Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நன்றி... நவிலுதல் நன்று! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | December 07, 2012 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அதிரைநிருபர் தொடங்கிய நாள் தொட்டு பள்ளி கல்லூரி என்று அதிரைச் சூழலைச் சுற்றியே நமது மாணவமணிகளின் எதிர்காலம், அவர்களின் அன்றாட நடைமுறைகள் என்ற சிந்தனை ஆட்படுத்திக் கொண்டே இருந்தது, வாய்ப்புகள் வசப்படும்போதெல்லாம் வழமையான நிகழ்வுகளையும் நடத்தத் தயங்கியதும் இல்லை.

நீண்ட நாள் ஆவலாக அதுவும் நாங்கள் பள்ளிக்காலங்களில் படிக்கும்போது இருந்த நிகழ்வுகள் போன்று இன்றையச் சூழலில் ஏன் நடைபெறுவதில்லை என்ற ஆதங்கமும் தொடர்ந்து இருந்து வந்ததன் காரணமாக, சட்டென்று மூத்த சகோதரர் இபுராஹீம் அன்சாரி காக்காவிடம் இந்த யோசனையச் சொன்னோம் அவர்களும் பழம் நழுவி பாலில் விழுந்த எதார்த்த நிகழ்வுக்கு காத்திருந்தவர்கள்போல் இதைத்தானே எதிர்பார்த்து இருக்கிறேன் என்று வரவேற்றார்கள்.

அப்புறமென்ன ! ஆம் சொன்ன பேராசிரியர் M.A.அப்துல் காதர் அவர்கள் "எஸ்" என்று சொன்ன முன்னால் தலைமை ஆசிரியர் SKM ஹாஜா முகைதீன்  அவர்கள், களம் தயார் என்று இருகரம் ஏந்தி வரவேற்ற இமாம் ஷாஃபி ரஹ் மெட்டிரிக் பள்ளி இவர்களோடு கைகோர்க்க நாங்களும் முன்னிருக்க தயார் என்ற நன்னோக்கு கொண்ட கொடையாளர்கள் !

நாட்களும் குறித்தோம், அழைப்பும் விடுத்தோம், அனுமதியும் பெற்றோம், அனைவரும் கூடினோம், அழகுற வெற்றியும் கண்டோம் - அல்ஹம்துலில்லாஹ் !

நிகழ்வுக்கு ஆரம்பம் முதல் நிறைவுவரை முழு ஒத்துழைப்பு தந்த, நன்கொடையாளர்கள், பரிசுகள் வழங்கிய பெருந்தகைகள், பேராசிரியைகள், ஆசிரியப் பெருமக்கள், மாணவமணிகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், சான்றிதழ் வடிவமைத்த வரைகலை, மற்றும் வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த உறவுகள், வினாடி வினா பதிவை பகிர்ந்து கொண்ட அதிரை வலைத்தளங்கள், இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி பணியாளர்கள் என்ற பட்டியல் நீண்டாலும் சொல்ல மறந்த அனைவருக்கும் நன்றிடன் கூடிய எங்களின் தொடர் துஆவும் என்றும் நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ்...

நிறைவாக அதிரைநிருபர் குழு சகோதரர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றி !

அன்புடன்,

நெறியாளர்

8 Responses So Far:

sabeer.abushahruk said...

இதுபோன்ற சமூக சேவை செய்யும் அதிரை நிருபர் குழுவிற்கு நாங்கள்தான் நன்றி சொல்லவேண்டும்.

வாழ்த்துகளும் மெனி மோர் ரிட்ட(ர்)ன்ஸூம்.

Shameed said...

பந்திக்கு முந்து என்று கேள்விபட்டுள்ளேன் நீங்களோ(AN) நன்றிக்கு முந்திகொண்டீர்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//இதுபோன்ற சமூக சேவை செய்யும் அதிரை நிருபர் குழுவிற்கு நாங்கள்தான் நன்றி சொல்லவேண்டும்.

வாழ்த்துகளும் மெனி மோர் ரிட்ட(ர்)ன்ஸூம்.//

அவ்வண்ணமே கோரும்.
நன்றியுடன்...


இப்னு அப்துல் ரஜாக் said...

//இதுபோன்ற சமூக சேவை செய்யும் அதிரை நிருபர் குழுவிற்கு நாங்கள்தான் நன்றி சொல்லவேண்டும்.

வாழ்த்துகளும் மெனி மோர் ரிட்ட(ர்)ன்ஸூம்.//

அவ்வண்ணமே கோரும்.
நன்றியுடன்...


அப்துல்மாலிக் said...

மேலும் மிளிர வாழ்த்துக்கள்...

KALAM SHAICK ABDUL KADER said...

நன்றி மறப்பது நன்றன்று என்ற நற்குணத்தைக் கற்றுக் கொண்டதும் பள்ளிக்கூடத்தில்; பள்ளிகூடத்திற்கு நன்றி நவிதலும் நன்றென்று நாம் கற்றுக் கொண்டது அ.நி. பல்கலைக்கழகத்தில் தான்.

Iqbal M. Salih said...

நன்றி மறப்பது நன்றன்று என்ற நற்குணத்தைக் கற்றுக் கொண்டதும் பள்ளிக்கூடத்தில்; பள்ளிகூடத்திற்கு நன்றி நவிதலும் நன்றென்று நாம் கற்றுக் கொண்டது அ.நி. பல்கலைக்கழகத்தில் தான்.

-தேங்க்ஸ் கவியன்பன்!

KALAM SHAICK ABDUL KADER said...

//-தேங்க்ஸ் கவியன்பன்!\\
You are most welcome.

நன்றிக்கு நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு