Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் கேள்விக்கென்ன பதில்? - கவிதை ! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | November 18, 2012 | , , , , ,


சுதந்திரம் அடையத் தந்தது
.... சுரண்டல் பெருக்கித் தின்னவா?
இதந்தரும் நலத்தை மக்களும்
.... இனிதே விரும்பி மின்னவா ?

உரிமைகள் ஒருசிலர் மட்டும்
....உரிமையாய்ப்  பெற்றுச் சூழவா?
விரிவுடன் அனைவரும் பெற்று
....விரும்பிய வண்ணம் வாழவா?

கடமைகள் எல்லாம் வெற்றுக்
.. கண்துடைப் பென்பதே எல்லையா?
உடைமைகள் காத்து நாட்டின்
.. உன்னதம் போற்றுவோர் இல்லையா?

செல்வம் என்பதே அரசியலார்ச்
....சொத்துச் சேர்த்திட  மட்டுமா?
கல்வி கற்றவர் உழைப்பினாலே
....காசு சேர்த்திடக் கிட்டுமா?

தாயகம் இனியும் சாதிகளின்
....தனித்தனித் தீவு நாடா?
தூயநல் மனித நேயமதைத்
....துளிர்விடும் அன்புக் காடா?

ஒருமைப் பாடு வெற்று
....உளறலில் வெளிவரும் கேலியா?
அருமை நாடு பெற்ற
....அடிப்படை உரிமையும் போலியா?

பாரதத் தேசமும் ஊழலால்
....பேர்கெடப் போகவும் வேண்டுமா?
யாரதன் காரணம் தாமதம்
...இன்றியே காணவும் தூண்டுமா?

மனிதர்நாம் என்பதை நாளும்
......மறந்துப் போவதும் ஆகுமா?
இனிதாய்நம் அன்பினைக் காட்டி
.....இகத்தில் வாழ்தலும் வேண்டாமா?

வினாக்களை யானும் ஈண்டு
....விடுத்தனன் உங்களை நோக்கி
கனாக்களில் வாழும் சூழல்
...களைந்திட ஆவலும் தேக்கி

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

23 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

ஊழல் ஒழிப்பு கண்டனக் குரல்
நாடெங்கும்
ஒலிக்கட்டும்
கலாம் காக்காவின் கனவு
பலிக்கட்டும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

முதலில் நம் நாட்டு மக்களாகிய முஸ்லிம்களை பார்க்கும் ஒவ்வொரு இந்துக்களுக்கும்/கிருஸ்த்தவர்களுக்கும் 'இவன் தீவிரவாதியாக இருப்பானோ? பயங்கரவாதியாக இருப்பானோ? குண்டு வைப்பவனாக இருப்பானோ? ஏதேனும் இயக்கவாதியாக இருப்பானோ?' என்ற சந்தேக‌ எண்ணமும், அச்சம் கலந்த பார்வையும் அதே போல் இந்துக்களை பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் 'இவன் ஆர்.எஸ்.எஸ். காரனாக இருப்பானோ, பஜ்ரங்க்தள்காரனாக இருப்பானோ, பாஸிசவாதியாக இருப்பானோ? சமூக விரோதியாக இருப்பானோ? குழப்பம் விளைவிப்பவனாக இருப்பானோ? ஏதேனும் இந்து மதவாத இயக்கத்தில் இருப்பானோ? விநாயக சதூர்த்தி மூலம் ஊரில் அமைதிக்கு வேட்டு வைப்பவனாக இருப்பானோ?' என்ற சந்தேகப்பார்வை நிச்சயம் அகல வேண்டும்.

அப்பொழுது தான் நம் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் தலைத்தோங்கும். அரசு நிர்ணயிக்கும் வளர்ச்சி இலக்கை எளிதில் எட்டிப்பிடிக்க முடியும். இல்லையேல் குள்ளநரிகளின் காட்டில் ஓயாத மழை என்றும் பெய்து கொண்டே தான் இருக்கும். ஆப்பிரிக்கக்கண்ட காட்டின் நடுவே வாழும் பழங்குடிமக்களின் கைகளில் ஐஃபோன் வந்து விட்டாலும் நம் நாடு ஒரு போதும் முன்னேறாது.

எந்த‌ இன‌ம், ம‌த‌த்தில் தீவிர‌வாத‌ம் இல்லை? சொல்லுங்க‌ பார்க்க‌லாம்.......

ந‌ல்ல‌ கால‌த்திற்கேற்ற‌ க‌லாம் காக்காவின் க‌விதை இது. தொட‌ருங்க‌ள் உங்க‌ளின் க‌விப்ப‌ணியை.

Unknown said...

Assalamu Alaikkum,
Dear brother, My reply as follows.
Every individual should have been nurtured by their parents, religions, educational organizations with characters based on morale values. Its rare to see God consciousness and good characters in people belongs to almost all religions(even through religions teaches those aspects) not only in India but everywhere. I think people have to become more conscious in building their characters(even the aethists) and in God Consciousness.

Unknown said...

Selfishness, Greediness, Hatredness, Revenge, Religious extremism, Language extremism, State-region-street level possessiveness and partialities, seeing other religion people as enemy,
thoughts stemming from superiority complex,
thoughts stemming from inferiority complex, and
low level in morale.

All of these evils are dominating in the minds.

The cure is to build good characters, true love, understanding, brotherhood, helping tendencies, cooperation, broad mindedness, almost all and even more are well defined in Islam.

Please observe that if you say deeply "Assalamu Alaikkum" - "peace be upon you" to another brother/sister in Islam, then you are committed not to destroy his peace of mind. If you say "Assalamu Alaikkum" in the voice only, then you may NOT committed to keep the peace of the brother/sister.

Ebrahim Ansari said...

//ஒருமைப் பாடு வெற்று
....உளறலில் வெளிவரும் கேலியா?
அருமை நாடு பெற்ற
....அடிப்படை உரிமையும் போலியா?//

பல வால்யூம்கள் எழுதி கேட்கவேண்டிய கேள்விகளை " நச்" சென்று கேட்டிருக்கிறீர்கள். முழுக் கவிதையுமே முத்தாரம்.

உங்களின் ஒவ்வொரு கவிதையையுமே பாராட்ட வார்த்தைகளைத் தேடிப்பிடிக்க கஷ்டமாக இருக்கிறது.

Yasir said...

சரமாரியான கேள்விகள்...விழிபிதுங்க வைக்கும் வினா ஏவுகணைகள்...தாக்குமா அந்தந்த இலக்குகளை.....கரு அழகு அதனை வார்த்தைகளை வைரமாக்கி யாத்த அழகு...இது கலாம் காக்காவிற்க்கான இயல்பு..வாழ்த்துக்களும் துவாக்களும்...

ZAKIR HUSSAIN said...

//Please observe that if you say deeply "Assalamu Alaikkum" - "peace be upon you" to another brother/sister in Islam, then you are committed not to destroy his peace of mind. If you say "Assalamu Alaikkum" in the voice only, then you may NOT committed to keep the peace of the brother/sister. //

Well Said Brother B. Ahamed Ameen

ZAKIR HUSSAIN said...

//செல்வம் என்பதே அரசியலார்ச்
....சொத்துச் சேர்த்திட மட்டுமா?//

இதை இப்படியும் எழுதலாம்..

"அரசியல் என்பதே செல்வம் சேர்த்திட மட்டும்தான்"

யாரும் நம்பலேனா...சமீபத்தில் நடந்த பல ஊழல்கள் எப்படி ரெக்கார்ட் ப்ரேக் லெவலுக்கு இருக்கிறது?

Unknown said...

All of the above mentioned(in the poetic lines) happening in the land, because of responsible persons are not acting responsibly as if there is no moral framework(at least their religious teachings or their responsible leaders' teachings) to follow by them. I don't think even in the far future, things will be alright. Lets wish for better situation in the lives of people and pray to God Almighty.

sabeer.abushahruk said...

கோபம் கொப்பளிக்கிறது கேள்விகளில். "அதானே" என்று கேள்விகளை ஆமோதிக்க வைக்கிறது கவிதையின் போக்கு.

அநீதிக்கு எதிராக அதிரைக்காரர்களின் கைவசம் ஆயுதம் ஒன்று இருக்கிறது.

அது,

"கவியன்பனின் கவிதைகள்" என்னும் ரூபத்தில்!

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//செல்வம் என்பதே அரசியலார்ச்
....சொத்துச் சேர்த்திட மட்டுமா?//

இதை இப்படியும் எழுதலாம்..

"அரசியல் என்பதே செல்வம் சேர்த்திட மட்டும்தான்"

யாரும் நம்பலேனா...சமீபத்தில் நடந்த பல ஊழல்கள் எப்படி ரெக்கார்ட் ப்ரேக் லெவலுக்கு இருக்கிறது?
----------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஆமாம் பல ரெக்கார்ட்பிரேக்(ஆதரத்தை உடைப்பதாகவும்)காகவும் உள்ளது.

crown said...

//Please observe that if you say deeply "Assalamu Alaikkum" - "peace be upon you" to another brother/sister in Islam, then you are committed not to destroy his peace of mind. If you say "Assalamu Alaikkum" in the voice only, then you may NOT committed to keep the peace of the brother/sister. //
-------------------------------------------------------------
Assalamualikum! brother Ameen hi doing? You said "Really true and Beautiful.Do you remember me?

அலாவுதீன்.S. said...

சுதந்திரம் அடையத் தந்தது
.... சுரண்டல் பெருக்கித் தின்னவா?
உரிமைகள் ஒருசிலர் மட்டும்
....உரிமையாய்ப் பெற்றுச் சூழவா?
கடமைகள் எல்லாம் வெற்றுக்
.. கண்துடைப் பென்பதே எல்லையா?
செல்வம் என்பதே அரசியலார்ச்
....சொத்துச் சேர்த்திட மட்டுமா?
தாயகம் இனியும் சாதிகளின்
....தனித்தனித் தீவு நாடா?
ஒருமைப் பாடு வெற்று
....உளறலில் வெளிவரும் கேலியா?
***********************************************************
சுதந்திரம், உரிமைகள், கடமைகள், அரசியல், தாயகம், ஒருமைப்பாடு எல்லாமே: காவிகளின் கையிலும், அரசியல் வியாதிகளின் கையிலும் சிக்கி சீரழிந்து விட்டது.

இனியொரு சுதந்திரத்திற்காக போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கவிதையில் வடித்த அழகிய கேள்விகள் - பதில் சொல்ல அதிகாரவர்க்கத்தில் யாரும் இல்லை! வாழ்த்துக்கள்!

Unknown said...

To brother Zakhir Hussain
Thanks a lot for your appreciating my feedback.

To brother Crown Dhasthagir
Wa Alaikkum Salam brother Dhasthagir, Yes I remember you and the days with you chatting near by old post office. Its been long time we don't meet in person. Alhamdulillah Adirai Nirubar forum has united us.

Thank you too for appreciating me for my feedback.

That single point ensures that Islam is practically making peace in individuals and in making sure no corruption and establish peace in country.

Iqbal M. Salih said...

//அநீதிக்கு எதிராக அதிரைக்காரர்களின் கைவசம் ஆயுதம் ஒன்று இருக்கிறது.

அது,

"கவியன்பனின் கவிதைகள்" என்னும் ரூபத்தில்//

மிகச்சரியான கருத்து.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புள்ளங்கட்கு அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜஸாக்கல்லாஹ் கைரன்.

தொடர்ந்து என் கவிதைச் செடிகள் அதிரை நிருபர்க் கொடியில் படர்ந்து, உங்களின் பார்வையில் பட்டும், பின்னூடங்களால் பாராட்டுப் பெற்றும் வருவதைக் கண்டு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறேன்: அல்ஹம்துலில்லாஹ்!

துவக்கமாய்k கவித்துவமாய்ப் பாராட்டிய அன்புத்தம்பி அர.அல அவர்களின் துஆவும் பலிக்கட்டும்!

அன்புச் சகோ. நெய்நா அவர்களின் நகைச்சுவை மிக்க / அதிரை வழக்குச் சொல்லாடலில் தோய்ந்த ஆக்கங்களின் இரசிகன் அடியேன் என்பதால் , என் வீட்டிற்குச் சொல்லி உங்களின் “உம்மா”ன்னா சும்மாவா” என்னும் ஆக்கத்தைப் படிக்கச் சொன்னேன்; அவர்களும் பாராட்டினார்கள்; தாய்க்குலத்தின் ஏகோபித்த ஆதரவு உங்களின் ஆக்கங்கட்கு உண்டு. நீங்கள் கூறும் “மத நல்லிணக்கத்தை” அடியேன் வார்த்தையிலும் வாழ்க்கையிலும் பின்பற்றுவதாற்றான், என்னுடைய நண்பர்களில் பலர் முஸ்லிமல்லாதோராக இருக்கின்றனர்; அவர்கட்கும் இஸ்லாத்தை எத்தி வைப்பதில் கவனமாக இருக்கிறேன்.

Dear Brother Ahmed Ameen, Assalaamu Alaikkum,

My heart-felt congratulation on your appreciation which fills with satisfaction of my creation (poem).

டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா: உண்மையை உரக்கச் சொன்னீர்கள். ஆம். கவிதையின் தாக்கம் எனபது இதுவாகத்தான் இருக்கும். சுருங்கக் கூறி விளங்க வைத்தல் என்பது தான் கவிதையின் அரிச்சுவடிப் பாடம்.


கல்வியாளர் யாசிர் அவர்கள் விழிப் பிதுங்க வேண்டா; வழிகள் பல உள;விடையறியா வினாக்களாய்த் தோன்றினாலும் தடைகள் அகன்றால் மடைதிறந்த வெள்ளம் போல் விடைகளும் தானாகவே பிறக்கலாம்.

உளவியலார் ஜாஹிர் ஹூஸைனின் கருத்தை ஏற்கிறேன். கவிதையில் இடம் வலம் மாறி எழுதுதல் இயல்பு; அஃது எதுகைக்கான ஏற்பு.

கவிவேந்தர் சபீர்! என் எண்ணக் கதிர்களைப் பிரதிபலிக்கும் நிலவொளி போல், சரியாகச் சொல்லி விட்டீர்!! ஆம். . கோபம், சாடல் இவைகளில்லாப் பாடல் ஏது? கவிஞனுக்குரிய உரிமைகளில் இக்கோபமும் ஒன்றுதானே.

மார்க்க போதகர், அன்பர் அலாவுதீன்: நமக்கு எந்த இனத்தார் மீதும் கோபம் வேண்டா. நம்மை நாமே திருத்திக்கொண்டால் எல்லாரும் நம்மீது அன்பு பாராட்டலாம். இப்பாடலில் கோபம் கொப்பளிப்பது நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கருதியே கவிதையாய் வடித்தேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பின் சகோ. இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ், அஸ்ஸலாமு அலைக்கும்.

நேற்றிரவு - நடுநிசியில் உங்களின் தனிமடல் மின்னஞ்சலில் கண்டு, அடியேனும் உடன் மறுமொழி இடல் கடன் என்று கருதி , அவ்வண்ணம் மறுமொழி வரைந்தேன். அம்மடலிலும், அடியேனை மதித்து அன்பொழுகப் பாராட்டியிருந்தீர்கள் இவ்வாறு: //எங்கள் ஊர் பிறவிக் கவிஞர் கவியன்பன் தங்களைப் பற்றி சென்ற வாரம் அதிரை நிருபரில்:

"தளபதியும் பலசமயம்
மொழியால் பரதமாடுவார்"

என்று சபீரிடம் குறிப்பிட்டிருந்தேன்.//

உண்மையில் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியாதாகும். எனக்குக் கல்வியும்- யாப்பிலக்கணமும் கற்றுக் கொடுத்த அன்பு ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்கட்கு உங்களனைவரின் பாராட்டுகளைச் சமர்ப்பிக்கிறேன்.

crown said...


சுதந்திரம் அடையத் தந்தது
.... சுரண்டல் பெருக்கித் தின்னவா?
இதந்தரும் நலத்தை மக்களும்
.... இனிதே விரும்பி மின்னவா ?
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இந்தியாவின் தேசிய மிருகம் புலி என்பதை எலி ஆக்கியிருக்"கலாம்.காரணம் சொரண்டல்களில் அரசியல் எலியின் பங்கு அதிகம்.அரசியலில் தான் எல்லாத்துக்கும் ஒரு ரேட்(விலை)உள்ளது. எலியும் (Rat)தானே?

crown said...


உரிமைகள் ஒருசிலர் மட்டும்
....உரிமையாய்ப் பெற்றுச் சூழவா?
விரிவுடன் அனைவரும் பெற்று
....விரும்பிய வண்ணம் வாழவா?
---------------------------------------------------

உரிமைகள் ஒருசிலர் மட்டும்
....உரிமையாய்ப் பெற்றுச் சூழவா?
இல்லை எல்லாரிடமும் பரந்து அது பயன் பெற
விரும்பிய வண்ணம் வாழ"வா.என உரிமையாய் அழைக்கனும் கவிஞரே!(சும்மா என் எண்ணத்தை சொன்னேன்! நான் நல்லது என்னத்த சொன்னேன் என தவறாக எண்ண வேண்டாம்)

crown said...

ஒருமைப் பாடு வெற்று
....உளறலில் வெளிவரும் கேலியா?
அருமை நாடு பெற்ற
....அடிப்படை உரிமையும் போலியா?
---------------------------------------------------------------------
நான் மதித்து போற்றும் அறிஞர் இபுறாகிம் அன்சாரி காக்காவுக்கு பிடித்த இந்த வரிதான் என்னையும் முதலில் கவர்ந்தவரிகள். இது காந்த வரிமட்டுமல்ல! ஏகாந்தவரியும் கூட!காரணம் உரிமை நமக்கும் என்று எண்ணி ஏமாந்த காரணம் உரிமை தமக்கு மட்டும்தான் என்கிற எதாத்தளம் அது அரசியல் எண்ணும் தனி இடத்தில் இருக்கிறது.

Unknown said...

>>>>>>
தூயநல் மனித நேயமதைத்
....துளிர்விடும் அன்புக் காடா?

ஒருமைப் பாடு வெற்று
....உளறலில் வெளிவரும் கேலியா?
<<<<<<<

இந்த வேதனையைப் படாதவர்கள் இல்லவே இல்லை.

ஒரு நல்ல மருத்துவரைப் போன்ற பரிந்துரை தந்த நெய்-நா அவர்களின் மடலுக்கு ஒரு சபாஷ்

அன்புடன் புகாரிShameed said...

என்ன இவரோட கவிதை கேள்வி எடக்கு மடக்கா இருக்கேன்னு அரசியல்வாதிகள் கேள்வி கேட்டு கதி கலங்கிப்போய் உள்ளனர். தமினத் தலைவருக்கும் அவரின்(குடும்ப ) கட்சிக் காரர்களுக்கும் இது தெரியாமலா இருக்கும்

KALAM SHAICK ABDUL KADER said...

வார்த்தைச் சித்தர் - மகுடக் கவிஞர் அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி-ஜஸாக்கல்லாஹ் கைரன்.
அன்புடன் புகாரி அவர்களின் வருகையால் என் கவிதைக் குழந்தை ஆனந்தத்தால் துள்ளும்; மனத்தினில் ஆர்வம் கொள்ளும். என் கவிதைத் தொகுப்பு - நூலுக்கு நீங்கள் கருத்துரை வழங்கியிருந்தும், நூல் வெளியீட்டில் அனுபவம் இல்லாமையாலும், குறுவிடுப்பில் தாயகம் சென்றதாலும் அப்படியே கிடப்பில் இருந்தாலும், இப்பொழுது, இதே அதிரை நிருபர்த் தொடங்கியுள்ள பதிப்பகத்தில் இன்ஷா அல்லாஹ் வெளியிட ஒப்புதல் பெற்றுள்ளேன். நீங்களும் முன்னர்க் குறிப்பிட்டது போல், என் கவிதைகளின் தரமும் நேர்த்தியும் கூடி வருவதால், மிகச் சிறந்த- இலக்கணப் பிழைகளற்றவைகளாகத் தேர்ந்தெடுத்துப் பதிப்பிக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. என்றும் உங்களின் அன்பையும் ஆதரவையும் மறக்க மாட்டேன்,


சுட்டும் விழிச் சுடரே! நாம் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. கவிதையின் ஓட்டம் அப்படி அமைந்து விட்டது; அவ்வளவு தான்.


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு