Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஜித்தாவில் ஜில் துளிகள்... 20

அதிரைநிருபர் | January 02, 2011 | ,

நம்ம ஊரு நல்லவங்க பெரியவங்கல்லாம் சவூதில இருக்கிறதாலயோ  என்னமோ தெரியல, இப்பெல்லாம் ஜித்தாவிலும் அப்பப்போ மழை பொழிகிறது. 30.12.2010 ஒரு அரை மணிநேரம் பெய்த மழைக்கு இந்த ஜித்தா தலைநகரத்தின் தகரங்கள்(வாகனங்கள்) தத்தளிப்பதை  நானும் என் நண்பனும் புகைத்ததை பகிர்கிறேன் (தப்பா நினைகாதீக காக்கா.. புகைப்படம் எடுத்ததைத்தான் புகைதேன்னு சொன்னேன்) .. பயணத்திற்கு ரெடியா? மறக்காம வேட்டிய தூக்கி கச்சல கட்டிகோங்க..நனைஞ்சிற போகுது.. 

எங்க பில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ்மான்ட் கொஞ்சம் லீக்கு..  


நம் நாட்டில் ஜனவரியில் பொங்கலாக இருக்கலாம். இங்கு டிசம்பரிலயே....(இது கணக்கோ?!!) 
டிரைனேஜ்(வடிகால்) விசயத்தில் இவர்கள் இன்றும் ஸ்டோநேஜில்தான்(கற்காலம்) இருக்கிறார்கள்.


இது விமான பணிப்பெண்களும், ஆண்களும் தங்குமிடம்.. 
என்னத்தான் இவர்கள் சிறகின்றி பறக்கும் பறவைகளாக இருந்தாலும், சேட்டான்(மலையாள காக்கா) கடையில் தாமியா(ஒருவகை சாண்ட்விட்ச்) வாங்கணும்னா தத்தளித்துதான் வர வேண்டும்.


பார்ட் டைம் வேலைக்கு ஆட்கள் தேவை. தலைக்கு ஐம்பது ரியால்.இங்கு தில்லு முல்லு கிடையாது. எல்லாமே தள்ளு முல்லுதானாம். மிதக்கிற காரை கரை சேர்கனுமாம். போட்டிக்கு சூடானி வருவார்கள். இருந்தாலும் ஒரு கை பார்போம். 


காக்கா!! இருந்தாலும் இந்த வழியா 'அண்ணா நகர் வடக்கு செல்லும் 7F பேருந்து வருமா'!ன்னு கேக்குறது கொஞ்சம் ஓவர்.. 


இத்தனைநாள் தூங்கிகொண்டிருந்த வைப்பருக்கு, வச்சிட்டாங்க ஆப்பு..கையிருந்தால் ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கும். 



இது பாலமா? பள்ளமா? ஆராய்கிறார்கள் ஆசியர்கள்(கண்டிப்பாக இன்னாட்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை).


சரி.. சரி..காக்கா மார்களைலாம் தொப்பு தொப்பா மழைல நினச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. 
இன்னும் இரண்டு நாளைக்கு மழை இருக்குன்னு வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை  விடுத்திடுச்சாம். இப்போ போயிட்டு இன்ஷா அல்லாஹ் அப்பாளிக்கா வர்றேன். அது வரைக்கும் முடிந்தால் கமண்ட் மழையில் சந்திப்போம்..வரட்டா...டுர்ரர்ர்ர்ர்.......(இந்த டொயோடா லேண்ட் க்ருசர் என்னுது இல்லீங்கோ)    


மு.செ.மு.மீராஷாஹ் ரபியா
MSM(MR) 

20 Responses So Far:

Yasir said...

புனித பூமியை மழையில் நனைந்து கொண்டே சுற்றி பார்த்த உணர்வு....ஒவ்வொரு படத்துக்கும் கீழே நக்கலுடன் கூடிய விளக்கம்..சூப்பர் தம்பி ( தம்பி என்றுதான் நினைக்கிறேன் )

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். என் செல்லம் இப்படி வெல்லம் எல்லாம் படம் புடிச்சி,
நெஞ்சில இடம் பிடித்துவிட்டாய்(அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு,அப்படியெ
வாப்பாட்ட உள்ள டைமிங் சென்ஸ்,ரைமிங் சென்ஸ்.இப்ப ரைனிக் கமென்ட்ரி(ரன்னிங்
கமெனிட்ரின்னு சொன்னேன்).டிரைனேஜ்(வடிகால்) விசயத்தில் இவர்கள் இன்றும் ஸ்டோநேஜில்தான்(கற்காலம்) இருக்கிறார்கள்.ஹா,ஹா,ஹா,ஹா.....காக்கா!! இருந்தாலும் இந்த வழியா 'அண்ணா நகர் வடக்கு செல்லும் 7F பேருந்து வருமா'!ன்னு கேக்குறது கொஞ்சம் ஓவர்.. (பாத்திரிகையாளன் வாசனை அடிக்குது ,ஆனந்தவிடகடன் சாயல். வாசனைன்னு
நான் சொன்னது ஆனந்தவிகடன் முதலாளி வாசனை அல்ல.(இந்த டொயோடா லேண்ட் க்ருசர் என்னுது இல்லீங்கோ) என்னா தெனாவெட்டான காமெடி நெடி( சும்மா செல்லமா தெனாவட்டுன்னு போட்டிருக்கேன் அசால்ட்டான்னு தேவை பட்டா மாத்திக்கவும்.)

crown said...

வெள்ளம் என்பதை வெல்லம் என்று எழுதிவிட்டேன்.பிழைக்கு மன்னிக்கவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்திட்டே சிருசு !!

கொட்டிய மழையில் கொழிக்கும் வரிகள் !

சரியான வடிகால் இங்கேதான் உனக்கு இருக்கிறது !

செதுக்கு சிற்பிகளும் இங்கேதான் இருக்கிறார்கள் !

தொடர்ந்திடு... இன்னும் தூறல் வரும் பார் பின்னாலே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுன்(னு): எதாவது ஒரு வகையில உன்னைய நினைக்க வச்சுடுறே !/

ஏண்(டா)ப்பா ? வாசிக்கிறியா ?

ZAKIR HUSSAIN said...

To Bro மு.செ.மு.மீராஷாஹ் ரபியா,

உங்கள் பதிவு மிகவும் அழகு அதிலும் விசேஷமான கமென்ட்ஸ். இந்த வெளியீடு பற்றி உங்களிடம் ஜித்தாவில் வந்து ஒரு நாள் கற்றுக்கொள்ள வேண்டும்.

நமக்கு இந்த கம்ப்யூட்டர் விசயங்களில் டெக்னிக்கலான விசயங்கள் அவ்வளவுக்கு தெரியாது. CPU வில் இருந்தால்தானே Thumpdrive வில் வரும் [ எத்தனை நாளைக்குத்தான் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என சமயல் செய்பவர்களைப்போல் மொக்கை உதாரணம் கொடுப்பது]

Meerashah Rafia said...

@யாசிர் காக்கா:
நான் உங்களுக்கு தம்பியாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணுகிறேன்..

@கிரௌன்:
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நம் நிருபர் சகாக்களை போல் நானும் ஒரு புத்தகப்புளுதான்(பள்ளி புத்தகங்களை தவிர)..என் ஆக்கங்களுக்கு, ஊக்கமளித்த தோல்தட்டி தொடரச்சையும் இங்குள்ள அனைவருக்கும் பங்குண்டு..

@அபுஇபுறாஹிம்:
இங்கே நம் எண்ண அலைகளை ஒருசேர்க வடிகாலும் உண்டு , சங்கமிக்க வாய்க்காலும் உண்டு..

sabeer.abushahruk said...

பெரிதாக சாதிக்கப் பிறந்தவரென்கிற செய்தியை தம்பியின் ஃபோட்டோ மற்றும் கம்மென்ட்ஸ்களில் காண முடிகிறது. வேலையின் பளுவில் முடங்கிவிடாமல் நேரம் ஒதுக்கியாவது எங்களைப்போன்றவர் மத்தியில் எழுதி கருத்தறிய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றவருக்கு சாதார்ணமாகத் தெறியும் நிகழ்வுகளை ரசனையோடு அனுகும் உங்கள் போக்கு ஆரோக்கியமானது. ராஃபியா எப்படி என்று தெறியாது. நாங்கள் காத்திருக்கிறோம் உங்களை விமரிசித்து பக்குவப்படுத்த. தொடர்ந்து எழுதுங்கள்.

noohu said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)புலிக்கு பிறந்தது பூனை யாகுமா? அப்படியே அப்பனுக்கு தப்பாமே பிறந்து இருக்கீங் க. நானும் உங்க ஊர் மழைல நனைஞ்சுட்டேன். இன்னும் உங்கள் ஆக்கங்களை எழுதுங்கள்

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
ஜித்தாவில் பெய்த மழை எங்களுக்கும் பெய்தது போல் உள்ளது.

போட்டோ மழை
வார்த்தை மழை
மிக அருமை

RAFIA said...

"பில்டிங்கு ஸ்ட்ராங்கு ஆனா பேச்மேண்டுதான் கொஞ்சம்- லீக்கு" மழை நீரும் காவாதண்ணியும் லீக்காவதை குசும்போடு கூறியிருக்கிறீர்.பில்டிங் ஒனறுக்கு/owner தர்ஜுமா(மொழிபெயர்த்து)கொளித்தி போடவா...?

Unknown said...

என் அன்பு மழைத்துளியே ... இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
தம்பி மு.செ.மு.மீராஷாஹ் ரபியா உங்களதான் கேட்குறேன்.
அசத்தல்...புகைப்படமும் அதிரைப்பட்டினம் வட்டார வழக்கு சொற்களுடன்.அல்ஹம்துலில்லாஹ்!

தம்பி மு.செ.மு.மீராஷாஹ் ரபியா நீங்க இயக்கிய Short Flim குறும்படத்தையும் எங்களுக்கு அ.நி வழியா போட்டு காட்டுங்கம்மா.பிளீஸ்.

Meerashah Rafia said...

@ஜாகிர் ஹுசைன்:
"CPU வில் இருந்தால்தானே Thumpdrive வில் வரும்"
இது புதிவித பழமொழி. கற்றுக்கொள்ளும் ஆர்வம் உங்களுக்கிருக்க கற்றுக்கொடுக்க நான் தயார்..

@சபீர்:
" வேலையின் பளுவில் முடங்கிவிடாமல் நேரம் ஒதுக்கியாவது எங்களைப்போன்றவர் மத்தியில் எழுதி கருத்தறிய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்."
தங்கள் வேண்டுகோளிற்கு முற்றிலும் செவிசாய்கின்றேன்.


@ நூஹு& சமீத் :
இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன் .ரொம்ப நினைஜிட்டீங்க. போய் இப்போதிற்கு தலைய துவட்டிட்டு வாங்க.அதுக்குள்ள அடுத்த கட்டுரை கொஞ்சம் சூடா எழுதலாம்னு நினைதிருகேன்.

@ரபியா:
பில்டிங் ஓனர் அப்புறம் familiya பேமுழி முழிக்க வச்சிருவாஹ

@அதிரை போஸ்ட்:
இன்ஷா அல்லாஹ் short film விரைவில் போட்டு காண்பிக்கப்படும்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் MSM மீராசா,

மிக அருமை, மழையில் நனைந்ததுபோல் இருந்தது தங்களின் இந்த புகைப்படங்களை பார்த்த பிறகு.

தொடருங்கள் உங்கள் வி.மீடியா அனுபவதுளிகளின் அக்கங்களை கூடவே சூவாரஸ்யமான அதிரை வட்டார தமிழையும்.

Meerashah Rafia said...

@தாஜுதீன் :
இன்ஷா அல்லாஹ் என் விசுவல் கம்முநிகேசன் பணி/பானி இறைக்கு மாற்றமின்றி தொடரும்..

crown said...

Rafia சொன்னது…

"பில்டிங்கு ஸ்ட்ராங்கு ஆனா பேச்மேண்டுதான் கொஞ்சம்- லீக்கு" மழை நீரும் காவாதண்ணியும் லீக்காவதை குசும்போடு கூறியிருக்கிறீர்.பில்டிங் ஒனறுக்கு/owner தர்ஜுமா(மொழிபெயர்த்து)கொளித்தி போடவா...
---------------------------------------------------------------
meerashah சொன்னது…
பில்டிங் ஓனர் அப்புறம் familiya பேமுழி முழிக்க வச்சிருவாஹ .
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இது வல்லவோ குடும்பவியல்(பேமிலி)தந்தை செல்லமா சீன்ட,தனயன் மெல்ல மாய் பதில் சீன்டல் அருமை...

hajenakatheja said...

மாஸா அல்லாஹ் உம் எழுத்தாட்டலை பார்து வியப்பு அடைந்தேன் அல்லாஹ்விர்கேஎல்லாபுகழும் தன்மணதை.கல்லாகிகொண்டு,உன்கல்விக்காக,இத்தனைகாலம்.மாக உன்னைபிரிந் இருந்து.உம்மை,இந்த அளவிர்கு,உருவாக்கிய.உந்தாய்கே,எல்லாபெருமையும்

Meerashah Rafia said...

என்னை நன்கு அறிந்து எழுதும் யார் இந்த கதீஜா ராத்தா என்று தெரிஞ்சிகிடலாமா?

Unknown said...

கலக்கிடீங்க தம்பி மீராசா

நம்மூரு மழையில சேத்துல கால வச்சுதான் கல்க்கனும்னு இல்ல,ஜித்தா போன்ற ஊர்களில் தரையில் கால் வைத்துக்கூட கலக்கலாம் என்பாதை, உங்கள விசுவல் மீடியா அறிவையும், உங்கள் வாப்பாவின் ஜீன் கலந்த, உங்கள் சென்ஸ் ஆப் ஹியுமார் அறிவையும் பயன்படுத்தி,

வாழ்த்துக்கள்

Meerashah Rafia said...

@ஜாபர்:
உங்கள் வாழ்த்துதலுக்கு என் நன்றிகள்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு