Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை வரலாறு ! - ஒரு வலைப்பூ(தளம்) 13

அதிரைநிருபர் பதிப்பகம் | October 14, 2010 | , ,



வரலாறு டைத்தவர்கள் பல்லாயிரம் உண்டு அதில் வரலாறாக பதிவுக்குள் வந்தவைகள்தான் இன்றளவும் பேசப்பட்டும் போற்றப்படும் வருகிறது.

எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து அதாவது வாசிக்கும் ஆர்வம் எழுந்த சூழலிருந்து நல்லதையும் கெடுதலையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தேன் என் மாமா அவர்களின் நல் வழிகாட்டல் நல்லதை எப்படி அனுக வேண்டும் கெடுதலை எப்படி ஒதுக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தது இன்றும் அப்படியே.

பள்ளி நாட்களில் அன்று எங்களின் நன்மதிப்பை பெற்ற ஆசிரியர் ஜனாப் ஷேக் தாவுத் (கணிதம்) அவர்கள் வகுப்புக்குள் வந்து விட்டால் கண்டிப்பாக ஒரு வரலாறு எங்களுக்கு சொல்லப் படும் அதுவும் வீர வரலாறு, நாடுகளில் ஏற்பட்ட புரட்சி, சஹாபாக்களின் ஆட்சிமுறை, இஸ்லாமிய ஆட்சி, தாய் தந்தையரிடம் எப்படி நடப்பது, பொது இடங்களில் எப்படியிருப்பது இப்படி நிறைய அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.

நாமாகத் தேடிப் போய் வாசிக்கும் பழக்கும் சிறிது குறைந்தாலும் ஆங்காங்கே கிடைக்கும் அல்லது சந்தர்ப்பமாக அமையும்போதெல்லாம் வாசித்தும் வந்தோம், அதிலும் குறிப்பிட் சில வாரப் பத்திரிக்கைகள், தினப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கைகளில் அறிந்தும் வந்தோம். 90களில் நமது ஊரிலிருக்கும் அனைத்து பள்ளிவாசல் பற்றியும் அவற்றின் பழமை பற்றியும் தொகுக்கலாம் அதனை வலைத்தளங்களில் வெளியிடலாம் என்று ஆவல் எழுந்து அதற்கான முயற்சியும் எடுத்தோம் இதில் எனது சின்ன மாமா அவர்களின் பங்களிப்பும் ஆர்வமும் இருந்தது இருப்பினும் இந்த முயற்சி ஈடுபாட்டாளர்களின் வெளிநாட்டுப் பயணம் குறிக்கிட்டு தடைபட்டுப் போனது. இந்த சந்தர்ப்பத்தில்தான் அதிரையின் ஆதி வரலாறும் தேட ஆரம்பித்தோம் ஆனால் அன்று இந்த மாதிரியான ஊடகம் இல்லை நூலகங்களுக்கு செல்லாமலே எதனையும் எடுக்க முடியாது என்பதும் தெரிந்ததே, ஆக வேறு வழி தானாக கிடைத்தால் வாசிக்கும் பழக்கமிருந்ததால் அதுவும் அப்படியே விடுபட்டது.

மாஷா அல்லாஹ் இன்று இந்த நவீன மின்வலைப் பூக்களின் வருகையால் என் நெருங்கிய நட்பின் இளைய கடைக்குட்டிச் சகோதரனின் முயற்சியும், ஆர்வமும் அவருக்கு பக்க பலமாக இருக்கும் எங்கள் "அதிரை அஹ்மது" அவர்களும் மற்றும் நம் சகோதரர்களின் அமோக ஆதரவில் "அதிரை வரலாறு" என்றொரு வலைப்பூ தளம் வெற்றியுடன் மனம் வீச ஆரம்பித்து இருக்கிறது, இவர்களின் ஆழ்ந்த தேடல் நமக்கு நல்லதொரு வரலாற்றுச் சான்றுகளை தருகிறது.

அதிரை வரலாறு தொடர்ந்து நாம் வாசிக்க வேண்டும் அதில் நல்லதை ஊக்கப்படுத்துவோம் அதில் நம்பகத் தன்மையிருப்பின் அதனை அப்படியே பதிவு செய்வோம், அல்லது மாற்றுக் கருத்துக்களிருந்தால் அல்லது வேறு ஆதாரங்களிருந்தால் அதனை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று சரிப்படுத்துவோம், விமர்சனக் குட்டும் வைப்போம்.

எது எப்படியிருந்தாலும் இந்த சிறப்பா முயற்சி தொடரவும் வெற்றியடையவும், நம் சமுதாய நலனையே நன்மையாக கருதியே இந்த வரலாறு அமையவும் வாசிப்போம் வாழ்த்துவோம்.

- அபுஇபுறாஹீம், அதிரைப்பட்டினம்

13 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.தம்பி உடையான் படைக்கஞ்சான்.என் தம்பியின் முயற்சிக்கு ஒத்துழைத்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.மேலும் தம்பி அண்ணனாக வுடையவன் நான்(அது அன்பு காக்கா அபுஇபுறாகிம்)எதற்கும் அஞ்சிலேன்.

Unknown said...

அல்ஹம்துலில்லாஹ்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அதிரை வரலாறு வந்த பிறகு அதி(ராம்?)பட்டினம் என்ற வழக்கு சொல் அதிரைபட்டினம் என்ற புதிய பெயர் உருவாக ஒரு வழியாக இருக்கும் என்று நம்பலாம்.

வாழ்த்துக்கள் அதிரை வரலாறு.

Unknown said...

"அதிரைப்பட்டினம்"

Shameed said...

அதிரை வரலாறு படித்த பின் நிறைய விசயங்களில் விவரங்கள் அறிய முடிகின்றது.

Shameed said...

பின்னுட்டத்தில் ஆக்கமும் ஊக்கமும் அளித்துக்கொண்டு இருந்த நம் அபு இப்ராஹீம் தற்போது முன்னுடத்திலும் பங்கெடுத்து மெருகுக்கு மெருகு ஏற்றிகொண்டுள்ளார்.

sabeer.abushahruk said...

வரலாறுன்னாலே பள்ளிப்பருவத்திலிருந்தே நமக்கு கொஞ்சம் ஒவ்வாமை. 

தம்பியையும் அண்ணனையும் ஒருங்கே உடையவர் சொல்லிட்டாரேன்னு போய் பார்த்தேன். வரலாற்றை இயற்பியல் போல இன்ட்டெரெஸ்ட்டிங்கா சொல்லி இருக்காங்கப்பா.

தம்பி crown, இப்பெல்லாம் நாங்களும் படைக்கு அஞ்சுவதில்லை, அ.நி. மூலம் உங்களைப்போல நிறைய தம்பிகள் கிடைத்ததாலே. 

அ(ன்)பு இபுறாகீம், வரலாற்றிற்கு வழி காட்டியமைக்கு நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed on Thursday, October 14, 2010 4:17:00 PM said...
பின்னுட்டத்தில் ஆக்கமும் ஊக்கமும் அளித்துக்கொண்டு இருந்த ///

சாஹுல் காக்கா PINஆல் குத்தாமல் பின்னூட்டலே போதுமென்று இருந்திருக்கலாம் ஆனா நல்ல விஷயம் நம் சகோதர நல்லவங்களுக்கும் கிடைக்கனும்னு ஒரு நப்பாசைத்தான் முன்னுக்கு வந்தேன் இருப்பினும் என்றுமே பின்னால் ஊக்குவி(ற்)ப்பதில் ஆர்வமே ! ஏன்னா விரிசல் விழும் போதெல்லாம் நம்மோடு ஊக்கு இரண்டையும் குத்தி இணைக்குமாக்கும் ! :)

sabeer on Thursday, October 14, 2010 5:38:00 PM said...
வரலாறுன்னாலே பள்ளிப்பருவத்திலிருந்தே நமக்கு கொஞ்சம் ஒவ்வாமை.

வரலாற்றிற்கு வழி காட்டியமைக்கு நன்றி! ///

கவிக் காக்கா உங்கள மாதிரி கவியரசர்கள் வரலாறு இங்கே படைப்பவங்களுக்கு தாங்கள் படைக்கிற வரலாறு உங்களுக்கே தெரியாது அது எங்களுக்குல தெரியும் ! :) நிலவுக்கு வழி சொல்றவங்க நீங்க உங்களுக்கு வழி காட்டிட்டேனா !! :))

Yasir said...

அதிரை வரலாறு வலைப்பூ எதிர்கால சமுதாயத்தின் பொக்கிஷம்..பாதுகாக்க பட வேண்டும்...அபு இபுராஹிம் காக்கா..நன்றி இதை இங்கே எழுதி ஞாபக படுத்தியதற்க்கு

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு சகோரர்கள் நைனா தம்பி காக்கா,தாஜுதீன் சகிதம் நிர்வாகக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!. நிர்வாகம்(அட்மின்)சரியா இருந்தா எல்லாம் சரியாகத்தான் அமையும் .சில விடுபட்ட தகவல் சொல்லியிருந்தேன் உடனே புயல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தீர்கள் இதை பல முறை உங்களிடம் பார்த்து மகிழ்சி.துரித நடவடிக்கை இப்படி எல்லா அரசு எந்திரமும் செயல் பட்டால் நாடு எவ்வளவு முன்னேறி இருக்கும்???ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் மீண்டும் நன்றி!.

crown said...

sabeer on Thursday, October 14, 2010 5:38:00 PM said...

வரலாறுன்னாலே பள்ளிப்பருவத்திலிருந்தே நமக்கு கொஞ்சம் ஒவ்வாமை.

தம்பியையும் அண்ணனையும் ஒருங்கே உடையவர் சொல்லிட்டாரேன்னு போய் பார்த்தேன். வரலாற்றை இயற்பியல் போல இன்ட்டெரெஸ்ட்டிங்கா சொல்லி இருக்காங்கப்பா.

தம்பி crown, இப்பெல்லாம் நாங்களும் படைக்கு அஞ்சுவதில்லை, அ.நி. மூலம் உங்களைப்போல நிறைய தம்பிகள் கிடைத்ததாலே.

அ(ன்)பு இபுறாகீம், வரலாற்றிற்கு வழி காட்டியமைக்கு நன்றி.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பிற்கும்,என் மேல் கொண்ட நம்பிக்கைக்கும் நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

crown on Friday, October 15, 2010 1:35:00 AM said...
உடனே புயல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தீர்கள் இதை பல முறை உங்களிடம் பார்த்து மகிழ்சி. ///

அல்ஹம்துலில்லாஹ் ! எல்லாம் வல்ல அல்லாஹ் ஆரோக்கியத்தையும் (நம் உடலுக்கும், உள்ளத்திலும் எம் சமுகத்துக்கும்) எதனையும் எதிகொண்டு மீட்டெடுக்கும் சக்தியையும் கொடுப்பானாக இன்ஷா அல்லாஹ் !

அட (தம்பி)கிரவ்னு, இப்போ வருகிற புயலெல்லாம் சொல்லிட்டுத்தாம்பா வருது, அதுக்கு பேர் வச்சு, கிடாய் வெட்டி எல்லா மீடியாக்களுக்கும் அறிவித்து விட்டுதான் புயல் வருகிறது! - (அட சிரிச்சுதான் வையேன்)

நம் சிந்தனை என்றுமே "அதிரப்பட்டினத்து" எம் சமுதாய அனைத்து அதிரைச் சகோதரர்களின் நலனே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இனிமேல் "அதிரைப்பட்டினம்" ஆகா மேலே உள்ளதிலும் "அதிரப்பட்டினத்து"வை "அதிரைப்பட்டினத்து"ன்னு வாசிச்சுடுங்களேன் please !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு