறோம். அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டுகிறோம்.

KALAM SHAICK ABDUL KADER said...

////இந்த குறிப்பிட்ட இரு மாணவர்கள் நம்மைப் பலவழிகளில் சிந்திக்க வைத்து இருககிறார்கள்.
இன்றைய நிலையில் பணம் படைத்த பெற்றோர்களுக்குப் பிறந்த மாணவர்கள் அனைத்து வாழ்வின் வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். படிப்பு விஷயத்தில் அவர்களை வெற்றி பெற்றவர்களாக காண்பது மட்டுமலாமல் தனிப்பட்ட ஒழுக்க விஷயங்களிலும் சான்றிதழ் வழங்க முடியவில்லை.

இந்த இரு மாணவர்கள் போன்ற இப்படிப்பட்ட ஏழை மாணவர்கள் தங்களுக்கு ஊன்றுகோலாகக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சுய முயற்சியில் முன்னேறத் துடிக்கிறார்கள் என்றால் அவர்களைப் போன்றவர்களுக்கு நாம் மேலும் ஊக்கம் தந்து ஏணியாக இருந்து உதவிட வேண்டும். //

மூத்த சகோதரர் இப்றாஹீம் அன்சாரி காக்கா அவர்கள் சொன்ன இந்த கருத்துக்களை இந்த பதிவை பார்ப்பவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\\

DITTO

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு