Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று 30-10-2010 35

ZAKIR HUSSAIN | October 30, 2010 | ,

மொத்தமாக ஒரே தலைப்பை ஒட்டி எழுத விசயம் கிடைக்காதபோது இப்படி பல விசயங்களை ஒரு ஆர்டிக்கிளாக எழுதலாமே என மண்டைக்குள்பல்ப்” வெளிச்சம் தெரிந்ததால் இப்படி ஆரம்பித்து விட்டேன்...தலையெழுத்து யாரை விட்டது என படிக்க ஆரம்பிக்கும் உங்களுக்கு என்முதற்காது’ நன்றி.

பதிவர் உலகம்:
சமயங்களில் மற்றவர்கள் என்னதான் எழுதுகிறாரகள் என மற்ற வலைப்பூக்களை பார்ப்பதுண்டு [ தமிழ் / ஆங்கிலம் ] தமிழில் சிலருடைய Blogs பார்க்கும்போது மனசு கணத்து போகும் ...இது பொது மேடை என தெரிந்த்தும் அசிங்கமாக மாஞ்சி மாஞ்சி எழுதியிருப்பார்கள். எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் அந்த Blogs எழுதுபவர்களின் உறவினர்கள் ஆசிரியர்கள் மரியாதைக்குறிய நண்பர்கள் யாருமே அதை பார்க்க மாட்டார்களா? பார்த்தால் நம்மை பற்றிய கருத்து மாறிவிடாதா?...நீ ஏன் அப்பு அதையெல்லாம் பார்க்குறே என அந்த வலைப்பூக்களின் சொந்தகாரர்கள் இதில் தாராளமாக கமென்ட் எழுதலாம். என்ன செய்வது பஸ் ஸ்டான்ட் கக்கூசில் கறித்துண்டிலும் , சாக் பீசிலும் எழுதியவர்களின் கையில் கம்ப்யூட்டர் கிடைத்திருக்கிறது. ஜமாய்ங்க அப்பூ

வெள்ளைக்காரனும் சலைத்தவன் அல்ல, வீட்டில் இருந்துகொண்டே ஆயிரக்கணக்கில் அமெரிக்கன் டாலரில் சம்பாதிக்களாம் தொடங்கி ஆஸ்திரேலியா / அமெரிக்க குடியுறிமை எல்லாம் எங்கள் சந்தையில் எழந்தப்பழம் விற்க்கும் பெண்களிடம் கேட்டால் கூரு இன்ன விலை என சொல்லிவிடுவார்கள் என்பது போல் சீன் வந்து போகும் [ பாப்-அப் ]
சிலரின் வலைப்பூவில் உள்ள விசயங்கள் தேங்காய் சீனிவாசன் , ஜெய்சங்கர் போன்றவர்கள் கதாநாயகனாக நடிக்கும் காலத்தில் உள்ளவை. அப் டேட் செய்யாமல் பல காலம் இருப்பதால் மற்ற வலைத்தளஙக்களில் உள்ளவைகளை அவர்களின் அனுமதியுடன் வெளியிடலாம். முடியாவிட்டால் தற்காலிகமாக Temporarily under construction என போர்ட் மாட்டி ரெஸ்ட் எடுக்களாம்.

நமது ஊர் இளைஞர்களின் சாதனை அதிகம் Blogs வைத்திருப்பது. அதில் நமது சகோதரிகளின் சமையல் சம்பந்தமான Blogs உண்மையிலேயே பாராட்டுக்குறியவை. [ அன்புடன் மலிக்கா , ஜலீலா கமால் மற்றும் பொதுவான விசயங்களை எழுதும் சகோதரி பாத்திமா ஜொஹரா. இதில் சமையல் குறிப்பு எழுதும் சகோதரிகள் தங்களது திறமையை டி.வி நிகழ்ச்சியில் காட்டலாம். இப்போது "ஹலால்" உணவு இன்டஸ்ட்ரி பெருமளவில் முன்னேறியிருக்கிறது. தேவை கொஞ்சம் Lobbying செய்யக்கூடிய முயற்ச்சி. Anthony Bourdine போன்றவர்கள் கண்ட குப்பைகளை சமைத்து சாப்பிட்டுhmmm… Very niceஎன்று சொல்லும்பொது உங்கள் சமையல் டிப்ஸ் எல்லாம் நிச்சயம் வெற்றி பெரும். ஆண்களில் சகோதரர் இர்ஷாத், சகோதரர் மூஜீப் வித்யாசமான அணுகுமுறை.இவர்களுக்கு சரியான தலம் கிடைத்தால் வெப் உலகத்தில் பெரும் சாதனையாளர்களாக வர முடியும். சகோதரர் தாஜுதீன் பற்றி இதில் எழுதவில்லை ஏனெனில் இது அதற்கான தலம் அல்ல.

சிலருக்கு எது செய்தாலும் பிடிக்காது. நம் ஊர் ஆட்கள் அதிகம் Blogs வைத்திருக்கிறார்கள், அதிகம் எழுதுகிறார்கள் அதனால் அவர்கள் சாதித்தது என்ன? என்று என்னிடம் சமீபத்தில்ஒருவர் வினவினார்...பதில் சொல்லும்போது ப்ளாக்ஸ் வைத்திருப்பவர்களை நான் தற்காத்து பேசுவேன் என நினைத்திருக்களாம் , அவரின் கேள்வியை பதிலாக அவரிடம் நான் கேட்டேன்."இந்த ப்ளாக்ஸ் எதுவும் இல்லாமல் நீங்கள் சாதித்தது என்ன?... அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

ஜப்பானிய மார்சியல் ஆர்டில் AKIDO ஒரு மிக உன்னதமான சண்டை, எதிரியின் சக்தியைவைத்தே அவனை மடக்குவது, மனோதத்துவத்தில் இதை பயன்படுத்த தெரிந்தவர்கள் டென்சன் இல்லாமல் வாழத்தெரிந்தவர்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் , பிள்ளைகள் அல்லது நீங்கள் கூட இதை கற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தால் பயன் படுத்தி கொள்ளலாம். விழிப்புணர்வின் மொத்த ப்ராக்டிசும் இதில் இருக்கிறது.
சில கேள்விகள்;

அதிரை எக்ஸ்பிரஸில் முன்பு அடிக்கடி எழுதும் சகோதரர் அபுஹசன், மற்றும் ஒரு ஆலிம் ஏன் இப்போது எதிலும் எழுதுவதில்லை.???

சமீபத்தில் நடந்த்த [ சிலி நாட்டில்] சுரங்கத்தில் இருந்துமீட்ட பணியாளர்கள் பற்றியும் அந்த நிகழ்வு பற்றியும் அவர்கள் நமக்கு கற்றுத்தந்ததலைமத்துவம்” பற்றியும் ஏன் யாரும் எழுதவில்லை.??

இந்த பதிவிலும் சில படங்கள் இணைத்திருந்தேன்,ஒன்று கூட தெரியவில்லை. [ கட்டம் மட்டும் வருகிறது] வெத்திலையில் மை போட்டு பார்க்கும் கலையைவிட கஷ்டமான விசயமாகிவிட்டது எனக்கு .. கம்ப்யூட்டர் தெரிந்த கனவான்கள் உதவி செய்யும் கமென்ட்ஸ் வரவேற்கப்படுகிறது.


ZAKIR HUSSAIN

35 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வித்தியாசமான blogசிற்பி = ஜாஹிர் ஹுசைன் (காக்கா) !

அன்பின் ஜாஹிர் காக்கா: கட்டிடம் எழுப்ப சரியான இடமும் அதற்குத் தேவையான இடமும் கிடைத்திருக்கிறது என்ன எழும்பும் கட்டிடத்தில் ஜல்லி கூடினால் கரடுமுரடு, சிமிண்ட் கூடினால் கடினமான மென்மை, மண் அளவு கூடினால் பொளு பொளு இதுதான் அடிப்படியே... கவனத்தில் வந்து விட்டது சீக்கிரமே சரிசெய்ததும் எப்படி அப்பு இதெல்லாம்னு (தனி மின் அஞ்சலில்) வரும் ! :)

Shameed said...

வித்தியாசம் + சிந்தனை = ZAKIR HUSSAIN

sabeer.abushahruk said...

ஜாகிர்,
உன் கதம்பத்தை படிக்கையில் இழையோடிய புன்னகையின் தொடர்ச்சியாக கீழ்கண்ட கேள்விகள் எழுந்தன. பதில் உண்டா?

புதிய பதிவுகள் இடப்படாத வலைப்பூகள் பக்கம் போனால் லேசா பேய் பிசாசு பயம் வருது எனக்கு, அது ஏன்?

சொந்தமாகவோ அல்லது தேடித் தொகுத்தோ இடாமல் 'பிறதி எடுத்து ஒட்டும்' வலைப்பூக்களைப் பார்க்க நேர்ந்தால் சடப்படமா வருவது ஏன்?

வலைப்பூவின் கொள்கை என்று "வானவில் வளைப்பது" "சமூகத்துக்கும் எனக்கும் புரிதல் வேண்டி" "என் ஆழ் மனதின் அலறல்" என்றெல்லம் அசத்தலாக சொல்லிவிட்டு உள்ளே கடி ஜோக்கும் கன்றாவியும் என்று ஜல்லியடிப்பது ஏன்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஊடலா ஒன்னும் சொல்லப்படாதுன்னு சும்மா இருக்கேன் சபை மருவாதைக்காக, கேள்வி ஜாஹிர் காக்காவுக்கு வைத்திருப்பதால் ஓரமா உட்கார்ந்து பிராக்கு பார்க்கிறேன்...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.ஜாஹீர் சிக்ஸர் எல்லா பந்துலேயும் அடிக்கும் வீரர்மட்டுமல்ல ஆல்ரவுண்டரும் நீங்க தான் நல்ல ஸ்கோர் பன்னுவதுதுடன் மற்றவர்களை எளிதா கவர் டைவ் ,செய்து அவுட் ஆக்கிடுவீர்கள் .மேன் ஆப் த மேட்ச்,மேன் ஆப் த சீரிஸ் எப்பவும் நீங்கதான் நீங்க எழுத ஆரம்பிச்சதும் எல்லாரும் கீளீன் போல்ட்.அல்ஹம்துலிலாஹ்.சகோ.சபீர் காக்கா சொன்னதுபோல் கதம்பம்தான் ,ஒவ்வொரு பூக்களுமே சிரிப்பை வரவழிக்குது.ஒரு சிறு தண் நினிலை விளக்கம் நான் என்னுடைய பிளாக்கை நம் சமுதாயத்துக்கு எதிரான எந்த வொரு சம்பவம் வந்தாலும் தலைப்பிலேயே கண்டித்து மேலும் என் கருத்தை சேர்த்து அந்த கட்டுரையை அப்படியே பதிந்திருப்பேன் .சில விசயத்தில் தலைப்பில் குட்டி பதிவை அப்படியே போட்டிருப்பேன் அதனால நமல உட்டுடுங்க நான் இந்த விளையாட்டுக்கு வரல.மேலும் விபரத்தை சகோ.தாஜுதீனிடம் கேட்டுக்குங்க காரணம் அவர் என் பிளாக்கை பிரபல படுத்துவதாகச்சொன்னதற்கு நான் எடுத்திருக்கும் முடிவு அவரிடம் சொன்னதை சொல்வார்.

Shameed said...

பதில் வரும்முன்னு நாங்களும் காத்து இருக்கிறோம்

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
ஊடலா ஒன்னும் சொல்லப்படாதுன்னு சும்மா இருக்கேன் சபை மருவாதைக்காக, கேள்வி ஜாஹிர் காக்காவுக்கு வைத்திருப்பதால் ஓரமா உட்கார்ந்து பிராக்கு பார்க்கிறேன்...


நமக்குள்ள என்னங்க .மருவாதை நாம தான் ஒன்னுக்குள்ள ஒன்னா ஆகிடோம்லோ

சும்மா தெரிந்ததை அவுத்து உடுங்கோ

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பாத்தியளா கதம்பமாலை கோர்த்தவங்க வர்ர வரைக்கும் நபுசு பட படங்குதுல ! செத்த பொருங்கமா !

jalal said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)

சூதாட்டம் விளையாடவில்லை என்றால் சீனக்காரன்
செத்துடுவான் !
வேலை செய்யவில்லை என்றால் ஜப்பான்காரன்
செத்துடுவான் !
தன்னை பெருமையா நினைக்கவில்லை என்றால் இங்கிலிஸ்கரன்
செத்துடுவான் !
ஆனால்...
அதிகமா பேசவில்லை என்றால் இந்தியக்காரன்
செத்துவிடுவான் ! (மற்ரவர்கள் என்னதான் எழுதுகிறார்கள்.....)
என்ன மச்சான்ஸ் ஜாகிர் ,
காதம்பம் குழப்புதா ?
இருந்தாலும் உங்ககதம்பம் மனக்குதுல்ல.

ZAKIR HUSSAIN said...

கமெண்ட்ஸ் எழுதிய சகோதரர் கிரவுன், அபு இப்ராஹிம் , சாகுல் அனைவருக்கும் நன்றி. அபு இப்ராஹிம் நீங்கள் ஊடாலெ தாராளமாக எழுதலாம் என கட்சி மேலிடம் கையசைத்து விட்டது. எழுதவில்லை எனில் தீக்குளிக்க இளைஞரணி தயாராக இருப்பதால் உடன் எழுதிவிடுங்கள் [ உங்க எழுத்தை பார்க்கத்தான் இவ்வளவு பில்ட் அப்]

சகோதரர் கிரவுன்...உங்கள் விளக்கம் அறிந்தேன் நான் யாரையும் குறிப்பிட்டுகுற்றம் சொல்வதில்லை. என் எழுத்தில் நிச்சயம் குறிப்பிட்டு பாராட்டி இருப்பேன்.

சபீர் உன் கமென்ட்ஸ் என் ஆர்டிக்கிளை விட அழகு.

ஜலால் ஏதாவதுஎழுத முயற்ச்சிக்களாமே..

ZAKIR HUSSAIN said...

சாகுல்.... முதலில் உங்கள் கமெண்ட்ஸ் படிக்கும் போது சாதாரணமாகத்தான் படித்தேன் பிறகு தெரிந்தது அதுவும் ஒரு "வித்தியாசமான சிந்தனை"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா(s)ஜாஹிர், சாஹுல் : கவிக் காக்காவுஜ்ஜ்ய் காத்து கருப்பு பட்டு ரொம்பவே பயத்துல இருக்காங்க போல...

// புதிய பதிவுகள் இடப்படாத வலைப்பூகள் பக்கம் போனால் லேசா பேய் பிசாசு பயம் வருது எனக்கு, அது ஏன்? //

வேற ஒன்னுமில்லை சிலந்தி கூடி கட்டினத பார்த்துட்டு பயந்துட்டீங்க ரொம்ப சிம்பிள் ஃப்பூன்னு ஊதி விட்டுடுங்க சரியாயிடும்.

// சொந்தமாகவோ அல்லது தேடித் தொகுத்தோ இடாமல் 'பிறதி எடுத்து ஒட்டும்' வலைப்பூக்களைப் பார்க்க நேர்ந்தால் சடப்படமா வருவது ஏன்? //

என்ன காக்கா இப்புடி கேட்டுட்டிய சொந்தமான இடமா இருந்தாவுல சொந்தமா முடிய பிச்சு பிச்சு எதாவது போடலாம், இலவசமாவுல இடம் கிடைத்திருக்கிறது அதனால வெட்டியெடுத்து ஒட்டி ஓட்டுறாங்க ! இப்புடி சாய்ஞ்சு உட்காருங்க தலைய செவத்துல சாச்சிகிட்டு இருங்க சாஹுல் காக்கா செத்த வீசிவுடுங்களேன் சும்மா இருக்காம !

/// வலைப்பூவின் கொள்கை என்று "வானவில் வளைப்பது" "சமூகத்துக்கும் எனக்கும் புரிதல் வேண்டி" "என் ஆழ் மனதின் அலறல்" என்றெல்லம் அசத்தலாக சொல்லிவிட்டு உள்ளே கடி ஜோக்கும் கன்றாவியும் என்று ஜல்லியடிப்பது ஏன் ///

சரியாத்தானே சொல்லியிருக்கீங்க அவங்க கடைபோட்டு விரிச்ச வலையில சிக்கிய கொசுக்களின் கடிதான் அங்கே ! ரொம்பதான் கடிக்குறாங்களோ ?

Shameed said...

இத இததான் எதிர் பார்த்தோம் அபுஇபுறாஹிம்

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

//இப்புடி சாய்ஞ்சு உட்காருங்க தலைய செவத்துல சாச்சிகிட்டு இருங்க சாஹுல் காக்கா செத்த வீசிவுடுங்களேன் சும்மா இருக்காம ! //

ஹாஹ்ஹாஹ்ஹா ஹிஹ்ஹிஹிஹ்ஹி.ஹய்யோ ஹ்ய்யோ.


உங்க பதிலைப் படித்துவிட்டு அடக்க முடியாத சிரிப்பால் "ஏன் பைத்தியம் மாதிரி சிரிக்கிறீங்க" என்று அடுப்பங்கறையிலிருந்து சப்தம் கேட்குது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எதேச்சையாக பார்த்த தொ(ல்)லைக் காட்சி விளம்பரத்தில் "bachelor of begging" பிச்சை எடுப்பதில் பட்டதாறியாம் ? இதெப்படி இருக்கு !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஜாஹிர் காக்கா சூப்பர், சூப்பர்.

வேலை பளு அதிகம் இருந்ததால் உடனே பின்னூட்டமிட முடியவில்லை.

வழக்கம் போல் வித்யாசம் + சிந்தனை + நக்கல் + ஓல்டுக்கு புது சூடு + நியூவுக்கு பழைய சூடு + ஆபாசமில்லா வார்த்தைகள் + சர்ச்சையில்லா விமர்சனம் + நரசிம்மராவ் போன்றவர்களை சிரிக்கவைக்கும் நகைச்சுவை + அனைத்து வயதுடையவர்களையும் கவரும் எழுத்து நடை என்று என்னற்ற நல்ல வலுவான spare parts கொண்டு தயாரித்து ஒரு ஆக்கத்தை தருவதில் சகோதரர் ஜாஹிர் அவர்களுக்கு நிகரான ஒரு நபரை பதிவுலகில் நான் இதுவரை கண்டதில்லை.

...கூரு இன்ன விலை...Temporarily under construction.... இது போன்ற நக்கல் விமர்சனங்கள் ரசிக்க வைத்தது.

வழக்கம் போல் தொடருங்கள் சகோதரரே உங்கள் தனித்தன்மையுடன் கூடிய எழுத்துப்பணியை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

/// crown சொன்னது… Saturday, October 30, 2010 6:53:00 PM
மேலும் விபரத்தை சகோ.தாஜுதீனிடம் கேட்டுக்குங்க காரணம் அவர் என் பிளாக்கை பிரபல படுத்துவதாகச்சொன்னதற்கு நான் எடுத்திருக்கும் முடிவு அவரிடம் சொன்னதை சொல்வார். ///

சகோதரர் தஸ்தகிர், 'புகழ் விரும்பாத தங்களின் தன்னடக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வு' இது தான் பதில். தனி வலைப்பூ வைத்திருப்பற்கான காரணத்தை நீங்களே விளக்கிவிட்டீர்கள்.

உங்கள் அன்பு, பாசம் போல் நீங்கள் எழுதும் எழுத்துக்களை ரசிப்பவர்கள் நிறைய பேர்களில் நானும் ஒருவன்.

:) :) :)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//சமீபத்தில் நடந்த்த [ சிலி நாட்டில்] சுரங்கத்தில் இருந்துமீட்ட பணியாளர்கள் பற்றியும் அந்த நிகழ்வு பற்றியும் அவர்கள் நமக்கு கற்றுத்தந்த ‘தலைமத்துவம்” பற்றியும் ஏன் யாரும் எழுதவில்லை.??//

சரியான கேள்வி, யாராவது அந்த நிகழ்வு பற்றியும் அது தரும் படிப்பினைப் பற்றியும் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக அதிரை வலைஞர் வட்டத்தில் சமுதாய நலனுக்காக தனித்தனியாக விழிப்புணர்வு குரல்கள் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டிருந்த வேலையில் நமக்கு கிடைத்த ஒரு பிளாட்ஃபாம் தான் அதிரைமணம்.

அசைந்தும் அசையாமலும் இருக்கும் வலைப்பூக்களை தாங்கிக்கொண்டிருக்கும் வலைப்பூ தோட்டத்தில் (அதிரைமணம்) காலையும் மாலையும் வந்து செல்லும் சகோதரர் ஜாஹிர் அவர்கள், தூங்கிக்கொண்டிருக்கும் பூக்களை தட்டி எழுப்பிவிட்டுருக்கிறார்கள்.

Unknown said...

அம்மாவும் மகனும் சிறுகதை' படித்து கொஞ்சம் கருத்து சொல்லுங்க காக்காமார்களா...
'நல்ல விழிப்புணர்வு கதை'என்று ஷாஹுல் ஹமீது காக்கா கருத்து சொல்லியுள்ளார்கள்
நீங்க சொல்லயா?

அம்மாவும் மகனும் சிறுகதை http://adiraipost.blogspot.com/2010/10/blog-post_30.html

Unknown said...

அழகான பதிவு.
ஈழத்தமிழர்களுக்கு அடுத்தபடியா நம்ம அதிரைப்பட்டினம் ஆட்கள்தான் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களைப்போலவே நாமும் அதிகமான வலைப்பூ வைத்திருக்கிறோம்.
அவர்கள் கிட்டதட்ட 2*3 மாவட்ட அளவில் உள்ளவர்கள்.நாமோ ஒரு ஊர் மட்டும்.
இந்த அதிரைப்பட்டினம் வலைப்பூக்களின் வருகை விட்டுப்போன நன்பர்களையும்,புதிய நட்புகளையும் தந்துள்ளது,பல நல்லவிசயங்களுக்கு வழி கிடைத்துள்ளது.

ஊடகத்தின் பக்கம் வாசல் திற‌ந்துள்ளது.
திருட்டு லாட்டரி வித்தால் கூட, எங்கோ ஒரு முனையில் இருக்கும் அதிரை சிட்டிசன் தெரிந்துக்கொள்கிறார்.

அரசுக்கு புகார் மனு அனுப்பினால் குப்பை தொட்டிக்கு போகிறது...வலைப்பூவில் போட்டால் உடன் நடவடிக்கை கிடைக்கிறது.

இனி ரோட்டு பைப்பில் தண்ணீர் வரவில்லை,தெரு விளக்கு எறியவில்லை என்பதுக்கூட செய்தியாகளாம்.
நம் கருத்துக்களை புறக்கணித்து வரும் வெகுசன ஊடகங்கள், நம் வலைப்பூக்களிலிருந்து காப்பி பேஸ்ட் போடலாம்.(அவர்களுக்கு நிருபர் செலவு மிச்சம்)

அதிரைப்பட்டினம் வலைஞர்களின் பிள்ளைகள் ஒன்றாம் வகுப்பில் 'மிஸ் என் பிளாக் அட்ரஸ் குறிச்சிக்குங்க' என்று சொல்லாம்.
எல்.கே.ஜியிலேயே யுனிக்கோடு கத்துக்கொடுக்கிறோம்ல...

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்றிலிருந்து இன்றுவரை எனது ஒரே கேள்வி, கவலை, சிந்தனை என இன்ன பிறவும் ...

"நம்ம புள்ளிங்க பிழையில்லாமல் தமிழ் எழுதும் நாள் என்று வரும்?"

crown said...

ஜமீல் சொன்னது…

அன்றிலிருந்து இன்றுவரை எனது ஒரே கேள்வி, கவலை, சிந்தனை என இன்ன பிறவும் ...

"நம்ம புள்ளிங்க பிழையில்லாமல் தமிழ் எழுதும் நாள் என்று வரும்?"
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா நலமறிய ஆவல்.தாங்கள் ஆதங்கம் சரியே அனாலும் இப்ப பலர் பிழையில்லாமல் தான் பதிய முயல்கிறார்கள்( நானும் தான்)சில நேரங்களில் தட்டச்சு செய்யும் போது சில எழுத்துக்கள் விடுபட்டு விடுகிறது.உங்களைப்போல் ஆசான்கள் அரிசியில் கல் பொருக்கி எடுப்பது போல் பிழையை சரிசெய்ய உதவுங்களேன்.(காக்கா சரியா பிழை எல்லாமல் எழுவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது - இதுவும் பிழை இல்லாமல் வந்திருக்கா?)

crown said...

(காக்கா சரியா பிழை இல்லாமல்னு இருக்கனும் ஆனால் எழுவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது - இதுவும் பிழை இல்லாமல் வந்திருக்கா?)
-----------------------------------------------------------------------
பாத்தியாலா இதுவும் பிழையோடு வந்துவிட்டது.(பிழை எல்லாமல் எழுவதற்குள் )இல்லாமல்னு இருக்கனும் ஆனால் எல்லாமல் என்று வந்துவிட்டது.(அவசர குடுக்கை)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜமீல் சொன்னது…
அன்றிலிருந்து இன்றுவரை எனது ஒரே கேள்வி, கவலை, சிந்தனை என இன்ன பிறவும் ...
"நம்ம புள்ளிங்க பிழையில்லாமல் தமிழ் எழுதும் நாள் என்று வரும்?" ///
--------------------------------

அன்பின் (ஜமீல்)காக்கா: இங்கே (நம்ம) புள்ளைங்க இனிமேல்தான் எழுதனும் என்னா இங்கே நம்ம "புள்ளிங்க"தான் எழுதிகிட்டு இருக்காங்க அதான் "புள்ளி" விழுவதும் தட்டச்சு வேகமாக தட்டும் ஆர்வம் அதனை வாசித்து வலைக்குள் தள்ளிவிட பொறுமை வேனும் அதோடு எத்தனை முறை அதைப் படித்தாலும் கண்ணுக்கு (தட்டச்சு தட்டியவர் கண்ணல்லவா எல்லாமே பொன்னாகத்தனே தெரியும்) சரியாகவே காட்டிவிடுகிறதே :).

காக்கா, அன்றும் இன்றும் என்றும் நாங்கள் உங்களின் சிறப்பான ஆலோசனைகளால் பலன்களையே கண்டு வந்திருக்கிறோம், காண்கிறோம் இன்ஷா அல்லாஹ் காண்போம்... முடிந்த வரை எழுத்துப் பிழை "அதாவது பெரிய / சிறிய" எழுத்துக்களை சரியாக இடம் பொருளறிந்து பயன்படுத்த முயற்சிக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

Unknown said...

ஜனரஞ்சகமாக எழுத ஜாகிர் காக்காவுக்கு நிகர் யார் ?.....முடியாது

jahangir said...

Nice idea

அப் டேட் செய்யாமல் பல காலம் இருப்பதால் மற்ற வலைத்தளஙக்களில் உள்ளவைகளை அவர்களின் அனுமதியுடன் வெளியிடலாம். முடியாவிட்டால் தற்காலிகமாக Temporarily under construction என போர்ட் மாட்டி ரெஸ்ட் எடுக்களாம்.

- Jahangir

அப்துல்மாலிக் said...

அதிரை மக்கள் அதிகளவில் பிளாக் சொந்தமாக வைத்திருப்பது நினைத்து சந்தோஷம், நிறையபேர் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது என்பது உண்மைதான் என்னையும் சேர்த்து, இதற்கு வேலை பழுவு, அ நேரமின்மை அ இன்டிரஸ்ட் இல்லாமல் இருப்பது அ வலையை விட்டு தூர இருப்பது காரணமாக இருக்கலாம்.

அடுத்தவர் வலைக்கு சென்று அதை பற்றி தொகுத்து கொடுப்பது அந்த வலை சொந்தக்காரருக்கு பெருமையே, அதை செவ்வனே செய்திருக்கீங்க..

Yasir said...

சிலரை முதல் தடவையை பார்க்கும் போது மனதுக்கு பிடித்து போய்விடும்..ஒரு சிலரை பல ஆயிரம் தடவை பார்ததாலும் மனது மக்கர் பண்ணும்..அதேபோல் உங்கள் எழுத்துக்களும் எண்ணங்களும் எனக்கு முதல் தடவையிலேயே பிடித்து ஆட் கொள்ள ஆரம்பித்து விட்டது....முதலில் படிக்கும் போது இருந்த அதே அழகிய நடை..மனதை ரிலாக்ஸ் செய்யும் மந்திரம். விறுவிறுப்பு...வித்தியாசமான தலைப்புகள்..இனி மருத்துவர்கள் பிரஸைரை குறைக்க மாத்திரைகளை கொடுப்பதை விட்டுவிட்டு உங்கள் கட்டுரைகளை தினமும் படிக்க சொல்லலாம்...அந்த அளவிற்க்கு அருமை காக்கா...மாஷா அல்லாஹ்

Shameed said...

Yasir சொன்னது…
சிலரை முதல் தடவையை பார்க்கும் போது மனதுக்கு பிடித்து போய்விடும்

அதற்காக கடைசியா பின்னுட்டம் இடனுமா ?

ZAKIR HUSSAIN said...

அன்பு மிக்க ஜமீல் நானா அவர்களுக்கு ...என் எழுத்தில் ஏதாவது பிழை இருக்கிறதா?..

சகோதரர்கள் ஹார்மி , அப்துல் மாலிக் , யாசிர்...உங்கள் கமென்ட்ஸ் நல்ல உற்சாகம் தருகிறது. தமிழும் , கணிணியும் நம்மை ஒருவரை ஒருவர் விழித்துகதைக்க வழிவகுத்ததில் நன்று.

சமீபகாலமாக எனக்குள் ஒரு எண்ணம் ஏன் நாம் எல்லோரும் துபாயில் ஒரு சந்திப்பு நிகழ்வை நிகழ்த்தக்கூடாது?....இதில் சிலருக்கு பொருளாதார ரிதியில் முடியாமல் இருக்களாம் ...உடனெ அல்ல அடுத்த அடுத்த வருடங்களில்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இளைஞரனி சார்பாக எங்கள் உறவுகளை அன்புடன் வரவேற்க காத்த்திருக்கிறோம் ! சந்தர்ப்பத்தை உருவாக்கலாமே இன்ஷா அல்லாஹ்....

அன்புடன் மலிக்கா said...

//அதில் நமது சகோதரிகளின் சமையல் சம்பந்தமான Blogs உண்மையிலேயே பாராட்டுக்குறியவை. [ அன்புடன் மலிக்கா , ஜலீலா கமால் மற்றும் பொதுவான விசயங்களை எழுதும் சகோதரி பாத்திமா ஜொஹரா.//

இதில் நானுமா! பலபலவிசயங்கள் நல்வழிகளின்பக்கம் எழுதயிருக்கு. அதை செம்மைபடுத்த முயலவேண்டும். சமையல் சம்பந்தமாக எழுதுவதைப்போல், நான் அதிகம் கவிதைகளையும் எழுதிவருகிறேன். கவியின்மூலம் நல்லவிசயங்களையும் எடுத்துச்சொல்லலாம் என்ற நம்பிக்கையில்.. என் அன்புக்கணவரின் உதவியோடு, இறைவனின் துணையிருந்தால் நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.

தாங்களின் ஊக்கத்திற்க்கும் அருமையா ஆக்கத்திற்க்கும் மிக்க நன்றி...

crown said...

அன்புடன் மலிக்கா சொன்னது…
இதில் நானுமா! பலபலவிசயங்கள் நல்வழிகளின்பக்கம் எழுதயிருக்கு. அதை செம்மைபடுத்த முயலவேண்டும். சமையல் சம்பந்தமாக எழுதுவதைப்போல், நான் அதிகம் கவிதைகளையும் எழுதிவருகிறேன். கவியின்மூலம் நல்லவிசயங்களையும் எடுத்துச்சொல்லலாம் என்ற நம்பிக்கையில்.. என் அன்புக்கணவரின் உதவியோடு, இறைவனின் துணையிருந்தால் நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.என் அன்புக்கணவரின் ஒத்துழைப்போடு,அல்லாவின் உதவியோடு என்றிருந்திருக்கலாமோ?கவி சகோதரி!. உங்கள் கவிதைகளை சமீபகாலங்களில் வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.உங்கள் கவி ஆசான் ,தாஹா வாத்தியார் என் சிறு வயதில் என் கவிதைகளைப்படித்து பாராட்டி தொடர்ந்து எழுத ஊக்கம் தந்தவர்கள். ஆனால் தொடர இயலாமல் போய்விட்டது.என் 11 ஆம் வயதில் தாஹா வாத்தியாரிடம் நான் சொன்னது இருவரி ஹைகூ அதுதான் என் முதல் கவிதை அவர்களின்பார்வைக்கு.
1).வயிறு முட்ட குடித்தேன்,குடித்தது கொம்புத்தேன்.
2).ஓ.... குளிரிலும் வேர்கிறதே!
குளிர்பான பாட்டில்.

Unknown said...

ஜாஹிர் உங்கள் எலுத்து தொடரட்டும்.(மீராசா சார்ஜா)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரர் மீராசா : முதலில் நல்வரவு சொல்வதில் மகிழ்ச்சியே !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு