Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மற்றும் ஓர் வாய்ப்பு ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 29, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அன்பின் அதிரைப்பட்டினத்து மாணவச் சமுதாயமே ! உங்களுக்கென்று ஒர் விழா எடுத்தோம் அதில் உங்களில் சிலர்தான் அதன் பலனைக் கண்டீர்கள் ஆனால் மீதமிருந்த பெரும்பாலான மாணவர்கள் உங்களின் பொறுப்புக்களை தட்டிக் கழித்து விட்டு அன்றைய சுயநலனுக்காக தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு ஒளிந்து கொண்டீர்களா ? அல்லது ஒதுங்கிக் கொண்டீர்களா ? சிந்தித்துப் பாருங்கள் !

படித்தவர்களும் பண்பாளர்களும் அவரவர் அனுபவங்களையும் அறிவுரைகளையும் உங்களுக்காக வழங்கிடத்தானே ஊரே கூடி ஒர் கூட்டு முயற்சியாக உங்களை ஓர் இடத்திற்கு வர அழைத்தோம் ஏன் இந்த மெத்தனம் இதனால் இவ்விழா நடத்தியவர்களுக்கு இழப்புகள் ஏதுமில்லை காரணம் அவர்கள் ஏற்கனவே எடுத்த முடிவுடன் தான் உங்களைக் களம் காண அழைத்தார்கள் இன்னும் அழைப்பார்கள், ஆனால் அந்த இரண்டு நாட்களின் அற்புதமான நேரத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் நிஜத்தினை அனுபவிக்க தவறிவிட்டீர்களே !.


இதுவரை நடந்தவை நடந்ததாக இருந்திடட்டும், இழந்த அந்த இரண்டு நாட்களின் பலன்களை கண்டிட உங்களுக்கும் இன்னும் ஒரு வாய்ப்பு நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சிகளின் காணொளித் தொகுப்பை குருந்தகடாக வெளியிட இருக்கிறோம் இதனைப் பெற்று என்னதான் அங்கே பேசினார்கள் எதைத்தான் எடுத்து வைத்தார்கள், யாருக்காக இவர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள் என்பதன் உண்மை நிலவரத்தை கண்டறியுங்கள், இந்தத் தொகுப்புகளின் குருந்தகடைப் (compact disc) பெற்றுக் கொள்ள adiraieducationalmission@gmail.com அல்லது adirainirubar@gmail.com  என்ற முகவரிகளில் ஏதாவது ஒன்றுடன் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதோடு அவர்களால் தரப்படும் கருத்துக் கணிப்பு படிவத்தினையும் முறையாக பூர்த்தி செய்து எங்கே பெற்றுக் கொண்டீர்களோ அங்கே திருப்பிக் கொடுத்திடுங்கள் அல்லது எங்களது மின் அஞ்சலுக்கு அனுப்பித் தாருங்கள்.

இதுமட்டுல்ல நாங்கள் எடுத்த பணி இன்னும் இருக்கிறது இது தொடரத்தான் செய்யும் அதுவும் உங்களைப் போன்ற மாண்வச் சமுதாயத்துடன் கைகோர்த்து அதிரைப்பட்டினத்து நம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், நலனுக்காகவும் இன்ஷா அல்லாஹ்.. !

வரும் காலங்களில் தொடர் நிகழ்வுகளாக உங்களுக்கும் ஊருக்கும் பலன் தரும் படிப்புகளைப் பற்றியும் அதற்கான வாய்ப்புகளைப் பற்றியும், ஆட்சி, அதிகாரம், நிர்வாகத்தில் கோலோச்சிட என்னவெல்லாம் நாம் செய்திட வேண்டும் என்ற வழிகாட்டல்கள் தொடரும் இதற்கான ஆதரவும் உங்களின் ஆர்வமான பங்களிப்பும் இனிவரும் நம் வீட்டுச் சகோதரர்களுக்கு வழிகாட்டியாகவும், நிம்மதியான வாழ்வாதாரமாகவும் அமையும் இன்ஷா அல்லாஹ்..

அதிரை கல்வி சேவையகம் adirai educational mission - AEM, இது நிதி நிறுவனமல்ல ஆனால் அதிரைப்பட்டினத்து சமுதாயத்தின் நலனுக்காக உயர் கல்விக்கும், அரசு வேலைக்கான ஆதரவான கல்விகளுக்காக நிதியும், நீதியுடனும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாகபலன்களின் நதிகளில் நீந்திட வழிகாட்டிடுவோம் இயன்றவரை கற்றுக் கொடுப்போம், அரசு பணிகளுக்கும் உயர் பதவிகளுக்கும் உங்களை உயர்த்திட உங்கள் யாவரின் ஆதரவும், ஆர்வமும், முயற்சியும், தெளிவான குறிக்கோலுடன் வாருங்கள் இந்த வாய்ப்பை பயண்படுத்திக் கொள்ளுங்கள் பயனைந்திடுங்கள் !

- அதிரைநிருபர் குழு

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதற்கு மேலும் செய்ய நாங்களும் தயார் ! வாருங்கள் மாணவச் செல்வங்களே !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல நிய்யத்,நிச்சயம் நற்பலன் கிடைக்கும்.

crown said...

Assalamu alikum .
http://english.aljazeera.net/watch_now/

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். பொதுவாக வாய்பை நாம் தேடித்தான் போகனும். ஆனால் இங்கோ வாய்பு மறுபடியும் உங்கள் படியேறி,படிக்கசொல்லியும் அதன் பயனைச்சொல்லியும் தட்டுகிறது. இதை தட்டாமல் பயன்படுத்திக்கொண்டால் வரும் காலத்தில் சந்ததி சாப்பாட்டுக்கு தட்டு ஏந்தாமல் காக்க முடியும். இயக்க வெறியாளோ அபிமான பேதத்தினாலோ இதைனை பயன் படுத்த மறுக்கின்றவர்கள் கண்டிப்பாக துரதிஸ்ட காரர்களே!.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கல்வி தேடி சீனா என்பது அப்பொ,
உங்க வீடு தேடி கல்வி இப்பொ!

Unknown said...

அதிரைநிருபர் குழு சொன்னது...//இதுமட்டுல்ல நாங்கள் எடுத்த பணி இன்னும் இருக்கிறது இது தொடரத்தான் செய்யும் அதுவும் உங்களைப் போன்ற மான‌வச் சமுதாயத்துடன் கைகோர்த்து அதிரைப்பட்டினத்து நம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், நலனுக்காகவும் இன்ஷா அல்லாஹ்.. !//

அபுஇபுறாஹீம் காக்கா சொன்னது…//இதற்கு மேலும் செய்ய நாங்களும் தயார் ! வாருங்கள் மாணவச் செல்வங்களே!//

இன்ஷாஅல்லாஹ் உங்கள் சமுதாய சேவையில் நாங்கள் இணைந்திருப்போம்.

sabeer.abushahruk said...

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். படி மேலே படி என்றால் இம்மியும் இசையமாட்டார்களா என்ன?

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அலைக்கும் இவ்வளவு காலமா கொடிபிடிக்கதான் இயக்கங்கள் வந்தது இப்பதான படிக்க சொல்வதற்க்காக ஒரு உருப்படியான இயக்கங்கள் வந்திருக்கு ( அ.நி. அ.இ.அ) இன்ஷா அல்லாஹ் எல்லாம் விரைவில் படிப்பின் அருமை உணர்ந்து வருவார்கள் நம் சமுதாய மாணவர்கள் எல்லாவற்றிற்கும் அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக ஆமீன் .

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு