Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மக்காவில் தெரு கூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான சம்பவம்..!! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2012 | , , , , ,


பங்களாதேசை சேர்ந்த சகோதரர் ஒருவர் மக்காவின் தெருவை கூட்டி சுத்தம் செய்துவரும் பல்தியாவின் கூலி வேலையை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவ்வாறு ரோட்டில் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ள முதியவர் ஒருவர், திடீரெண்டு தன்னை கட்டி ஆரத்தழுவி தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுததை கண்ட அந்த கூலித் தொழிலாளி அதிர்ந்தேவிட்டார்...! ஆம். அதற்கான காரணம் அந்த முதியவர் வேறு யாரும் அல்ல..! தன் உடன் பிறந்த சகோதரர்தான் அந்த முதியவர். 


கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் தமக்கிடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தன் தம்பிக்கு சேரவேண்டிய பங்கினை தராமலும், பங்கை கேட்கும் போதெல்லாம் தன்னை சிறைக்கு தள்ளிய அந்த கொடூர சகோதரர்தான், தற்போது புனித மக்காநகரில் தன்னை கட்டித்தழுவி மன்னிக்கும்படி மன்றாடிய அந்த முதியவர் ஆவார். 

மேலும் இந்த இரு சகோதரர்கள் ஒன்றும் பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களும் அல்ல. பொருளாதாரத்தில் மிக வலிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் கைவசம் இருக்கும் ரொக்கம் மட்டுமே இந்திய ரூபாயில் சுமார் 25 கோடிக்கும் மேல். இது அல்லாமல் பல சொத்துக்களுக்கும் சொந்தக்காரர்கள் ஆவார்கள். இப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்த இந்த இளைய சகோதரர்தான் இன்று மக்கா நகரில் சில நூறு ரியால் சம்பளத்திற்காக தெருக்களை கூட்டி சுத்தம் செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். தன் மூத்த சகோதரர் தனக்கு செய்த தவறினால் சவூதி சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். 

கடந்த ஐந்து வருடத்திற்கு முன், மூத்த சகோதரர் தன்தம்பிக்கு, தான் செய்த தவறை நினைத்து வருந்தி தன் தம்பியை தேடி பல இடங்களுக்கும் அலைந்துள்ளார். காண்போரிடம் எல்லாம் தன் தம்பியை கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்குவதாகவும் தெரிவுத்துள்ளார். இந்த நிலையில், இந்த வருடம் புனித ஹஜ் சென்றபோதுதான் மக்கா நகரின் தெருவில் ஏதேச்சையாக தன் சகோதரரை கண்டு ஆரத்தழுவி உள்ளார். தன்னை மன்னிக்கும்படியும் மன்றாடியுள்ளார். தற்போது தான் புற்று நோயால் (கேன்சர்) அவதிபடுவதாகவும், இன்னும் எத்தனை காலம் இந்த உலகில் தான் வாழப்போகிரேனோ தெரியவில்லை என்றும், உடனே ஊருக்கு திரும்பும்படியும், தன் தம்பிக்கு சேரவேண்டிய அனைத்து பங்கினையும் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். 

தம்பியும் தன் சகோதரர் தனக்கு செய்த அணைத்து பாவங்களையும் மன்னித்து விட்டதாகவும், சகோதரருடன் ஊருக்கு திரும்பவும் சம்மதித்துள்ளார். மேலும் தனக்கு தம் சகோதரர் செய்த அணைத்து தீமைகளையும் மன்னித்துவிட்டு ஊர் சென்று புதுவாழ்வு தொடங்க உள்ளதாகவும், தான் எப்போதும் ஏழைகளிடமும், தேவை உள்ளோரிடமும் இரக்கம் காட்டுவதாகவும், அவர்களுக்கு உதவி செய்யப் போவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழ்மை என்றால் என்ன என்ற பாடத்தை தான் கற்றுக்கொண்டதாகவும், கோடிஸ்வரனாக இருந்து குப்பை பொறுக்கி தற்போது மீண்டும் கோடிஸ்வரனாக மாறியுள்ள அந்த சகோதரர் கூறியுள்ளார். 

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்ற வசனத்திற்கு இந்த நிகழ்வை ஆதாரமாகவும், தான் செய்த நல்ல அமல்கள் மட்டுமே தன் மரணத்திற்கு பின் வரும் தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் அல்ல என்ற உண்மையையும் பிரிந்த அந்த சகோதரர்களை இணைத்து வைத்து அல்லாஹ் இந்த ஹஜ்ஜின் மூலம் நிலைநாட்டியுள்ளான். 

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் மூலம் அன்று பிறந்த பாலகன் போல் தான் திருப்ப வேண்டும் என்று மூத்த சகோதரரின் நினைப்பிற்கும், தனக்கு அநீதி இழைக்கப்பட்ட காரணத்தினால் கடும் வெயிலில் நின்று தெரு கூட்டி பிழைத்தாலும், மன்னிப்பைவிட இந்த உலகில் சிறந்த பண்பு வேறொன்றும் இல்லை என்ற இளைய சகோதரரின் நடத்தைக்கும் அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த வாழ்வை தர நாமும் துவா செய்வோம். 

இந்த நிகழ்வுமூலம் பல முஸ்லிம் சகோதர்களுக்கு நல்ல படிப்பினையுண்டு. 

அதிரை முஜீப்

33 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

படிப்பினையூட்டும் சம்பவம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்று மதியம் இந்த செய்தியை கல்ஃப் நியூஸ் பத்திரிகையில் வாசித்து விட்டு அதனை பிரிண்ட் எடுத்து என்னுடைய கம்பெனியில் இருக்கும் பங்களாதேஷ் சகோதரர்களிடம் கொடுத்து விட்டு அமைதியாகிவிட்டேன்.. ! மதியம் முஜீப்.காம் வலைப்பூவில் கண்டதும் மீண்டும் உண்ணிப்பாக மீண்டும் வாசிக்க வைத்தது... !

படிப்பினைகள் ஏராளம் !

கல்ஃப்நியூஸ் கடைசி பாராவில்
//According to the news site, the younger brother said he was ready to forget the past and move forward with his new life. “I will always be kind with the poor and the needy,” he said. “I have learned a lot about deprivation and poverty in the last five years. I will always be fair with everyone after I lived through years of injustice,” he said in Arabic, a language he learned during the time he spent sweeping the streets of Makkah.//

Unknown said...

மாஷா அல்லாஹ்,,, தகவல் பதித்த சகோ அதிரை முஜீப் அவர்களுக்கு நன்றி. ஒன்றுமில்லா உலகில் மனிதனுக்கு தான் எத்தனை ஆசைகள்,,, புனித நகருக்குள் காலடி வைத்தால் போதும் அல்லாஹ் தான் நாடியவருக்கு கிருபை வழங்குபவன்,,,

Sura:2, Ayah:198
لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ ۚ فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِندَ الْمَشْعَرِ الْحَرَامِ ۖ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ

2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்..

,,,,,,,,,,,,,,,,
இம்ரான் கரீம்.M
அமீரக மக்கள் தொடர்பு செயலாளர்
சமூகநீதி அறக்கட்டளை
imran2mik@gmail.com

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

மறைவானவற்றை அறிபவன் அல்லாஹ் ஒருவனே ஒருமனிதனின் வாழ்வில்
ஏழ்மையையும்,வசதியையும்,கொடுப்பவன் அவனே.தகவல் பதித்த என் தம்பிமுஜிபுருக்கு என் வாழ்த்துக்களும்,துவாவும்

Ebrahim Ansari said...

//ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் மூலம் அன்று பிறந்த பாலகன் போல் தான் திருப்ப வேண்டும் என்று மூத்த சகோதரரின் நினைப்பிற்கும், தனக்கு அநீதி இழைக்கப்பட்ட காரணத்தினால் கடும் வெயிலில் நின்று தெரு கூட்டி பிழைத்தாலும், மன்னிப்பைவிட இந்த உலகில் சிறந்த பண்பு வேறொன்றும் இல்லை என்ற இளைய சகோதரரின் நடத்தைக்கும் அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த வாழ்வை தர நாமும் துவா செய்வோம்.//

முத்தான வரிகள். தம்பி முஜீப் அவர்களைப் பாராட்டுவோம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...


மாஷா அல்லாஹ்.. கண்ணில் வடியும் கண்ணீரே இக்கட்டுரைக்கு எம் பின்னூட்டமாக இருக்கின்றது.

காக்காவிற்கு கொடுத்த கடனை திரும்பப்பெற கச்சலை கட்டிக்கொண்டு காக்கா இல்லாத சமயம் காக்கா வீடு சென்று காக்கா மனைவியை தரக்குறைவாக பேசி,மிரட்டி காக்காவிற்கு கொடுத்த பணத்தை திரும்பப்பெற்ற தம்பியும் நம் ஊரிலேயே நல்ல குடும்பம் என்று சொல்லிக்கொள்ளும் குடும்பத்திலேயே இருக்கின்றார்.

சொத்துத்தகராறில் அதன் பங்கீட்டுப்பிரச்சினையில் கோபம் கொண்டு தன்னை ஈன்றெடுத்த வாப்பாவையே கத்தியால் குத்தச்சென்ற மகனும் நம் ஊரில் இருக்கிறார்.

இது போன்ற எண்ணற்ற ஈனப்பிறவிகளை எல்லாம் ஒரு சேர பிடித்து கட்டிப்போட்டு இந்தக்கட்டுரையை மண்டைக்குள் பதியும் வரை நன்கு படித்துக்காட்டி மனப்பாடம் செய்ய வைக்க வேண்டும் என என் மனம் நாடுகிறது.

யா அல்லாஹ்! அக்கிர‌ம‌ம், அட்டூழிய‌ம் புரியும் அநாக‌ரிக‌ம‌ற்ற‌வ‌ர்க‌ள் முழுவ‌தும் திருந்த‌ வேண்டும் இல்லை அவ‌ர்க‌ளின் அட்டூழிய‌ங்க‌ள் அழிந்து போக‌ வேண்டும்.........

பெட்ரோல்,டீச‌ல் விலை ஏற்ற‌ம் போல் வாழ்வில் ச‌ந்தோச‌ம் ஏறிக்கொண்டே செல்ல‌ வேண்டும். வாழ்வில் துன்ப‌ங்க‌ளும், துய‌ர‌ங்க‌ளும் த‌மிழ‌க‌த்தின் மின்சார‌ம் போல் இல்லாம‌ல் போக‌ வேண்டும்.

ZAKIR HUSSAIN said...

சகோதரர் மூஜீப் அவர்களுக்கு நன்றி. இந்த பதிவின் மூலம் அன்பும், இறையச்சமும் எப்போதும் வெல்லும் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியிருக்கிறீர்கள்.

M.S.முஹம்மது தவ்பிக். #9790282378 said...

ALLAH AKBAR,when iam reading this my heart feel like melting like ice.becoz this happens sometimes change ours attitude who cheatting others.good news to know all of brothers

Abu Easa said...

மாஷா அல்லாஹ்

அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக!
இச் சம்பவத்தைப் பிறருக்கும் படிப்பினையாக்குவானாக!

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அஸ்ஸலாமு அலைக்கும் இந்த(சம்பவம்) கதை படிக்க நன்றாக சுவாரஸ்யமாக இருக்கிறது உன்மையென நம்ப மருக்கிரது இதயம்!! அன்னன் முதியவரின் சொத்து அவரிடம் இருக்கிரதா அவர் பிள்ளைகளிடம் இருக்கிரதா? காரனம் கேன்சர் நோய் வந்தவரிடம் சொத்தை எல்லாம் பிள்ளைகள் பெயருக்கு மாற்றப்பட்டு இருக்கும்.
தம்பியை பார்த்த அன்னன் பரவசப்பட்டு இருக்கலாம் இதை நாம்பி ஏமாற்றப்பட்ட தம்பி ஊருக்கு போகவேண்டாம் என்று சொல்லுங்கள்.
தம்பியின் மனைவி பிள்ளைகள் எங்கே போனார்கள் அவர்களிடம் சொத்தை கொடுக்கவேண்டியதுதானே கானாமல் போன தம்பியை தேடியாது பொய்யாய் தெரிகிறது

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மணம் திருந்திய அன்னனே இவ்வலவுகாலம் கஸ்டப்பட்ட தம்பிக்கு உங்களின் பதில் என்ன உங்களுக்கு தன்டனையென்ன? உடன் பிறந்த தம்பியை தெரு கூட்டும் அலவிற்க்கு தல்லியது சரியா?
கூலிப்பணம் வாங்காமல் போன அடிமைக்கு வெகுகாலம் கழித்து வரும்பொழுது சஹாபி ஒருவர் ஆட்டு மந்தையை கூலியென கொடுத்தார்களாம் அதுபோல் இந்த அன்னனும் செய்தால்தான் சரி

Yasir said...

சகோதரர் மூஜீப் அவர்களுக்கு நன்றி. இந்த பதிவின் மூலம் அன்பும், இறையச்சமும் எப்போதும் வெல்லும் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியிருக்கிறீர்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அண்ணன் தான் செய்த தவறுக்கு வருந்தி தன் சொத்தில் உரிய பங்கு தருகிறேன் என்று புனித மக்கமாநகரில் வாக்குறுதி அளித்து ஊருக்கு அழைத்து செல்கிறாரே? பிறகெதற்கு கேள்விகளும், சந்தேகங்களும்???

செய்த‌ த‌வ‌றுக்கு ம‌ன்னிப்பு கேட்காம‌ல் த‌ம்பியை வெளிநாட்டில் குப்பை பொற‌க்க‌ விட்டு விட்டு ஊரில் த‌ம்பி ம‌னைவியிட‌ம் சொத்துக்க‌ளை ஒப்ப‌டைத்து ம‌ன்னிப்பு கேட்ப‌தில் என்ன‌ ப‌ய‌ன் ஏற்ப‌ட்டு விடப்போகிற‌து? அப்ப‌டியே அப‌க‌ரிப்பு ந‌ட‌ந்திருப்பின் அப‌க‌ரித்த‌வ‌னிட‌மிருந்து முழுவ‌தையும் அடைந்து கொள்ள‌ முய‌ற்சிப்ப‌தில் அர்த்த‌மில்லை.

அந்த‌ இறைவ‌னே ம‌னித‌னுக்கு செய்த‌ த‌வ‌றுக்கு அந்த‌ ம‌னித‌னிட‌ம் சென்று முத‌லில் ம‌ன்னிப்பு கேட்டு விட்டு பிற‌கு அவ‌னிட‌ம் அருள் வேண்டி வ‌ரும்ப‌டி கூறுவது நம‌க்கு விள‌ங்க‌வில்லையா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"சொல்வதை எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. நீங்கள் மறுப்பதனால் உண்மைக்கு ஒன்றும் பங்கம் வந்துவிடப்போவதில்லை"

mulakkam said...

மாஷா அல்லாஹ் சகோதரர் முஜீப் பதிந்த தகவல் எல்லாருக்கும் ஒரு பாடம் !! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் !! இந்த உலகில் எத்தனையோசம்பவங்கள் நாம் பார்த்திருக்கிறோம் .அண்ணன் தம்பியை துரோகம் செய்வது !! நண்பன் மற்றொரு நண்பனை துரோகம் செய்வது .வியாபாரத்தில் துரோகம்செய்வது !! கொடுக்கல் வாங்களில் துரோகம் செய்வது .எல்லாதிற்கும் தீர்ப்பு நாளில் அவனே(அல்லாஹ் ) நீதிபதி பாதிக்கபட்டவன் (மஹ்செர்ரில் வழக்குதொடர்ந்தால் நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். அவனே (அல்லாஹ் ) எல்லாம் அறிந்தவன் !!!

அலாவுதீன்.S. said...


மாஷா அல்லாஹ்!

அல்லாஹூ அக்பர்!

அப்துல்மாலிக் said...

நம்மூரில் இது மாதிரி நிறைய சொத்துக்கு சண்டையிடும் சம்பவம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த சம்பவத்துலே நிறைய படிப்பினை இருக்கும், எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்... இன்ஷா அல்லாஹ்

அப்துல்மாலிக் said...

நம்மூரில் இது மாதிரி நிறைய சொத்துக்கு சண்டையிடும் சம்பவம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த சம்பவத்துலே நிறைய படிப்பினை இருக்கும், எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்... இன்ஷா அல்லாஹ்

Anonymous said...

// mulakkam சொன்னது…
மாஷா அல்லாஹ் ...... //

முழக்கம் என்ற பெயரில் கருத்துகள் பதியும் சகோதரர் அவர்களுக்கு:

அதிரைநிருபர் வளைத்தளம் சுய அறிமுகம் (தளநிர்வாகிகளுக்கு) வெளிக்காட்டாத பெயர்களில் பதியப்படும் கருத்துக்களை அனுமதிப்பதில்லை என்பதை அறிவீர்கள், ஆதலால் கருத்துக்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்திட தங்களைப் பற்றிய சிறு சுய அறிமுகத்தினை அதிரைநிருபர் நெறியாளரின் மின்னஞ்சலுக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,

நெறியாளர்
www.adirainirubar.in

sabeer.abushahruk said...

படிப்பினையூட்டும் சம்பவம்.

Shameed said...

சொல்லப்பட்ட செய்திகளின் நண்பகத்தன்மையை ஆராய்வதைவிட அதில் சொல்லப்பட்ட செய்திகளில் உள்ள நல்ல விசயங்களை நாம் கிரகித்து கொள்ளாலாம்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
'கூட்டி,பெருக்கி' வாழ்வை 'கழித்தவருக்கு அல்லாஹ் 'வகுத்த' வழி இது! இது தூய இஸ்ஸாம் காட்டும் வழியில் யார் பொருமையாக அல்லாஹ்வை நம்பி இருக்கிறார்களோ அல்லாஹ் அவர்களுடன் இருப்பான் என்பதின் ஒரு சிறு அத்தாட்சிதான் இந்த நிகழ்வு!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//'கூட்டி,பெருக்கி' வாழ்வை 'கழித்தவருக்கு அல்லாஹ் 'வகுத்த' வழி இது! இது தூய இஸ்ஸாம்//

கிரவ்ன் வருகை என்றுமே Solutionனோடுதான் இருக்கும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு ! அருமை(டா)ப்பா,

ZAKIR HUSSAIN said...

To Bro Crown,

//கூட்டி,பெருக்கி' வாழ்வை 'கழித்தவருக்கு ...///


இது போன்ற தமிழ் விளையாட்டுகளை கருணாநிதி, நா.காமராசன், கவிக்கோ, நெல்லைகண்ணன் போன்றவர்களிடம்தான் பார்த்திருக்கிறேன்.

உங்களை அதிகம் பாராட்டித்தான் ஆக வேண்டும். இன்னும் நிறைய இதுமாதிரி எழுத... [ இப்படி ஊக்கப்படுத்துதல் 'ஆகாது' ங்ற மாதிரி சில பேர் எழுதுறாங்களாம்!!]


Yasir said...

//கூட்டி,பெருக்கி' வாழ்வை 'கழித்தவருக்கு அல்லாஹ் 'வகுத்த' வழி இது! இது தூய இஸ்ஸாம் காட்டும்// என்ன ஒரு சிந்தனை

சொல்லின் செல்வனே(ரே)
வார்த்தைகளின் வித்தகரே
தமிழ் சிலேடைகளின் புர்ஜ் கலிஃபா வே
முடிசூடிய அமெரிக்க கண்ணியவானே
இப்படி அடிக்கடி வந்து எங்கள் காதுகளில்
தமிழ்த்தேனை ஊற்றிக்கொண்டு இருங்கள்

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

To Bro Crown,

//கூட்டி,பெருக்கி' வாழ்வை 'கழித்தவருக்கு ...///


இது போன்ற தமிழ் விளையாட்டுகளை கருணாநிதி, நா.காமராசன், கவிக்கோ, நெல்லைகண்ணன் போன்றவர்களிடம்தான் பார்த்திருக்கிறேன்.

உங்களை அதிகம் பாராட்டித்தான் ஆக வேண்டும். இன்னும் நிறைய இதுமாதிரி எழுத... [ இப்படி ஊக்கப்படுத்துதல் 'ஆகாது' ங்ற மாதிரி சில பேர் எழுதுறாங்களாம்!!]
------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.பாராட்ட நல்ல மனம் வேண்டும்.அது கடலளவு உங்களிடம் உள்ளது.(இதை நீங்கள் ஒரு சமயத்தில் எனக்கு சொன்னது.அதை உங்களுக்கே திருப்பி தந்துவிடுகிறேன்.)


crown said...

Yasir சொன்னது…

//கூட்டி,பெருக்கி' வாழ்வை 'கழித்தவருக்கு அல்லாஹ் 'வகுத்த' வழி இது! இது தூய இஸ்ஸாம் காட்டும்// என்ன ஒரு சிந்தனை

சொல்லின் செல்வனே(ரே)
வார்த்தைகளின் வித்தகரே
தமிழ் சிலேடைகளின் புர்ஜ் கலிஃபா வே
முடிசூடிய அமெரிக்க கண்ணியவானே
இப்படி அடிக்கடி வந்து எங்கள் காதுகளில்
தமிழ்த்தேனை ஊற்றிக்கொண்டு இருங்கள்.
-----------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.அன்புக்குரியவரின் பாராட்டுக்கு நான் தகுதியானவனா?சீர்தூக்கிப்பார்க்கிறேன்.

அதிரை சித்திக் said...

அண்ணன் தம்பி உறவு பற்றி

நான் எழுதியதை சாற்றி திரும்பி

பார்த்தால் நன்கு புரியும் ..

அண்ணன் எல்லா உறவுகளையும்

பிரிந்த சந்தர்பத்தில் தம்பியின்

நிலை கண்டு உணர்ச்சி வசப்பட்டு

தனது உணர்வை வெளி படுத்தி உள்ளார்

தம்பி தனது வேலையை உதறி தள்ளி விட்டு

செல்வதை விட விடுப்பில் சென்று அங்குள்ள

நிலை அறிந்து பிறகு வேலையை விடுவதை

ஆலோசிக்கலாம் ..காரணம் அண்ணன் தரப்பு உறவினர்

எப்படி உள்ளார்கள் என்பதை அல்லாஹ் தான் அறிவான் ..

sabeer.abushahruk said...

கலைஞர்களுக்கு மட்டுமே அழகு தமிழ் சட்டென்று வாய்க்கும். மகுடத் தமிழ் மதுக்குடம்போல் போதைதரும் என்று நான் சொல்லிவந்தபோதெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லையா?

இப்ப, தமிழை வைத்தே நம் யாவரையும் கணக்குப்பண்ணிட்டார். தமிழை வகுத்தலில் கிடைக்கும் ஈவு அவரிடமே இருக்கட்டும்; (மிச்சம்) மீதியை மட்டுமாவது எனக்கும் விட்டு வைக்கச் சொல்லவும்.

சுவையின்றி எழுதப்படும் பக்கங்கள் அழவைக்கும்; ஒன்றிரெண்டே வார்த்தகள் எனினும் இவையே எழவைக்கும்

crown said...

கலைஞர்களுக்கு மட்டுமே அழகு தமிழ் சட்டென்று வாய்க்கும். மகுடத் தமிழ் மதுக்குடம்போல் போதைதரும் என்று நான் சொல்லிவந்தபோதெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லையா?

இப்ப, தமிழை வைத்தே நம் யாவரையும் கணக்குப்பண்ணிட்டார். தமிழை வகுத்தலில் கிடைக்கும் ஈவு அவரிடமே இருக்கட்டும்; (மிச்சம்) மீதியை மட்டுமாவது எனக்கும் விட்டு வைக்கச் சொல்லவும்.

சுவையின்றி எழுதப்படும் பக்கங்கள் அழவைக்கும்; ஒன்றிரெண்டே வார்த்தகள் எனினும் இவையே எழவைக்கும் .
---------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும் . ஈவு என்னிடம் இருக்கட்டும் என்று என்மேல் இரக்கப்பட்ட கவிஞரின் ஈகை குணம் எந்த கணக்கிலும் அடங்கா!

mohamedali jinnah said...


Please visit
http://adirainirubar.blogspot.in/2012/11/blog-post_3935.html

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு