Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று 11

அதிரைநிருபர் | October 27, 2010 | , ,

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல நமக்கு அல்லாஹ் வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகள் அது திரும்பப் பெறப்படும்போது நமெக்கெல்லாம் புரிய வரும். உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்: அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்.சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.

ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று.

சரியாக சிறுநீர் வெளியேறாமல், வயது முதிர்ந்த ஒரு மனிதர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேற்றுவதற்கான கருவிகளைப் பயன்படுத்தி சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. சில நாட்களுக்குப்பின்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார், அவருக்கு செய்யப்பட மருத்துவத்திற்காக பில் கொடுக்கப்படுகிறது. அதனை பார்த்துவிட்டு பெரியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிந்தோடியது, இதைப்பார்த்த மருத்துவர்கள், ஏன் பெரியவரே அழுகின்றீகள், என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார். அருகில் உள்ள மற்ற உறவினர்கள் அனைவரும் மறுபடியும் கேட்க, கண்களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார், "நான் என்னிடம் கொடுக்கப்பட்ட மருத்துவ செலவைப்பார்த்து அழுகின்றேன் என்று யாரும் நினைத்து விடவேண்டாம், இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே, அருளும் அன்பும் உடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறுதும் தடங்கலின்றி சிறுநீர் வெளியாக்கியதர்காக இதுவரை என்னிடம் ஒரு பைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லையே! என்று எனது இறைவனின் அருளை நினைத்து அழுகின்றேன் என்றார்.

ஆக ஒருவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகள், திரும்பப்பெறப்படும்போதுதான் அதன் அருமை தெரிய வரும். உலக விஷயங்களைப் பொறுத்துவரை நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் குணம் நம்மிடையே இருந்தால் நம்முடைய குறைகள் சற்றே நிமிடத்தில் மறைந்து விடும்.

அல்லாஹ் தன் திருமறையில் முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். அல்குர்ஆன் - (16:114) என்று கூறியிருக்கிறான்.

கால் வழியால் அவதிப்படுபவர்கள் கால்களே இல்லாதவர்களைப் பார்த்து, தனக்கு கால்களை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

சிறுநீர் சீராக கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயழிழந்து உயிருக்காக போராடும் எத்தனையோ மனிதர்களைப் எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

அதற்காக, நபி (ஸல்) அவர்கள் “நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள்” என்ற கருத்துப்பட கூறியிருப்பதை யாரும் மறந்து விடுதல் கூடாது

சொந்தங்களைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நமக்கெல்லாம் தொலைபேசி எனபது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்ததே. இதன் மூலம் நினைத்த மாத்திரத்திலேயே நாம் சொல்ல நினைப்பதை பரிமாறும் அளவுக்கு தொழில்நுட்பத்தை அல்லாஹ் நமக்கு அருளி இருக்கிறான் .

எனக்கு தெரிந்த ஒரு வாய்ப்பேச முடியாத நபர் துபாயில் வேலை செய்துவருகிறார் அவரால் தன் தாயிடமோ தந்தையிடமோ ஏன் தன் பாசமிகு மனைவியிடம் கூட அவரால் பேச முடியாது. எதாவது ஒரு செய்தியை தன குடும்பத்தாரிடம் சொல்லவேண்டுமெனில் சில தூரம் நடந்து வந்து தன் நண்பரிடம் விஷயத்தை விளக்கி தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வார்.

அவருக்கு சத்தம் என்ற சொல்லுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது.

அவருக்கு தன் பாசமிகு தாய், தந்தை, மனைவியின் குரல்கள் எப்படி இருக்குமென்று தெரியாது

அவரால் தனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்று கூட மருத்துவரிடம் விளக்கி கூற முடியாது

நம்மெல்லாம் அலாரம் வைத்து எழுந்திருப்பதுபோல் அவரால் எழுந்திருக்க முடியாது

இதுவெல்லாம் என் கண்ணிற்கு தெரிந்த சில விஷயங்களே, எனக்கு தெரியாமல் எத்தனை விஷயங்களிலோ அவர் படும் துயரத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான்.

எனக்கு இப்படி ஒரு குறையை அல்லாஹ் தந்துவிட்டானே என்று ஒரு முறை கூட அவர் சொல்லி நான் கேட்டதில்லை.

மாறாக சில சமயங்களில் அல்லாஹ் எனக்கு அழகிய கண்களைக் கொடுத்து இருக்கின்றானே என்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியது என் நினைவிற்கு வருகிறது.

அப்படியானால் நமது உடல் உறுப்புக்களை ஒரு சிறிதும் குறை இல்லாமல் படைத்த நம் அல்லாஹ்வுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாக ஆவோமாக ஆமீன்

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147)

-- Azeezudheen.

11 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யா அல்லாஹ் உன் அருட்கொடையால் எனக்கு அளித்திருக்கும் அற்புதங்கள் அனைத்தைக் கொண்டும் உனக்காகவே இயங்கிட, உன்வழியிலே சென்றிட, உன் பொருத்தத்தை நாடியே இயங்கிட அருள்புரிவாயாக !

எல்லப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ் !

அஜீஜுதீன் EXCELLENT எங்களுக்கு நினைவு படுத்தியதற்கு...

sabeer.abushahruk said...

நல்ல பதிவு. கவனமான தொகுப்பு. தஹல்லிம் வாசிக்கும் லாவகம். நன்றி.

சகோ.அஜிஜுதீன், தொடர்ந்து பதியுங்கள்

ROYAL SON 4 said...

அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல விசயத்தை இதுபோல் copy செய்து அதை நடைமுறைப்படுத்தவவும் அல்லாஹ் அருள் புரிவாய் எனக்கு.மிகவும் அழகாக,ஆழமாக விதைக்கப்பட்ட ஆக்க விதை.வாழ்துக்கள் இதுபோல் பல ஆக்கம் இயற்ற வேண்டுகிறேன்.யா அல்லாஹ் உன் அருட்கொடையால் எனக்கு அளித்திருக்கும் அற்புதங்கள் அனைத்தைக் கொண்டும் உனக்காகவே இயங்கிட, உன்வழியிலே சென்றிட, உன் பொருத்தத்தை நாடியே இயங்கிட அருள்புரிவாயாக !
-crown

எல்லப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ் !

அஜீஜுதீன் EXCELLENT எங்களுக்கு நினைவு படுத்தியதற்கு...

அலாவுதீன்.S. said...

சகோ. அஜிஜுதீன் :அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (2:152)

நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான். (அல்குர்ஆன்:16:78)

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். (அல்குர்ஆன்:16:78)
****************************************************************************
வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவதை நினைவுபடுத்தியதற்கு : நன்றி!

அலாவுதீன்.S. said...

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. (அல்குர்ஆன்:16:53)

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (2:152)

நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான். (அல்குர்ஆன்:16:78)

நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். (அல்குர்ஆன்:14:7)

அப்துல்மாலிக் said...

நமது உடல் உறுப்புக்களை ஒரு சிறிதும் குறை இல்லாமல் படைத்த நம் அல்லாஹ்வுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாக ஆவோமாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

ஜாகிர் ஹீசைன் said...

சகோதரர் அஜீஜுதீன் நினைவு கூறியதற்கு ரொம்பவும் நன்றி,
நாம் பார்ப்பது நமக்கு மேலே உள்ளவர்கள் எப்படிவாழ்கிறார்கள், நமக்கு கீழே உள்ளவர்களைப்பார்த்தால் நம்முடையவாழ்கை சுகமளிக்கும்
இறைவன் சொல்கிறான்
நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.51:55.இன்னும்
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். 90:8,9,10
அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.25:50

Shameed said...

நன்மையான நன்றி கூறல்

Azeez said...

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அந்த வாய் பேசமுடியாத நபருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் நான் தங்கி இருக்கும் ரூமுக்கு ரெண்ட் அதிகமாக இருக்கு என்றார். அதற்கு நான் குறைந்த ரெண்டில் ரூம்தான் கிடைக்குமே என்றேன்.அதற்கு அவர் இப்போது நான் என்னோடு பணிபுரியும் சக ஊழியருடன் தங்கியிருப்பதால் அவர் என்னை அதிகாலையிலேயே எழுப்பிவிடுகிறார், ஏனென்றால் என்னால் உங்களைபோல் அலாரம் வைத்து எழும்பமுடியாதல்லவா , அதனால்தான் மற்றவர்களோடு என்னால் தங்கமுடியவில்லை. என்று கூறியது நினைவுக்கு வருகிறது

Yasir said...

அப்போப்போ இது மாதிரி பூஸ்டர் ஊசி தேவை உள்ளதிற்க்கு

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தம்பி அஜிஸ், அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ்... நல்ல சிந்தனை ஆக்கத்தை தந்தமைக்கு மிக்க நன்றி.

நீங்கள் குறிப்பிட்ட சகோதரர் என் வயதுடையவர்,சில காலமாக அதிகம் தொடர்பு இல்லாவிட்டாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு அமீரகத்தில் சந்தித்தேன், சிறுவயதில் அவருக்கு பயப்படுவதுண்டு ஆனால் இப்போது அச்சகோதரர் என்னையும் என் குடும்பத்தையும், பிள்ளைகளையும் பற்றி விசாரித்தார். அச்சகோதரரை இங்கு அனைவருக்கும் அறிமுகப்படுத்தி ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

என்றென்றும் இவ்வுலகில் நாம் நன்றி சொல்ல வேண்டிய ஒரே ஒருவன் அல்லாஹ் மட்டுமே என்பதை நம் அனைவருக்கும் மிக அருமையாக ஞாபப்படுத்தியுள்ளீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் தம்பி....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு